Sunday, February 23, 2025

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை சென்ட்ரல் எலைட் நடத்திய சிறப்புக் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் பேட்மின்டன் விளையாட்டு வீராங்கனை துளசி முருகேசன், ரோட்டரி மாவட்ட கவர்னர் மஹாவீர் போத்ரா உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.*

*ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை சென்ட்ரல் எலைட் நடத்திய சிறப்புக் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் பேட்மின்டன் விளையாட்டு வீராங்கனை துளசி முருகேசன், ரோட்டரி மாவட்ட கவர்னர் மஹாவீர் போத்ரா  உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.*

சென்னை திருவேற்காடு, சுதர்சனம் வித்யாஷ்ரமத்தில் நடைபெற்ற,  ரோட்டரி சிறப்பு குழந்தைகளுக்கான  விளையாட்டுப் போட்டிகளில் 1500 மாற்றுத்திறனாளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.

 அவர்களின் அசாதாரண திறன்களை வெளிப்படுத்த ஒரு அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்ச்சியான இதில் சிறப்பு விருந்தினராக அர்ஜுனா விருதுபெற்ற தேசிய பேட்மின்டன் சாம்பியன் துளசிமதி முருகேசன் மற்றும் ரோட்டரி மாவட்ட கவர்னரும்,  சமூக மேம்பாட்டில் அயராத உழைப்புக்கு பெயர் பெற்றவருமான மஹாவீர் போத்ரா ஆகியோர் கலந்து கொண்டு  துவக்கி வைத்தனர்.

மாற்றுத்திறனாளிகளின் பிரத்யேக திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலும்  தடகளம் முதல் வேடிக்கையான விளையாட்டுகள் வரை, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.  ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை சென்ட்ரல் எலைட்டின் தலைவர் டாக்டர்.சந்தோஷ் குமாரி ரத்தோட், செயலாளர் ரோஹித் தாகா, பொருளாளர் சித்தார்த் ஜாமெத் மற்றும் திட்டத் தலைவர் அஜய் ஹேமகுமார் ஆகியோரின் தீவிர முயற்சியின் கீழ் இந்த ஆண்டு ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை சென்ட்ரல் எலைட் இந்த நிகழ்வை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றது.   

 இந்நிகழ்ச்சியில் 6 முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளி வீரர்கள் தங்கள்  தனித்துவமான திறன்களை முன்னிலைப்படுத்தும் வகையில் போட்டிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் நிகழ்ச்சியை நடத்தவும் 200 க்கும் மேற்பட்ட துடிப்பான தன்னார்வலர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கினர். 

குறிப்பாக ஓட்டப்பந்தயம், பந்து எறிதல், நீளம் தாண்டுதல், உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

 நிகழ்ச்சியின் முடிவில் வெற்றியாளர்களுக்கு சாதனைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

மேலும் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில்,  250 க்கும் மேற்பட்ட சிறப்பு பரிசுகளும், 1500 நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.  இந்த முன்முயற்சி குறித்து பேசிய சென்னை சென்ட்ரல் எலைட் ரோட்டரி கிளப்பின் தலைவர் டாக்டர்.சந்தோஷ் குமாரி, இது ஒரு நிகழ்வு மட்டுமல்லாமல் தைரியம் மற்றும் மனித மனப்பான்மையின் கொண்டாட்டமாக இருந்ததாக குறிப்பிட்டார்.   ஒவ்வொரு குழந்தையிலும் உள்ள அசாதாரண திறனை அங்கீகரிக்கவும்,  ஊக்குவிக்கும் இந்த நாள் ஒவ்வொருவரும் பயன்பட்டிருக்கும் என்று நம்புவதாகவும் கூறினார். 

 இந்நிகழ்வின் திட்டத் தலைவர் அஜய் ஹேமகுமார்,  நீங்கள் நினைத்ததை விட மிகச்சிறப்பான ஒன்றில் இணைந்திருப்பதை உணரும் அரிய தருணங்களில் இது ஒன்று என்றும்,  இந்த இளம் விளையாட்டு வீரர்கள் முழு திறனையும் வழங்கியதில்  நம்பிக்கையையும் பெருமையையும் கூடியது என்றார்.  

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், ரோட்டரி சிறப்பு விளையாட்டு நிகழ்ச்சி 6,000 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வாழ்க்கையை இணைத்து,  அவர்களுக்கு பிரகாசிக்க ஒரு தளத்தை வழங்குகி வருகிறது.  ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை சென்ட்ரல் எலைட்டுக்கு இது போன்ற நிகழ்ச்சிகள் புதிது அல்ல. பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டு மைதானங்களை வழங்குவது முதல் தொற்றுநோய்களின் போது ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருத்துவமனை படுக்கைகளை நன்கொடையாக வழங்குவது வரை, கிளப் அதன் குறிக்கோளை தொடர்ந்து சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

SBOA பள்ளியின் 1995 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை செதுக்கிய 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தங்களது நன்றியை காணிக்கையாக்கினர்.

SBOA பள்ளியின் 1995 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை செதுக்கிய 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்க...