Monday, April 27, 2026

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணி கொண்ட "கற்றது சமையல்"


 கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணி கொண்ட "கற்றது சமையல்"

 


கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் - வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "கற்றது சமையல்" நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

 


மண் மனம் மாறாமல் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் காடு, மேடு என வித்தியாசமான இடங்களை தேர்வு செய்து கிராமத்து சமையலை மிக்ஸி, கிரைண்டர்  போன்ற எந்த வித நவீன உபகரணங்களும் இன்றி, இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களை வைத்து முழுக்க முழுக்க கிராமத்து பாணியில், கைப்பக்குவத்திலேயே சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவை சமைப்பதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.

 

இதுவரை நாம் அறிந்திராத பல சுவையான பாரம்பரிய உணவு வகைகளை, அதன் இயற்கை மனம் மற்றும் ருசியுடன் சமைப்பதுடன், தினமும் ஒரு வித்தியாசமான சமையலை நம் கண் முன்னே விருந்தளிக்கும் விதமாக "கற்றது சமையல்" நிகழ்ச்சி உருவாகி வருகிறது.

Thursday, April 16, 2026

கலைஞர் தொலைக்காட்சியில் இருவர் - புத்தம்புதிய நிகழ்ச்சி


நமது கலைஞர் தொலைக்காட்சியில் இருவர் - திலெஜெண்ட்ஸ் ரீ-லோடட் என்கிற புத்தம் புதிய நிகழ்ச்சிஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான உலகநாயகன்கமல்ஹாசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தைகொண்டாடும் வகையில் ரஜினி, கமலுடன் இணைந்துபணியாற்றிய கோலிவுட்டின் முக்கிய பிரபலங்கள்அவர்களைப் பற்றி யாரும் அறிந்திடாத சுவாரஸ்யமானபல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும்கலகலப்பான நிகழ்ச்சியாக இருவர் உருவாகி இருக்கிறது.

Tuesday, April 7, 2026

கலைஞர் டிவியின் சித்திரைத் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்


 கலைஞர் டிவியின் சித்திரைத் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்

கலைஞர் தொலைக்காட்சியில் சித்திரை திருநாளை முன்னிட்டு காலை 10 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனியின் கலகலப்பான சிறப்பு பட்டிமன்றமும், காலை 10 மணிக்கு மணிகண்டன் நடிப்பில் "குடும்பஸ்தன்" சிறப்பு திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் 2026-ன் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டான "பராசக்தி" சிறப்பு திரைப்படமும், மாலை 6 மணிக்கு தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய் நடிப்பில் "இட்லி கடை" சிறப்பு திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.

KALAIGNAR TV – GOWRI SERIALஎகிரும் எதிர்பார்ப்பு - கௌரி தொடரில் இணையும் ரோஜா சீரியல் புகழ் பிரியங்கா..!

KALAIGNAR TV – GOWRI SERIAL எகிரும் எதிர்பார்ப்பு - கௌரி தொடரில் இணையும் ரோஜா சீரியல் புகழ் பிரியங்கா..!   கலைஞர் தொ...