Friday, June 30, 2023

போர் தொழில் திரைப்பட வெற்றி விழா!*

*போர் தொழில் திரைப்பட வெற்றி விழா!*

அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், எப்ரியஸ் ஸ்டுடியோ எல்எல்பி, E4 எக்ஸ்ப்ரிமண்ட்ஸ் எல் எல் பி ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான பரபரப்பான சைக்கோ திரில்லர் படம் “போர் தொழில்”. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்குகளை திருவிழாக்கோலமாக மாற்றியிருக்கிறது. இன்று வரையிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகத் திரையரங்குகளை ஆக்கிரமித்திருக்கும் இப்படத்தின் வெற்றி விழா, இன்று சென்னையில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட்  சுனில் பேசுகையில், '' போர் தொழில் டிரெய்லர் வந்தபோது இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் எனச் சொன்னேன். 30 நாட்களைக் கடந்து இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. விக்னேஷ் ராஜா மிக அற்புதமான படத்தைத் தந்துள்ளார். அசோக் செல்வன், சரத்குமார் நல்ல நடிப்பைத் தந்துள்ளார்கள். இது தமிழில் எங்களுக்கு அறிமுகப்படம். ஒரு நல்ல தரமான படத்தைத் தந்தது மகிழ்ச்சி. உங்கள் ஆதரவால் தான் இந்தப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.  தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. ''என்றார்.


சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசுகையில், '' இந்தப் படம் எங்களுக்கான வெற்றி மட்டும் இல்லை, தமிழ் சினிமாவிற்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது, நல்ல படத்திற்கு ரசிகர்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். அது போல இந்த படத்திற்கும் ஆதரவு கொடுத்தீர்கள். நன்றி, படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே சென்றது, இது ஒரு சாதாரண விஷயமில்லை, அது மட்டுமல்ல.. திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் எங்களுக்கு நன்றி கூறியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது , இயக்குநர் ஒரு அசாத்திய வெற்றியைக் கொடுத்து விட்டு அமைதியாக அமர்ந்துள்ளார், இவர் கண்டிப்பாக ஒரு சிறந்த இயக்குநராக வருவார் என்பதில் ஆச்சரியம் இல்லை , தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நன்றி. அவருக்குத் தேவையான வெற்றியை இப்படம் கொடுத்துள்ளது, பத்திரிக்கையாளர் அனைவருக்கும் நன்றி.'' என்றார்.


தயாரிப்பாளர்களில் ஒருவரான E4 எக்ஸ்ப்ரிமெண்ட்ஸ் எல் எல் பி முகேஷ் R மேத்தா பேசுகையில், '' உங்கள் அனைவருக்கும் நன்றி, ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது நீங்கள் தான். அடுத்ததாக ரசிகர்கள் அவர்கள் படத்தின் டிவிஸ்ட்டை உடைக்காமல் படத்தைப் பாராட்டி, வரவேற்பு தந்தார்கள். அசோக் செல்வன், சரத்குமார் அவர்களின் கதாபாத்திரத்தைப் புரிந்து அட்டகாசமாக நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா மிக அற்புதமாக இப்படத்தை இயக்கியுள்ளார். ஓடிடி இருந்தாலும்  நல்ல கதைகள் கண்டிப்பாக ஓடும், மக்கள் திரையரங்கத்திற்கு வருவார்கள் என்பதை இப்படம் நிரூபித்துள்ளது. தொடர்ந்து இது மாதிரி நல்ல படங்களைத் தருவோம் நன்றி'' என்றார் . 


ஒளிப்பதிவாளர் கலைச் செல்வன் பேசுகையில், '' நான் பாலு மகேந்திரா சாரின் கல்லூரியில் படித்தேன், அவர் எப்போதும் சொல்வது ஒரு வார்த்தை தான், 'படத்தின் ஸ்கிரிப்ட் தான் படத்தைத் தாங்கும்' என்று சொல்வார், அது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது, விக்னேஷ் தனக்கு எது தேவை என்பதில் தெளிவாக இருந்தார், அவரின் பார்வை தான் இந்தப்படம், பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றி'' என்றார் .


விநியோகஸ்தர் தீபா பேசுகையில், ''
எனக்கு முகேஷ், அசோக் செல்வனைப் பல காலமாகத் தெரியும். இந்தப்படம் எங்களிடம் வந்த போதே, இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும் எனத் தெரியும். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் தொடர்ந்து நல்ல படங்களைத் தந்து வருகிறார்கள். இந்தப்படத்தைச் சின்ன சின்ன நாடுகளில் கூட எங்களால் விநியோகம் செய்ய முடிந்தது. படத்திற்கான வரவேற்பு எல்லா நாடுகளிலும் இருந்தது. இப்படம் இன்னும் யூகே வில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. அசோக் செல்வன், சரத்குமார் இருவரும் தங்கள் முழு ஒத்துழைப்பைத் தந்தார்கள். தொடர்ந்து படத்தை புரமோட் செய்தார்கள். நீங்கள் தந்த ஆதரவு மிகப்பெரியது. தொடர்ந்து  நல்ல படங்களைத் தருவோம் நன்றி'' என்றார்.


நடிகர் தேனப்பன் பேசுகையில், '' இந்த கம்பெனியை பற்றி நான் பெரிதும் கேள்விப் பட்டதில்லை. ஆனால் இந்தப் படத்திற்குப் பிறகு அனைவருக்கும் தெரியும், படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர், இயக்குநரின் மனைவி எங்கள் அனைவருக்கும் ஒரு வாழ்த்து கடிதம் எழுதினார். அது எனக்கு மறக்க முடியாத தருணம், இயக்குநர் தனக்குத் தேவையானது கிடைக்கும் வரை விட மாட்டார், அது தான் அவருக்கு இப்படி ஒரு வெற்றியைக் கொடுத்துள்ளது, கண்டிப்பாக அவர் நல்ல நல்ல படங்களை எடுப்பார். அவருக்கு எனது வாழ்த்துகள், படக்குழு அனைவருக்கும் நன்றி'' என்றார்.

பாடலாசிரியர் & எழுத்தாளர் கார்த்திக் நேத்தா பேசுகையில், ''தயாரிப்பாளருக்கு நன்றி. இதை ஒரு வியாபாரமாகப் பார்க்காமல் ஒரு படமாக நம்பி இந்தப் படத்தை உருவாக்கியதற்கு நன்றி, இந்தப் படத்தில் ஒரே ஒரு பாடல்தான். அது படத்தின் இறுதியில் வரும். அதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி, இதை நான் நன்றி கூறும் மேடையாகப் பயன்படுத்திக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி'' என்றார்.


எழுத்தாளர் ஆல்ஃபிரட் பிரகாஷ் பேசுகையில், '' நிறைய மீம்கள் போர் தொழில் சம்பந்தமாக இணையத்தில் வந்தது. படத்தை மிகப்பெரிய வெற்றி பெறச் செய்துள்ளீர்கள், இவ்வளவு பெரிய வரவேற்பைத் தந்த உங்கள் அனைவருக்கும், ரசிகர்களுக்கும் எனது நன்றிகள்'' என்றார்.


ஒலிக்கலவை பொறியாளர் ஹரி பேசுகையில், '' திரில்லர் படத்திற்குத் தேவை சவுண்ட் மிக்ஸிங் தான். இந்தப் படத்தில் இயக்குநருக்கு அதில் ஒரு தெளிவு இருந்தது. எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி'' என்றார்.


திங்க் மியூசிக் சந்தோஷ் பேசுகையில், '' ஒரு நாள் மிட் நைட் அசோக் செல்வன் போன் செய்தார். 'பிரதர் நான் போர் தொழில் என்று ஒரு படம் செய்கிறேன். படத்தில் ஒரே ஒரு பாடல் தான். ஆனால் நீங்கள் இந்தப்படத்துடன் இணைய வேண்டும்' என்றார். டிரெய்லர் பார்த்தவுடனே இந்தப்படம் நல்ல படமாக இருக்குமெனத் தோன்றியது. பொதுவாக அறிமுக இயக்குநர் படங்களுக்கு  நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறோம். இந்த வருடம்  'டாடா' , 'குட் நைட்' படங்களைத் தொடர்ந்து இந்தப்படத்திலும் இணைந்தது மகிழ்ச்சி. அசோக் செல்வனுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி'' என்றார்.


நடிகை லிசா சின்னு பேசுகையில், '' முதல் முறையாக நான் ஒரு மேடையில் நிற்கிறேன். மிகவும் பெருமையாக உள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த பிறகு பல நண்பர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர், பத்திரிக்கையாளர் அனைவருக்கும் நன்றி. நீங்கள் தான் இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்துள்ளீர்கள், இயக்குநர் விகனேஷ் ராஜா என்னைத் தேர்வு செய்யும்போதே சொன்னார். இது சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும், உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்குமென்று சொன்னார். அது நடந்து விட்டது, அதற்கு நன்றி , படக்குழு அனைவருக்கும் நன்றி'' என்றார்.


சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபு பேசுகையில், '' தேனப்பன் சார், என்னைக் கஷ்டப்படுத்தி விட்டார்கள் என்றார். என்னையும் கடுமையாக கஷ்டப்படுத்தினார்கள். நான் வேலை பார்த்த மலையாள படத்தைப் பார்த்து என்னைக் கூப்பிட்டார்கள். இயக்குநர் பிழிந்தெடுத்துவிட்டார். ஆனால் படத்தை அற்புதமாக உருவாக்கினார். படத்திற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி'' என்றார்.


நடிகர் சுந்தர் பேசுகையில், '' விக்னேஷ் சார் என்னைக் கூப்பிட்டுப் பேசியபோது என்னை நடித்துக் காட்டச் சொன்னார். நான் நிறையப் படங்கள் செய்துள்ளேன் என்றேன். ஆனால் எனக்காகச் செய்து காட்டுங்கள் என்றார். அப்போதே என்னை பெண்டு நிமிர்த்த ஆரம்பித்து விட்டார். சரத்குமார் சார் சிரிக்காமல் நடித்த ஒரே படம் இது தான். அவரால் சிரிக்காமல் இருக்க முடியாது. இப்படத்தில் அவரை பார்த்து ரசித்தோம். படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. படத்திற்கு ஆதரவு தந்ததற்கு நன்றி'' என்றார்.


நடிகர் ஹரீஷ் பேசுகையில், '' படம் ரிலீஸுக்கு அப்புறம் என்னோட ஃப்ரண்ட்ஸ் என்னைப் பார்த்துப் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். நான் நடித்ததில் மிக வித்தியாசமான கேரக்டர் இது தான். என் பெற்றோருக்குப் பிடித்த படம் இது தான். என்னைப் போன்ற புதுமுகத்துக்கு திறமையை மதித்து இம்மாதிரி கேரக்டர் தந்ததற்கு நன்றி. இந்தப்படத்தில் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். இந்த மாதிரி படத்தை வெற்றிப்படமாக்கிய உங்களுக்கு நன்றி'' என்றார்.


நடிகை நிகிலா விமல் பேசுகையில், '' இந்தப் படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக இருந்தது, இந்தப் படத்தின் மூலம் பலருக்கு நான் அறிமுகமாகியுள்ளேன், படத்தின் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி , இந்தப் படத்தில் நடிக்கும்போது எனக்குத் தூக்கமே இல்லை. படம் முழுக்க முழுக்க இரவு நேரத்தில் தான் இருந்தது, எனக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது. அசோக் மற்றும் சரத்குமார் சாருக்கு மிகவும் நன்றி. படப்பிடிப்பில் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள், இந்த கதாபாத்திரத்தை எழுதிய இயக்குநருக்கு நன்றி, E4 என்டர்டெயின்மென்ட் இன் முதல் படத்தில் நான் இருந்தேன். அதே போல் இந்தப் படமும் வெற்றி என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது, 
ஊடக பத்திரிக்கையாளர் அனைவருக்கும் என் நன்றி'' என்றார்.

நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், ''இது சக்ஸஸ் மீட் என்பதை விட தேங்ஸ் மீட் என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் இப்படத்தை தங்கள் படமாகக் கொண்டாடினார்கள். ஊடகங்களுக்கு ரெண்டு நாள் முன்னரே படத்தைப் போட்டுக்காட்டினோம். யாராவது டிவிஸ்ட்டை உடைத்து விடுவார்களோ..! என்ற பயம் இருந்தது. ஆனால் ஒருவர் கூட டிவிஸ்ட்டை உடைக்காமல், பாஸிட்டிவான விமர்சனம் தந்தார்கள். உங்கள் எல்லோர்க்கும் நன்றி. கடந்த வருடம் நிறையப் படங்கள் செய்தேன். படம் நல்ல படமென்றாலும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகவில்லை. எனக்கே என் மீது சந்தேகம் வந்தது. நல்ல படம் செய்கிறோமா..? என கேள்வி வந்தது. அதற்கெல்லாம் பதிலாக இந்தப்படம் வந்துள்ளது. எல்லோரும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சரத்குமாருடன் வேலை பார்த்தது மிக மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. விக்னேஷ் ராஜாவை அனைவரும் பாராட்டுவதைக் கேட்கும்போது, நண்பனாக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அவனோடு குறும்பட காலத்திலிருந்து பழகி வருகிறேன், தான் என்ன எடுக்கிறோம் என்பதில் தெளிவாக இருப்பான். அவன் இன்னும் உயரம் செல்வான். தயாரிப்பாளருக்கு இப்படி ஒரு படம் எடுத்ததற்கு நன்றி. ஒரு வசனம் சொல்லி முடிக்கிறேன்,  இந்தப்படத்தில் ஒரு வசனம் வரும் “உன் வேலையைச் சரியா செஞ்சா மரியாதை தானா வரும்”  அனைவருக்கும் நன்றி'' என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், ''விக்னேஷ் ஒரு நல்ல இயக்குநராக வருவார் என்று முன்பே சொல்லியிருந்தேன். அதை விடப் பெரிய இயக்குநராக வந்து விட்டார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இயக்குநர் அனைவரையும் செதுக்கி இருந்தார். தனக்குத் தேவையான கதாபாத்திரத்தை அப்படியே கொண்டு வந்துள்ளார். இயக்குநர் ஒரு ஹாலிவுட் தரத்தை இப்படத்திற்குக் கொடுத்துள்ளார். இந்தப் படமும் ஹாலிவுட் பட வெற்றி போலப் பல நாடுகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் இன்றும் பல திரையரங்கில்  வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக இது ஒரு புதிய சாதனை படைக்கும். விக்னேஷ் நமக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். அசோக் ஒரு நல்ல நடிகர் மற்றும் நடிகை நிகிலா அருமையாகத் தனது கதாபாத்திரத்தை நடித்துள்ளார். படக்குழு அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் இந்த கதையை நம்பி படமாக்கியதற்கு நன்றி. ஒளிப்பதிவாளர் மிகவும் அற்புதமாகப் பணி செய்துள்ளார். ஒரு நல்ல படத்தில் நடித்த திருப்தி எனக்குக் கிடைத்துள்ளது. படக்குழு அனைவருக்கும் நன்றி. இதையெல்லாம் தாண்டி பத்திரிக்கையாளர்கள் உங்களுக்குத்தான் மிகவும் நன்றி கூற வேண்டும். உங்களின் கருத்துதான் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த வெற்றிக்கு நீங்கள் தான் காரணம் நன்றி'' என்றார்.

இயக்குநர் விக்னேஷ் ராஜா பேசுகையில், '' என்னோட முதல் நன்றி தயாரிப்பாளர்களுக்கு  தான். இந்தகதையை கேட்டு இப்படத்தை தயாரித்ததற்கு நன்றி. அப்ளாஸ் படம் ஒப்பந்தமானவுடன் படத்தை கமர்ஷியல் ஆக்குகிறோம் என கெடுக்காமல், நீங்கள் நினைத்ததை..  எழுதியதை... எடுங்கள் என்றார்கள். அறிமுக இயக்குநருக்கு இது எவ்வளவு பெரிய வரமென்பது உங்களுக்கு புரியும். யுவராஜ் பம்பரமாக சுழன்று வேலை செய்தார். சக்திவேல் சார் ஒவ்வொரு படத்தையும் பக்காவாக டிசைன் செய்கிறார். அவருக்கு நன்றி. தீபா மேடமுக்கு நன்றி. எடிட்டர் ஶ்ரீஜித் சாரங் மிக அட்டகாசமாக செய்துள்ளார். இசையில் ஜேக்ஸ் பிஜாய் மிரட்டியிருந்தார். அவர் தான் அடம்பிடித்து படத்தின் கடைசியில் பாட்டு வைத்தார். இப்போது அந்த பாட்டில்லாமல் அந்தப்படத்தை நினைக்க முடியவில்லை. சவுண்டிங்கில் மிரட்டி விட்டார். படம் முழுக்க அதன் உணர்வை ரசிகனிடம் கொண்டு சேர்ப்பது இசையும் சவுண்டும் தான். அதை மிகச்சிறப்பாக செய்தார்கள். இந்தப்படத்தில் உழைத்த அத்தனை பேரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். படத்தை 2010 ல் நடப்பதாக எடுத்தோம். அதற்கான சிஜி படம் முழுக்க இருக்கிறது. உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் எல்லோருக்கும் நன்றி. ஆல்ஃபிரட்டையும் என்னையும் தனியாக மனதில் பிரித்து பார்க்க முடியவில்லை. நாங்கள் இருவருமே ஒரே ஆள் தான். இப்படி ஒரு ரைட்டர் கிடைப்பது வரம். நிகிலா விமல் கேரக்டர் அவர் கதையில் இல்லாத பலத்தை நடிப்பில் கொண்டு வந்தார்.  அசோக் செல்வன்  காலேஜ் படிக்கும் போதிருந்து தெரியும், அப்போதே யாராவது குறும்படம் எடுத்தால் ஓடிப்போய் நடிப்பான். அப்போது அவன் ஏற்படுத்திய நெட்வொர்க் இப்போது எல்லோரும் இயக்குநர்களாக இருக்கிறார்கள். இன்னும் பல இயக்குநர்களை அறிமுகப்படுத்துவான். சரத்குமார் சாரை நன்றாக நடிகை வைத்துள்ளேன் என்கிறார்கள். ஆனால் 150 படத்தில் நடித்தவருக்கு என்ன சொல்ல முடியும்... இந்தப்படத்தில் செய்தது எல்லாமே அவரே செயத்தது தான். என்னை விட அவருக்கு தான் படத்தின் மீது நம்பிக்கை இருந்தது. சரத்பாபு சார் முதலில் நடிப்பாரா ?, அவருக்கு புரியுமா? என்று பயமாக இருந்தது. ஆனால் அவர் மிக அப்டேட்டாக இருந்தார். அவர் கேட்ட கேள்வியால் படத்தில் சில பகுதிகளை மாற்றி எழுதினோம். அவர் படம் பார்க்க முடியாதது வருத்தம். இறுதியாக ஊடகங்களுக்கு ரெண்டு நாள் முன்னரே படத்தை போட்டுக்காட்டலாம் என்ற போது... யாராவது டிவிஸ்ட்டை உடைத்து விட்டால்..!  என்ற பயம் வந்தது. சக்தி சார் அப்படி செய்ய மாட்டார்கள் என்றார். அதேபோல்  ஒருவர் கூட டிவிஸ்ட்டை உடைக்காமல், படம் பிரீமியர் ஆனவுடனே இணையத்தில் படத்தை பற்றி புகழ்ந்து எழுத ஆரம்பித்து விட்டார்கள். விளம்பரம் செய்யாத ஒரு படம், பத்திரிக்கை விமர்சனங்களால்.. ரசிகர்களால் ஓடும் என்பதற்கு இந்தப்படம் உதாரணம். அனைவருக்கும் நன்றி'' என்றார்.

வைரல் யூடுயுபர் TTF.வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் “ மஞ்சள் வீரன் “ செல்அம் எழுதி இயக்குகிறார்.

வைரல் யூடுயுபர் TTF.வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் “ மஞ்சள் வீரன் “  செல்அம் எழுதி இயக்குகிறார்.
தி பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி  மற்றும் cosmetologist டாக்டர் கவிதா பிரியதர்ஷினி இணைந்து தயாரிக்கும் படம் “ மஞ்சள் வீரன் “

 இந்த படத்தில் 2K கிட்ஸின் நிஜ கதாநாயகன்  பிரபல வைரல் யூடுயுபர் TT.F.வாசன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர்.
நடிகர் கூல் சுரேஷ் குணசித்திர வேடத்தில் புதிய அவதாரம் எடுக்க உள்ளார் 

ஒளிப்பதிவு கொளஞ்சி குமார்  

ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் அமைக்கிறார்.

கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் – செல்அம் 
(இவர் ஏற்கனவே திரு.வி.க.பூங்கா என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.)

அனைத்து வயதினருக்கும் பிடிக்கும் ஜன ரஞ்சகமான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது மஞ்சள் வீரன்.

ஜூலை மாதம் இறுதியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

TT.F வாசனின் பிறந்தநாளான நேற்று “ மஞ்சள் வீரன் “  படத்தின் பூஜையும் மற்றும் FRIST LOOK வெளியீடும் நடைபெற்றது.

Thursday, June 29, 2023

மாமன்னன் - திரைவிமர்சனம்

வடிவேலு காசிபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பணியாற்றுகிறார் மற்றும் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக வாதிடும் அரசியல் கட்சியுடன் இணைந்துள்ளார்.


இவரது மகன் உதயநிதி ஸ்டாலின், ஆதிமுறை ஆசிரியராகவும், பொழுதுபோக்காக பன்றி பண்ணையை பராமரித்து வருகிறார். அதே கிராமத்தில், வடிவேலு தொடர்புடைய அரசியல் கட்சியின் மாவட்டத் தலைவராக இருக்கும் ஃபஹத் பாசில் ஒரு செல்வாக்கு மிக்க அரசியல்வாதி ஆவார்.


கீர்த்தி சுரேஷ் இலவச பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார், மேலும் ஃபஹத் பாசிலின் சகோதரரிடமிருந்து அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார். கீர்த்தியும் அவரது நண்பர்களும் உதயநிதியிடம் இந்தப் பிரச்சனையைக் கொண்டு வருகிறார்கள், இது வடிவேலுவுக்கும் ஃபகத் ஃபாசிலுக்கும் இடையே ஒரு பெரிய ஈகோ மோதலாக உருவெடுத்தது. இது மாமன்னனின் கதையாக அமைகிறது.


மாரி செல்வராஜ் இயக்கிய இப்படம், அடக்குமுறை, இட ஒதுக்கீடு மற்றும் சமூக அநீதி போன்ற கடினமான கருப்பொருளை ஆராய்கிறது. அரசியல் ரீதியாக சரியான படத்தை வழங்குவதில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.


மாரி தனது முந்தைய படங்களைப் போலவே, இந்த திரைப்படத்தையும் உருவகங்கள் மற்றும் பல அடுக்குகளுடன் ஏற்றியுள்ளார். இந்த படத்தின் இதயமும் ஆத்மாவும் வடிவேலு தான். ஒரு அமைதியான மற்றும் இணக்கமான அரசியல்வாதியின் பாத்திரத்தை அவர் திறமையான முறையில் சித்தரித்துள்ளார்.


இன்னொரு பக்கம் ஃபஹத் பாசில் தன்முனைப்பு அரசியல்வாதியாக திகிலூட்டுகிறார். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் படத்தின் தூண்கள். அவரது கடைசிப் படம் என்பதால், உதயநிதி ஸ்டாலின் அந்த கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார். இதுவரை அவரது சிறந்த நடிப்பில் இதுவும் ஒன்று.


கீர்த்தி சுரேஷ் வழக்கம் போல் கவர்ச்சியாகவும், தனது பாத்திரத்தில் பிரகாசித்துள்ளார். மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.


ஏ ஆர் ரஹ்மானின் இசை கதாபாத்திரங்களின் உணர்வுகளை திறம்பட வெளிப்படுத்துகிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு அற்புதம் மற்றும் படத்தின் மனநிலைக்கு ஏற்றது.

 

NTT launches hyperscale data center campus with new subsea cable system in Chennai

NTT launches hyperscale data center campus with new subsea cable system in Chennai


  • Hyperscale data center campus Chennai 2 with 34.8 MW IT load
  • New subsea cable system “MIST” is capable of handling nearly 200 TBPS of data.

 

Chennai, June 29, 2023: NTT Ltd., a leading global IT infrastructure and services company and market leader in the Indian data center industry announced the launch of its latest hyperscale data center campus, Chennai 2, and the arrival of its subsea cable system - MIST in the city. The Chennai 2 campus is located in Ambattur, spread across 6 acres is a state-of-the-art project with a total planned capacity of 34.8 MW critical IT load from 2 data center buildings. The first facility which goes live today has a 17.4 MW IT load capacity.

 

MIST subsea cable, constructed by consortium members including NTT Communications India Network Service Pte. Ltd. and Orient Link Pte. Ltd., is the first cable system for NTT group to directly provide connectivity to/from India. It spans an impressive 8,100 km and will connect Malaysia, India, Singapore, and Thailand, offering cutting-edge connectivity capabilities. The MIST cable system also represents India's first cable landing of a 12-fiber pair capacity, capable of carrying more than 200 TBPS of data.

 

Chennai’s strategic location opened three distinct opportunities for these projects. The first is addressing the demand for high-quality data center infrastructure driven by Chennai’s thriving digital ecosystem that includes traditional and new economy businesses. The second is positioning Chennai as a disaster recovery (DR) site for enterprises with primary IT infrastructure in other Indian cities. And third, is leveraging global connectivity to offer data center capacity to markets in Southeast Asia like Singapore where capacity is in short supply. These capabilities will transform Chennai into the digital gateway connecting India to Southeast Asia and the world.

 

NTT is the only service provider in India that can offer this unique combination of an interconnected data center platform with global connectivity via MIST, along with a full stack of technology services. For enterprises, it translates to having readily available, high-performance hosting infrastructure with access to NTT’s high-capacity global networks that can help extend their digital businesses to overseas markets. 

 

Doug Adams, SEVP, GDC & Submarine Cable, stated, “Data centers are at the foundation of every successful digital transformation effort. As one of the global leaders in data center services, NTT has been investing aggressively to add data center capacity across all our markets to support our client’s digital initiatives. Our planned and operational data center capacity exceeds 1,900 MW across 20 countries and regions.To conclude it can be said that NTT is well-positioned to meet the growing demands of clients and drive their digital transformation initiatives forward”.

 

Sharad Sanghi, Chairman, NTT Global Data Centers & Cloud Infrastructure India Pvt. Ltd. mentioned that, “India is an important market for us and home to a significant part of this global capacity. Going forward, our investment roadmap in India includes multiple data center campuses, renewable energy plants, subsea cables, and more.We are dedicated to empowering India's digital landscape and are excited to embark on this transformative journey.” 

 

Adding further, Shekhar Sharma, CEO & Managing Director, NTT Global Data Centers & Cloud Infrastructure India Pvt. Ltd & NTT Communications India Network Services Pvt. Ltd.said, “The launch of the state-of-the-art data center campus along with the MIST cable system in Chennai mark major milestones in our journey in India. These projects are perfect examples of Japanese design quality and global expertise, tailored to the Indian market. They have reinforced our position as the leader for data center services in India and helped transform Chennai into the new destination for data centers in Southeast Asia. We’re glad to be able to play a part in making Chennai the gateway connecting digital businesses across India, Southeast Asia, and the world. With our capabilities, we’re eager to help our clients unlock greater value from their digital transformation efforts.”

 

With the launch of the Chennai 2 Data Center campus, NTT’s data center footprint in the country has grown to 16 facilities, with more than 3.1 million sq. ft. (288,104.09 m2) and 205 MW of IT power, further strengthening its position as the market leader in India in this segment.

 

About Orient Link Pte. Ltd.

 

Orient Link is a strategic joint venture company led by NTT Group and established with partners of Fund Corporation for the Overseas Development of Japan’s ICT and Postal Services Inc. (JICT) and WEN Capital Pte. Ltd. (WEN) to respond to the growing demands for international data traffic across countries in the South East Asia region.

 

About NTT Ltd.

 

As part of NTT DATA, a USD 30 billion IT services provider, NTT Ltd. is a leading IT infrastructure and services company serving 65% of the Fortune Global 500 and more than 75% of the Fortune Global 100. We lay the foundation for organizations’ edge-to-cloud networking ecosystem, simplify the complexity of their workloads across multicloud environments, and innovate at the edge of their IT environments where networks, cloud and applications converge. We offer tailored infrastructure and ensure consistent best practices in design and operations across all our secure, scalable, and customizable data centers. On the journey towards a software-defined future, we support organizations with our platform-delivered infrastructure services. We enable a connected future. Visit us at services.global.ntt


Thanks

 

Monday, June 26, 2023

AbbVie Employees in Chennai Volunteer During 8th Annual “Week of Possibilities” to Support Local Community

AbbVie Employees in Chennai Volunteer During 8th Annual “Week of Possibilities” to Support Local Community

 

-          AbbVie, an Allergan Company in partnership with iVolunteer will support Akshaya Trust through the company’s eighth annual Week of Possibilities volunteering program

-          Thousands of AbbVie employees globally will participate in service projects to strengthen local communities, expand educational programs and make a positive environmental impact

 

Chennai, Tamil Nadu, June 26, 2023  Today, AbbVie employees in Chennai are participating in its eighth annual Week of Possibilities volunteering program, which unites employees around the world with a single purpose: to give back to local communities through volunteering. From June 26 to 30, thousands of AbbVie employees in more than 50 countries and territories will join forces with trusted nonprofit and community partners across the globe to complete hands-on projects to benefit local communities impacting tens of thousands of people.

 

“At AbbVie, we are committed to supporting our local community in Chennai through volunteering, and we’re excited to partner with [Akshaya Trust] to make a positive impact for senior citizens,” said Suresh Pattathil, Managing Director & General Manager, Allergan, an AbbVie company. “During our Week of Possibilities, one of our most anticipated annual volunteer initiatives across the company, thousands of AbbVie employees are united around the world by serving their local communities.”

 

Employees of Allergan an AbbVie Company will engage with senior citizens at Akshaya Trust. The activities aim to instill empathy and awareness amongst the volunteers while adding chunks of laughter and music through this activity in the otherwise routine day of the elderly. Songs, music, and games will be conducted by the volunteers in groups.

 

In each Week of Possibilities, Chennai, service projects are selected to ensure that AbbVie volunteer efforts align with the greatest needs of each local community. Local projects are designed and implemented in partnership with nonprofit partners close to the communities being served, including Akshaya Trust.

 

AbbVie’s Week of Possibilities started in 2014 and is now a global tradition for the company. It is funded in part by the AbbVie Foundation and focuses on service projects in the local communities in which AbbVie employees live and work around the world.

 

Learn more about AbbVie's Week of Possibilities at www.abbvie.com/givesback and AbbVie’s ongoing commitment to local communities in its 2022 ESG Action Report.

 

About AbbVie

AbbVie's mission is to discover and deliver innovative medicines that solve serious health issues today and address the medical challenges of tomorrow. We strive to have a remarkable impact on people's lives across several key therapeutic areas: immunology, oncology, neuroscience, eye care, virology and gastroenterology, in addition to products and services across our Allergan Aesthetics portfolio. For more information about AbbVie, please visit us at www.abbvie.com. Follow @abbvie on TwitterFacebookInstagramYouTube and LinkedIn.

About the AbbVie Foundation

The AbbVie Foundation, a nonprofit 501(c)(3) foundation, is dedicated to having a remarkable impact for local communities in need around the world through a commitment to building sustainable health care systems and effective educational programs. For more information, please visit www.abbviefoundation.org.


 


--


தலைநகரம் 2" திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!


 தலைநகரம் 2"  திரைப்பட  நன்றி  அறிவிப்பு விழா !! 


Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில்,  மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில்,  இயக்குநர் V Z துரை இயக்கியிருந்த இப்படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். 


இந்நிகழ்வினில் 


இயக்குநர் சுந்தர் சி  பேசியதாவது…

வழக்கமான இந்த மாதிரி விழாக்களில் தான் நன்றி சொல்ல வேண்டும் ஆனால் இம்மாதிரி விழாக்களே நடப்பது அரிதாகிவிட்டது. அதனால் இசை விழாவிலேயே எல்லோருக்கும் நன்றி சொல்லிவிடுகிறோம். நான் இந்தப்படத்திற்கு எத்தனை தியேட்டர் என துரையிடம் கேட்டேன் அவர் 350க்கும் அதிகம் என்று சொன்ன போது, பயந்துவிட்டேன். இப்போதெல்லாம் ரிலீஸாகும் நாளிலேயே தியேட்டரில் கூட்டமில்லாமல் ஷோ கேன்சலாகும் காலகட்டத்தில் இருக்கிறோம். பெரிய ஹீரோக்கள் படங்களுக்குத் தான் 300 தியேட்டர் போடுகிறார்கள். அதனால் தான் பயந்தேன்.  ஆனால் எல்லாவற்றையும் தாண்டி தலைநகரம் 2 திரையரங்குகளில் ஓடுவது மகிழ்ச்சியைத் தருகிறது. தலைநகரம் 2 ஒரு எமோஷனல் ஆக்சன் மூவி. ஒவ்வொரு ஆக்கனுக்குப் பின்னும் எமோஷன் இருக்கும். நான் நாலு பேரை அடிக்கிறேன் என்பதை நம்பும்படி எடுத்திருந்தார். தியேட்டரில் பார்த்து விட்டு நிறையப் பேர் என்னைப் பாராட்டினார்கள். இந்தப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் வெற்றிக்கு அவர்களே சாட்சி. இப்படத்தை வெற்றி பெறச் செய்த மக்களுக்கும் உங்களுக்கும் என் நன்றிகள். 



நடிகை ஆயிரா பேசியதாவது…

இது ரொம்ப சந்தோஷமான தருணம். எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர் V Z துரை சாருக்கு நன்றி. நான் இந்த கதாப்பாத்திரத்தை செய்ய முடியுமா என பயந்தேன், ஆனால் துரை சார் ஊக்கம் தந்து செய்ய வைத்தார். சுந்தர் சி சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். இந்தப்படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி.  எல்லோருக்கும் நன்றி. 


இயக்குநர் VZ துரை பேசியதாவது.., 

தலைநகரம் 2 எடுக்க ஆரம்பித்ததிலிருந்தே தலைநகரம் 1 பற்றி சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அது மிகப்பெரிய வெற்றிப்படம். வடிவேலு சார் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது. என் படத்தில் காமெடியே இல்லை ஏன் இந்தப்படம் எடுத்தேன் என்றால், இந்தக்கதை ஒரு எக்ஸ் ரௌடி பற்றியது. அதற்கு ஏற்கனவே ரௌடியாக நடித்து ஃபேமஸான ஒருத்தர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சுந்தர் சார் ஏற்கனவே தலைநகரம் பண்ணியிருந்ததால் அவரை வைத்து கதை செய்யலாம் என அவரிடம் கேட்டேன், எந்த தயக்கமும் இல்லாமல் உடனே செய்யுங்கள் என்றார். எங்களுக்காக ஆஸ்கர் ரவிச்சந்திரன் சார் டைட்டில் தந்தார். இப்போது படம் பார்த்த மக்கள் தலைநகரம் முதல் பாகத்தை விட நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள். இந்தப்படத்திற்கு காமெடி தேவையில்லை என்று அவர்களே சொல்வது மகிழ்ச்சி. இந்தப்படத்திற்கு 300 தியேட்டர்களா ? வேண்டாம் என்றேன் அவர்களே கேட்கிறார்கள் என்றார்கள் இப்போது 350 தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது . நிறைய தியேட்டரில் படத்தைக் கேட்டு வாங்கி ஓட்டுகிறார்கள். மகிழ்ச்சி. முக்கியமாக இந்தப்படத்திற்கு ஆதரவு தந்த பத்திரிக்கையாளர்களாகிய உங்களுக்கு நன்றிகள். உங்கள் விமர்சனம் படத்திற்கு பெரிய வரவேற்பு தந்துள்ளது.  இப்படத்தின் தயாரிப்பாளர் பிரபாகரனுக்கு நன்றி. இணை தயாரிப்பாளர் நண்பன் மது என்னோட எல்லா துக்கத்தையும் அவனிடம் தான் பகிர்ந்து கொள்வேன் அவனுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி. 



இணை தயாரிப்பாளர்  மதுராஜ் பேசியதாவது.., 

நண்பன் துரை உடன் இணைந்து, இந்தப்படத்திற்காக 2,3 வருடம் உழைத்துள்ளோம். பிரபாகரன், விவேகானந்தன் சார்,  ரவி அண்ணன் என எங்களுக்கு நல்லது நினைக்கும், நல்ல உள்ளங்கள் உடனிருந்தார்கள். இந்தப்படம் பல தடைகளைத் தாண்டித் தான் வந்தது. ரிலீஸே ஆகாது எனப் பலர் சொன்னார்கள் ஆனால் இப்போது படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் தந்த ஆதரவு தான் காரணம். ஒரு படத்திற்குப் பின்னால் ஆயிரம் குடும்பங்களின் வாழ்க்கை இருக்கிறது அதை மனதில் வைத்து விமர்சனம் செய்யுங்கள். உங்கள் கருத்துக்களை மதிக்கிறோம், எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி.

முதல் முறையாக திருக்குறளுக்கு பரதநாட்டியம்! - லக்‌ஷிதாவின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்

முதல் முறையாக திருக்குறளுக்கு பரதநாட்டியம்! - லக்‌ஷிதாவின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்



கல்யாணம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், இனி லக்‌ஷிதா மூலமாகத்தான் அவருக்கு அறிமுகம் கிடைக்கும் - நடிகர் சிவக்குமார் பாராட்டு

லக்‌ஷிதாவின் பரதநாட்டிய திறன் கல்யாணத்திற்கு மட்டும் அல்ல தமிழர்களுக்கே பெருமை சேர்க்கும் - தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பாராட்டு

தமிழ் திரையுலகிலும், பத்திரிகை உலகிலும் விருந்தோம்பல் திலகம் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் திரு.கல்யாணம். ஆனந்த் திரையரங்கம் தொடங்கி நாக் ஸ்டுடியோஸ் வரை,  அவர் இருக்கும் இடங்கள் மாற்றம் அடைந்தாலும், அவர் பிறரிடம் காட்டும் அன்பும், அக்கறையும் என்றுமே மாறாதது. அதனால், தான் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித், சூர்யா என்று பெரிய மனிதர்களுக்கு பிடித்த நபராக வலம் வருகிறார்.

கல்யாணம் அவர்களின் அன்பு பிடியில் சிக்காதவர்கள் இருக்க முடியாது, என்று சொல்லும் அளவுக்கு சினிமா மற்றும் பத்திரிகை வட்டாரத்தில் தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை கொண்டிருக்கும் கல்யாணம் அவர்களின் மகள் வழி பேத்தி செல்வி.லக்‌ஷிதா மதனின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி இன்று (ஜூன் 25) சென்னை தியாகராயா நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது.

இதில், நடிகர் சிவக்குமார், பிரபல பரதநாட்டிய கலைஞர் நிர்த்ய சூடாமணி டாக்டர்.ஸ்ரீனிதி சிதம்பரம்,  நீதிபதி வெங்கட்ராமன், நீதிபதி வைத்தியநாதன், நீதிபதி ஆதிகேசவலு, நீதிபதி கோவிந்தராஜ், நீதிபதி பாஸ்கரன், நீதிபதி விமலா, லக்‌ஷ்மி சிவக்குமார், நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி, ரஞ்சனி கார்த்தி, பிருந்தா சிவக்குமார், ஐ.ஏ.எஸ் பிரபாகர், வருமான வரித்துறையின் தலைமை ஆணையர் ரத்தினசாமி, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் நாசர், சுஹாசினி மணிரத்னம், ரம்யா முருகதாஸ், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி பாண்டியன் ஐபிஎஸ், டாக்டர், பாலாஜி, டாக்டர்.குமரன், KNACK Studios நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராமானுஜம், KNACK Studios தலைவர் மற்றும் இயக்குநர் ஹரிஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் பேசுகையில் ,”என் நண்பன் கல்யாணத்தின் பேத்தியாக தான் லக்‌ஷிதா இருந்தாள். ஆனால், இன்று முதல் லக்‌ஷிதாவின் தாத்தா கல்யாணம் என்று மாறிவிட்டது. உலம் முழுவதும் லக்‌ஷிதா பேர் வாங்குவார். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி இனி லக்‌ஷிதாவின் தாத்தா தான் கல்யாணம் என்று சொல்லும் அளவுக்கு அவள் பின்னிட்டாள்.

அதாவது இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடனம் ஆடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல, லக்‌ஷிதா நடனம் ஆடவில்லை, மேடையில் பறந்துக்கொண்டிருந்தாள். பானை மீது ஏறி ஆடியபோது நான் சீட் நுணிக்கே வந்துவிட்டேன். என்ன மாதிரி நடனம். பத்து வருடமாக பரதநாட்டியம் ஆடி வருவதாக சொல்கிறார்கள். லக்‌ஷிதாவின் இத்தகைய சிறப்பான நடனத்திற்கு அவருடைய ஆசிரியர் ஷீலா உன்னிகிருஷ்ணனை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். பரதநாட்டியம் எலோரிடமும் போய் சேரும் கலை இல்லை, அப்படி இருந்தும் இந்த கலையை இத்தனை வருடம் காப்பாற்றிய ஷீலா உன்னிகிருஷ்ணனை நான் கைகூப்பி வணங்குகிறேன். 

ஏற்கனவே லக்‌ஷிதாவின் இரண்டு அரங்கேற்ற நிகழ்ச்சியில் நான் கலந்துக்கொண்டேன். ஆனால், இப்போது நடந்தது ஒரு முழுமையான அரங்கேற்றம் என்று நினைக்கிறேன். ஜனனியின் பாட்டுக்கு லக்‌ஷிதா ஆடுகிறாரா அல்லது இவருடைய நடனத்திற்கு அவர் பாடுகிறாரா என்று தெரியாதவாறு இரண்டுமே ஒரே நேர்கோட்டில் பயணித்து அசத்திவிட்டது. வாத்தியக்குழுவுக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடனக் கலைஞர்களுக்கு கண் மிகவும் முக்கியம், நான் ஒரு ஓவியன் என்பதால் கண்ணை பற்றி நன்றாக தெரியும். அந்த வகையில் லக்‌ஷிதாவின் கண்கள் மீனை விட அழகாக இருக்கிறது. அந்த கண்கள் மூலம் அபிநயங்களையும், பாவங்களையும் லக்‌ஷிதா வெளிப்படுத்திய விதம் மிக சிறப்பாக இருந்தது. பாடல்களில் வருவதை விட லக்‌ஷிதா நடனத்தில் காட்டிய நலினம் மிக அழகாக இருந்தது. 

இறுதியாக நான் ஒரு விஷயத்தை பாராட்டியாக வேண்டும். நான் நிறைய பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சிகளுக்கு சென்றிருக்கிறேன். பெரும்பாலும், அறிமுகப்படுத்தும் போது ஆங்கிலத்தில் தான் சொல்வார்கள். ஆனால், இங்கு அனைத்து பாடல்களையும் தமிழில் சொல்லி, தமிழில் விளக்கும் கொடுத்தது பிராமாதமாக இருந்தது. இப்படி தான் செய்ய வேண்டும். நிறைய பேருக்கு ஆங்கிலம் புரியாது, எனக்கு கூட தான், அதனால் இதுபோல் தமிழில் பாடல்களையும், அதன் விளக்கங்களையும் சொல்லும் போது என்னைப் போன்றவர்களாலும் ரசிக்க முடியும். மிக சிறப்பான முயற்சி இது, நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

சமீபத்தில் நான் பார்த்த பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் மிகவும் சிறப்பான நிகழ்ச்சியாக லக்‌ஷிதாவின் அரங்கேற்றம் அமைந்திருக்கிறது. இதை அரங்கேற்றம் என்று சொல்வதை விட ஒரு முழுமையான பரதநாட்டிய நிகழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். மிக சிறப்பாக இருந்தது. லக்‌ஷிதாவின் ஆசிரியர் ஷீலா உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளை கூறி விடைபெறுகிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு பேசுகையில், “உச்சியில் இருந்து கழுத்து வரை ஆடுவதை கதக்களி என்பார்கள். கழுத்தில் இருந்து இடுப்பு வரை ஆடுவதை மணிப்புரி என்பார்கள். இடிப்பில் இருந்து பாதம் வரை ஆடுவதை கதக் என்பார்கள். இது முகலாயர்கள் காலத்தில் இருந்து வந்தது. ஆனால், உச்சியில் இருந்து பாதம் வரை ஆடுவது தான் பரதநாட்டியம். இந்த பரதநாட்டியம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. இதை முதலில் கூத்தர் என்றும், விரலியர் என்றும் கூறுவார்கள். பரத முனிவர் தான் பரதநாட்டியத்தை கண்டுபிடித்ததாக வட நாட்டவர் சொல்வார்கள். ஆனால் அது செவி வழி வந்த செய்தி, அதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை. 

ஆனால், முதல் முதலில் இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என முத்தமிழ் உருவாகும் போது இந்த நடனத்தை கூத்தர் என்றும், விரலியர் என்றும் கூறுவார்கள். இறைவன் ஆடக்கூடிய நடனத்தை 108 கர்ணத்தை சிதம்பரத்தில் இருக்க கூடிய தில்லை நடராஜர் கோயிலில் இடது பாதத்தை தூக்கி வைத்தது போல் இருக்கும். ஆனால், மதுரையில் அதே இறைவன் வலது பாதத்தை தூக்கி ஆடுவது போல் இருக்கும். 108 கர்ணங்களுக்கு மேல் நடனத்தில் இல்லை, இந்த 108 கர்ணங்களும் தில்லை நடராஜர் கோயிலில் இருக்கிறது. ஆனால், தஞ்சை மன்னர் ராஜராஜ சோழன் 96 கர்ணங்களை வடித்தார், மீதமுள்ள கர்ணங்களை அவரால் வடிக்க முடியவில்லை, அதற்கு பல காரணங்கள் சொல்வதுண்டு. ஆனால், இப்போது லக்‌ஷிதா மேடையில் ஆடிய நடனத்தை பார்த்து மெய்சிலிர்த்து போனேன். அதை பாராட்ட வார்த்தையே இல்லை.

இப்படி ஒரு ஆபாரமான நடன திறன் கொண்ட லக்‌ஷிதாவின் ஆசிரியருக்கு என் வாழ்த்துகள். சங்ககால இலக்கியத்தில் ஒருதலை காதலை கைக்கிளை என்று சொல்வார்கள். அந்த கைக்கிளையில் அவர் பிடித்த அபிநயம் அற்புதம். ஒரு மடல் எழுதுகிறார், புறாவை அழைக்கிறார், புறா காலில் மடலை கட்டி பறக்க விடுகிறார், இப்படி ஒரு காட்சியை தனது நடனத்தில் மிக அழகாக உணர்த்தினார்கள். உண்மையிலேயே உலகத் தமிழர்கள் பாராட்டாக்கூடிய விதத்தில் நடனமும், பாடல்களும் அமைந்திருந்தது. 

என் உடன்பிறவா சகோதரர் கல்யாணம் அவர்களுக்கு இப்படி ஒரு பேத்தி இருப்பது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் என்றே சொல்ல வேண்டும். நாட்டிய பேரொளியை கண்டு நாம் மகிழ்ந்திருக்கிறோம், வைஜெயந்தி மாலாவை கண்டு மகிழ்ந்திருக்கிறோம்.  ஆனால், குழந்தை லக்‌ஷிதா தனது நடன திறமையால் உலக அளவில் பேரும், புகழும் பெருவார், என்று கூறி வாழ்த்துகிறேன்.” என்றார்.

டாக்டர்.ஸ்ரீனிதி சிதம்பரம் பேசுகையில், “இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த ஷீலா மற்றும் லக்‌ஷிதாவின் பெற்றோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிக சிறப்பான ஒரு நடன நிகழ்ச்சியாக இந்த அரங்கேற்றம் அமைந்திருந்தது. நான் நடனக் கலைஞர் என்பதால் சொல்கிறேன், லக்‌ஷிதாவின் நடனம் தனித்துவமாக இருந்தது. தன்னம்பிக்கை, புத்துணர்ச்சி, அழகு என அனைத்தையும் சேர்த்த ஒரு அழகான மற்றும் தனித்தன்மையுடன் கூடிய ஒரு நடனத்தை லக்‌ஷிதா இன்று அரங்கேற்றியிருக்கிறார்.

லக்‌ஷிதாவின் இந்த நடன திறனுக்கு அவருடைய ஆசிரியர் ஷீலா உன்னிகிருஷ்ணன் மிக முக்கியமானவர் என்பதை நான் அறிவேன். அவருடைய பள்ளியும், அதில் பயிலும் மாணவர்கள் பலர் சிறந்த நடனக் கலைஞராக உருவாகியிருக்கிறார்கள். அவர்களைப் போல் லக்‌ஷிதாவும் சிறப்பாக நடனம் ஆடியதோடு, அவருடைய பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகமாக இருந்தது. பக்தி, நாட்டுப்புற பாட்டு என பல வகையிலான பாடல்களுக்கு மிக அழகான நடனம் ஆடி இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றிவிட்டார்.

பரதநாட்டிய கலை ஒரு நடனம் மட்டும் அல்ல உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியம் மற்றும் வலிமை தரக்கூடிய ஒரு சிறந்த கலையாகும். இந்த கலையை பயின்று வரும் இளைஞர்களுக்கு கடவுளின் ஆசி எப்போதும் உண்டு. இன்று ஒரு சிறப்பான அரங்கேற்ற நிகழ்ச்சியை நடத்திய லக்‌ஷிதாவுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. அவர் வாழ்வில் அனைவருடைய ஆசீர்வாதங்களை பெற்று மேலும் பல உயரங்களை தொடுவார், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

திருக்குறளுக்கு மெட்டு அமைத்து, அதற்கு ஏற்ப லக்‌ஷிதா நடனம் ஆடியது பரதநாட்டிய கலையில் இதுவரை யாரும் செய்திராத ஒன்றாகும். முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியின் மூலம் லக்‌ஷிதாவின் இந்த அரங்கேற்ற நிகழ்ச்சி பரதநாட்டிய கலையின் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அரங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட விருந்தினர்கள், பத்திரிகையாளர்கள் என நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு லக்‌ஷிதாவை வாழ்த்திய அனைவருக்கும் KNACK Studios திரு.கல்யாணம் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் செல்வி.லக்‌ஷிதாவின் பெற்றோர் லதா மற்றும் மதன் இசைக் கலைஞர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி கெளரவித்ததோடு, வந்திருந்து வாழ்த்திய சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி மரியாதை செய்தனர்.

Sunday, June 25, 2023

Kalaingar Nagar"*press Meet

*”Press Meet of  Kalaingar Nagar"*

‘’பிதா’’ என்ற திரைப்படத்தை 23.23 மணி நேரம் இயக்கிய இயக்குனர் சுகன் குமார் அடுத்த படைப்பான ‘’கலைஞர் நகர்’’ என்ற திரைப்படத்தை 23 மணி நேரம் அடைவதற்கு 7 நிமிடத்திற்கு முன்பாகவே, அதாவது 22.53 மணி நேரத்திற்குள் முடித்து சாதனை படைத்துள்ளார்.

சுகன் குமார் இயக்கத்தில் ப்ரஜின், ப்ரியங்கா, லிவிங்ஸ்டன் ஆகியோர் நடிக்கும் கலைஞர் நகர் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது.

மேடையில் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது.

*இயக்குநர் சுகன் குமார் மேடையில் பேசுகையில்,*

சில இயக்குநர்கள் எல்லாம் திணறிட்டு இருக்கிறார்கள். 24 மணி நேரத்தில் படம் உருவாக்குவதற்கு... பெரிய பெரிய இயக்குநர்கள் எல்லாம் பிரம்மாண்டமாக படம் எடுக்கிறார்கள். இந்த சிறிய படத்தை பிரம்மாண்டமாக எடுத்துள்ளோம்.

இந்த படத்தை 23 மணி நேரத்துக்கு முன்னதாகவே 7 நிமிடங்களுக்கு முன் முடித்து விட்டோம். 

மேடை நடனக் கலைஞர்களை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தை எடுத்ததற்கு நான் மட்டும் முக்கிய காரணம் கிடையாது. இதில் என்னுடைய கடைசி உதவியாளர் வரைக்கும் உழைத்திருக்கிறார். கேமிராமேன் இளையராஜா, எடிட்டர் சந்தீப், இசையமைப்பாளர் நரேஷ், நடிகர்கள் பிரஜின், பிரியங்கா, ஐஸ்வர்யா, திருக்குறழி, விஜய் ஆனந்த், ரவி, ரஞ்சித் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எனது மனைவி உள்பட அனைவரும் தான்.... 

படம் எடுத்தாலும் அதில் 3 பாடல்கள், 2 சண்டை, காமெடி என எல்லாமே போட்டு எடுக்கப்பட்டுள்ளது. 

இது முழுக்க முழுக்க மேடை நடனக் கலைஞர்களை மையப்படுத்தி, உண்மை சம்பவத்தை தெளிவாக காண்பித்துள்ளோம்.  இதை ஊடகத்துறையினர் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் 

*சின்னத்திரை இயக்குநர் சங்கத்தலைவர் தளபதி மேடையில் பேசுகையில்,*

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர் சங்கம் சார்பில் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியை நேரு அரங்கில் நடத்த திட்டமிட்டு வருகிறோம். இன்று இந்த சங்கம் பெருமைப்படுகிறது என்றால் அதற்கு இயக்குநர் சுகன் தான் காரணம். சுகன் குமாரும் இந்த சங்கத்தின் உறுப்பினர்.

உதவி இயக்குநர்கள் பல பிரச்சினைகளை தாண்டி லட்சியத்தை வெல்ல சுகன் குமாரின் இந்த முயற்சி, உத்வேகத்தை தரும். 

*நடிகை ப்ரியங்கா மேடையில் பேசுகையில்,*

மிக மிக அவசரம் மக்கள் மத்தியில் பல விருதுகள் கொடுத்தார்கள். அதுவே பெரிய விசயம். இந்த படம் 23 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம். 

ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மிக குறைவான படங்களில் நடித்து வருகிறேன். மிகப்பெரிய இடத்துக்கு வரவேண்டும் என்று ஆசை.

இந்த காலகட்டத்துக்கு நிறைய நடிகை வருகிறார்கள். அவர்களுடைய திறமைக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களையும் வர வைக்க வேண்டும் என்றார்…

நடிகர்கள்
 
Hero 
prajin பிரஜின்

Heroine 
MIGA MIGA AVASARAM
SRI PRIYANKA 
மிக மிக அவசரம்
ஶ்ரீபிரியங்கா

Actors 
Livingston 

Adithya kathir

த. ரவிச்சந்திரன்
T. RAVICHANDRAN

Vijay anand
விஜய் ஆனந்த்

Dollyaishwarya
டாலிஐஸ்வரியா

Prakash
பிரகாஷ்

திருக்குறளி.சு Thirukkurali .s

Chandrababu Eshwar 


Ranjith S R

Orange Mittai praba
ஆரஞ்சு மிட்டாய் பிரபா

டெக்னீசியன்ஸ்:  

கேமரா மேன்  - இளையராஜா - அயோத்தி 
எடிட்டர் - சந்தீப்(sandeep) 
மியூசிக் -  நரேஷ் 
டயலாக் ரைட்டர் - பாபா கண்ணடி 
கதை, திரைக்கதை, இயக்கம் - சுகன் குமார்
நிர்வாக தயாரிப்பு - அன்பு 
LINE PRODUCER - காயத்திரி சுகன் 
தயாரிப்பு நிர்வாகி - அறந்தை பாலா 
தயாரிப்பு நிறுவனம்- எஸ்.ஆர் பிலிம் ஃபேக்டரி 
தயாரிப்பாளர் - சிவராஜ் சார்
மக்கள் தொடர்பு - ஷேக்

விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படம் ZEE5 தளத்தில் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது

*விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படம் 
ZEE5 தளத்தில் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது*

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் மற்றும் சுரேஷ் கோபி நடிப்பில், இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில்,  SNS Movies தயாரிப்பில், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் தமிழரசன். திரையரங்குகளில் வரவேற்பைக் குவித்த இத்திரைப்படம் ஜூன் 16 அன்று ZEE5 தளத்தில் டிஜிட்டல் ப்ரீமியர் செய்யப்பட்டது. இப்படம் ZEE5 ல் வெளியான குறுகிய காலத்தில் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 

தமிழரசன் திரைப்படம் மகனை கப்பாற்ற போராடும் ஒரு தந்தையின் கதை. நியாயமான விசயத்திற்குக் குரல் தந்ததற்காக சஸ்பெண்டில் இருக்கும் போலீஸ் அதிகாரி தமிழரசன்,  அவரது மகனுக்கு திடீரென இதயத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. பெரும் பணம் இருந்தால் மட்டுமே மகனைக் காப்பாற்ற முடியும் எனும் சூழலில், அவரது மகனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யும் வாய்ப்பு பறிபோகிறது. இதனால் கோபமடையும் தமிழரசன், மகனைக் காக்க முழு மருத்துவமனையையும், துப்பாக்கி முனையில் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். போலீஸ் அவரை பிடிக்கத் திட்டமிடுகிறது. பல தடைகளைக் கடந்து தன் மகனைத் தமிழரசன் காப்பாற்றினாரா என்பதே இப்படத்தின் கதை. 

தமிழ் திரையுலகில்  தொடர்ந்து வெற்றிப்படங்களைத் தந்துவரும், விஜய் ஆண்டனி நடிப்பில் மாறுபட்ட கதைக்களத்தில் ஒரு உருக்கமான டிராமா திரில்லராக தமிழரசன் படம் உருவாகியுள்ளது.  இப்படத்தில் நடிகை ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்க, பிரபல நடிகர் சுரேஷ் கோபி முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற எடிட்டர் மோகன் அவர்களின் பேரனும் பிரபல மோகன் ராஜா அவர்களின் மகனுமான  ப்ரணவ் மோகன், விஜய் ஆண்டனியின் மகனாக இப்படத்தில் நடித்துள்ளார். SNS Movies  சார்பில் S.கௌசல்யா ராணி இப்படத்தைத் தயாரித்துள்ளார். 

சமீபத்தில் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் குடும்ப பார்வையாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெளியான குறுகிய காலத்தில் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.  

ZEE5 2023  ஆம்  ஆண்டு கடந்த ஆண்டைப் போலவே  மிகவும்  வெற்றிகரமான ஆண்டாக அமைந்து வருகிறது, இந்த வருடம் சிறந்த ஒரிஜினல் தொடர்கள், திரைப்படங்கள், பிளாக்பஸ்டர் படங்கள், சிறந்த பொழுதுபோக்கு மற்றும் விமர்சன ரீதியிலும் பாராட்டப்பட்ட பல அட்டகாசமான  திரைப்படங்களை ZEE5 வழங்கி வருகிறது. ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியான அயலி, செங்களம், ஒரு கோடை மர்டர் மிஸ்டரி மற்றும்  ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் திரைப்படம் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் விடுதலை பாகம் 1 திரைப்படம்   என அனைத்து வெளியீடுகளும் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வெற்றிபெற்றுள்ளது.

எண்ணற்ற வெற்றிப்படைப்புகளை கொண்டிருக்கும் ZEE5 தளம்  புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் புதிய வெப் சீரிஸ்களுடன் கூடிய தனது அடுத்த கட்ட படைப்புகளை விரைவில் அறிவிக்கவுள்ளது. சிறப்பான படைப்புகளைப் பார்த்து மகிழ ZEE5 உடன் இணைந்திருங்கள் கொண்டாடுங்கள்.

Saturday, June 24, 2023

This-Abled Dialogues” is an exhibition by the specially-abled artists of Art Houz UK to be held at Art Houz, Chennai

“This-Abled Dialogues” is an exhibition by the specially-abled artists of Art Houz UK to be held at Art Houz, Chennai

“This-Abled Dialogues” is an inclusive art exhibition that celebrates the artistic talents of individuals with disabilities through a wide range of abstract paintings and showcase to the global audience. Through the transformative power of art, this exhibition aims to showcase the talents and perspectives of artists with disabilities, highlighting their unique voices and breaking down barriers. This show mainly seeks to challenge “societal perceptions of disability” and promote a dialogue about the diverse abilities within our communities.

வாடகை வீட்டுக்கு குட்பை சொல்ல நேரம் வந்தாச்சு - 18 லட்சத்தில் அசத்தலான வீடு ரெடி!

வாடகை வீட்டுக்கு குட்பை சொல்ல நேரம் வந்தாச்சு - 18 லட்சத்தில் அசத்தலான வீடு ரெடி!

18 லட்சத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு! - சொந்த வீடு வாங்கும் கனவை நினைவாக்கும் ’ஒன் ஸ்கொயர்’

பெரும்பாலான மக்களின் மிகப்பெரிய கனவு என்றால் சொந்த வீடு வாங்குவது தான். ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் சொந்த வீடு என்ற கனவு ஒரு சிலருக்கு மட்டுமே நிஜமாகிறதே தவிர மற்றவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. அதிலும், சென்னையில் சொந்த வீடு என்பதை சிலர் நினைத்து பார்ப்பது கூட இல்லை. ஆனால், இந்த நிலை இனி இல்லை என்பது தான் உண்மை.

ஆம், வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்த வீடு வாங்குவதற்கான மிகப்பெரிய வாய்ப்பை பிரபல கட்டுமான நிருவனமான ரூஃப்வெஸ்ட் (Roofvest) உருவாக்கி கொடுத்திருக்கிறது.

கட்டுமானத்துறையில் சுமார் 33 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக பயணித்து வரும் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் பல்வேறு அடுக்குமாடி  குறியிருப்புகள், வில்லாக்களை உருவாக்கி கொடுத்துள்ளது. 

சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலையில் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் கட்டிய வில்லாக்களுக்கு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததோடு, இந்நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் விரைவில் விற்பனையாகி விடுகிறது.

இப்படி பிரமாண்டமான மற்றும் ஆடம்பரமான வீடுகளை கட்டி வந்த ரூஃப்வெஸ்ட் நிறுவனம், நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை நினைவாக்கும் விதத்தில் சென்னை தாம்பரம் அருகே உள்ள முடிச்சூரில் குறைந்த விலையில் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பை உருவாக்கியுள்ளது.

முடிச்சூர் பகுதியை சுற்றி ‘ஒன் ஸ்கொயர்’ (One Square) என்ற பெயரில் 5 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ள ரூஃப்வெஸ்ட் நிறுவனம் முதலில் 220 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை அறிமுகம் செய்துள்ளது. 

இதில் உள்ள அனைத்து வீடுகளும் ஒரு படுக்கையறை (1BHK) கொண்டவையாகும். இதன் விலை ரூ.18 லட்சம் மட்டுமே. அனைத்து வசதிகளுடன், சுற்றுச்சுவர் கொண்ட பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த அடுக்குமாடி குடியிருப்பின் விலை ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்தாலும், அது தான் உண்மை.

மேலும், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குபவர்களுக்கு பல்வேறு பரிசுகளும் காத்திருக்கிறது. 50 கிராம் தங்க நாணயம், கார், இருசக்கர வாகனம், ஸ்மார்ட் டிவி, வெளிநாட்டு சுற்றுலா, பரிசுத்தொகை என்று ஏராளமான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

50 ஆயிரம் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ள ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ திரு.ஷாம், சுமார் 40-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை அறிமுக நாளிலேயே விற்பனை செய்து  சாதித்துள்ளார். அவருடைய இந்த சாதனைக்கு ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தின் மீதும், அந்நிறுவனம் உருவாக்கிய தரமான வீடுகள் மீதும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு உதராரணமாகும்.

ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.ஸ்ரீதர் நாராயணன், கட்டுமானத்துறையில் உள்ள அனைத்துவிதமான வடிவங்களிலும் சாதிக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டிருக்கிறார். அந்த வகையில், வில்லா, கடற்கரை வில்லாக்கள், ஆடம்பரமான சொகுசு பங்களாக்கள், மலைப்பிரதேச தங்கும் விடுதிகள், ரிசார்ட் உள்ளிட்ட அனைத்துவிதமான கட்டுமான பணிகளையும் வெற்றிகரமாக செய்திருக்கிறார்.

தற்போது, நடுத்தர மக்களுக்காக குறைந்த விலையில், அனைத்து வசதிகளும் கொண்ட   குடியிருப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் திரு.ஸ்ரீதர் நாராயணன், எளிய மக்களின் சொந்த வீடு கனவை நினைவாக்கும் விதமாக ‘ஒன் ஸ்கொயர்’ திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பகமான நிறுவனத்தின் குறைந்த விலையில் ஆன இந்த ‘ஒன் ஸ்கொயர்’ அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத் துறையில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கியிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

‘ஒன் ஸ்கொயர்’ அடுக்குமாடி குடியியிருப்பு பற்றிய மேலும் விபரங்களுக்கு:

கைப்பேசி : 8880309999 

இணையதளம் : onesquarehomes.com

முகவரி : W39C+JXJ, புவனேஷ்வரி நகர், முடிச்சூர், தமிழ் நாடு 600063

ரெஜினா - திரைவிமர்சனம்

சுனைனா மற்றும் அனந்த் நாக் ஜோடி மகிழ்ச்சியான ஜோடி. இருப்பினும், அனந்த் நாக்கின் வங்கியில் நடந்த கொள்ளை அவரைக் கொன்றுவிடுகிறது.


சுனைனா தனது கணவரின் உயிரற்ற உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்து அதிர்ச்சியடைந்தார்.


சுனைனாவின் செயற்பாட்டாளர் தந்தையும் அவர் இளமையாக இருந்தபோது ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டார்.


இப்போது, ​​​​கணவன் போய்விட்டதால், சுனைனா தனது வீட்டை விட்டு வெளியேறி வர்கலாவுக்குத் தப்பிச் செல்வாரா, அங்கு அவர் கடற்கரை ஓர உணவகத்தில் வேலை செய்கிறார்.


இயக்குனர் டோமின் டி சில்வா ஒழுக்கமான மற்றும் ஈர்க்கக்கூடிய ஒரு த்ரில்லரை வழங்க தன்னால் முடிந்தவரை முயற்சித்துள்ளார்.


படம் முழுவதும் புதிரான கருத்துக்களை முன்வைக்கிறது, ஆனால் அவை முழு திறனுடன் செயல்படுத்தப்படுகின்றன.


மையக் கதாபாத்திரத்திற்கு சிறப்பாக எழுதினால், இன்னும் ஈர்க்கக்கூடிய அனுபவத்தை வழங்கியிருக்கலாம்.


இது சுனைனாவின் அனைத்து வழிகளிலும் உள்ளது, மேலும் தன்னால் தனியாக ஒரு படத்தை நடத்த முடியும் என்பதை அவர் காட்டியுள்ளார்.


அவரது டயலாக் டெலிவரியும், உடல் மொழியும் கதையின் செறிவுக்குப் பொருந்துகிறது.


திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தின் பாதிப்பை திறம்பட வெளிப்படுத்தியுள்ளார்.


அனந்த் நாக், ரிது மந்த்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் மற்றும் அவர்களின் கதாபாத்திரங்களுக்கு முழுமையான நீதியை வழங்கியுள்ளனர்.


நிவாஸ் ஆதித்தன், தீனா மற்றும் கஜராஜ் உட்பட மற்ற நடிகர்கள் அனைவரும் அவர்களிடமிருந்து எதிர்பார்த்ததை வழங்கியுள்ளனர்.


இசையமைப்பாளர் சதீஷ் நாயர் தனது பின்னணி இசையால் ஈர்க்கிறார்.


பவி கே. பவனின் ஒளிப்பதிவு நிகழ்ச்சிகளை சிறப்பாகப் படம்பிடித்துள்ளது.

 

பாயும் ஒளி நீ எனக்கு - திரைவிமர்சனம்

விக்ரம் பிரபு தனது சிறுவயதில் ஏற்பட்ட விபத்தால் குறைந்த வெளிச்சத்தில் தெளிவாகப் பார்க்க முடியாது.


அவர் தனது நண்பருடன் சேர்ந்து ஒரு ஸ்டார்ட் அப் நடத்துகிறார். ஒரு நாள் சில குண்டர்களிடமிருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிறார்.


கும்பல் அவரை பழிவாங்க திட்டமிடுகிறது, மறுபுறம் விக்ரம் பிரபுவின் மாமாக்கள் கொல்லப்படுகிறார்கள்.


விக்ரம் பிரபு பழிவாங்கும் பயணத்தைத் தொடங்குவதை உணர்ந்தவுடன், சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினம்.


இயக்குனர் ஜோடியான கார்த்திக் அத்வைத், ஹரேந்தர் பாலச்சந்தர் ஆகியோர் இப்படத்தை சுவாரஸ்யமாகவும் ஈர்க்கக்கூடிய வகையிலும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கியுள்ளனர்.


கோவில் பழிவாங்கும் பாதையில் சென்றாலும் பார்வையாளர்களின் ஆர்வத்தை இயக்குனர்களால் தக்க வைக்க முடிகிறது.


வசதியாக எழுதுவது படத்தின் முக்கிய குறைகளில் ஒன்று.


விக்ரம் பிரபு பார்வைக் கோளாறால் அவதிப்படும் இளைஞனாக நடித்துள்ளார்.


ஸ்டண்ட் காட்சிகளில் அவரது நடிப்பு பிரமிக்க வைக்கிறது.


விக்ரம் பிரபு படம் முழுவதையும் தன் தோளில் சுமந்து கொண்டு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


வாணி போஜனுக்கு அதிகம் செய்ய வேண்டியதில்லை மற்றும் மிகக் குறைந்த திரை இடமே உள்ளது.


வேல ராமமூர்த்தி ஒரு இளைஞனாக தனது பாத்திரத்தில் ஈர்க்கிறார்.


வில்லனாக தனஞ்சய தனது கதாபாத்திரத்திற்கு முழு நீதி செய்துள்ளார்.


மற்ற நடிகர்களும் அவர்களிடமிருந்து எதிர்பார்த்ததை வழங்கியுள்ளனர்.


சாகரின் BGM திரையில் காட்சிகளுக்கு அதிக தீவிரம் சேர்க்கிறது.


குறிப்பாக இருளையும் வெளிச்சத்தையும் வெவ்வேறு சாயல்களில் காட்ட வேண்டிய காட்சிகளில் ஸ்ரீதரின் கேமிரா வசீகரம்.

 

Friday, June 23, 2023

தலைநகரம் 2 - திரைவிமர்சனம்

சென்னையின் மூன்று பகுதிகளை ஆளும் மூன்று ரவுடிகள் மற்ற இரண்டையும் முடித்துக் கொண்டு மொத்த நகரத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முயற்சிக்கின்றனர்.


ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை சுந்தர் சியை ஒரே நேரத்தில் மூன்று ரவுடிகளையும் பிடிக்க வைக்கிறது. மூன்று ரவுடிகளும் சுந்தர் சியை குறிவைக்கிறார்கள்.


யார் வெற்றியாளராக வெளிவருகிறார், ஏன் சுந்தர் சி குண்டர்களை எடுத்தார் என்பதே மீதிக்கதை.


இயக்குனர் வி இசட் தொரை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படத்தை வழங்கியுள்ளார். திரைக்கதை இறுக்கமானது, கதைக்களமும் சுவாரஸ்யம்.


இருப்பினும், இயக்குனர் பல காட்சிகளில் இரத்தக்களரியை தவிர்த்திருக்கலாம்.


சுந்தர் சி சரியான கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். கதாப்பாத்திரத்தின் ஆழத்தைப் புரிந்துகொண்டு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


இது இதுவரை அவரது சிறந்த நடிப்புகளில் ஒன்றாகும். பாலக் லால்வானி ஒரு சதைப்பற்றுள்ள பாத்திரத்தைப் பெறுகிறார், மேலும் அவரிடமிருந்து எதிர்பார்த்ததை வழங்கியுள்ளார்.


தம்பி ராமையா, விஷால், ராஜன், பிரபாகர் உட்பட மற்ற நடிகர்கள் அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.


ஜிப்ரானின் இசை துடிதுடித்து படத்தின் வேகத்தை கூட்டுகிறது. இ கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.

 

அழகிய கண்ணே - திரைவிமர்சனம்

லியோ சிவகுமார் திரையுலகில் சாதிக்க வேண்டும் என்று கனவு காண்கிறார். இவர் தனது சொந்த ஊரான திண்டுக்கல்லில் புரட்சி நாடகங்களை அரங்கேற்றுகிறார்.


அவரது பக்கத்து வீட்டுக்காரர் சஞ்சித்தா ஷெட்டி அவரை காதலிக்கிறார். இதற்கிடையில், லியோ சிவகுமாருக்கு சென்னையில் பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கிறது, மேலும் சஞ்சித்தாவும் வேலைக்காக ஊருக்குச் செல்கிறார்.


அவர்கள் ஒருவரையொருவர் காதலித்து கடைசியில் குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொள்கிறார்கள்.


அவர்கள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறார்கள். ஆனால், வேலை அழுத்தம் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக சஞ்சித்தாவையும், குழந்தையையும் லியோவால் கவனிக்க முடியவில்லை.


லியோ தனது கனவில் வெற்றி பெற்றாரா? சஞ்சித்தாவிற்கும் குழந்தைக்கும் என்ன நடக்கிறது என்பதே கதையின் மீதியை உருவாக்குகிறது.


இப்படத்தின் கதை தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் வேலை அழுத்தம் குடும்பங்களை எவ்வாறு பாதித்தது என்பதை இயக்குனர் ஆர் விஜயகுமார் காட்டுகிறார். குழந்தைகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் தொட்டுள்ளார்.


திரைப்பட இயக்குனராக லியோ சிவகுமார் தனது பாத்திரத்தை கண்ணியமான முறையில் முன்னெடுத்துள்ளார். இருப்பினும், மேம்பாடுகளுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது. மகிழ்ச்சியான குடும்பத்தை வாழ ஏங்கும் போராடும் தாயாக சஞ்சித்தா ஷெட்டி ஈர்க்கிறார்.


விஜய் சேதுபதி கேமியோவாக நடித்துள்ளார், வழக்கம் போல் அந்த கதாபாத்திரத்தில் முத்திரை பதித்துள்ளார். மீதமுள்ள நடிகர்கள் அவர்களிடமிருந்து எதிர்பார்த்ததை வழங்கியுள்ளனர்.


என்.ஆர்.ரகுநாதனின் இசை படத்தைப் பாராட்டியது. ஏ ஆர் அசோக் குமாரின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.

 

Thursday, June 22, 2023

நாயாடி - திரைவிமர்சனம்

பங்களாவில் நடக்கும் அமானுஷ்ய செயல்களை பதிவு செய்யும்படி சிலர் கேட்டுக் கொண்டதையடுத்து, ஆதர்ஷ் தலைமையிலான யூடியூபர்கள் குழு காட்டில் உள்ள பங்களாவுக்குச் செல்கிறது.


இந்த இடம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாயாடி பழங்குடியினரின் ஆவிகளால் பாதுகாக்கப்படுகிறது.


1000 ஆண்டுகள் வாழும் ஆற்றல் கொண்ட தம்பதிகள், இப்பகுதிக்கு வரும் இளைஞர்களின் உடலில் மாறி மாறி நுழைந்து இளமையை தக்கவைத்துக் கொள்கின்றனர்.


ஆதர்ஷும் அவனது நேரமும் நாயாடி தம்பதிகளுக்கும் ஆவிகளுக்கும் இடையில் சிக்கிக் கொள்கின்றன.


அவர்கள் ஒவ்வொருவரும் ஆவியால் கொல்லப்படுகிறார்கள். இறுதியில் ஆதர்ஷ் தனது காதலி மற்றும் அவளது தோழியுடன் மாட்டிக் கொள்கிறார்


ஆதர்ஷ் இயக்கிய இப்படம் நாயாடி பழங்குடியினரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.


இந்தப் படம் வழக்கமான திகில் பட டெம்ப்ளேட்டைப் பின்பற்றுகிறது. இருப்பினும், நாயாடி பழங்குடியினரின் பின்னணி மற்றும் அவர் திகில் கூறுகளை வழங்கிய விதம் சுவாரஸ்யமானது.


பெரும்பாலான நடிகர்கள் புதுமுகங்கள் என்பதால், அவர்கள் எந்த கேரக்டரில் நடிக்கிறார்கள் என்று பழகுவதற்கு நேரம் எடுக்கும்.


இருப்பினும், நடிகர்கள் அனைவரும் பார்வையாளர்களை பயமுறுத்துவதை உறுதி செய்துள்ளனர். அவர்கள் தங்கள் வெளிப்பாடுகளால் பார்வையாளர்களை ஒரு நிலையான அச்ச நிலையில் வைத்திருக்க முடிகிறது.


பார்வையாளர்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும் வகையில் சில காட்சிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.


க்ளைமாக்ஸில் வரும் ட்விஸ்ட் எதிர்பாராதது, ஆனால் அதை இன்னும் சிறப்பாக அரங்கேற்றியிருக்கலாம்.


அருணின் இசை படத்தின் கருவை நன்றாகப் பாராட்டுகிறது.


மோசஸ் டேனியலின் ஒளிப்பதிவு வனப்பகுதியை திறம்பட படம்பிடித்துள்ளது.

 

iD - Chennai's Everyday Soulful, opened its newest branch at Uptown Kathipara, Guindy on 19th June 2023.

iD - Chennai's Everyday Soulful, opened its newest branch at Uptown Kathipara, Guindy on 19th June 2023.

 iD, that has been delighting customers since the opening of its very first outlet in 2009, continues to serve some lip smacking authentic South Indian vegetarian food for its customers. The menu has a host of  South Indian delicacies including Idli, Dosa, Vada, Poori, Pongal and Idiyappam (to name a few) complemented by an assortment of chutneys and traditional sambar. Their menu is also known for the beverages they offer like the Kumbakonam Degree Coffee, Tea, Buttermilk, Rose Milk, Fresh Juice and Nannari Sarbath. And last but not the least, the iD menu also offers some mouth watering sweets.. the crowd favourite being the melt-in-your-mouth Kasi halwa!

iD as a restaurant concept, was designed to retain all the goodness and tradition that people love about authentic South Indian food while being presented in a contemporary and chic environment. This thought is translated in the way the space has been thoughtfully designed - The interiors are elegant and the addition of wall art makes the space more modern and interesting. The furniture are sleek yet comfortable and the seats designed by the live counter elevates the mood as it makes the experience more interactive. 

iD's outlet at Uptown Kathipara, Guindy promises to be extra special to its customers. Apart from this outlet being the first ever iD branch to be open 24/7, the extensive South Indian menu will now be infused with a splash of the north through the inclusion of their new chaat venture, 'Chaat by iD'. From serving  classics like the Bhel Puri, Pani Puri to some with an exciting and unique twists like the Sev Papdi Chaat dip and Hakka Bhel, 'Chaat by iD' aims to serve customers the heart of North Indian street food with a soul.

To further strengthen the iD community, the branch will also be launching a loyalty program, to reward their regular customers and to further celebrate the sense of community that they create every day. 

Including this brand new outlet, iD currently has five standalone locations, the remaining spread across the city in Harrington Road, Nexus Mall (Vadapalani), The Marina Mall (OMR) and their flagship restaurant inside the Chennai Domestic Airport. Apart from the above, a series of outlets that cater mainly to corporate clients are situated at DLF IT Park (Porur), RMZ (Porur), Amazon (OMR) and Ascendas.

With core values revolving around offering premium quality, tasty, hygienic food, the team at iD is looking forward to hosting customers at their newely opened outlet by offering delicious cuisine, exemplary service, and a superlative dining experience.

A S V I N S - திரைவிமர்சனம்

ஒரு விவசாயியின் இரட்டை குழந்தைகள் நீர்நிலையில் மூழ்கி பலி. இதனால் மனம் உடைந்த விவசாயி, அஸ்வினி குமாரஸ் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்.


அஸ்வினி குமாரர்கள் விவசாயியின் முன் தோன்றி, ஒரு குழந்தையை மட்டுமே உயிர்த்தெழுப்ப முடியும் என்று கூறுகிறார்கள், மேலும் அவர் இயற்கையான மரணம் மட்டுமே செய்வார், வேறு எதுவும் அவரது மரணத்தை ஏற்படுத்தாது என்றும் கூறுகிறார்கள்.


அவர்கள் விவசாயிக்கு இரட்டை குதிரை தங்க சட்டத்தை வழங்குகிறார்கள், மேலும் அவர்கள் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள், தவறினால் உலகம் தீயவர்களால் கைப்பற்றப்படும்.


பிசாசு உயிர்த்தெழுந்த சிறுவனை அணுகி, தங்கக் குதிரைகளில் ஒன்றிற்காக தனது இரட்டைச் சகோதரனின் உயிரைக் கொடுக்க முன்வருகிறான்.


குழந்தையும் அதற்குச் சம்மதிக்கிறது, குதிரைச் சட்டத்தை எடுத்துக் கொண்ட பிறகு, பிசாசு ஒரு சைத்தானை நரகத்திலிருந்து அந்த கிராமத்தில் வசிக்க வைக்கிறது.


லண்டனில் உள்ள ஒரு அரண்மனையில் வசிக்கும் ஒரு ஆராய்ச்சியாளர் உட்பட கிராமத்தைச் சேர்ந்த பலர் இதற்குப் பிறகு இறக்கின்றனர்.


அமானுஷ்ய நடவடிக்கைகளைப் பின்பற்றும் வசந்த் ரவி தலைமையிலான யூடியூபர்கள் குழு வீடியோ எடுக்க அரண்மனைக்குச் செல்கிறது


தருண் தேஜா மல்லாரெட்டி இயக்கிய இந்த திரைப்படம் ஒரு சுவாரசியமான முன்னுரையைக் கொண்டுள்ளது மற்றும் பயனுள்ள முறையிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.


படத்தின் கதை ஹாலிவுட் தரத்திற்கு இணையாக உள்ளது.


எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் கதைசொல்லல் இன்னும் எளிமையாக இருந்திருக்கலாம்.


வசந்த் ரவியின் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதால், அந்த வாய்ப்பை அவர் இரு கைகளாலும் கைப்பற்றியுள்ளார்.


இரண்டாம் பாதியில் இவரின் நடிப்புதான் படத்தைக் கட்டிப்பிடிக்கிறது.


விமலா ராமன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அனுபவமிக்க நடிப்பை வெளிப்படுத்துகிறார்.


சரஸ்வதி மேனன் தன் கதாபாத்திரத்திற்குத் தேவையான எக்ஸ்பிரஷன்களால் ஜொலிக்கிறார்.


முரளிதரன், உதயதீப் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.


இசையமைப்பாளர் விஜய் சித்தாராத் திகில் பட டெம்ப்ளேட்டிலிருந்து விலகி புதிய அனுபவத்தை தருகிறார்.


ஏ எம் எட்வின் சாகாயின் ஒளிப்பதிவு சுவாரஸ்யமாக உள்ளது மற்றும் திரைப்படத்திற்கு தேவையான பலனைத் தருகிறது.

 

Paani Poori - திரைவிமர்சனம்

லிங்காவும் சம்பிகாவும் காதலர்கள். சம்பிகா ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் ரோபோட்டிக்ஸ் துறையில் பணிபுரிகிறார்.


அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தபோது, ​​இருவரும் காதலிப்பதும் திருமணம் செய்து கொள்வதும் மிகவும் வித்தியாசமானது என்று உணர்கிறார்கள்.


ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி அதில் ஏழு நாட்கள் ஒன்றாக தங்கலாம் என்று ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.


இந்த ஏழு நாட்களிலும் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளில் வாதிடுகிறார்கள், சண்டையிடுகிறார்கள்.


திருமணத்திற்குப் பிறகு சம்பிகாவின் தந்தையை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற வாக்குவாதம் முற்றி அவர்கள் பிரிந்து விடுகிறார்கள்.


அடுத்து என்ன நடக்கும் என்பது கதை என்றால் மீதியை உருவாக்குகிறது.


சமகால விஷயத்தை மிக பக்குவமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.


அவர் எங்கும் எல்லை மீறிச் செல்லவில்லை அல்லது பிரசங்கிக்கவில்லை.


யதார்த்தத்திற்கு மிக நெருக்கமாக படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.


கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் சிங்கிள் பேரன்டிங் என்ற கருத்தையும் பாலாஜி தொட்டுள்ளார்.


லிங்காவும், சம்பிகாவும் காதலர்களாக தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.


கதாபாத்திரங்களின் அன்பு, ஈகோ, கோபம் ஆகியவற்றை திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.


இளங்கோவன் குமரவேல் ஏன் மிகவும் பல்துறை நடிகராகக் கருதப்படுகிறார் என்பதை மீண்டும் ஒருமுறை நிறுவியுள்ளார்.


அவர் தனது பாத்திரத்திற்கு முழுமையான நீதியை வழங்குகிறார் மற்றும் மிகவும் ஈர்க்கிறார்.


வினோத், கனிகா உட்பட மற்ற நடிகர்கள் அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.


நவநீத் சுந்தரின் இசை உணர்வுகளை திறம்பட பாராட்டுகிறது.


பாலாஜியின் ஒளிப்பதிவு அழகியல் மற்றும் கேஎஃப் படத்தின் கருப்பொருளுடன் நன்றாக இருக்கிறது.

 

ஜீ. வி பிரகாஷ் குமார் நடிக்கும் 'மெண்டல் மனதில் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஜீ. வி பிரகாஷ் குமார் நடிக்கும் 'மெண்டல் மனதில் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு செல்வராகவன் - ஜீ வி பிரகாஷ் குமார்  கூட்டணியில் உர...