Thursday, May 8, 2025

கோடை கொண்டாட்டமாக வெளிவரும் யோகி பாபு நடித்த "ஸ்கூல் " திரைப்படம்


கோடை கொண்டாட்டமாக வெளிவரும் யோகி பாபு நடித்த "ஸ்கூல் " திரைப்படம்

மே 23-ம் தேதி திரைக்கு வரும் யோகி பாபு நடித்த " ஸ்கூல் "

R.K. வித்யாதரன் இயக்கியுள்ளார்.

யோகி பாபு -பூமிகா -கே. எஸ் ரவிக்குமார் நடித்த " ஸ்கூல் " 

மே 23- ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R. K. வித்யாதரன் தயாரித்து, இயக்கியுள்ள படம் " ஸ்கூல் "


இந்த படத்தில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாதிரத்தில் நடித்திருக்கிறார்கள்  மற்றும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க ஸ்கூல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு : ஆதித்யா கோவிந்தராஜ்.

எடிட்டிங் : ராகவ் அர்ஸ்

கலை : ஶ்ரீதர்

ஸ்கிரிப்ட் கன்சல்ட்ண்ட் : V. நிவேதா 

விளம்பர வடிவமைப்பு : சதீஷ் J

மக்கள் தொடர்பு :  புவன் செல்வராஜ் 

இணை தயாரிப்பு :  K. மஞ்சு

தயாரிப்பு : Quantum Film Factory R.K.வித்யாதரன்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்  R.K. வித்யாதரன்.

இது ஒரு உளவியல் ரீதியான திரில்லர் படம். இன்றைய பள்ளி மாணவ மாணவிகளின் கண்ணோட்டத்தில் சமுதாயத்தில் நடக்கும் கொலை ,தற்கொலை, விபத்து, கலவரம் போன்ற பல முக்கியமான கிரைம் சம்பவங்களை பற்றி அலசி ஆராயும் விதமாக விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்துள்ளோம்.

அதே நேரத்தில் மனித உயிரின் பிரயாணத்தை பற்றியும் ஆவிகள் பிசாசுகள் பற்றிய  நம்பிக்கைகள் பற்றியும் மிக தீவிரமாக சொல்கிறோம்.

மாணவ மாணவிகளை உளவியல் ரீதியாக ஆராய்ச்சி செய்யும் ஆசிரியராக பூமிகாவும் மாணவர்களை எளிமையாக பழகி அவர்களை நல்வழிக்கு நடத்திச் சொல்லும் ஆசிரியராக யோகி பாபுவும்,  ஸ்கூலில் நடக்கும் க்ரைம் சம்பவங்களை இன்வேஸ்டிகேஷன் செய்யும் போலீஸ் ஆபீஸராக கே எஸ் ரவிக்குமாரும் principal ஆக பாக்ஸும் சாம்சும் நடித்திருக்கிறார்கள்.

கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த இந்த படத்தை இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேவையான பாடமாக உருவாக்கி இருக்கிறோம்.

 படம் கோடை கொண்டாட்டமாக இம்மாதம்  23 -ம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறோம் என்று திரைப்பட குழு அறிவித்துள்ளது.