Wednesday, June 11, 2025

இந்த தலைமுறையின் காதலுக்கான குரலாக இருக்கும் ஜூபின் நௌடியல் ! இன்று வெளியான சையாரா பட 'பர்பாத்' பாடலுக்கு ஜூபினை பாட வைத்தது குறித்து மோஹித் சூரி விளக்கம்.


 இந்த தலைமுறையின் காதலுக்கான  குரலாக இருக்கும் ஜூபின் நௌடியல் ! இன்று வெளியான சையாரா பட 'பர்பாத்' பாடலுக்கு ஜூபினை பாட வைத்தது குறித்து  மோஹித் சூரி விளக்கம்.


சையாரா படத்தின் தலைப்பு  பாடலின் பெரும் வெற்றிக்குப் பிறகு, யஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரி, ஜூபின் நௌடியல் பாடியுள்ள 'பர்பாத்' பாடலை வெளியிட்டுள்ளனர் .தி ரிஷ் இந்த பாடல் வரிகளை எழுதி ,இசையமைத்துள்ளார் .

சையாரா பட டீசர் வெளியானதிலிருந்து, அற்புதமான நடிப்புத் திறன்களை காட்டிய அறிமுகக் கலைஞர்களுடன் ஒரு காதல் கதையை உருவாக்கியதற்காக யஷ் ராஜ் மற்றும் மோஹித் கூட்டணி ஒரு மனதாகப் பாராட்டைப் பெற்றுள்ளது.

பர்பாத் பாடலுக்காக ஆத்மார்த்தமான காதல் பாடலை பாடி அதிக வரவேற்பு பெற்ற இந்த தலைமுறையை சார்ந்த  ஜூபின் நௌடியலை பாட வைத்துள்ளார் மோஹித்.
 
இது குறித்து மோஹித் கூறுகையில், “காதலுக்காக இந்த தலைமுறையின் குரலாக உள்ள பாடகர்கள் பல பேர் உள்ளார்கள், ஜூபின் நௌடியல் நிச்சயமாக இந்த பட்டியலில் உள்ளார் .சையாராவின் இசை ஆல்பத்தில் ஜூபின் ஒரு ஆத்மார்த்தமான காதல் பாடலைப் பாட வேண்டும் என்பதில்  நான் ஆரம்பத்தில் இருந்தே  உறுதியாக இருந்தேன். பர்பாத் பாடலுக்கு , ஜூபின் குரல் சரியான பொருத்தமாக இருக்கும் என்பது னக்குத் தெரியும்.”

மேலும் அவர் கூறுகையில் , “ஜூபினுக்கு மிகவும் தனித்துவமான குரல் உள்ளது.இந்த  காதல் பாடல் அதிக உணர்வையும், அதிக தாக்கத்தையும் ஏற்படுத்தும். எந்தவொரு பாடகருக்கும் அது ஒரு அரிய குணம், அதனால் தான் அத்தகைய பாடகர்கள் மிகப்பெரிய நட்சத்திரங்களாக மாறுகிறார்கள். மக்கள் இணைக்கக்கூடிய, அடையாளம் காணக்கூடிய ஒரு காதல் பாடலை ஒரு பாடகர் வழங்க முடிந்தால், அத்தகைய திறமையைக் கொண்டிருப்பது உண்மையிலேயே அவருக்கு கிடைத்த பரிசு தான் என்று நான் நினைக்கிறேன்.

தங்கள் வாழ்க்கையில் அன்பை,காதலை உணர்ந்த அனைவருக்கும் பர்பாத் பாடல் ஒரு ஏக்கமாக இருக்கும் . காதல் பாடல்கள் ஆழமான, தனிப்பட்ட ஏக்கத்தைத் தூண்டும் சக்தியைக் கொண்டது. எனவே பர்பாத் பாடல் தங்கள் வாழ்க்கையில் அன்பை உணர்ந்தவர்களுக்கு அதை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

சையாரா டைட்டில் பாடலுக்கு கிடைத்த நம்பமுடியாத வரவேற்பைத் தொடர்ந்து, மக்கள் பர்பாத் பாடலையும் விரும்புவார்கள் . வெளியீட்டிற்கு முன்னதாக எங்கள் படத்திற்கு அதிக அன்பைக் கொடுப்பார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம் .

சையாரா தலைப்பு பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இது ஒரு அலைந்து திரியும் நட்சத்திரம் ,எப்போதும் பிரகாசிக்கும், எப்போதும் வழிகாட்டும், ஆனால் எப்போதும் எட்டாதது."

இந்த திரைப்படத்தின் மூலம் அஹான் பாண்டேவை ஹிந்தித் திரைப்படத் துறைக்கு ஒரு ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறது, மேலும் அனீத் பத்தா (பிக் கேர்ள்ஸ் டோன்ட் க்ரை என்ற மிகவும் பாராட்டப்பட்ட தொடரில் அவரது அற்புதமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர்  ) கதாநாயகியாக நடிக்கிறார். சையாராவை யஷ் ராஜ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் விதானி தயாரித்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 18ந் தேதியன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

Heritage Meets High Performance as Bajaj Pune Grand Tour 2026 Trophy Arrives in Chennai

Heritage Meets High Performance as Bajaj Pune Grand Tour 2026 Trophy Arrives in Chennai Chennai : The heritage-inspired Trophy f...