Saturday, August 9, 2025

நடிகர் விக்ரம் பிரபு & LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் !!*

*நடிகர் விக்ரம் பிரபு &  LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை,  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் !!*

*செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* சார்பில், தயாரிப்பாளர் *SS லலித் குமார்* தயாரிப்பில், நடிகர் *விக்ரம் பிரபு* நடிப்பில், அறிமுக இயக்குநர்  *சுரேஷ் ராஜகுமாரி* இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள *“சிறை”* படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை,  முன்னணி இயக்குநர் *லோகேஷ் கனகராஜ்* சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளார். 

கதையில் களத்தையும் கதாப்பாத்திரங்களையும் பிரதிபலிக்கும் அற்புதமான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. 

டாணாக்காரன்  இயக்குநர் *தமிழ்*, தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் *வெற்றிமாறனின்* இணை இயக்குநர்  *சுரேஷ் ராஜகுமாரி* இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். 

ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம். 

நடிகர் *விக்ரம் பிரபு* நாயகனாக நடிக்க,  ஜோடியாக நடிகை *அனந்தா (Anantha )* நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் *SS லலித் குமார் மகன் LK அக்‌ஷய் குமார்* அறிமுகமாகிறார்.  இவருக்கு ஜோடியாக *அனிஷ்மா (Anishma)* நடித்துள்ளார்.

*செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ*  சார்பில்  *SS லலித்குமார்* பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு *ஜஸ்டின் பிரபாகர்* இசையமைத்துள்ளார். *மாதேஷ் மாணிக்கம்* ஒளிப்பதிவு செய்துள்ளார். *பிலோமின் ராஜ்* எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை *பிரபு* வடிவமைத்துள்ளார்.    நிர்வாக தயாரிப்பாளராக  *அருண் K மற்றும் மணிகண்டன்* பணியாற்றியுள்ளனர். 

இப்படத்தின்  படப்பிடிப்பு *சென்னை, வேலூர் சிவகங்கை* ஆகிய பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரடக்சன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் இசை மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.



நடிகர் விக்ரம் பிரபு & LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் !!*

*நடிகர் விக்ரம் பிரபு &  LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை,  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டா...