SBOA பள்ளியின் 1995 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை செதுக்கிய 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தங்களது நன்றியை காணிக்கையாக்கினர்.
SBOA பள்ளியில் 1995 ஆம் ஆண்டு படித்து முடித்த மாணவர்கள், தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, தங்கள் வாழ்க்கை தொடங்கிய இடத்தில் ஒன்றிணைந்து தங்கள் அன்பையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர். முன்னதாக இவர்கள், 19 வெவ்வேறு நாடுகளில் இருந்து பிலிப்பைன்ஸின் செபுவில் நடந்த அவர்களின் 30 வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்றனர். என்றும் இளமையோடு இருக்கும் ஆன்மாக்களின் நினைவுகளோடு, 20 மணி நேரத்திற்கும் மேலான பயணம் அவர்களது மூப்பையோ, உடல்நிலையையோ எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அவர்களின் உடற்பயிற்சி ஆசிரியரின் விசிலுக்கு அவர்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்தது உற்சாகத்தை அரங்கெங்கும் பரவ செய்தது.
பசுமையான பழைய நாட்களின் நகைச்சுவை காற்றில் புன்னகையை நிரப்பியது. பெஞ்ச்-தோழர்கள், பைக் கும்பல்கள், துணிச்சலான விளையாட்டு வீரர்கள் மற்றும் புத்தகப்புழுக்கள் அனைவரும் தங்கள் தனித்துவமான டி-ஷர்ட்களில் எழுந்து நின்று ஆரவாரமூட்டினர். அவை SBOA சென்னை-கிளாஸ் ஆஃப் 1995 ரீயூனியன் - என்ற அவர்களின் சாட்சியத்தை பெருமையுடன் நினைவு கூர்ந்தன. அறுவைசிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், வணிகர்கள், பெருநிறுவன வல்லுநர்கள் மற்றும் மென்பொருள் ஜாம்பவான்கள் அனைவராலும் நிரம்பி இருந்த அந்த இடம், ஒவ்வொருவரது முகத்திலும் ஒரே மாதிரியான வெளிப்பாடை உருவாக்கியது. மொபைல் போன்கள் அல்லது சமூக ஊடகங்கள் இல்லாத ஒரு சகாப்தத்திலிருந்து தங்கள் நண்பர்களைச் நவீன யுகத்தில் சந்திப்பதன் மகிழ்ச்சி எல்லையற்றது. தங்கள் வாழ்க்கையை வடிவமைத்த ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக 60 க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பிப்ரவரி 22,2025 அன்று பள்ளி வளாகத்திற்கு 1995 ஆம் ஆண்டு பள்ளி நிறைவு செய்த மாணவர்களின் குழு அழைத்து வந்து கௌரவப்படுத்தினர்.