பிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு உள்ளது :நடிகர் மாதவன் ஆதங்கம்!
Parent Geenee : குழந்தைகளின் செல்போனுக்கு ஒரு கண்காணிப்பு கேமரா!
இப்போதெல்லாம் பிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு உள்ளது என்று நடிகர் மாதவன் ஆதங்கத்துடன் பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு:
நடிகர் மாதவனைப் பங்குதாரராகக் கொண்டு வந்துள்ள 'பேரண்ட் Army (Parent Geenee )என்கிற செயலியின் அறிமுக விழா சென்னையில் ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடந்தது.
இந்தச் செயலி பெற்றோருக்கு அடங்காமல் தறி கெட்டு தாராள சுதந்திரங்களுடன் இயங்கும் குழந்தைகளின் சமூக ஊடகம் மற்றும் இணைய உலகின் ஈடுபாட்டையும் செயல்பாட்டையும் கண்காணிக்கிறது. உடனிருந்து பெற்றோர்கள் கவனிக்க முடியாத சூழலில் இந்தச் செயலி கண்காணித்து அவர்களுக்கு உதவுகிறது.
இதன் மூலம் குழந்தைகளைக் கண்காணிக்கவும் நல்வழிப்படுத்தவும் வாய்ப்பாக அமைகிறது.
இதன் அறிமுக விழா சென்னையில் நடந்தது.செயலியை அறிமுகப்படுத்தி வைத்து நடிகர் மாதவன் பேசும்போது,
"ஒரு பெற்றோராக இன்று ஊடகங்கள் செய்யும் தாக்கத்தை உணர்ந்திருப்பீர்கள்.பெற்றோரை விட அவற்றின் மூலம் அதிகம் கற்றுக் கொள்கிறார்கள்.
இப்போதெல்லாம் பிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு உள்ளது.அது நம்ப முடியாத அளவுக்கு உள்ளது.
எப்போதும் திரை பார்த்துக் கொண்டிருப்பது, சமூக ஊடகங்களில் உலவுவது என்று இருக்கும் குழந்தைகளை எப்படிச் சமாளிப்பது என்பது பெற்றோர்களுக்குப் பெரிய சவாலாக இருக்கிறது.
என் மகனைத் தேடி நாலைந்து நண்பர்கள் வருவார்கள். நான் கண்ணாடி அறையில் இருக்கிறேன் .அவர்கள் அங்கே என்ன செய்கிறார்கள் என்று என் மனைவியிடம் கேட்பேன். அவர்கள் எல்லோரும் மிகவும் பரபரப்பாக இருக்கிறார்கள் என்பார் .அந்த ஐந்து பேரும் ஒரு தனி அறையில் இருந்தால் கூட அவர்கள் தனித்தனியான உலகத்தில் சஞ்சரிக்கிறார்கள். ரீல்ஸ் பார்ப்பது, கேம் விளையாடுவது என்று இருக்கிறார்கள்.
முகம் தெரியாத யாருடனோ விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.அருகில் இருப்பவர்களுடன் பேசிக் கொள்வதே இல்லை.பேசுவதும் கேட்காது ஏனென்றால் ஹெட்செட் அணிந்திருக்கிறார்கள்.இந்தியாவில் இருக்கும் ஐந்து பேர் நெதர்லாந்திலோ ரஷ்யாவிலோ இருக்கும் ஐந்து பேருடன் கேமில் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் 'போர்ட் நைட்' என்ற ஒரு கேமை விளையாடுகிறார்கள்.இது என்னை மிகவும் பாதித்தது.
இன்று மூன்று விஷயங்களைப் பற்றி பேச வேண்டும் அவர்கள் ஸ்கிரீனில் செலவழிக்கும் நேரம் , ஈடுபடும் சமூக ஊடகங்கள், அதனுடைய பாதிப்புகள் என்ன ?என்பதைப் பற்றி பேச வேண்டும்.
அதன் உளவியல் தாக்கங்கள் என்ன? இதனால் உடலில் ஏற்படும் விளைவுகள் என்ன? இது குடும்ப அமைப்பை எப்படி மாற்றுகிறது? இதைத்தான் நான் உங்களுடன் பேசப் போகிறேன். உங்களுக்கு நினைவு இருக்கிறதோ என்னமோ பல வருடங்களுக்கு முன்பு 'ப்ளூ வேல்' என்று ஒன்று வந்தது.அதன் பாதிப்பு மோசமாக இருந்தது.
அப்போதெல்லாம் ஒரு பள்ளியில் வகுப்பில் 40 பேர் இருந்தால் நமக்கு என்ன அங்கீகாரம் என்று நினைத்தார்கள் .நமது தனித்துவம் என்ன நமக்கான அடையாளம் என்ன என்பதைப் பற்றி நினைப்பார்கள். குறிப்பாக 20 பேருக்கு நம்மை ஊரில் உள்ளவர்களுக்கு தெரிய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இப்போது உங்கள் குழந்தைகளுடன் மற்ற குழந்தைகள் போட்டி நடத்துகிறார்கள்; மோதுகிறார்கள்.
வீடியோ போட்டு வேலிடேஷன் தேடி வந்திருக்கும் இளைஞர்கள் பிரபலமாக இருக்க வேண்டும் என்று எவ்வளவு லைக் எவ்வளவு டிஸ்லைக் என்பதைக் கூட கேட்கிறார்கள். அவர்கள் அடையாளம் இல்லாமல் தனிமையாக உணர்கிறார்கள் .இந்த தனிமை ஒரு மனச்சோர்வை உண்டாக்குகிறது அதனால் தான் 'ப்ளூ வேல் 'போன்றவை வந்தன. அதனால்
இளைஞர்கள் தற்கொலை வரை போனது. கட்டிடங்களிருந்து பெண்கள் குதித்து விழுந்தார்கள். ஆண்கள் வெட்டிக் கொண்டார்கள். அது ஒரு பயங்கரமான காலமாக இருந்தது .அந்த காலத்தில் நான் ஒரு குழந்தை இருந்தால் என்ன ஆகும் என்று யோசித்தேன். பயமாக இருந்தது.
நாட்டை பாதுகாக்கப் பல கோடி செலவு செய்கிறார்கள்.வீட்டை, நம் நிம்மதியைப் பாதுகாக்க
இந்த ஒரு சிறிய செயலியில் செய்ய முடியும்.
எனது நண்பனின் மகள் விலங்குகள் மீது பிரியமானவள். அவள் ஒரு ரீலைப் பார்த்திருக்கிறாள். ஒரு நாயைக் கொன்றது எப்படி என்று ஒரு பைத்தியக்காரன் ரீல் போட்டு இருக்கிறான்.அந்த நாய் முழு நாளும் கத்திக் கொண்டிருந்ததால் நான் அந்த நாயை அடிக்க முடிவு செய்தேன் என்று சொன்னான். அவள் அதைப் பார்த்ததும் அழ ஆரம்பித்தாள். அது அவள் அறிந்த ஒரு நாயாக இருந்தது.
அவளது மன உணர்வு மிகவும் பாதிப்புக்குள்ளானது.
என் குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள் என்று பயமாக இருக்கிறது.எங்கள் குழந்தைகள் இது போன்றதைப் பார்த்து வளராமல் இருக்க ஆசைப்படுகிறேன்.
நாம் கைபேசி அதிகமாக உபயோகிப்பதால் முதுகு பட்டை மாறிக் கொண்டிருக்கிறது. கழுத்தில் வளைந்து தினமும் தூங்க எளிதாக இல்லாமல் இருக்கிறீர்கள். சரியாகத் தூங்க முடியவில்லை. உங்கள் படுக்கைகள் மிகவும் மென்மையாக இருக்கிறது. ஆனால் கழுத்து பிரச்சினையால் மிகவும் கடினமாக இருக்கிறது.
குழந்தைகள் பார்க்கும் அலைபேசியில் திரை பார்க்கும் நேரம் மற்றும் சமூக ஊடகங்களில் செலவழிக்கும் நேரத்தை எப்படி மாற்றுவது? அதை குறைக்க நாம் என்ன செய்வது? என்று யோசித்தோம் சமூக ஊடகம் என்பது முழுமையாக மோசமானதல்ல . அதில் அற்புதமான நல்ல விஷயங்கள் உள்ளன. எல்லா தகவல்களும் குழந்தைகளுக்கு எப்போதும் கிடைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இந்த உலகில் கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியம்.
போட்டி நிறைந்த உலகத்தில் நாம் நிபுணராக இருந்தால்தான் வாழ முடியும் .முன்பு நீங்கள் உண்மையானவராக இருந்தால் வெற்றி பெறுவீர்கள் .நீங்கள் நல்லவராக இருந்தால் நீங்கள் பெரிய வாய்ப்புகளை பெறுவீர்கள். நல்ல சம்பளம் கிடைக்கும் .நீங்கள் சிறந்தவராக இருந்தால் நல்ல வேலை வாய்ப்பைப் பெறுவீர்கள் .
ஆனால் இப்போது நீங்கள் வேலையில் சேர்வதற்கு மிகவும் சிறந்தவராக இல்லை எனில் நீங்கள் வாழ முடியாது.
இந்த பேரண்ட் ஜீனி செயலியை முதலில் குழந்தைகள் எதிர்ப்பார்கள்.
நாம்தான் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். இது மாறுபாடுள்ள குழந்தைகள் கொண்ட பெற்றோருக்கு இது வெவ்வேறு வகை சவாலாக இருக்கும். தொலைபேசியைப் பயன்படுத்தும் குழந்தைகள் கொண்ட ஒவ்வொரு பெற்றோருக்கும் இது அவசியமானதாக மாறும் என்று நம்புகிறோம். நீங்கள் , இது அவர்களின் நன்மைக்காகத்தான் என்பதைத் தெரியப்படுத்த வேண்டும்.
இந்த செயலியின் முக்கியத்துவம் என்னவென்றால் இது பெற்றோர்களுக்கு குழந்தைகள் சமூக ஊடகங்களை எப்போது பயன்படுத்துகிறார்கள் என்று தெரிய வைத்துவிடும்.வெளிநாடுகளில் இந்தச் செயலிகள் நடைமுறைக்கு வந்து விட்டன. நம் நாட்டில் இப்போதுதான் வந்துள்ளது.
இந்தச் செயலியில் குழந்தைகள் சமூக ஊடகங்களை எந்தளவுக்குப் பயன்படுத்தலாம் அல்லது எந்தளவு திரை பார்க்கலாம் என்பதைக் கட்டுப்படுத்த முடிகிறது.
நான் அனுப்பும் செய்திகளைப் பற்றி கவனம் வேண்டும். பெற்றோர்கள்
குழந்தைகள் குழந்தைகளாக இருக்க கவனமாக இருங்கள்.
இதனால் குடும்பத்துக்கு நல்லது.குழந்தைகளுக்கும் கூட நல்லது என நம்புகிறோம். அதனால் இந்தச் செயலி உங்களுக்கு உதவும்.
நாங்கள் எங்கள் எதிர்கால தலைமுறைக்கும்,சிறிதாக மாற்றம் வர வேண்டும் என்பதற்காக இதை உங்கள் குழந்தைக்குப் பொருத்தமானதாக மாற்ற விரும்புகிறோம். உலகம் எங்கும் வெற்றியுடன் மகிழ்ச்சியுடன் கூடிய அற்புதமான இளைஞர்கள் உருவாக வேண்டும் என்பதற்காகவும் இந்தச் செயலி பயன்படும். .
இலவச பதிப்பும் உள்ளது. நீங்கள் அதற்கும் அதிகமாக தேவைப்படுபவராக இருந்தால் மாதத்திற்கு 300 ரூபாய் அல்லது வருடத்திற்கு 3000 ரூபாய்க்கு கட்டணம் செலுத்தி திட்டத்திற்குள் செல்ல வேண்டும் " இவ்வாறு மாதவன் பேசினார்.
இந்த அறிமுக விழாவில்
முன்னணி மனநல நிபுணர் டாக்டர் சி ராமசுப்பிரமணியம்,
இரண்டாம் தலைமுறை தொழில் முனைவோர்
பூஜா சீனிவாசா ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்