Saturday, September 30, 2023

பிரபாஸை தொடர்ந்து 'கணணப்பா" படத்தில் இணைந்த மோகன் லால்!

பிரபாஸை தொடர்ந்து 'கணணப்பா" படத்தில் இணைந்த மோகன் லால்!

’கண்ணப்பா’ திரைப்படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகர்! - மக்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய தகவல்

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்த ‘கண்ணப்பா’! 
 



தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படமான ‘கண்ணப்பா’ மிகப்பெரிய பொருட்ச் செலவில்  மிக பிரமாண்டமான திரைப்படமாக உருவாக உள்ளது. இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் இந்திய அளவில் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் பான் இந்தியா ஸ்டார் நடிகர் பிரபாஸ் நடிக்கும் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது.

மேலும், படத்தின் படப்பிடிப்பு நியூசிலாந்து நாட்டில் நடைபெற இருப்பதாகவும், அதற்காக விஷ்ணு மஞ்சு தனது குழுவினருடன் நியூசிலாந்து நாட்டில் முகாமிட்டுள்ள தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்ககு அதிகரிக்க செய்தது.

இந்த நிலையில்,  படத்தின் புதிய தகவல் ஒன்றால் ரசிகர்களை பரபரப்பின் உச்சத்திற்கு அழைத்து சென்றிருக்கிறது ‘கண்ணப்பா’ திரைப்படம். ஆம், இந்திய சினிமாவில் ’தி கம்ப்ளீட் ஆக்டர்’ என்று அழைக்கப்படும் நடிகர் மோகன்லால் இப்படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

எதிர்பார்க்காத இந்த தகவலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டதை தொடர்ந்து ‘கண்ணப்பா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும், ஆர்வமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இப்படி தொடர்ந்து பல தகவல்கள் வெளியாவதால் இப்படத்தின் மீது ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்து வருவதோடு, இன்னும் என்னென்ன ஆச்சரியங்கள் படத்தில் இருக்கிறது என்பதை அறிவதற்கான தேடலில் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டார் ப்ளஷ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரை இயக்கி பாராட்டு பெற்ற இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கும் இப்படம், இந்திய சினிமா வரலாற்றில் நிலைத்து நிற்கும் ஒரு தலைசிறந்த திரை படைப்பாக உருவாகும் என்ற எதிரபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணி சர்மா மற்றும் ஸ்டீபன் தேவஸ்ஸி இரைட்டையர்கள் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர். ஒலி, ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியாக மிகப்பெரிய படமாக உருவாக உள்ள ‘கண்ணப்பா’ சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் மிக பிரமாண்டமான திரைப்படமாக உருவாக இருப்பதோடு, மக்கள் மனதில் நீங்கா இருக்கும் மிகப்பெரிய காவியமாகவும் உருவாகிறது.

Thanks and regards 
Saravanan N PRO
Haswath S  PRO

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள ராஜலட்சுமி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில்
நான் முதல்வன் திட்டத்தின்  கீழ்  வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்  சிறப்பாக நடைபெற்றது

இந்த வேலை வாய்ப்பு முகமானது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்,தமிழ்நாடு சி.ஐ.ஐ  மற்றும் இசட் எப் ஆகியவை இணைந்து நடத்தினர்

நிதி மற்றும் தொழில்நுட்ப துறை என சுமார் 140 நிறுவனங்களில் இருந்து தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை பணியமர்த்த மாணவ மாணவியர்களுக்கு  தகுதி தேர்வு நடத்தினர் இதில் சுமார் 15,000 மாணவ மாணவிகள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்

It’s a wrap up for Million Studio MS Manzoor’s ‘Weapon’ starring Sathyaraj & Vasanth Ravi*

*It’s a wrap up for Million Studio MS Manzoor’s ‘Weapon’ starring Sathyaraj & Vasanth Ravi* 

Million Studios MS Manzoor, embarking on a journey into the world of movie production with the earnest desire to create an unparalleled style of movies is elated to announce that the shooting of his upcoming project - Sathyaraj starrer ‘Weapon’, directed by Guhan Senniappan, is wrapped up. The whole crew is happy to be a part of this wonderful project, which has given them an unforgettable and great experience. 

The film features Sathyaraj as the titular character with Vasanth Ravi, Rajeev Menon, Rajeev Pillai, and Tanya Hope essaying pivotal roles. The others in the star cast include Yashika Anand, Mime Gopi,  Kaniha, Gajaraj, Syed Subhan, Baradwaj Rangan, Velu Prabhakaran, Maya Krishnan, Shiyas Kareem, Benito Franklin, Raghu Esakki & Others.

Gibran is composing the music for this film, and Prabhu Raghav is handling the cinematography. 

The film’s teaser that was recently launched has elevated the expectation levels of this film. The makers will be soon unveiling the trailer, audio, and announcement on the worldwide theatrical release. 

*Technical Crew*

Produced by Million Studio
Written And Directed By Guhan Senniappan
A Gibran Musical
DOP: Prabhu Raghav
Editor: Nash
Art: Subendar P.L
Action: Sudesh
Costume Designers: Lekha Mohan
Sound Mix: M.R. Rajakrishnan
Sound Design: M.R. Rajakrishnan
Colorist: Sree
DI Lab: Promoworks
VFX: Supervisor : Gokul
Makeup: Mohan
Stills: Vijay
Publicity Design: Dinesh Ashok
PRO: Suresh Chandra & Rekha
Production Controller: Kaanthan
Executive Producer: Rizwan.A

Prabhas and Prashanth Neel's "Salaar Part 1 – Ceasefire" Set to Illuminate Screens on December 22, 2023*

*Prabhas and Prashanth Neel's "Salaar Part 1 – Ceasefire" Set to Illuminate Screens on December 22, 2023*

The moment fans have been eagerly waiting for has finally arrived! Hombale Films, the powerhouse behind the much-anticipated film "Salaar Part 1 – Ceasefire," directed by the acclaimed Prashanth Neel and starring the charismatic Prabhas, has officially unveiled the film's release date. Get ready to mark your calendars for December 22, 2023, as this action-packed extravaganza is set to light up the big screens.

Ever since Hombale Films dropped the action-packed teaser of "Salaar Part 1 – Ceasefire," audiences have been on the edge of their seats, eagerly anticipating more from this action-packed entertainer. The teaser gave viewers a thrilling sneak peek into the world of Salaar.

In a testament to their commitment to delivering cinematic brilliance year after year, the production house also has an exciting lineup of Indian releases in the coming years, including ‘Yuva’, 'Kantara 2',’Raghu Thatha’, ‘Richard Anthony’, ‘KGF 3’, 'Salaar Part 2' and 'Tyson'.

And now, the excitement reaches new heights with the long-awaited announcement of the film's release date, coinciding with the festive season of Christmas on December 22, 2023.
To add to the anticipation, the makers have unveiled a captivating poster of "Salaar Part 1 – Ceasefire," featuring the Pan India superstar, Prabhas. As the poster revealed the release date, it sent waves of excitement through fans, promising one of the biggest cinematic experiences of the year. This film marks the historic collaboration between the visionary director of "KGF," Prashanth Neel, the iconic Baahubali superstar, Prabhas, and the prolific creators of "KGF" and "Kantara," Hombale Films.
What makes this union even more exhilarating is the pairing of the master of action, Prashanth Neel and the Rebal Star Prabhas for the first time on such an epic canvas. This synergy promises to deliver an action-packed spectacle that will leave audiences spellbound.

Hombale Films' "Salaar" not only features Prabhas but also boasts a stellar ensemble cast, including Prithviraj Sukumaran, Shruti Haasan and Jagapathi Babu. Under the visionary direction of Prashanth Neel, this cinematic extravaganza is all set to hit theaters on December 22, 2023, making it a Christmas to remember for moviegoers across the world.

Friday, September 29, 2023

குடும்பங்கள் கொண்டாடும் பேய்ப்படம், ரசிகர்கள் கொண்டாட மீண்டும் வருகிறது, அரண்மனை 4 !*

*குடும்பங்கள் கொண்டாடும் பேய்ப்படம்,  ரசிகர்கள் கொண்டாட மீண்டும் வருகிறது, அரண்மனை 4 !* 

*சுந்தர் சி இயக்கத்தில் பிளாக்பஸ்டர் வெற்றிப்படத்தின் நான்காம் பாகம் "அரண்மனை 4" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !*

*பொங்கல் வெளியீடாக தயாராகிறது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் "அரண்மனை 4" !* 

தமிழகமெங்கும் குடும்பங்களைக் குதூகலப்படுத்திய பேய் படம் அரண்மனை. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்து பாகங்கள் வெளிவந்து ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகம் விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. Benzz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்கி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளனர். 

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. ரசிகர்களுக்காக மட்டுமே படம் என்பதில் உறுதியாக இருக்கும் சுந்தர் சி இயக்கும் படங்கள், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கொண்டாடும் படி இருக்கும். அந்த வகையில் அவர் உருவாக்கிய அரண்மனை படம், தமிழில் பேய் படங்களைக் குழந்தைகளும் கொண்டாடிப் பார்க்கும் வண்ணம் மாற்றிய படமாகும். முதல் மூன்று பாகங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து,  தற்போது நான்காம் பாகம், மிகப்பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திர கூட்டணியுடன் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா,  யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், தீரஜ் விஷ்ணு ரத்தினம், S.நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன், உட்பட பெரும் எண்ணிக்கையிலான நட்சத்திரக்கூட்டம் இணைந்து நடித்துள்ளனர்.

முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் சுந்தர் சி. 2024 பொங்கல் அன்று வெளியாகவள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் நுட்ப குழு 

தயாரிப்பு - Benz Media Pvt Ltd (A.C.S அருண்குமார்) and Avni Cinemax (P) Ltd (குஷ்பு சுந்தர்)
எழுத்து இயக்கம் - சுந்தர் சி 
வசனம் - வேங்கட் ராகவன்
இசை : ஹிப்ஹாப் தமிழா 
ஒளிப்பதிவு - இசக்கி கிருஷ்ணசாமி
படத்தொகுப்பு : ஃபென்னி ஆலிவர்
கலை இயக்கம் - பொன்ராஜ் 
சண்டைப்பயிற்சி - ராஜசேகர் K
ஸ்டில்ஸ் - V.ராஜன் 
மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

Kauvery Hospital Vadapalani Launches Kauvery Heart Institute on World Heart Day

Kauvery Hospital Vadapalani Launches Kauvery Heart Institute on World Heart Day

[Chennai – September 29, 2023] – In commemoration of World Heart Day, Kauvery Hospital Vadapalani launched Kauvery Heart Institute, a state-of-the-art facility dedicated to advancing cardiovascular care in the region. The institute was launched by Thiru P K Sekar Babu, Hon’ble Minister for Hindu Religious and Charitable Endowments Department, Government of Tamil Nadu. 

The Kauvery Heart Institute, equipped with cutting-edge technology and staffed by a team of highly skilled cardiac specialists, aims to provide comprehensive cardiac care that meets the highest international standards. This institute will serve as a hub for the diagnosis, treatment, and prevention of heart-related ailments, ensuring that patients receive the best possible care from a team of experts.

The institute is equipped with the latest diagnostic equipment, including advanced cardiac MRI and CT scanners, allowing for precise and early detection of heart conditions. A dedicated catheterization lab is in place for highly experienced interventional cardiologists who are capable of performing all complex interventional cardiology procedures in addition  to  standard angioplasty and stent placement.

The Institute is also proficient in the field of complex cardiac electrophysiology interventions, and offers a sophisticated range of technology for addressing and resolving complex heart rhythm disorders.

The institute also offers a wide range of cardiac surgical interventions, including coronary artery bypass grafting (CABG), valve replacements and minimally invasive surgeries. 

The Kauvery Heart Institute at Kauvery Hospital, Vadapalani, is closely integrated with Kauvery Hospitals Chennai’s ambitious and highly accomplished Heart – Lung Transplantation Program which was recently accoladed by TRANSTAN for Best Performance In Heart and Lung Transplant for the year 2022-23.

A comprehensive cardiac rehabilitation program is available to help patients recover and regain their heart health after surgery or a cardiac event.

Apart from treating heart ailments, the department will also educate the public on prevention of heart diseases through health checkups, lifestyle modification guidance and awareness campaigns. 

Speaking on the occasion, Dr. Aravindan Selvaraj, Co-Founder & Executive Director Kauvery Hospitals said, "The launch of the Kauvery Heart Institute is a significant step forward in our mission to provide accessible, high-quality healthcare. Heart disease is a growing concern globally, and our institute aims to address this by offering a holistic approach to heart health. We are proud to bring world-class cardiac care to Vadapalani and surrounding areas. One of our centers of excellence is Cardiology and we are pleased to extend this excellence in Vadapalani, our latest addition to the Kauvery Group of Hospitals"

Speaking on the occasion, Hon’ble Minister Thiru Sekar Babu said, “The incidence of heart diseases has been on the rise and we also see the younger population suffering from heart diseases. Therefore, it is crucial to have access to advanced and right medical facilities and it is even more important to be aware of the prevention methods. Kauvery Hospital has been addressing both - treating heart diseases and creating awareness on prevention. I congratulate Kauvery Hospital for the launch of Kauvery Heart Institute at their new hospital in Vadapalani.”

In an effort to raise awareness on prevention and early diagnosis, the hospital is also organizing a free cardiac camp which offers ECG and ECHO evaluation and Consultation with a Cardiologist from 29th Sept to 1st Oct 2023. Above 300 people shall be benefiting from the camp.  

Kauvery Hospital Alwarpet hosted a series of activities at Elliots Beach Road Besant Nagar which included a 2 km walkathon and Zumba session promoting healthy lifestyle for a healthy heart. The importance of a healthy lifestyle to prevent heart diseases, and the timely intervention during cardiac emergencies were highlighted through a mime show performance. The hospital also hosted a session on Basic Life Support and AED during times of cardiac arrests. 
Over 200 people participated in the activities.

Thursday, September 28, 2023

இளமை ததும்பும் காதலோடு உருவாகும் ‘எங்கேஜ்மெண்ட்’ (Engagement) படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!


 இளமை ததும்பும் காதலோடு உருவாகும் ‘எங்கேஜ்மெண்ட்’ (Engagement) படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!


இளமை ததும்பும் காதலோடு இளசுகளை ஈர்க்கும் திரைப்படமாக உருவாகி வருகிறது ‘எங்கேஜ்மெண்ட்’. சுரம் மூவிஸ் மற்றும் ரோடியம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



ராஜு போனகானி இயக்கத்தில், ஜெயராம் தேவசமுத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘எங்கேஜ்மெண்ட்’ திரைப்படம் கூர்க், சிக்மங்களூர், மைசூர், கோவா, மும்பை, சென்னை, ஐதராபாத் மற்றும் உலகின் பல அழகிய இடங்களில் படமாக்கப்பட்டு ரசிகர்களுக்கு காட்சி விருந்து படைக்க இருக்கிறது.


ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் இறுதி வரை நடைபெற்று  தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. தயாரிப்பு தரப்பின் சிறப்பான திட்டம் மற்றும் படக்குழுவினரின் கடினமான உழைப்பே இதற்கு காரணம்.


தயாரிப்பு பணிகள் மற்றும் படப்பிடிப்பின் திட்டமிடல் ஆகியவற்றை மிக கவனமாக கையாண்டதோடு, திட்டமிட்டபடி படப்பிடிப்பை தொடங்கி எந்தவித இடையூறுகளும் இன்றி சரியான நேரத்தில் முழு படப்பிடிப்பையும் வெற்றிகரமாக முடித்ததற்கு இயக்குநர் ராஜு போனகானியை தயாரிப்பாளர் ஜெயராம் தேவசமுத்ரா பாராட்டியதோடு, படத்தின் பின்னணி வேலைகளும் இதே விறுவிறுப்புடன் நடக்க படக்குழுவினருக்கு உற்சாகமளித்துள்ளார்.


படத்தின் நாயகனாக நடித்திருக்கும் பிரவீர் ஷெட்டியின் நடிப்பு பார்வையாளர்களை மயக்கும் வகையில் இருப்பதோடு, கதாநாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா கவுடாவின் இளமை மற்றும் நடிப்பு ரசிகர்களை முழுமையாக ஆக்கிரமிக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும், அவர்களின் கதாபாத்திரமும் பேசப்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அவர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தெலுங்கு சினிமாவின் அனுபவமிக்க திரைக்கதை எழுத்தாளரான இயக்குநர் ராஜு போனகானி, அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற கதையை இளமை ததும்பும் காதலோடும், புதிரான கதைக்களத்துடனும் ‘எங்கேஜ்மெண்ட்’ படத்தை இயக்கியிருக்கிறார்.


குறிப்பிட்ட மொழி பேசுபவர்களை மட்டும் இன்றி உலக மக்கள் அனைவரையும் கவரக்கூடிய கதை என்பதால் இப்படத்தை பான் இந்தியா திரைப்படமாக பல மொழிகளில் படக்குழு வெளியிடுகிறது.


நடிகர்கள் :


பிரவீர் ஷெட்டி, ஐஸ்வர்யா கவுடா, ராஜகோபால் ஐயர், பால்ராஜ் வாடி, பாவனா, ரஜனி ஸ்ரீகலா, ஷரத் வர்மா, தீப்தி குப்தா, சுஜய் ராம், டிஜே மற்றும் பலர்.


தொழில்நுட்ப கலைஞர்கள்:


நிறுவனம் : ரோடியம் எண்டர்டெயின்மெண்ட் & சுரம் மூவிஸ்

இயக்குநர் : ராஜு போனகானி

தயாரிப்பாளர் : ஜெயராம் தேவசமுத்திரம்

இணை தயாரிப்பாளர்கள் : லட்சுமிகாந்த்.என்.ஆர், நாராயண சுவாமி.எஸ்

ஒளிப்பதிவு : வெங்கட் மன்னம்

இசை : திலீப் பண்டாரி, ரஜத் கோஷ்

படத்தொகுப்பு : ரவி கொண்டவீட்டி

இணை இயக்குநர் : நாகராஜு தேசாவத்

நடன இயக்குநர் : ராஜ் பைடே

ஸ்டண்ட் இயக்குநர் : டிராகன் பிரகாஷ்

கலை : வெங்கடேஷ் ஆரே

வடிவமைப்பாளர் : லக்கி

பி.ஆர்.ஓ : ஹஷ்வத், சரவணன்

இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும்  “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! 

விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தை தயாரித்து வெற்றிகண்ட Chendur film international தங்களது 7வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. D.ராஜா வழங்கும், T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபர திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” படத்தின் முதல் பார்வையை படக்குழு மோஷன் போஸ்ட்டராக வெளியிடப்பட்டுள்ளது. 

முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக்,  மற்றும் விஜய் ஆண்டனி தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  

படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய தனா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி தன் முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். 

ஹிட்லர் திரைப்படத்தை ஆக்‌ஷன் திரில்லர் வகையில் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் தனா. பரபர திருப்பங்களுடன் பறக்கும் திரைக்கதையில், ஒரு அழகான காதலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அனைவரும் ரசிக்கும் வண்ணம் ஒரு மாறுபட்ட அனுபவமாக இப்படம் இருக்கும்.  

ஹிட்லர் ஒரு மனிதனாக இருக்கலாம் ஆனால் இன்று வரலாற்றில் அந்தப் பெயர் சர்வாதிகாரத்தின் அடையாளம். அதன் காரணமாகவே இப்படத்திற்கு ஹிட்லர் என பெயரிடப்பட்டுள்ளது. 

இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு  நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் கலக்கியுள்ளார். நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 

இசையமைப்பாளர்  விவேக் மெர்வின் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை கன்னடத்தின் வெற்றிப் படமான மப்டி படத்தின் ஒளிப்பதிவாளர் நவீன்குமார் செய்துள்ளார். கலை இயக்கத்தை உதயகுமார் செய்துள்ளார். Chendur film international  சார்பில் T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார், பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். 

படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

பிரபுதேவா நடிக்கும் 'முசாசி' படக்குழுவினரை சந்தித்த இலங்கை பிரதமர்*

*'முசாசி' படக்குழுவினரைப் பாராட்டிய  இலங்கை பிரதமர்*

*பிரபுதேவா நடிக்கும் 'முசாசி' படக்குழுவினரை சந்தித்த இலங்கை பிரதமர்*

இலங்கையின் படப்பிடிப்பிற்காக முகாமிட்டிருக்கும் பிரபுதேவாவின் 'முசாசி' படக் குழுவினரை அந்நாட்டின் பிரதமரான திரு. தினேஷ் குணவர்தன பிரத்யேக அழைப்பு விடுத்து, சந்தித்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார். 

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும் , நடன இயக்குநருமான பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'முசாசி. அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் பிரபுதேவா கம்பீரமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இவருடன் விடிவி கணேஷ், ஜான் விஜய், மாஸ்டர் மகேந்திரன், பினு பப்பு, நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், ஜார்ஜ் மரியான், தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி  இசையமைக்கிறார்.‌ ஆக்ஷன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பிற்காக பிரபுதேவா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கையில் முகாமிட்டு இருக்கிறார்கள். படக்குழுவினரை கௌரவப்படுத்துவதற்காக அந்நாட்டின் பிரதமரான திரு. தினேஷ் குணவர்தன பிரத்யேக அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பினை ஏற்ற படக் குழுவினர் அவர் நேரில் சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றனர். இது தொடர்பான புகைப்படத்தை படக் குழுவினர் பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறார்கள்.

'முசாசி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாகவும், விரைவில் இப்படத்தின் அப்டேட் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

Iraivan - திரைவிமர்சனம்

சைக்கோ கில்லர் த்ரில்லர்கள் பெரிய அளவில் ஆராயப்பட்டு, சமீபத்திய போர் தோழில் கூட பெரிய அளவில் வேலை செய்து வருகிறது. அதே வழியில், ஜெயம் ரவியின் இறைவன் ஒரு சைக்கோபாத் த்ரில்லராக வருகிறது, அங்கு ஒரு போலீஸ்காரர் நகரத்தில் இளம் பெண்களைக் கடத்திச் செல்லும் கொலையாளியைத் தேடிச் செல்கிறார்.


இயக்குனர் அகமது முழுக்க முழுக்க த்ரில்லராக படத்தை வழங்க முயற்சித்துள்ளார். படத்தில் வரும் வன்முறைகள் பச்சையாக சித்தரிக்கப்பட்டுள்ளது.


முதல் பாதியில் பூனை மற்றும் எலி விளையாட்டு சுவாரஸ்யமாகவும், இரண்டாம் பாதியிலும் வேகத்தை தக்கவைத்துக் கொள்கிறது.


ஜெயம் ரவியும், ராகுல் போஸும் அந்தந்த பாத்திரங்களில் தங்களின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஜெயம் ரவி இரக்கமற்ற போலீஸ் வேடத்தில் பொருந்துகிறார்.


ராகுல் போஸின் உடல் மொழி பார்வையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. கடைசி சில நிமிடங்கள் முழுவதுமாக கிஷன் தாஸுக்கு சொந்தமானது.


நயன்தாரா, சார்லி, பக்ஸ், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவின் BGM காட்சிகளுக்கு மேலும் தீவிரம் சேர்க்கிறது.


வேதாந்தத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. மற்ற தொழில்நுட்ப அம்சங்கள் கடந்து செல்லக்கூடியவை.

 

சந்திரமுகி 2 - திரைவிமர்சனம்

இயக்குனர் P. வாசு தனது மறக்கமுடியாத சந்திரமுகிக்கு இரண்டாம் பாகத்துடன் திரும்புகிறார், அனைத்து புதிய நடிகர்களும் அனைத்து பார்வையாளர்களுக்கும் ஒரு ஈர்க்கக்கூடிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியைக் கொண்டு வருகிறார்கள்.


சந்திரமுகி 2 17 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பாகம் நிறுத்தப்பட்ட பிறகு தொடங்குகிறது, மேலும் சந்திரமுகியால் மீண்டும் ஆட்கொள்ளப்பட்ட ஒரு குடும்பத்துடன் அதே பங்களாவில் பாண்டியன் (ராகவா லாரன்ஸ்) என்ற புதிய கதாபாத்திரத்தை கொண்டு வருகிறார். முதல் பாதி வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணைப் பிடிக்க பேய் எப்படித் திரும்புகிறது என்பதைப் பின்தொடர்கிறது, இரண்டாம் பாதி முழுப் பிரச்சனையும் எப்படித் தீர்க்கப்படுகிறது என்பதைப் பற்றியது. ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் சம்பந்தப்பட்ட ஃப்ளாஷ்பேக் பகுதி படத்தின் சிறப்பம்சமாகும், மேலும் இது நிச்சயமாக நடவடிக்கைகளில் ஆர்வத்தை ஈர்க்கிறது.


ராகவா லாரன்ஸ், ரஜினியம்சங்கள் சட்டத்தில் இருப்பதை அசைப்பது கடினமாக இருந்தாலும், நன்றாக வேலை செய்கிறார். ஃப்ளாஷ்பேக் பகுதி பார்வையாளர்களுக்கு ரசிக்கக்கூடிய ஒரு வித்தியாசமான மண்டலத்தில் அவரைக் கொண்டுள்ளது, மேலும் அவர் படத்தில் சிறப்பாகச் செயல்படும் கங்கனா ரணாவத்துடன் ஒரு நல்ல திரைப் போட்டியை உருவாக்குகிறார். மற்ற நடிகர்கள் சிறப்பாக வேலை செய்கிறார்கள், குறிப்பாக ராதிகா மற்றும் வடிவேலு ஆகியோர் நல்ல நடிப்பைக் கொண்டு வருகிறார்கள்.


தொழில்நுட்ப ரீதியாக, சந்திரமுகி 2 கண்ணியமானது மற்றும் ஒளிப்பதிவு அல்லது இசை பற்றி எழுத எதுவும் இல்லை.


சந்திரமுகி2 முதல் பாகத்துடன் ஒப்பிடப்படாவிட்டாலும் ரசிகர்களுக்கு உகந்த தொடர்ச்சி.

 

Wednesday, September 27, 2023

வாழ்வு தொடங்குமிடம் நீதானே - திரைவிமர்சனம்

"வாழ்வு தொடங்குமிடம் நீதானே" ஜாகிரா மற்றும் வினோதா கதாபாத்திரங்கள் மூலம் காதல், சமூக நெறிகள் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை ஆகியவற்றின் கருப்பொருள்களை ஆராயும் ஒரு புதிரான திரைப்படமாக ஒலிக்கிறது. படம் ஷார்ட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட உள்ளது, இது பரந்த பார்வையாளர்களைச் சென்றடையும், மேலும் அக்டோபர் 6 ஆம் தேதி தூண்டுகிறது.


வெவ்வேறு மதப் பின்னணியில் இருந்து வந்து அசாதாரண சூழ்நிலையில் சந்திக்கும் ஜாகிரா மற்றும் வினோதா ஆகிய இரண்டு முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி படம் சுழல்கிறது, சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் கலாச்சார வேறுபாடுகள் இருந்தபோதிலும் அவர்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். தங்கள் காதலை உடனடியாக ஏற்றுக்கொள்ளாத சமூகத்தில் அவர்கள் தங்கள் உறவை வழிநடத்தும்போது அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தடைகளை கதை ஆராய்கிறது.



கலாசார மற்றும் மத எல்லைகளைத் தாண்டிய காதல் என்ற கருப்பொருளை படம் ஆராய்வது போல் தெரிகிறது. இரண்டு நபர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல் காதல் மலரலாம் என்ற கருத்தை இது எடுத்துக்காட்டுகிறது.



சகிரா மற்றும் வினோதாவின் உறவை சமூகம் எப்படி உணருகிறது மற்றும் எதிர்வினையாற்றுகிறது என்பதை கதைக்களம் ஆராய்கிறது. அவர்களின் காதல் வழக்கத்திற்கு மாறானதாகக் கருதப்படுவதால் அவர்கள் எதிர்கொள்ளும் தப்பெண்ணங்கள் மற்றும் சவால்களை இது வெளிச்சம் போட்டுக் காட்டலாம். வெவ்வேறு பின்னணியில் இருந்து இரண்டு பேர் ஒன்று சேரும்போது.


ஜாகிரா மற்றும் வினோதாவாக நடித்துள்ள நடிகைகள், ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் அவர்களின் நடிப்பிற்காக பாராட்டப்படுகிறார்கள். அவர்களின் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் உணர்ச்சிகள் மற்றும் சவால்களை அவர்கள் சித்தரிப்பது படத்திற்கு ஆழத்தையும் நம்பகத்தன்மையையும் சேர்க்கும்.


"வாழ்வு தொடங்குமிடம் நீதானே" தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது அல்ல, மாறாக வரவிருக்கும் தலைமுறையின் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திரைப்படம் என்று வர்ணிக்கப்படுகிறது. இது சமகால சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய உரையாடலைத் தொடங்குகிறது, பலதரப்பட்ட சமுதாயத்தில் காதல் மற்றும் உறவுகள் பற்றிய புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறது.

 

சித்தா - திரைவிமர்சனம்

இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் ஒரு வலுவான, ஆணி கடிக்கும் த்ரில்லருடன் நன்றாகவும் உண்மையாகவும் திரும்பி வந்துள்ளார், இது உணர்ச்சி ரீதியில் கடினமான நாடகமாகும். சித்தா, பல கட்டங்களில் நம்மைத் தொண்டையைப் பிடித்து இழுத்து, நம்மை அசௌகரியத்திற்கு உள்ளாக்கி, அது முன்னோக்கிக் கொண்டுவரும் உள்ளடக்கம் மற்றும் திரையில் ஏற்படும் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டும் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட திரைப்படம்.


சித்தாவின் கதை, அரசாங்க வேலையில் இருக்கும் ஈஸ்வரன் (சித்தார்த்), அவன் அன்னி மற்றும் அவளது மகள் சேட்டையுடன் (அருமையான சஹஸ்ரா) தங்கியிருக்கும் கதை. ஈஸ்வரனும் சேட்டையும் ஒரு தந்தை-மகள் கலவையைப் போன்ற அற்புதமான உறவைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இருப்பினும், ஈஸ்வரனின் அனைத்து முடிவுகளும் அவரை சரியான வழியில் முன்னெடுத்துச் செல்வதில்லை. சித்தாவின் முதல் படம் ஆரம்பத்தில் அதன் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதற்கும் அவர்களின் பணிப் படைகளை நிறுவுவதற்கும் நேரம் எடுக்கும், அதன் பிறகு அது மெதுவாக ஒரு சங்கடமான காலாண்டில் சறுக்குகிறது, அங்கு படம் அழகாகத் தொடங்குகிறது. அதிலிருந்து முற்றிலும் எந்தத் தடுமாற்றமும் இல்லை, ஏனெனில் படம் நமக்குக் கவனிக்க வேண்டிய ஒன்றைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது, மேலும் திரையில் நடக்கும் சில விஷயங்களைக் கேள்வி கேட்க வைக்கிறது. எஸ்.யு.அருண்குமார் சில ஸ்டீரியோடைப்களை உடைத்து, தனது கதாபாத்திரங்களிலிருந்து உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தி அவற்றை வெற்றிகரமாக பார்வையாளர்களுக்கு மாற்றுகிறார்.


முதல் பாதி நன்றாக இருப்பதாக நீங்கள் நினைத்திருந்தால், இரண்டாம் பாதி இன்னும் சிறப்பாக உள்ளது, இது பல ஆணி கடித்தல் காட்சிகளில் அடித்து நொறுக்குகிறது, இது படத்திற்கு பெரிய பிளஸ் பாயிண்ட்களாகும். பெரிய பிழைகளுக்கு இடமளிக்காத வகையில், சிறப்பான திரைக்கதையின் மூலம் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, உணர்ச்சிவசப்படுவதைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டு முன்னேறிச் செல்கிறது இந்தத் திரைப்படம். சித்தா நிச்சயமாக அதன் மையத்தை திறந்த மற்றும் தடையற்ற முறையில் கையாளும் விதத்தை முக்கியமாக கவனிக்க வேண்டும்.


சித்தார்த் இப்படத்தில் முற்றிலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துகிறார், தன்னை முற்றிலும் புதிய வடிவில் காட்டுகிறார். அவரை சித்தார்த் ஆகப் பார்ப்பது கடினம், அவரை ஈஸ்வரன் என்ற கதாபாத்திரமாகவே பார்க்கிறோம், அதுதான் இயக்குநர் எஸ்.யு.அருண்குமாரின் மாபெரும் வெற்றி.


நிமிஷா சஜயன் தனது தமிழ் அறிமுகத்தில் ஒரு திடமான பாத்திரத்தைப் பெறுகிறார், மேலும் அதை டிக்கு ஏற்றார். இரண்டாம் பாதியில் அவரது வசனங்கள் நிச்சயமாக நிறைய கைதட்டல்களைப் பெறும். குறிப்பாக சஹஸ்ரா என்ற இரு குழந்தைகளின் நடிப்பால் படம் பெரிய அளவில் பயனடைகிறது. இயன்றவரை புதிய நடிகர்களைத் தேர்ந்தெடுத்து, படத்தில் யதார்த்தத்தைக் குறைத்திருக்கும் நன்கு அறியப்பட்ட முகங்களிலிருந்து விலகி இருப்பதற்குக் கிரெடிட் சேர வேண்டும்.


டெக்னிக்கலாக சித்தா அபாரம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை ஆகிய துறைகளில் பெரிய குறை எதுவும் இல்லை. விஷால் சந்திரசேகரின் பிஜிஎம் மற்றும் திபு நினன் தாமஸின் பாடல்கள் மொத்தத்தில் சிறப்பாக உள்ளது.


சித்தாவின் இறுதி 30 நிமிடங்கள் சற்று விவாதத்திற்குரியதாக இருக்கலாம், ஏனெனில் குழு புதிதாக ஒன்றை முயற்சித்துள்ளது, ஆனால் அது இந்த ஆண்டு நாம் பார்த்த சிறந்த படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்ற உண்மையை எடுத்துக் கொள்ளவில்லை.

 

Tuesday, September 26, 2023

The journey of a single shot’ gives a glimpse into the massive prep behind the action scenes of Jawan! The hardwork it takes to get that one great action shot!

*The journey of a single shot’ gives a glimpse into the massive prep behind the action scenes of Jawan! The hardwork it takes to get that one great action shot!*

"The Journey of a Single Shot" takes you deep into the heart-pounding world of high-octane action. Ever wondered what it takes to capture that one electrifying moment on screen? Well, brace yourselves, because 'Jawan' is about to spill the beans!

The mastermind behind this spectacle is none other than Hollywood Action Maestro, Spiro Razatos. You've seen his jaw-dropping work in Hollywood blockbusters like "The Fast and the Furious," "Captain America," "Teenage Mutant Ninja Turtles," and now even in the blockbuster JAWAN.

In this exclusive behind the scenes video released by the  makers, Spiro Razatos takes the helm, orchestrating the action with the precision of a maestro. Witness the meticulous planning and unyielding dedication that went into crafting a single shot of a mind-blowing action sequence. It's a testament to the incredible effort that goes into making every frame count in 'Jawan.'

'Jawan' isn't just a movie; it's an adrenaline-pumping experience that will keep you on the edge of your seat. With everyones outstanding performance and the team's unwavering commitment to delivering pulse-pounding action, 'Jawan' is currently breaking multiple records making box office history globally.

'Jawan' is a Red Chillies Entertainment presentation directed by Atlee, produced by Gauri Khan, and co-produced by Gaurav Verma. The film was released worldwide in theatres on September 7th, 2023, in Hindi, Tamil, and Telugu.


விக்ரம் பிரபுவிடம் தான் உரிமை எடுத்து கேட்க முடியும்” ; இறுகப்பற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

*“ஆணின் அகம்பாவத்திற்கும் பெண்ணின் திமிருக்கும் சரியான சம்பட்டி அடி விழும்” ; நம்பிக்கை தெரிவித்த பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா*

*“நான் என்ன சூர்யாவா ? விக்ரமா ?” ; இறுகப்பற்று படத்திற்காக ரிஸ்க் எடுத்த நடிகை அபர்ணதி*  

*“என்னையே நான் புரிந்து கொள்ள இறுகப்பற்று படம் உதவி இருக்கிறது” ; விதார்த் நெகிழ்ச்சி*

*“விக்ரம் பிரபுவிடம் தான் உரிமை எடுத்து கேட்க முடியும்” ; இறுகப்பற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு*

*“எல்லா நடிகர்களுமே பிரகாசிக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்” ; இறுகப்பற்று இயக்குனருக்கு ஸ்ரத்தா ஸ்ரீநாத் பாராட்டு*

*“சின்ன படங்கள் தான் சினிமாவின் முதுகெலும்பு” ; தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு* 

*“என் மனைவிக்கு நான் தரும் பிறந்தநாள் பரிசு தான் இறுகப்பற்று” ; இரட்டிப்பு மகிழ்ச்சியில் விக்ரம் பிரபு*

*“நான் இனி அருவா, கத்தி எடுக்கணுமா வேண்டாமா ?”; இறுகப்பற்று இயக்குநர் யுவராஜ் தயாளன் ஓபன் டாக்*

மாயா, மாநகரம், மான்ஸ்டர், டாணாக்காரன் என ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘இறுகப்பற்று’. 
வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கியுள்ளார். 

விக்ரம் பிரபு,  விதார்த்,  ஸ்ரீ,  ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் இசைக்கு ஜஸ்டின் பிரகாரன், ஒளிப்பதிவிற்கு கோகுல் பினாய், படத்தொகுப்பு மணிகண்ட பாலாஜி, பாடல்கள் கார்த்திக் நேத்தா என பக்கபலமான தொழில்நுட்ப கூட்டணியும் இணைந்து கைகோர்த்துள்ளனர்.

வரும் அக்-6ஆம் தேதி இப்படம் உலகெங்கும் ரிலீஸாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து இறுகப்பற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது, “இன்றைக்கு உலகமெங்கும் ‘மைய குடும்ப உறவு முறை’ தான் இருக்கிறது. கூட்டமாக இருந்தபோது வராத சிக்கல் இப்போது வெடித்திருக்கிறது. நவீன வாழ்க்கையில் கணவன், மனைவி பிரச்சனை நரக வேதனையாக இருக்கிறது. அந்த சிக்கலை ஆணித்தரமாக அலசும் படம் தான் இந்த ‘இறுகப்பற்று’. ஆண், பெண் இருவருக்குமான ஈகோ தான் இதற்கு காரணம். நான் படம் பார்த்து விட்டேன். நிறைய இடங்களில் கண்கலங்கினேன். படம் பார்க்கும்போது ஒரு பயமும் வந்தது. காரணம் இப்போதுதான் என்னுடைய திருமண வாழ்க்கையே ஆரம்பித்திருக்கிறது. இந்த படம் வெளியாகும்போது ஆணின் அகம்பாவத்திற்கும் பெண்ணின் திமிருக்கும் சரியான சம்பட்டி அடி விழும்” என்றார். 

படத்தொகுப்பாளர் மணிகண்ட பாலாஜி பேசும்போது, “ஸ்கிரிப்ட்டில் நன்றாக இருக்கும் விஷயங்களை சினிமாவில் சொல்லும்போது சில நேரங்களில் அது பார்வையாளர்களிடம் சரியாக ரீசாகாமல் போய்விடும். ஆனால் இயக்குநர் யுவராஜ் அதை தெளிவாக கையாண்டு திரையில் கொண்டு வந்துள்ளார். படத்தில் நடித்தவர்களின் காட்சிகளை வெட்டுவதற்கு எனக்கு தயக்கமாக இருந்தது. அந்த அளவுக்கு அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். கணவன், மனைவியாக படம் பார்க்க வருபவர்கள் படம் முடிந்து போகும்போது தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டுவந்து விட்டுதான் வீட்டுக்கு செல்வார்கள்: என்றார்.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் பேசும்போது, “இயக்குநர் யுவராஜுடன் முதல் சந்திப்பு நிகழ்ந்து, அவரிடம் கதை கேட்டதுமே இவருக்கும் நமக்கும் செட்டே ஆகாது என்கிற எண்ணம் தான் தோன்றியது. ஆனால் இரண்டாவது சந்திப்பில் இருந்து அது மாறியது. அவர் ஒரு குழந்தை மாதிரி. விக்ரம் பிரபு சின்னச்சின்ன கியூட் எக்ஸ்பிரஷன்களால் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். விதார்த் அபர்ணதி ஜோடியுடன் எல்லாரும் தங்களை எளிதாக தொடர்புபடுத்தி பார்பார்கள். குறிப்பாக அபர்ணதி இந்த படத்தில் கடுமையான உழைப்பை கொடுத்துள்ளார் படம் பார்ப்பவர்களுக்கு ஏதோ ஒரு இடத்தில் ஒரு சொட்டு கண்ணீராவது வந்து விடும்” என்றார்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசும்போது, “ஒளிப்பதிவாளர் கோகுல் இவ்வளவு பேசுவாரா என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.. அந்த அளவுக்கு படம் அவரை ஈர்த்திருக்கிறது. எனக்கும் இப்போதுதான் திருமணம் நடந்தது. எனக்கு இந்த படம் ஒரு நல்ல டீச்சர் மாதிரி என்று சொல்வேன்.. அதேசமயம் ஒரு பிரச்சாரமாக இது இருக்காது. ஆனால் படம் முடிந்து செல்லும்போது எல்லோரும் ஒரு விஷயத்தை எடுத்துச் செல்வீர்கள் என்பது மட்டும் உறுதி” என்றார்.

நடிகை அபர்ணதி பேசும்போது, “தேன் படத்தை பார்த்து விட்டுத்தான் இந்த படத்தில் நடிக்க என்னை அழைத்தார்கள். இயக்குநர் யுவராஜ் முதலில் ஸ்கிரிப்ட் கொடுத்து படித்துப் பார்க்கச் சொன்னார். படித்துவிட்டு நன்றாக இருக்கிறது என கூறினேன். அடுத்த நிமிடமே இந்த படத்திற்காக எனது உடல் எடையை கூட்ட வேண்டும் என்று கூறினார். இது என்ன சாதாரணம் தானே என நினைத்து உடல் எடையை கூட்ட ஆரம்பித்தாலும் மூன்று மாதம் ஆகியும் கூட என்னால் அவர் சொன்ன அளவிற்கு எடையை கூட்ட முடியவில்லை. கிட்டத்தட்ட இந்த படத்திற்கு நான் செட்டாக மாட்டேன் என்றே சொல்லிவிட்டார்கள். அந்த சமயத்தில் தான் ஒரு சரியான டயட்டீசியனை விதார்த் எனக்கு கைகாட்டினார். அவரது ஆலோசனையை கடைபிடித்து எடையை கூட்டினேன். காலையில் துவங்கி எப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருந்தேன். அதற்கே அதிக பட்ஜெட் ஆனது. ஒரு கட்டத்தில் சாப்பிடவே பிடிக்காமல் போய்விட்டது. நான் என்ன சூர்யாவா ? விக்ரமா ? எடையை கூட்டி குறைப்பதற்கு.. ஆனாலும் இதை ஒரு சேலஞ்சாக எடுத்து பண்ணினேன். இந்த படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்றால் அதற்கு விதார்த்தம் தான் காரணம். பார்க்க பர்கர் மாதிரி இருக்கிறேனே, ஆனால் ஸ்கிரீனில் காட்டமாட்டேன் என்கிறார்களே என நினைத்து ஆர்வமுடன் ஸ்பாட்டுக்கு போனால் ஒளிப்பதிவாளர் கோகுல் வேறு மாதிரி என்னை காட்டிவிடுவார். இந்த படத்தில் நடித்தது எனக்கு பெருமை. நிச்சயமாக இந்த படம் என்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும். இந்த படம் துவங்கியதிலிருந்து அந்த தாக்கத்திலிருந்து வெளியே வர ஒன்றை வருடம் ஆனது. இடையில் விளம்பர படம், ஆல்பம் என தேடி வந்த சில வாய்ப்புகளையும் இதனால் மிஸ் செய்தேன்” என்று கூறினார்.

நடிகர் விதார்த் பேசும்போது, “இந்த நிகழ்ச்சிக்கு கிளம்பும்போதே, ‘கரெக்டா பேசு’ என என் மனைவி சொல்லித்தான் அனுப்பி வைத்தார். என் வீட்டு சமையலறையில் பெரும்பாலும் ஜஸ்டின் பிரபாகரன் பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டிருக்கும். என் பாட்டும் அங்கே ஒலிக்காதா என்கிற ஒரு ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. இப்போது இந்த படத்தின் மூலம் அதை நிறைவேறியுள்ளது. நானும் விக்ரம் பிரபுவும் ஒரே இடத்தில் இருந்து அறிமுகமானவர்கள் தான். இந்த படத்தில் இப்போது இணைந்து நடித்துள்ளோம் என்பதில் மகிழ்ச்சி. அபர்ணதிக்கு பெரிய உதவி எல்லாம் நான் செய்யவில்லை. கைகாட்டும் வேலை மட்டும்தான் என்னுடையது. மற்றபடி உழைப்பு அவருடையது தான். எனது திருமண பத்திரிகையை எல்லோருக்கும் கொடுத்தபோது, பலரும் திருமண வாழ்க்கை குறித்து அறிவுரை சொன்னது பயமாக இருந்தது. ஆனால் நான் பயந்தது போல தான் நடந்தது. ஆனால் யாரிடம் போய் கேட்டாலும் அவர்களும் அதையே தான் சொன்னார்கள். அந்த சமயத்தில் தான் யுவராஜ் இந்தக் கதையை என்னிடம் சொன்னார். நான் எவ்வளவோ படங்களை என்னை அறியாமலேயே கூட சில காரணங்களால் மிஸ் பண்ணியிருக்கிறேன். ஆனால் இந்த படத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என நினைத்தேன். இப்படி ஒரு படத்தில் நானும் இருக்க வேண்டும் என விரும்பினேன். இந்த படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு, “என்னை மனதில் வைத்து தான் பேசினாயா” என என் மனைவி கேட்டார். மனைவி சொல்வதை புரிந்து கொள்வதை விட, அது தப்பு என சொல்வதில் தான் குறியாக இருந்தேன். இப்போது மாறிவிட்டேன். மொத்தத்தில் என்னை நான் புரிந்து கொள்ள இந்த படம் உதவி இருக்கிறது” என்று கூறினார். 

நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் பேசும்போது, “தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு இந்தப் படத்தில் நடிக்க அழைத்தபோது, இது என் திரையுலக பயணத்தில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என எனக்கு தெரிந்திருக்கவில்லை. இயக்குநர் யுவராஜ் கிட்டத்தட்ட 4 மணி நேரம் இந்த படத்தின் கதையை விவரித்தார். இதில் நடித்துள்ள எல்லா நடிகர்களுமே பிரகாசிக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். எல்லோருமே கடின உழைப்பை கொடுத்துள்ளோம். இந்த படத்தில் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்” என்று கூறினார்.

நடிகர் விக்ரம் பிரபு பேசும்போது, “இந்த படம் எல்லாருக்குமே ஸ்பெஷல். எஸ்ஆர் பிரபு உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் கேரக்டர் இருக்கு என்று என்னை அழைத்தபோது, அவரே இப்படி சொன்னால் நிச்சயமாக அதில் நடித்தே ஆக வேண்டும் என்கிற ஆர்வம் வந்துவிட்டது. 15 நிமிடம் கதை கேட்டதுமே உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க எல்லா நடிகர்களும் விரும்புவார்கள். முழு கதையையும் நான் படிக்கவில்லை.. அதேபோல இன்னும் படமும் பார்க்கவில்லை.. ஜஸ்டின் பிரபாகரன் பாடல் உருவாக்கும் காட்சியை நேரில் பார்த்து பிரமித்தேன். ஒளிப்பதிவாளர் கோகுல் படப்பிடிப்பு தளத்தில் அதிகம் பேசாமலேயே அனைவரிடமும் வேலை வாங்கியதை பார்த்து ஆச்சரியமாக இருந்தது. அக்டோபர் எனக்கு ரொம்ப பிடித்த மாதம். காரணம் என் தாத்தாவின் (நடிகர் திலகம் சிவாஜி கணேசன்) பிறந்தநாள் அக்டோபர் 1ஆம் தேதி தான் வருகிறது. என் மனைவியின் பிறந்த நாளும் அக்டோபர் 6ஆம் தேதி தான். இந்த படமும் அக்டோபர் 6ல் தான் வெளியாகிறது. அதனால் உனக்காகத்தான் இந்த படமே என்று சொல்லி அவரை குளிர்வித்து விட்டேன். என்னை ஒரு நடிகராக தொடர்ந்து நிலைநிறுத்த உதவி வரும் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவுக்கு எனது நன்றி” என்று கூறினார்.

இயக்குநர் யுவராஜ் தயாளன் பேசும்போது, “இந்த படத்தின் புரமோஷனுக்காக நாங்கள் வெளியிட்ட 8 நிமிட ‘கேப்’ வீடியோ பற்றி பேசுவதா, இல்லை என்னுடைய திரையுலக பயணத்தில் விழுந்த 8 வருட ‘கேப்’ பற்றி பேசுவதா என்கிற எண்ணம் தான் இங்கே வந்ததில் இருந்தே ஓடிக்கொண்டிருந்தது. எட்டு வருடத்திற்கு முன்பு என்னுடைய முந்தைய படத்தின் பத்திரிகையாளர் காட்சி இதே இடத்தில் நடந்தபோது இங்கிருந்து கிளம்பி போனவன் இப்போதுதான் மீண்டும் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். இதற்கு முன்பு காமெடி படங்கள் தான் பண்ண வேண்டும் என நினைத்து நான் அந்த படங்களை இயக்கவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை படத்தின் ஹீரோவுக்காக பயன்படுத்திக் கொண்டேன். இன்று கூட வடிவேலுவிடம் பேசிவிட்டு தான் வந்தேன். 

என்னை மாதிரி ஒரு தோல்வி பட இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு வெற்றியை பரிசாக கொடுத்துவிட்டு அவரைப் பற்றி நிறைய பேசுவேன். சினிமாவை விட்டு விலகி வெகு தூரம் போனாலும் ஒரு நல்ல படத்தை எப்படியாவது கொடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து முயற்சி செய்து வந்தேன். அந்த சமயத்தில் தான் என் நண்பர் கமல்நாத் மூலமாக தயாரிப்பாளருடன் சந்திப்பு ஏற்பட்டது. பல இடங்களில் கதை சொல்லப்போய் கசப்பான அனுபவம் நிறைய ஏற்பட்டிருந்தது. ஆனால் இங்கே எனது முந்தைய தோல்விகளை பார்க்காமல், அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று மட்டுமே கேட்டு தொடர்ந்து என்னை ஊக்கம் கொடுத்து இந்த படத்தின் கதையை உருவாக்க வைத்தார்கள். ஆரம்பத்தில் எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் உங்களிடம் ஒரு நெருப்பு இருக்கிறது என்று அவர்கள் சொன்னபோது, நானே சாம்பலாகி விட்டேன் என்னிடம் என்ன நெருப்பு இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் ஒரு சின்ன கங்கு ஒன்றை என்னுள் பார்த்தவர்கள் அதை பெரிய நெருப்பாக மாற்றினார்கள். இந்தப் படத்தின் மூலம் எனது நேர்மையை நான் உங்களுக்கு காட்டுகிறேன். இதற்கு பிறகு நான் அருவா, கத்தி எடுக்கணுமா வேண்டாமா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பேசும்போது, “பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் உருவாக்கும் ஒவ்வொரு படமும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறோம். யுவராஜ் மென்மையாக பேசக்கூடியவர். ஒரு குழந்தை மாதிரி என்று சொல்லலாம். மல்டி ஸ்டார் படம் தயாரிப்பது என்பது ஒரு தயாரிப்பாளருக்கு கஷ்டமான விஷயம். யாருடைய மனமும் கோணாமல் படத்தை எடுக்க வேண்டும். அதை இறுகப்பற்று படத்தில் அழகாக செய்து இருக்கிறார் இயக்குநர் யுவராஜ். இந்த படம் பற்றி பெரிதாக வெளியே யாருக்கும் தெரியாத நிலையில் என்னை பார்க்கும் திரை உலகை சேர்ந்த பலரும் இந்த படம் நன்றாக வந்திருப்பதாக கேள்விப்பட்டோமே என்று பாராட்டினார்கள். அப்புறம் தான் அதன் பின்னணியில் எடிட்டர் மணிகண்டன் பாலாஜி இருக்கிறார் என்பது தெரிய வந்தது. 

இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அவரிடம் தான் நான் உரிமையாக கேட்க முடியும். படத்தில் ஸ்ரத்தாவின் கதாபாத்திரம் அவருக்கெனன அளவெடுத்து தைத்தது போல கச்சிதமாக இருந்தது. என்ன சம்பளம் கொடுத்தாலும் சரி இந்த படத்தில் நடிக்க நான் தயார் என விதார்த் ரொம்பவே ஆர்வம் காட்டினார். அபர்ணதி படத்திற்காக எடையை கூட்டி குறைக்க என ரொம்பவே மெனக்கெட்டார். படம் பார்த்துவிட்டு நன்றாக வந்து இருக்கு என்கிற சந்தோஷத்தில் இப்போது பேசுகிறேன். என் மனைவிக்கு இந்த படத்தை போட்டு காட்டினேன். நீங்கள் பார்த்து விட்டீர்களா என கேட்டபோது ஆம் என்றேன். அப்ப ஏன் இன்னும் திருந்தாமல் இருக்கிறீர்கள் என என்னிடம் கேட்டார். அப்போதே இந்த படத்தின் மீது நம்பிக்கை வந்து விட்டது. நிச்சயமாக இந்த படம் ஒரு பிரச்சாரமாக இருக்காது.

கடந்த சில நாட்களாக சின்ன பட்ஜெட் படங்கள் பற்றி ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையும் ஒரு சிறு பட்ஜெட் படமாகத்தான் பார்க்கிறேன். சிறு பட்ஜெட் படங்கள் என்றாலே எந்த ஓடிடிடியில் வெளியாகிறது என்று தான் கேட்கிறார்கள். அந்த அளவிற்கு சின்ன பட்ஜெட் படங்கள் என்றாலே வீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலை உருவாகி இருக்கிறது. ஆனால் சின்ன படங்கள் மூலமாகத்தான் தங்களது எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக அமையும் என பல கலைஞர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். சின்ன படங்களும் சினிமாவை தாங்கி தான் பிடிக்கின்றன. சிறு பட்ஜெட் படங்கள் முக்கியம் தான்.. ஆனால் அவற்றுக்கென ஒரு வியாபாரம் அப்போதிருந்தே இருந்ததில்லை. சிறு பட்ஜெட் படங்கள் அதிகம் வருகின்றன இதனால் தொழிலாளர்களுக்கு அதிக பணம் கிடைக்கிறது. சிறுபடங்கள் தான் சினிமாவில் முதுகெலும்பு. அதுக்கு எதிராக சொல்லப்படும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் சமீபத்தில் விஷால் சொன்னது ஒரு எச்சரிக்கை உணர்வால் சொல்லப்பட்டது தான்.

இந்த படத்திற்கு வழக்கமான ஒரு டிரைலர் போல இல்லாமல் புரமோஷனுக்காக கேப் என்கிற ஒரு வீடியோவை வெளியிட்டோம். அது பெரிய அளவில் ரீச்சாகி இருக்கிறது. இரண்டு பேர் பகிர்ந்ததிலேயே 2 கோடி பேர் அதை பார்த்து இருக்கிறார்கள் என்பது சந்தோஷம் தருகிறது” என்றார்.

Johnson Pro

Kewal Kiran Clothing Limited Launches Its First Exclusive Boys Wear Brand - Junior Killer

Kewal Kiran Clothing Limited Launches Its First Exclusive Boys Wear Brand - Junior Killer

 

  • Junior Killer is a high street fashion brand that is set to address end-to-end wardrobe needs for boys.
  • The collection comprises of extensive style categories across Casuals, Sports and Classic.

 

Chennai, 26th September, 2023: Elevating the style quotient for young fashionistas, Junior Killer - India’s latest high street kids fashion brand from the house of Kewal Kiran Clothing Limited (KKCL) was launched in the city today. This new brand is set to redefine the fashion landscape by offering end to end wardrobe needs of young boys of age 4 to 16, with thoughtfully crafted designs. Junior Killer offers a wide range of options to cater to the diverse tastes of young fashion enthusiasts. The official unveiling of Junior Killer took place in Mumbai, marked by a spectacular fashion show that showcased the brand's inaugural collection in the presence of Actress Ms. Bipasha Basu and Actor Mr. Karan Singh Grover, along with unveiling of its TVC shot in Amsterdam.

 

Junior Killer's debut collection has been meticulously crafted to meet the unique needs and preferences of today's discerning young boys. With an extensive range of clothing options, Junior Killer has uniquely crafted categories of clothing for boys – Casual, Sports and ClassicFrom denims to t-shirts, shirts and co-ords, the collection caters to various occasions and styles, ensuring that every young boy can express his individuality. From casual wear to occasion wear, Junior Killer offers an array of options that seamlessly blend style and comfort.

 

Speaking about the launch, Mr. Hemant Jain, Joint Managing Director – Kewal Kiran Clothing Limited said, "We are thrilled to introduce Junior Killer, a brand that embodies the spirit of today's young boys. We have carefully curated this collection to not only reflect their unique style but also empower them to make a mark in the world while staying true to their roots. Our aim is to provide fashionable options for young boys who value both style and substance."

 

The inspiration behind Junior Killer's debut collection draws from the everyday style of boys, celebrating their dynamic and adventurous spirit. With prices starting at just Rs. 499 and going up to Rs. 2399, the brand offers high-quality fashion at accessible price points. Junior Killer collection will be available across leading multi-brand outlets as well as Killer Exclusive stores, K-Lounge and National Chain Stores starting with their inaugural SS’24 collection.

 

About Kewal Kiran Clothing Ltd: Kewal Kiran Clothing Limited is a 40 plus year legacy company in the Indian retail & fashion industry. Started in the 1980, by brothers Kewalchand Pukhraj Jain and Hemant Pukhraj Jain, as an apparel manufacturing business with focus on denim, KKCL today has transformed into a celebrated and sought after home-grown fashion & lifestyle brand Company. Today, KKCL has a wide range of offerings from Jeans, T-Shirts, Shirts, Shorts, Jackets, Blazers, Winterwear, Athleisure, Accessories under flagship brands like Killer, Integriti, Lawman pg3 and Easies with presence across EBOs, MBOs, National Chain Stores throughout India.

 

KKCL has successfully competed with global brands and remained the nation's largest branded apparel maker through constant innovation and keeping up with people pulse. The Company's ability to keep innovating and competing has made it a sought-after fashion brand in the country.

 

About Killer: A premium fashion brand for men, Killer is the first truly international Indian brand created and owned by Kewal Kiran Clothing Limited. A brand that is youthful, trendy, vibrant and with an attitude. Killer enjoys a leadership position in the premium menswear segment and is one of the largest selling denim brands in India. Started as a jeans brand, the Killer product portfolio today includes men's ready-to-wear jeans, trousers, cargos, capris, shirts, jackets, tee-shirts, athleisure, innerwear (vests and briefs), footwear (shoes, socks), time-wear, eyewear and other accessories (belts, bracelets etc). The designs of Killer are synonymous with the rebellious streak of youth. Killer products are retailed across EBOs (250+), K-Lounge (180+) Large format stores (750+) and MBOs (2000+) to be closer to its consumers and evolve the brand with the changing times.

 

 

 

 

 

 

 

 


வாழ்வு தொடங்குமிடம் நீதானே' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு*

*'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு*

நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' எனும் திரைப்படம், ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகிறது.

இதைத் தொடர்ந்து படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன் போது ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தின் நிறுவனர்கள் பரணிதரன் மற்றும் செந்தில்குமார், நடிகர் அர்ஷத், நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், படத்தின் இயக்குநர் ஜெயராஜ் பழனி, பாடலாசிரியர்கள் ஜி கே பி மற்றும் சிவா சங்கர், இசையமைப்பாளர் தர்ஷன் குமார், தயாரிப்பாளர் நீலிமா இசை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் ஷார்ட் ஃபிளிக்ஸ் பரணிதரன் பேசுகையில், '' வாழ்வு தொடங்கும் இடம் நீதானே இந்த திரைப்படம் எங்களுடைய டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. எங்களுடைய டிஜிட்டல் தளத்தில் ஏராளமான புதிய இணைய தொடர்கள், திரைப்படங்கள், நிகழ்ச்சிகள்..என புதிய படைப்புகள் விரைவில் வெளியாக இருக்கின்றன. ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தை தொடங்குவதற்கு காரணம்.. பல புதிய இளம் படைப்பாளிகளுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக தான். இப்படத்தின் இயக்குநர் ஜெயராஜ் பழனி இதற்கு முன் 'சூல்' என்றதொரு குறும்படத்தை இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் சர்வதேச அளவில் ஏராளமான விருதுகளை வென்றது. இது தொடர்பாக அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது, அவர் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' படத்தின் கதையை விவரித்தார். இந்த கதையை கேட்டவுடன் தயாரிக்க ஒப்புக்கொண்டோம். ஏனெனில் இந்த கதையை இயல்பாக சிந்திக்காமல் வித்தியாசமாக சிந்தித்து உருவாக்கியிருந்தார். அதன் பிறகு இப்படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக நடிகை நீலிமா இசையை தொடர்பு கொண்டோம். அவர்கள் இந்தப் படத்தை மிக நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார்கள். தன் பாலின சேர்க்கையாளர்களை பற்றிய இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்'' என்றார். 

படத்தின் இசையமைப்பாளர் தர்ஷன் குமார் பேசுகையில், '' தற்போதுள்ள சூழலில் ஒரு திரைப்படம் வெளியாவது என்பதே கடினம். இந்நிலையில் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' திரைப்படம் வெளியாகிறது. இதற்கு இசையமைக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் நீலிமா இசைக்கு நன்றி. இந்தத் திரைப்படத்திற்கு பாடல் அமைப்பதும், பின்னணி இசை அமைப்பதும் கடும் சவாலானதாக இருந்தது. இப்படத்தின் பின்னணி இசைக்காக பல சர்வதேச கலை இசை கலைஞர்களை பயன்படுத்தி இருக்கிறோம். படத்தின் பாடல்களும், பின்னணியிசையும் அனைவரையும் கவரும் என உறுதியாக நம்புகிறோம் ''என்றார்.

இயக்குநர் ஜெயராஜ் பழனி பேசுகையில், '' இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். முதலில் 'சூல்' எனும் பெயரில் திருநங்கைகளை முதன்மைப்படுத்திய படைப்பை உருவாக்கினேன். இந்தப் படைப்பை ஷார்ட் ஃபிளிக்ஸ் வாங்கி என்னுடைய வாழ்க்கையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் ஓகே சொல்லி போதுமான பொருட்செலவில் உருவாக்கி, பரிசாக அளித்திருக்கிறார்கள். நான் பாண்டிச்சேரியில் நாடக துறையில் பணியாற்றிருக்கிறேன். என்னுடைய உதவியாளர் ஒருவர் தன் பாலின சேர்க்கையாளர். அவரின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இந்த படைப்பு உருவாகி இருக்கிறது. ஆண், பெண்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை போல் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கும் அவர்களின் உணர்வுகளை மதித்து, சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது தான் இந்த படைப்பு.'' என்றார். 

நடிகர் அர்ஷத் பேசுகையில், '' வாழ்வு தொடங்கும் இடம் நீதானே எனும் இந்த திரைப்படத்தில் இர்ஃபான் எனும் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இந்தப் படைப்பு காகிதத்திலிருந்து டிஜிட்டல் படைப்பாக உருவாகி இருக்கிறது என்றால், அதற்கு ஷார்ட் ஃபிளிக்ஸ் கொடுத்த ஆதரவு தான் முக்கிய காரணம். கலைஞர்களாகிய நாங்கள் இந்த கதை மீது கொண்டிருந்த நம்பிக்கையை விட... ஷார்ட் ஃபிளிக்ஸ் டிஜிட்டல் தளத்தின் நிறுவனர்கள் இந்த கதை மீது அதீத நம்பிக்கையை வைத்து தயாரித்திருக்கிறார்கள். இதற்காக அவருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 
இந்தத் திரைப்படத்தை ஷார்ட் ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்காக தயாரித்த இசை பிக்சர்ஸ் நீலிமா இசை மற்றும் இசை அவர்களிடமிருந்து ஏராளமான விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னை போன்ற வளர்ந்து வரும் நடிகர்களுக்கு இது போன்ற வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி. இது என்னுடைய கனவு நனவான தருணம். இயக்குநர் ஜெயராஜ் பழனியின் இயக்கத்தில் உருவான 'சூல்' என்ற குறும்படத்திலும் எனக்கு வாய்ப்பளித்திருந்தார். தற்போது இந்தப் படத்திலும் வாய்ப்பளித்திருக்கிறார். வாய்ப்பிற்கும் நேரத்திற்கும் நன்றி.'' என்றார். 

நடிகை ஸ்ருதி பெரியசாமி பேசுகையில், '' வாழ்வு தொடங்குமிடம் நீதானே படத்தின் கதையை இயக்குநர் எனக்கு விவரித்த போதே எனக்கு பிடித்திருந்தது. ஏனெனில் நான் பணியாற்றும் மாடலிங் துறையில் ஏராளமானவர்கள் தங்களுடைய முன்னேற்றத்திற்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதே தருணத்தில் இந்தத் துறையில் பணியாற்றுபவர்கள் பலர் எல் ஜி பி டி எனும் பிரத்தியேக சமூக குழுவில் இருக்கிறார்கள். அதனால் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என தீர்மானித்தேன். இந்தப் படத்தை தயாரித்த ஷார்ட் ஃபிளிக்ஸ் மற்றும் இசை பிக்சர்ஸிற்கு நன்றி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக இடைவெளியின்றி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் போது அயராது பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ படத்தை பார்த்து விட்டு ஆதரவளிக்க வேண்டுகிறேன்'' என்றார். 

நடிகை நிரஞ்சனா நெய்தியார் பேசுகையில், '' இந்த திரைப்படத்தில் இடம்பெறும் ஷகிரா மற்றும் வினோதா கதாபாத்திரங்களை இயக்குநர் ஜெயராஜ் பழனி நேர்த்தியாக கையாண்டிருந்தார். ‌இதில் ஷகிரா கதாபாத்திரத்தில் நான் பொருத்தமாக இருப்பேன் என்று தேர்வு செய்து நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்று மேலும் இது போன்ற திரைப்படங்கள் வருவதற்கு உந்துதலாக இருக்க வேண்டும். மேலும் வழக்கமான சமுதாய நடைமுறையில் இருந்து வித்தியாசமாக இயங்கும் இந்த  சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன். '' என்றார். 

தயாரிப்பாளரும், நடிகையுமான நீலிமா இசை பேசுகையில், '' இந்தத் திரைப்படம் மைக்ரோ பட்ஜெட்டில் உருவானது. 'அரண்மனைக்கிளி' எனும் தொலைக்காட்சி தொடரில் பணியாற்றிக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் மூலமாக ஷார்ட் ஃபிளிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பரணிதரன் மற்றும் செந்தில்குமார் அறிமுகமானார்கள். ஷார்ட் ஃபிலிக்ஸ் எனும் ஆப்ஸை ஏன் அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால், இந்த செயலியில் புது முகங்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். புது இயக்குநர்கள், புதிய நடிகர்கள், புதிய தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமானவருக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். இந்த மேடையில் அமைந்திருக்கும் பெரும்பாலானவர்கள் புது முகங்களே. இந்த செயலியை நாம் எப்போது வேண்டுமானாலும்... எங்கு வேண்டுமானாலும்.. பதிவிறக்கம் செய்து நாம் விரும்பக்கூடிய கால அளவுகளில் படைப்புகளை காணலாம். நாம் எந்த மனநிலையில் இருக்கிறோமோ...! அதற்கு ஏற்ற வகையிலான உள்ளடக்கங்கள் இந்த செயலியில் இருக்கிறது. ஷார்ட் ஃபிளிக்ஸில் வெளியான லேட்டஸ்ட் ஹிட் என்றால் அது 'பாணி பூரி' தான். அனைத்து ஜானரிலும் படங்களை உருவாக்க வேண்டும் என அவர்கள் விரும்பிய போது, 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' தொடங்கியது. 

இந்த கதையை படமாக உருவாக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த போது, என்னுடைய கணவர் இசை, 'அவசியம் உருவாக்க வேண்டும். ஏனெனில் தற்போது இந்த சமூகம் மற்றும் சமுதாயம் செல்லும் பாதையில் இது போன்ற உள்ளடக்கங்கள் அவசியம் ' என்றார். 

அதன் பிறகு இந்தப் படத்திற்கு ஏராளமான திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒன்றிணைந்தனர். எங்களுடைய தயாரிப்பு நிறுவனம், குறைந்த முதலீட்டில் தரமான படைப்புகளை உருவாக்க முடியும் என்ற இலக்கை கொண்டது. அந்த வகையில் இந்தப் படத்திற்காக உழைத்த இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என் அனைவரும் தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கினர்.‌ இது போன்ற நல்ல படைப்பிற்கு ரசிகர்களும் பேராதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

விஷ்ணு மஞ்சுவின் காவிய சாகசம் தொடங்குகிறது

விஷ்ணு மஞ்சுவின் காவிய சாகசம் தொடங்குகிறது

நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படமான ‘கண்ணப்பா’ நியூசிலாந்து நாட்டில் தொடங்கியது

’கண்ணப்பா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது - நடிகர் விஷ்ணு மஞ்சுவின் நெகிழ்ச்சியான அறிவிப்பு

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகும் பிரமாண்ட வரலாற்று காவியமான ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நியூசிலாந்து நாட்டில் இன்று தொடங்கியது. 

தனது கனவு திரைப்படமான ‘கண்ணப்பா’ படப்பிடிப்பு தொடங்கியது குறித்து நடிகர் விஷ்ணு மஞ்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில்  கூறியிருப்பதாவது:

இன்று, 'கண்ணப்பா' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கும் போது, நியூசிலாந்தின் அழகிய நிலப்பரப்புகளில் ஒரு வாழ்நாள் சாகசம் வெளிப்படுவதைப் பார்த்து நான் பிரமித்து நிற்கிறேன். இந்த கனவு உருவாக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகிறது, அது தற்போது நிறைவேறியிருப்பது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் தெய்வீக ஆசீர்வாதத்திற்கு ஒரு சான்றாகும்.

’கண்ணப்பா’ சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடந்த எட்டு மாதங்களாக சுழல்காற்றில் சிக்கியது போல் இருந்தார்கள். தூக்கமில்லாத இரவுகள் வழக்கமாகிவிட்டன, திருவிழாக்கள் சிறிது நேரத்தில் மறந்துவிட்டன, விடுமுறைகள் அரிதாகிவிட்டன, மேலும் ஒரு நல்ல, இடைவிடாத 5 மணிநேர தூக்கம் ஒரு ஆடம்பரமான இன்பமாக இருந்தது. கவலையும் பதட்டமும் இன்னும் நீடிக்கிறது, ஆனால் நம் ஆன்மா அசையாமல் இருக்கின்றன.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, புகழ்பெற்ற தணிகள பரணி அவர்கள் ’கண்ணப்பா’வின் கருத்தை முதன் முதலில் என்னுடன் பகிர்ந்துகொண்ட போது, அதன் ஆற்றலால் நான் உடனடியாகக் கவரப்பட்டேன். கதையை மேலும் வடிவமைக்கவும், செம்மைப்படுத்தவும் நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். இந்தப் பயணத்தில் என்னுடன் இணைந்த அபாரமான திறமைசாலிகளுக்கு என்னால் போதுமான நன்றியைத் தெரிவிக்க முடியாது. ஸ்ரீ போன்ற தலைசிறந்தவர்களின் ஆதரவு, பரசூரி கோபாலகிருஷ்ணா, விஜேந்திர பிரசாத் சார், தோட்டப்பள்ளி சாய்நாத் சார், தோட்ட பிரசாத் சார், இயக்குநர்கள் நாகேஸ்வர ரெட்டி மற்றும் ஈஸ்வர் ரெட்டி, வாழ்க்கையை விட பெரியதாக இருக்கும் என்று உறுதியளிக்கும் திரைக்கதையை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

இன்னும் சில நாட்களில், உலகம் முழுவதிலுமிருந்து 600 பேர் கொண்ட நடிகர்கள் மற்றும் குழுவினர் ’கண்ணப்பா’ வை உயிர்ப்பிக்க நியூசிலாந்தில் ஒன்றுகூட இருக்கிறார்கள். அவர்களின் தியாகங்கள், அன்புக்குரியவர்களை விட்டுச் செல்வது, இந்தத் திட்டத்தின் மீதான அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு சான்றாகும்.

நான் என்னையே சந்தேகப்பட்ட போதும் என்னை நம்பிய என் தந்தையின் அசைக்க முடியாத ஆதரவும், நம்பிக்கையும் இந்த நம்ப முடியாத பயணத்தில் என் சிறகுகளுக்குக் கீழே காற்றாக இருந்தது. அதேபோல், எனது சகோதரர் வினய்யின் ஊக்கம்  தொடர்ந்து பலத்தையும் ஊக்கத்தையும் அளித்து வருகிறது.

’கண்ணப்பா’ சூப்பர் ஸ்டார்களின் நட்சத்திரப் பட்டியலைப் பெருமைப்படுத்துகிறது என்பதை வெளிப்படுத்துவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது, அந்த பட்டியலை விரைவில் வெளியிடுவோம். விவரங்களை மூடிமறைக்க நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தாலும், தகவல்கள் கசிவுகளைக் கட்டுப்படுத்துவது சவாலானது. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ (ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகும் நடிகர்கள் பற்றிய தகவல்களை  மட்டுமே நம்பும்படி ரசிகர்கள் அனைவரையும் நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த அற்புதமான பயணத்தை நாங்கள் தொடங்குகையில், உங்கள் அன்பையும் ஆதரவையும் பிரார்த்தனைகளையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். ’கண்ணப்பா’ ஒரு திட்டம் மட்டுமல்ல, இது அன்பு, அர்ப்பணிப்பு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் உழைப்பு. எங்கள் சாகசம் தொடங்குகிறது, ஒன்றாக, நாங்கள் மந்திரத்தை உருவாக்குவோம்.

ஹர் ஹர் மகாதேவ்!

நன்றியுடன்,
விஷ்ணு மஞ்சு

இவ்வாறு நடிகர் விஷ்ணு மஞ்சு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

லைக்காவின் 'சந்திரமுகி 2' வெளியீட்டிற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்ற ராகவா லாரன்ஸ்*


*லைக்காவின் 'சந்திரமுகி 2' வெளியீட்டிற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்ற ராகவா லாரன்ஸ்*

செப்டம்பர் 28 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் லைக்கா சுபாஷ்கரனின் 'சந்திரமுகி 2' படத்திற்காக, அப்படத்தின் கதாநாயகனான ராகவா லாரன்ஸ்.. அவருடைய குருவும், 'சந்திரமுகி' படத்தின் நாயகனும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்தை சந்தித்து ஆசியும், வாழ்த்தும் பெற்றிருக்கிறார்.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படைப்பாகத் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'சந்திரமுகி 2' இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், 'வைகைப்புயல்' வடிவேலு, ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், ராவ் ரமேஷ், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி. கே. எம். தமிழ் குமாரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் திட்டமிட்டப்படி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.‌

செப்டம்பர் 28 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் முன் பதிவு தற்போது தொடங்கி இருக்கிறது. தொடங்கியவுடன் ரசிகர்கள் உற்சாகமாக படத்தினை காண்பதற்கு முன்பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் படத்தின் நாயகனும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், குருவாக போற்றி வணங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, 'சந்திரமுகி 2 படம் மாபெரும் வெற்றி பெறும்' என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தையும், ஆசியையும் ராகவா லாரன்ஸிற்கு வழங்கியிருக்கிறார்.

லைக்காவின் 'சந்திரமுகி 2' தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.‌

இதனிடையே 'சந்திரமுகி 2' படத்தின் தெலுங்கு பதிப்பினை ரசிகர்களிடையே விளம்பரப்படுத்தும் நிகழ்வு அண்மையில் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது என்பதும், படத்தின் இரண்டாவது முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Monday, September 25, 2023

எனக்கு என்டே கிடையாது’ பட விழாவில் அனல் பறந்த விவாதம்*

*சின்ன படங்கள் எடுக்க நினைப்போர் வரவேண்டாம் என விஷால் கூறியது சரியா..? ;  ‘எனக்கு என்டே கிடையாது’ பட விழாவில் அனல் பறந்த விவாதம்*

*“யார் படங்களை எடுக்கவேண்டும் என கூற யாருக்கும் உரிமையில்லை” ; ‘எனக்கு என்டே கிடையாது’ பட விழாவில் சூடான தயாரிப்பாளர் கார்த்திக்*

*“விஷால் சொன்னது கூட ஒருவகையில் சனாதானம் தான்” ; எனக்கு என்டே கிடையாது தயாரிப்பாளர் கார்த்தி பதிலடி*

*பெரிய படங்களில் நடிக்க போய்விட்டதால் ‘எனக்கு என்டே கிடையாது’ பட விழாவை புறக்கணித்த கதாநாயகி*

Hungry Wolf Entertainment And Production LLP சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனக்கு என்டே கிடையாது’. அறிமுக இயக்குநர் விக்ரம் ரமேஷ் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளதுடன் படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராகவும் நடித்துள்ளார். 

தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கதாநாயகியாக ஸ்வயம் சித்தா நடித்துள்ளார். மேலும் சிவகுமார் ராஜு, பிச்சைக்காரன் புகழ் முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

தளபதி ரத்னம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கலாச்சரண் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சந்திரமுகி 2, யாத்திசை உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குனர் ஓம் பிரகாஷ் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். படத்தொகுப்பை வேல்முகனும் கலை வடிவமைப்பை சூர்யாவும் கவனித்துள்ளார். 

அக்டோபர் 6 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆக்சன் ரியாக்சன் சார்பில் ஜெனிஷ் இந்தப்படத்தை வெளியிடுகிறார்.   இதனை முன்னிட்டு தற்போது இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் புரமோஷன் நிகழ்ச்சி சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் என யாருமே சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்காமல் படக்குழுவினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் கார்த்திக் பேசும்போது, “அடிப்படையில் வழக்கறிஞர் என்றாலும் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தில் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆகவும் பயிற்சி எடுத்தேன். கடந்த ஏழு வருட தவமாக தற்போது இந்த படத்தை தயாரித்துள்ளேன். இந்த ஏழு வருடங்களில் ஒவ்வொரு முறையும் இந்த படத்தை துவங்க முயற்சிக்கும்போது சில தடங்கல்கள் ஏற்பட்டு முயற்சி தள்ளிப்போனது. ஆனாலும் ‘எனக்கு என்டே கிடையாது’ என்கிற எங்கள் படத்தின் டைட்டிலை எனக்கு நானே சொல்லி உற்சாகப்படுத்திக் கொண்டேன்.

விக்ரம் ரமேஷ் என்னை சந்தித்து சொன்ன கதை தனித்துவமாக இருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்குவதற்கு முன்பாக சில விஷயங்களில் தீர்மானமாக இருந்தேன். படப்பிடிப்பில் யாரும் யாரையும் திட்டக்கூடாது. கோபத்தைக் காட்டக் கூடாது. படப்பிடிப்பில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அன்றைய தின ஊதியத்தை அவர்கள் கேட்காமலேயே தேடிச்சென்று கொடுத்து விட வேண்டும்.. எல்லோருக்கும் சரிசமமான உணவு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தென்.. படப்பிடிப்பு நடந்த 35 நாட்களிலும் அதை இடைவிடாமல் கடைபிடித்து முதல் படத்திலேயே இதை சாதித்தும் விட்டேன்.

இந்த படத்தில் மூன்று பேருக்கு இடையே ஏற்படும் ஒரு சிறிய போராட்டம் ஒன்று இருக்கிறது. இதற்கு ஸ்டண்ட் மாஸ்டரை வைத்து படமாக்கினால் நன்றாக இருக்கும் என்பதால் ஓம் பிரகாஷை அழைத்தோம். அவர் அதை ஒரு பிரமாதமான சண்டைக் காட்சியாகவே அமைத்துக் கொடுத்தார். யாத்திசை போன்ற படத்தில் 300 பேருக்கு மேல் வைத்து சண்டை காட்சிகளை உருவாக்கியவர் வெறும் மூன்று பேருக்கான சண்டைக் காட்சியையும் அழகாக வடிவமைத்து கொடுத்தார்.

சமீபத்தில் நடிகர் விஷால் பேசும்போது மூன்று கோடி, நான்கு கோடி வைத்துக்கொண்டு சின்ன படங்களை தயாரிக்கிறோம் என யாரும் வர வேண்டாம் என கூறியிருந்தார். இதுவே ஒரு விதமான சனாதானம் தான்.. இப்படி சொல்ல யாருக்குமே உரிமை இல்லை” என்று கூறினார்.

தயாரிப்பாளர் கார்த்திக்கின் வழிகாட்டியாக அவருக்கு பக்கபலமாக துணை நிற்கும் சக்தி என்பவர் பேசும்போது, “எனக்குள் இருக்கும் இலக்கிய ஆர்வம் தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. விக்ரம் ரமேஷ் முதல் பட இயக்குநர் மாதிரியே இல்லை.. தயாரிப்பாளர் கார்த்திக்கை பொறுத்தவரை, தான் இருக்கும் இடங்களில் யாரும் மோசமான வார்த்தைகள் பேசுவதை விரும்ப மாட்டார். யாரையும் மரியாதை குறைவாக நடத்த மாட்டார். முக்கியமாக தனிநபராக இல்லாமல் எல்லோரும் கூட்டாக சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என விரும்புபவர். இந்த படத்தின் இசையமைப்பாளர் கலாசரணின் திறமையை பார்க்கும்போது இத்தனை நாளாக இவர் எப்படி வெளியே தெரியாமல் இருந்தார் என்கிற ஆச்சர்யம் ஏற்பட்டது” என்று கூறினார்.

இப்படத்தின் வெளியிட்டு உரிமையை பெற்றுள்ள விநியோகஸ்தார் ஜெனிஷ் பேசும்போது, “சமீபத்திய நிகழ்வில் நடிகர் விஷால் சின்ன படங்களை எடுப்பவர்கள் தயவு செய்து சினிமாவுக்கு வர வேண்டாம் அதற்கு பதிலாக அந்த காசில் சொத்து வாங்கி போடுங்கள் என்று கூறியதை அவர் சொன்ன ஒரு அறிவுரையாக தான் நான் பார்க்கிறேன். அவர் ஒரு தயாரிப்பாளராக தனது கடந்தகால அனுபவத்திலிருந்து அப்படி கூறியுள்ளார். அவர் சொன்னது போல இன்று சின்ன பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்வதிலும் ஓடிடி தளங்களில் விற்பனைக்கு கொண்டு செல்வதிலும் நிறைய சிரமங்கள் இருக்கிறது. லட்சங்களில் எடுக்கப்பட்ட படங்களை விநியோகித்து கூட நல்ல லாபம் பார்த்தேன். அதேசமயம் சமீபத்தில் ஒரு ஐந்து கோடி பட்ஜெட்தில் எடுக்கப்பட்டு வெளியான படம் வெறும் பத்து லட்சம் தான் வசூலித்தது. டாடா, குட் நைட் போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் நல்ல வசூல் செய்தன என்பதையும் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

ஒளிப்பதிவாளர் தளபதி ரத்னம் பேசும்போது, “சமீப காலமாக நிறைய திரில்லர் படங்கள் வருகின்றன. இதில் என்ன புதிதாக பண்ண முடியும் என்கிற எண்ணம் பலருக்கும் ஏற்படும். ஆனால் இந்த படத்தில் திரைக்கதை புதிதாக இருக்கும். படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக்கின் குணாதிசயத்துக்காகவே இந்த படத்தில் அனைவரும் இருமடங்காக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தோம். படத்தை எடுத்து முடித்த பின்பு அதை இசையமைப்பாளரும் எடிட்டரும் சேர்ந்து இன்னும் வேறு விதமாக மாற்றி விட்டார்கள்” என்று கூறினார்.

இசையமைப்பாளர் கலாசரண் பேசும்போது, “இந்தப் படத்தில் கடைசி டெக்னீசியனாக இணைந்தது நான்தான்.. சொல்லப்போனால் மொத்த படத்தையும் எடுத்து முடித்துவிட்டுத் தான் என்னிடம் வந்தார்கள்.. பாடல்களுக்கு கூட மாண்டேஜ் காட்சிகளை முன்கூட்டியே எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து அதற்கு பாடல்களை உருவாக்க சொன்னார்கள். அதே சமயம் எனக்கு வேண்டிய சுதந்திரத்தையும் கொடுத்தார்கள்.

இந்த படத்தில் இரண்டு பாடல்களை பரிதாபங்கள் புகழ் கோபி மற்றும் அபிஷேக் ராஜா ஆகியோர் பாடியுள்ளனர். அபிஷேக் ராஜா என் இசையில்  ஏற்கனவே சில சுயாதீன பாடல்களை பாடியுள்ளார்” என்றார். 

கலை இயக்குநர் சூர்யா பேசும்போது, “இந்த படத்தின் படப்பிடிப்பில் எங்களை தேடி வந்து சம்பளத்தை கொடுத்தார்கள். சொன்ன மாதிரியே 35 நாட்களில் படத்தை முடித்து விட்டார்கள். தயாரிப்பு நிறுவனம் என சொல்வதை விட அது வானத்தைப் போல குடும்பம் என்று சொன்னால் சரியாக இருக்கும்” என்று கூறினார்.

நடிகர் சிவகுமார் ராஜு பேசும்போது, “இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தபோது எனக்கே முதலில் சந்தேகமாகத் தான் இருந்தது. ஆனால் என்னை ஊக்கப்படுத்தி உற்சாகம் கொடுத்து நடிக்க வைத்தனர். முதன்முறையாக சண்டை காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது. ரிகர்சல் பண்ணும்போது தான் சினிமா என்பது விளையாட்டு கிடையாது என்பதை உணர்ந்தேன்” என்று கூறினார். 

இயக்குநர் விக்ரம் ரமேஷ் பேசும்போது, “ நிறைய தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்றுள்ளேன். ஆனால் இது ஒளிவு மறைவில்லாத ஒரு நிறுவனம். கதையை சொல்வதற்கு முன்பாகவே, இதுதான் பட்ஜெட்.. நான் தான் ஹீரோவாக நடிக்கப் போகிறேன். என்னுடைய நண்பர்களும் இதில் என்னுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என முதலிலேயே கூறிவிட்டேன். தயாரிப்பாளரும் எந்த நிபந்தனையும் விதிக்காமல் சந்தோஷமாக ஒப்புக்கொண்டார். அதுமட்டுமல்ல ரொம்பவும் தாமதப்படுத்தாமல் கதை சொன்ன ஒரு வாரத்திலேயே படத்தையும் துவங்கி விட்டார்கள். 

இந்த படத்தில் மஸ்தான் கதாபாத்திரத்தில் சிவகுமார் ராஜு நடித்துள்ளார். இவர் நிறைய குறும்படங்களில் நடித்த அனுபவம் கொண்டவர் இவருக்கு முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் பிரபலமான இன்னொரு நடிகரை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தோம் ஆனால் கடைசி நேரத்தில் இவரே நடிக்கட்டும் என முடிவெறுத்தோம்.  இந்த படத்திற்கு பாடல்கள் சிச்சுவேஷன் சொல்வதற்கு பதிலாக முழு படத்தின் கதையும் சொன்னேன். பாடலாசிரியர் ஸ்ரீனி அதற்கு ஏற்றார்போல அருமையான பாடல்களை எழுதிக் கொடுத்தார். 

ஒரு படத்துக்கு தேவை நல்ல கதை.. ஒரு நல்ல தயாரிப்பு நிறுவனம்.. இவை இரண்டும் இருந்தால் யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். இந்த படம் பார்த்துவிட்டு ரசிகர்கள் வெளியே வரும்போது படம் நல்லா இருக்கு என்று மட்டுமே சொல்வார்கள்.  இந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகி ஏன் கலந்து கொள்ளவில்லை என்றால், அவரை எங்களால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இந்தியன் 2, கேப்டன் மில்லர் என பெரிய படங்களில் அவர் பிசியாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.. ஒருவேளை இனி பெரிய படங்களில் தான் நடிப்பார் போல தெரிகிறது.  

இந்த படத்தில் நடித்துள்ள சேகர் என்கிற கதாபாத்திரம் ஒரே நாளில் பலவிதமான பிரச்சனைகள சந்திக்கும்... அவரது வாழ்க்கையும் இந்த படத்தின் கதையும் முடிந்து விடும் என நினைக்கும் நேரத்தில் மீண்டும் புதிதாக இன்னொரு விஷயம் தொடரும். அதனால் தான் எனக்கு எண்டு கார்டே இல்லை என்கிற டைட்டிலை இந்த படத்திற்கு வைத்தோம்: என்று கூறினார்.

Sunday, September 24, 2023

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் 'லக்கி பாஸ்கர்' படப்பிடிப்பு ஆரம்பம்!*

*சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் 'லக்கி பாஸ்கர்' படப்பிடிப்பு ஆரம்பம்!*

இந்திய சினிமாவில் வெற்றிகரமான பான் இந்திய நடிகராக துல்கர் சல்மான் உள்ளார். அவரது திறமை மற்றும் தனித்துவமான படங்கள் தேர்வு மூலம் இன்று அவர் பெரும் உயரத்தை எட்டியது மட்டுமல்லாமல் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக உள்ளார்.  

'சீதா ராமம்' போன்ற கிளாசிக் மற்றும் 'கிங் ஆஃப் கொத்தா' போன்ற கேங்ஸ்டர் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் இப்போது தெலுங்கில் திறமையான இயக்குநரான வெங்கி அட்லூரியுடன் 'லக்கி பாஸ்கர்' என்ற தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து படத்தைத் தயாரிக்கின்றனர்.

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சமீப வருடங்களில் தெலுங்கு சினிமாவில் வித்தியாசமான ஜானர்களில் படங்கள் தயாரித்து வெற்றிக் கொடுத்து வருகிறது. இப்போது அவர்கள் அடுத்து பான்-இந்திய மார்க்கெட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளனர். 'சார்/வாத்தி' படத்திற்குப் பிறகு அவர்கள் இயக்குநர் வெங்கி அட்லூரியுடன்  இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர்.

'லக்கி பாஸ்கர்' படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. இந்த விழாவில் தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டு படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

'ஒரு சாதாரண மனிதனின் அளவிட முடியாத உயரங்களை நோக்கிய அசாதாரண பயணம்' என்ற கருப்பொருளைச் சுற்றி வருவதுதான் 'லக்கி பாஸ்கர்' படத்தின் ஒன்லைன். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற எடிட்டர் நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார். மேலும் படம் குறித்தான தகவல்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்படும்.

*நடிகர்கள்:* துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி

*தொழில்நுட்பக்குழு விவரம்:*
தயாரிப்பு வடிவமைப்பாளர்: வினீஷ் பங்களான்,
எடிட்டர்: நவின் நூலி,
ஒளிப்பதிவு: நிமிஷ் ரவி,
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்,
தயாரிப்பாளர்கள்: நாக வம்சி எஸ், சாய் சௌஜன்யா,
எழுத்து மற்றும் இயக்கம்: வெங்கி அட்லூரி,
வழங்குபவர்: ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்,
பேனர்ஸ்: சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்

சென்னையில் நடைபெற்று வரும் த்ரீ எக்ஸ் த்ரீ தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாடு ஆடவர் மற்றும் பெண்கள் அணியினர் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகின்றனர்


 சென்னையில் நடைபெற்று வரும் த்ரீ எக்ஸ் த்ரீ தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாடு ஆடவர் மற்றும் பெண்கள் அணியினர் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகின்றனர். 


இந்தியாவிலேயே முதல் முறையாக தேசிய அளவிலான த்ரீ எக்ஸ் த்ரீ கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடர் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 

இந்திய கூடைப்பந்து சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் இணைந்து  நடத்தும் இந்த தொடரில், ஓபன் ஆடவர்  பிரிவில் ரயில்வே அணி உட்பட 30 மாநில அணிகளும் மகளிர் பிரிவில் 26 மாநில அணிகளும் பங்கேற்றுள்ளன.  இதில் போட்டிகளை நடத்திவரும் தமிழ்நாடு அணியின் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவினர்  தொடர் வெற்றியை குவித்து வருகின்றனர். முதல் நாள் போட்டிகளில் ஆடவர் பிரிவில் தமிழ்நாடு அணி உத்ரகாண்ட், பீகார் மற்றும் கேரளா அணிகளை வீழ்த்தியது.  மகளிர் பிரிவில் தமிழ்நாடு அணி பீகார், குஜராத் அணிகளை வீழ்த்தியது. 
 
இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்றன. அதில்  ஆடவர் பிரிவில் தமிழ்நாடு அணி ரயில்வே அணியை 19 க்கு 11 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றியை தொடர்ந்தது.  கேரள அணி, உத்திரபிரதேச அணியை 17 க்கு 16 என்ற கணக்கிலும்,  பஞ்சாப் அணி, மஹாராஷ்டிர அணியை 21 க்கு 10 என்கிற கணக்கிலும் வென்றது. மத்திய பிரதேச அணி, மேகாலயா அணியை 10க்கு 7 என்கிற கணக்கிலும்  மற்றொரு ஆட்டத்தில் ஹரியானா அணியை மத்திய பிரதேச அணி 9 க்கு 14 என்கிற கணக்கிலும் தோற்கடித்தது. 

பெண்கள் பிரிவில் உத்திர பிரதேச அணியை தமிழ்நாடு அணி 16க்கு 21 என்ற கணக்கில் தோற்கடித்தது. மேலும் டெல்லி அணி 21 க்கு 6 என்கிற கணக்கில் பீகார் அணியையும், தெலங்கான அணி பஞ்சாப் அணியை 21 க்கு 15 என்கிற கணக்கிலும் , கேரள அணி அஸ்ஸாம் அணியை 21 க்கு 13 என்கிற கணக்கிலும் வென்றது. 

இறுதி நாளான நாளை நடைபெற உள்ள காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்றுள்ள 16 அணிகள் மோத உள்ளன.

Friday, September 22, 2023

ஐமா - திரைவிமர்சனம்

ஐமா திரைப்பட விமர்சனம்


நடிப்பு: யூனஸ் ,எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன் , ஷாஜி, ஷீரா, மேகா மாலு,  மனோகரன், வில்லனாக  தயாரிப்பாளர் சண்முகம்  ராமசாமி  


தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films )நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி ,'ஐமா' திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்


இசை: கே ஆர்.ராகுல்


ஒளிப்பதிவு: விஷ்ணு கண்ணன்


எடிட்டிங் அருண் ராகவ்,


இயக்கம்: ராகுல் ஆர்.கிருஷ்ணா


ஆதாம் (யூன்ஸ்) தன் தாயின் உடல் நிலை பாதித்ததால் அவரை மருத்துவமனையில்  சேர்க்கிறான். அதேபோல் விபத்தில் சிக்கிய மரியா (எல்வின் ஜூலியட் ) அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கிறாள்.  ஒரு  கட்டத்தில் இவர்கள் இருவரையும் கடத்தி ரகசிய இடத்தில் அடைக்கின்றனர். கை கால் கட்டப்பட்டு கிடக்கும் அவர்கள் ஒரு வழியாக அதிலி ருந்து மீண்டு அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயல்கின்றனர். ஆனால் இவர்கள் இருவரையும் கடத்தி வரும் பேர்விழி ரகசிய திட்டம் தீட்டியிருக்கிறான்.  அதற்காக  இருவரையும்  சித்ரவதை செய்கிறான். இருவரையும் ஏன் கடத்தினான், கடத்தல்காரனின் திட்டம் என்ன என்பதற்கு படம் பதில் சொல்கிறது.


கதாநாயகனாக நடித்த யூனஸ் துடிதுடிப்பான இளைஞராக  வருகிறார். சிலகோணங்களில் தோற்றத்தில் நடிகர் விஜய்யை நினைவூட்டுகிறார்.நடிப்பில் இயக்குநர் சொன்னதைச் செய்துள்ளார். குறை சொல்ல ஒன்றும் இல்லை.கதாநாயகி எவ்லின் ஜூலியட் தப்பிக்கும் காட்சிகளில் நல்ல முக பாவங்களைக் காட்டியுள்ளார். அவரது திரைத் தோற்றம் திருப்தியாக உள்ளது. வில்லனாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி குறையில்லாத நடிப்பைக் கொடுத்து வில்லத்தனம் காட்டுகிறார்.


நாயகன் -நாயகி பாத்திரங்களின் மூலம் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுப்பவர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து வரும்போது அதிலிருந்து தப்பித்து உயிர் வாழவே எண்ணுகிறார்கள் என்ற உளவியல் உண்மையைக் காட்டியுள்ளார்கள். அவர்களின் உயிர் தப்பித்தல் முயற்சிகளை அணு அணுவாக ரசிக்கும் வில்லனின் குரூர குணமும் காட்டப்பட்டுள்ளது.


ஐமா என்றால் கடவுள் சக்தி என்றும் பொருளாம்


திரில்லர் படம் என்ற சமிக்ஞை படத்தின் தொடக்கத்திலேயே தெரிகிறது. பேய் படமாக இருக்குமோ என்று யோசிக்க வைத்து மெல்ல, மெல்ல சைன்ஸ் பிக்ஷனாக மாறுகிறது.



தப்பிக்க முயல்வதற்கான க்ளு கண்டுபிடிக்க ஹீரோவை நச்சென்று லிப்  டூ  லிப் கிஸ் கொடுத்து  சடன் கிக் ஏற்றுகிறார் ஜூலியட்.


யாருமே இல்லாத இடம்போல் சஸ்பென்சாக காட்சி செல்லும் போது திடீரென்று வில்லன்  என்ட்ரி, அடியாட்கள்  என்ட்ரி எல்லாம் சஸ்பென்சை  நீர்த்துப் போகச் செய்கிறது.


வில்லனாக வரும் சண்முகம் ராமசாமி வித்தியாசமான கெட்டப்பில் வந்து மிரட்டி உள்ளார். “இவன் அவனில்லை அவ இவனில்ல” என்ற பாணியில் ஒரு வசனம் பேசி  பொடி வைக்கிறார் வில்லன் சண்முகம்.


கே ஆர்.ராகுல் இசையில் படத்தில் மொத்தம் பத்து பாடல்கள் பெறு கிறது. சஸ்பென்ஸ் த்ரில்லரில் 10 பாடலா என்றால் ஆமாம் 10 பாடல் தான். கிளைமாக்ஸ் முடிந்த பிறகும் திரையில் பாடல் தொடர்கிறது.


விஷ்ணு கண்ணன் குறுகிய அறையில் காட்சிகளை சுழன்று படமாக்கியிருக்கிறார்.


ராகுல் ஆர்.கிருஷ்ணா  ஹாலிவுட் சைன்ஸ் பிக்ஷன் பாணியில் கதையை சொல்ல முயன்றிருக்கிறார்.  காட்சிகளில்  இன்னும்  கூட விறுவிறுப்பு சேர்த்திருக்கலாம்.


ஐமா  –  சர்வைவல் சஸ்பென்ஸ்.

 

ஜீ. வி பிரகாஷ் குமார் நடிக்கும் 'மெண்டல் மனதில் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஜீ. வி பிரகாஷ் குமார் நடிக்கும் 'மெண்டல் மனதில் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு செல்வராகவன் - ஜீ வி பிரகாஷ் குமார்  கூட்டணியில் உர...