Sunday, May 4, 2025

Dawn Pictures தயாரிப்பில், சிலம்பரசன் TR நடிப்பில் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும், #STR49 படம் பூஜையுடன் துவங்கியது


 Dawn Pictures தயாரிப்பில், சிலம்பரசன் TR நடிப்பில் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும், #STR49 படம்  பூஜையுடன் துவங்கியது !!

#STR49 திரைப்படம் இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது !!

Dawn Pictures சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிலம்பரசன் TR நடிப்பில், பார்க்கிங் படப்புகழ்  இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும்  #STR49 படத்தின் பூஜை, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, இன்று கோலாகலமாக நடைபெற்றது. 



விண்டேஜ் சிலம்பரசனை திரையில் மீண்டும் காணும் வகையில், கல்லூரி பின்னணியில் கலக்கலான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகிறது. இப்படத்தில் சிலம்பரசன் TR கல்லூரி மாணவனாக நடிக்கிறார். 


பார்க்கிங் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், மாறுபட்ட களத்தில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், கமர்ஷியல் கொண்டாட்டமாக இப்படத்தை உருவாக்கவுள்ளார்.

இப்படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிலம்பரசன் TR உடன் நடிகர் சந்தானம் இணைந்து நடிக்கிறார். இளைஞர்களின் நெஞ்சம் கவர்ந்த நாயகி கயாடு லோஹர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் VTV கணேஷ் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். 

பல  முன்னணி நட்சத்திர  நடிகர்களின் நடிப்பில் பல பிரம்மாண்ட படைப்புகளை உருவாக்கி வரும், Dawn Pictures சார்பில், ஆகாஷ் பாஸ்கரன் மிகப்பெரும் பொருட்செலவில் #STR49 படத்தினை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். 

நடிகர்கள் 

சிலம்பரசன் TR

சந்தானம்

கயாடு லோஹர்

VTV கணேஷ்

தொழில் நுட்ப குழு 

தயாரிப்பாளர் - ஆகாஷ் பாஸ்கரன் (டான் பிக்சர்ஸ்) 

இயக்குநர் : ராம்குமார் பாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு :மனோஜ் பரமஹம்சா 

இசை: சாய் அபயங்கர் 

கலை: இயக்கம் : சுபேந்தர் PL 

ஆடை வடிவமைப்பாளர்: பிரவீன் ராஜா 

விளம்பர வடிவமைப்பாளர்: கபிலன் செல்லையா நிர்வாக தயாரிப்பாளர்: வீர சங்கர்

மார்க்கெட்டிங்: மனோஜ் மேடி

மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)


War 2 Teaser: Hrithik Roshan Welcomes Jr. NTR to Hell*

*War 2 Teaser: Hrithik Roshan Welcomes Jr. NTR to Hell* The much-anticipated teaser of YRF's War 2 was launched today and ha...