Monday, August 18, 2025

ஆகஸ்ட் 27 முதல் "காத்துவாக்குல ரெண்டு காதல்" - கலைஞர் டிவி-யின் புத்தம் புதிய மெகாத்தொடர்

ஆகஸ்ட் 27 முதல் "காத்துவாக்குல ரெண்டு காதல்" - கலைஞர் டிவி-யின் புத்தம் புதிய மெகாத்தொடர்
 
நமது கலைஞர் தொலைக்காட்சியில் வரும் ஆகஸ்ட் 25 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு "காத்துவாக்குல ரெண்டு காதல்" என்கிற புத்தம் புதிய மெகாத் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.
 
கும்பகோணத்தில் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த திறமையான நகை வியாபாரியான சரவணன், தனது தாய், தம்பி மற்றும் சகோதரியுடன் வசிக்கிறார்.
 
விசுவாசமும், மரியாதையும் கொண்ட சரவணன், நகைக்கடை உரிமையாளரான ராஜசேகரிடம் வேலை செய்கிறார். அவரது மகள் ரம்யாயும், சரவணணும் ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வருகிறார்கள்.
 
மறுபுறம், தஞ்சாவூரில், கடன் கொடுக்கும் தண்டபாணியின் மகளான ஈஸ்வரி, சரவணனை சந்தித்த நொடியே காதல் வயப்படுகிறாள். இரு குடும்பங்களின் எதிர்ப்பு இருந்தபோதிலும், ஈஸ்வரி அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கிறாள். இறுதியாக, சரவணனுக்கும், ஈஸ்வரிக்கும் திருமண ஏற்பாடும் நடைபெறுகிறது.
 
இவ்வாறு, இக்கட்டான சூழலில் சிக்கிக் கொள்ளும் சரவணன், தனது வாழ்க்கையில் கடினமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.
 
இறுதியில், எந்த காதல் வெற்று பெறும்? இவர்களின் வாழ்க்கை எவ்வாறு மாறும்? என்பதே தொடரின் விறுவிறுப்பான கதையாகும்.

குற்றம் புதிது' படத்தின் இசை வெளியீட்டு விழா

*'குற்றம் புதிது' படத்தின் இசை வெளியீட்டு விழா!* ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்பட...