Thursday, June 5, 2025
சையாரா இசை ஆல்பத்தில் உள்ள பாடல்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நான் சேகரித்த பாடல்கள்' இதில் என் எண்ணங்கள் மற்றும் மெல்லிசைகள் உள்ளது!’ - மோஹித் சூரி
சையாரா இசை ஆல்பத்தில் உள்ள பாடல்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நான் சேகரித்த பாடல்கள்' இதில் என் எண்ணங்கள் மற்றும் மெல்லிசைகள் உள்ளது!’ - மோஹித் சூரி
யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் மோஹித் சூரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் சையாரா .இப்படத்தின் டீசர் வெளியான பிறகு 2025ம் ஆண்டின் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கும் படமாக மாறியுள்ளது. காலத்தால் அழியாத காதல் படங்களை உருவாக்குவதில் பெயர் பெற்ற யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் ,மோஹித் சூரி கூட்டணி சையாரா திரைப்படம் மூலமாக அறிமுக நடிகர்களை வைத்து ஒரு அழகான காதல் கதையை உருவாக்குவதற்காக பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இன்று இப்படத்திலிருந்து 'சையாரா ' என்ற தலைப்புப் பாடலை வெளியிட்டுள்ளனர் . மேலும், மோஹித் சூரி , இந்த இசை ஆல்பத்தில் உள்ள பாடல்கள் 'எண்ணங்கள் மற்றும் மெல்லிசைகள்’ இருப்பதாக கூறியுள்ளார் . இதற்காக அவர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கவனமாக சேகரித்து தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மோஹித் கூறுகையில், “என்னைப் பற்றி ஒரு சில நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால், புதிய இசையமைப்பாளர்கள், பாடகர்களைச் சந்திப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் புத்தகங்களை படிக்கவும், புத்தகங்களை சேகரிக்கவும் விரும்புபவர்களைப் போலவே மெல்லிசைகளையும் பாடல்களையும் சேகரிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே, சையாராவின் ஆல்பத்தில் எனது பாடல்கள், எண்ணங்கள் மற்றும் மெல்லிசைகள் உள்ளது.அவற்றை நான் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கவனமாக சேகரித்து தொகுத்து வருகிறேன்.
சையாராவிற்காக அழகான, ஆத்மார்த்தமான மெல்லிசைகளுடன் கூடிய மிகவும் புதிய ஆல்பத்தை பார்வையாளர்களுக்கு வழங்க விரும்புகிறேன். அறிமுக நடிகர்களின் படத்திற்காக நான் புதிய காதல் ஆல்பத்தை தர விரும்புகிறேன். சயாராவின் இசை ஆல்பம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது .எனவே, இந்த ஆல்பத்தின் ஒவ்வொரு பாடலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உணர்கிறது. சயாராவின் தலைப்புப் பாடலை முதலில் வெளியிட்டு எங்கள் மார்க்கெட்டிங் விளம்பரத்தை தொடங்குகிறோம்.
சயாராவின் தலைப்புப் பாடல் மூலம் காஷ்மீரில் இருந்து பாலிவுட் வரை மிகவும் திறமையான இந்திய இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களான ஃபஹீம் அப்துல்லா மற்றும் அர்சலான் நிஜாமி ஆகியோரை அறிமுகப்படுத்துகிறோம் . இந்த பாடலை தனிஷ்க் பாக்சி இசையமைத்துள்ளார். ஃபஹீம் & அர்சலனை சந்திக்க வைத்ததற்கு நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். அழகான பாடல் வரிகளை மேஸ்ட்ரோ இர்ஷாத் கமில் எழுதியுள்ளார்."
சையாரா படத்தின் மூலம் பாலிவுட்டில் அஹான் பாண்டே பாண்டேவை ஒரு ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ளனர் , மேலும் அனீத் பட்டா (பிக் கேர்ள்ஸ் டோன்ட் க்ரை என்ற மிகவும் பாராட்டப்பட்ட தொடரில் அவரது அற்புதமான நடிப்பால் கவர்ந்தவர்) கதாநாயகியாக நடிக்கிறார். சையாராபடத்தை யஷ் ராஜ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் விதானி தயாரித்துள்ளார்.இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 18ம் தேதியன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
கலைஞர் தொலைக்காட்சியில் "தமிழோடு விளையாடு" நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஞாயிறுதோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
கலைஞர் டிவியின் "தமிழோடு விளையாடு சீசன் 3" - காலிறுதி வாய்ப்புக்கான போட்டியில் மோதும் பள்ளி மாணவர்கள்..! ...
-
*ஆவடி புனித அந்தோணியார் திருத்தலத்தின் 75வது ஆண்டு விழா ஜூன் மாதம் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சிறப்பாக நடைப்பெற்று வருகின்ற...
-
SIMS Hospital Successfully Performs Life-Changing Precision Neurosurgery Guided by Advanced Neurophysiology on a 40-Year-Old Man...
