Wednesday, May 27, 2026

கலைஞர் தொலைக்காட்சியில் “இருவர்” - புத்தம் புதிய நிகழ்ச்சி

கலைஞர் தொலைக்காட்சியில் “இருவர்” - புத்தம் புதிய நிகழ்ச்சி
 
 
நமது கலைஞர் தொலைக்காட்சியில் “இருவர் - தி லெஜெண்ட்ஸ் ரீ-லோடட்” என்கிற புத்தம் புதிய நிகழ்ச்சி ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை கொண்டாடும் வகையில் ரஜினி, கமலுடன் இணைந்து பணியாற்றிய கோலிவுட்டின் முக்கிய பிரபலங்கள் அவர்களைப் பற்றி யாரும் அறிந்திடாத சுவாரஸ்யமான பல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் கலகலப்பான நிகழ்ச்சியாக “இருவர்” உருவாகி இருக்கிறது.

Wednesday, May 20, 2026

கலைஞர் டிவியில் "தமிழோடு விளையாடு சீசன் 3" - மாபெரும் இறுதிப்போட்டி

கலைஞர் டிவியில் "தமிழோடு விளையாடு சீசன் 3" - மாபெரும் இறுதிப்போட்டி
 
கலைஞர் தொலைக்காட்சியில் "தமிழோடு விளையாடு" நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஞாயிறுதோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
 
பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தமிழ் அறிவை சோதிக்காமல், தமிழ் அறிவை ஊட்டும் உணர்ச்சிப்பூர்வமான சுற்றுகளைக் கொண்டிருக்கிறது மற்றும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தி வருகின்றனர்.
 
விறுவிறுப்பாக நடந்து வந்த அரையிறுதிப் போட்டி முடிவடைந்துள்ள நிலையில், தற்போது மாபெரும் இறுதிப்போட்டி வரும் ஞாயிறு மாலை 6 மணி முதல் 8 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில், தமிழோடு விளையாடு பட்டம் மற்றும் ரூ.3 லட்சம் பரிசுத் தொகையை வெல்லப் போகும் அணி எது என்கிற எதிர்பார்ப்பும் பரபரப்பும் அதிகரித்திருக்கிறது.

Tuesday, May 12, 2026

KALAIGNAR TV – GOWRI SERIALஎகிரும் எதிர்பார்ப்பு - கௌரி தொடரில் இணையும் ரோஜா சீரியல் புகழ் பிரியங்கா..!

KALAIGNAR TV – GOWRI SERIAL
எகிரும் எதிர்பார்ப்பு - கௌரி தொடரில் இணையும் ரோஜா சீரியல் புகழ் பிரியங்கா..!
 
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தெய்வீக மெகாத்தொடர் "கெளரி". மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, துர்கா, கனகா ஆகிய இருவரும் ஒரே முகத் தோற்றத்தில் இருப்பதால் உண்மையான துர்கா யார் என்கிற குழப்பம் நிலவி வருகிறது.
 
இதனை நிரூபிக்கும் பொருட்டு தீக்குழியில் இறங்க துர்கா முடிவு செய்ய அடுத்த நடக்கப்போவது என்ன என்கிற பரபரப்போடும், ரோஜா மெகாத்தொடரின் நாயகியான பிரியங்கா கௌரி மெகாத்தொடரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அறிமுகமாக இருக்கிறார் என்பதால் தொடர் தற்போது விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"

 கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"   கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமைவரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பா...