Monday, December 30, 2024

இந்தியாவின் தலைசிறந்த சமையல் மேஸ்ட்ரோவான, செஃப் தாமு, செஃப் தாமுவின் சுவையின் சங்கீதம் என்ற கேட்டரிங் மற்றும் ஈவெண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை தொடங்கினார்


 இந்தியாவின் தலைசிறந்த சமையல் மேஸ்ட்ரோவான, செஃப் தாமு, செஃப் தாமுவின் சுவையின் சங்கீதம் என்ற  கேட்டரிங் மற்றும் ஈவெண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை தொடங்கினார்.


வாழ்வின் ஒவ்வொரு கொண்டாட்டத்தையும்  இனிமையாகவும் அறுசுவையுடனும் அனுபவிக்கும் நோக்கத்துடன், சுவையின் சங்கீதம் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீங்கள் கண்ட கனவு திருமணங்கள் மற்றும் திருமணங்கள் மற்றும் மறக்க முடியாத நிகழ்வுகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை சுவையின் சங்கீதம் தர உள்ளது. 


சுவைகள் மற்றும் உணர்வுகளின் நல்லிணக்கத்தால் ஈர்க்கப்பட்ட சுவையின் சங்கீதம் எனும் இந்த பெயர்,  மகிழ்ச்சியான நினைவுகள் நிறைந்த தடையற்ற கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதற்கான வாக்குறுதியை பிரதிபலிக்கிறது.

கேட்டரிங் நிபுணத்துவத்திற்காக அறியப்பட்ட சுவையின் சங்கீதம் 

- கனவு திருமணங்களுக்கான உணவுகளை, செஃப் தாமுவால் தொகுக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் பாரம்பரிய மற்றும் சமகால சுவையோடு வழங்குகிறது.  

நிகழ்வு திட்டமிடல் மற்றும் மேலாண்மையின் கீழ், திருமணங்கள் முதல் தனியார் விருந்துகள் வரை, ஒவ்வொரு நிகழ்வும் துல்லியத்துடனும் ஆர்வத்துடனும் வடிவமைக்கப்படுகின்றன.

ஆடியோ-விஷுவல்கள் அதிநவீன உபகரணங்கள் உதவியோடு,  ஒவ்வொரு கணமும் பிரகாசமாக இருப்பதை உறுதி செய்கின்றன.

ஃபோட்டோகிராஃபி க மற்றும் வீடியோகிராஃபி திறமையான  கலைஞர்களால் எடுக்கப்பட்டு பசுமையான நினைவுகளை எக்காலத்திலும் உங்கள் எண்ணத்தில் நிறுத்தும்.

செஃப் தாமு,  பிராண்டின் பின்னணியில் தொலைநோக்கு பார்வை கொண்டவர். 

பல தலைமுறை சமையல் நிபுணத்துவம் மற்றும் சர்வதேச  நற்பெயருடன், செஃப் தாமு இந்திய உணவு வகைகளில் முன்னோடி செஃப் ஆக இருந்து வருகிறார். அவருடைய ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பு உணவு அனுபவங்களை மாற்றியமைத்து, பாரம்பரியம் மற்றும் நுட்பத்தின் கலவையைத் தேடுபவர்களுக்கு சுவையின் சங்கீதம் வாயிலாக வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

தொடர்புக்கு:- Shreedevi.K - 93848 06334,  Mageshwari.B - 98400 83111.


டீஜய் அருணாசலம் நடிக்கும்*“ *உசுரே* ” *படத்தின் ஃபர்ஸ்ட் லுக். வெளியீடு*

*டீஜய் அருணாசலம் நடிக்கும்* “ *உசுரே* ” *படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.  வெளியீடு* *பிரபலங்கள் வெளியிட்ட  “உசுரே” படத்தின் ஃபர்ஸ்ட் லுக...