Wednesday, September 10, 2025

சமைக்க சுவைக்க - சீசன் 2” - கலைஞர் தொலைக்காட்சியில் புத்தம் புதிய சமையல் நிகழ்ச்சி..!

“சமைக்க சுவைக்க - சீசன் 2” - கலைஞர் தொலைக்காட்சியில் புத்தம் புதிய சமையல் நிகழ்ச்சி..!
 
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு “சமைக்க சுவைக்க - சீசன் 2” என்கிற புத்தம் புதிய சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
 
சமைக்க சுவைக்க சமையல் நிகழ்ச்சியின் முதல் சீசனில் தமிழகத்தின் தனித்துவமான உணவுகள் இடம்பெற்ற நிலையில், சமைக்க சுவைக்க நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனானது இலங்கையில் தனித்துவமான உணவுகளை நம் கண் முன் கொண்டு வரப் போகிறது.
 
நிகழ்ச்சிக்காக "கற்றது கையளவு" சமையல் குழுவினர் இலங்கைக்கு நேரில் சென்று அங்குள்ள உணவுகளை ருசித்து பின்னர் சமைக்கும் சுவாரஸ்யமான சுற்றுகள் இடம்பெறுகிறது.
 
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு உணவு இருக்கும், ஒவ்வொரு உணவுக்கும் ஒரு சிறப்பு இருக்கும் என்பது போல் இந்த முறை இலங்கையின் தனித்துவமான உணவுகளை சுவைக்க சமைக்க சுவைக்க சீசன் 2 -வை தொடர்ந்து பாருங்கள்.

டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் !

*'டூரிஸ்ட் ஃபேமிலி'  பட இயக்குநர்  அபிஷன் ஜீவிந்த் திருமணம் !!* 'டூரிஸ்ட் ஃபேமிலி'  படம் மூலம் அனைவரது கவனத்தையு...