Tuesday, September 30, 2025

கலைஞர் டிவியில் அக்டோபர் 5 முதல் ஆரம்பமாகிறது"தமிழோடு விளையாடு சீசன் 3"..!

கலைஞர் டிவியில் அக்டோபர் 5 முதல் ஆரம்பமாகிறது
"தமிழோடு விளையாடு சீசன் 3"..!
 
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த"தமிழோடு விளையாடு" நிகழ்ச்சியின் முதல் இரண்டுசீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், அதன்மூன்றாவது சீசன் வருகிற அக்டோபர் 5 முதல்ஞாயிறுதோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகஇருக்கிறது. 
 
பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தொகுத்துவழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்தமாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தவிருக்கின்றனர்.இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தமிழ் அறிவைசோதிக்காமல், தமிழ் அறிவை ஊட்டும்உணர்ச்சிப்பூர்வமான புதிய சுற்றுகளுடன் உருவாகிறது.
 
சென்னை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, வேலூர் என தமிழகத்தின் பல்வேறு ஊர்களில்நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்டபள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த சீசனில்பங்கேற்று அசத்துகின்றனர். 
 
அக்டோபர் 5 முதல் ஞாயிறுதோறும் மாலை 6 மணிக்குகலைஞர் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியைகண்டுகளியுங்கள்.

பிரபாஸ் எல்லோராலும்“டார்லிங்” என்று அழைக்கப்படுவதற்குக் காரணம் இருக்கிறது - இயக்குநர் ஹனு ராகவபுடி

*பிரபாஸ் எல்லோராலும்“டார்லிங்” என்று அழைக்கப்படுவதற்குக் காரணம் இருக்கிறது - இயக்குநர் ஹனு ராகவபுடி !!* “ஃபௌசி” புராணக் கதை இல்ல...