சொட்ட சொட்ட நனையுது” இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!
Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”.
“சொட்ட சொட்ட நனையுது” இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!
Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”.
வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள, இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
நடிகர் ஆனந்த் பாண்டி பேசியதாவது…
எனக்கு இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளர் எல்லோருக்கும் நன்றி. எனக்கு இதில் வித்தியாசமான ஒரு கேரக்டர், சாதா ஹீரோவாக இருந்த என்னை, பான் இண்டியன் ஹீரோவாக மாற்றிவிட்டீர்கள். இப்படத்தில் எல்லோரும் செம்மையாக நடித்துள்ளனர். பாடல்கள் எல்லாம் அருமையாக உள்ளது. எல்லோரும் குழந்தைகளோடு ஃபேமிலியாக இப்படத்தைப் பாருங்கள் நன்றி.
நடிகை வர்ஷிணி வெங்கட் பேசியதாவது…
சொட்ட சொட்ட நனையுது. இப்படத்தில் முடி எவ்வளவு முக்கியம் என்றும் அதே நேரம் எவ்வளவு முக்கியம் இல்லை என்றும் சொல்லியிருக்கிறோம். எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர், தயாரிப்பாளர் எல்லோருக்கும் நன்றி. நாயகி ஆகும் கனவு, இந்தப்படம் மூலம் நனவாகியுள்ளது. இப்படம் ஷீட்டிங் மிக கலகலப்பாக இருக்கும். எல்லோரும் கேர்கடராக கலக்கலாக நடித்துள்ளனர். ஷீட்டிங் ரொம்ப ஜாலியாக இருந்தது. எல்லோரையும் தியேட்டரில் சந்திக்கிறோம். பல புதுமுகங்கள் பணியாற்றியிருக்கும் படம், புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகை ஷாலினி பேசியதாவது…
எனக்கு வாய்ப்பு தந்த குழுவிற்கு நன்றி. என்னை ஷீட்டிங்கில் எல்லோரும் மிக நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். ஷீட்டிங் மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. எங்கள் படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
கலக்கப்போவது யாரு புகழ் ராஜா பேசியதாவது…
கலக்கப்போவது யாரு ஆரம்பித்து 6,7 வருடமாக தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறேன். எல்லோருக்கும் இருக்கும் கனவு வெள்ளித்திரையில் தெரிய வேண்டும் என்பது தான் அது நிறைவேறியுள்ளது. இயக்குநர் நவீத் அவரால் தான் இது சாத்தியமானது. எல்லா பிரஸரையும் அவர் எடுத்துக்கொண்டு, எங்களை ஈஸியாக வைத்துக்கொண்டார். படத்தை வெறும் 18 நாட்களில் முடித்தோம். அவரால் தான் இது நடந்தது. எல்லோரும் இணைந்து உழைத்ததால் தான் இது சாத்தியமானது. இந்தப்படத்தில் நான் நடித்திருக்கிறேன், வசனம் எழுதியுள்ளேன், உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளேன். இந்தப்படம் குடும்பத்தோடு ரசிக்கும் படியான படமாக இருக்கும். விஜய் டிவி திறமைகள் பலபேர் இதில் வேலை பார்த்துள்ளனர். எனக்காக வந்த நண்பர்களுக்கு நன்றி. ரஞ்சித் உன்னி அழகான பாடல்களைத் தந்துள்ளார். இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி.
நடிகை ரியா பேசியதாவது…
எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் தயாரிப்பாளர் எல்லோருக்கும் நன்றி. நன்றியைத் தவிர பெரிதாக எதுவும் சொல்ல தோணவில்லை. ராஜா சார் பேப்பரே இல்லாமல் மொத்த சீனையும் மனதிலிருந்தே சொல்வார். இயக்குநர் மிக அற்புதமாகக் காட்சிகளை எடுத்து விடுவார். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகர் நிஷாந்த் ரூஷோ பேசியதாவது…
எனது ஐந்தாவது படம். எனக்குத் தொடர்ந்து ஆதரவு தந்து வரும் மீடியா நண்பர்களுக்கு நன்றி. இந்தக்கதையைக் கேட்டவுடன் சொட்டையை வைத்து ஒரு கதை, எப்படி அந்த வலியைச் சொல்ல முடியும் என்று தோன்றியது. இயக்குநர் நவீத் நிஜ வாழ்க்கையில் சொட்டையாய் இருப்பவர்களைப் பார்க்கச் சொன்னார். என் உறவுகளில் அப்படி சிலரைச் சந்தித்தபோது தான் அவர்களது வலி புரிந்தது. அப்போது தான் கதையின் வலிமை புரிந்தது. சொட்டை என்பது இயற்கை தான் ஆனால் அதைக் குறையாகச் சொல்லி, இப்போது அது அவர்களது வாழ்க்கையையே பாதிக்கிறது. எங்கள் படம் பார்த்தால், சொட்டைத்தலையை இனிமேல் யாரும் மோசமாக நடத்த மாட்டார்கள். இப்படம் உங்கள் மனதை மாற்றும். இப்படத்தில் கூட நடித்த அனைவரும் மிகச்சிறப்பாகச் செய்துள்ளனர். படத்தில் கேமராமேன், எடிட்டர், மியூசிக் டைரக்டர் எல்லோரும் முழு உழைப்பைத் தந்துள்ளார்கள். அனைவருக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகை பிரியங்கா நாயர் பேசியதாவது…
எனது முதல் படம் இது. என்னைத் திரையில் பார்க்கப் போகிறேன் என ஆவலாக உள்ளேன். இயக்குநர் எனக்கு கால் செய்து ஒரு பாடலில் கேமியோ இருக்கிறது நடிக்க வேண்டும் என்றார். ஷீட்டிங் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது…
என் வளர்ச்சியில் பத்திரிக்கை நண்பர்கள் ஆதரவு மிகப்பெரியது அவர்களுக்கு நன்றி. இது என் ஜாதிக்காரன் படம், அது வேறேதுமில்லை நகைச்சுவை ஜாதி தான். முழுக்க முழுக்க நகைச்சுவைப்படம் இது. நீங்கள் ரசித்துச் சிரிக்கும் படமாக இப்படம் இருக்கும். இயக்குநர் நவீத் S ஃபரீத் அவ்வளவு அருமையாக இயக்கியுள்ளார். 5 படம் நடித்த ஹீரோ, தன் இமேஜை உடைத்து மேடைக்கும் அதே கெட்டப்பில் வருவது மிகப்பெரிய விசயம். அவருக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள். தொழில் நுட்ப கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். கல்லூரி வினோத் அவன் மிகச்சிறந்த எழுத்தாளர், அவன் சீக்கிரம் படம் இயக்க வேண்டும். விரைவில் நான் இயக்கும் படத்தில் கலக்கப்போவது யாரு ராஜாவும், வினோத்தும் பணியாற்றுவார்கள். அனைவருக்கும் நன்றி.
இசையமைப்பாளர் ரெஞ்சித் உன்னி பேசியதாவது…
எனது பருந்தாகுது ஊர்க்குருவி படம் பார்த்து இயக்குநர் நவீத் இந்தப்படத்திற்காக என்னை ஓப்பந்தம் செய்தார். ஒரு காட்சியை சொல்லி பாடல் கேட்டார். நான் தந்த பாடல் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு டியூன் அனுப்பிய உடனே அது பிடிக்கிறதா? இல்லையா? என உடனே சொல்லிவிடுவார். அதனால் வேலை பார்ப்பது மிக ஈஸியாக இருந்தது. பாடல்கள் எல்லாம் உங்களுக்குப் பிடிக்கும். என்னை மாதிரி புது இசையமைப்பாளருக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகர் கல்லூரி வினோத் பேசியதாவது…
சொட்ட சொட்ட நனையுது ஒரு பயஙகரமான லவ் சாங் லிரிக்சை, முழுக்க முழுக்க காமெடியா மாற்றி வைத்திருக்கிறார்கள். புரடியூசர் பார்க்கும் போது எல்லார் முகத்திலயும் அவ்வளவு சந்தோசம் இருக்கும். இந்த விழாவை ஆடி மாத விழா மாதிரி மாத்தின ரோபோ சங்கர் அண்ணாவுக்கு நன்றி. விழாவுக்கு வர யோசிக்கிற ஹீரோ இருக்க இன்ட்ஸ்ட்ரில சொட்டைத்தலையை கெட்டப்போட வந்திருக்க ஹீரோ ரூஷோவுக்கு வாழ்த்துக்கள். என் தம்பி கலக்கப்போவது ராஜாவுக்கு வாழ்த்துக்கள். படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். படத்தை தியேட்டரில் பார்த்து ஆதரவு தாருங்கள்.
Adler Entertainment சார்பில் அசார் பேசியதாவது…
நானும் நவீத்தும் தியேட்டர், தியேட்டராக படம் பார்க்க அலைந்திருக்கிறோம். அவன் கதை சொல்வான், நான் எழுதுவேன். அவன் 10 வருட கனவு இப்போது தான் நனவாகியுள்ளது. இது மிகப்பெரிய பயணம். நிஷாந்தை எனக்கு 6 வருடங்களாகத் தெரியும். எங்களிடம் இருந்த மொத்த பணத்தையும் உழைப்பையும் போட்டு இப்படத்தை எடுத்துள்ளோம். அடுத்து ஒரு பெரிய திட்டம் வைத்துள்ளோம். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
இயக்குநர் நவீத் S ஃபரீத் பேசியதாவது…
இது எனக்கு முதல் மேடை பதட்டமாக உள்ளது. யார்க்கர் என ஒரு படம் எடுக்கலாம் என்று தான் முதலில் ஆரம்பித்தோம், ஆனால் அதற்க்கான ஃபண்ட் கிடைக்கவில்லை. அதனால் முதலில் ஒரு காமெடி படம் செய்யலாம் என நினைத்தோம். Adler எங்கள் கம்பெனி தான் அதில் பல பிஸினஸ் செய்து வருகிறோம், படம் செய்யத்தான் அந்த கம்பெனியே நடத்தி வருகிறோம். இப்போதைக்கு ஒரு படம் பண்ணலாம் என ஆரம்பித்து இந்தப்படம் வந்துள்ளது. 10 நாள் ஷீட்டிங் நடத்த தான் எங்களிடம் இருந்தது, அதை வைத்து தான் படம் எடுத்தோம். 18 நாளில் இந்தப்படத்தை முடித்தோம். அப்பாவை நடிக்க வைத்து அவரிடம் பணம் வாங்கி படத்தை எடுத்தோம். அம்மா நகையையும் அடகு வைத்து விட்டேன். Generous Entitlement டீசர் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள் உடனே அவர்களை படத்தை ரிலீஸ் செய்ய வைத்து விட்டோம். நிஷாந்தை ஓகே செய்து விட்டு தான் கதை எழுதினோம். படத்தை முடித்து விட்டோம். ரோபோ அண்ணன் 4 நாள் ஷீட் வந்தார் எங்களுக்காக நடித்து தந்துள்ளார். ஷாலினி நல்ல எதிர்காலம் இருக்கிறது. வர்ஷிணி ஏற்கனவே 4 படம் கமிட்டாகிவிட்டார். ரெஞ்சித் உன்னி படம் எடுக்கும் முன்னாலேயே 4 பாடல் போட்டு தந்துவிட்டார். கேமராமேன் ரயீஷ் கடைசியாகத் தான் வந்தார். முழு ஆதரவாக இருந்தார். படத்தில் எல்லோரும் பணத்தை யோசிக்காமல் உழைத்தார்கள். எல்லோருக்கும் நன்றி. நல்ல படம் எடுத்துள்ளோம் அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி.
கேபிள் சங்கர் பேசியதாவது…
தம்பி நிஷாந்த் “பன்றிக்கு நன்றி சொல்லி” படத்தின் மூலம் தான் பழக்கம். அந்தப்படம் ரிலீஸாகமல் இருந்தது. அதைப்பார்த்து கடைசியில் எங்கள் முயற்சியில் ஞானவேல் ராஜா ரிலீஸ் செய்தார். இப்போது அவரது ஐந்தாவது படத்தில் சந்திப்பது மகிழ்ச்சி. இயக்குநர் நவீன் ஜாலியான ஆள் இல்லை, தன் டென்ஷனை எல்லாம் மனதிற்குள் வைத்துக்கொண்டு ஜாலியாக நடித்துக்கொண்டிருக்கிறார். படத்தை மிக நன்றாக இயக்கியுள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக ஜெயிக்கும். பல பிரபலமான ரீல்ஸ் முகங்களைப் படத்தில் நடிக்க வைத்துள்ளார்கள், ஜாலியாக படத்தை எடுத்துள்ளார்கள். படம் பெரிய வெற்றிபெறும். முடி இல்லாததைப் பற்றி படம் எடுத்தவர்கள் தோற்றதே இல்லை. அனைவரும் ஜெயிக்க வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் C V குமார் பேசியதாவது…
நிஷாந்த் நடித்த பன்றிக்கு நன்றி சொல்லி படம் பார்த்த போது, ரொம்பவும் பிடித்திருந்தது. அந்தப்படம் என் மூலம் ஞானவேல் ராஜா ரிலீஸ் செய்து நன்றாகப் போனது. அதே போல் இந்தப்படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள். இயக்குநர் நவீன், கூல் என சொல்கிறார்கள் உண்மையில் அப்படி இருக்க முடியாது. படத்தை மிக அழகாக எடுத்துள்ளார். நடித்தவர்களும் நன்றாக நடித்துள்ளனர். சினிமாவை நேசிப்பவர்களை சினிமா விடாது. சினிமாவில் நீங்கள் நன்றாக வருவீர்கள் வாழ்த்துக்கள்.
இளம் வயதில் தலையில் சொட்டை விழும் நாயகனுக்கு வீட்டில் திருமணம் செய்யத் திட்டமிடுகிறார்கள். இதைத்தொடர்ந்து நடக்கும் கலகலப்பான சம்பவங்களும், அதிரடி திருப்பங்களும் தான் இப்படத்தின் மையம், அனைத்து தரப்பினரும் கொண்டாடும் ஒரு கமர்ஷியல் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
மும்பையில் நடிப்பு மற்றும் திரைக்கதை படித்த, நவீன் s ஃபரீத் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கலக்கப்போவது யாரு புகழ் ராஜா இப்படத்திற்குக் கதை வசனம் எழுதியுள்ளார்.
இப்படத்தில் நாயகனாக நிஷாந்த் ரூஷோ நடிக்கிறார். ஜோடியாக பிக்பாஸ் வர்ஷிணி, அறிமுக நடிகை ஷாலினி நடிக்கின்றனர். இவர்களுடன், …. முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் உலகளாவிய விநியோக உரிமையை Generous Entitlement நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தொழில்நுட்ப குழு விபரம்
தயாரிப்பு நிறுவனம் - Adler Entertainment
இயக்கம் - நவீத் s ஃபரீத் (debute)
திரைக்கதை வசனம் - கலக்கப்போவது யாரு புகழ் ராஜா
இசை - ரெஞ்சித் உன்னி
ஒளிப்பதிவு - ரயீஷ்
எடிட்டிங்க் - ராம் சதீஷ்
கலை இயக்கம் - ராம்குமார்
நடனம் - அப்சர்
மக்கள் தொடர்பு - ராஜா