Tuesday, June 3, 2025

எழுச்சித் தமிழர்' தொல்.திருமாவளவன் வெளியிட்ட 'குயிலி' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

 


'எழுச்சித் தமிழர்' தொல்.திருமாவளவன் வெளியிட்ட 'குயிலி' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

 


நடிகை லிசி ஆண்டனி நடிக்கும் 'குயிலி' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியீடு

 

B M ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் . முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'குயிலி' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் 'எழுச்சித் தமிழர்' தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

 

அறிமுக இயக்குநர் . முருகசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள 'குயிலி' திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூ ஸ்மித் இசையமைத்திருக்கிறார். ஒரு தாயின் வைராக்கியம் மிக்க தொடர் வாழ்க்கை போராட்டத்தை எடுத்துக்காட்டும் விதமாகவும் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை விநியோகஸ்தர் மோகன் வெளியிடுகிறார்

 

விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினருடன் மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும் நடிகருமான பாலாஜி சக்திவேல், இயக்குநர் ஸ்ரீஜர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

 

தயாரிப்பாளர் அருண் குமார் பேசுகையில், ''இங்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த அனைவரையும் வரவேற்கிறேன். இப்படம் சிறப்பாக உருவாவதற்கு உழைத்த படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  

 

முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் 'ஏமாற்றாதே', 'பொய் சொல்லாதே', 'திருடாதே', 'கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும்' என்ற விஷயங்களை சொல்லிக் கொடுத்து வளர்த்தனர். அவற்றை பின்பற்றி இப்படத் தயாரிப்பின் போது பல தடைகள், தாமதங்கள் ஏற்பட்டாலும் அனைத்தையும் கடந்து வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கிறோம். இதற்காக கடினமாக உழைத்த 'குயிலி' பட குழுவினர் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்இந்த திரைப்படத்திற்காக முதலீடு செய்த நண்பர்களையும் வாழ்த்துகிறேன், வரவேற்கிறேன், நன்றி தெரிவிக்கிறேன்

 

இந்தத் திரைப்படம் ஒரு அம்மாவின் வலியை பேசுகிறது. ஒரு அம்மா தன் மகனை வளர்ப்பதற்காக எவ்வளவு சவால்களை எதிர்கொள்கிறார்கள்?எவ்வளவு போராட்டங்களை சந்திக்கிறார்கள்? அவர்கள் வாழ்க்கையில் இறுதிவரை எப்படி போராடுகிறார்கள்? என்பதை இப்படம் விவரிக்கிறது. குயிலியாக நடித்த நடிகை லிசி ஆண்டனி உள்ளிட்ட இப்படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

 

இது கமர்ஷியல் படமாக இல்லாமல் சமூகத்திற்கான படமாக உருவாகி இருக்கிறது.‌ இதற்காக இயக்குநரை பாராட்டுகிறேன். இந்த திரைப்படம் வெளியான பிறகு படத்தை பார்த்தவர்களில் ஐந்து சதவீத மக்களாவது தங்களை திருத்திக் கொண்டால்.. அதுவே இப்படத்தின் வெற்றியாக கருதுகிறோம்,'' என்றார்

 

நடிகை தாஷ்மிகா பேசுகையில், ''இந்தப் படத்தில் நடிப்பதற்கு எனக்கு திடீரென்று வாய்ப்பு கிடைத்தது. அதனால் எனக்கு இந்த தருணம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏதோ ஒரு படப்பிடிப்பில் சிறிய வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இப்படத்தில் நடிப்பதற்கான அழைப்பு வந்தது. குடிக்கு எதிரான படத்தில் நீங்கள் நாயகியாக நடிக்க வேண்டும் என படக் குழுவினர் சொன்னவுடன் உற்சாகம் அடைந்தேன். என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி,'' என்றார்

 

மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில், ''குறிப்பிட்ட சமுதாயத்திற்கோ, குறிப்பிட்ட சாதிக்கோ இல்லாமல்எல்லாருக்குமான தலைவராகவும், ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் தலைவராக திகழும் தொல் திருமாவளவனை வருக, வருக என வரவேற்கிறேன்

அவர் சட்டக் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே எனக்கும், அவருக்கும் பழக்கம் உண்டு. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் தருணத்தில் நாங்கள் தினமும் சந்தித்துக் கொள்வோம்

 

இந்தியா கூட்டணி உருவாவதற்கு தமிழக முதல்வர் மு. . ஸ்டாலினை போல் இவருக்கும் பங்கு இருக்கிறது. பாராளுமன்றத்தில் இவருடைய குரல் ஓங்கி ஒலித்திருக்கிறது, ஒலித்துக்கொண்டே இருக்கிறது

 

பி எம் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த 'குயிலி' திரைப்படம் அற்புதமான குடும்ப படம். ஒரு தாய் தன் குடும்பத்திற்காக எப்படி போராடுகிறார் என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள். இதற்காக இயக்குநர் முருகசாமியையும் இப்படத்தை துணிச்சலுடன் தயாரித்த தயாரிப்பாளர் அருண்குமாரையும் பாராட்டுகிறேன்

 

இந்தத் திரைப்படம் குடிகாரர்களை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் கவர்ச்சி இல்லை, ஓரளவு அறிமுகமான நடிகர்களை வைத்து இயற்கையாக உருவாக்கியிருக்கிறார்கள். குடியினால் என்ன கொடுமை நடைபெறுகிறது என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள்

 

நான் தமிழக முதல்வருடனும், திருமாவுடனும் நெருக்கமாகத் தான் இருக்கிறேன். ஆனால் இந்த மது விஷயத்தில் சற்று விலகியே இருக்கிறேன். குடி பல குடும்பங்களை கெடுத்திருக்கிறது. பல குடும்பங்கள் பலியாகி இருக்கிறது. அதனால் குடியை தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இதற்கு தடை விதிக்க வேண்டும்

தற்போதுள்ள சூழலில் 20 முதல் 25 சதவீத பெண்களும் குடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் நாடு மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது.

 

அதனால் தமிழக முதல்வரை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் ஒரு வழியில் மதுவை ஒழிக்க வேண்டும்.  

 

இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. ஆனால் என்னை பொருத்தவரை இந்த படத்திற்கு இத்தனை பாடல்கள் தேவை இல்லை. திரையரங்கத்தில் பாடல் காட்சிகளை ரசிகர்கள் விரும்பி பார்ப்பதில்லை. ஆனால் இந்த பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. கருத்துள்ள பாடல் இருக்கிறது, மது ஒழிப்பை பற்றி பேசுகிறது, மதுவால் தாய்மார்கள் படும் வேதனையை பேசுகிறது. இதனால் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதை பெருமிதமாக கருதுகிறேன். இப்படம் வெற்றி பெற வேண்டும். படத்திற்கு முதலீடு செய்த பணம் தயாரிப்பாளருக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். இதற்கு தமிழ் ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

 

முன்னணி நடிகர்கள் திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என தயாரிப்பாளர்களிடத்திலும் , இயக்குநர்களிடத்திலும் பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

 

இயக்குநர் . முருகசாமி பேசுகையில், ''இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் உதவியாளராக பணியாற்றும் போது தான் கார்ல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரை பற்றி வாசித்தேன். அதன் மூலமாக பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதன் பிறகு கூகை திரைப்பட இயக்கத்தில் இணைந்து கொண்டு திரைப்படக் கல்வியைக் கற்றேன். அதைவிட முக்கியமான அரசியல் கல்வியையும் கற்றேன். எளிய மக்களின் வாழ்வியலையும் அங்கு தான் கற்றுக் கொண்டேன். அதன் மூலமாகத்தான் நல்லதொரு படைப்பை உருவாக்க முடிந்தது

 

இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், உதவி இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

 

நான் கார்ல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், பெரியார் ஆகியோரை பார்க்கவில்லை. இந்த மூவரும் ஒன்றாக இருக்கும் எழுச்சித் தமிழர் தொல் திருமாவை பார்க்கிறேன். சிறிய வயதிலிருந்து அவருடைய போராட்டத்தையும், பேச்சையும் கேட்டு பார்த்து வளர்ந்தவன். பா ரஞ்சித்தைப் பார்த்தும் வளர்ந்திருக்கிறேன்,'' என்றார்

 

இசையமைப்பாளர் ஜூ ஸ்மித் பேசுகையில், ''முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரி படிப்பை முடித்த பிறகு, நான் இசைத்துறையில் பயணிக்க விரும்புகிறேன் என்ற என் விருப்பத்தை தெரிவித்ததிலிருந்து இதுவரை எதையும் அவர்கள் கேட்டதில்லைஇதனைத் தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளரான அருண்குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளாக அவருடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அவர் ஒவ்வொரு முறை தொலைபேசி மூலம் பேசும்போது நலம் விசாரித்து நான் படம் தயாரித்தால் நீ தான் இசையமைப்பாளர் என உற்சாகப்படுத்துவார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தயாரிப்பாளரானதும் அழைப்பு விடுத்து இப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பையும் வழங்கினார்

 

சினிமாவில் இருந்து தோல்வி அடைந்தவர்களை விட, சினிமாவை விட்டுவிட்டு சென்று தோல்வி அடைந்தவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். என்னை சினிமாவில் அழைத்து வந்தவர்கள் யாரும் தற்போது என்னுடன் இல்லை. அவர்கள் சினிமாவிலும் இல்லை. வேறு துறைக்கு சென்று விட்டார்கள். இந்தத் தருணத்தில் தயாரிப்பாளர் அருண்குமார் மட்டுமே எனக்கு நம்பிக்கை அளித்து வாய்ப்பளித்தார்

 

இப்படத்திற்கு இசையமைக்கும் அனுபவம் வித்தியாசமாக இருந்தது. மறக்க முடியாததாகவும் இருந்தது. இயக்குநர் முருகசாமி, 'குயிலி' கமர்ஷியல் திரைப்படம் அல்ல,vகருத்து சொல்லும் படம். அதற்கேற்ற வகையில் இசையமைக்க வேண்டும் என சொன்னார். அதன் பிறகு நான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் அவருக்கு பிடித்தது

 

இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. ஐந்து பாடல்களும் மதுவை குடிக்காதே என்பதை சொல்லும் விதமாகத்தான் இருக்கும். இந்தப் படத்தின் பாடல்களை நான்கு புதுமுக பாடகர்கள் பாடி இருக்கிறார்கள்,'' என்றார்

 

இயக்குநர் ஸ்ரீஜர் பேசுகையில், '' சினிமாவும் அரசியலும் ஆண்டாண்டு காலமாக இணைந்து பயணித்துக் கொண்டிருக்கின்றன. சமீப காலமாக சினிமாவில் அரசியல் பேசு பொருளாக மாறி இருக்கிறது

 

'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் , கலாச்சாரத்தையும் பேசும் என நம்புகிறேன். இந்த திரைப்படத்தில் குடிக்கு அடிமையானவர்களைப் பற்றி ஒரு பாடம் எடுத்திருக்கிறார்கள். தாய்ப்பாசத்தை மிக அழகாக சித்தரித்திருக்கிறார்கள்

 

இந்த விழாவின் நாயகனான ஜூ ஸ்மித் பத்து ஆண்டுகளுக்கு முன் என்னால் அடையாளம் காணப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டவர். இந்தத் திரைப்படத்தில் நிறைய பாடல்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். இதுபோன்ற படங்களுக்கு இரண்டு பாடல்களே போதுமானது. பரபரப்பான இந்த வாழ்க்கை சூழலில் சினிமாவையே ஒன்றரை மணி நேரமாக சுருக்கி விட்டோம். இதுவே போதும் என்றும் நினைக்கிறோம்

 

'குயிலி' திரைப்படம் நல்ல கலாச்சாரத்தையும், நல்ல பண்பாட்டையும் போதிக்கும் படமாக இருக்கிறது. வலியை பதிவு செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. படத்தின் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், படக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்"'' என்றார்

 

இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசுகையில், ''எல்லோருக்குமான தலைவர் தொல் திருமாவளவன் வாழ்க்கை வரலாறு சுயசரிதை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன். யாரேனும் இதற்கு முயற்சி செய்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன்

 

இப்படத்தின் இயக்குநர் முருகசாமி, 'கல்லூரி' படத்தில் இருந்து என்னிடம் உதவியாளராக இருக்கிறார். அவர் ஒரு குறும்படத்தை இயக்கி என்னிடம் காண்பித்து அதன் பிறகு உதவியாளராக சேர்ந்தார். இன்று வரை என்னுடன் பயணிக்கிறார். அவர் ஒரு நடிகரும் கூட, இந்தப் படத்திலும் நடித்திருப்பார் என நினைக்கிறேன்

 

'பொன்னியின் செல்வன்', 'அசுரன்' ஆகிய படங்களில் நான் நடிக்கும் போது என்னுடன் வருகை தந்து அங்கு நடைபெறும் விஷயங்களை உள்வாங்கிக் கொள்வார். அதையெல்லாம் செய்த பிறகு தான் அவர் இந்த படத்தை உருவாக்கி இருப்பார் என நம்புகிறேன்.  

 

இயக்குநர் முருகசாமி மிக எளிமையான பின்புலம் கொண்டவர். மறைந்த நடிகர் மயில்சாமி உடன் இணைந்து ஏராளமான தொண்டுகளை செய்திருக்கிறார். எளிமையாக பழகக்கூடிய முருகசாமி இயக்குநராக உயர்ந்திருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் அருண்குமாரை மனதார பாராட்டுகிறேன்

 

இந்தப் படத்தை எளிய மனிதர்களின் பார்வையில் இருந்து இயக்கியிருக்கிறார். அதில் வீரியம் இருக்கும். இதுதான் இப்படத்தின் பலம். இப்படத்தின் திரைக்கதையும் நன்றாக அமைத்து இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப் படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்

 

நடிகை லிசி ஆண்டனி பேசுகையில், ''சுய விருப்பம், கடின உழைப்பு, விடாமுயற்சி, பொறுமை ஆகிய நான்கு விஷயங்கள் மீது நான் அதிக நம்பிக்கை வைத்திருப்பவள். இதைத்தான் நான் என் வாழ்க்கையில் தற்போது வரை கடைப்பிடித்து வருகிறேன். இந்த விஷயங்களை தயாரிப்பாளர் அருண்குமாரிடமும் நான் பார்த்தேன்

 

இந்தப் படத்திற்கான அழைப்பு அவரிடம் இருந்து தான் எனக்கு முதலில் வந்தது. அவரே இப்படத்தின் கதையை என்னிடம் விவரித்தார். என் வாழ்க்கையில் முதல் முதலாக தயாரிப்பாளர் ஒருவர் கதையை அழகாக சொன்னது என்றால் அது இவர் தான். அந்த அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது. இந்த திரைப்படம் பேசும் விஷயமும் எனக்கு பிடித்திருந்தது

 

இந்தப் படத்திற்கு 'குயிலி' என்று தான் தலைப்பு இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன். உடனே அவரும் சரி என்று ஒப்புக்கொண்டார்.  

 

இந்தப் படம் வெற்றி பெறுவதற்கு ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், ''சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடி இன மக்கள் மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி இயக்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதால் இங்கு இந்நிகழ்ச்சிக்கு வர தாமதமானது. இப்படத்தின் பாடல் ஒன்றை மேடையிலேயே கேட்டேன். படம் எதைப் பற்றி வலியுறுத்துகிறது என்பதனை அண்ணன் ராஜனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்

 

இந்த கால சூழலில் சமூக பொறுப்புடன் மதுவிற்கு எதிராக ஒரு திரைப்படம் எடுக்கும் துணிச்சல் இயக்குநர் முருகசாமிக்கும், தயாரிப்பாளர் அருண்குமாருக்கும் இருப்பதை பாராட்டுகிறேன். நெஞ்சார வாழ்த்துகிறேன்

 

வணிக நோக்கில் திரைப்படங்களை தயாரிக்க வேண்டும், அதில் வெற்றி பெற வேண்டும், அதில் லாபம் பெற வேண்டும் என்று எண்ணாமல் சமூகப் பொறுப்புணர்வோடு மக்களுக்கு வழி காட்ட வேண்டும், இந்த குடியின் துன்பத்திலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும், விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கையுடன் இளைய தலைமுறையினர் இந்த படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்பதை விட பெருமை அளிக்கிறது. இந்த குழுவினரை பார்த்து பெருமிதம் கொள்கிறேன். அவர்களை ஆரத் தழுவி என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அண்மையில் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு ஒன்றினை நாங்கள் நடத்தினோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அது பேசு பொருளாகவும் மாறியது. கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது

 

அண்ணன் ராஜன் பேசும்போது, 'தேசிய அளவில் மதுவை ஒழிக்க வேண்டும்' என்றும் , இது தொடர்பாக திருமாவளவன் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் அவர் பேசியிருக்க கூடும் என்றும் குறிப்பிட்டார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. நான் மக்களவையில் இது குறித்து பேசி இருக்கிறேன். அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வியப்பளிக்கிறது

 

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நான் பேசிய போது குறிப்பிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இது தொடர்பாக அரசியல் ரீதியான விமர்சனத்தை முன் வைத்தார். நாம் அதை கடந்து சிந்திக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள நம் தேசத்து மக்கள் குடியினால் பாதிக்கப்படக்கூடாது என்ற பரந்துபட்ட பார்வை நமக்கு உண்டு. ஆகவே மது ஒழிப்பு கொள்கையை தேசிய கொள்கையாக இந்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நான் நீண்ட காலமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.  

 

மகாத்மா காந்தியை நாம் தேசிய தலைவராக ஏற்றுக் கொள்கிறோம். அவருடைய திருவுருவ படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சடிக்கிறோம். அவருடைய கொள்கைகளில் முக்கியமானது மதுவிலக்கு. மகாத்மாவை தேசத் தந்தை என்று ஏற்றுக் கொண்டிருக்கும் நாம் அவருடைய உயிர் மூச்சான கொள்கையான மதுவிலக்கை பொருட்படுத்துவதில்லையே

 

இதனை மாநிலங்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று ஒன்றிய அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல ஏனைய மாநில அரசுகளும் இதனை தங்களுடைய வருவாய்க்கான வழியாகத்தான் பார்க்கிறது. யார் கெட்டுப் போனால் என்ன ? என்ற அலட்சியப்போக்குத்தான் நீடிக்கிறது. இது தொடர்பான கவலை பல பத்தாண்டுகளாக எனக்கு இருக்கிறது. இதை பல மேடைகளில் பேசி இருக்கிறேன். பல மாநாடுகளில் தீர்மானங்களாக நிறைவேற்றி இருக்கிறோம்

 

இன்றைக்கு மது மட்டுமல்ல கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களும் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகிறன. நகர்ப்புறங்களில் மட்டுமே புழக்கத்தில் இருந்த போதைப் பொருள்கள்..தற்போது கிராமங்களிலும் ஊடுருவி இருக்கிறதுஇதற்காக ஒரு மாநாடு நடத்தி, அதில் இந்தியா முழுவதும் மது ஒழிப்பு தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் என ஒன்றிய அரசினை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம். இது விமர்சனத்திற்கு உள்ளானது. அரசியல் ரீதியாகவும் விமர்சிக்கப்பட்டது

 

இந்தியா முழுவதும் மது ஒழிக்கப்பட வேண்டும் போதைப் பொருள்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமில்லை ஏராளமான இளைய தலைமுறையினரும் குடிப் பழக்கத்திற்கு ஆளாகி தங்களது வாழ்க்கையை பாழாக்கி கொள்கிறார்கள். குடும்பம் நடத்துவதற்கான ஆளுமையையே இழந்து விடுகிறார்கள். ஏதோ பெயரளவில் தாம்பத்திய உறவை கொண்டு, இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களை பராமரிக்கவும்... பாதுகாக்கவும்,.படிக்க வைக்கவும், எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கவும், பொறுப்புணர்வு கொண்ட ஆளுமையாக அவர்கள் இல்லை. நிற்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அதிகாலையில் இருந்து படுக்கைக்கு செல்லும் வரை போதையில் மிதக்கிறார்கள். அவ்வளவு குடும்ப பாரத்தையும் மனைவி சுமக்கிறாள். அது எவ்வளவு கொடிய துயரம் என்பதை களத்தில் நேரடியாக சென்று சந்தித்தால்தான் உணர முடியும்

இந்த நாட்டை பீடித்திருக்கின்ற பேரவலங்களுள் இதுவும் ஒன்று

 

இந்தப் படத்தில் இடம்பெற்ற முதல் பாட்டை கேட்டேன். இந்த அவலங்களை எல்லாம் வரிகளாக ஆக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடல் நம் நெஞ்சை ஆழமாக தொடுகிறது. மிக மிக இன்றியமையாத ஒரு பாடல். எல்லா கிராமங்களிலும் கட்டாயமாக ஒலிக்க வேண்டிய பாடல். எல்லோரும் தங்களுடைய அலைபேசியில் வைத்திருக்க வேண்டிய பாடல். விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய பாடல். இசையும் மிகச் சிறப்பாக இருக்கிறது. வேட்டவலம் . ராமமூர்த்தி இப்பாடலை எழுதியிருக்கிறார். அவருக்கும் என் பாராட்டுக்கள்.

 

இந்த விஷயத்தில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. இதில் அரசியலை நுழைத்து மதிப்பீடு செய்ய வேண்டியதில்லை

 

தமிழக முதலமைச்சரிடத்தில் இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் பேசும் போது அவருக்கும் இது தொடர்பான கவலை இருக்கிறது.‌ ஆனால் இது ஒரு சமூக கட்டமைப்பு, சிஸ்டம். அரசு அரசு சார்ந்த கட்டமைப்புகள் சில தருணங்களில் நம்முடைய விருப்பங்களை மீறி இயங்கக் கூடியவையாக அமைந்து விடுகின்றன.‌ 

 

மக்களிடத்தில் பரந்துபட்ட அளவில் இதற்கான விழிப்புணர்வு தேவை. இன்று மதக் கலவரங்களும், வன்கொடுமைகளும் அதிகரிப்பதன் பின்னணியில் மதுவும் ஒரு காரணம் என்பதை நாம் காண முடிகிறது

 

'குயிலி' படத்தால் என்ன சாதிக்க முடியும் என்று கருதாமல் விழிப்புணர்வை இன்னும் விரிவுபடுத்திக் கொண்டே செல்ல வேண்டும். சில இளைஞர்களையாவது இத்தகைய பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும். துயரத்திற்கு ஆளாகாமல் தடுக்க முடியும். இளம் தலைமுறையினரை பாதுகாக்க முடியும்

 

மதுக்கடைகளை மூடும் வரை ஒவ்வொரு மருத்துவமனையிலும் போதை மறுவாழ்வு மையம் இடம்பெற வேண்டும், இது என்னுடைய கோரிக்கை. இதனை தமிழக முதலமைச்சரிடமும் தெரிவித்து இருக்கிறேன். அனைத்து மருத்துவமனைகளிலும் உளவியல் ஆலோசனை மையம் இடம்பெற வேண்டும். இதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும்.  

 

மதுப்பழக்கம் ஒரு தனி மனிதனை மட்டும் பாதிப்பதில்லை. சமூகத்தையே பாதிக்கிறது.‌ எனவே மது மற்றும் போதைப்பொருள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பிறகு முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்,' என்றார்

 

பாடலாசிரியர் வேட்டவலம் . ராமமூர்த்தி பேசுகையில், ''நான் இந்தப் படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி

 

மதுவால் ஏற்படும் பிரச்சனை என்ன என்பது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும்போது தான் பொருத்தமாக இருக்கும். ஒரு சில தருணங்களில் உண்மையை சொல்லலாம். அது அனைவருக்கும் பயன்படும்

 

நானும் மது பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு இப்படத்தின் பாடல்களை எழுதி இருக்கிறேன். இதற்கு உறுதுணையாக என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர்

 

மதுவை தொடாதீர்கள். தொட்டாலும் அதனை விட்டு விடுங்கள். அப்போதுதான் உங்களிடம் மகிழ்ச்சி இருக்கும்,'' என்றார்.

 

KALAIGNAR TV – GOWRI SERIALசூடுபிடிக்கும் திருவிழா - எதிர்பாரத திருப்பங்களுடன் கௌரி மெகாத்தொடர்.

KALAIGNAR TV – GOWRI SERIAL
சூடுபிடிக்கும் திருவிழா - எதிர்பாரத திருப்பங்களுடன் கௌரி மெகாத்தொடர்..!
 
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தெய்வீக மெகாத்தொடர் "கெளரி". மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, எல்லைக் காளி கோவிலில், திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், திருவிழாவில் வைத்து துர்கா மற்றும் கௌரியை தீர்த்துக் கட்ட ஆவுடையப்பன் சதி திட்டம் தீட்டுகிறான்.
 
மறுபுறம், துர்காவை கொல்ல இன்ஸ்பெக்டர் சரவணப்பெருமாள் நாள் குறிக்க, தனக்கு குறித்த நாளிலேயே சரவணப்பெருமாளின் உயிர் போகும் என துர்காவும் சபதம் செய்கிறாள்.
 
இதற்கிடையே, சிகிச்சை பெற்று வரும் உண்மையான துர்கா கண்விழித்து ஆவுடையப்பன் வீட்டுக்கும் வந்தால் என்ன நடக்கும்? அதே நேரத்தில், துர்கா ரூபத்தில் இருக்கும் கனகா உண்மையில் யார் என்கிற உண்மைகள் தெரிய வருமா? என்கிற எதிர்பார்ப்புகளுடன் தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

Monday, June 2, 2025

குபேரா' இசை வெளியீடானது நட்சத்திரங்கள் நிறைந்த இரவாக அரங்கத்தை ஒளிரச் செய்தது


 குபேரா' இசை வெளியீடானது நட்சத்திரங்கள் நிறைந்த இரவாக அரங்கத்தை ஒளிரச் செய்தது

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படமான 'குபேரா'வின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் திரைத்துறையைச் சார்ந்த பிரமுகர்களால் நிரம்பி வழிந்ததால் சென்னை ஒரு பிரகாசமான மாலைப்பொழுதைக் கண்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னணி நட்சத்திரங்களான நடிகர் தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா, இயக்குனர் சேகர் கம்முலா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தயாரிப்பாளர்கள் சுனில் நாரங் மற்றும் ஜான்வி நாரங், பரத் நாரங், சிம்ரன் நாரங், ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, தயாரிப்பு வடிவமைப்பாளர் தோட்டா தரணி மற்றும் பாடலாசிரியர்கள் விவேகா, சந்திரபோஸ் மற்றும் நந்தா கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களையும் உற்சாகத்தையும் பகிர்ந்து கொண்டனர்.

 நடிகை ரஷ்மிகா மந்தனா 

ரசிகர்களின் அதீத

ஆரவாரங்களுக்கு குறும்புத்தனமாக பதிலளித்த நடிகை ராஷ்மிகா மந்தனா, "நானும் உங்களை காதலிக்கிறேன்!" தன்னை அவரது சினிமா உலகிற்கு அழைத்ததற்காக சேகர் கம்முலாவுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த அவர், மீண்டும் தனுஷ் உடன் இணைந்து பணியாற்றுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்திய அவர், இந்த முறை ஒரு முழு நீள காதல் படத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார்.

 தேவி ஸ்ரீ பிரசாத் 

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களின் அசைக்க முடியாத அன்பிற்கும், 'குபேரா'வின் பாடல்களான 'போய்வா நண்பா' மற்றும் 'டிரான்ஸ் ஆஃப் குபேரா'வுக்கு கொடுத்த மகத்தான வரவேற்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். குட்டி திரைப்படம் முதல் வேங்கை வரையிலும், தற்போது 'குபேரா'விலும் தனுஷுடன் தனது இசைப் பயணத்தை நினைவு கூர்ந்த அவர், இந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினார்.

 இயக்குனர் சேகர் கம்முலா 

இயக்குனர் சேகர் கம்முலா பேசும்பொழுது, நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என தனுஷை "அற்புதமான ஆளுமை" என்று பாராட்டினார். படத்தின் வெற்றி குறித்து நம்பிக்கை தெரிவித்த அவர், "குபேரா ஒரு அற்புதமான படம். குபேரா மிகவும் அற்புதமான படம். குபேரா மிக மிக அற்புதமான படம்" என்றார். தனது தொழில்நுட்ப மற்றும் படைப்பாற்றல் குழுவின் அயராத முயற்சிக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார், குறிப்பாக ஆடை வடிவமைப்பாளர் காவ்யா ஸ்ரீராமைப் பாராட்டினார், அவர் தனது தலைசிறந்த பணிக்காக   உண்மையிலேயே விருது பெறுவதற்கு தகுதியானவர் என்று கூறினார்.


 நடிகர் நாகார்ஜுனா 

மூத்த நடிகர் நாகார்ஜுனா சென்னை பற்றிய பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார், அடையாறில் பிறந்தது, கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்தது, சென்னையைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு இங்கு தனது வாழ்க்கையைத் தொடங்கியது பற்றி நினைவு கூர்ந்தார். சென்னை ரசிகர்கள் தனக்குக் காட்டிய தொடர்ச்சியான அன்புக்கு தனது நன்றியைத் தெரிவித்த அவர்,

" 'குபேரா'வுக்குப் பிறகு, 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் 'கூலி' ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த காத்திருக்கிறது!"


 நடிகர் தனுஷ் 

இந்த நிகழ்ச்சி அதன் உணர்ச்சிகரமான உச்சக் கட்டத்தை நெருங்கியதும், தனுஷ் மேடையில் ஏறி, "ஓம் நம சிவாய" என்று தனது பேச்சை தொடங்கினார். உலகின் நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் அவர் பேசும்பொழுது, "இது கலிகாலம்-வெறுப்பு, எதிர்மறை மற்றும் பொறாமை செழித்து வளரும் காலம்; தீமை நன்மையை விட மேலோங்கி வளர்கிறது. பரலோகத்திலிருந்து வந்த தெய்வீக தேவதை போல தூய்மையான ஆன்மாவான சேகர் கம்முலாவுடன் பணியாற்றியதற்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். தயாரிப்பாளர்கள் சுனில் நரங் மற்றும் ஜான்வி நரங் ஆகியோரின் 'குபேரா' திரைப்படத்தின் கதை மீதான நிரந்தமான நம்பிக்கை மற்றும் இப்படிப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படங்களுக்கு அவர்கள் அளிக்கும் ஆதரவு காலம் கடந்து நிற்கும் ".

ஒரு முக்கியமான தனிப்பட்ட தருணத்தைப் பகிர்ந்து கொண்ட தனுஷ், தனது முதல் காட்சியின்  படப்பிடிப்பை பற்றி நினைவு கூர்ந்தபோது, 'குபேரா'வில் கொளுத்தும் வெயிலில், வெறுங்காலுடன், கிழிந்த ஆடைகளில் திருப்பதி மண்ணில், ஒரு பிச்சைக்காரனாக நடித்தது, தனது வாழ்க்கையின் ஆழமான அர்த்தங்களை நினைவூட்டிய ஒரு பாத்திரம். ராஞ்சானாவின் போது பனாரஸில் தனது கடந்தகால அனுபவத்துடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், "பேராசை, பணம், உலக இன்பங்கள்-அவை ஒன்றுமில்லை, தூய்மையான ஆன்மா மட்டுமே முக்கியம்" என்பதை உணர்ந்ததாக கூறினார். "இந்த படம் உங்கள் அனைவருக்கும் அதை கண்டிப்பாக உணர்த்தும். 'குபேரா'வின் வெற்றி எப்படி இருக்கும் என்பதில் எனக்கு 2000 மடங்கு நம்பிக்கை உள்ளது"

என தனுஷ் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.


நடிகர்கள் மற்றும் குழுவினர் தங்கள் உழைப்பை பற்றி மிகுந்த ஆர்வத்துடன், 'குபேரா' ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் மட்டுமல்ல, ஒரு ஆழமான சினிமா அனுபவத்தையும் வழங்கும் என்று  உறுதியாக கூறினர்.


Sunday, June 1, 2025

SSPL அதாவது சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்-கின் பிரமாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது

*SSPL அதாவது சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்-கின் பிரமாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.*

*ஸ்ட்ரீட் ஹீரோவில் இருந்து  ஸ்டேடியம் சூப்பர் ஸ்டாராக!*
 
*வெற்றிப்பரிசு 3 கோடி ரூபாயை வெல்லப்போவது யார்?*

தென்னிந்திய தெரு கிரிக்கெட்( SOUTHERN STREET PREMIER LEAGE) வரலாற்றில் முதன் முறையாக டி10  டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி சென்னையில் பிரமாண்டமாக  தொடங்கப்பட்டது.

 தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, பாண்டிச்சேரி மற்றும் கோவா முழுவதிலுமிருந்து புதைந்திருக்கும் திறமைகளை வெளியே கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த லீக் விளையாட்டு சரித்திரத்தை மாற்றியமைக்க உள்ளது.  சிறந்த வீரர்களைக் கொண்ட 12  அணிகள் இந்த ஆகஸ்டில் இந்தியாவின் மிகப்பெரிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய பரிசுத்தொகையான ரூபாய் 3 கோடியை வெல்ல களம் எதிர்கொண்டு விளையாடுகின்றன. 

இந்த சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்-கின் தலைவர், ஆற்காடு இளவரசர் நவாப்சாதா முகமது ஆசிப் அலி,  பிரபல நடிகர் ரவி மோகன்,  SSPL இன் தலைமை செயல் அதிகாரியும் இயக்குநருமான L.T. ஆனந்த், முக்கிய பிரமுகர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, லீக்-கை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஆரவாரமாக 5 அடி உயர வெற்றிக்கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டது. 

SSPL இன்  அதிகாரப்பூர்வ  லோகோ மற்றும் விளையாட்டு கீதம் ஆகியவை வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றன.  

இந்தியாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாழ்வின் அங்கமாக கிரிக்கெட்  மாறிவிட்டது.  பெரும்பாலோர் தங்களது கிரிக்கெட் விளையாட்டை டென்னிஸ் பந்துகளில் இருந்து தொடங்குகின்றனர்.   கிரிக்கெட்  விளையாட்டு என்பதை விட, பல்வேறு மதங்கள், மொழிகள், இனங்கள் மற்றும் கலாச்சாரங்களில் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் கருவியாக உள்ளது. 

கிரிக்கெட் அரங்கங்கள் வரலாறுகளை வெளிப்படுத்தும் என்றாலும், நாட்டின் குறுகிய பாதைகள்,  மற்றும் பரபரப்பான தெருக்களில் பார்த்தால் எதிர்கால நட்சத்திரங்கள் உண்மையிலேயே பிறக்கும் இடம் அது என்று நம்ப முடியும்.  

 இந்தியாவில் கிரிக்கெட் திறமைகளுக்கு பஞ்சமில்லை,  ஆனால் அதை முன்னெடுத்துச் செல்ல சரியான தளம் இல்லை. 

தெரு கிரிக்கெட்டுகள் மிகச் சாதாரணமாகவும் மற்றும் டென்னிஸ் பந்துகளுடனும் விளையாடப்பட்டாலும்  வடிகட்டப்படாத திறமைகளுக்கு நீண்ட காலமாக வழி வகுத்துள்ளது.

 இங்குதான் தோனி மற்றும் விராட் கோலி உள்ளிட்ட இந்தியாவின் பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் முதலில் தங்கள் திறமைகள்,  ஆற்றல் மற்றும் மன உறுதியை வளர்த்தனர். இந்த சிறிய தொடக்கத்திலிருந்து, எண்ணற்ற கிரிக்கெட் வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச புகழைப் பெற்றுள்ளனர்.  

SSPL தெரு கிரிக்கெட்டின் சிறந்தவர்கள் மைய அரங்கை எடுக்கக்கூடிய ஒரு கட்டமைக்கப்பட்ட தளத்தை வழங்குகிறது. மேலும் தெரு கிரிக்கெட்டின் ஒப்பிடமுடியாத ஆர்வத்தை உலகத் தரம் வாய்ந்த அரங்கங்களுக்கு கொண்டு வருவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு லட்சிய டி 10 டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி இது. இந்த டி 10  கிரிக்கெட் லீக் 8 ஓவர் டென்னிஸ் பந்து மற்றும் 2 ஓவர் டேப் பந்து 12 வயதுக்கு மேற்பட்ட  வீரர்களுக்கானது.  இதன்  நுழைவுக் கட்டணம்  வெறும் ரூபாய் 699 மற்றும் ஜிஎஸ்டி மட்டுமே.  

தேர்வுகள் அனைத்து மாநிலங்களிலும், மெட்ரோ நகரங்கள் மற்றும் மெட்ரோ அல்லாத இடங்களில் நடைபெறும். 3 நிலை தேர்வு செயல்முறை ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படும். வீரர் தேர்வு மற்றும் விளையாட்டு கண்காணிப்பில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான பங்களிப்பு,  டென்னிஸ் பந்து கிரிக்கெட்டின் நம்பகத்தன்மை மற்றும் உற்சாகத்தை தொழில்முறை தரங்களுக்கு அங்கீகரிப்பது SSPL - ஐ மற்ற போட்டிகளில் இருந்து வேறுபடுத்துகிறது. 

உள்ளூர் திறமைகளை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்வதே இதன் முக்கிய நோக்கமாகும். இதுவரை கிடைக்கப்பட்ட வரவேற்பு, ஸ்டேடியம் கிடைக்கும் பட்சத்தில் ஷார்ஜாவில்  இறுதிப் போட்டிகளை நடத்துவதை கருத்தில் கொள்ள வழிவகுத்துள்ளது. 

வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான விளையாட்டு SSPL இன் முக்கிய அம்சங்களில் ஒன்று.  தேர்வின் அனைத்து மட்டங்களிலும் நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மையை பராமரிப்பதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

 சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், பங்கேற்பாளர்களின் அறிக்கை அட்டைகளைப் பகிர்வதன் மூலமும் இது நடைமுறைப்படுத்தப்படும். 
 தகுதி தேர்வில் நடைபெறும் சோதனைகள் வீடியோவில் பதிவு செய்யப்படும். மேலும் பங்கேற்பாளர்களுக்கு அவர்களின் விளையாட்டைப் பார்க்க அனுமதி வழங்கப்படும். 

சமீபத்திய தொழில்நுட்பம் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு,  விளையாட்டைக் கண்காணிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் இது பயன்படுத்தப்படும். இதை உண்மையிலேயே தனித்துவமாக்குவது என்னவென்றால், இந்த அளவிலான உயர்நிலை மற்றும் விலையுயர்ந்த தொழில்நுட்பம் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் இதுவரை ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. 

போட்டி நிலைமைகளைப் பிரதிபலிக்கும் உருவகப்படுத்தப்பட்ட சூழல்கள் மூலம் பேட்டிங் மதிப்பீடுகள் நடத்தப்படும். பந்து வீச்சு மதிப்பீடுகள் நிகழ்நேர பகுப்பாய்விற்கு தெர்மல் இமேஜிங் கேமராக்கள் மற்றும் வேக கண்காணிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 

தென்னிந்தியாவிலிருந்து 6 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 அணிகள் இந்த லீக்-கில் விளையாடப் போவது அதன் முக்கியமான சிறப்பு அம்சமாகும். மேலும்
* ஒவ்வொரு அணியிலும் 25 வீரர்கள் வரை தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். 

* இறுதி 500 வீரர்கள் கடுமையான பல நகர தேர்வு செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் 300 வீரர்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்படி சர்வதேச தரத்தில் இந்த டென்னிஸ் பந்து T 10 லீக் நடத்தப்பட உள்ளது.

 SSPL இன் தலைவர்,
நவாப்சாதா முகமது ஆசிப் அலி மிகச் சிறந்த கிரிக்கெட் ஆர்வலர்.  இது இந்த லீக் ஆட்டத்திற்கு கூடுதல் கவனத்தைப் பெற்றுத் தந்துள்ளது.   அவர் நீண்ட காலமாக இதுபோன்ற விளையாட்டுகளில் சிறந்த வீரராக இருந்து வருகிறார்.  மேலும் அவர் ஒரு தீவிர கிரிக்கெட் விளையாட்டு வீரராகவும் உள்ளார். உள்ளூர் திறமைகளை வளர்ப்பதற்காக அவர் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை ஏற்பாடு செய்து வருகிறார். அவர் SSPL -ஐ ஒரு முன்முயற்சியாகக் கருதுகிறார். இது ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு சமமான வாய்ப்புகளைக் கொண்ட ஒரு உருமாறும் தளமாக செயல்படும் என்றும் இந்தியாவின் தெரு கிரிக்கெட்டின் புகழ்பெற்ற வீரர்கள் மீது மீது கவனத்தை பிரகாசிக்கும் என்றும் நம்பிக்கை அளிக்கிறது. 

தமிழ் திரை உலகின் பிரபல நடிகரும் SSPL இன்  பிராண்ட் அம்பாசிடருமான ரவி மோகன்
 ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரர்.  அவர் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார், மேலும் SSPL க்கு நட்சத்திர அந்தஸ்தையும், பிரபலத்தையும்  உருவாக்குகிறார்.   லீக்-கின் பிராண்ட் அம்பாசிடராக, இளம் திறமைகளை ஊக்குவிப்பதிலும், நாடு தழுவிய ஈடுபாட்டை ஊக்குவிப்பதிலும் அவர்  பங்கு முக்கியமானது.  அவரது பங்கேற்பு நிறைய ஆற்றலையும், இளம் வீரர்கள் தங்கள் கிரிக்கெட் கனவுகளைத் தொடரும்போது ஊக்கத்தையும் அளிக்கிறது. 

SSPL இன் தலைமை செயல் அதிகாரியும் இயக்குனருமான L.T. ஆனந்த் முன்னணியில் இருந்து வழிநடத்துகிறார்.  மேலும் SSPL இன் செயல்பாடு, நிதி மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை மேற்பார்வையிடுகிறார். லீக்-கின் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதில் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார். தனது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்துடன், அவர் ஒரு வலுவான நிறுவன அடித்தளத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார், அது இன்று வெற்றிகரமாக இருக்கும் மற்றும் வரவிருக்கும் ஆண்டுகளில் நீடித்த விளையாட்டு இயக்கமாக மாறும். 
SSPL  இந்தியாவில் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மறுவரையறை செய்ய அமைக்கப்பட்டுள்ளது. தெரு கிரிக்கெட்டை தொழில் ரீதியாக நிர்வகிக்கப்படும், அதிக பங்குகள் கொண்ட லீக்-காக மாற்றுவதற்கான லட்சிய குறிக்கோளுடன், SSPL உண்மையிலேயே விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குக்கு அப்பால்  ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு உயரவும், பிரகாசிக்கவும், ஊக்குவிக்கவும் ஒரு சக்திவாய்ந்த தளமாக நிற்கிறது. உண்மையான திறமை எங்கும் இருக்க முடியும் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க,  சரியான வாய்ப்பு மட்டுமே தேவை. ஸ்ட்ரீட் ஹீரோக்களை உண்மையில் ஸ்டேடியம் சூப்பர் ஸ்டார்களாக மாற்றுவது மட்டுமே SSPL இன் குறிக்கோள்.

ஓஹோ எந்தன் பேபி' படத்தின் மூலம் நம்பிக்கைக்குரிய நடிகர் ருத்ராவை நடிகர் விஷ்ணு விஷால் அறிமுகப்படுத்துகிறார்!*

*'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் மூலம் நம்பிக்கைக்குரிய நடிகர் ருத்ராவை நடிகர் விஷ்ணு விஷால் அறிமுகப்படுத்துகிறார்!*

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி' இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். 

ரொமான்ஸ், ஹியூமர், எமோஷனல் என அனைத்தும் இந்தப் படத்தில் உள்ளது. 

படத்தில் உதவி இயக்குநராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குநராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார். அந்த வகையில் படத்தில் நடிகராக வரும் விஷ்ணு விஷாலிடமும் கதையை சொல்ல ரொமான்ஸ் கதை இல்லையா என கேட்கிறார். தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்கு அம்சத்துடன் எடுத்திருக்கிறார்கள்.

நிஜத்திலும் ருத்ரா ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக இதற்கு முன்பு பணிபுரிந்தார். மேலும், FIR, கட்டா குஸ்தி ஆகிய படங்களில் போஸ்ட் புரொடக்சன் பணிகளையும் ருத்ரா மேற்கொண்டார். 

கதாநாயகனாக தன்னுடைய அறிமுகம் பற்றி அவர் பகிர்ந்து கொண்டதாவது, "கேமராவுக்கு பின்னாலும் முன்னாலும் பணிபுரிவது சவாலானது. ஆனால், எனக்கு நல்லபடியாக பணி செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது".

நடிகர் விஷ்ணு விஷால் பகிர்ந்து கொண்டதாவது, " இந்தக் கதையில் எல்லா அம்சங்களும் சரியாக உள்ளது. இருந்தாலும் இந்தக் கதைக்கு நான் பொருத்தமானவன் இல்லை என்பதை உணர்ந்து உடனே ருத்ராவை நடிக்க வைத்தேன். தயாரிப்பாளராக அவரை அறிமுகப்படுத்துவது ஸ்பெஷலான தருணம். நடிகர் சூர்யா சார் தயாரிப்பில் எப்படி கார்த்தி சாருக்கு ஆதரவு கொடுக்கிறாரோ அப்படி இனிவரும் காலத்தில் ருத்ரா நடிக்கும் படங்களுக்கு ஆதரவு கொடுக்க இருக்கிறேன். நானும் எத்தனையோ படங்களில் நடித்துள்ளேன். இந்த அளவுக்கு ரொமான்ஸ் காட்சிகள் எனக்கு அமையவில்லை. ஆனால் என் தம்பிக்கு முதல் படத்திலேயே முத்த காட்சி அமைந்து" என்றார். 

இதில் கதாநாயகியாக நடிகை மிதிலா பால்கர் நடிக்கிறார். 

250-க்கும் மேற்பட்ட கமர்ஷியல் வீடியோ மற்றும் ஃபிலிம்மேக்கர் ராஜீவ் மேனனிடம் பல ஃபீச்சர் படங்களில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார். "விளம்பரங்களில் 30 செகண்ட்டில் பார்வையாளர்களைக் என்கேஜ் செய்ய வேண்டும். ஆனால், சினிமாவில் 2.30 மணி நேரத்திற்கும் மேலாக பார்வையாளர்களைக் கட்டிப் போட வேண்டும் என்பது சவால். அதை சிறப்பாக செய்திருக்கிறோம்" என்றார்.

இந்தப் படத்தின் டைட்டில் ஐகானிக் பாடலான 'ஓஹோ எந்தன் பேபி' பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. அந்தப் பாடலுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் அதன் கிளிம்ப்ஸ் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

*தொழில்நுட்ப குழு:*

ஒளிப்பதிவு: ஹரிஷ் (டிமாண்டி காலனி படப்புகழ்)
படத்தொகுப்பு: R.C. பிரணவ்,
இசை: ஜென் மார்ட்டின் (டாடா, ப்ளடி பெக்கர் படப்புகழ்)

பிக்சல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், யுனிக் ஸ்டார் நிகில் நடிக்கும் 'சுயம்பு' படத்தின் மேஸிவ் போஸ்டர் நிகில் பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!*

*பிக்சல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், யுனிக் ஸ்டார் நிகில் நடிக்கும் 'சுயம்பு' படத்தின் மேஸிவ் போஸ்டர் நிகில் பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!*

'கார்த்திகேயா 2' படத்திற்கு பிறகு யுனிக் ஸ்டார் நிகில் தேசிய அளவிலும் பான் இந்தியா அளவிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இப்பொழுது மற்றொரு பான் இந்திய படமான 'சுயம்பு' இவரது இருபதாவது படமாக உருவாகிறது. ஹிஸ்டாரிக்கல் ஆக்ஷன் எபெக்ட் படமாக இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், இந்தப் படம் மிக பிரம்மாண்டமாக உருவாகிறது. நடிகர் நிகில் இதற்கு முன்பு பார்த்திராத கதாபாத்திரத்தில் வலுவான போர் வீரராக நடிக்கிறார். இந்த படத்தை புவன் மற்றும் ஸ்ரீகர் இருவரும் இணைந்து பிக்சல் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் தயாரிக்கின்றனர். தாகூர் மது இந்த படத்தை வழங்குகிறார்.

போர் பின்னணியில் செங்கோல் ஏந்தியபடி நிகில் மற்றும் சம்யுக்தா இருவரும் இருக்கும்படி 'சுயம்பு' படக்குழு மாஸ் போஸ்டர் ஒன்றை நிகில் பிறந்தநாளன்று வெளியிட்டுள்ளது. 

இந்த போஸ்டரில் நிகில் தீவிரமாகவும் வலுவானவராகவும் போர்க்களத்தின் நடுவில் வாளேந்தி நிற்கிறார். வில் மற்றும் அம்புடன் சம்யுக்தாவும் வீரப்பெண்மணியாக இந்த போஸ்டரில் இருக்கிறார். இந்த போஸ்டரே படம் எந்தளவுக்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது. 

சக்தி மற்றும் நீதியின் சின்னம் தான் செங்கோல். பண்டைய ராஜ்ஜியங்கள் முதல் இந்தியாவின் சுதந்திரம் வரை செங்கோல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.  நமது பண்டைய வரலாற்றின் படி, ராமர் தனது ஆட்சியின் போது செங்கோல் வைத்திருந்தார். நீதியுடன் நடக்கும் ஆட்சிக்கு இது முன்னுதாரணமாக அமைந்தது. 

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் செங்கோலை நிலைநாட்டினார். 

தற்போது 'சுயம்பு' திரைப்படமும் இந்த வலுவான கதைக்களத்தை சுற்றியே அமைந்துள்ளது. வரவிருக்கும் டீசர் இந்த உலகத்தை இன்னும் விரிவாகக் காட்ட இருக்கிறது. 


நபா நடேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். 

*தொழில்நுட்பக் குழு:*

எழுத்து, இயக்கம்: பரத் கிருஷ்ணமாச்சாரி,
தயாரிப்பாளர்கள்: புவன் மற்றும் ஸ்ரீகர்,
பேனர்: பிக்சல் ஸ்டுடியோஸ்,
வழங்குபவர்: தாகூர் மது,
ஒளிப்பதிவு: கே.கே.செந்தில் குமார்,
இசை: ரவி பஸ்ரூர்,
எடிட்டர்: தம்மிராஜு,
வசனம்: விஜய் காமிசெட்டி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்கள்: எம் பிரபாகரன், ரவீந்தர்,
ஸ்டண்ட்: கிங் சாலமன், ஸ்டண்ட் சில்வா,
பாடல் வரிகள்: ராமஜோகய்யா சாஸ்திரி,
மக்கள் தொடர்பு: வம்சி-சேகர் (தெலுங்கு),
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா - அப்துல் நாசர் (தமிழ்),
மார்க்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட் ஷோ

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"

 கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"   கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமைவரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பா...