Tuesday, September 23, 2025

ஜவான்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றார் நடிகர் ஷாரூக்கான்!!*

ஜவான்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றார் நடிகர் ஷாரூக்கான்!!*

“ஜவான்” படத்தில் நடித்ததற்காக தேசிய விருதில், சிறந்த நடிகர் விருது பெற்றார் நடிகர்  ஷாரூக் கான்!!

30 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரை வாழ்க்கையில், முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், தனது 2023 வெளியீடான “ஜவான்” திரைப்படத்திற்காக,  நாட்டின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான தேசிய விருதில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக திரை உலகில் சாதனை படைத்துவரும் ஷாரூக், தனது முதலாவது தேசிய விருதை இப்போது வென்றிருப்பது, அவரது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக, மிகப்பெரும் கௌரமாக அமைந்துள்ளது.

“ஜவான்”  படத்தில் தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 71வது தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ஷாரூக்கான், ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். ஆக்சன் காட்சிகளிலிருந்து உணர்ச்சிபூர்வமான நடிப்புவரை, பல்வேறு விதமான வேடங்களில் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்திய ஷாரூக், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் மனதையும் கவர்ந்திழுத்துள்ளார். இவ்விருது அவரது திரைப்பயணத்திற்கு மிக உரிய பெருமையாகும்.

சமீபத்தில், தனது மகன் ஆர்யன் கானின் இயக்கிய அறிமுகப்படைப்பு The Ba***ds of Bollywood சீரிஸில், சிறப்பு தோற்றத்தில் நடித்தார் ஷாரூக்கான். அடுத்ததாக, சித்தார்த் ஆனந்த் இயக்கும் King திரைப்படத்தில் மகள் சுஹானாகானுடன் இணைந்து நடிக்க உள்ளார். 2026-இல் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், ஷாரூக்கான் மற்றும் தீபிகா படுகோனே இணையும் காட்சிகளும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான்  தேசியவிருது பெற்றதை,  ரசிகர்கள் மிக உற்சாகமான கொண்டாடி வருகின்றனர்.

டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் !

*'டூரிஸ்ட் ஃபேமிலி'  பட இயக்குநர்  அபிஷன் ஜீவிந்த் திருமணம் !!* 'டூரிஸ்ட் ஃபேமிலி'  படம் மூலம் அனைவரது கவனத்தையு...