Thursday, March 7, 2024

மாணவர்களுக்கு மட்டும் இன்றி பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு திரைப்படமாக உருவாகியுள்ளது ‘பூமர காத்து’!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பார்த்தால் நிச்சயம் மாணவர்களிடம்  "பூமர காத்து" படத்தை கொண்டு போய் சேர்ப்பார் என இயக்குநர் ஞான ஆரோக்கியராஜா நம்பிக்கை!


மாணவர்களுக்கு மட்டும் இன்றி பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு திரைப்படமாக உருவாகியுள்ளது  ‘பூமர காத்து’!


ஜீசஸ் கிரேஸ் சினி என்டர்டெயின்மென்ட் சார்பில், ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து இயக்கியுள்ள இப்படத்தில் விதுஷ், சந்தோஷ் சரவணன் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகியாக மனிஷா நடித்திருக்கிறார். இவர்களுடன் மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம் புலி, ஓ.எஸ்.மணி, முத்துக்காளை, போண்டாமணி, சிஸ்ஸர் மனோகர், குழந்தை நட்சத்திரம் ஜி.வி.சன்மதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


பள்ளி பருவத்தில் வரும் காதல் சரியா? தவறா? என்பதை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ள இப்படத்தின் கதையில்,  காதலோடு பல்வேறு சமூக கருத்துகளும் பேசப்பட்டுள்ளது.


’பூமர காத்து’ படத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பார்த்தால், நிச்சயம் அனைத்து மாணவர்களிடமும் படத்தை கொண்டு சேர்ப்பார். படம் பார்க்க, அவரிடம் தேதி கேட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்தார்‌

ஞான ஆரோக்கிய ராஜா கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் ‘பூமர காத்து’ படத்திற்கு  அரவிந்த் ஸ்ரீராம் இசை அமைத்திருக்கிறார். மதுரை ஈஸ்வர் பின்னணி இசை அமைத்துள்ளார். ஜோ ஒளிப்பதிவு செய்ய, சார்ப் ஆனந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். ஓ.எஸ்.மணி இணை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.


விரைவில் திரைக்கு வருகிறது "பூமர காத்து"!

 

Tuesday, March 5, 2024

ஹன்சிகா' நடிப்பில் மார்ச்-8-ஆம் தேதி மிரட்டலாக வெளியாகும் ' கார்டியன்'*

*'கார்டியன்' திரைப்படத்தின் டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி!*

*'ஹன்சிகா'  நடிப்பில்  மார்ச்-8-ஆம் தேதி மிரட்டலாக வெளியாகும் ' கார்டியன்'*

தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் நடித்துள்ள 'கார்டியன்' திரைப்படத்தின் மிரட்டலான டீஸர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீஸரில் ஹன்சிகா இரட்டை வேடத்தில் வருவது மாதிரியான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரச் செய்யும் பயமுறுத்தக்கூடிய காட்சிகளுடன் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்புடன் கூடிய காட்சிகளும் அமைந்துள்ளன.
இத்திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானியுடன் சுரேஷ் மேனன்,ஸ்ரீமன், அபிஷேக்  வினோத்,ஸ்ரீராம் பார்த்தசாரதி, 'மொட்டை'ராஜேந்திரன்,பிரதீப் ராயன்,'டைகர் கார்டன்' தங்கதுரை மற்றும் சில முன்னணி நடிகர்,நடிகைகளும் நடித்துள்ளனர்.

இப்படத்தை குரு சரவணன் மற்றும் சபரி ஆகியோர் இயக்கி உள்ளனர்.இப்படத்திற்கு கதை, திரைக்கதை,வசனத்தை குரு சரவணன் எழுதியுள்ளார். ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர் தயாரித்துள்ளார்.இப்படத்திற்கு சாம் C.S மிரட்டலான இசையை அமைத்துள்ளார். இப்படத்திற்கான ஒளிப்பதிவாளராக K.A.சக்திவேல் மற்றும் படத்தொகுப்பாளராக M.தியாகராஜன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

மாபெரும் வெற்றித் திரைப்படமான 'விஸ்வரூபம்' திரைப்படத்திற்காக தேசிய விருது வென்றவரான 'லால்குடி' N.இளையராஜா,இப்படத்தின் கலை இயக்குனராக தன் பணியை சிறப்பாக செய்து படத்திற்கு வலுசேர்த்து இருக்கிறார். சண்டைப் பயிற்சியாளராக 'டான்' அசோக் பணியாற்றிருக்கிறார். விவேகா, சாம் C.S , உமாதேவி ஆகியோர்தம் பாடல்வரிகள் மூலம் படத்தின் இசையை மெருகேற்றியுள்ளனர். ஆடை வடிவமைப்பாளராக அர்ச்சா மேத்தா பணியாற்றி இருக்கிறார்.
S.கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பு மேலாளராகவும், நவீன் பிரபாகர் நிர்வாக தயாரிப்பாளராகவும், விஜய் பிரதீப், ஸ்டாலின்  ஆகியோர் தயாரிப்பு மேற்பார்வையாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.இப்படத்தில் இன்னும் சில தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றியுள்ளனர்.

இதனிடையே நேற்று படத்தின் இரண்டாவது டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது 
முதலாவதாக கார்டியன் படக்குழுவினரை வரவேற்று பேசினார் தயாரிப்பாளர்  விஜயசந்தர்.
தனக்கு உறுதுணையாக இருந்த தனது நண்பர்களுக்கு நன்றி கூறினார். "நான் தொடங்கிய 'வாலு' திரைப்படம் மூன்று வருடங்களுக்கு பிறகே வெளியானது. 
அந்த படம் வெளியாவதற்கு என் நலம் விரும்பிகளான ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் கொடுத்த ஊக்கமே காரணம். 'கார்டியன்' படம் தொடங்குவதற்கு முன் நான் ஒரு படத்தை இயக்கலாம் என்று இருந்தேன்,  கொரோனா தொற்று காலம் என்பதால்  பல திரைப்படங்களின் வெளியிட்டு தேதியும் மாறி விட்டது. அடுத்ததாக படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் தன் நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் தான் இந்த படம் தயாரிப்பு குறித்த யோசனையை எனக்கு அளித்தனர். அப்பொழுதுதான் இயக்குனர்கள் இருவரும் இந்த கதையை என்னிடம் கூறினர். கதாநாயகி முக்கியத்துவம் உள்ள கதை என்பதால் தனது எண்ணத்திற்கு முதலாவதாக வந்தவர் ஹன்சிகா மோத்வானி ஆவார். அதன் பிறகு இந்த கதையில் அவர் பொறுப்பெடுத்துக் கொண்டு இந்த படத்தை சிறப்பாக முடித்து கொடுத்தார். தொழில்நுட்பக் குழுவினரும் இந்த படத்தில் பணிபுரிய ஆர்வத்தோடு அவர்களாகவே வந்து எங்களுடன் இணைந்து கொண்டனர். அதுவே இந்த படம் சிறப்பான ஒரு தயாரிப்பாக உருவாவதற்கு மூலக் காரணமாக அமைந்தது. கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மிகவும் உழைத்தோம். சிறப்பாக இந்த படம் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். மார்ச் 8-ஆம் தேதி படம் வெளியாக உள்ளது, ஊடக நண்பர்கள் தங்களது ஆதரவை எங்களுக்கு தர வேண்டும்" என்று  கூறினார்.

 லால்குடி.N.இளையராஜா 

அவருக்கு பிறகு பேசிய," கலை இயக்குனர் திரு லால்குடி என் இளையராஜா பேசும் பொழுது,"நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். ஒரு கலைஞனாக குருநாதருக்கும் அவரது மாணவர்களுக்கும் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திரு கே.எஸ் ரவிக்குமார் அவர்களிடம் பணிபுரியும் பொழுது நிறைய கற்றுக் கொண்டேன். அதுபோல சபரி மற்றும் குரு சரவணன் இருவருடனும் பணிபுரிந்தேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விஜய்சந்தர் தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார்,அப்படித்தான் நான் இந்த படத்தில் விருப்பப்பட்டு பணியாற்ற வந்தேன். படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளோம். ஊடகத்துறையினர் தங்களது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்", என்று பேசினார்.

 M. தியாகராஜன்
 
அடுத்ததாக பேசிய ஒளிப்பதிவாளர் தியாகராஜன்," ஊடகத்துறையினருக்கும் இங்கு அமர்ந்திருக்கும் ஜாம்பவான்களுக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.விஜயசந்தர் அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. அவரை சந்தித்த பிறகு இந்த படத்தை பற்றி கூறி, எனக்கு வாழ்த்து தெரிவித்து நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படத்தில் இணைகிறோம் என்று கூறினார். இயக்குனர்களுக்கும், கலை இயக்குனர் லால்குடி.N.இளையராஜா அவர்களுக்கும் இசையமைப்பாளர் சாம் C.S அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல படத்தின் கதாநாயகி இங்கு அமைதியாக இருந்தாலும் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் சிறப்பாக வந்துள்ளது அனைவருக்கும் நன்றி", என்றார்.


 டான் அசோக் 

இங்கு வந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள் திரு.கே எஸ்.ரவிக்குமார், ஹன்ஷிகா மற்றும் தயாரிப்பாளர் விஜய் சந்தர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது முதல் படமான 'வாலு' படத்தில் உதவியாளராக பணியாற்றினேன். தற்போது அவர் தயாரிக்கும் முதல் படத்தில் சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்ற வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் உதவி இயக்குனர்களும் கடின உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி,வணக்கம்", என்றார்.

 சாம்.C.S 

அடுத்து இசையமைப்பாளர் சாம்.C.S பேசும் பொழுது,"சமீப காலத்தில் ஹன்சிகா அவர்களுடன் தொடர்ந்து மூன்று படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.மூன்றும் ஹாரர் திரைப்படங்களாக அமைந்தது.முன்பெல்லாம் கதாநாயகி வேடம் என்பது துணை கதாபாத்திரமாக இருந்தது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நிறைய முன்னணி நடிகைகள் நடித்து வருகிறார்கள். அதில் ஹன்ஷிகாவும் ஒருவர்.மூன்று திரைப்படங்களிலும் வெவ்வேறு விதமான நடிப்பை கொடுத்துள்ளார். நிறைய ஹாரர் படங்கள் பண்ணும் பொழுது நாம் நிழல் உலகத்திற்கு சென்று விடுவது போல தோன்றும் அது சினிமா என்ற ஆர்வமும் காரணமாகும். அதேபோலத்தான் இந்த படத்திலும் சிரத்தையுடன் பணியாற்றி உள்ளேன். இயக்குனர்கள் இருவருடனும் இதுதான் முதல் படம். அவர்களின் கருத்துக்களை பெறுவது மிகவும் கடினமாக இருந்தது. இந்தத் திரைப்படம் வெறும் ஹாரர் திரைப்படமாக மட்டுமல்லாமல் உணர்வு பூர்வமான திரைக்கதையுடனும்  உருவாகியுள்ளது. இந்தப் படம் வெற்றி அடைய வேண்டும் என்று அனைவரும் நேர்மையான உழைப்பை கொடுத்துள்ளனர்.தயாரிப்பாளர் விஜய்சந்தர் உள்பட இதுவும் ஒரு ஹாரர் படம் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மிகவும் மெனக்கட்டுள்ளார். ஒரு படைப்பு மிகவும் நன்றாக வரவேண்டும் என்ற தேடலுடன் திரைப்படத்தை விஜய்சந்தர் உருவாக்கியுள்ளார். திரு கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுடன் பணி புரிய வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அவர் எங்களை வாழ்த்த வந்ததற்கு மிக்க நன்றி. அவர் இயக்கியது போன்ற குடும்ப பாங்கான, நகைச்சுவையான திரைப்படங்கள் மிகவும் குறைவாக வெளி வருகின்றன. அதற்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஒரு படத்திற்கான இசையமைப்பு பணியில் பலதுறையினர் பணியாற்றுகின்றனர்.அதை தொகுத்து பணியாற்றும் பொழுது படத்தின் இசை நடிகர்களின் இயல்பான நடிப்பை அழுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக பணியாற்றுகிறேன். ஒரே மாதிரியான இசையை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்களுக்கு தோன்றும் விதமாக இல்லாமல், விதவிதமான திரைக்கதைகளையும் விதவிதமான இசையையும் முயற்சி செய்து கொண்டும் பணியாற்றிக் கொண்டும் இருக்கிறேன். உதாரணத்திற்கு ஹன்ஷிகா உடனே மூன்று படங்களில் பணிபுரிந்திருக்கிறேன். மூன்றிலும் ஒரே மாதிரியான இசையை நாம் கொடுக்க முடியாது விதவிதமான இசையை முயற்சி செய்ய வேண்டி உள்ளது,அவ்வாறு செய்யும்போது சில வெற்றி அடையும் சில தோல்வியடையும் தோல்வியிலிருந்து அனுபவத்தை கற்றுக் கொண்டுள்ளேன். ஊடகத்துறையினரின் ஆதரவு மிகவும் தேவை. அனைவருக்கும் நன்றி", என்று பேசினார்.


 ஹன்ஷிகா 

ஹன்ஷிகா மோத்வானி பேசும் பொழுது,"கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 'கார்டியன்' திரைப்படம் வரும் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகிறது. எப்பொழுதும் போல ஊடகத் துறையினரின் ஆதரவு எங்களுக்கு வேண்டும். இந்த திரைப்படக் குழுவினர் கூறியது போல உங்கள் அனைவருடைய ஆசிர்வாதமும் ஆதரவும் தேவை. இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் நன்றி", என்றார்


 யுவராஜ் 

படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமை பெற்றுள்ள யுவராஜ் அவர்கள் பேசும் பொழுது,"வரும் மார்ச் 8-ஆம் தேதி படம் வெளியாகிறது. இறுதியில் எடுக்கப்பட்ட முடிவு தான் இந்த பட வெளியீடு.இது ஒரு புதுவிதமான ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ளது. அதிர்ஷ்டம் இல்லாத ஒருவருக்கு கிடைக்கும் பொருள் மூலமாக எவ்வாறு அவரது வாழ்க்கை மாறுகிறது என்பதைப் பற்றிய கதைதான் இது. இந்த வாய்ப்பு அளித்தமைக்கு விஜய்சந்தர் அவர்களுக்கு மிக்க நன்றி. எங்களுடைய முழு ஆதரவையும் இந்த படத்திற்கு நாங்கள் அளிக்கிறோம்", என்று பேசினார்.

 பிரதீப் 

படத்தின் கதாநாயகன் பிரதீப் பேசும் பொழுது,"ஊடகத்துறையினர் அனைவருக்கும் மாலை வணக்கம்! எங்களை வாழ்த்த வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் நன்றி. ஏதாவது ஒரு நல்ல கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பாக உன்னை அழைக்கிறேன் என்று கூறினார். அதே போல இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு வழங்கினார். எனது கதாபாத்திரத்தில் எனக்கு எந்தவித ஏமாற்றமும் ஏற்படவில்லை. இயக்குனர்கள் சபரி-குரு சரவணன் மற்றும் ஹன்ஷிகா மோத்வானி அவர்களுக்கும் மிக்க நன்றி. படத்தில் பணியாற்றிய நடிகர்,நடிகைகளுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மிக்க நன்றி. வரும் மார்ச் 8-ஆம் தேதி படம் வெளியாகிறது, ஊடகத்துறையினரின் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி!", என்றார்.

 ஸ்ரீராம் பார்த்தசாரதி 

அடுத்ததாக பாடகர் மற்றும் நடிகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி பேசும் பொழுது,"இந்த படம் எனக்கு ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது. அடிப்படையில் நான் ஒரு பாடகர் நடிகர் என்பது எனக்கு சற்று தூரமான விஷயம். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் விஜய்சந்தர் உடன் ஏற்கனவே பணியாற்றி உள்ளேன். திடீரென அவர் இப்படி ஒரு கதாபாத்திரம் உள்ளது நடிக்கிறீர்களா, என்று கேட்டார் இந்த கதாபாத்திரம் எனக்கு ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது. என்னுடன் நடித்த சுரேஷ் மேனன் மற்றும் ஸ்ரீமன் அவர்களும் நீண்ட நாள் நண்பர்கள் அவர்களுடன் நடித்தது சிறப்பான அனுபவமாக அமைந்தது. திரு.கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் என்னை பாராட்டி பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இயக்குனர் குரு சரவணன் படத்தின் டப்பிங் பணியின் போது தனக்கு என்ன தேவையோ அதை என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார். புதுவிதமான ஹாரர் திரைப்படமான, இத்திரைப்படத்தை மகளிர் தினமான  
மார்ச் 8-ஆம் தேதி வெளியிடுவதற்கு தனி தைரியம் வேண்டும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஓடிடியில் படம் வெளியாகும் வரை காத்திருக்காமல் திரையரங்கில் வந்து கண்டுகளிக்குமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன் அனைவருக்கும் நன்றி", என்று பேசினார்.

 தியா 

அடுத்ததாக தியா பேசும்பொழுது,"வாய்ப்புகள் தரப்படுவதில்லை உருவாக்கப்படுகிறது என்று கூறுவார்கள்.ஆனால் வெள்ளித்திரையில் இயக்குனர் விஜயச்சந்தர் எனக்கு இந்த வாய்ப்பை தந்திருக்கிறார். உலகிலேயே மிகப்பெரிய பரிசு நமக்கு நம் மீது உள்ள நம்பிக்கையை விட நம் மீது பிறர் வைக்கும் நம்பிக்கையே ஆகும் என என் சகோதரி கூறுவார். தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் என் மீது வைத்த
நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எதிர்காலங்களில் பணியாற்றுவேன்.
தனது பொன்னான நேரத்தை செலவு செய்து எங்களை ஊக்குவிக்க வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் நன்றி. இந்த படத்தில் ஹன்சிகா அவர்களை ரசித்து ரசித்து இணைந்து பணியாற்றி உள்ளோம். அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக இந்த படம் அமையும். ஊடகத்துறையினரின் ஆதரவுக்கு மிக்க நன்றி",என்று பேசினார்.

 ஷோபனா 

நடிகை ஷோபனா பேசும்போது,"இரண்டாவது படமே மிகப்பெரிய படமாக அமைந்தது,மிக்க மகிழ்ச்சி இந்த வாய்ப்பு அளித்த தயாரிப்பாளருக்கும் இயக்குனர்கள் இருவருக்கும் மிக்க நன்றி. ஹன்ஷிகா அவர்களுடன் பணி புரிந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினத்தன்று திரைப்படம் வெளியாகிறது. உங்கள் அனைவருடைய ஆதரவும் தேவை.  படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்", என்றார்.


 அபிஷேக் வினோத் 


நடிகர் அபிஷேக் வினோத் பேசும் பொழுது,"தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் திரு.விஜய்சந்தர் என்னுடைய குரு ஆவார். 'ஸ்கெட்ச்' திரைப்படத்தில் மிகப்பெரிய வாய்ப்பு கொடுத்தார்.அதேபோல இப்படத்திலும் நடிக்க கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தார்.அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கதாநாயகி ஹன்ஷிகா மோத்வானி மற்றும் கதாநாயகன் பிரதீப் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். திரு.கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்",என்று பேசினார்.

தங்கதுரை 

தங்கதுரை பேசும் பொழுது,"திரு.கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் படங்களை பலமுறை பார்த்திருக்கிறேன். அவருடன் நடிக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்துள்ளது.இந்த படத்தில் அவருடைய உதவியாளர்களிடம் பணிபுரிந்துள்ளேன். 'வாலு' திரைப்படத்தில் விஜயசந்தர் அவர்கள் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்தார். இயக்குனர்கள் குரு சரவணன் மற்றும் சபரி இருவரும் இரவு பகல் பாராமல் இந்த படத்திற்காக உழைத்தனர். ஹன்சிகா அவர்களுடன் நடித்தது மிக்க மகிழ்ச்சி அவர் மிகவும் அழகான பேயாக இந்த படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் 'நான் கடவுள்' ராஜேந்திரன் அவர்களுடன் நடித்ததும் மிக மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. இசையமைப்பாளரும் ஒளிப்பதிவாளரும் இந்த படத்திற்கு தங்களது கடின உழைப்பை கொடுத்துள்ளனர். வாய்ப்பளித்த அனைவருக்கும் மிக்க நன்றி", என பேசினார்.

 குரு சரவணன் 

குரு சரவணன் அவர்கள் பேசும் பொழுது,"தமிழுக்கும்,கடவுளுக்கும், எங்களது குருநாதர் திரு.கே. எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் எனது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கடவுள் கொடுத்த வரம் என்னவென்றால் திரு.கே. எஸ்.ரவிக்குமார் எங்களை அவரிடம் சேர்த்துக் கொண்டதுதான்.தயாரிப்பாளர் விஜயசந்தர் எங்களுக்கு நீண்ட நாள் நண்பர் தான். கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போதே, தயாரிப்பு நிறுவனம் தொடங்கவிருப்பதையும் இணைந்து பணிபுரியலாம் என்றும் கூறினார்.நானும் சபரியும் பத்தாண்டுகளுக்கு மேலாக சிறந்த நண்பர்கள் இருவருக்கும் பல விஷயங்கள் ஒத்துப்போகும். கதையை தயாரிப்பாளர்,அவரது குழுவினர் மற்றும் ஹன்ஷிகாவிடமும்  கூறி ஒப்புதல் பெற்றோம்.பின்னர் எங்கள் குருநாதரிடம் இதைக் கூறி,ஆசி பெற்றோம்.கதாநாயகி ஹன்ஷிகா,கலை இயக்குனர் லால்குடி.N.இளையராஜா, இசையமைப்பாளர் சாம்
C.S. ஆகியோர் ஏற்கனவே தங்களை நிரூபித்தவர்கள்தான். இந்த படத்திற்ககு எந்த அளவுக்கு சிறப்பான உழைப்பை அளிக்க முடியுமோ அளித்துள்ளார்கள்.படத்தில் உள்ள அனைத்து நடிகர், நடிகையருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி கூறினார்.படத்தின் தயாரிப்பு குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.ஹாரர் திரைப்படத்தை சிறந்த திரைக்கதையுடன் உணர்வுப் பூர்வமான கதைக்களத்துடன் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய படமாக உருவாக்கி உள்ளோம்.ஊடகத் துறையினரின் ஆதரவை வேண்டுகிறோம்.
ஊடகத் துறையினருக்கு நன்றி"என பேசினார்.

 சபரி 

இரட்டை இயக்குனர்களில் ஒருவரான சபரி பேசும் பொழுது,"நான் இந்த மேடையில் இருப்பதற்கு எங்களுடைய குருநாதர் ஆகிய திரு கே.எஸ்.ரவிக்குமார் அவர்களே முக்கிய காரணம்,அவர்களை நாங்கள் காட்பாதராகவே நினைக்கிறோம். அவர்தான் எங்களுக்கு முதல் பட வாய்ப்பு அளித்து எங்களை இயக்குனராக உருவாக்கினார் இனிமே எத்தனை படம் இயக்கினாலும் அவர் அளித்த  முதல் வாய்ப்பை என்றும் மறக்க மாட்டோம். அதேபோல தயாரிப்பாளர் விஜய்சந்தர் ஒரு இயக்குனராக இருப்பதால் எங்களுக்கு பல விதத்திலும் பக்கபலமாக இருந்தார்.
இத்திரைப்படத்தின் கதாநாயகி ஹன்சிகாவும் தனது முழு ஒத்துழைப்பையும் இத்திரைப்படத்திற்காக வழங்கினார்கள். சாம்.C.S அவர்களும் தனது பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையையும் சிறப்பாக அமைத்துக் கொடுத்திருந்தார். கலை இயக்குனர் லால்குடி.N.இளையராஜா, நான் உதவி இயக்குனராக இருக்கும் போதிலிருந்து நல்ல பழக்கம் அந்த நினைவுகளை நாங்கள் இப்பொழுது பகிர்ந்து கொண்டோம். இத்திரைப்படத்திற்காக முழு ஒத்துழைப்பையும் நல்கினார். ஊடகத்துறையினர் எங்களது முதல் படத்தை எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்த்தீர்களோ, அதே போல இந்த படத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுகிறேன்.
குறிப்பிட்ட ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த படம் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்", என்று கூறினார்.
 கே.எஸ்.ரவிக்குமார் 

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்பொழுது," நான் எப்பொழுதும் இயக்குனர்களை பற்றி தான் முதலாவதாக பேசுவேன்.ஆனால் இங்கே தயாரிப்பாளர் பற்றி பேசுகிறேன். ஆனால் தயாரிப்பாளரே ஒரு இயக்குனர் தான் அவரைப்பற்றி முதலில் பேசுகிறேன். இந்த இரட்டை இயக்குனர்களின் முதலாவது படமான கூகுள் குட்டப்பா வெளியாகும் முன்பே அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ஒத்துக் கொண்ட தயாரிப்பாளர் விஜய்சந்தருக்கு மிக்க நன்றிகள். சாம்.C.S உடன் பழக்கம் உள்ளது.கலைஞர்-100 நிகழ்விற்கு  நாங்கள் உருவாக்கிய நாடகத்திற்கு எந்த மறுப்பு தெரிவிக்காமல் இசையமைத்து கொடுத்தார்.அவருக்கு நல்ல குரல்வளம் அவருக்கு உள்ளது. அவருக்கு இசைவெறி உள்ளது. கலை இயக்குனர் லால்குடி.N.இளையராஜா, கன்னட நடிகர் கிச்சா சுதீப் வியக்கும் அளவிற்கு வீடு ஒன்றின் கலை வடிவத்தை அமைத்திருந்தார். என்னுடனும் என்னுடைய உதவியாளர்களுடன் பணி புரிந்தமைக்கு மிக்க நன்றி. ஹன்ஷிகாவும் தன்னுடைய சிறப்பாக நடித்திருந்தார்.அதேபோல பிற கலைஞர்களும் சிறப்பாக நடித்திருந்தனர்.கார்டியன் என்ற தலைப்பு இந்த கதைக்கு பொருத்தமாக உள்ளது. எனது படங்களில் உள்ளது போல அனைத்து அம்சங்களும் இந்த படத்திலும் உள்ளன. குரு சரவணன் ஒரு கலகலப்பான ஆள், சபரி சற்று சாதுவான ஆள் இசையமைப்பாளர் கூறியது போல இருவரையும் கணிக்க முடியாது.எங்கிருந்தாலும் நல்லபடியாக வருவதற்கு வாழ்த்துகிறேன்", என முடித்தார்.


இறுதியாக படத்தின் தயாரிப்பாளர் விஜய் சந்தர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

படம் வருகின்ற மார்ச்-8ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது..

Monday, March 4, 2024

KKCL’s KILLER Unveils its ‘Accelerating the Performance’ Growth Strategy at Bharat Tex 2024


KKCL’s KILLER Unveils its ‘Accelerating the Performance’ Growth Strategy at Bharat Tex 2024
• Announces strategic India and global expansion plans with accelerated retail and product portfolio expansion
• Plans to introduce exclusive KILLER stores in Middle East to enhance the brand experience
• The brand is well on its way to achieve the milestone of 500 exclusive stores by December, 2025
• Continues product portfolio reshaping and expansion to accelerate growth and focus
Chennai ,04.03 2024: As the Indian textile industry gears up to take on global competition, KILLER, one of the leading fashion brands from the house of Kewal Kiran Clothing Limited (KKCL), today unveiled its new chapter of growth plans at Bharat Tex 2024, a prestigious global textile event held in New Delhi. The brand presented its 'Accelerating the Performance with Double-Engine’ growth strategy, outlining strategic priorities for long-term growth in both the Indian and international markets. The management of KILLER, led by Mr. Hemant Jain, Joint Managing Director of KKCL, highlighted key priorities, including: 1. Strengthening KILLER’s 35-year leadership in India, 2. Reshaping the creative product portfolio, and 3. KILLER emerging as a global fashion brand from Bharat.
Commenting at the event, Mr. Hemant Jain, Joint Managing Director of KKCL said, “Bharat Tex 2024 was announced by the visionary Government of India as we embarked on the next great chapter for our flagship brand KILLER. Today, it is an honour to unveil our new growth strategy framework to an audience from India and worldwide at this prestigious event.  Equally enchanting is our creative booth, where we proudly displayed an extensive array of our cutting-edge products and the upcoming AW24 collection. We take pride in the work accomplished so far in transforming the KILLER brand for its next phase of growth. With our new growth strategy, we aim to build on our inherent strengths, leveraging competitive advantages and investing in innovations to continue providing trendy fashion wardrobe solutions to today’s youth on a global scale. In addition to expanding our multi-brand outlets (MBOs) and omnichannel presence, we plan to approach 500 exclusive modern KILLER brand stores in India by December 2025.”
Speaking about the global growth plans, Mr. Jain added, “It's a vast world out there, and it's high time that KILLER, as a proud Bharat brand, began expanding beyond its deep presence in India and venture into other regions where we anticipate significant growth in the coming years. Elevating the KILLER brand experience, we are gearing up to unveil our exclusive brand stores in the Middle East, where we already enjoy a robust presence through our MBO partners. Our strategic expansion continues with a spotlight on Eastern Europe, paving the way for our brand's journey across the rest of Europe. Additionally, we have devised a premium pricing model for international markets, ranging from $50 to $200 (4,000 to 16,000 in Indian rupees). In essence, with our 'Accelerating the Performance with Double-Engine’ growth strategy, I am confident that we will gather momentum as a stronger, bolder, and trendier international fashion brand.”
KILLER has made significant progress in recent years by reshaping its product portfolio strategically, with a focus on increasing top-wear products and introducing new categories such as footwear, undergarments, and a variety of accessories. The brand's bottom-wear products maintain market leadership in many regions of India. KILLER has been actively pursuing additional portfolio reshaping transactions to strengthen its position and become the preferred choice for men seeking a complete fashion wardrobe.
About KILLER: 
A premium fashion brand for men, KILLER is the first truly international Indian brand created and owned by Kewal Kiran Clothing Limited. A brand that is youthful, trendy, vibrant and with an attitude. KILLER enjoys a leadership position in the premium menswear segment and is one of the largest selling denim brands in India. Started as a jeans brand, the KILLER product portfolio today includes men’s ready-to-wear jeans, trousers, cargos, capris, shirts, jackets, tee-shirts, athleisure, innerwear (vests and briefs), footwear (shoes, socks), time-wear, eyewear and other accessories (belts, bracelets etc). The designs of KILLER are synonymous with the rebellious streak of youth. KILLER products are retailed across EBOs (350+), K-Lounge (150+) Large format stores (800+) and MBOs (1800+) to be closer to its consumers and evolve the brand with the changing times.
For Further Details, Please Contact:

Sunday, March 3, 2024

சினிமா, அரசியலை விட்டு போகமாட்டேன்” ‘காடுவெட்டி’ விழாவில் ஆர்.கே.சுரேஷ் அதிரடி

" காடுவெட்டி " ஜாதி படம் கிடையாது ஆர். கே. சுரேஷ் பேச்சு..

“ஆர்.கே.சுரேஷ் ஒன்பது ரஜினிக்கு சமம்”
 ‘காடுவெட்டி’ விழாவில் ஆர்.வி.உதயகுமார் கிளப்பிய பரபரப்பு

 “சினிமா, அரசியலை விட்டு போகமாட்டேன்”
 ‘காடுவெட்டி’ விழாவில் ஆர்.கே.சுரேஷ் அதிரடி 

 “  ‘காடுவெட்டி’ படம் செய்யப்போகும் சம்பவம்”
இயக்குனர் மோகன் ஜி பரபரப்பு பேச்சு.

 காடுவெட்டியார், காடுவெட்டி குரு, காடுவெட்டி என்றால் தமிழ் நாட்டு மக்களிடம் அத்தனை பிரபலம். அந்த தலைப்பில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, சோலை ஆறுமுகம் இயக்கி இருக்கும் படம் ‘காடுவெட்டி’.

மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு  சோலை ஆறுமுகம் ஆகியோர்,இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்திருக்கிறார். வணக்கம் தமிழா சாதிக் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். மா.புகழேந்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

விழாவில் இயக்குனர் பேரரசு பேசியதாவது:-
“ தல, தளபதி படங்களுக்கு இணையாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடக்கிறது. நடிகர் பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் ‘மலையூர் மம்பட்டியான்’ படம்தான் அவரை பெரிய ஹீரோவாக்கியது.  ‘சீவலப்பேரி பாண்டி’ படத்துக்கு பிறகு நெப்போலியன் பெரிய ஹீரோவாக வளர்ந்தார். அதேபோல்  ‘காடுவெட்டி’ படத்துக்கு பிறகு ஆர்.கே.சுரேஷ் பெரிய ஹீரோவாக உயர்வது நிச்சயம். பலருடைய கெட்ட எண்ணங்களை இந்த காடுவெட்டி வெட்டிவிடும்.
சமுதாய கதைகளில் பெரிய ஹீரோக்கள் நடிப்பதில்லை. இந்த மாதிரி கதைக்கு ஆர்.கே.சுரேஷ் மாதிரியான ஹீரோதான் வேண்டும். இது பெண்களுக்கான விழிப்புணர்வு படமாகவும் பெற்றோர்கள் அவசியம் பார்க்கவேண்டிய படமாகவும் இருக்கும்
சமுதாயத்தில் பெண்கள் முன்னேறிவிட்டதாக ஒரு பார்வை இருக்கிறது. ஆனால் அரசியல்வாதிகளோ  தமிழ் நடிகைகளை பார்த்து அயிட்டம் என்று பெயர் வைக்கிறார்கள். நீங்கள் எங்கேயோ குடித்துவிட்டு கூத்தடித்தவர்கள் நடிகைகளை பற்றி தவறாக பேசுகிறார்கள். இங்கு எல்லா நடிகைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும்.”

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசியபோது,

“இந்தப்படத்தில் நானே ஷாக் ஆகிற மாதிரி வணக்கம் தமிழா சாதிக், கானா பாடலை பண்ணியிருக்கிறார் அவருக்கு வாழ்த்துகள். இந்தப்படத்தில் நிறைய ஆக்ஷன் இருந்தாலும் நல்ல மெசேஜ் இருக்கிறது. முக்கியமா படத்தின் பின்னணி இசை மிகப்பெரிய வெற்றியை பெரும். நாயகன் ஆர்.கே. சுரேஷின் நடிப்பை பார்த்தபோதே படத்திற்கு தன்னாலேயே இசை வந்துவிட்டது.  ‘காடுவெட்டி’ பெரிய வெற்றியை அடையும்” என்றார்.

ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன் பேசியதாவது:-

“இப்படியொரு படத்தை எடுக்க பயங்கர தில் வேண்டும். காடுவெட்டி கேரக்டரில் ஆர்.கே.சுரேஷ் நடித்திருக்கிறார். காடுவெட்டி குரு எந்த அரசியல்வாதியையும் மதிக்கமாட்டார். தன்னுடைய ராஜ்ஜியம் தனி என்று வாழ்ந்த மகான். அதனால் இந்தப்படத்துக்கு பிரமாண்டமாக வேலை செய்ய வேண்டும் என்று தோன்றியது.
முக்கியமாக இங்கு ஒரு விஷயத்தை பேசியாகவேண்டும். ராமர் கோவில் பிரதிஷ்டை நடந்தபோது உலகத்தில் உள்ள அத்தனை இந்துக்களும் மாலை 6 மணிக்கு வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி சொன்னார். ஆனால் ராமருடைய நிறமான நீலத்தை தயாரிப்பு நிறுவனத்தின் பெயராக வைத்திருக்கும் இயக்குனர்    “6 மணிக்கு மேல் விளக்கேற்றாவிட்டால் நம்மை தீவிரவாதிகள் என்று சொல்லிவிடுவார்கள்” என்று வன்மத்தோடு பேசியது வேதனை அளிக்கிறது”

கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் பேசியபோது,

 “இந்தப் படத்தின் தலைப்பை பதிவு செய்ய வந்தபோது நான் தரமாட்டேன் என்று சொன்னேன். ஏனெனில் காடுவெட்டி என்பது மாவீரனின் பெயர். அதை யாரும் மிஸ் யூஸ் செய்துவிடக்கூடாது என்று பயந்தேன். ஆனால் இப்போது டிரைலரை பார்த்த பிறகு சரியானவர்களுக்கு இந்த தலைப்பை கொடுத்திருப்பது புரிகிறது. காடுவெடி குரு வீரப்பரம்பரை. அந்த கேரக்டரில் நடிப்பதற்கு வீரம் வேண்டும். அந்த வீரன்தான் ஆர்.கே.சுரேஷ்”என்றார்.

இயக்குனர் மோகன் ஜி பேசியதாவது:-

“இந்தப்படம் பல பிரச்சனைகளை சந்தித்து வெளிவர உள்ளது.  ‘திரெளபதி’ படத்தின் ரிலீசுக்காக நான் பட்ட கஷ்டம் அதிகம். அதேபோல் காடுவெட்டியும் பல பிரச்சனைகளையும் வழக்குகளையும் சந்தித்துள்ளது. பிரச்சனைகளை சந்தித்து ரிலீஸ் ஆகும் படங்கள் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. அந்தவகையில்  ‘காடுவெட்டி’ மிகப்பெரிய ஹிட் ஆகும். குறிப்பாக இளைஞர்கள் கொண்டாடுவார்கள். தமிழ் நாட்டில் தவறான காதலை எதிர்த்தவர் காடுவெட்டி குருதான். சாதிக்கின் பாடல்கள் நன்றாக வந்துள்ளது. கனல் கண்ணன் மாஸ்டர் ஆக்ஷன் ப்ரியர்களுக்கு பெரிய ட்ரீட்டையே வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் அடுத்த வீரமான ஹீரோ ஆர்.கே.சுரேஷ்தான். இந்தப்படத்தில் பெரிய சம்பவம் இருக்கு.  ‘திரெளபதி 2’ விரைவில் தொடங்கும். அதற்குமுன்  ‘காடுவெடி’யை கொண்டாடி முடியுங்கள்”

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது:-

“நான் காடுவெட்டி குருவின் ரசிகன். கிட்டத்தட்ட இதே கதைதான்  ‘சின்னக்கவுண்டர்’. இந்த டிரண்டை ஆரம்பித்து வைத்ததே நான்தான். ஒரு படம் ஹிட் கொடுத்துவிட்டால் அந்த படத்தின் இயக்குனரும் ஹீரோவும் என்ன ஆட்டம் ஆடுகிறார்கள் தெரியுமா?.. கஷ்டங்கள் வலிகளை கடந்து வெற்றி பெறும்போதுதான் அடுத்தவர்களை மதிக்கும் பன்பு வரும். இங்கு எல்லோரும் இதயப்பூர்வமாக வாழ்த்தியுள்ளார்கள். அதனால் இந்தப்படம் நிச்சயம் வெற்றியை தரும். ஆர்.கே.சுரேஷ் சாதாரண ஆள் இல்லை. மிகப்பெரிய நடிகன். அவனுக்குள் ஒரு ரஜினி இல்லை ஒன்பது ரஜினி இருக்கார். 
வெற்றி பெறப்போகும் மனிதன்தான் அதிக விமர்சனங்களுக்கு உள்ளாவான். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அத்தனையையும் தகர்த்து ஆர்.கே.சுரேஷ் முன்னேறுவார். அவன் அடித்தால் 60 அடி தூரம் போய் விழுவாங்க. நடிச்சா எல்லோருடைய இதயமும் விழும்.  பேரரசு இயக்கிய ‘திருப்பாச்சி’,  ‘சிவகாசி’ படங்கள் விஜய்க்கு பெரிய திருப்புமுனையை தந்தது. அந்த கூட்டணி மீண்டும் சேரனும். வளர்த்து தூக்கிவிட்ட இயக்குனர்களை சேர்த்துக்கொண்டு போவதுதான் பண்பாடு. ஆனால் வெற்றிபெற்ற பிறகு அதற்கு காரணமானவர்களை மறந்துவிடும் பழக்கம் சினிமாவில் இருக்கு. இது நியாயமே இல்லை என்பது எனது கருத்து”

படத்தின் நாயகன் ஆர்.கே.சுரேஷ் பேசியதாவது:-

“என்னைப்பற்றிய எத்தனையோ கட்டுக்கதைகள் கற்பனைகளை கிளப்பிவிட்டார்கள். நான் 100 படங்கள் விநியோகம் செய்திருக்கிறேன். எத்தனையோ படங்கள் தயாரித்திருக்கிறேன்; 40 படங்கள் நடித்திருக்கிறேன். சினிமாவில் எனக்கு 15 வருட உழைப்பு உண்டு. எல்லா அரசியல்வாதிகள் எல்லா சாதிக்காரர்களுடனும் பழக்கம் உண்டு. அப்படியான சூழலில் என்னைப்பற்றி தவறான செய்திகள் வெளிவந்தது. 15வருடமாக சினிமாவில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த நான் தவறு செய்திருப்பேனா?

வடமாவட்டங்கள் தென் மாவட்டங்களில் ரசிகர்கள் என் மீது அன்பு வைத்திருக்கிறார்கள். அதனால் சினிமா, அரசியலை விட்டு நான் போகமாட்டேன். இப்போது காடுவெட்டிக்கு வருவோம். இந்த கேரக்டரில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். இயக்குனர் சோலை ஆறுமுகம் கதையை சொன்னதுமே அவரை மைண்ட்ல வச்சுதான் நடித்தேன். குரு ஐயாவின் குடும்பத்துக்கு சொல்றேன். இந்தப்படம் உங்களுக்கு பெருமை சேர்க்கும். இது உணர்வு சார்ந்த படம். இதை தமிழ்நாடு முழுவதும் வரவேற்பார்கள். இது சாதி படம் இல்லை. நான் எந்த சாதியையும் தவறாக பேச மாட்டேன். சாதி என்பது உணர்வு மட்டுமே.”

இறுதியாக படத்தின் இயக்குனர் சோலை ஆறுமுகம் பேசியதாவது:-

 “காடுவெட்டியை என்னால் இயக்க முடிந்தது என்றால் அதற்கு முதல் காரணம் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ்தான். இந்த படத்திற்கு சென்சார் 31 கட்டுகள் கொடுத்தது. சென்சார் பிரச்சனை, கோர்ட் வழக்கு என்று வந்தபோது அண்ணன் மகேந்திரன்தான் நம்பிக்கையையும் 100 யானை பலத்தையும் தந்தார்.
காடுவெட்டி என்ற தலைப்பை வைக்கக்கூடாது என்று சொன்ன சென்சார் போர்டிடம் எனது விளக்கத்தை கொடுத்தேன். காடுவெட்டி பெயருக்கு பெரிய வரலாறு இருக்கிறது. அந்த காலத்தில் மன்னர்கள் போர் பயிற்சிக்காக காட்டில்  ஒரு இடத்தை தேர்வு செய்து மரங்களை வெட்டி  போர் பயிற்சிக் களமாக பயன்படுத்துவார்கள். அதனை போர்க்குடி மக்கள் விவசாய நிலமாக மாற்றுவார்கள். பிறகு அதனை ஊர்களாக மாற்றுவார்கள். அப்போது அதற்கு காடுவெட்டி என்று பெயர் வைப்பார்கள். இப்படி தமிழ் நாட்டில் 11 இடங்கள் உள்ளன. ஆக காடுவெட்டி ஒரு சரித்திரம் என்று விவாதித்தேன். இந்த தலைப்பு கிடைத்தது.
காதல் என்ற சப்பை காரணத்துக்காக எல்லோரையும் ஒழிக்க நினைத்தால் அது தலைமுறை தலைமுறையாக வன்முறையை சேர்க்கும். இந்தப்படம் தமிழ் சினிமாவில் வட மாவட்டத்து மக்களின் வாழ்வியலை, கலாச்சாரத்தை, அரசியலை உள்ளது உள்ளபடி பேசும். நிறைய ஹீரோக்களிடம் இந்த கதையை சொன்னபோது அவர்களுக்கு கதை பிடித்திருந்தது.  டைட்டிலை சொன்னபோது வேண்டாம் என்று மறுத்துவிட்டார்கள். ஆனால் படத்தின் தலைப்புக்காகவே இந்த படத்தில் நடிக்க ஆர்.கே.சுரேஷ் சம்மதித்தார். தமிழ் சினிமாவில் இப்படியொரு ஹீரோ கிடைப்பது அரிது. அவருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றி”

ஆர். கே. சுரேஷ் நடிக்கும் " காடுவெட்டி " சோலை ஆறுமுகம் இயக்கியுள்ளார்.

ஆர். கே. சுரேஷ் நடிக்கும் " காடுவெட்டி " சோலை ஆறுமுகம் இயக்கியுள்ளார்.

பெத்தவங்களோட வலியை சொல்லும் படம் " காடுவெட்டி " 

மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு  சோலை ஆறுமுகம் ஆகியோர்,இணைந்து தயாரித்துள்ள படம் " காடுவெட்டி "

ஆர். கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். 
சங்கீர்த்தனா மற்றும் விஷ்மியா இருவரும் கதா நாயகிகளாக நடித்துள்ளனர்.

மற்றும் குணச்சித்திர வேடங்களில் சுப்ரமணியசிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் ஆகியோறும் நடித்துள்ளனர்.

இசை - ஸ்ரீகாந்த் தேவா
பாடல்கள் இசை - வணக்கம் தமிழா சாதிக்.
ஒளிப்பதிவு - M. புகழேந்தி
பாடல்கள் - மணிகண்டன் ப்ரியா, பா. இனியவன், ராஜமாணிக்கம், இன்ப கலீல்.
கலை இயக்கம் - வீரசமர்
எடிட்டிங் - ஜான் ஆப்ரகாம்
ஸ்டண்ட் - கனல் கண்ணன்
நடனம் - தினேஷ்.
தயாரிப்பு மேற்பார்வை - மாரியப்பன் கணபதி.
மக்கள் தொடர்பு - மணவை புவன்
தயாரிப்பு -  மஞ்சள் ஸ்கிரீன்ஸ்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் - சோலை ஆறுமுகம்.

படம் பற்றி இயக்குனர் சோலை ஆறுமுகம் பகிர்ந்தவை...

மறுமலர்ச்சி,சிந்துநதிப் பூ,ஒன்பது ரூபாய் நோட்டு படத்திற்குப் பிறகு வடமாவட்ட வாழ்வியலை சொல்லும் படம்தான் காடுவெட்டி,

மன்னர்கள் போர் செய்த காலத்தில் போர்வீரர்கள் போர் பயிற்சிக்காக இடங்களை தேர்வு செய்து காடுகளை வெட்டினார்கள்,வெட்டிய நிலங்களில் பாதியை போர் பயிற்சிக்காகவும் விவசாயத்திற்காகவும் பயன்படுத்தி வந்தனர்,போர்க்கால முடிவுக்குப் பிறகு அந்த நிலங்கள் ஊர்களாக மாறியது,அந்த ஊர்களுக்கு காடுவெட்டி என பெயரிட்டனர்,விவசாயம் செய்த தமிழ் பூர்வக்குடிகளின் கதை என்பதால் காடுவெட்டி என படத்திற்கு பெயர் வைத்தோம்.

கல்வியறிவும் பொருளாதார மேம்பாடும் இருந்தால் மட்டுமே பிழைப்புவாத அரசியலிடமிருந்து சாமானிய மக்கள் தங்களை  காபாற்றிக்கொள்ள முடியும்.

மனித சமூகத்தின் வேறுபாடுகளை நேர்மையான பாதைகளால் மட்டுமே சரிசெய்ய முடியும்,குறுக்குவழி வன்முறையை மட்டுமே உருவாக்கும்.

காதலோட வலியை சொல்ல ஆயிரம் படம் இருக்கு,பெத்தவங்களோட வலியை சொல்ல ஒன்னு ரெண்டு படங்கள்தான் இருக்கு,அந்த ஒன்னு ரெண்டு படத்துல இந்த படமும் இருக்கும் என்றார் இயக்குனர் சோலை.

Malayalam actor Suraj Venjaramoodu teams up with Chiyaan Vikram!

Malayalam actor Suraj Venjaramoodu teams up with Chiyaan Vikram!

Malayalam industry’s iconic actor Suraj Venjaramoodu debuts in Tamil Cinema with ‘Chiyaan 62’!  

Actor Suraj Venjaramoodu has been chosen to portray one of the main roles in 'Chiyaan 62'. He has received prestigious accolades such as Kerala State Award and the National Award for Best Actor.

The movie caused quite a stir with the news of having top-notch actors such as 'Chiyaan' Vikram and S.J. Suriya in the lead roles, under the direction of S. U. Arunkumar. Adding to the anticipation, Malayalam actor Suraj Venjaramoodu has been confirmed to be part of the cast, further heightening the excitement surrounding the film. It is noteworthy that his exceptional acting in acclaimed movies such as 'Android Kunjappan', 'Driving Licence', 'Jana Gana Mana' and 'The Great Indian Kitchen' has garnered admiration across the fans from all walks of life. Significantly, the actor is making his Tamil debut through this film  'Chiyaan 62', produced by Riya Shibu of H.R. Pictures.

With the charismatic presence of Chiyaan Vikram, the talented S. J. Suryah and the brilliant Suraj Venjaramoodu, the much-anticipated film 'Chiyaan 62' has ignited a fervor of excitement among their devoted fans. Having already captivated the hearts of film enthusiasts with their remarkable performances that earned them prestigious National honours, this collaboration has raised the bar of expectations to unprecedented heights.

The makers of the film have confirmed the pre-production is nearing completion, and the film’s shooting will commence from April 2024.


THANKS & REGARDS,
B.YUVRAAJ (P.R.O)

சிங்கப் பெண்ணே" திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு


 சிங்கப் பெண்ணே" திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! 

JSB Film Studios சார்பில் தயாரிப்பாளர் JSB சதீஷ் எழுதி இயக்க, ஷில்பா மஞ்சுநாத் மற்றும்  ஆர்த்தி நடிப்பில், பெண் குழந்தைகள் விளையாட்டை மையப்படுத்தி, உருவாகியுள்ள திரைப்படம்   "சிங்கப் பெண்ணே". விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் திரையிடல் நிகழ்வு நேற்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

இந்நிகழ்வினில்… 

தயாரிப்பாளர் இயக்குநர் JSB சதீஷ் பேசியதாவது 

மூன்று வருட போராட்டங்களுக்குப் பிறகு, இப்படத்தை எடுத்துள்ளோம். விளையாட்டை மையப்படுத்திய ஒரு அழகான படைப்பு. இப்படம் எடுக்க  நிறைய சிரமங்கள் இருந்தது. படத்தில் உண்மையான நேஷனல் அளவிலான போட்டிகள் எல்லாம் வருகிறது. அதை எடுக்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு உண்மையான விளையாட்டு நடக்கும் வரை காத்திருந்து  படம்பிடித்தோம். உண்மையான விளையாட்டு வீராங்கனை நடித்துள்ளார் அவருக்காக 5 மாதம் காத்திருந்தேன். இப்படத்திற்காக அவரின் பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு தந்தார்கள். படம் முழுக்க லைவ்வாக இருக்கும். ஆர்த்தி உண்மையாகவே அந்த நேஷனல் மேட்ச்சில் கோல்ட் மெடல் வென்றார். அது படத்திலும் வருகிறது, நீங்கள் பார்க்கும் போது,  அதை நம்பவே மாட்டீர்கள்.   அத்தனை உண்மையாக இருக்கும். படத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். படத்தைப் பற்றிய நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன் நன்றி.

நடிகர் பிரேம் பேசியதாவது..

சிங்கப்பெண்னே டைட்டிலே நிறைய சொல்லும். உண்மையான விளையாட்டு வீராங்கனையை வைத்து, ஒரு அருமையான கதையை சொல்லியிருக்கிறார் இயக்குநர். விளையாட்டுத்துறை இன்றைய நிலையில் எப்படி இருக்கிறது, அதிலிருக்கும் அரசியல் அதைத்தாண்டி எப்படி இந்த சின்னப்பெண் ஜெயிக்கிறார், என்றெல்லாம் இப்படத்தில் பேசியுள்ளார். நாயகி ஷில்பாவும் நல்ல நடிப்பை தந்துள்ளார். ஸ்விம்மிங்க் உங்கள் வாழ்வை ஒருமைப்படுத்தும், அது வாழ்வை கற்றுத்தரும், பொதுவாகவே விளையாட்டைக் கற்றுக்கொள்ள ஆசைப்படும் பெண்களுக்கு அனைத்து பெற்றோரும் ஆதரவு தர வேண்டும். அப்போது தான் எல்லோரும் சிங்கப்பெண்ணாக மாறுவார்கள். படம் நிறைய உண்மைச்சம்பவங்களை வைத்து உருவாக்கியுள்ளார் இயக்குநர். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி. 

நடிகர் செண்ட்ராயன் பேசியதாவது.. 

இப்படத்தில் எனக்கு பிரம்மாண்டமான ரோல் தந்துள்ளார் இயக்குநர். நன்றாக நடித்திருப்பதாக சொன்னார் நன்றி. இப்படம் மிக நல்ல திரைக்கதை, மஞ்சும்மாள் பாய்ஸ் படம் போல், இப்படமும் பெரிய வெற்றி பெறும். இப்படத்தில் என்னைப்பாடவும் வைத்திருக்கிறார் இயக்குநர். படம் மிக நன்றாக வந்துள்ளது படத்தை பார்த்து வெற்றி பெறச் செய்யுங்கள் அனைவருக்கும் நன்றி. 

இசையமைப்பாளர் குமரன்  சிவமணி பேசியதாவது.. 

வாழ்த்த வந்த அனைவருக்கும் என் நன்றி. இயக்குநர் முதலில் என்னை அழைத்து படத்திற்கு இசையமைக்க சொன்னார். எனக்கு படம் செய்யும் ஐடியா எதுவுமே இல்லை, ஆனால் அவர் தந்த ஊக்கத்தில் தான் இந்த படத்தை செய்துள்ளேன். சிங்கப்பெண் என்றால் என்னைப்பொறுத்தவரை என் அம்மா தான். அவர் முழுமையான சிங்கப்பெண்.  இந்தச் சிங்கப்பெண் திரைப்படம் அனைவரையும் கவரும் படமாக இருக்கும்  நன்றி. 

நடிகை ஷில்பா மஞ்சுநாத் பேசியதாவது.. 

உங்கள் முன்னால் மற்றும் ஒரு தமிழ்ப்படத்திற்காக மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் கதை சொன்னபோது யார் சிங்கப்பெண் ? எனக் கேட்டேன். கதை கேளுங்கள் உங்களுக்கு தெரியும் என்றார். கதை கேட்டு முடித்தவுடன் கதை தான் சிங்கப்பெண் என்பது புரிந்தது.  எல்லோர் வீட்டிலும் ஒரு சிங்கப்பெண் இருப்பார்கள் இது அந்த மாதிரியான ஒரு சிங்கப்பெண்ணை பற்றிய படம். முழுக்கதையும் சொல்லி ஆறு மாதம் வேண்டும் என்றார் இயக்குநர். படத்தின் கருத்து பிடித்திருந்ததால் உடனே ஒத்துக்கொண்டேன். படத்தின் படப்பிடிப்பில் செட் செய்து, ஷீட் செய்வார்கள் என நினைத்தேன், ஆனால் உண்மையான போட்டிகளை நடத்தி அப்படியே எடுத்தார்கள். ஆர்த்தி எந்த ஒரு சிறு ஓய்வும் இல்லாமல், மிக உற்சாகமாக பணியாற்றினார். அவரைப் பார்த்து பிரமித்து விட்டேன். இந்தப்படத்தில் நிறையக் கற்றுக்கொண்டேன். பெண்களின் விளையாட்டைப் பற்றி நாம் நிறைய பேசுவதில்லை, அதற்கான இடம் இங்கு வேண்டும். எல்லோரும் ஆதரவைத் தர வேண்டும். அதைப்பற்றி இந்தப்படம் பேசும். ஆதரவு தாருங்கள் நன்றி.  

விளையாட்டு வீராங்கனை நட்சத்திரம் ஆர்த்தி பேசியதாவது.. 

இந்த இடத்தில் பலருக்கு நன்றி சொல்ல வேண்டும். பொதுவாக எல்லா அப்பா அம்மாவும் படிக்க சொல்வார்கள், இல்லை கல்யாணம் செய்து வைப்பார்கள், ஆனால் என் பெற்றோர் என்னை விளையாட போகச் சொன்னார்கள். அவர்கள் தந்த ஆதரவால் தான் நான் இன்று  வீராங்கனை ஆக இருக்கிறேன் நன்றி. இந்தப்படத்திற்கு சதீஷ் சார் என்னை எப்படித்  தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை.  நான்  முதலில் சின்ன ரோலாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவர் படம் முழுக்க வரக்கூடிய ஒரு ரோல் பற்றி சொன்னார். எனக்கும் என் பெற்றோருக்கும் அது  மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது.  என்னை வைத்து ஒவ்வொரு காட்சியை எடுக்கவும் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.  மிக அழகான ஒரு படத்தை எடுத்துள்ளார் இயக்குநர்.  எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை தந்ததற்கு இயக்குநருக்கு நன்றி. படத்தில் எனக்கு அனைவரும் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார்கள்.  ஷில்பா மேடம் எனக்கு ஒவ்வொன்றையும் சொல்லித் தந்தார். இப்படம் வீராங்கனைகள் பற்றிய உண்மையைப் பேசும் படம்.  படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 

இயக்குநர் பாக்கியராஜ் பேசியதாவது.. 

இந்த மாதிரி உண்மையான சிங்கப்பெண்களை வைத்து, பெற்றவர்களுக்கும் பெண்களுக்கும் ஊக்கம் தர வேண்டும் என்கிற நோக்கத்தில், ஒரு படத்தை தயாரித்திருக்கும், இயக்கியிருக்கும் இயக்குநர் சதீஷ் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். ஆர்த்தி மற்றும் அவரது பெற்றோருக்கு என் வாழ்த்துக்கள். இப்படத்தில் உழைத்திருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். படத்தை மிகவும் கஷ்டப்பட்டு எடுத்துள்ளார்கள் என்பது தெரிகிறது. உண்மையான விளையாட்டை எடுத்து வந்து  காட்டியிருக்கிறார்கள். படத்தொகுப்பாளர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்று தெரிகிறது. பத்திரிக்கையாளர்கள் இப்படி ஒரு நல்ல படத்தினை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். சதீஷ் பார்க்க பயங்கர ஃபிட்டாக இருந்தார், படத்திலும் நடித்திருக்கிறார். அவரிடம் நல்ல ஹீரோவாக வரும் திறமை இருக்கிறது.  அவருக்கு என் வாழ்த்துக்கள்.  ஷில்பா பேசியது எனக்குப் பிடித்தது. படத்தின் கஷ்டங்களை உண்மையான ஸ்போர்ட்ஸின் கஷ்டங்களை சொன்னார், அவருக்கு என் வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் குமரன் சிவமணி அவருக்கு அப்பாவிடம் இருந்து இசை வந்திருக்கும், அவரின் அப்பா பெயரை காப்பாற்றியிருக்கிறார்.  அவருக்கு என் வாழ்த்துக்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி.

இப்படத்தின் வசனத்தை கபிலன் வைரமுத்துவும், ஒளிப்பதிவை N. K. ஏகாம்பரமும், படத்தொகுப்பை K. L. பிரவீனும், இசையை டிரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் சிவமணியும் சிறப்பாக செய்துள்ளனர் வருகிறார்கள்.

இப்படத்தின் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் உண்மையான வீராங்கனை ஆர்த்தி Triathlon எனப்படும் Swimming Cycling Running சேர்ந்த நெடுமுப்போட்டியில் தேசிய அளவில் பலமுறை இவர் வெற்றி பெற்றிருக்கிறார். 

 இந்த திரைப்படத்தில் கதாநாயகி  ஷில்பா மஞ்சுநாத் ஆர்த்தியின் கோச்சராக நடித்திருக்கிறார்.  மறைந்த பழம்பெரும் வில்லன் நடிகர் M.N.நம்பியார் அவர்களின் பேரன் தீபக் நம்பியார் இத்திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன் பசங்க சிவகுமார், A.வெங்கடேஷ், சென்ராயன், பிரேம், பாய்ஸ் ராஜன், ஜானகி, இந்துமதி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். முக்கிய அம்சமாக  இயக்குநர்ர் மற்றும் நடிகர் சமுத்திரகனி அவர்கள் இத்திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

Saturday, March 2, 2024

POR - திரைவிமர்சனம்


 போர் என்ற துடிப்பான உலகில், இளமைக் குதூகலம் சமூக சிக்கல்களுடன் மோதுகிறது, புதியவர் யுவாவிற்கும் சூப்பர் சீனியரான பிரபுவிற்கும் இடையே உள்ள ஆற்றல் மையப்புள்ளியாக வெளிப்படுகிறது. அரசியல் சூழ்ச்சி மற்றும் ஜாதி இயக்கவியலின் பின்னணியில், கல்லூரி வாழ்க்கையின் வழக்கமான சித்தரிப்பை மீறி, உற்சாகமான மற்றும் ஈர்க்கக்கூடிய கதையை வழங்குகிறது.

கிளிஷேக்களுக்கு அடிபணிவதற்குப் பதிலாக, பல்கலைக்கழக மாணவர்களிடையே உள்ள ஈகோ மோதல்களை சித்தரிப்பதில் போர் புத்துணர்ச்சியை அளிக்கிறது. யுவா (காளிதாஸ் ஜெயராம்) மற்றும் பிரபு (அர்ஜுன் தாஸ்) இடையேயான போட்டி ஆழமாக எதிரொலிக்கிறது, கதையோட்டத்தை அவசரம் மற்றும் முக்கியத்துவத்துடன் தூண்டுகிறது.

கதையில் அரசியல் மற்றும் சாதிய கருப்பொருள்கள் ஒருங்கிணைக்கப்படுவது தடையற்றது, இட்டுக்கட்டப்பட்டதாக உணராமல் ஆழத்தை சேர்க்கிறது. இந்த கூறுகளை நேர்த்தியாக சமநிலைப்படுத்துகிறது, கதையின் ஒத்திசைவை பராமரிக்கும் போது கதைக்களத்தை வளப்படுத்துகிறது.

புதியவர் ஹேசிங் மற்றும் கதாநாயகர்களுக்கு இடையேயான மோதல்கள் போன்ற பழக்கமான ட்ரோப்கள் இருந்தபோதிலும், போர் இந்த காட்சிகளில் புதிய வாழ்க்கையை சுவாசிக்கிறார், தேக்கத்தைத் தவிர்த்து, பார்வையாளர்களைக் கவர்ந்தார்.

படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள், இசை முதல் ஒளிப்பதிவு வரை, அதன் ஒட்டுமொத்த சிறப்பிற்கு பங்களித்து, ஒரு வழக்கமான கல்லூரி நாடகத்திற்கு அப்பால் அதை உயர்த்துகிறது. ஏராளமான கதாபாத்திரங்கள் மற்றும் துணைக்கதைகள் இருந்தபோதிலும், பார்வையாளர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்க போர் நிர்வகிக்கிறது.

அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் தலைமையிலான குழும நடிகர்கள் ஒரே மாதிரியான வலுவான நடிப்பை வழங்குகிறார்கள். அதிலும் ஜெயராம், திறமை குறைந்த கைகளில் எளிதில் விழுந்துவிடக்கூடிய கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார்.

இறுதியில், போர் ஒரு சினிமா அனுபவத்தை வழங்குகிறது, இது வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் பார்வையாளர்களுடன் எதிரொலிக்கிறது. சிலர் கதாபாத்திரங்களின் செயல்களை அற்பமானதாக உணர்ந்தாலும், மற்றவர்கள் திரைப்பட உலகில் மூழ்கி, அதன் நம்பகத்தன்மையையும் கவர்ச்சியையும் பாராட்டுவார்கள்.

சாராம்சத்தில், போர் என்பது கல்லூரி செயல்களின் கதையை விட அதிகம் - இது இளமை, அடையாளம் மற்றும் மனித உறவுகளின் சிக்கல்களின் துடிப்பான சித்தரிப்பு. அதன் அழுத்தமான விவரிப்பு மற்றும் நட்சத்திர நடிப்புகளுடன், போர் என்பது ஒரு நீடித்த அபிப்ராயத்தை விட்டுச்செல்லும் ஒரு திரைப்படமாகும், இது பார்வையாளர்களை அதன் உலகத்தைத் தழுவி, அது வழங்கும் சினிமா பயணத்தை ரசிக்க அழைக்கிறது.

Cast: Arjundas Kalidas Jayaram T.J.Banu Sanchana Natarajan Amrutha Srinivasan Mervyn Rozario 

Friday, March 1, 2024

ஜோஷ்வா இமை போல் காக்க' திரைப்படம் ஆரம்பித்த முதல் பிரேமில் இருந்து கிளைமாக்ஸ் வரை ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் படமாக இருக்கும்” - தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ்!*

*“ஜோஷ்வா இமை போல் காக்க' திரைப்படம் ஆரம்பித்த முதல் பிரேமில் இருந்து கிளைமாக்ஸ் வரை ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் படமாக இருக்கும்” - தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ்!*

உள்ளடக்கம் சார்ந்த கதைகளை ஊக்குவித்து அதை செயல்படுத்துவது என்ற தெளிவான பார்வை கொண்ட தயாரிப்பாளர் எப்போதும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறுகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே கணேஷ், பெரிய திரைகளில் நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களைத் தயாரித்து வழங்குவதன் மூலம் இதற்கு முன்னுதாரணமாக இருக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண், ராஹே மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஐசரி கே கணேஷ் தயாரித்து இருக்கும் திரைப்படம் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் நாளை (மார்ச் 1, 2024) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே கணேஷ் இந்தப் படம் பற்றி கூறும்போது, ​​“இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து நாங்கள் தயாரித்த முதல் படமான ‘வெந்து தணிந்தது காடு’ வெற்றிப் படமாக அமைந்தது. இப்போது எங்களின் இரண்டாவது படத்தை வழங்குவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். 'ஜோஷ்வா இமை போல் காக்க' திரைப்படம் ஸ்டைலான ஆக்‌ஷன்-பேக்ட் படமாக தமிழ் பார்வையாளர்களுக்கு திரையரங்குகளில் நிச்சயம் விருந்தாக அமையும். படம் ஆரம்பித்த முதல் பிரேமில் இருந்து கிளைமாக்ஸ் வரை ரசிகர்களை கவரும் படமாக இது இருக்கும். யானிக் பென் மற்றும் அவரது குழுவினர் பார்வையாளர்களைக் கவரக்கூடிய அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளைக் கொடுத்துள்ளனர். வருணுக்கு இது கனவு நனவாகும் தருணம். தன்னுடைய சிறப்பான முயற்சியை இந்தப் படத்தில் கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்ட கிருஷ்ணாவுக்கு நன்றி. இது கெளதம் வாசுதேவ் மேனனின் திரைப்படம் மற்றும் அனைத்து வயதினருக்கும் ஒரு பெரிய விருந்தாக இருக்கும். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படம் நாளை தமிழகத்தில் 200+ திரையரங்குகளில் வெளியாகிறது" என்றார்.

Joshua - திரைவிமர்சனம்

 

ராஹேய் ஒரு பெரிய ஷாட்டின் மகள், வருண் ஒரு ஒப்பந்த கொலையாளி என்று ஒப்புக்கொண்ட பிறகு அவனுடன் பிரிய முடிவு செய்கிறாள்.

பின்னர், வருண் அவளது தலைக்கு ஒரு வரம் தரும் சூழ்நிலை ஏற்படும் போது அவளுடைய அதிகாரப்பூர்வ பாதுகாவலராக மாறுகிறார்.

வருண் மற்றும் ராஹேயின் பின்னணி என்ன?

அவர்களுக்கு என்ன நடக்கிறது, வருணால் ராஹேயை காப்பாற்ற முடிந்ததா என்பது கதையின் மீதியை உருவாக்குகிறது.

பகுப்பாய்வு:

கௌதம் மேனன் முதல் பாதியில் கதாபாத்திரங்களை நிலைநிறுத்த தனது இனிமையான நேரத்தை எடுத்துக்கொள்கிறார்.

கௌதம் மேனன் முதல் பாதியில் கதாபாத்திரங்களை நிலைநிறுத்த தனது இனிமையான நேரத்தை எடுத்துக்கொள்கிறார்.

படத்தின் இரண்டாம் பாகம் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.

படம் ஆக்‌ஷன் நிரம்பியுள்ளது மற்றும் காதல் பகுதிகளும் ரசிக்க வைக்கிறது.

வருண் ஆக்‌ஷன் காட்சிகளில் சிறந்து விளங்குகிறார் மற்றும் பாராட்டத்தக்க பணியை செய்திருக்கிறார்.

அவரது உடல் மொழியும், கதாபாத்திரத்தின் உணர்வுகளை அவர் வெளிப்படுத்தும் விதமும் ஈர்க்கக்கூடியவை.

ராஹேய் ஒரு சதைப்பற்றுள்ள பாத்திரத்தைப் பெறுகிறார் மற்றும் அவரது கதாபாத்திரத்தில் பிரகாசிக்கிறார்.

அவர் கதாபாத்திரத்தில் நன்றாக உணர்ச்சிவசப்பட்டு, அவரது பாத்திரத்திற்கு தேவையான தாக்கத்தை உருவாக்குகிறார்.

கார்த்திக் மற்றும் தர்புகா சிவா இசையில் திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக உள்ளது.

மீதமுள்ள தொழில்நுட்ப அம்சங்களும் நன்றாக உள்ளன.

பெரிய கோப்பையில் காஃபி.. கூடவே டுவிஸ்ட் - பார்த்திபன் கொடுத்த ரியாக்‌ஷன் வேற லெவல்*

*பெரிய கோப்பையில் காஃபி.. கூடவே டுவிஸ்ட் - பார்த்திபன் கொடுத்த ரியாக்‌ஷன் வேற லெவல்*

*பெரிய கப்பில் காஃபி... குடிக்க கொடுத்த கப்பை பார்த்து வியந்த பார்த்திபன்*

*பெரிய கப்-இல் காஃபி... இச்சாஸ் திறப்பு விழாவில் சுவாரஸ்யம் - ஷாக் ஆன பார்த்திபன்*

*பாரம்பரிய சுவையை இசையுடன் பரிமாறும் சென்னையின் புதிய அடையாளம் இச்சாஸ்*

*ஃபர்ஸ்ட் டே-வை இப்படி கொண்டாடி பார்த்ததில்லை - பார்த்திபன்*

*பா.ஜ.க.வுக்கு விளம்பரம் பண்ணல - இச்சாஸ் திறப்பு விழாவில் பார்த்திபன்*

சென்னை அண்ணா நகரில் உருவாகி இருக்கும் இச்சாஸ் புதிய உணவகத்தை நடிகர், இயக்குநர் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த விழாவில் நக்கீரன் கோபால், ஓவியர் ஏ.பி.ஶ்ரீதர், நடிகை லலிதா குமாரி, நடிகர் விக்ரமின் தாயார் ராஜேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இச்சாஸ் உணவகத்தில் நுழைந்தவுடன் உலக புகழ்பெற்ற ஓவிய கலைஞர் ஏ.பி. ஸ்ரீதர் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களை பார்த்து வியந்தனர். இந்த ஓவியங்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் துவங்கி முழுமை பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வர்ணம் தீட்டி குத்துவிளக்கை ஏற்றினார். அதனை தொடர்ந்து பெரிய கப்- பில் காஃபி கொண்டு வரப்பட்டு, அதில் மிகச்சிறிய அளவில் உள்ள கப்பில் இச்சாஸ் நிறுவனர் கணேஷுக்கு கொடுத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

உணவக துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவரும், இச்சாஸ் நிறுவனருமான கணேஷ் ராம், பாரம்பரியம் மிக்க இந்திய  உணவு வகைகளை கொண்டு வயிற்று பசியை மட்டுமின்றி மன நிறைவை தரும் அனுபவத்தை வழங்க விரும்புவதாக தெரிவித்தார். 

இச்சாஸ் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய நக்கீரன் கோபால், “இந்த கடை ஓபனிங்கே சிறப்பா இருக்கு. இந்த கடை மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நிறுவனர் கணேஷ் மேலும் பல கிளைகளை இதே போன்று திறக்க வாழ்த்துகிறேன். துவக்கத்திலேயே விளக்கில் பெயிண்ட் அடித்தது, கடையின் வடிவமைப்பு என எல்லாமே வித்தியாசமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இங்கு வைக்கப்பட்டு இருக்கும் ஓவியங்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் துவங்கி முடித்திருக்கிறார் ஓவியர் ஸ்ரீதர். ஒரு விடுதிக்கு வந்தோம், சாப்பிட்டோம் என்றில்லாமல், சிறப்பான அனுபவத்தை இச்சாஸ் கொடுக்கிறது.” 

“பெரிய கோப்பையில் காஃபி கொடுத்து, அதை குடிக்க உலகின் சிறிய கோப்பையை வழங்கியது மிகவும் வித்தியாசமாக இருந்தது. இது போன்று பல வித்தியாசங்களை ஒருங்கே வைத்திருக்கும் இச்சாஸ் அதிக கிளைகளுடன் நீண்ட காலத்திற்கும், இதை சார்ந்து இருப்பவர்களுக்கும் நன்மையை கொடுக்க வேண்டும் என நக்கீரனின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இச்சாஸ் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உணவகத்தை திறந்து வைத்து பேசிய நடிகர், இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன், “நான் உள்ள வரும் பொது பார்த்திபனாக இருந்தேன், என்னை செல்வமணியாக மாற்றி தலை முழுக்க ரோஜாக்களாகி விட்டது. அவர் தான் ரோஜாவை தலையில் தூக்கி வைத்து ஆடுவார். உள்ளே வந்ததில் இருந்து எல்லாமே ரசனையாக உள்ளது. பொதுவாக உலகம் தோன்றிய காலத்தில் இருந்து, மக்கள் தொகை அதிகரிக்க காரணமாக இருப்பது ஃபர்ஸ்ட் நைட் தான். அந்த வகையில் ஃபர்ஸ்ட் டேவை இவ்வளவு சிறப்பாக கொண்டாடுவது இதுவே முதல்முறை என நினைக்கிறேன். விளக்கேற்றியதில் இருந்து ஸ்ரீதரின் கைவண்ணம் அழகாக தெரிகிறது.”

“இப்போ எல்லா தரப்பு மக்களும் விலையை பொருட்படுத்தாமல் ரசனையுடன் கூடிய சுவையான ஓட்டலுக்கு சென்று சாப்பிட நினைக்கின்றனர். அந்த வகையில், இந்த ஓட்டல் அதற்கு ஏற்ற ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது மிகவும் ரசனையான ஓட்டலாக உள்ளது, இங்கு வந்து சாப்பிடனும் போல இருக்கு. கணேஷ்க்கு எனது வாழ்த்துக்கள். மேலும் பல கிளைகள் துவங்கி, வியாபாரத்தில் வெற்றி பெற வேண்டும்.”

“இவர்கள் கொடுத்த காஃபியில் வடிவமைப்பு இடம்பெற்று இருந்தது. இப்போ எல்லாம் காஃபியில் தாமரை பூ போன்ற டிசைன் செய்வது வழக்கமாக இருக்கிறது. இதற்காக நான் பா.ஜ.க.-வுக்கு விளம்பரம் பண்றேன்னு எடுத்துக்காதீங்க. மக்கள் இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களை ரசிக்கின்றனர்,” என தெரிவித்தார்.

இச்சாஸ் தரை தளத்தில் காஃபி கடை, இனிப்பகம் மற்றும் இயற்கை பொருட்கள் விற்பனையகம் அமைந்துள்ள நிலையில் முதல் தளத்தில் கான்டினென்டல் உணவுகளை பரிமாறும் உணவகம் அதற்குரிய நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தளத்தில் பாரம்பரிய உணவு வகைகளுக்கான உணவகம் இயங்குகிறது. இரண்டு தளங்களிலும் இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி தினந்தோறும் நடைபெறும்.

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"

 கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"   கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமைவரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பா...