Thursday, March 6, 2025

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், '8 தோட்டாக்கள்' புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த்தின் '3 BHK' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது


 சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், '8 தோட்டாக்கள்' புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த்தின் '3 BHK' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

'3 BHK' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. ஃபீல் குட் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் டைட்டில் அறிவித்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், இதன் டீசரும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா தெரிவித்திருப்பதாவது, "மனதை வருடும் இதமான, திருப்தியான கதைகளைத் தயாரிப்பது தயாரிப்பாளராக எனக்கு மகிழ்ச்சியான விஷயம். அந்த அனுபவத்தைக் கொடுத்த '3 BHK' படத்திற்கும், படக்குழுவினருக்கும் நன்றி. நாங்கள் திட்டமிட்டபடியே சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் உலகளவில் படத்தின் திரையரங்க வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அறிவிப்போம். இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்களை மகிழ்விக்கும்" என்றார். 

நடிகர்கள்: சித்தார்த், சரத்குமார், தேவயாணி, ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்கள்

யோகி பாபு, மீத்தா ரகுநாத், மற்றும் சைத்ரா ஆகியோரும் நடித்துள்ளனர். 

தொழில்நுட்ப குழு:

பேனர்: சாந்தி டாக்கீஸ் ,

தயாரிப்பாளர்: அருண் விஸ்வா,

எழுத்து, இயக்கம்:

ஸ்ரீ கணேஷ்,

இசை: அம்ரித் ராம்நாத்,

ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன் பி & ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ், 

எடிட்டர்: கணேஷ் சிவா,

கலை இயக்குநர்: வினோத் ராஜ்குமார் என்,

ஆடை வடிவமைப்பாளர்: அசோக் குமார் எஸ் & கிருத்திகா எஸ்,

பாடல் வரிகள்: விவேக், கார்த்திக் நேத்தா, பால் டப்பா, ஸ்ரீ கணேஷ்

ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி & அழகியகூத்தன்

ஒலி கலவை: சுரேன் ஜி

ஒப்பனை: சிவா மல்லேஸ்வரராவ், வினோத் சுகுமாரன்

ஆடை வடிவமைப்பாளர்: ஆர்.கே.தன்ராஜ்,

கலரிஸ்ட்: பிரசாத் சோமசேகர்,

DI: நாக் ஸ்டுடியோஸ்,

ஃப்ர்ஸ்ட் ஏடி: ஜெய் கணேஷ் டி.ஏ.,

டைரக்ஷன் டீம்: விக்னேஷ் நாராயணன், சாய் ஷரன் எஸ், ராம்கிரண், சிவ குமார் எஸ், கணேஷ் ஆர் ,

சப்டைட்டில் எடிட்டர்: சஜித் அலி,

மார்க்கெட்டிங் ஹெட்: லோகேஷ் ஜே,

கிரியேட்டிவ் கன்டென்ட் ஹவுஸ்: ஆர்ட் வென்ச்சர்,

கிரியேட்டிவ் ஒருங்கிணைப்பாளர்: அட்சயா,

தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: எஸ்.என்.அஸ்ரப்,

தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்: சரவணராஜன்,

தயாரிப்பு நிர்வாகி: எம்.உதயகுமார்,

ஸ்டில்ஸ்: ஜெய்குமார் வைரவன்,

விளம்பர வடிவமைப்புகள்: ஏஸ்தெடிக் குஞ்சம்மா

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-அப்துல் நாசர் 

நிர்வாக தயாரிப்பாளர்: ஆர். சிபி மாரப்பன்


Badava - திரைவிமர்சனம்

 இந்த கிராமப்புற நகைச்சுவை நாடகம், திறமையான இரட்டையர்களான வெமல் மற்றும் சூரி ஆகியோரை ஒன்றிணைத்து, ஒரு கவர்ச்சிகரமான மற்றும் பொழுதுபோக்கு அனு...