Wednesday, December 24, 2025

கலைஞர் டிவியின் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

கலைஞர் டிவியின் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்
 
நமது கலைஞர் தொலைக்காட்சியில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.
 
அதன்படி ஜனவரி 1 வரும் வியாழன் காலை 9 மணிக்கு திண்டுக்கல் ஐ. லியோனி தலைமையில், குடும்ப உறவுகள் இன்று டிஜிட்டல் வழியே பயணிப்பது ஆனந்தமே? என ஒரு தரப்பும் ஆபத்தே? என மற்றொரு தரப்பும் பேசும் நகைச்சுவையான சிறப்பு பட்டிமன்றமும், காலை 10 மணிக்கு எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - மஞ்சு வாரியர் நடிப்பில் "துணிவு" அதிரடியான சூப்பர்ஹிட் திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு தனுஷ் இயக்கத்தில் பவிஷ் நாரணயன், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், ரபியா காட்டூன் நடிப்பில் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" என்கிற காதல் கலந்த காலமெடி திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.

கலைஞர் டிவியின் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

கலைஞர் டிவியின் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்   நமது கலைஞர் தொலைக்காட்சியில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்...