Tuesday, December 31, 2024

லிங்கேஷ், கஞ்சா கருப்பு நடிக்கும் புதிய திரைப்படம் விரைவில் வெளியாகிறது

*லிங்கேஷ், கஞ்சா கருப்பு நடிக்கும் புதிய திரைப்படம் விரைவில் வெளியாகிறது..*

*பரபரப்பான இறுதிக்கட்ட பணிகளில்,  Sky wanders Entertainment நிறுவனத்தின் முதல் திரைப்படம் !!*

*Sky wanders Entertainment நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.*

இறுதிக்கட்ட தயாரிப்பிலுள்ள இப்படத்தின் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. 

திரைத்துறை மீதான தீராக்காதலிலும், ஆர்வத்திலும், 63 வயதில் தனது முதல் படமாக  இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஜெயலட்சுமி.  இது அவரது முதல் திரைப்படம் என்றாலும் திரைத்துறைக்கு பழமையானவர். மீனவ மக்கள் வாழ்க்கை பின்னணியில்  ஒரு மென்மையான, முக்கோண காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. 

லண்டனிலிருந்து தமிழக கலாச்சாரத்தை ஆய்வு செய்ய, இந்தியா வருகிறார் நாயகி லியா. மீனவ இளைஞனான லிங்கேஷ் மீது அவருக்கு காதல் வருகிறது. ஆனால் லிங்கேஷுக்கு அவரது மாமன் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தடைகளைத் தாண்டி  அவர்கள் காதல் நிறைவேறியதா?, காதலர்கள் சேர்ந்தார்களா? என்பது தான் இப்படத்தின் கதை. 

கபாலி, பரியேறும் பெருமாள் படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களிலும், “காலேஜ் ரோட்” படத்தில் நாயகனாகவும் நடித்த லிங்கேஷ்,  இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த பிரிடிஷ் நடிகை லியா நாயகியாக நடித்துள்ளார். நடிகை திவ்யா இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார்.  அறிமுக நடிகர்  காட்பாடி ராஜன் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் மதுசூதனன், மாறன், கஞ்சா கருப்பு, சித்தா தர்ஷன், செந்தமிழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிந்த நிலையில் படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. 

தொழில் நுட்ப குழு விபரம் 

தயாரிப்பு - Sky wanders Entertainment

தயாரிப்பாளர் - ஜெயலட்சுமி

நிர்வாக தயாரிப்பாளர் - காட்பாடி ராஜன்

எழுத்து, இயக்கம் - ஜெயலட்சுமி 

ஒளிப்பதிவு - மூடர்கூடம் புகழ் டோனி ஜான்

இசை - சாண்டி சாண்டெல்லோ

எடிட்டிங் - தனி ஒருவன் படப்புகழ் கோபி கிருஷ்ணா 

பாடல்கள் - கபிலன், சந்துரு, ஜெயலட்சுமி 

பாடியவர்கள் - ஸ்வேதா மோகன், சைந்தவி, ஶ்ரீதர் சேனா, திலீப் வர்மன் ( மலேசியா ), அனிதா ஷேக்

மக்கள் தொடர்பு - வேலு

Monday, December 30, 2024

இந்தியாவின் தலைசிறந்த சமையல் மேஸ்ட்ரோவான, செஃப் தாமு, செஃப் தாமுவின் சுவையின் சங்கீதம் என்ற கேட்டரிங் மற்றும் ஈவெண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை தொடங்கினார்


 இந்தியாவின் தலைசிறந்த சமையல் மேஸ்ட்ரோவான, செஃப் தாமு, செஃப் தாமுவின் சுவையின் சங்கீதம் என்ற  கேட்டரிங் மற்றும் ஈவெண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை தொடங்கினார்.


வாழ்வின் ஒவ்வொரு கொண்டாட்டத்தையும்  இனிமையாகவும் அறுசுவையுடனும் அனுபவிக்கும் நோக்கத்துடன், சுவையின் சங்கீதம் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீங்கள் கண்ட கனவு திருமணங்கள் மற்றும் திருமணங்கள் மற்றும் மறக்க முடியாத நிகழ்வுகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை சுவையின் சங்கீதம் தர உள்ளது. 


சுவைகள் மற்றும் உணர்வுகளின் நல்லிணக்கத்தால் ஈர்க்கப்பட்ட சுவையின் சங்கீதம் எனும் இந்த பெயர்,  மகிழ்ச்சியான நினைவுகள் நிறைந்த தடையற்ற கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதற்கான வாக்குறுதியை பிரதிபலிக்கிறது.

கேட்டரிங் நிபுணத்துவத்திற்காக அறியப்பட்ட சுவையின் சங்கீதம் 

- கனவு திருமணங்களுக்கான உணவுகளை, செஃப் தாமுவால் தொகுக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் பாரம்பரிய மற்றும் சமகால சுவையோடு வழங்குகிறது.  

நிகழ்வு திட்டமிடல் மற்றும் மேலாண்மையின் கீழ், திருமணங்கள் முதல் தனியார் விருந்துகள் வரை, ஒவ்வொரு நிகழ்வும் துல்லியத்துடனும் ஆர்வத்துடனும் வடிவமைக்கப்படுகின்றன.

ஆடியோ-விஷுவல்கள் அதிநவீன உபகரணங்கள் உதவியோடு,  ஒவ்வொரு கணமும் பிரகாசமாக இருப்பதை உறுதி செய்கின்றன.

ஃபோட்டோகிராஃபி க மற்றும் வீடியோகிராஃபி திறமையான  கலைஞர்களால் எடுக்கப்பட்டு பசுமையான நினைவுகளை எக்காலத்திலும் உங்கள் எண்ணத்தில் நிறுத்தும்.

செஃப் தாமு,  பிராண்டின் பின்னணியில் தொலைநோக்கு பார்வை கொண்டவர். 

பல தலைமுறை சமையல் நிபுணத்துவம் மற்றும் சர்வதேச  நற்பெயருடன், செஃப் தாமு இந்திய உணவு வகைகளில் முன்னோடி செஃப் ஆக இருந்து வருகிறார். அவருடைய ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பு உணவு அனுபவங்களை மாற்றியமைத்து, பாரம்பரியம் மற்றும் நுட்பத்தின் கலவையைத் தேடுபவர்களுக்கு சுவையின் சங்கீதம் வாயிலாக வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

தொடர்புக்கு:- Shreedevi.K - 93848 06334,  Mageshwari.B - 98400 83111.


குளோபல் ஸ்டார் ராம்சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில், "கேம் சேஞ்சர்" படத்தின் டிரெய்லர், ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது

குளோபல் ஸ்டார் ராம்சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில்,  "கேம் சேஞ்சர்" படத்தின் டிரெய்லர், ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது !! 

பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும்  "கேம் சேஞ்சர்" படத்தின் டிரெய்லர் ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது !! 


குளோபல் ஸ்டார் ராம்சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில்,  மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா திரைப்படமான "கேம் சேஞ்சர்" படத்தின் அதிரடி டிரெய்லர் ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் ஜனவரி 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.   சமீபத்தில், தயாரிப்பாளர்கள் டல்லாஸில் பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வை நடத்தினர். அந்நிகழ்வு  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.  

அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு இந்தியப் படத்தின் முதல் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு இதுதான். தற்போது, கேம் சேஞ்சர் மற்றொரு சாதனையைப் படைத்துள்ளது. விஜயவாடா பிருந்தாவன் காலனியில் உள்ள, வஜ்ரா மைதானத்தில் 256 அடி உயரத்தில் ராம் சரண் நிற்கும் வகையில் மிக உயரமான கட்-அவுட், இன்று ஆயிரக்கணக்கான மெகா ரசிகர்கள் முன்னிலையில் அமைக்கப்பட்டது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த உயரமான கட்-அவுட் சர்வதேச அதிசய சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தில் ராஜு..., 
 "என்னுடைய ஃபோனில் இப்போது படத்தின் டிரெய்லர் உள்ளது. ஆனால் அது உங்களுக்கு வந்து சேர,  நாங்கள் இன்னும் நிறைய உழைக்க வேண்டும். இந்த நாட்களில் படத்தின் தலைவிதியை டிரெய்லர் தான் தீர்மானிக்கிறது.  ஜனவரி 1 புத்தாண்டு தினத்தில்,   நீங்கள் டிரெய்லரைப் பார்க்கலாம். விஜயவாடா தெலுங்கு திரையுலகின் தாய்வீடு, இங்கு  மெகா ரசிகர்கள், பவர் ஸ்டார் ரசிகர்கள் மற்றும் மெகா பவர் ஸ்டார் ரசிகர்கள் இணைந்து,  ராம் சரணுக்காக இந்த 256 அடி கட்-அவுட்டை அமைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  

பவர் ஸ்டார் பவன் கல்யாண் கலந்துகொள்ளும் வகையில்,  கேம் சேஞ்சரின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு ஜனவரி 4 அல்லது ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறும் என்று தில் ராஜு கூறினார். மேலும்  அவர் கூறுகையில்.., "நாங்கள் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம், அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதுபோன்ற ஒரு வெற்றிகரமான நிகழ்விற்குப் பிறகு, எங்கள் துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்து கொள்வதால், நாங்கள் மீண்டும்  ஒரு பெரிய நிகழ்வை நடத்த விரும்பினோம்.  இந்நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கும்.


படம் குறித்து  சிரஞ்சீவியின் கருத்தைப் பற்றிப் பேசிய தில் ராஜு..., 
"இன்று மதியம் 1 மணிக்கு சிரஞ்சீவிக்கு போன் செய்து, படம் பார்க்கச் சொன்னேன். மதியம் 2:45 மணிக்குப் பார்க்கத் தொடங்கினார். அவருடைய கருத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன். ஜனவரி 10 ஆம் தேதி பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறப்போகிறோம் என அவரிடம் இருந்து எனக்குச் செய்தி வந்தது. 

தில் ராஜு மேலும்  கூறுகையில், குளோபல் ஸ்டார் ரசிகர்களுக்கு இந்த சங்கராந்தி பிரமாண்டமான விருந்தாக இருக்கும் என்றார். "நான்கு வருடங்களுக்கு முன்பு ஷங்கர் சார் என்னிடம் கதை சொன்னபோது, நான் உணர்ந்ததைத்தான் இன்று படத்தைப் பார்த்த சிரஞ்சீவியும் உணர்ந்தார். ஐஏஎஸ் அதிகாரியாக, போலீஸ் அதிகாரியாக இரட்டை வேடத்தில் ராம்சரணின் முழுத்திறமையை,  அதிரடி நடிப்பை நீங்கள் பார்க்கலாம். ஷங்கரின் பாடல்களை நீங்கள் கொண்டாடுவீர்கள்,  10 முதல் 12 நாட்கள் வரை அவர் பாடல்களைப் படமாக்குவார்,  அதே போல் படமும்   2 மணி நேரம் 45 நிமிடம் தாருங்கள் என்றேன், சொன்ன நேரத்தில் கமர்ஷியல் ரீதியிலான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி, ஒரு அற்புதமான ப்ளாக்பஸ்டர் படத்தைத் தந்துள்ளார்."


இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒரு பாத்திரத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகவும், மற்றொன்றில் சமூக அக்கறைகொண்ட இளைஞனாகவும் தோன்றுகிறார். இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயராம், நவீன் சந்திரா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பிரபல ஒளிப்பதிவாளர் எஸ்.திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய, பிரபல இசையமைப்பாளர் எஸ்.தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் சார்பில்,  தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள  கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10, 2025 அன்று தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பிரமாண்டமாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழில் எஸ்.வி.சி மற்றும் ஆதித்யராம் மூவீஸ் தயாரித்துள்ள இப்படத்தை, ஏஏ பிலிம்ஸ் இந்தியில் வெளியிடவுள்ளது. வட அமெரிக்காவில், ஷ்லோகா என்டர்டெயின்மென்ட்ஸ் மூலம் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெளியிடப்படவுள்ளது.

Sunday, December 29, 2024

பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்டு 'துணிந்தவன்' என்ற பெயரில் ஒரு புதிய படம்

பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்டு 'துணிந்தவன்'  என்ற பெயரில் ஒரு புதிய படம்

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் (Orumbettavan ഒരുമ്പെട്ടവൻ ஒறும்பேட்டவன்)  'துணிந்தவன்' என்று அர்த்தம்

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எத்தனையோ நடைபெறுகின்றன. குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் கொடுமைகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. அந்த மன நோய்க்குக் காரணம் என்ன என்பது புரியாத புதிராக  உள்ளது .உண்மையில் அப்படி ஒரு பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்டு 'துணிந்தவன்'  என்ற பெயரில் ஒரு புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை சுஜீஷ் தெக்ஷணா காசி - ஹரிநாராயணன் இயக்கியுள்ளார்கள். இந்தப் படம் தக்ஷணா காசி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது .இந்தப் படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.உன்னி நம்பியார்  இசையமைத்துள்ளார். அச்சு விஜயன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஜீமோன் என். எம்.கலை இயக்கத்தைக் கவனித்துள்ளார்.

இந்தப் படத்தில் இந்திரன்,ஜாபர், ஜோனி ஆண்டனி, ஐ. என். விஜயன், சுதீஷ், டயானா ஹமீத், அபர்ணா சிவதாஸ்,  நடித்துள்ளனர். கதையின் பிரதான பாத்திரமான அந்த 10 வயது சிறுமியாகத் தயாரிப்பாளரின் மகள்  காஷ்மீரா நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கோட்டயம் பகுதியில் நடைபெற்றுள்ளது.

படத்தின் கதை பற்றி இயக்குநர் சுஜீஷ் கூறும்போது,

"அந்த பத்து வயதுக் குழந்தையை அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும் . எப்போதும் துறுதுறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் ஆற்றலின் வடிவமாக அந்தச் சிறுமி காணப்படுவாள்.வயது பத்து தான் என்றாலும் இருபது வயதுக்குடைய முதிர்ச்சியோடு பேசுவாள்,மனிதர்களைப்  புரிந்து கொள்வாள்.
யாருடைய தோற்றத்தைப் பார்த்தும் அவர்களுடைய குணத்தைக் கண்டுபிடித்து விடுவாள். ஒருவருடைய முக அசைவைப் பார்த்தே அவர்களது மனத்தைக் கணித்து விடுவாள்.குடித்துவிட்டு வருபவரையும் கண்டுபிடித்து விட்டு திட்டுவாள். அம்மா, அப்பா, அந்தக் குழந்தை என்று  இருக்கும் அந்த பாசக் குடும்பத்தில் காலத்தின் கோலத்தால் ஒரு புயல் அடிக்கிறது.பல சிக்கலில் இருந்து குழந்தை மீண்டு வந்ததா இல்லையா என்பது  படத்தின் முடிவு என்ன என்பதுதான் இந்த 'துணிந்தவன்' படத்தின் கதை.

உன்னி நம்பியார் இசையில் விஜய் ஜேசுதாஸ் வைக்கம் விஜயலட்சுமி, சித்தாரா கிருஷ்ணகுமார் பாடல்களைப் பாடியுள்ளனர்.பாடல்களை நியூ மியூசிக்  நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முற்றிலும் புதிய தொழில்நுட்பக் குழுவினர் இந்தப் படத்தைத் தங்கள் படமாக எண்ணி உழைத்திருக்கிறார்கள்.

இப்படத்தை 'எஸ் எஃப் சி' எனப்படும் சாகரம் பிலிம் கம்பெனி ஆட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது ''என்கிறார் இயக்குநர்.

இப்போது மலையாளத்தில் பெரிய நட்சத்திர நடிகர்கள் நடிக்காத நல்ல முயற்சிகள் வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் 'சூட்சும தர்ஷினி', 'மார்கோ' போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன .அந்த நிலையில் இந்தப் படம் மலையாளத்தில் துணிந்தவன் என்ற பொருள் படும்படி 'ஒறும்பேட்டவன்' என்ற பெயரில் ஜனவரி 3ஆம் தேதி வெளியாகிறது.
 அதனைத் தொடர்ந்து தமிழில் 'துணிந்தவன் ' என்கிற பெயரில்  2025 ஜனவரி இரண்டாம் வாரத்தில் தமிழகத் திரையரங்குகளில் வெளிவர உள்ளது.Orumbettavan ഒരുമ്പെട്ടവൻ ஒறும்பேட்டவன்)  'துணிந்தவன்'January 3rd worldwide release.

நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் 'கரவாலி' படத்தின் டீசர் வெளியீடு

*நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் 'கரவாலி' படத்தின் டீசர் வெளியீடு*

*கௌரவத்தின் சின்னமாக கவனம் ஈர்க்கும்  நடிகர் பிரஜ்வல் தேவராஜின் 'கரவாலி' பட டீசர்*

'அது சாதாரண நாற்காலி அல்ல. கௌரவத்தின் சின்னம்' எனும் பின்னணி குரலுடன் வெளியாகி இருக்கும் நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ' கரவாலி ' படத்தின் டீசர் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.‌

இந்திய திரையுலகில் 2025 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'கரவாலி'. இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தருணத்தில் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அதிரடியான புதிய டீசரை வெளியிட்டு, சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளனர். குரு தத் கனிகா இயக்கத்தில் 'டைனமிக் பிரின்ஸ்' பிரஜ்வல் தேவராஜ் நடித்துள்ள 'கரவாலி' படத்தின் தனித்துவமான டீசர்.. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. 

பொதுவாக டீசரில் கதாநாயகன்- கதாநாயகி அல்லது முன்னணி கதாபாத்திரத்தின் மீது கவனம் செலுத்துவார்கள். ஆனால் 'கரவாலி' படத்தின் அண்மைய டீசரில் கௌரவம் என்ற அடையாளப் பொருளை சுற்றி வருவது கவனத்தை கவர்ந்திருக்கிறது. அண்மையில் வெளியிடப்பட்ட புதிய டீசர் - முக்கியத்துவம் வாய்ந்த நாற்காலியை முதன்மைப்படுத்துகிறது. 'இது சாதாரண நாற்காலி அல்ல. கௌரவத்தின் சின்னம் ' என்ற பின்னணி குரலுடன் டீசர் தொடங்குகிறது. நடிகர் மித்ராவின் குரலில் வெளியாகி இருக்கும் இந்த டீசரில், 'இந்த கௌரவம் மிக்க நாற்காலியை உரிமை கொண்டாட துணிபவர்கள் தப்ப மாட்டார்கள்' என்பதையும் வலியுறுத்துகிறது. டீசரில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் மற்றும் உரையாடல்கள் ஒரு சிலிர்ப்பான அனுபவத்தையும், அற்புதமான தோற்றத்தையும் பார்வையாளர்களிடத்தில் உருவாக்குகிறது. 

'கரவாலி' என்பது கம்பளா உலகத்தை (பாரம்பரிய எருது விடும் பந்தயம்) மையமாகக் கொண்ட திரைப்படம். இதற்கு முன் வெளியான டீசரில் ..ஒரு குழந்தை பிறக்கும் போது கன்று ஒன்று பிறந்ததை உருவகப்படுத்தியது. இந்த புதிய டீசரில் அதன் தொடர்ச்சி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு சிறுவன் வளர்ந்து கௌரவத்தின் நாற்காலியை பார்த்துக் கொண்டிருப்பதை காண்பிக்கிறது. மேலும் அது பலரின் ஆசைக்கும் ஆளாகிறது. டீசரில் மித்ராவின் கட்டளையிடும் குரலுடன் கூடிய தோற்றம்.. ரமேஷ் சந்திராவின் அச்சுறுத்தும்  தோற்றம்.. மற்றும் இறுதி காட்சியில் 'டைனமிக் பிரின்ஸ்' பிரஜ்வல் தேவராஜின் கூர்மையான பார்வை ஆகியவை இடம் பிடித்திருக்கிறது. 

பிரஜ்வல் தேவராஜின் மூன்று விதமான தோற்றங்களும் போஸ்டர்களாக இதற்கு முன் வெளியாகி இருக்கிறது. இதில்  யக்ஷகானா - கம்பளா மற்றும் மகிஷாசுரன் -என ஈர்க்கப்பட்ட அவதாரங்களை கொண்டிருந்தது.  இந்த வித்தியாசமான தோற்றம் பிரஜ்வல் தேவராஜ் ஒரு யக்ஷகானா கலைஞராக நடிக்கிறாரா ? அல்லது கம்பளா பந்தய வீரராக நடிக்கிறாரா? அல்லது 'டைனமிக் பிரின்ஸ்' ஆக அதாவது அவரது கதாபாத்திரத்தை சுற்றியுள்ள சூழ்ச்சியை மையப்படுத்தியதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. 

நடிகர்கள் 
'டைனமிக் பிரின்ஸ்' பிரஜ்வல் தேவராஜ் , சம்பதா , ரமேஷ் இந்திரா , கே கே மாதா,  மித்ரா மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் : குரு தத் கனிகா 
தயாரிப்பு நிறுவனம் : குருதத் கனிகா பிலிம்ஸ் 
இணை தயாரிப்பாளர்கள் : வினோத்குமார் - ஷிதில் ஜி. பூஜாரி - சதீஷ்குமார் ராஜி - பிரசன்னா குமார்-  மனிஷ் தினகரன் .
கதை : சந்திரசேகர் பாண்டியப்பா 
ஒளிப்பதிவு : அபிமன்யு சதானந்தன் 
இசை & பின்னணி இசை : சச்சின் பஸ்ரூர்
படத்தொகுப்பு : பிரவீன் கல் 
கலை இயக்குநர் : குணா 
மக்கள் தொடர்பு : யுவராஜ்

https://youtu.be/-nd6AcS55O4?si=OzLMEIn4Ayw65mCX

Saturday, December 28, 2024

"Rotary’s Tailoring Skill Development Centre at Dr MGR Janaki College"

Mylapore MLA Tha. Velu Inaugurates Rotary’s Tailoring Skill Development Centre at Dr MGR Janaki College

●      Event witnesses distribution of 200 power sewing machines worth Rs 20 lakhs to women starting their own tailoring units

●      The skill development centre will offer free 3-month tailoring course, in association with Tamil Nadu Government’s Skill Development Department, for women

Chennai, Dec. 2024

Rotary International District 3234, in collaboration with the Rotary Club of Madras and the Women Empowerment, Economic Development, and Vocational Services Team, and Access Healthcare, has inaugurated the Rotary Skill Development Centre at Dr. MGR Janaki College of Arts and Science for Women to provide free training for women in tailoring and help them find jobs and start their own tailoring ventures.

Thiru. Tha. Velu, MLA of Mylapore, and Rtn. N.S. Saravanan, District Governor of RID 3234, inaugurated the skill development centre here today. AKS Rtn. Mahinder Jain, Chairman of Access Healthcare, graced the event as the Guest of Honour. The event also witnessed the distribution of 200 power sewing machines, worth about Rs. 20 lakhs, to women trained at Rotary’s existing skill development centres in Selaiyur, Sembakkam, and Mylapore.

 

The new centre at Dr. MGR Janaki Arts and Science College for Women will offer a 120-hour tailoring course, spread across three months, to women from all walks of life, in collaboration with Tamil Nadu Government’s Skill Development Department. The centre will also facilitate women in finding tailoring jobs or launching their own tailoring units by distributing power sewing machines free of cost. Rtn. Dr. Kumar Rajendran, Chairman of Dr. MGR Janaki College of Arts and Science for Women, who also serves as the District Rotaract Chair, has provided the necessary infrastructure for the smooth operation of the new skill development centre. Rotary International District 3234 is planning to train around 1500 women every year through all its four skill development centres. 

 

The inaugural and sewing machine distribution function was graced by Rtn. G. Chella Krishna, President and Rtn. Rajesh Mani, Honorary Secretary, Rotary Club of Madras; Rtn. S. Ravi IPP, District Conference and CSR Grant Chair; Rtn. Sujatha Panju, Chairperson, Vocational Services; Rtn. Rhama Ganesh, Chairperson, Economic Development; Rtn. Sanjay Rao Chaganti, Director, Vocational Services; Rtn. Kamala Selvam, Chairperson, Women’s Empowerment and Rtn. Dr. Kumar Rajendran.


முக்கிய வேடத்தில் அம்பிகாவும்கதையின் நாயகனாக தமிழ்பாண்டியனும்நடிக்கும்" எல்லாம் நன்மைக்கே "புதிய படம்!

முக்கிய வேடத்தில் அம்பிகாவும்
கதையின் நாயகனாக தமிழ்பாண்டியனும்
நடிக்கும்
" எல்லாம் நன்மைக்கே "
புதிய படம்!
*************************

முக்கிய வேடத்தில் அம்பிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் " எல்லாம் நன்மைக்கே " 
சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய " ஒன்வே" என்ற திரைப்படத்தில் நடித்த தமிழ்பாண்டியன் இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.மற்றொரு கதாநாயகனாக நடிக்க இளம்நடிகர் தேர்வு நடக்கிறது

கதை, திரைக்கதை, வசனம் எழுதி தமது முதல்படமாக இயக்கும் ராஜா பரணிதரபிரபு படத்தைப் பற்றி கூறியதாவது, :- " எல்லாம் நன்மைக்கே படத்தில் காதல், திரில்லர், காமெடி, குடும்பம், பாசம் உள்ளடக்கிய படமாக படமாக்குகிறேன். மக்களுக்கு பிடித்த கதை இது என்று அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன். தம்பிராமையா, அனுமோகன் , கிரேன் மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். அம்பிகாவின் மகளாகவும் கதாநாயகியாகவும் நடிக்க அம்பிகாவின் முகத்தோற்றத்தில் இருக்கும் கதாநாயகியை தேர்வு செய்ய உள்ளோம். இன்றைய வாழ்வியல் சூழ்நிலையில் அனைவருக்கும் தேவைகள் அதிகரித்து விட்டது. அப்படி தேவைப்படும் ஒன்றை வைத்து காமெடி, காதல், திரில்லர் கலந்து திரைக்கதை அமைத்து இப்படத்தை உருவாக்கி வருகிறேன். "  என்று இயக்குனர் ராஜாபரணிதரபிரபு கூறினார்.

படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கொழிஞ்சாம் பாறையில் துவங்கி பொள்ளாச்சி, வால்பாறையில் வளர்ந்து சென்னையில் முடிவடைகிறது. 

ஜான் பாபு நடன பயிற்சியையும், முருகானந்தம் ஒளிப்பதிவையும், யானி. ஆர். இசையையும் கவனிக்கின்றனர்.

ஜி குரூப் புரொடக்சன் சார்பில் தனசேகரன் - கோழிக்கடை கோபால் சேர்ந்து தயாரிக்கின்றனர்.

முன்னணி இயக்குனர்கள் பலரிடம் டைரக்சன் பயின்ற ராஜா பரணிதரபிரபு இதன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி தமது முதல் படமாக இயக்குகிறார்.


விஜயமுரளி
PRO

Friday, December 27, 2024

கலாமயா பிலிம்ஸ் ஜிதேஷ் வி வழங்கும் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ்-நிமிஷா சஜயன் நடிக்கும் ’என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

*கலாமயா பிலிம்ஸ் ஜிதேஷ் வி வழங்கும் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ்-நிமிஷா சஜயன் நடிக்கும் ’என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!*

இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள சோஷியல்- பொலிட்டிகல்- திரில்லர் படமான ‘என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ராமேஸ்வரம், சென்னை, பாண்டிச்சேரி மற்றும் கொச்சி உள்ளிட்ட 56 இடங்களில் மூன்று ஷெட்யூல்களில் படமாக்கப்பட்டுள்ளது.

கலாமயா பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஜிதேஷ் வி கூறும்போது, ”திறமையான இந்த அணியுடன் இணைந்து பணிபுரிந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தான் எடுத்து நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் நடிகர் கருணாஸ். அவரது அர்ப்பணிப்பு பரவலான பாராட்டுகளையும், ஏராளமான விருதுகளையும் பெற்றுத் தரும் என்பதில் உறுதியாக உள்ளேன். நடிகை நிமிஷா சஜயனும் இந்த கதாபாத்திரத்திற்காக கடுமையான அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இயக்குநர் சஜீவ் பழூருக்கு தமிழ் திரைப்படங்கள் மீது பெரும் காதல் உள்ளது. இந்தப் படத்தில் நிச்சயம் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வார்.

ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி சிறப்பான ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார்.   ஒட்டுமொத்த தொழில்நுட்பக்குழுவினரும் நடிகர்களும் முழுப்படப்பிடிப்பும் சீக்கிரம் முடிவடைய ஒத்துழைப்புக் கொடுத்துள்ளனர். சாம் சிஎஸ் இசை கதைக்கு புது உத்வேகம் கொடுத்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயம் உருவாகும். விரைவில் படத்தில் அறிவுப்பு தேதி வெளியாகும்” என்றார்.

கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க, ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன்ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி மற்றும் பலரும் நடித்திருக்கின்றனர். 

*தொழில்நுட்ப குழு:*

பேனர்: கலாமயா பிலிம்ஸ்,
தயாரிப்பாளர்: ஜிதேஷ் வி,
எழுத்து மற்றும் இயக்கம்: சஜீவ் பழூர்,
ஒளிப்பதிவாளர்: ஆல்பி ஆண்டனி,
இசையமைப்பாளர்: சாம் சி எஸ்,
படத்தொகுப்பு: ஸ்ரீஜித் சாரங்,
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: எம். சிவகுமார்,
கலை இயக்குநர்: கே. சிவகிருஷ்ணா,
ஆக்‌ஷன்: பி சி ஸ்டண்ட்,
இணை இயக்குநர்: ரதீஷ்,
ஆடை வடிவமைப்பாளர்: ஆர். முருகானந்தம்,
ஒப்பனை: வி. தினேஷ்குமார்,
நிர்வாக தயாரிப்பாளர்கள்: முகேஷ், சல்மான் கே.எம்,
ஸ்டில்ஸ்: கார்த்திக் ஏ.கே,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்,
தயாரிப்பு மேலாளர்கள்: ஆர். ராஜீவ் காந்தி, பி கார்த்தி

வேலம்மாள் நெக்ஸஸ் குழு உலக கேரம் சாம்பியன்களை அவர்களின் சாதனைகளுக்காக பாராட்டுகிறது!

வேலம்மாள் நெக்ஸஸ் குழு உலக கேரம் சாம்பியன்களை அவர்களின்  சாதனைகளுக்காக பாராட்டுகிறது! 

சென்னை, டிசம்பர் 27, 2024: வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தின் Correspondent திரு.எம்.வி.எம்.வேல்மோகன், உலக கேரம் சாம்பியன்களான திருமதி.எம்.காசிமா, திருமதி.வி.மித்ரா, மற்றும் திருமதி.கே.நாகஜோதி ஆகியோரைப் பெருமையுடன் பாராட்டி ஊக்கப்படுத்தினார். உலக அரங்கில் சாதனைகள். இன்று நடைபெற்ற பாராட்டு விழா, கேரம் விளையாட்டில் சாம்பியன்களின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை எடுத்துக்காட்டுகிறது.

தங்களது சிறப்பான ஆட்டத்தால் தேசத்திற்குப் பெருமை சேர்த்த சாம்பியன்கள், வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தால் தலா ஐம்பது லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசாக ₹50,00000/- வழங்கப்பட்டது. இந்தப் பாராட்டுச் சின்னம், இந்தியாவில் விளையாட்டுத் திறமையை அங்கீகரிப்பதிலும் ஊக்குவிப்பதிலும் அமைப்பின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் குறிக்கிறது.

இந்நிகழ்ச்சியில் பேசிய வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தின் பிரதிநிதி , நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளித்த சாம்பியன்களின் கடின உழைப்பு மற்றும் உறுதியை பாராட்டினார். "தங்கள் துறையில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல், கேரம் விளையாட்டில் இந்தியாவை உலக வரைபடத்தில் நிலைநிறுத்தியுள்ள இந்த விதிவிலக்கான திறமையாளர்களை கௌரவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவர்களின் சாதனைகள் நாடு முழுவதும் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகமாக விளங்குகின்றன" என்று பிரதிநிதி கூறினார்.

இந்த பாராட்டு விழாவில் மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, விளையாட்டை ஊக்குவிப்பதிலும் திறமைகளை வளர்ப்பதிலும் வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தின் துடிப்பான உணர்வை பிரதிபலிக்கிறது. ஒற்றுமை மற்றும் சிறந்து விளங்குவதற்கான ஒரு ஊடகமாக விளையாட்டின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் உரைகள், நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டமான சூழல் ஆகியவற்றால் நிகழ்வு குறிக்கப்பட்டது.

வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம், கல்வி, விளையாட்டு மற்றும் சாராத செயல்பாடுகள் உட்பட பல்வேறு துறைகளில் இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பதில் எப்போதும் முன்னணியில் உள்ளது. மாணவர்கள் தேசிய மற்றும் சர்வதேச தளங்களில் சிறந்து விளங்கக்கூடிய மற்றும் பிரகாசிக்கக்கூடிய ஒரு முழுமையான சூழலை வளர்ப்பதில் குழு உறுதியாக நம்புகிறது.

இந்த உலக சாம்பியன்களை கௌரவிப்பதன் மூலம். வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம், விளையாட்டு வீரர்களை அவர்களின் வெற்றியை நோக்கிய பயணத்தில் ஊக்குவித்து ஆதரிப்பதில் அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. திருமதி.எம்.காசிமா, செல்வி.வி.மித்ரா, மற்றும் திருமதி.கே.நாகஜோதி ஆகியோரின் முன்மாதிரியான சாதனைகளுக்காக இந்த அமைப்பு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது மேலும் அவர்களின்g எதிர்கால முயற்சிகள் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறது.

Rajakili - திரைவிமர்சனம்

 "ராஜகிளி" ஒரு பிடிமான ஸ்கிரிப்ட் மற்றும் வசீகரிக்கும் கதையுடன், இந்த திரைப்படம் ஒரு மறைந்த தொழில் அதிபரின் வாழ்க்கையை ஆராய்கிறது, இது தம்பி ராமையாவால் வடிவமைக்கப்பட்டு இயற்றப்பட்டது. இது அவரது பேரரசின் வெற்றிகள் மற்றும் ஆபத்துகளுடன் மல்யுத்தம் செய்யும் ஒரு சக்திவாய்ந்த அதிபரின் நுணுக்கமான சித்தரிப்பை முன்வைக்கிறது, அதே நேரத்தில் அவரது தனிப்பட்ட தவறான செயல்கள் புறக்கணிக்க முடியாத அலைகளை உருவாக்குகின்றன.

தம்பி ராமையா ஒரு கவர்ச்சியான ஆனால் ஆழமான குறைபாடுள்ள தொழிலதிபரின் பாத்திரத்தை வெளிப்படுத்துகிறார், அவரது திருமணத்திற்குப் புறம்பான தப்பிப்புகள் ஒரு தார்மீக மோதலுக்கு மேடை அமைத்தன. கதாநாயகன் ஒரு நெறிமுறை கேள்விக்குரிய செயலை நாடும்போது கதை ஒரு இருண்ட திருப்பத்தை எடுக்கும்: அவருக்கும் அவரது விருப்பத்தின் பொருளுக்கும் இடையில் நிற்கும் ஒரு ஆணின் மறைவைத் திட்டமிடுவது - முரண்பாடாக, அதே பெண்ணை அவர் ஒருமுறை திருமணம் செய்து கொள்ள உதவினார். இந்த முக்கிய செயல் ஒரு சங்கிலி எதிர்வினையைத் தூண்டுகிறது, அது அவரது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உலகங்களை சீர்குலைக்கிறது.

சமுத்திரக்கனி ஒரு நுட்பமான மற்றும் அழுத்தமான நடிப்பை, அதிபருக்கு அவரது உடைந்த குடும்பத்துடன் சமரசம் செய்ய உதவும் ஒரு பாத்திரமாக வெளிப்படுத்துகிறார். பதற்றம் மற்றும் உணர்ச்சி ஆழமான தருணங்கள் மூலம், அவர் இதயப்பூர்வமான மறு இணைவுக்கான ஊக்கியாக மாறுகிறார், கதாநாயகனை தனது பிரிந்த அன்புக்குரியவர்களுடன் நேருக்கு நேர் கொண்டு வருகிறார். தீபா ஷங்கர், அதிபரின் மனைவியாக நடிக்கிறார், உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு சிறிய போக்கு எப்போதாவது ஓட்டத்தைத் தடுக்கிறது என்றாலும், உணர்ச்சிகரமான காட்சிகளில் ஜொலிக்கிறார்.

தம்பி ராமையாவின் அடுக்கு நடிப்புடன், நகைச்சுவைக்கும் நாடகத்துக்கும் இடையே படம் சமநிலையை ஏற்படுத்துகிறது. அவர் தனது நம்பகத்தன்மையால் ஈர்க்கப்பட்டாலும், மிகைப்படுத்தப்பட்ட நடனக் காட்சி போன்ற சில காட்சிகள் நம்பகத்தன்மையை சற்று நீட்டின.

ஒரு ஆச்சரியமான அம்சத்தைச் சேர்த்து, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, க்ளைமாக்ஸில் ஒரு சுருக்கமான ஆனால் மறக்கமுடியாத கேமியோவை உருவாக்கி, கதைக்கு தனிப்பட்ட தொடர்பைக் கொடுக்கிறார்.

தார்மீக ரீதியாக சிக்கலான கருப்பொருள்களை ஆராய்ந்தாலும், படம் ஒரு லேசான தொனியை பராமரிக்கிறது, நகைச்சுவை, உள்நோக்கம் மற்றும் மீட்பின் தருணங்களை வழங்குகிறது. இது பொழுதுபோக்கு மற்றும் உணர்ச்சி ஆழம் ஆகியவற்றின் கலவையாகும், இது சிந்தனைமிக்க மற்றும் சுவாரஸ்யமான சினிமா அனுபவத்தைத் தேடும் பார்வையாளர்களுக்கு ஈர்க்கக்கூடிய கண்காணிப்பாக அமைகிறது.

Rajakili cast znd crew

Producer: Suresh Kamatchi 

Director: Umapathy Ramaiah

CAST: Thambi Ramaiya, Samuthirakani, Deepa, Praveen Kumar G, Daniel Annie Pope, Pazha Karupaiya, Vetrikumaran, Arul Doss, Suveta Shrimpton, Reshma Pasupaleti, Subha , VJ Andrews, Malik , King Kong & Others

Banner: V House Productions

DOP: Kedarnath - Gopinath 

BGM: Sai Dinesh

Audiographer: Tapas Nayak

Editor: Sudharsan R

Art Director: Vairabalan - Veerasamar 

Dance: Brinda - Sandy

Stunt Director: Silva Master

Stills: Milan Seenu

Costume Designer: Navadevi Rajkumar  

Publicity Designer: Sindhu Grafix

Manager : K H Jagadeesh 

Executive Producer: Subramanian N

PRO: John A

Music On VH Music

MAX - திரைவிமர்சனம்


மேக்ஸ் ஒரு மின்னூட்டல் திரைப்படமாகும், இது பார்வையாளர்களை ஒரு இரவில் முழுவதுமாக ஒரு பிடிமான பயணத்தில் அழைத்துச் செல்கிறது. இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு போலீஸ் படை இடையே தற்செயலான மோதலுடன் கதை தொடங்குகிறது, இது காயமடைந்த அதிகாரிகளுக்கும் அதிக பதற்றத்திற்கும் வழிவகுக்கிறது. லோக்கல் ஸ்டேஷனுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் அர்ஜுன் மஹாக்ஷய் (சுதீப்) பொறுப்பேற்று, அமைச்சர்களின் மகன்களாக மாறிய குற்றவாளிகளை கைது செய்கிறார். ஸ்டேஷனின் ஆயுத அறையில் மர்மமான சூழ்நிலையில் அவர்கள் இறந்து கிடக்கும்போது, ​​வழக்கமான வழக்காகத் தொடங்குவது அதிர்ச்சியூட்டும் திருப்பங்கள் மற்றும் அதிக-பங்கு நாடகத்தின் வலையில் சுழல்கிறது. அரசியல் அழுத்தம் மற்றும் உடனடி ஆபத்தை எதிர்கொள்வதால், அர்ஜுன் தனது அணியையும் நிலையத்தையும் எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக பாதுகாக்க வேண்டும்.

சுதீப் தீவிரமான மற்றும் வசீகரிக்கும் ஒரு கட்டளையிடும் நடிப்பை வழங்குகிறார். 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய திரைக்குத் திரும்பிய அவர், முதல் பிரேமிலிருந்தே பார்வையாளர்களை பரவசப்படுத்தும் ஒரு மாஸ்-அப்பீல் ஆக்ஷன் ஹீரோவாக திகழ்கிறார். உணர்ச்சிகரமான ஈர்ப்பு சக்தியுடன் தீவிரமான செயலைச் சமநிலைப்படுத்தி, சுதீப் திரைப்படத்தை ஒரு இதயப்பூர்வமான குறிப்பில் முடிக்கிறார், அவரது பன்முகத்தன்மையை வலுப்படுத்துகிறார். ஒரு காதல் துணைக் கதையின் கவனச்சிதறல் இல்லாமல், மேக்ஸ் அதன் அட்ரினலின் எரிபொருளில் முழுமையாக கவனம் செலுத்துகிறது, இது ஒரு தூய சினிமா விருந்தாக மாற்றுகிறது.

வரலக்ஷ்மி ஷரத்குமார், சம்யுக்தா ஹார்னாட், சுக்ருதா வாக்லே, இளவரசு உள்ளிட்ட குழுவினர் தங்களது அழுத்தமான நடிப்பால் படத்தை உயர்த்துகிறார்கள். இடைவிடாத செயல் காட்சிகள், வீடியோ கேமின் முன்னேற்றத்தை நினைவூட்டுகின்றன, பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் விளிம்பில் வைத்திருக்கின்றன. ஒரு இரவு நேரப்பதிவு சஸ்பென்ஸை உயர்த்துகிறது மற்றும் எதிர்க்க கடினமாக இருக்கும் அவசர உணர்வை சேர்க்கிறது.

இயக்குனர் விஜய் கார்த்திகேயாவின் இறுக்கமான திரைக்கதை ஒவ்வொரு நொடியும் கணக்கிடப்படுவதை உறுதிசெய்கிறது, பதற்றத்தையும் உற்சாகத்தையும் தடையின்றி உருவாக்குகிறது. அஜனீஷ் லோக்நாத்தின் மின்னேற்ற பின்னணி இசை படத்தின் தீவிரத்தை கூட்டி, படத்தின் வெற்றியின் ஒரு அங்கமாகிறது.

அதன் கவர்ச்சியான விவரிப்பு, மூச்சடைக்கக்கூடிய செயல் மற்றும் நட்சத்திர நிகழ்ச்சிகளுடன், மேக்ஸ் ஒரு சிலிர்ப்பான சினிமா சவாரி ஆகும், இது எல்லா முனைகளிலும் வழங்குகிறது. ஆக்‌ஷன் பிரியர்களும், இருக்கையின் விளிம்பில் கதை சொல்லும் ரசிகர்களும் இந்த உயர்-ஆக்டேன் பிளாக்பஸ்டரைத் தவறவிடாதீர்கள்!


 

The Smile Man - திரைவிமர்சனம்

வெள்ளித்திரையில் தனது 150வது வெளியீடை கொண்டாடும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாருக்கு இது ஒரு முக்கிய படம்! சட்ட அமலாக்கத்தின் சின்னமான சித்தரிப்புகளுக்கு பெயர் பெற்ற சரத் குமார், தமிழ் சினிமாவில் அவர் ஏன் பிரியமான நபராக இருக்கிறார் என்பதை நமக்கு நினைவூட்டும் ஒரு சக்திவாய்ந்த மற்றும் தாக்கமிக்க நடிப்பை வெளிப்படுத்தி, மீண்டும் ஒரு போலீஸ்காரராக சிறந்து விளங்குகிறார். டைப்காஸ்ட் ஆவதற்கான ஆபத்து இருந்தபோதிலும், அவர் தனது பாத்திரத்திற்கு நுணுக்கத்தையும் ஆழத்தையும் கொண்டு வருகிறார், இது அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில் மறக்கமுடியாத மைல்கல்லாக அமைகிறது.

அல்சைமர் நோயை எதிர்த்துப் போராடும் போது, ​​தொடர் கொலைகாரன் சம்பந்தப்பட்ட ஒரு திடுக்கிடும் வழக்கை எடுக்கும் ஒரு உறுதியான மூத்த காவலரை மையமாக வைத்து படத்தின் கதை அமைந்துள்ளது. இந்த எதிரி சாதாரண குற்றவாளி அல்ல, ஆனால் ஒரு கொடூரமான கையொப்பம் கொண்ட ஒருவன் - பாதிக்கப்பட்டவர்களின் வாயை வினோதமான புன்னகையாக செதுக்குகிறான். ஒரு இடைவெளிக்குப் பிறகு, கொலையாளி மீண்டும் வெளிவருகிறார், நோய்வாய்ப்பட்ட ஆனால் உறுதியான மூத்த காவலரிடம் இருந்து வழிகாட்டுதலைக் கோரி ஒரு புதிய அதிகாரி (ஸ்ரீ குமார்) தலைமையிலான உயர்-பங்கு விசாரணையைத் தூண்டினார். பிடிக்கும் பூனை-எலி துரத்தல் பார்வையாளர்களை யூகிக்க வைக்கும் திருப்பங்களுடன் விரிகிறது.

சரத்குமார் சந்தேகத்திற்கு இடமின்றி படத்தை எடுத்துச் செல்லும் போது, ​​துணை நடிகர்கள் ஒரு கலவையான பையை வழங்குகிறார்கள். சிஜா ஒரு கண்ணியமான நடிப்பை வழங்குகிறார், ஆனால் ஸ்ரீ குமாரின் சித்தரிப்பு முன்னேற்றத்திற்கு இடமளிக்கிறது. ராஜ்குமாரின் ஒன்-லைனர்கள், லெவிட்டியை சேர்க்கும் நோக்கத்தில் இருந்தாலும், காட்சிகளை உண்மையிலேயே பற்றவைக்கும் பஞ்ச் இல்லை. இருப்பினும், ஈர்க்கக்கூடிய கதைக்களம் மற்றும் சரத் குமாரின் நட்சத்திர திரை இருப்பு ஈடுசெய்யும்.

விக்ரம் மோகனின் ஒளிப்பதிவு பதட்டத்தையும் சஸ்பென்ஸையும் நேர்த்தியுடன் படம்பிடித்துள்ள நிலையில், படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் சிறப்புடன் குறிப்பிடத் தக்கவை. காட்சிகள் கதையை மேம்படுத்துகிறது, பார்வையாளர்களை இருண்ட மற்றும் சதி உலகிற்கு இழுக்கிறது.

இறுதியில், திரைப்படம் ஒரு நியாயமான நன்கு தயாரிக்கப்பட்ட த்ரில்லர் ஆகும், இது சரத் குமாரை அவரது உறுப்புகளில் வெளிப்படுத்துகிறது, அதே நேரத்தில் அதிரடி, சூழ்ச்சி மற்றும் உணர்ச்சி ஆழம் நிறைந்த கதையை நெசவு செய்கிறது. இந்த வகை மற்றும் நட்சத்திரத்தின் ரசிகர்கள் இந்த மைல்கல் திட்டத்தில் ரசிக்க அதிகம் காணலாம். சரத்குமாரின் பாரம்பரியத்திற்கு இது ஒரு பொருத்தமான அஞ்சலி, அவர் ஏன் தமிழ் சினிமாவில் கணக்கிடுவதற்கான சக்தியாக இருக்கிறார் என்பதை நிரூபித்துள்ளார்.

Smile Man Cast & Crew Details

Cast

Sarath Kumar - Chidambaram nedumaran

Sija rose - keerthana

Iniya - chithra

Sreekumar- Aravind

Suresh Menon - Venkatesh

Natrajan - balamurugan

Rajkumar - pichumani

Malairajan - joseph

Crew

Directed by Syam-Praveen  

Produced by Salildas, Aneesh Haridasan, Anandan T  

Starring Supreme Star Sarath Kumar, Sri Kumar, Sijaa Rose, Ineya, George Maryan, Rajkumar, Kumar Natarajan, Baby Azhiya  

Music composed by Gavaskar Avinash  

Written by Kamala Alchemis  

Cinematography by Vikram Mohan  

Editor San Lokesh  

Finance Controller Anu Mu  

Executive Producer Mugesh Sharma  

Costume Designer M Muhammed Subair  

Stunts PC Stunt’s, K Ganesh Kumar  

Sound Design A Sathish Kumar  

Sound Mixing Harish  

VFX FireFox  

Makeup Vinod Sukumaran  

Colorist Liju Prabhakar  

DI Rang Rays Mediaworks  

Stills Velu  

Publicity Designs Rishi  

PRO Sathish, Siva (Aim)  

Subtitles Pradeep K Vijayan  

Titles and Credits Rishi  

Marketing Ka Film Company

 

Wednesday, December 25, 2024

பாகீரா: KGF மற்றும் சலாரின் பின்னணியிலிருக்கும் தீர்கதரிசிகளிடமிருந்து ஒரு ஆக்ஷன்-நிறைந்த பயணம் ஆனது ஹிந்தியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 25 டிசம்பரிலிருந்து திரையிடப்படும்!*

*பாகீரா: KGF மற்றும் சலாரின் பின்னணியிலிருக்கும் தீர்கதரிசிகளிடமிருந்து ஒரு ஆக்ஷன்-நிறைந்த பயணம் ஆனது ஹிந்தியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 25 டிசம்பரிலிருந்து திரையிடப்படும்!*

*2024 ஆண்டின் மிக அதிக வசூலை பெற்ற கன்னட படமான பாகீரா 25 டிசம்பரிலிருந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்யப்படும்*

KGF, காந்தாரா மற்றும் சலார் போன்ற சினிமா மைல்கற்களை வழங்கியபின் ஹொம்பாலே பிலிம்சின் சிறப்புத்தன்மையின் பாரம்பரியம் பாகீராவுடன் தொடர்கிறது. தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டவுடன் இப்படம் 2024 ஆண்டின் மிக அதிக வசூலை பெற்ற கன்னட படமாக மாறியது. இந்த சமூக காவலன் திரில்லர், உலகெங்கிலுமுள்ள   ரசிகர்களுக்காக தனது உலகளாவிய டிஜிட்டல் பிரவேசத்தின் மூலம் ஹிந்தியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 25 டிசம்பரிலிருந்து அரங்கேறவிருக்கிறது.

டாக்டர் சூரியால் இயக்கப்பட்டு பிரஷாந்த் நீல்-ஆல் எழுதப்பட்ட பாகீரா படம், தங்கப்பதக்கம் வென்ற மற்றும் நீதித்துறையின் வரம்புகளினால் மனமயக்கமுற்று சமூக காவலராகும் IPS அதிகாரியான வேதாந்தின் (ஸ்ரீமுரளி) கதையை கூறுகிறது. வேதாந்த் பாகீராவின் முகமூடியை அணிந்த பின் அவர் மிக சக்திவாய்ந்த வில்லனையும் (கருடா ராம்) அயராத ஒரு CBI அதிகாரியையும் (பிரகாஷ் ராய்) நீதிக்கான போர்க்களத்தில் எதிர்கொள்கிறார்.

அதிரடி காட்டும் ஆக்ஷன் சீக்வென்சுகள், ஆழ்ந்த உணர்ச்சி பாவம் மற்றும் ருக்மிணி வசந்த், ரங்காயனா ரகு மற்றும் அச்யுத் குமார் போன்ற முன்னணி நட்சத்திரங்களை கொண்ட பாகீரா படம், வெயிட்டான சினிமா அனுபவங்களை புனையும் ஹொம்பாலே பிலிம்சின் உறுதிப்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

ஹொம்பாலே பிலிம்சின் தயாரிப்பாளரான விஜய் கிரகன்டுர் கூறுகையில், "KGF தொடங்கி பாகீரா வரை ஹொம்பாலே பிலிம்சானது உலகளாவிய வகையில் ஆர்வத்தை தூண்டும் தன்மை மற்றும் ஈடற்ற தீவிரம் ஆகியவற்றை கொண்ட கதைகளை வழங்குவதை எப்பொழுதும் நோக்கமாக கொண்டுள்ளது. பாகீரா ஆண்டின் மிக அதிக வசூலை பெற்ற கன்னட திரைப்படம் மட்டுமல்ல இப்போது ஹிந்தியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மூலம் பரந்துப்பட்ட ரசிகர்களை  சென்றடையவிருக்கிறது என்பதில் மிகுந்த குதூகலம் அடைகிறோம். இந்த கிறிஸ்துமசின் போது ஹொம்பாலே பிலிம்சின் மாயாஜாலத்தை ரசிகர்கள் உணரும் சரியான தருணம் இதுவேயாகும்," என்று விளக்கினார்.

வேதாந்த் பாத்திரத்தை அலங்கரிக்கும் ஸ்ரீமுரளி கூறுகையில், "வேதாந்த் கேரக்டரை செய்வது மற்றும் ஒரு முக்கிய அதிகாரி என்பதிலிருந்து ஒரு அயராத சமூக காவலன் என்ற நிலைக்கு அவர்  தன் பயணத்தை மேற்கொள்வது என்பது சவால் நிறைந்ததாகவும் ஆத்ம திருப்தியை வழங்குவதாகவும் இருந்தது. திரையரங்கு வெளியீட்டை தொடர்ந்து கிடைத்த மாபெரும் வெற்றிக்கு பின் பாகீரா இப்போது மேலதிக விசிறிகளுக்கு விருந்து படைக்க டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இந்தியில் வெளியாவதை குறித்து மிகவும் குதூகலம் அடைகிறேன்," என்று விளக்கினார்.   

பாகீரா டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இந்தியில் 25 டிசம்பரிலிருந்து ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

ALANGU - திரைவிமர்சனம்

 எஸ்.பி.சக்திவேலின் சமீபத்திய சினிமா முயற்சியான அலங்கு, பசுமையான மற்றும் துடிப்பான தமிழ்நாடு-கேரள எல்லைக்கு எதிராக அமைக்கப்பட்ட மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான பிணைப்பை ஆழமாக நகரும் ஆய்வு ஆகும். திறமையான குணநிதியால் சித்தரிக்கப்பட்ட போராடும் மாணவன் தர்மன் மற்றும் அவனது பிரிக்க முடியாத தோழனான காளி என்ற விசுவாசமான நாயை சுற்றி கதை சுழல்கிறது. அவர்களின் பிணைப்பு கதையின் இதயத்தை உருவாக்குகிறது, ஆனால் தர்மன் வேலைக்காக கேரளாவுக்கு இடம்பெயர்ந்தபோது அது சோதிக்கப்படுகிறது, காளியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பேரழிவு தரும் நாய் அழிப்பு உத்தரவை எதிர்கொள்ள மட்டுமே.

இத்திரைப்படம் சமூக நாடகத்தின் கூறுகளை கிரிப்பிங் ஆக்ஷனுடன் பின்னிப்பிணைத்து, பல நிலைகளில் உள்ள பார்வையாளர்களை எதிரொலிக்கும் ஒரு கதையை உருவாக்குகிறது. ஆரம்ப பாதியானது அளவிடப்பட்ட வேகத்தில் வெளிப்படும் அதே வேளையில், கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களது உறவுகளுக்கான அடித்தளத்தை அமைக்கிறது, இரண்டாம் பாதி கியர்களை மாற்றி, பார்வையாளர்களை முழுமையாக ஈடுபடுத்தும் தீவிரமான மற்றும் சிலிர்ப்பான தருணங்களை வழங்குகிறது.

குணநிதியின் தர்மன் சித்தரிப்பு இதயப்பூர்வமானது மற்றும் அழுத்தமானது, கதையின் உணர்ச்சிகரமான கனத்தை தொகுத்து அளிக்கிறது. ஸ்ரீ ரேகா மற்றும் செம்பன் வினோத் உள்ளிட்ட துணை நடிகர்கள் தங்கள் பாத்திரங்களுக்கு ஆழத்தையும் நம்பகத்தன்மையையும் கொண்டு, ஒட்டுமொத்த கதையை வளப்படுத்துகிறார்கள்.

பார்வைக்கு அலங்கு என்பது புலன்களுக்கு விருந்து. பாண்டிகுமாரின் ஒளிப்பதிவு இப்பகுதியின் அமைதியான நிலப்பரப்புகளை அழகாகப் படம்பிடித்து, அவற்றை வெளிப்படும் பதற்றம் மற்றும் நாடகத்துடன் ஒப்பிடுகிறது. அஜீஷின் இசையமைப்பு, படம் முடிந்து வெகுநேரம் நீடித்திருக்கும் பேய் மெல்லிசைகளுடன், உணர்வுப்பூர்வமான அதிர்வலையை அதிகரிக்கிறது.

வன்முறையை சித்தரிக்கும் சில காட்சிகள் தீவிரமானதாக உணரலாம் என்றாலும், அவை கதையின் மையமான பின்னடைவு மற்றும் விசுவாசத்தின் பங்குகளையும் கருப்பொருளையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அதன் மையத்தில், மனிதர்களுக்கும் அவர்களின் விலங்கு தோழர்களுக்கும் இடையே உள்ள கட்டுப்பாடற்ற தொடர்பைப் பற்றிய சக்திவாய்ந்த மற்றும் உலகளாவிய செய்தியை அலங்கு வழங்குகிறது.

கசப்பான உணர்ச்சிகளையும், துன்பத்தின் மீது அன்பு மற்றும் விசுவாசத்தின் வெற்றியையும் கொண்டாடும் கதைகளை விரும்புபவர்கள், அலங்கு அவசியம் பார்க்க வேண்டிய படமாகும். இது உங்கள் இதயத்திலும் மனதிலும் நிலைத்து நிற்கும் ஒரு சினிமா அனுபவம், இனங்கள் தாண்டிய ஆழமான பிணைப்புகளை நமக்கு நினைவூட்டுகிறது.

Alangu Cast & Crew :

நடிகர்கள்

தர்மன் - குணாநிதி

மலையன் - காளி வெங்கட்

அகஸ்டின் - செம்பன் வினோத்

பிலிப் - சரத் அப்பானி

பச்சை - சவுந்தர்ராஜா

தங்கம் - ஸ்ரீரேகா

காவல் ஆய்வாளர் - சன்முகம் முத்துசாமி

சாக்கோ - ரெஜின் ரோஸ்

கருப்பு - இதயக்குமார்

சிலுவை - மாஸ்டர் அஜய்

மலர் - கொட்ரவை

ஏஞ்சல் - தீக்‌ஷா

முருகன் - மஞ்சுநாதன்

கான்ஸ்டபிள் தர்மலிங்கம் - ஆவுடை  நாயகம்

SI ஜார்ஜ் - அப்புனி சசி

கிளி - தீபம் பிலிபோஸ்

கந்தவேல் - அற்புதநாத்

மல்லி - கங்காதரணி

கனகன் மாமா - சக்தி

வன அதிகாரி - குமார்

உண்ணி - ஜோஃபி

தோழர் - ஆனந்த்

பள்ளி முதல்வர் - கலை

கல்வி அதிகாரி - தசரதன்

கஞ்சாகாரன் - கிரிஷ்

மலையன் மனைவி - நிரோஷா

கருப்பு மனைவி - அர்ச்சனா

தர்மன் - தீதன்

AWB அதிகாரி - ரென்ஸி

செய்தி நிருபர் - ம.இலையமாறன்

ஊர்காரன் 1 - சரவணபுதியவன்

ஊர்காரன் 2 - மதுரவீரன்

ஊமையன் - தாமரை

தொழில்நுட்பக் கலைஞர்கள் :

தயாரிப்பு நிறுவனம் : DG பிலிம் கம்பெனி, மேக்னஸ் பிரொடக்‌ஷன்ஸ்

தயாரிப்பாளர் : சபரிஷ், சங்கமித்ரா செளமியா அன்புமணி

விநியோகஸ்தர் : சக்தி பிலிம் பேக்டரி  B. சக்திவேலன்

இயக்குனர் : SP சக்திவேல்

இசை : அஜீஷ்

ஒளிப்பதிவு :  பாண்டிக்குமார்

படத்தொகுப்பு : சான் லோக்கேஷ்

கலை இயக்குனர் : ஆனந்த்

சண்டை : தினேஷ் காசி

மக்கள் தொடர்பாளர் : இரா. குமரேசன்

நிர்வாக தயாரிப்பாளர் : ஷங்கர் பாலாஜி


35 Chinna Vishyam Illa - திரைவிமர்சனம்



55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்களைக் கவர்ந்த இந்த தமிழ் மொழிமாற்றம் செய்யப்பட்ட தெலுங்குத் திரைப்படம், வாழ்க்கைப் பாடங்கள் மற்றும் ஆழமான செய்திகளைக் கொண்ட இதயத்தைத் தூண்டும் கதையாகும். அதன் விறுவிறுப்பான கதைக்காக கொண்டாடப்படுகிறது, இது குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு மென்மையான ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தும் வழிகாட்டியாக செயல்படுகிறது, இது கற்றலில் ஆர்வம் மற்றும் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

இந்தத் திரைப்படம் ஒரு சிறுவனைப் பின்தொடர்கிறது, அவனது எல்லையற்ற ஆர்வம் அவரைச் சுற்றியுள்ளவர்களை, குறிப்பாக அவனது புதிய கணித ஆசிரியரை அடிக்கடி தூண்டுகிறது. அவரது கேள்விகள் பலரால் ஒதுக்கித் தள்ளப்பட்டாலும், அவரது தந்தை விசாரணையின் மதிப்பை வலியுறுத்துகிறார், ஆர்வத்தை அடக்குவது உண்மையான புரிதலையும் வளர்ச்சியையும் தடுக்கிறது என்பதை வலியுறுத்துகிறார்.

சிறுவன் பூஜ்ஜியத்தின் கருத்தை புரிந்து கொள்ளும்போது ஒரு மையக் கருப்பொருள் வெளிப்படுகிறது. தர்க்கரீதியான பகுத்தறிவு இல்லாமல் மேலோட்டமான விளக்கங்களை அவர் ஏற்க மறுப்பது அவரது ஆசிரியர்களுடன் மோதல்களுக்கு வழிவகுக்கிறது, அவர்களில் யாரும் திருப்திகரமான பதில்களை வழங்க முடியாது. இடைவிடாத கேள்விகளின் இந்தப் பயணம் ஊக்கமளிப்பதாகவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருக்கிறது.

நிவேதா தாமஸ், சிறுவனின் தாயாக, 10-ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்தியவள், தன் மகனின் கல்விப் போராட்டங்களைச் சமாளிப்பதில் முதலில் போதுமானதாக இல்லை என்று நினைக்கிறாள். இருப்பினும், அவளது அசைக்க முடியாத அன்பும் உறுதியும் அவளை சுய-கல்வியின் உருமாறும் பயணத்தைத் தொடங்க தூண்டுகிறது. அவளுடைய முயற்சிகள் அவளது சொந்த திறனை மீண்டும் வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், அவளுடைய மகனுக்கு ஒரு சக்திவாய்ந்த உந்துதலாகவும் செயல்படுகின்றன, இது வளர்ச்சி மற்றும் சாதனையின் சிற்றலை விளைவை உருவாக்குகிறது.

ஈர்க்கக்கூடிய கதைசொல்லலில் பொதிந்துள்ள அர்த்தமுள்ள பாடங்களின் பொக்கிஷம் இந்தப் படம். ஆர்வத்தை வளர்ப்பது, சவால்களை ஏற்றுக்கொள்வது மற்றும் கற்றலுக்கான வாழ்நாள் அன்பை வளர்ப்பது ஆகியவற்றின் அவசியத்தை இது வலியுறுத்துகிறது. குடும்பங்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு ஒரே மாதிரியாக, கற்பித்தல் மற்றும் பெற்றோருக்குரிய இயக்கவியல் பற்றிய ஒரு புத்துணர்ச்சியூட்டும் முன்னோக்கை வழங்குகிறது, தடைகளை விட கேள்விகளை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகளாக பார்க்க அவர்களை வலியுறுத்துகிறது.

அதன் தொடும் கதை, நட்சத்திர நிகழ்ச்சிகள் மற்றும் உலகளாவிய கருப்பொருள்களுடன், இந்த திரைப்படம் உத்வேகம் தேடும் அனைவருக்கும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் மற்றும் கல்வி மற்றும் விடாமுயற்சியின் மாற்றும் சக்தியை நினைவூட்டுகிறது.

 

Thiru Manickam - திரைவிமர்சனம்



 "திரு மாணிக்கம்", கதையானது, ஒரு அமைதியான கேரள நகரத்தில் ஒரு எளிய லாட்டரி கடை உரிமையாளரான மாணிக்கத்தை சுற்றி வருகிறது, அவர் எதிர்பாராத விதமாக ஒரு தார்மீக குறுக்கு வழியில் தன்னைக் காண்கிறார். ஒரு வயதான வாடிக்கையாளர் கவனக்குறைவாக ₹1.5 கோடி மதிப்புள்ள வெற்றிகரமான லாட்டரி சீட்டை விட்டுச் செல்லும் போது, ​​மாணிக்கம் அவரது நேர்மையை சோதிக்கும் சூழ்நிலையில் தள்ளப்படுகிறார். நிதிச் சுமைகள் மற்றும் பெருகிவரும் குடும்ப அழுத்தங்களுடன் போராடினாலும், பரிசுத் தொகையை அதன் உரிமையாளருக்குத் திருப்பித் தருவதற்கான உன்னதமான முடிவை அவர் எடுக்கிறார்.

இருப்பினும், அவரது கெளரவமான நோக்கங்கள் அவரது குடும்பத்திற்குள் கொந்தளிப்பைத் தூண்டுகின்றன, அவர்கள் புதிதாகக் கிடைத்த செல்வத்தின் கவர்ச்சியால் ஈர்க்கப்படுகிறார்கள். குடும்பத்தின் பேராசை குழப்பமான நிகழ்வுகளின் அடுக்கைத் தூண்டுகிறது, இது துரோகங்கள், உணர்ச்சி மோதல்கள் மற்றும் இடைவிடாத பொலிஸ் விசாரணைக்கு வழிவகுக்கும், மேலும் பதற்றத்தை சேர்க்கிறது. மாணிக்கம் தனது கொள்கைகளைக் கடைப்பிடிக்க முற்படுகையில், அவர் வெளிப்புற சவால்களை மட்டுமல்ல, தனது அன்புக்குரியவர்கள் தனக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்ற வேதனையான உணர்வையும் எதிர்கொள்கிறார்.

நேர்மை, குடும்பப் பிணைப்புகள் மற்றும் பேராசையின் நயவஞ்சகத் தன்மை ஆகியவற்றின் கருப்பொருளை ஆராய்ந்து, அதன் மைய மோதலில் படம் செழிக்கிறது. சதி எப்போதாவது மெலோடிராமா மற்றும் முன்கணிப்புக்கு மாறினாலும், அதன் உணர்ச்சி மையமானது அப்படியே உள்ளது, பெரும்பாலும் சமுத்திரக்கனியின் இதயப்பூர்வமான நடிப்புக்கு நன்றி. மாணிக்கம் என்ற அவரது மனசாட்சியாலும், தன்னைச் சுற்றியிருப்பவர்களின் எதிர்பார்ப்புகளாலும் எடைபோடப்பட்ட மனிதராக அவர் சித்தரித்திருப்பது ஆழமாக நகர்கிறது. சரியானதைச் செய்வதற்கும் தனது சூழ்நிலைகளின் அழுத்தங்களுக்கு அடிபணிவதற்கும் இடையில் கிழிந்த ஒரு சாதாரண மனிதனின் சாரத்தை அவர் கைப்பற்றுகிறார்.

தொடர்புடைய தார்மீக சங்கடங்கள் மற்றும் கட்டாயமான தனிப்பட்ட இயக்கவியல் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் பார்வையாளர்களுடன் எதிரொலிக்கும் ஒரு கதையை இயக்குனர் நெசவு செய்கிறார். கேரளாவின் இயற்கைக்காட்சி பின்னணி படத்தின் அழகை கூட்டுகிறது, தீவிர நாடகத்திற்கு ஒரு இனிமையான மாறுபாட்டை வழங்குகிறது.

திரு மாணிக்கம் இறுதியில் பேராசையின் மீதான நேர்மையின் வெற்றி மற்றும் மனித விழுமியங்களின் நீடித்த வலிமை பற்றிய சிந்தனையைத் தூண்டும் கதையாக செயல்படுகிறது. இது பார்வையாளர்களுக்கு ஒரு அழுத்தமான செய்தியை விட்டுச் செல்கிறது: உண்மையான செல்வம் பொருள் உடைமைகளில் இல்லை, ஆனால் நாம் செய்யும் தேர்வுகள் மற்றும் நாம் ஆதரிக்கும் கொள்கைகளில் உள்ளது.

Mazhaiyil Nanaikiren - திரைவிமர்சனம்


மழையில் நனைகிறேன் என்பது டி. சுரேஷ்குமார் இயக்கிய இதயப்பூர்வமான காதல் நாடகம், இதில் அன்சன் பால், ரெபா ஜான், மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், கிஷோர் ராஜ்குமார், ஷங்கர் குரு மற்றும் வெற்றிவேல் ராஜா ஆகியோர் அடங்கிய குழும நடிகர்கள் உள்ளனர். படம் காதல், குடும்பம் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றின் கருப்பொருளை அழகாக ஆராய்கிறது, பார்வையாளர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் ஒரு கதையை வழங்குகிறது.

மகிழ்ச்சியான திருமணமான தம்பதிகளான மேத்யூ வர்கீஸ் மற்றும் அனுபமா குமார் ஆகியோர் வசதியான வாழ்க்கையை நடத்துவதைச் சுற்றி கதை நகர்கிறது. அவர்களின் மகன், ஆன்சன் பால் நடித்தார், ஒரு கவலையற்ற நபர், அவர் தனது சொந்த நிபந்தனைகளின்படி வாழ்க்கையை அனுபவிக்கிறார், அவரது தந்தையின் கண்டிப்பான இயல்பு இருந்தபோதிலும், பெரும்பாலும் அவரது தாயின் மென்மையின் காரணமாக தப்பித்துக்கொள்வதில் ஈடுபடுகிறார்.

ரெபா ஜான் அமெரிக்காவில் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஒரு உற்சாகமான இளம் பெண்ணாக காட்சியில் நுழைகிறார். ஆன்சனின் பாத்திரம் அவளது வசீகரத்தால் உடனடியாகக் கவரப்பட்டு, ஒருதலைப்பட்சமான காதல் கதைக்கு இட்டுச் செல்கிறது. அவரது தைரியத்தை வரவழைத்து, அன்சன் தனது உணர்வுகளை ரெபாவிடம் ஒப்புக்கொள்கிறார், நிராகரிப்பை எதிர்கொள்கிறார். ஆனாலும், அவனது பொறுமையும் நம்பகத்தன்மையும் அவளை மெல்ல மெல்ல வென்று, அவனது கோரப்படாத காதலை பரஸ்பர பிணைப்பாக மாற்றுகிறது.

அவர்களது காதல் துளிர்விடத் தொடங்கும் போது, ​​தம்பதியர் ஒரு பெரிய விபத்தை சந்திக்கும் போது சோகம் தாக்குகிறது. இந்த எதிர்பாராத சவாலை அவர்கள் எவ்வாறு வழிநடத்துகிறார்கள், நெகிழ்ச்சி மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் நிரப்பப்பட்ட கதையை அவிழ்த்துவிடுகிறார்கள் என்பதில்தான் படத்தின் உணர்ச்சிகரமான மையக்கரு உள்ளது.

மலையாள சினிமாவில் தனது தாக்கத்தை ஏற்படுத்தும் பாத்திரங்களுக்கு பெயர் பெற்ற அன்சன் பால், ஒரு பாராட்டத்தக்க நடிப்பை வழங்குகிறார், கவலையற்ற இளைஞனாக இருந்து அர்ப்பணிப்புள்ள காதலனாக அவரது கதாபாத்திரத்தின் மாற்றத்தை திறம்பட சித்தரித்தார். பிகில் படத்தில் தனது வசீகரமான பாத்திரத்திற்காக நினைவுகூரப்பட்ட ரெபா ஜான், தனது அன்பான மற்றும் இயல்பான நடிப்பால் மீண்டும் ஒருமுறை பிரகாசிக்கிறார். மேத்யூ வர்கீஸ் மற்றும் அனுபமா குமார் ஆகியோர் ஆதரவான மற்றும் யதார்த்தமான பெற்றோர்களாக கதைக்கு ஆழம் சேர்க்கின்றனர்.

திரைப்படம் காதல், உணர்ச்சிகள் மற்றும் நுட்பமான நாடகம் ஆகியவற்றை சமநிலைப்படுத்துகிறது, அதிகப்படியான செயல் அல்லது தேவையற்ற கூறுகளைத் தவிர்க்கிறது. ஒரு சில காட்சிகளை ட்ரிம் செய்திருக்க முடியும் என்றாலும், இதயப்பூர்வமான கதை மற்றும் ஆச்சரியமான க்ளைமாக்ஸ் அதை ஈர்க்கக்கூடிய கடிகாரமாக மாற்றுகிறது.

மழையில் நனைகிறேன் ஒரு புத்துணர்ச்சியூட்டும் காதல் கதையாக தனித்து நிற்கிறது, இது காதல் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய தனித்துவமான கண்ணோட்டத்தை வழங்குகிறது, இது அர்த்தமுள்ள சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவமாக அமைகிறது.

 

Tuesday, December 24, 2024

அகத்தியா" திரைப்படத்தின் டைட்டில் லோகோ வீடியோ வெளியாகியுள்ளது

*"அகத்தியா" திரைப்படத்தின்  டைட்டில் லோகோ வீடியோ வெளியாகியுள்ளது*

*ஜனவரி 31, 2025 அன்று வெளியாகும் பான் இந்திய திரைப்படம் "அகத்தியா"*

டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்,  அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, தயாரிக்கப்பட்ட திரைப்படம் "அகத்தியா".

"ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்" என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன், அதிநவீன CGI உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில்,  திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில், ஒரு புதுமையான உலகைப் படைத்திருக்கும் "அகத்தியா" படத்தினை புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார். 

மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் தென்னிந்தியப் பிரம்மாண்ட திரைப்படமான "அகத்தியா" திரைப்படத்தின் அற்புதமான டைட்டில் லோகோ வீடியோவை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். 

பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசை என, இப்படத்தின் டைட்டில் லோகோ வீடியோ ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது - நான்கு மொழிகளில் அற்புதமான  சிம்பொனி இசையுடன் வரும் டைட்டில், அதிரடி ஆக்சன் நிரம்பிய ஒரு மர்மமான புதிய உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.


வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் படம் குறித்துப் பகிர்ந்துகொண்டதாவது... "திகில்-த்ரில்லர் ஜானர்  நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது, 'அகத்தியா' மூலம் இந்த அனுபவத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளோம்.  பரபர திரைக்கதையுடன், இதுவரை பார்த்திராத பிரம்மாண்ட காட்சியமைப்புகளுடன், மிகவும் பிரபலமான மார்வெல் திரைப்படங்களைப் போல ஒரு  சாகச உலகை, பார்வையாளர்களுக்கு வழங்குவதே எங்கள் குறிக்கோள். 'அகத்தியா' கண்டிப்பாக ரசிகர்களை வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்லும்" என்றார்.

 
2025 ஜனவரி 31 ஆம் தேதி உலகமெங்கும்  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது. கற்பனை, திகில் மற்றும் நம் கலாச்சார பின்னணி ஆகியவற்றின் வசீகரிக்கும் கலவையுடன், இந்தியா முழுவதுமுள்ள பார்வையாளர்களுக்கு இப்படம் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்க உள்ளது.

கிச்சா சுதீப் நடிப்பில் கலைப்புலி S தாணு தயாரிப்பில் உருவான MAX திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்றது

*கிச்சா சுதீப் நடிப்பில் கலைப்புலி S தாணு தயாரிப்பில் உருவான MAX திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்றது**  

*கன்னட திரைப்படத்துறையில் கலைப்புலி S தாணுவை வரவேற்ற கிச்சா சுதீப்*

தமிழ் திரைப்படம் *MAX*-இன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரெய்லர் மற்றும் பாடல்களுடைய முன்னோட்டம் இன்று பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில், திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, புகழ்பெற்ற நடிகர்- தயாரிப்பாளர் கிச்சா சுதீப் மற்றும் படத்தின் அறிமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயா பங்கேற்றனர்.  

திரைப்படத் துறையின் பல பிரபலங்கள் இந்த நிகழ்வுக்கு வந்திருந்தனர். தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் ஆர்.வி. உடையகுமார், இயக்குனர்கள்  மிஸ்கின், ராஜ்குமார் பெரியசாமி, தேசிங் பெரியசாமி  உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் இந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவர் ரவி கோட்டாரக்காரா, முன்னாள் தலைவர் காட்ராகட்ட  பிரசாத், நடிகர் இளவரசு, நடன அமைப்பாளர் ஷோபி உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.  

*கலைப்புலி எஸ். தாணு* நிகழ்ச்சியில் பேசும்போது, படக்குழுவின் கடின உழைப்பை பாராட்டி, *MAX* திரைப்படம் அதன் தனிப்பட்ட கதை கூறும் முறையாலும், இசையாலும் ரசிகர்களைக் கவரும் என நம்பிக்கை தெரிவித்தார். பாடல்களை உருவாக்கிய *அஜனீஷ் B. லோக்நாத்*-ன் திறமையை அவர் பாராட்டினார்.  

*கிச்சா சுதீப்*, படத்தின் தலைப்புக் கதாபாத்திரத்தில் நடித்ததுடன், இணைத் தயாரிப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். இவர் தனது உரையில், அறிமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயாவின் கதையை புகழ்ந்து, தயாரிப்பாளர் தாணு அவர்களின் செல்வந்த மனதை குறிப்பிட்டார் . காக்க காக்க படத்தின் கன்னட உரிமைகளை வாங்கும்போது தாணு அவர்களிடம் நேர்முகமாக சந்தித்த அனுபவத்தை பகிர்ந்து, ஒரு காசும் வாங்காமல் அவருக்கு உரிமை வழங்கிய அவரது நற்குணத்தை நினைவுகூர்ந்தார். மேலும், தாணு அவர்கள் கன்னடத் திரைப்படத்துறையிலும் தனது முத்திரையை பதிக்க வேண்டும் என்பதற்கான விருப்பத்தையும் தெரிவித்தார்.  

இயக்குனர் *மிஸ்கின்* பேசும் போது, தாணு அவர்களுக்கு நன்றி தெரிவித்து, தனது திரைப்படமான *Train*-இல் விஜய் சேதுபதியுடன் இணைந்து அவருடைய கதை கூறும் கனவுகளை நிறைவேற்ற உதவியதற்கு நன்றியை வெளிப்படுத்தினார். அதேபோல், *MAX* படக்குழுவுக்கும் வெற்றிக்கான வாழ்த்துக்களை தெரிவித்தார்.  

இயக்குனர்கள் *ராஜ்குமார் பெரியசாமி* மற்றும் *தேசிங் பெரியசாமி*, தாணு அவர்களின் மேற்பார்வையில் தாங்கள் வளர்ந்திருப்பதை பாராட்டி, அவருடன் மீண்டும் வேலை செய்ய விருப்பம் தெரிவித்தனர்.  

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் இந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவர் *ரவி கோட்டாரக்காரா*,பேசும் போது விமர்சகர்கள் மற்றும் ஊடகங்களில் செயல்படும் அனைவரையும் திரைப்படங்களை நேர்மையாக ஆதரிக்குமாறு வேண்டுகோள் வைத்தார். சிறந்த திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்றால், தயாரிப்பாளர்களுக்கு பத்திரிகை மற்றும் ஊடக ஆதரவு முக்கியம் எனவும், படக்குழு அனைவருக்கும் வெற்றிக்காக தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.  

*MAX* திரைப்படம், *டிசம்பர் 27* அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இது சாகசம், மெலோட்ராமா மற்றும் முழுமையான பொழுதுபோக்கை வழங்கும் என உறுதியளிக்கிறது.

GRT ஹோட்டல் கிராண்ட் சென்னை வழங்கும் Grand Gaana Sabha - டிசம்பர் 20 - ஜனவரி 12*

*GRT ஹோட்டல் கிராண்ட் சென்னை வழங்கும் Grand Gaana Sabha  - டிசம்பர் 20 - ஜனவரி 12*

துடிப்பான மார்கழி பருவத்தின் வருகையுடன், GRT ஹோட்டல் கிராண்ட் சென்னை, இசை, நடனம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு மாத கால கொண்டாட்டமான Grand Gaana Sabha வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது. டிசம்பர் 20 முதல் ஜனவரி 12 வரை, பிரபல கலைஞர்களால் நிகழ்த்தப்படும் கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி ஜுகல்பந்தி கச்சேரிகளின் மயக்கும் வரிசையுடன் மார்கழியின் மந்திரத்தில் தங்களை மூழ்கடிக்க ரசிகர்கள் அழைக்கப்படுகிறார்கள். 

கலாசார செழுமை நிறைந்த சூழலில் விருந்தினர்கள் ஒவ்வொரு நாளும் மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை மனதைக் கவரும் மெல்லிசைகளைக் கேட்டு மகிழலாம்.
மிகச்சிறந்த சபா உணவுகள் இல்லாமல் எந்த மார்கழி கொண்டாட்டமும் நிறைவடையாது. பாரம்பரியத்திற்கு உண்மையாக இருந்து, GRT ஹோட்டல்களின் கார்ப்பரேட் செஃப் சீதாராம் பிரசாத், ஜே. ஹிந்த் உணவகத்தில் பிரத்யேக மெனுவைத் தயாரித்துள்ளார். 

மெனுவில் பாரம்பரிய சபா கேன்டீன் பிடித்தவைகளின் உயர்ந்த வகைகள் உள்ளன, ஒவ்வொரு உணவு பிரியர்களுக்கும் மகிழ்ச்சிகரமான காஸ்ட்ரோனமிக் பயணத்தை வழங்குகிறது.

புகழ்பெற்ற பாடகர் ஆர்.பி. ஷ்ரவன் மற்றும் அவரது குழுவினரின் மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியுடன் பிரம்மாண்டமான Grand Gaana Sabha ஆரம்பமானது. 

GRT ஹோட்டல் கிராண்ட் சென்னையின் பொது மேலாளர் திரு. மோனிதீப் ஜாஸ், "கிராண்ட் சென்னையில், பாரம்பரிய இசையின் கலாச்சார மகத்துவம் மற்றும் சபா உணவுகளின் சமையல் மகிழ்ச்சியின் மூலம் மார்கழியின் சாரத்தை உயிர்ப்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இந்த தனித்துவமான அனுபவத்தில் பங்கு கொள்ளுங்கள்."

Grand Gaana Sabha கண்டு களிக்க, முன்பதிவு செய்ய, 080 69250505 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.மேலும் தகவலுக்கு: https://grthotels.com/

Monday, December 23, 2024

தமிழ்நாட்டின் அடையாளம் மதுரை ஜிகர்தண்டா ஃபேக்டரி ஜிக்னேச்சர் என்ற புதிய கிளையை மாஸ்டர் செஃப் இந்தியா இறுதிப் போட்டியாளர் அருணா விஜய் தொடங்கி வைத்தார்*

*தமிழ்நாட்டின் அடையாளம் மதுரை ஜிகர்தண்டா ஃபேக்டரி  ஜிக்னேச்சர் என்ற  புதிய கிளையை மாஸ்டர் செஃப் இந்தியா இறுதிப் போட்டியாளர் அருணா விஜய்  தொடங்கி வைத்தார்*

தமிழ்நாட்டின் பாரம்பரிய ருசியின் அடையாளமாக விளங்கும் மதுரை ஜிகர்தண்டா ஃபேக்டரி, தற்போது ஜிக்னேச்சர் என மறு பெயரிடப்பட்டுள்ளது. நவீனத்திற்கும் விரிவாக்கத்திற்கும் மையமாகக் கொண்டு இந்த மாற்றம், ஜிக்னேச்சர் தமிழ்நாட்டின் சாராம்சத்தை உலகளாவிய சமூகத்துக்குக் கொண்டுவரும் முயற்சியாகும். பரந்த அளவில் இந்தியாவை கடந்தும் மெல்ல மெல்ல உலகளவில் உருவாகும் ஒரு முக்கியமான பான பிராண்டாக மாறுவதற்கான முதல் முக்கிய படியாக இந்த மறுபெயரிடல் அமைந்துள்ளது.

தற்போது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, UAE மற்றும் பாரீனில் மொத்தம் 90 கிளைகளுடன் செயல்படும் ஜிக்னேச்சர், தனது அடையாளத்தை பரந்த மண்டலங்களில் கொண்டு செல்லும் திட்டத்துடன், அதே நேரத்தில் தனித்துவமிக்க பாரம்பரியத்தை பாதுகாக்க உறுதியாக உள்ளது.

தமிழ்நாட்டின் அடையாளம் மதுரை ஜிகர்தண்டா ஃபேக்டரி  ஜிக்னேச்சர் என்ற  புதிய கிளையை மாஸ்டர் செஃப் இந்தியா இறுதிப் போட்டியாளர் அருணா விஜய்,  ஜிக்னேச்சர் நிறுவன மேலாளரும் நிறுவனருமான முகம்மது ஃபாசில், வணிகம் மற்றும் பிராண்டிங் துறை மொகம்மது ஜுன்னூன் , தயாரிப்பு பொறுப்பாளர் சந்தோஷ்குமார், வளர்ச்சி துறையின் பொறுப்பாளர் முகம்மது ரஹ்மதுல்லா,கிளை இயக்கப் பொறுப்பாளர் வசந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

“இந்த மாற்றம் வெறும் பெயர் மாற்றமல்ல,” என ஜிக்னேச்சர் நிறுவன மேலாளரும் நிறுவனருமான முகம்மது ஃபாசில் கூறினார். “தமிழ்நாட்டின் செழிப்பான பாரம்பரியத்தை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வதற்கான அறிவிப்பு இது. நாங்கள் நம்பிக்கை மற்றும் உயர்ந்த தரமான சேவைகளைக் கொண்டு, புதிய கட்டத்தை தொடங்குவோம் என்று உறுதியாக அறிவிக்கிறோம்.”

இந்த மாற்றம் பாரம்பரியத்திற்கும் நவீனத்திற்கும் இடையிலான சிறந்த சமநிலையை பிரதிபலிக்கிறது. மொகம்மது ஜுன்னூன், வணிகம் மற்றும் பிராண்டிங் துறையில் உள்ள திறமையுடன், “எங்கள் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதை மட்டுமின்றி, உலகளாவிய சந்தைகளில் நவீனமயமாகியதையும் பிரதிநிதித்துவப்படுத்துவது எங்கள் நோக்கம். இது நம்பிக்கையையும் அங்கீகாரத்தையும் உருவாக்குவதற்கு உதவும்,” என்று தெரிவித்தார்.

சந்தோஷ் குமார், தயாரிப்பு பொறுப்பாளர், “எங்கள் தயாரிப்பின் ஒவ்வொரு கட்டமும் உண்மைத்தன்மையைக் காட்டுவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எங்கள் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறைவும் மிகச்சிறந்த தரமான பானத்தைப் பெறுவதை உறுதிப்படுத்துகிறோம்,” என்று கூறினார்.

மேலும், முகம்மது ரஹ்மதுல்லா, வளர்ச்சி துறையின் பொறுப்பாளர், “இந்த மாற்றம் உலகளாவிய அளவில் ஜிகர்தண்டாவை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பாகும். அதன் உண்மைத் தன்மையையும் பாரம்பரியத்தையும் காக்கிறதோடு, அதை பொறுப்புடன் பரப்புவதையும் மையமாகக் கொண்டது,” என்று குறிப்பிட்டார்.

ஜிக்னேச்சரின் வளர்ச்சிக்கு உறுதிப்படுத்தப்பட்ட பங்கு அதன் சிறந்த கிளை முறைமையே. வசந்த், கிளை இயக்கப்பொறுப்பாளர், “ஒவ்வொரு கிளையும் ஜிக்னேச்சரை பிரதிநிதித்துவப்படுத்தும் தரநிலைகள் மற்றும் மதிப்புகளுடன் செயல்படுவதைக் காண நாங்கள் உறுதி செய்கிறோம். மேலும், கிளைகளின் நலன்களையும் பாதுகாத்து, கலசமாக வளர்ச்சி மற்றும் வெற்றியை உறுதி செய்ய நாங்கள் முன்னணி ஆதரவு வழங்குகிறோம்,” என்றார்.

ஜிக்னேச்சரின் மறுபெயரிடல், உலகளாவிய பானத் துறையில் ஒரு நம்பகமான பெயராக உருவாக்குவதற்கான முதன்மையான முயற்சியாக அமைந்துள்ளது. மேலும், ஐரோப்பா மற்றும் ஆசியா உள்ளிட்ட பகுதிகளில் விரிவுபடுத்துவதற்கான திட்டங்களுடன், பாட்டில்களிலும் கேன் வடிவிலும் பானங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஜிக்னேச்சரின் மாற்றம் தமிழ்நாட்டின் மக்களுக்கும், நாங்கள் மதிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சமர்ப்பணம். முகம்மது ஃபாசில், “நமது வெற்றியின் அடிப்படைக் கல்லாக நீங்கள் அமைந்துள்ளீர்கள். ஒவ்வொரு கட்டத்திலும் உங்களின் நம்பிக்கை எங்களுக்கு உத்வேகமாக செயல்படுகிறது. ஜிக்னேச்சரின் உண்மைத்தன்மையையும் தரத்தையும் தொடர்ந்து வழங்க உறுதியளிக்கிறோம்,” என்று நன்றி தெரிவித்தார்.

ஜிக்னேச்சர் பற்றி

முந்தைய மதுரை ஜிகர்தண்டா ஃபேக்டரி, தற்போது ஜிக்னேச்சர் என்ற பெயரில் அறியப்படுகிறது. தமிழ்நாட்டின் செழித்த பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பான நிறுவனமாக அது இன்று இந்தியாவிலும் மத்திய கிழக்கிலும் உள்ள 90 கிளைகளுடன் செயல்படுகிறது. நவீனத்திற்கும் பாரம்பரியத்திற்கும் இடையே சமநிலை நிலைநிறுத்தி, ஜிக்னேச்சர் உண்மைத்தன்மை மற்றும் புதிய நிலைப்பாடுகளின் மூலம் உணவுப் பானத் துறையை மறுபரிசீலனை செய்ய முனைவதாக உள்ளது.

தமிழ்நாட்டின் பெருமையை உலகத்திற்கு கொண்டு செல்லுவோம்.

ஜிக்னேச்சர், எலியட்டின் ப்ரோமினேட் சாலை, பெசன்ட் நகர், சென்னையில் அமைந்துள்ளது.

சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி, ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், நந்தகுமார் ஐ.ஆர்.எஸ், மருத்துவர் பைரவி செந்திலின், Dr.B 360 உலகின் முதல் டெர்மெடாலாஜி எக்ஸ்பெரின்ஷியல் சென்டரை தொடங்கி வைத்தனர்.

*சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி, ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், நந்தகுமார் ஐ.ஆர்.எஸ், மருத்துவர் பைரவி செந்திலின்,  Dr.B 360 உலகின் முதல் டெர்மெடாலாஜி எக்ஸ்பெரின்ஷியல் சென்டரை தொடங்கி வைத்தனர்.* 

Dr.B 360 டெர்மெடாலாஜி எக்ஸ்பெரின்ஷியல் சென்டர்  உலகின் முதல் தர அதிநவீன தோல் மருத்துவம் மற்றும் தனித்துவ தோல் பராமரிப்பு ஆகியவற்றை வழங்குகிறது.  மேலும்,  பிரத்யேகமான காஸ்மாரா தோல் பராமரிப்பு அரங்கையும் தன்னகத்தே கொண்டுள்ளது.  இது அழகியல் மற்றும் புதுமைகளில் சர்வதேச அனுபவத்தை வழங்குகிறது.

பத்திரிகையாளர், அரசியல்வாதி மற்றும் சமூக ஆர்வலர் என பன்முகத்தன்மை கொண்ட அப்சரா ரெட்டி, டாக்டர் பைரவி செந்தில் எம்.டி., நிறுவனர் மற்றும் தோல் மருத்துவர், தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் துறையின் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்,  வருமான வரி ஆணையர் நந்தகுமார் ஐ.ஆர்.எஸ், திரு.சுபம் ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர தோல் சிகிச்சைக்கான, Dr.B 360  டெர்மடாலஜி எக்ஸ்பெரின்ஷியல் சென்டரை திறந்து வைத்தனர். 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி என்றும், தற்காலத்தில் இதுபோன்ற தோல் பராமரிப்பு நிலையங்கள் அவசியம் என்றும் கூறினார். மேலும் அழகு மற்றும் தோல் பராமரிப்பு நிலையங்களுக்கு நிறைய கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்கிற எண்ணம் மக்களுக்கு தேவை இல்லை என்றும், ஒவ்வொருவரும் தங்களது தேவைக்கு ஏற்றவாறு சிகிச்சை மேற்கொள்ளும் வசதிகள் வந்துவிட்டது என்றும் கூறினார். 

பின்னர் பேசிய
அப்சரா ரெட்டி, அழகியல் என்பது  வாய்ப்புகளையும் சுயமரியாதையையும் வடிவமைக்கும் சகாப்தத்தில் நாம் இருக்கிறோம் என்று குறிப்பிட்டார். ஒருவரின்  தோற்றத்தின் பொருளாதாரம்  நம் வாழ்வின் குறிப்பிடத்தக்க அம்சமாக மாறியுள்ளது என்று கூறிய அவர்,  காஸ்மாரா லவுஞ்ச் போன்ற இடங்கள் வெறும் அழகியல் பற்றியவை அல்ல என்றும்  அவை நம்பிக்கையை அதிகரிப்பதன் மூலமும், ஆழமான மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வுக்கு பங்களிப்பதன் மூலமும் தனிநபர்களுக்கு அதிகாரம் அளிக்கின்றன என்றும் கூறினார். 

மருத்துவர் பைரவி செந்தில் உரையாற்றும்போது,  தோல் ஆரோக்கியம் ஒரு ஆடம்பரம் அல்ல என்றும்,  இது ஒட்டுமொத்த நல்வாழ்வின் இன்றியமையாத பகுதி என்றும் கூறினார்.  அறிவியல், கவனிப்பு மற்றும் அக்கறையுடன் கூடிய சிறப்பு சிகிச்சை ஆகியவற்றை ஒன்றாகத் தரும் அதிநவீன தீர்வுகளை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை காஸ்மாரா லவுஞ்ச் பிரதிபலிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.  அழகியல் புதுமைகளை சந்திக்கும் தகுதியான இடமாக விளங்கும் சென்னையின் தகுதியான தோல் சிகிச்சை மையம் இதுதான் என்றும் தெரிவித்தார். 

காஸ்மாராவின் உலகப் புகழ்பெற்ற தோல் பராமரிப்பின் உருமாறும் சக்தியை மேம்பட்ட தோல்-ஒப்பனை தீர்வுகள் மற்றும் ஆல்கா பீல்-ஆஃப் முக பராமரிப்பு உள்ளிட்டவை மூலம் அனுபவிக்க முடியும்.  Dr.B 360 டெர்மடாலஜி எக்ஸ்பீரியன்ஷியல் சென்டர் தோல் ஆரோக்கியத்தை புதுமை மற்றும் தனித்துவத்துடன் மறுவரையறை செய்கிறது.

Dr.B 360 டெர்மட்டாலஜி மையம் பழைய எண்.249A, புதிய எண்.326 A, அம்புஜம்மாள் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 600 018 இல் அமைந்துள்ளது

மோகன்லாலின் " பரோஸ்" திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்ச்சி !!*

*மோகன்லாலின் " பரோஸ்" திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்ச்சி !!*

Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான " பரோஸ்", திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை வழங்கும் இப்படத்தை வழங்குகிறார். இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.,

இந்நிகழ்வினில்…

வசனகர்த்தா ஆர் பி பாலா பேசியதாவது…
மோகன்லால் சாருடன் புலிமுருகன் பணியாற்றினேன் பின்னர் இப்படத்தில் பணியாற்றியுள்ளேன். 3 வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக இப்படம் ஆரம்பித்தது. நான் இதுவரை 2டியில் தான் பார்த்திருக்கிறேன். இன்று தான் இங்கு டிரெய்லர் 3 டியில் பார்த்தேன். இந்தளவு நேர்த்தியாக ஒரு திரைப்படம் இந்திய சினிமாவில் வந்ததில்லை. டெக்னீசியன்ஸ் எல்லோருமே மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளனர். இந்தப்படத்தில் பணியாற்றியது மிகப்பெரிய பாக்கியம். மோகன்லால் சாருடன் பணிபுரிந்த பிறகு தான், எனக்கு ஒரு அடையாளம் கிடைத்தது. எனது வாழ்க்கையைப் புலி முருகனுக்கு முன்னால், பின்னால் என்றே சொல்லலாம். அவரில்லாமல் நான் இல்லை. எனக்கு இந்த வாய்ப்பை தந்ததற்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம். பரோஸ் என்னுடைய அறிமுகத் திரைப்படம், இது மோகன்லால் சாரின் முதல் படைப்பு. அவர் இயக்கும் முதல் படத்தில் நான் இசையமைப்பாளராக அறிமுகமாவது மகிழ்ச்சி. பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், 'பரோஸ்' படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார் வாழ்த்துகள். 2019ல் அமெரிக்காவில் ஒரு போட்டியில் வெற்றிபெற்று வந்த பிறகு, முதல் ஆளாக மோகன்லால் சார் தான் வாழ்த்தினார். பின்னர் இந்தப்படம் பற்றிச் சொல்லி, இசையமைக்க வேண்டும் என்றார். மிகப்பெரிய சந்தோசம். கோவிட் வந்தது, அந்த தடைகளைத் தாண்டி, இப்போது படம் வருகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் நானும் நிறைய இசை கற்றுக்கொண்டுள்ளேன். எனக்கு முழு ஆதரவாக இருந்த மோகன்லால் சாருக்கு நன்றி. இப்படத்தில் பணியாற்றியுள்ள இசைக் கலைஞர்கள், பாடகர்கள் அனைவருக்கும் நன்றி. கண்டிப்பாக இப்படம் உங்களை ஆச்சரியப்படுத்தும் அனைவருக்கும் நன்றி.

கிரியேடிவ் ஹெட் ராஜிவ் குமார் பேசியதாவது…
நான் இந்தப் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து வேலை பார்த்தது ஏதேச்சையான ஒரு அதிசயம். இந்தியாவின் முதல் 3டி படமான மைடியர் குட்டிச்சாத்தான் படத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றினேன். இத்தனை வருடங்கள் கழித்து, முழுமையான 3டி படத்தில் மோகன்லாலுடன் இணைந்து வேலை பார்த்தது மகிழ்ச்சி. அவர் எப்போதும் எனக்கு இனிய நண்பராக இருந்து வருகிறார். அவருடைய கற்பனையை உருவாக்கும் இந்தப் படத்தில் பணிபுரிந்தது, நல்ல அனுபவமாக இருந்தது. மோகன்லால் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் கலக்கியிருக்கிறார். முக்கியமாக டெக்னாலஜுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். படத்தில் நிறைய டெக்னாலஜு இருக்கிறது, ஆனால் அதைத்தாண்டி நடிகர்களின் நடிப்பு தான் உங்களைக் கவரும். இந்தப்படம் பார்க்கும் போது நீங்கள் 3டி என்பதை மறந்து விடுவீர்கள். மோகன்லால் மிகச்சிறந்த நடிகர், அவர் உருவாக்கிய ஃபேண்டஸி கதாப்பாத்திரங்களுடன் அவரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். லிடியன் இத்தனை இளம் வயதில் முதிர்ச்சியான இசையைத் தந்துள்ளார். பாலா மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். பல மொழிகளில் அவர் தான் டயலாக் தந்துள்ளார். இப்படம் மிக அர்ப்பணிப்புடன் மிகப்பெரிய உழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது, கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் கவரும் நன்றி.

நடிகர், இயக்குநர் மோகன்லால் பேசியதாவது…
47 வருடமாக திரைத்துறையில் இருக்கிறேன். இயக்குநராக என் முதல் படம். எப்படி இது நடந்தது? என எல்லோரும் கேட்டார்கள், இது அதுவாகவே நடந்தது, அவ்வளவு தான். இது ஒரு ஃபேண்டஸி, அட்வென்சர் படம். முழுக்க 3டியில், இரண்டு கண்களில் பார்ப்பது போல, இரண்டு கேமராவை வைத்து, படம்பிடித்துள்ளோம். அதை எடிட் செய்து நீங்கள் பார்க்கும் போது, புது அனுபவமாக இருக்கும். இப்படத்தில் மிக முக்கியமான திறமையான கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் இப்படத்தில் பணியாற்றியுள்ளார். ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், 'பரோஸ்' படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். மிகச்சிறந்த கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். லிடியன் முதன் முதலில் எங்களைப் பார்க்க வந்த போது 13 வயது தான், மிகச்சிறந்த இசையைத் தந்துள்ளார். 2 நடிகர்கள் தான் இந்தியா, மற்றவர்கள் எல்லோரும் போர்ச்சுகல், ஸ்பெயின், க்ரீஸ், ரஷ்யா என நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர். பிரிடிஷ் குழந்தை தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. படத்தின் கதைப்படி ஒரு இன்னொசன்ஸான இளமையான இசை வேண்டும் என்பதால் தான், லிடியனை அழைத்தேன். அவரும் மிகச்சிறப்பான இசையைத் தந்துள்ளார். இப்படத்தில் பெரும் துணையாக இருந்த ராஜிவ் குமாருக்கு நன்றி. இப்போது கூட வேலை நடந்து வருகிறது. படத்தில் ஒரு அனிமேடட் கேரக்டர் வருகிறது. இங்குள்ள ஒருவரை நடிக்க வைத்து, அதைத் தாய்லாந்து கலைஞர்கள் வைத்து, அனிமேடட் கேரக்டராக மாற்றியுள்ளோம். மிகப்பெரிய உழைப்பு. பாலா, அவரும் மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். நன்றி. ஒரு மேஜிக் உலகிற்கு இப்படம் உங்களை அழைத்துச் செல்லும். உங்களுக்குள் இருக்கும் குழந்தை மனதை, இப்படம் எழுப்பி விடும். அனைவரும் ரசிப்பீர்கள். இப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

பரோஸ் எனும் பூதத்திற்கும், ஒரு பெண் குழந்தைக்கும் உள்ள உறவை ஃபேன்டஸி கலந்து, அனைவரும் ரசிக்கும் வகையில், பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மோகன்லால்.

'டீப் ப்ளூ சீ 3', 'ஐ இன் தி ஸ்கை' மற்றும் 'பிட்ச் பெர்பெக்ட்' ஆகிய படங்களில் பணியாற்றிய பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், 'பரோஸ்' படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். இளம் வயதிலேயே உலகப் புகழ்பெற்ற, லிடியன் நாதஸ்வரம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் இசை உரிமையை பெரும் விலைக்குச் சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Sunday, December 22, 2024

அமெரிக்கா டல்லாஸில் நடைபெற்ற "கேம் சேஞ்சர்" முன் வெளியீட்டு நிகழ்வு !


அமெரிக்கா டல்லாஸில் நடைபெற்ற "கேம் சேஞ்சர்" முன் வெளியீட்டு நிகழ்வு !
குளோபல் ஸ்டார் ராம் சரணின் "கேம் சேஞ்சர்" முன் வெளியீட்டு நிகழ்வு: டல்லாஸில் ஒரு வரலாற்றுக் கொண்டாட்டமாக நடைபெற்றுள்ளது

குளோபல் ஸ்டார் ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தின்  பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை அமெரிக்காவின் டல்லாஸ் நகரின் கர்டிஸ் கல்வெல் மையத்தில் நடைபெற்றது.  இந்திய திரை வரலாற்றில்  அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்தியத் திரைப்படத்தின் முதல் முன் வெளியீட்டு நிகழ்வு இதுவாகும். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள, மாபெரும் கொண்டாட்டமாக இந்நிகழ்வு நிகழ்ந்தேறியது. 

குளோபல் ஸ்டார் ராம் சரண், இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர்கள் தில் ராஜு, சிரிஷ், இசையமைப்பாளர் தமன், நடிகை அஞ்சலி உள்ளிட்ட படத்தின் முக்கிய குழுவினர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். குளோபல் ஸ்டார்  ராம் சரணுடன் அடுத்த திரைப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ள இயக்குநர் சுகுமார் மற்றும் புச்சி பாபு சானா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இவ்விழாவில் கலந்து கொண்டனர். இந்த அற்புதமான நிகழ்வை ராஜேஷ் கல்லேபள்ளி ஏற்பாடு செய்திருந்தார்.

டல்லாஸ் ரசிகர்களின் அமோக அன்பு மற்றும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து குளோபல் நட்சத்திரம் ராம் சரண் பேசியதாவது… 
"நாங்கள் இந்தியாவை விட்டுப் போகவே இல்லை என்பது போல் இருக்கிறது. அதனால்தான் டல்லாஸ் இப்போது டல்லாஸ் புரம் என்று அழைக்கப்படுகிறது. நான் ஷங்கர் சாரின் படத்தில் நடித்துள்ளேன் என்று என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவரை ஒரு தெலுங்குப் படத்தை இயக்கச் சொல்ல வேண்டும் என்று நான் நெடுநாட்களாகக் கனவு கண்டேன், ஆனால் அது நடக்குமென நான் நினைக்கவே இல்லை. அவருடன் இணைந்து பணியாற்றிய, இந்த மூன்று வருடமும்  நான் நிறையக் கற்றுக்கொள்ளும் அனுபவமாக ஒரு அழகான பயணமாக அமைந்தது. மேலும், "என்னைப் பொறுத்தவரை, கிரிக்கெட்டில் சச்சின் எப்படிப்பட்டாரோ, அதே போல் தான் இந்திய சினிமாவுக்கு ஷங்கர் சார். அவர்தான் நம்பர் 1 கமர்ஷியல் இயக்குநர். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நான் தனியாக நடித்து வெளியாகும் முதல் படம், என்பது ஒரு சிறப்பு. அதை தில் ராஜு சாரின் பாணியில் சொல்வதென்றால்.. , "உங்களுக்கு எண்ண வேணுமோ, அது எல்லாமும் இருக்கு.' ராஜு சாருவுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது."  என்றவர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்காக இயக்குநர் சுகுமாருக்கு நன்றி தெரிவித்த சரண், புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த கொண்டாட்ட நிகழ்வு, தெலுங்கு மாநிலத்தில் இருப்பது  போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக இயக்குநர் சுகுமார் குறிப்பிட்டார். வெளிநாட்டில் வசிக்கும் போது கூட தெலுங்கு சினிமாவுக்கு என்ஆர்ஐ பார்வையாளர்கள் அளிக்கும் மிகப்பெரும் ஆதரவிற்காக அவர் நன்றி தெரிவித்தார். தில் ராஜுவுக்கு என் வாழ்நாளில் நன்றி சொல்ல முடியாது. புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தயாரிப்பாளர்கள் தயங்கும் காலகட்டத்தில்,  என் முதல் படமான ஆர்யா படத்தில்  அவர் என்னை நம்பினார். ஷங்கர் சாரிடம் தான் என் முதல் ஃபிலிம்பேர் விருதைப் பெற்றேன். சிரஞ்சீவி ரசிகனாக இருந்த நான். அவர் ஏன் ஷங்கர் சாருடன் பணிபுரியவில்லை என்று எப்போதும் ஆச்சரியப்பட்டேன், ஆனால் அவர் என்னுடன் படம் செய்கிறார் என்று ராம்சரண் பகிர்ந்துகொண்டபோது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.   எஸ்.ஜே.சூர்யா சாரை எனக்கு மிகவும் பிடிக்கும் இயக்குநராவதற்கு முன், குஷி  படத்தை எனது ரெஃபரன்ஸ்  படங்களில் ஒன்றாக வைத்திருந்தேன்.  ராம் சரண் பற்றி சுகுமார் மேலும் கூறுகையில், "சரண் எனது சகோதரர் போன்றவர், அவருடன் பணியாற்றுவது எப்போதுமே மகிழ்ச்சி தான். சிரஞ்சீவி சாருடன் படத்தைப் பார்த்தேன், அதனால் நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்: முதல் பாதி - அருமை, இடைவெளி - பிளாக்பஸ்டர் மற்றும் பிளாஷ்பேக் எபிசோட் அட்டகாசம். ஷங்கர் சாரின் ஜென்டில்மேன் மற்றும் பாரதியுடு போன்ற படங்களுக்குப் பிறகு, சரணின் இந்த படத்தை மிகவும் ரசித்தேன். ரங்கஸ்தலம் படத்திற்காகத் தேசிய விருதை வென்றார், ஆனால் இந்த படத்தின் கிளைமாக்ஸைப் பார்த்த பிறகு, இந்த முறை அவர் கண்டிப்பாக மீண்டும் வெல்வார் என்று நான் நம்புகிறேன்."

தயாரிப்பாளர் தில் ராஜு, தனது 50 வது படத்தை ராம் சரண் மற்றும் ஷங்கர் போன்ற பிரமாண்டங்களுடன் இவ்வளவு பெரிய அளவில் தயாரிப்பது குறித்து, தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார். ஷங்கர் சாருடன் எனது பயணம் 1999 ஆம் ஆண்டு ஓகே ஒக்கடு படத்தின் மூலம் தொடங்கியது. அந்த படத்தின் 100 நாள் கொண்டாட்டத்தின் போது அவரை முதன்முதலில் சந்தித்தேன். பின்னர் அவர் தனது தயாரிப்பான ஈரம் படத்தைத் தெலுங்கில் வைஷாலியாக வெளியிட என்னை நம்பினார். இப்போது அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவரது முதல் நேரடியான தெலுங்குப் படமான கேம் சேஞ்சரைத் தயாரிக்க, என்னை நம்பி, எங்கள் பேனரின் இணை இயக்குநர் மூலம், ஷங்கர் எங்களின் கீழ் ஒரு தெலுங்குப் படத்தைத் தயாரிக்க விரும்புவதாகத் தெரிந்துகொண்டேன். அந்த நேரத்தில் ராம் சரண் படப்பிடிப்பிலிருந்தபோது, ஷங்கர் சாரின் ஐடியாவைப் பற்றிச் சொன்னேன். இப்படித்தான் எங்களின் இந்த பிரம்மாண்ட படைப்பு துவங்கியது. COVID-19 காரணமாகத் தயாரிப்பு தாமதமானது, ஆனால் இப்படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில், பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளோம்.  நான் மொபைலில் இப்படத்தின் 'Dhop' பாடலைப் பார்த்தேன், என் கண்களில் கண்ணீர் சுரந்தது. உங்கள் அனைவரையும் இப்படம் மகிழ்விக்கும்.

ராம் சரண் உடனான உறவு குறித்து தில் ராஜு கூறுகையில், "சரண் என்றாலே எனக்கு கல்யாண் சாருதான் நினைவுக்கு வருகிறார். தோலி பிரேமா, குஷி, கப்பர் சிங் போன்ற படங்களை விநியோகித்ததிலிருந்து மெகாஸ்டார் குடும்பத்துடனான எனது பயணம் தொடங்கியது. நான் முன்பு  சங்கராந்தியின் போது வெளியான சரணின், எவடு படத்தைத் தயாரித்தேன். இப்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த திரைப்படம் நம் தெலுங்கு மாநிலங்களின் தற்போதைய நிகழ்வுகளைக் காட்டுகிறது. நான்கு வருடங்களுக்கு முன்பு ஷங்கர் சார் துவங்கிய  கேம் சேஞ்சர் திரைப்படம் தெலுங்கு சினிமாவுக்கு ஒரு கேம் சேஞ்சராக இருக்கும்.

"பாடல் வேணுமா பாட்டு இருக்கு, ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, சங்கராந்திகி ஹிட் வேணுமா, ஹிட் இருக்கு" என்று தில் ராஜு தனது டிரேட்மார்க் வைரல் டயலாக் மூலம் மக்களை மகிழ்வித்தார். இந்த நிகழ்வை இவ்வளவு பெரிய அளவில் ஏற்பாடு செய்து மாபெரும் வெற்றியடைய செய்த ராஜேஷ் கல்லேபள்ளிக்கு நன்றி தெரிவித்தார். "

ராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ' நாக பந்தம் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்*

*ராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ' நாக பந்தம் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்* நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா-...