Thursday, September 25, 2025

செப்டம்பர் 29 முதல் இரவு 7.30 மணிக்கு “ருத்ரா” - கலைஞர் டிவியின் புத்தம் புதிய மெகாத்தொடர்

செப்டம்பர் 29 முதல் இரவு 7.30 மணிக்கு “ருத்ரா” - கலைஞர் டிவியின் புத்தம் புதிய மெகாத்தொடர்
 
கலைஞர் தொலைக்காட்சியில் வருகிற செப்டம்பர் 29 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ருத்ரா என்கிற புத்தம் புதிய மொகாத் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.
 
ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த மெகாத் தொடர், சென்னையின் லட்சுமி காலனி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் விதவிதமான மனிதர்கள், அவர்களின் ரகசியங்கள் மற்றும் சிக்கல்களை மையப்படுத்தி உருவாகிறது.
 
லட்சுமி காலனிக்கு அனு என்கிற குழந்தையுடன் குடியேறும் கலாரஞ்சனி, தனது கடந்தகாலத்தை மறைத்து அங்கு இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார். ஆனால், அவள் மீது காதல் கொண்டு அவளையே சுற்றி வரும் புலனாய்வு பத்திரிகையாளரான கதிர் ஒரு பக்கம், நேர்மையான போலீஸ் அதிகாரி சந்துரு, ஆட்டோ டிரைவர் வைரவேல் போன்ற கதாபாத்திரங்கள் கதையில் இணையும் போது, தொடரில் பல திருப்பங்கள் இடம்பெறுகிறது.
 
இந்த விறுவிறுப்பான கதையில், அனுவின் அடையாளம் என்ன, உண்மையில் கலாரஞ்சனி யார், அவரது நோக்கம் என்ன, அவளைத் தொடர்ந்து வரும் மர்ம மனிதர்கள் யார் என்பதே இந்தத் தொடரின் மீதிக் கதை.

செப்டம்பர் 29 முதல் இரவு 7.30 மணிக்கு “ருத்ரா” - கலைஞர் டிவியின் புத்தம் புதிய மெகாத்தொடர்

செப்டம்பர் 29 முதல் இரவு 7.30 மணிக்கு “ருத்ரா” - கலைஞர் டிவியின் புத்தம் புதிய மெகாத்தொடர்   கலைஞர் தொலைக்காட்சியில் வருகிற செப...