திருவள்ளூர் பிரிமியர் லீக் 3.0 – தமிழ்நாட்டு ஹாக்கிக்கு ஒரு புதிய அத்தியாயம் மாஸ்காட் அறிமுகம்,தமிழ் ஹாக்கி கீதம் வெளியீடு
முக்கிய அறிவிப்புகள் – விறுவிறுப்பான பத்திரிகையாளர் சந்திப்பில்
சென்னை, ஆகஸ்ட் 9, 2025:
மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம், எக்மோர் – உற்சாகம் நிறைந்த சூழலில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், திருவள்ளூர் பிரிமியர் லீக் (TPL) தனது மூன்றாவது பதிப்புக்கான விரிவான திட்டங்களை அறிவித்தது. ஹாக்கி புரவலர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய தேசிய வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊடக பிரதிநிதிகள், மற்றும் ஆர்வமுள்ள ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
2023 ஆம் ஆண்டில் தொடங்கிய TPL, தமிழ்நாட்டின் முன்னணி லீக் ஹாக்கி போட்டியாக விரைவில் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு, ஹாக்கி திருவள்ளூர் யூடியூப் சேனல் மற்றும் i1SPORTS மூலமாக அனைத்து போட்டிகளும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்பது முக்கிய சிறப்பு.
வரவேற்பு உரை
லீக் இயக்குநர் மற்றும் 1980 ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன், பத்மஸ்ரீ வி. பாஸ்கரன் அவர்கள்,
“TPL என்பது ஒரு ஹாக்கி லீக் மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். இந்த முறை, பிளட்லைட்ஸ் கீழ் நடைபெறும் இறுதிப் போட்டியுடன், ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்க உள்ளோம். நீங்கள் மைதானத்தில் இருந்தாலும், ஆன்லைனில் பார்த்தாலும், இந்தப் பயணத்தின் ஒரு அங்கமாக இருப்பீர்கள்,”
என்று உரையாற்றினார்.
லீக் வளர்ச்சி மற்றும் எதிர்காலம்
ஹாக்கி திருவள்ளூர் தலைவர் டாக்டர் பிரகாஷ் அய்யாதுரை அவர்கள்,
“முதலிரண்டு சீசன்களில், நாங்கள் தரமான, சுவாரஸ்யமான ஹாக்கியை வழங்கியுள்ளோம். இப்போது, வீரர்களை ரசிகர்கள் நாயகர்களாக ஏற்றுக் கொள்ளும் கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். TPL, திறமையான விளையாட்டு வீரர்களை தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளுக்குக் கொண்டு செல்லும் தளமாக திகழ்கிறது,” என்று வலியுறுத்தினார்.
போட்டியிடும் அணிகள்
தொழில்நுட்ப இயக்குநர் திரு. மொகுல் முகம்மது மூனீர் அவர்கள், 2025 சீசனுக்கான அணிகளை அறிமுகப்படுத்தினார்.
பூல் A:
• வருமான வரி ஹாக்கி அணி
• மாஸ்கோ மேஜிக்
• தியான்த் வீரன்ஸ்
• ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்சைஸ்
• இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
பூல் B:
• இந்தியன் வங்கி
• AGORC
• எஸ்.எம். நகர் ஹாக்கி
• பட்டாபிரம் ஸ்ட்ரைக்கர்ஸ்
• தெற்கு ரயில்வே
மாஸ்காட் ‘மாறா’ அறிமுகம்
சிற்பி திரு. சதீஷ் ராஜா வடிவமைத்த ‘மாறா’ எனும் மாஸ்காட், வேகம், உறுதி, மற்றும் போராட்ட மனப்பாங்கின் அடையாளமாக விளங்குகிறது.
ஒலிம்பியன் திரு. திருமல்வளவன் அவர்கள் மாஸ்காட் சிலையை திறந்து வைத்தார்
லீக் கீதம் – ‘ஹாக்கிதான் ஹீரோ’ வெளியீடு
பிரபல தாளவாத்தியக் கலைஞர் திரு. சித்தார்த் நாகராஜன் இசையமைத்த லீக் கீதம், ஒலிம்பியன் திரு. முகம்மது ரியாஸ் அவர்களுடன் வெளியிடப்பட்டது.
“இது ஒரு பாடல் மட்டுமல்ல; ஹாக்கியின் இதயத் துடிப்பு. ரசிகர்கள் முதல் விசில் அடிக்கும் முன்பும், கடைசி ஹூட்டருக்குப் பிறகும் இதன் அதிர்வை உணர வேண்டும்,” என்று சித்தார்த் தெரிவித்தார்.
ஹாக்கியை ரசிகர்களுக்கு மேலும் ஈர்க்கும் முயற்சிகள்
இயக்குநர் மாலினி ஜிவரத்தினம் அவர்கள், இசை, நேரடி உரையாடல்கள், துடுக்கான நிகழ்ச்சி நடத்தும் பாணி, மற்றும் ஆன்லைன் பார்வையாளர்களுக்கான கதை சொல்லல் மூலம் ஹாக்கியை மேலும் சுவாரஸ்யமாக்கும் திட்டங்களை பகிர்ந்தார்.
முன்னணி பயிற்சியாளரின் கருத்து
இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் திரு. சி.ஆர். குமார் அவர்கள், திறமையான இளம் வீரர்களை அடையாளம் காணும் முறைகள் மற்றும் அவர்களை வளர்ப்பதில் தேவைப்படும் ஒழுக்கம் குறித்து விலைமதிப்பற்ற கருத்துகளை பகிர்ந்தார்.
இளம் தமிழக வீரர்களின் அனுபவம்
இந்திய அணியில் விளையாடும் தமிழக இளம் நட்சத்திரங்கள் மர்ரேஸ்வரன், ஆனந்த், மற்றும் சதீஷ் ஆகியோர் தங்கள் பயணமும், TPL வழங்கும் போட்டித் தளத்தின் முக்கியத்துவத்தையும் பகிர்ந்தனர்.
போட்டி அட்டவணை
2025 பதிப்பு ஆகஸ்ட் 11 முதல் 31 வரை எக்மோர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறும். தினமும் இரண்டு போட்டிகள் நடைபெறும்.
• சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னணி அணிகள் தகுதி பெறும்.
• ஆகஸ்ட் 30 – காலிறுதி (பிளட்லைட்ஸ்)
• ஆகஸ்ட் 31 – பிளட்லைட்ஸ் கீழ் நடைபெறும் பெரும் இறுதி – லீக் வரலாற்றில் முதல்முறை!
