Saturday, February 24, 2024

ஆண்கள் அழுவது அழகோ அழகு” – 'டபுள் டக்கர்' திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின்*

*"ஆண்கள் அழுவது அழகோ அழகு” –  'டபுள் டக்கர்' திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின்*

*”தமிழ் கார்ட்டூனுக்கான மவுசு கூடும்” – இணை தயாரிப்பாளர் சந்துரு*

*”ஒரு சாதாரண மனிதனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையைக் கூட எனக்குக் கொடுக்கவில்லை.” –  அறிமுக இயக்குநர் மீரா மஹதி*

*”எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள், ஆனால் ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான்” – மிஷ்கின்*

*"சினிமாவில் இருப்பதற்கு 100 ஆண்டுகள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்” - மிஷ்கின்*

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் 'டபுள் டக்கர்'. 

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடன் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் கலந்து கொண்டார். 

படத்தின் இணை தயாரிப்பாளர் சந்துரு பேசியதாவது...

ஒரு படம் வெளியாவதற்கு முன்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடப்பது என்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் நான் அதற்கு முன்னர் ஒரு டீசர் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று கருதினேன். ஏனென்றால் பத்திரிகையாளர்களாகிய நீங்கள் எந்த கோணத்தில் படத்தை அணுகுகிறீர்களோ, ஆடியன்ஸும் அதே மனநிலையில் தான் அப்படத்தை அணுகுவார்கள் என்பது என்னுடைய நம்பிக்கை. மேலும் படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் எழுதுகின்ற எழுத்து தான் அப்படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் என்றும் நம்புகிறேன். ஒரு மூன்று வருடத்திற்கு முன்பு அவ்வளவு தான் இனி வாழ்க்கையில் ஒன்றும் இல்லை என்று எண்ணிக் கொண்டு, என் மீது துளியும் நம்பிக்கை இல்லாமல் இருந்த போது ஒரு கை வந்து என்னைத் தூக்கியது. அது தீரஜ்ஜின் கை. அவர் தான் என்னை முதன்முதலில் திரைக்கதைக்குள் வாருங்கள் என்று அழைத்துப் போனார். அப்படி என்னைக் கைப்பற்றி அழைத்து இன்று இங்கே கூட்டி வந்து விட்டுவிட்டார். மூன்று வருடங்களாக திரைக்கதையில் உழைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். 

அந்த வீடியோவில் பார்த்திருப்பீர்கள்; பி.எம்.டபிள்யூ, கார் வாங்கலாம். ஆடி கார் வாங்கலாம். ஆனால் அதற்கான எரிபொருள் என்பது எப்போதும் பிரஸ் அண்ட் மீடியாவாகிய நீங்கள் தான். ஏனென்றால் உங்கள் எழுத்திற்குத் தான் ஆடியன்ஸை தியேட்டருக்குள் அழைத்து வரும் வல்லமை இருக்கிறது. அதனால் இப்படத்தினை சப்போர்ட் செய்யுங்கள். . 

நம் வீடுகளில் ஒரு வழக்கம் இருக்கும். குழந்தைகள் டிவியில் ஆங்கில கார்ட்டூன் சேனல்கள் பார்த்துக் கொண்டிருந்தால், நாம் கண்டு கொள்ள மாட்டோம். ஆனால் தமிழ் கார்ட்டூன் சேனல் பார்த்துக் கொண்டிருந்தால் உடனே மாற்றிவிடுவோம். 'டபுள் டக்கர்' படம் வெளியானதும், இந்த நிலை மாறும். தமிழ் கார்ட்டூனுக்கான மவுசு கூடும் என்று நம்புகிறேன். இது போன்ற கார்ட்டூன் படங்களுக்கும் ஆதரவு கொடுங்கள். அப்பொழுது தான் புது முயற்சிகளை துணிந்து நாங்கள் செயல்படுத்துவோம். 

படத்தொகுப்பாளர் வெற்றிவேல் பேசும் போது...

இது நான் எடிட்டராக பணியாற்றும் முதல் படம். அஸிஸ்டெண்ட் ஆக பணியாற்றும் போது அங்கு கூட்டத்தில் நின்று மேடையைப் பார்த்துக் கொண்டிருப்பேன். இன்று இந்த மேடையில் நின்று பேசுவது மகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது. 'டபுள் டக்கர்' ஒரு அனிமேஷன் திரைப்படம். எனக்கு காட்சிகள் Empty Plates ஆகத் தான் வரும். அதைக் கொண்டு காட்சிகளை எடிட் செய்வது சவால் நிறைந்தது. இந்த வார்த்தை எல்லோரும் சொல்லக் கூடியது தான். ஆனால் படம் பார்க்கும் போது அந்த வித்தியாசத்தை உங்களால் உணர முடியும். இப்படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோருக்கு என் நன்றி. பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் நன்றிகள். 

நாயகி ஸ்முரிதி வெங்கட் பேசும் போது...

இந்த நிகழ்விற்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இந்த புராஜெக்ட்டில் நானும் ஒரு பகுதியாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இந்த நிகழ்வை சிறப்பிக்க வந்திருக்கும் இயக்குநர் மிஷ்கின் சார் அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை எனக்குக் கொடுத்த அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். இப்படத்தின் இணை தயாரிப்பாளர் சந்துரு சார் அவர்களுக்கு நன்றி. அவர் மிகவும் அமைதியானவர்., ஆனால் எங்கள் ஹீரோ தீரஜ் அப்படியே நேர் எதிரானவர். அவர் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக் கொள்வார். எங்கள் இயக்குநர் மீரா மஹதி எவ்வளவு கூலான இயக்குநர் என்பதை அந்த வீடியோவில் நீங்களே பார்த்திருப்பீர்கள். முழு படப்பிடிப்பையும் எந்தவொரு டென்ஷனும் இல்லாமல் கலகலப்பாக கொண்டு போனார். எங்கள் படத்தின் ஒளிப்பதிவாளர்  கெளதம் என்னை மிக அழகாக காட்டியதோடு மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் நான் சிறப்பாக நடிப்பதற்கும் உதவியாக இருந்தார்.  கோவை சரளா மேடம் போன்ற சீனியர் நடிகைகளுடன் நடித்த அனுபவம் அலாதியானது. நிறைய கற்றுக் கொண்டேன். சிறுவயதில் இருந்தே நான் வித்யாசாகர் இசைக்கு மிகப்பெரிய விசிறி. என் படத்திற்கு அவர் இசையமைப்பதை நான் பாக்கியமாக கருதுகிறேன்., எனக்குக் கொடுத்த இந்த வாய்ப்பிற்கு மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த நிகில் சார் அவர்களுக்கு நன்றி. இப்படத்திற்கு பத்திரிகை நண்பர்களாகிய உங்களின் ஆதரவு தேவை. எங்கள் படத்திற்கு மிகச்சிறந்த ஆதரவைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

படத்தின் இயக்குநர் மீரா மஹதி பேசும் போது...

பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், 12 வருட உழைப்புக்குப் பின்னர் எனக்கு இந்த மேடை கிடைத்திருக்கிறது. நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியது இல்லை. இது வரை பத்து பனிரெண்டு குறும்படங்கள் எடுத்திருக்கிறேன். முகநூல் வட்டத்தில் இருக்கும் என் நண்பர்கள் குறும்படத்தைப் பார்த்துவிட்டு நீ சினிமாவே இயக்கலாம் என்று ஊக்கம் கொடுத்தார்கள். நான் கதை சொல்வதற்காக அஜீத், விஜய் போன்ற பெரிய ஹீரோக்களிடம் செல்லவில்லை. அவர்களை நெருங்கக்கூட முடியாது என்று தெரியும். மூன்று அல்லது நான்கு கோடி பட்ஜெட்டிற்குள் வரும் வளர்ந்து வரும் நாயகர்கள் சிலரிடம் தான் கதை சொல்ல முயன்று வந்தேன்.

ஆனால் அவர்கள் யாரும் ஒரு சாதாரண மனிதனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையைக் கூட எனக்குக் கொடுக்கவில்லை. நான் கேட்டதெல்லாம் வெறும் ஐந்து நிமிடம் மட்டும் தான். அதை எனக்கு யாருமே கொடுக்கவில்லை. 

மைம் கோபி அவர்கள் மூலமாகத் தான் இந்த வாய்ப்பு எனக்கு வந்தது. நான் ஒரு இண்டிபெண்டண்ட் ஃபிலிம் மேக்கர் என்று சொல்லிக் கொண்டு மைம் கோபி சாரிடம் கதை சொல்லப் போயிருந்தேன். மைம் கோபி சார் தான் என்னை தீரஜ் சாரிடம் அறிமுகம் செய்து வைத்தார்கள். தீரஜ் சார் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை, நீ என்ன சாதி..? என்ன மதம்…? யாரிடம் வேலை பார்த்தாய்..? என்று எதுவுமே என்னிடம் கேட்கவில்லை அவர் கேட்டதெல்லாம் ஐந்து நிமிடத்தில் என்னை உன்னால் இம்ப்ரஸ் செய்ய முடியுமா..? என்று கேட்டார். நான் அந்த ஐந்து நிமிடத்தைத் தான் யாரும் எனக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் சார் என்று சொன்னேன். அவர் கொடுத்தார். நான் கதை சொல்லத் துவங்கினேன். கதை சொல்லி முடிக்கும் போது 1 மணி நேரம் ஆகியிருந்தது. ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு தீரஜ் சார் என்னிடம் கதை கேட்டார். 

ஆரம்பிக்கும் போது இப்படம் சிறிய படமாகத் தான் இருந்தது. படத்தில் வரும் அனிமேஷன் பகுதிகளை நான் ஏற்கனவே மனதில் டிசைன் செய்து வைத்திருந்தேன். பிறகு படத்தில் வரும் அனிமேஷன் பகுதிகளைப் பற்றிக் கேட்டுவிட்டு தீரஜ் சார், இது சூப்பராக ஒர்க்-அவுட் ஆகும், நாம் இதை கண்டிப்பாக பெரிய அளவில் செய்வோம் என்று கூறி படத்தின் பட்ஜெட்டை எட்டு மடங்காக உயர்த்திவிட்டார். பின்னர் சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட் எல்லாம் வந்தப் பின்னர் படத்தின் பட்ஜெட் இன்னும் கொஞ்சம் அதிகமானது. 

எனது முதல் மேடையிலேயே மிஷ்கின் சார் அமர்ந்திருப்பதை நான் என் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த அனைவருக்கும், இந்தப் படத்தின் உருவாக்கத்தில் ஈடு இணையின்றி உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். என்னைப் போல் வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கு பத்திரிகை நண்பர்கள் ஆதரவு கொடுங்கள். நீங்கள் சொல்வதையும் எழுதுவதையும் தான் மக்கள் நம்பி திரையரங்கிற்கு வருவார்கள். நாங்கள் எவ்வளவு சொன்னாலும் மக்கள் நம்பமாட்டார்கள். நீங்கள் சொல்வதைத் தான் நம்புவார்கள். 'டபுள் டக்கர்' படத்தைப் பற்றி எழுதி எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் பேசும் போது...

காலதாமதமாக வந்ததற்கு முதலில் எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் செல்போனை அணைத்து வைத்துவிட்டு தொடர்ச்சியாக படப்பிடிப்பில் இருந்தேன். எதேச்சையாக போனை ஆன் செய்த போது தீரஜ் இடம் இருந்து போன் வந்தது. தொடர்ச்சியாக ஷூட்டிங்கும் இருந்தது. இன்று 2 மணியிலிருந்து 10 மணி வரை கால்ஷீட்.  என்ன செய்வது என்று தெரியாமல் ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு வந்துவிட்டேன். ஏனென்றால் தீரஜ்ஜை எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று கேட்டால், அவன் இதுவரை குறைந்தது ஒரு 500 உயிரையாவது காப்பாற்றி இருப்பான். அவன் ஒரு இதய சிகிச்சை நிபுணர். குறைவாக சொல்கிறேன் என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றிய மருத்துவர் அவன். உதய்க்கு நெருங்கிய நண்பன், நம் முதல்வரை சூழ்ந்திருக்கும் முக்கிய மருத்துவர்களில் தீரஜ்ஜும் ஒருவன். சற்றும் தலைக்கணம் இல்லாதவன், மிகுந்த அன்பு கொண்டவன், எளிமையாகப் பழகக்கூடியவன். அவன் கூப்பிட்டதும், அவன் இந்த உலகத்திற்குச் செய்த சேவைக்காக என் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நான் வந்துவிட்டேன். 

ஒரு மருத்துவராக அவன் அவனுக்கான உயரத்தினை எப்போதோ அடைந்துவிட்டான். ஆனால் அதையும் மீறி அவன் ஒரு ஆக்டர் ஆக வேண்டும் என்று விரும்புகிறான். எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள். ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான். என்னைப் பொருத்தவரை ஒரு டாக்டர், நடிகன், இயக்குநர் மூவரும் ஒன்று தான். எல்லோரும் அறிந்தபடி டாக்டர்  இதயத்தை அப்படியே திறந்து அதில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்கிறார். அது போல் தான் கதை சொல்லியாகிய இயக்குநரும் ஒரு இதயத்தை திறக்காமல் திறந்து ரசிகனின் இரணத்தை ஆற்றி அவனை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறான். ஆக மூன்று பேரும் ஒன்றுதான். 

என் திரைப்படங்களில் மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த காட்சிகள் இடம் பெறும் போது, அதில் ஏற்படும் குழப்பங்களை தீரஜ்ஜிடம் தான் கேட்பேன். அவன் தான் அதைத் தீர்த்து வைப்பான். மிக எளிமையாக எனக்கு அது குறித்து விளக்கம் கொடுப்பான். இயல்பாகவே கலகலப்பான பையன் அவன். படங்களும் ஜனரஞ்சகமாக, கலகலப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவான். அவனுடன் இருந்தாலே மிகவும் சந்தோஷமாக இருக்கும். 

சந்துரு விமானத்தில் பணியாற்றியவர். ஒரு முறை என்னுடைய விமானப் பயணத்தின் போது அறிமுகப்படுத்திக் கொண்டு சார் உங்களோட பெரிய விசிறி, உங்கள் படங்கள் மிகவும் பிடிக்கும் என்றார். என் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார். இரண்டு மாதங்கள் கழித்து எனக்குப் போன் செய்து சார் உங்களை சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் வரச் சொன்னேன். வந்ததில் இருந்து சினிமாவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். பின்னர் மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து என்னைப் பார்க்க வந்தார். சார் நான் படம் எடுக்கப் போகிறேன் என்றார்.  நான் அவனிடம் நீ உயரே பறந்து கொண்டிருக்கிறாய். ஏன் கீழே பறக்க ஆசைப்படுகிறாய் என்று கேட்டேன். 

அவன் இயக்கிய குறும்படத்தைப் பார்த்தேன். நல்ல மேக்கிங். ஏனோ மக்களிடம் பெரிதாக சென்று சேரவில்லை. பின்னர் ஒரு வருடம் கழித்து வந்து நான் இந்தப் படத்தில் இணை தயாரிப்பாளர் என்று கூறினார். சினிமா என்பது எவ்வளவு உயரத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களைத் தன்பால் ஈர்க்கிறது.

இயக்குநர் மீரா மஹதி இந்த நிகழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். அழுகை அழகு. அதிலும் ஆண்கள் அழுவது அழகோ அழகு. வெட்கமில்லாமல் ஆண்கள் அழுவது  என்னுடைய உதவி இயக்குநர்களுடன் நான் எப்போதுமே சினிமா பற்றி மட்டும் தான் பேசிக்கொண்டே இருப்பேன்.. ஒரு 50 எம் எம் லென்ஸுக்கும் ஒரு 35 எம் எம் லென்ஸுக்கும் 15 டிகிரி தான் வித்தியாசம், ஆனால் அந்த பதினைந்து டிகிரி வித்தியாசத்தை தெரிந்து கொள்ள 5 அல்லது 6 வருடங்கள் தேவை.  

தமிழ் சினிமாவில் லென்ஸைப் பற்றித் தெரிந்த ஒரு சில இயக்குநர்களில் நானும் ஒருவன். சினிமாவில் மட்டும் தான் less is more. பத்திரிகைக்காரர்கள் எப்போதும் என்னை தூக்கிவிட்டிருக்கிறீர்கள். நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களை நன்றாக இல்லை என்று சிலர் சொன்ன போது, அதை தூக்கிப் பிடித்தவர்கள் நீங்கள் தான். நீங்கள் நடிகர் நடிகைகள் பற்றி எழுதும் போதும் கவனமாக எழுதுங்கள், இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இப்படத்திற்கு ஆதரவு கொடுங்கள். நன்றாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் கண்டிப்பாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்துவிடுவீர்கள் என்று தெரியும். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. 

படத்தின் நாயகன் தீரஜ் பேசியதாவது...

என்ன பேசுவது, எங்கிருந்து துவங்குவது என்று தெரியவில்லை. மிஷ்கின் சார் உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. உங்களுடைய பேச்சு இன்று அட்டகாசமாக இருந்தது. Heartல் துவங்கி  Art வரைக்கும் எல்லாவற்றையும் பற்றி பேசிவிட்டீர்கள். இன்று நீங்கள் இந்த மேடையிலிருப்பது இந்த நிகழ்வை மேலும் சிறப்புமிக்கதாக்குகிறது. சந்துரு என் முதல் படத்தின் இயக்குநர். திரைப்படத்திற்கு சென்சிட்டிவ் ஆன விசயங்கள் மட்டும் போதாது, கமர்ஷியல் சக்சஸ் அடைய வேறு ஏதோவொன்று தேவை என்பதைப் புரிந்து கொண்டு, பேப்பர் ராக்கெட் நிறுவனத்தில் போய் புரொடெக்ஷன் மேனேஜராக பணியாற்றிவிட்டு வந்தார். 'பிள்ளையார் சுழி' படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் போது தான் இயக்குநர் மீரா என்னிடம் கதை சொல்ல வந்தார். ஐந்து நிமிடத்துக்குள் என்னை இம்ப்ரஸ் செய் என்று சொன்னேன். அவர் நான் ஸ்டாப்பாக என்னை சிரிக்க வைக்கத் துவங்கினார். உடனே சரி கண்டிப்பாக நாம் இதை பண்ணுகிறோம் என்று சொன்னேன். 

என்னுடன் நடித்த ஸ்மிருதி வெங்கட் அவர்களுக்கு நன்றி.  இசையமைப்பாளர் வித்யாசாகர் சாருக்கு நன்றி. இன்னொரு விழாவை அவருக்காகவே முன்னெடுக்க இருக்கிறோம். எடிட்டர் வெற்றிக்கு நன்றி. அட்லி அங்கு இருப்பதற்கும் நீங்கள் தான் காரணம். மீரான் இங்கு இருப்பதற்கும் நீங்கள் தான் காரணம். இப்படத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டியது பத்திரிகையாளர்களாகிய உங்களுடைய கடமை. படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் அதை நாங்கள் கேட்காமலே நீங்கள் செய்வீர்கள் என்று அறிவோம். இருப்பினும் இப்படத்திற்கு உங்களின் ஆதரவைத் தந்து உதவுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

***

Friday, February 23, 2024

PAMBATTAM - திரைவிமர்சனம்

"பாம்பாட்டம்", எழுத்தாளர்-இயக்குனர் வடுவிடையனின் படைப்புத் தலைமையின் கீழ் ஒரு கற்பனையான த்ரில்லர் சாம்ராஜ்யத்தில் வசீகரிக்கும் பயணத்தை வழங்குகிறது, வி.பழனிவேல் தயாரிப்பில் உருவாகிறது. ரெட்ரோ கற்பனை பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இப்படம் பாராட்டத்தக்க தயாரிப்பு மதிப்புகள் மற்றும் நுணுக்கமான கலை இயக்கம், இன்றியமையாத கூறுகளைக் கொண்டுள்ளது. அதன் வகையின் ஒரு கதை.

அதன் ஆடம்பரம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அது ஒரு அரச சாம்ராஜ்யத்தின் கம்பீரமான பின்னணியில் வெளிவரும் கொலைகளின் கதையை திறம்பட அமைக்கிறது. படம் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தக்கவைக்க நிர்வகிக்கிறது, பெரும்பாலும் அதன் சிக்கலான வடிவமைக்கப்பட்ட செட் மற்றும் வளிமண்டல தொனிக்கு காரணம். இருப்பினும், பிற்பாதியில் சதி விரிவடையும் போது, ​​கதை அதன் பிடியை இழக்கிறது, அதன் நம்பிக்கைக்குரிய தொடக்கத்தை பொய்யாக்கும் ஒரு ஏமாற்றமளிக்கும் க்ளைமாக்ஸில் முடிவடைகிறது. ஜீவன் போலீஸ் அதிகாரியாக ஒரு பாராட்டத்தக்க நடிப்பை வழங்குகிறார், ஆனால் அவரது மகனாக சித்தரிக்கப்படுவதில் குறைவு.

ஒரு சிறிய பாத்திரத்தில் மல்லிகா ஷெராவத்தின் பங்களிப்பு திருப்திகரமாக உள்ளது, அதே சமயம் ரித்திகா சென் அவரது நடிப்பால் பிரகாசிக்கிறார். ஒளிப்பதிவாளர் இனியன் ஜே ஹரிஷ் கதையின் சாரத்தை நேர்த்தியுடன் படம்பிடித்தார், அம்ரிஷின் தைரியமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் பின்னணி இசையால் நிரப்பப்பட்டது. சுரேஷ் உர்ஸின் எடிட்டிங் ஒரு மிருதுவான வேகத்தை பராமரிக்கிறது, ஒட்டுமொத்த பார்வை அனுபவத்தை மேம்படுத்துகிறது.

வசனங்கள் நன்றாக எதிரொலிக்கின்றன, இருப்பினும் இயக்கத்தில் படத்தின் திறனை முழுமையாக உணரத் தேவையான நேர்த்தி இல்லை. சுருக்கமாக, "பாம்பாட்டம்" அதன் ஆரம்ப வாக்குறுதி மற்றும் அழுத்தமான கூறுகள் இருந்தபோதிலும், அதன் கதை இழைகளை தடையின்றி அவிழ்க்க போராடுகிறது. அதன் காட்சி மற்றும் தொனி அழகியல் மூலம் பார்வையாளர்களைக் கவருவதில் வெற்றி பெற்றாலும்

 நடிகர், நடிகைகள் :

ஜீவன்,மல்லிகா ஷெராவத்,ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா, சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - வடிவுடையான் 

ஒளிப்பதிவு – இனியன் J ஹாரீஸ், இசை – அம்ரிஷ், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், கலை  - C.E.சண்முகம், ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன், நடனம் – அசோக்ராஜா,மக்கள் தொடர்பு – மணவை புவன், 

இணை தயாரிப்பு  - பண்ணை A.இளங்கோவன், தயாரிப்பு  - V.பழனிவேல்.

Thursday, February 22, 2024

Ninaivellam Neeyada - திரைவிமர்சனம்

இளம் பிரஜன் பள்ளியில் புதிதாக சேர்ந்த யுவலட்சுமியை காதலிக்கிறார்.


பள்ளி முடியும் தருவாயில் அவளுக்கு ஒரு காதல் கடிதம் கொடுக்கிறான்.


ஆனால், யுவலட்சுமி தனது தந்தையின் உடல்நிலை காரணமாக அவரைப் பார்க்க வெளியூர் செல்கிறார்.


இதற்கிடையில், பிரஜனின் குடும்பத்தினர் அவரை அவரது மாமாவின் மகளைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார்கள்.


தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லை, எப்போதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.


பிரஜன் தனது பழைய காதலால் குடிகாரனாக மாறுகிறான். இதைப் பார்த்த அவரது மனைவி மனமுடைந்து கோபமடைந்தார்.


இந்நிலையில் வெளிநாடு சென்ற யுவலட்சுமி இந்தியா திரும்புகிறார்.


யுவலட்சுமி திருமணமாகாததையும் காதலிப்பதையும் கண்டு பிரஜன் மனம் உடைந்துள்ளார்.


ஆனால் அங்கு எதிர்பாராத திருப்பம் வருகிறது. அது என்ன, அடுத்து என்ன நடக்கிறது என்பது கதையின் மீதியை உருவாக்குகிறது.


ஆதிராஜன் இயக்கியிருக்கும் இப்படம் ஒரு காதல் கதை.


இயக்குனர் படத்தை அரங்கேற்றிய விதம் நன்றாக உள்ளது.


பள்ளிக்கூடத்தில் நடக்கும் காதல் காட்சிகள் நன்றாக இருக்கிறது, அதன் பிறகு படம் முன்னேறும் விதமும் சுவாரஸ்யம்.


பிரஜன் இதுவரை தனது சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார்.


அவர் காதல் பகுதிகளில் மிகவும் நன்றாக இருக்கிறார் மற்றும் அவரது திருமணத்தில் துன்பப்படும்போது இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார்.


யுவலட்சுமியின் நடிப்பு படத்தின் மிகப்பெரிய பலம்.


தன் கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து அதை நேர்த்தியாக எடுத்துச் சென்றிருக்கிறார்.


ரெடின் கிங்ஸ்லி, ரோஹித், மனோபாலா, மதுமிதா மற்றும் ஆர் வி உதயகுமார் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் அனைவரும் அவர்களிடமிருந்து எதிர்பார்த்ததை வழங்கியுள்ளனர்.


இளையராஜாவின் பாடல்கள் மற்றும் BGM ஆகியவை தென்றல் மற்றும் படத்தின் கருப்பொருளுக்கு மிகவும் பொருத்தமானவை.


படத்தின் மற்ற தொழில்நுட்ப அம்சங்களும் நன்றாக உள்ளன.

 

BIRTHMARK - திரைவிமர்சனம்

டேனியல் மற்றும் ஜெனிபர் தம்பதியினர் தங்கள் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள்.

இருப்பினும், பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் செல்வதற்குப் பதிலாக, தம்பதியர் மருத்துவச்சி முறை பின்பற்றப்படும் கிராமத்திற்குச் செல்லத் தேர்வு செய்கிறார்கள்.

தம்பதிகள் ஏன் மருத்துவச்சி முறையைத் தேர்ந்தெடுத்தனர்.

கிராமத்தில் என்ன நடக்கிறது? பிரசவம் வெற்றிகரமாக நடந்ததா என்பது படத்தின் மையக் கதை.

அவர் நடைமுறைகளை நிறைவேற்றிய விதம் படத்தின் மிகப்பெரிய பலம்.

ஷபீர் கல்லாரக்கல் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

அவர் தனது கதாபாத்திரம் கடந்து செல்லும் பல்வேறு உணர்ச்சிகளை எளிதாக வெளிப்படுத்துகிறார்.

ஷபீர் கதாபாத்திரத்தில் வலுவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மிர்னா தனக்கென ரகசியம் கொண்ட கர்ப்பிணிப் பெண்களின் பாத்திரத்தில் ஜொலிக்கிறார்.

பொற்கொடி செந்தில், இந்திரஜித், தீப்தி மற்றும் பி.ஆர்.வரலக்ஷ்மி ஆகியோர் பாராட்டத்தக்க துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

அவர் ஒரு சிக்கலான பாத்திரத்தை மிகவும் கச்சிதமாக சுமந்துள்ளார்.

மிர்னா கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து பார்வையாளர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கிறாள்.

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை நிகழ்ச்சிகளுடன் நன்றாக அமர்ந்திருக்கிறது.

இனியவன் பாண்டியன் தனது எடிட்டிங் மூலம் எளிமையாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்கிறார். வசனங்கள் நன்றாக உள்ளன, உதய் தங்கவேலின் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. 

Ranam Aram Thavarel - திரைவிமர்சனம்

சென்னையின் பல்வேறு இடங்களில் துண்டாக்கப்பட்ட உடல் பாகங்கள் தனித்தனியாக எரிந்த நிலையில் காணப்படுகின்றன. வைபவ், க்ரைம் ஸ்டோரி ரைட்டர் மற்றும் போலீஸ் ஸ்டேஷனில் கிரிமினல்களின் ஸ்கெட்சர், விசாரணைக்கு உதவ வருகிறார்.

அவரது முயற்சியில் கிடைத்த உடல் உறுப்புகள் வெவ்வேறு நபர்களுக்கு சொந்தமானது என்று மாறிவிடும். இதற்கிடையில், வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டரும் தலைமறைவானார்.

இது தன்யா ஹோப்பிற்கு வழக்கைக் கொண்டுவருகிறது. இருவரும் இணைந்து இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை நெருங்கும் போது, ​​பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் காத்திருக்கின்றன. இறுதியாக அவர்களால் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடிந்ததா? இந்தக் கொலைகளுக்கெல்லாம் காரணம் என்ன என்பதுதான் கதையின் கரு.

ஷெரீஃப் இயக்கிய, திரைப்படத்தின் முதல் படம் சில நேர்த்தியான சஸ்பென்ஸுடன் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

முதல் பாதியுடன் ஒப்பிடும் போது இரண்டாம் பாதி சற்று மெதுவாக இருந்தாலும், கடைசி வரை பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தக்கவைத்திருக்கிறார் இயக்குனர்.

இது அவரது 25 வது படம் என்பதால், வைபவ் மாறுபாடுகளைக் காட்ட முயற்சித்துள்ளார், மேலும் இது கதாபாத்திரத்திற்கு நன்றாக வேலை செய்தது. விசாரணைக் காட்சிகளில் அவர் ஈடுபடும் விதம் மிகவும் சுவாரசியமானது.

தான்யா ஹோப், கண்டிப்பான போலீஸ்காரராக கடுப்பானவர். நந்திதா ஒரு சுருக்கமான பாத்திரத்தில் இருக்கிறார் மற்றும் அவர் பெறும் திரைவெளியில் ஒரு அடையாளத்தை விட்டுவிட்டார்.

அரோல் கொரெல்லியின் இசை படத்தின் வேகத்தை கூட்டுகிறது.

மணிமொழியன் ராமதுரையின் ஒளிப்பதிவு படத்தின் வகைக்கு ஏற்றது. மீதமுள்ள தொழில்நுட்ப அம்சங்கள் நன்றாக உள்ளன.

 

BYRI - திரைவிமர்சனம்

நாகர்கோவிலில் புறா பந்தயம் பல தலைமுறைகளாக நடத்தப்பட்டு வரும் கதை.

புறா பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பது சையத் மஜீத்தின் கனவு. வினு லாரன்ஸ் வட்டாரத்தில் ஒரு பெரிய ஷாட் மற்றும் அவர் புறா பந்தயத்திலும் ஈடுபட்டுள்ளார்.

ரமேஷ் நடத்தும் புறா சங்கத்தில் சேர வேண்டும் என்பது இளைஞர்களின் கனவு.

புறா ந்தயத்தில் வினு லாரன்ஸின் ஊழல் வழிகளை சையத் அம்பலப்படுத்தும்போது சிக்கல்கள் எழுகின்றன.

இது ஹீரோவின் வாழ்க்கையில் சிக்கல்களை உருவாக்குகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதையின் கரு.

இயக்குனர் ஜான் கிளாடி, சஸ்பென்ஸையும் நாடகத்தையும் தடையின்றி ஒன்றாக இணைத்து கதைக்களத்தை திறமையாக கையாண்டதற்காக பாராட்டுக்கு உரியவர்.

ஜான் கிளாடி, புறா பந்தயத்தின் பின்னணியில் உள்ள அரசியலையும் அது மக்களை உளவியல் ரீதியாக எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் சுவாரஸ்யமாக சித்தரித்துள்ளார்.

சையத் மஜீத் தனது பாத்திரத்தில் பிரகாசிக்கிறார், பார்வையாளர்களைக் கவரும் ஒரு அழுத்தமான நடிப்பை வழங்குகிறார்.

கோபத்தை வெளிப்படுத்தும் அதே சமயம் நண்பர்களிடம் அன்பாக நடந்து கொள்ளும் விதம் சுவாரசியமானது.

மேகனா எல்லன், விஜி சேகர் மற்றும் ஜான் கிளாடி உள்ளிட்ட குழும நடிகர்களும் மாறுபட்ட கதாபாத்திரங்களை சித்தரிப்பதன் மூலம் ஈர்க்கிறார்கள்.


 

GLASSMATES - திரைவிமர்சனம்

அங்கயற்கண்ணன் குடிகாரன், குடிப்பழக்கத்தால் பிரச்சனையில் சிக்குகிறான்.


அவர் தனது மாமா குட்டிப்புலி ‘சரவணன் சக்தி’ உடன் இடைவிடாது குடிப்பார். அவர் மனைவி மீதும் சந்தேகம் கொள்வதால் திருமண வாழ்விலும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.


இதெல்லாம் எப்படி அவனது வாழ்க்கையை பாதிக்கிறது, அங்கயற்கண்ணன் குடிப்பழக்கத்தை முறியடிக்க முடிந்ததா என்பது கதையின் மீதியை உருவாக்குகிறது.


குட்டிப்புலி சரவணன் சக்தி எழுதி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தின் மையக் கதை ஒரு நபரையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் பாதிக்கும் குடிப்பழக்கத்தை மையமாகக் கொண்டது.


திரைக்கதை நன்றாக உள்ளது, கிளைமாக்ஸ் முடிவடையும் விதமும் பாராட்டத்தக்கது.


அங்கயற்கண்ணன் குடிகாரன் பாத்திரத்தை நம்பும்படியாக சுமந்திருக்கிறார். அவர் உண்மையில் குடிபோதையில் இருப்பதாக தெரிகிறது.


குட்டிப்புலி சரவணன் சக்தியும் தனது பாத்திரத்தை சிறப்பாகச் செய்துள்ளார் மற்றும் பாத்திரத்தில் தேவையான தாக்கத்தை உருவாக்கியுள்ளார்.


பிரானா தன்னிடம் இருந்து எதிர்பார்த்ததை அன்பான மனைவி வேடத்தில் வழங்கியுள்ளார்.


மயில்சாமி, சாம்ஸ் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களை எளிமையாக செய்திருக்கிறார்கள்.


டி எம் கார்த்திக் மற்றும் அபி நக்ஷத்ரா அந்தந்த கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.


அருண்குமார் செல்வராஜின் ஒளிப்பதிவு பிருத்வியின் இசை நன்றாக உள்ளது.


மீதமுள்ள தொழில்நுட்ப அம்சங்கள் சராசரி.

ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!


 ’ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!


வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச் 1 அன்று வெளியாகிறது. இதில் ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். கிருஷ்ணா, யோகிபாபு, டிடி, மன்சூர் அலிகான், விசித்ரா என்று பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 


படத்தின் நாயகன் வருண் பேசியதாவது, "இந்தப் படத்தில் எனக்கு சிறப்பான அனுபவம் கிடைத்தது. இதன் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். என்னை சிறந்த நடிகராக மாற்றிய கெளதம் சாருக்கு நன்றி. அவரது ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் கேட்டது ஒரு ஜாலியான லவ் படம். ஆனால், எனக்கு அவர் கொடுத்தது ஆக்‌ஷன் படம். 'மாவீரன்', 'ஜவான்' படங்களில் பணிபுரிந்த யானிக் பென் இதில் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார். இது எனக்குப் பெருமையான விஷயம். சூப்பரான இசை கொடுத்த கார்த்திக் ப்ரோ, என்னை அழகாகக் காட்டிய கதிர் சார், எடிட்டர் ஆண்டனி அண்ணா, போஸ்டர் டிசைன் செய்த  கபிலன்  என அனைவருக்கும் நன்றி. படம் ஒரு சீரியஸான மோடில்தான் இருக்கும். டிடி, கிருஷ்ணா என ஜாலியான நபர்களுடன் சீரியஸாக நடித்திருக்கிறேன். ராக்கே, கிட்டி சார், மன்சூர் அலிகான், விசித்ரா மேம் எல்லோருக்கும் நன்றி. வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி சாருக்கும் கெளதம் சாருக்கும் நன்றி. இந்தப் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க ஆவலாக உள்ளேன்" என்றார்.


கெளதம் மேனன் பேசியதாவது, “நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே செய்வதற்கு சுதந்திரம் கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி சாருக்கு நன்றி. வருண் குழந்தைப் போலதான். 10,15 படங்களில் நடித்துள்ளதால் சொல்கிறேன். கேமரா முன்னால் நின்று, 100 பேர் முன்னால் நடிப்பது எளிதான விஷயம் கிடையாது. அதை எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் நடித்துக் கொடுத்தார் வருண். படத்தில் பாதி இடத்தில் செருப்பு, ஷூ இல்லாமல் நடித்தார். ஹீரோ கிருஷ்ணாவும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டிடி, கதிர், கார்த்திக் என நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக செய்துள்ளனர். உங்களோடு நானும் படம் பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்” என்றார்.


தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், “'சிங்கப்பூர் சலூன்' வெற்றியைத் தொடர்ந்து இப்போது இந்தப் படத்திற்காக உங்களைச் சந்திக்கிறேன். மார்ச்1 அன்று 'ஜோஷ்வா இமை போல காக்க' படம் வெளியாகிறது. இதுவும் எங்களுக்கு லாபம் தரும் என்று நம்புகிறேன். இந்தப் படம் ஒரு பரிசோதனை முயற்சி என்று கெளதம் சார் சொன்னார். நான் உடனே சம்மதம் சொன்னேன். எந்தவொரு படத்தின் கதை, படப்பிடிப்பில் நான் பொதுவாக தலையிட மாட்டேன். ஆனால், எதேச்சையாக இதன் படப்பிடிப்பு பார்க்க நேர்ந்தது. இதுவரை  தயாரித்த 25 படங்களில் நான் பார்த்த முதல் படப்பிடிப்பு இந்தப் படம்தான். அதுவும் போய் 10 நிமிடங்கள் பொதுவாக பேசிவிட்டு வந்தேன்.  என்னுடைய சகோதரி மகன் தான் வருண். நான் தயாரிக்கும் படங்களில் எல்லாம் கேமியோ ரோல் நடித்துக் கொண்டிருந்தார். எனக்கு கெளதமின் லவ் படங்கள் பிடிக்கும். அவரிடம் வருணை அறிமுகப்படுத்தினேன். வருண் சாக்லேட் பாய் போல உள்ளான் எனக் கூறி அவரை வைத்து சூப்பர் லவ் ஸ்டோரி செய்யலாம் என்று கெளதம் உற்சாகமாக சொன்னார். பிறகு இது ஆக்‌ஷன் படமாக மாறியது. வருண் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி கிடையாது. ஒவ்வொரு வேலைக்கும் தனது கடின உழைப்பைக் கொடுப்பார். இளைஞர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். படத்தில் 10 சண்டைக் காட்சிகள் உள்ளது. படம் முழுக்க ஆக்‌ஷன் தான். ஹாலிவுட் படம் போல ஆக்‌ஷன் காட்சிகளை எடுத்திருக்குறார்கள். அதற்கு கதிரின் ஒளிப்பதிவும், கார்த்திக்கின் இசையும் பெரும் பலம். மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக உழைத்துள்ளனர். இதில் நடித்துள்ள கிருஷ்ணாவுக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.

Empowering Underprivileged Communities through Skill Development Magnathon 2023 Marathon Flagged off by Deputy Mayor Maheshkumar, Abirami Ramanathan, Vishal Bhootra

Empowering Underprivileged Communities through Skill Development Magnathon 2023 Marathon Flagged off by Deputy Mayor Maheshkumar, Abirami Ramanathan, Vishal Bhootra

 “A RUN to ignite a life”- RCC Magnum Foundation 

RCC Magnum Foundation hosts Successful Marathon: Empowering Underprivileged Communities through Skill Development on 18th Feb 2024 in Chennai.

The RCC Magnum Foundation, a renowned nonprofit organization committed to social empowerment, hosted a triumphant Magnathon aimed at skill development for underprivileged men and women. 

The event, held on 18th Feb at Olcott School, Besant Nagar brought together participants, volunteers, and sponsors in a collective effort to bridge the talent gap and uplift all communities.

The RCC Magnum led by President Vishal Bhootra, Secretary- Vikas Roonwal and Maganathon Director- Ashish Jain (Rainbow Builders)organized the event that served as a platform to advocate for the noble cause of providing vocational training to those facing socio-economic challenges.

Title sponsor for the event was Lifestyle Housing, powered by AVR Swarna Mahal, in association with Abirami Mega Mall, co-sponsored by Bespoke concept. Shri Sampathrajji Singhvi also was a pillar of support.

For the run,Magnathon 2023 Marathon Flagged off by Deputy Mayor Maheshkumar &  Sri Abirami Ramanathan present as guests of honour. 

About 2500 Participants from diverse backgrounds engaged to create an energetic atmosphere while raising awareness for the foundation's mission throughout the city. The categories were - 1.5 km for parent and child, 5, 10 and 21 kms. 

The foundation has already been training more than 250 aspiring students and assisted them to build a bright future since the year 2018.

Mr Sarvesh Shashi founder of Diva Yoga led the pre and post run session for all the runners. Hydration stations and first aid facilities were made available at a regular intervals to provide safety and comfort for the participants and gave a seamless experience to each participant.

All those who are willing to support this initiative can visit Magnathon.com to give your support in cash or kind can contact: rccmagnum@gmail.com

Renowned Pastry Chef, Pooja Dhingra to Host an Exclusive Masterclass at Phoenix Marketcity Chennai

Renowned Pastry Chef, Pooja Dhingra to Host an Exclusive Masterclass at Phoenix Marketcity Chennai

Chennai, February 21, 2024 - Phoenix Marketcity one of the premium malls of Chennai is thrilled to host an extraordinary culinary masterclass featuring the celebrated pastry chef and businesswoman, Pooja Dhingra. The intense 2-hour master class on baking, smart tips on preparing amazing pastries and techniques is all set to happen this Saturday on February 24th at 4:00pm – 6:00pm in the central atrium of Phoenix Marketcity, this session is sure to be an inspiring journey into the world of desserts. During the masterclass, the participants will have the exclusive opportunity to learn from the master herself as she shares her expertise, tips, and tricks for creating stunning desserts. From perfecting macarons to crafting the best cakes and cookies such as Hazelnut cake and Golden Cookies, attendees will gain valuable insights into the art of pastry making directly from one of the industry's leading experts.

With her innovative approach to baking and a knack for creating irresistible confections, Pooja Dhingra has captured the hearts and taste buds of food enthusiasts worldwide with her expertise and passion for desserts and pastries. She is the force behind the acclaimed baking chain known for the world class macarons and the supremely delightful pastries Le15 Patisserie, a brand synonymous with elegance and indulgence.

This event is a must-attend for pastry enthusiasts, aspiring bakers, and anyone with a sweet tooth looking to elevate their passion and interest in perfecting the art of making delicious pastries and cakes. Don't miss this unique opportunity to learn from the best in the business and take your pastry skills to new heights. Join us for an unforgettable culinary experience with Pastry Chef Poooja Dhingra at Phoenix Marketcity Chennai!

Interested participants can register in the link : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeafKKe5HoPAQtphDkYfQ3aytgbe8LfRUEwIgIrvBJNlc_FcA/viewform -The participants seating shall be on a first come first serve basis.

 

About Phoenix Marketcity: A premier destination for luxury lifestyle, it provides guests with a variety of opulent options. Phoenix continues to be "The" destination for the most affluent and sophisticated residents of the city as well as expats thanks to its truly international appearance and feel, elegantly decorated interiors, and the best of food, fashion, and entertainment from across the world. The mall provides Chennai with the most extensive and appealing lifestyle shopping experience. The stores represent a comprehensive mix of international, national, and regional luxury brands. Phoenix Marketcity in Chennai is more than simply a mall; it's a confluence of fascinating cultures, lovely clothes, and high-end couture. A city within a city, in an urban setting with coexisting shopping, entertainment, and leisure options.  

 

 

Wednesday, February 21, 2024

KRG Studios EMBARKS ON A PIONEERING COLLABORATION WITH VISIONARY FILMMAKER ANJALI MENON*

*KRG Studios EMBARKS ON A PIONEERING COLLABORATION WITH VISIONARY FILMMAKER ANJALI MENON*

KRG Studios, a young and dynamic film production and distribution company rooted in the vibrant landscape of Kannada cinema, proudly announces its first collaboration with the trendsetting filmmaker, Anjali Menon. Known for her iconic works, like the highly acclaimed Bangalore Days, Manjadikuru, Ustad Hotel, Koode and more recently Wonder Women, Anjali Menon brings her unique storytelling prowess to now a special Tamil feature film in partnership with KRG. 


As KRG expands its footprint from film distribution to comprehensive film production, this collaboration with Anjali Menon marks a pivotal moment for the company. With a focus on bridging gaps in storytelling within the Kannada industry and beyond, KRG is excited  to align its storytelling DNA with the distinct narrative style of Anjali Menon. 


KRG established its studio distribution business in 2017 and having distributed over 100 films in Karnataka till date. They ventured into full-fledged production, from conceptualisation to creation of Feature films in 2020.  KRG gained early acclaim with "Rathnan Prapancha," directed by Rohit Padaki and starring Dhananjay. The film, released directly on Prime Video India, garnered tremendous praise. Following this success, KRG continued its journey with the release of "Gurudev Hoysala" in March 2023. 


The core ethos of KRG's collaboration with Anjali Menon and future filmmakers revolves around crafting content-rich stories across genres. With a keen eye on the four Southern languages, KRG aims to encourage emerging talents while collaborating with seasoned storytellers. The central focus remains unwaveringly on the art of storytelling, cementing KRG's commitment to elevating the narrative experience in cinema. 


Speaking of this collaboration, director Anjali Menon said,  "I am looking forward to the collaboration with KRG Studios as we share the commitment to create engaging movies built from our cultures with world class production values.  Audiences are connecting beyond language boundaries to the diverse story landscapes of India, and we are keen to take them on cinematic journeys that are memorable, entertaining and thought provoking - all at the same time."   


 Adding to her thoughts, producer and co-founder of KRG, Karthik Gowda said, “Our collaboration with Anjali Menon signifies a new chapter for KRG, where the essence of storytelling takes precedence. We believe in the magic of cinema, and this partnership exemplifies our dedication to crafting tales that resonate across diverse audiences and languages. Our journey in this direction began when my dear friend and seasoned entertainment executive Vijay Subramaniam and I were discussing the power of narrative/concept based stories and the influence they have on customers when executed well. I am grateful that he too saw our potential and decided to collaborate with us as a mentor and co-producer. Collectively and with the help of like-minded folks like Chaitanya Hegde of Tulsea, we are able to build such partnerships which we hope will be special and above all to the customers we serve."  


KRG anticipates that this collaboration will not only redefine cinematic landscapes but also contribute to the evolution of storytelling in the local and national spheres. As KRG continues to shape the future of South Indian cinema, the partnership with Anjali Menon is a testament to their dedication to quality content and innovative narratives.


Anjali Menon is represented by Tulsea. Tulsea is a leading strategic media and content management company that represents leading writers, directors, actors, technicians and producers in India and internationally.

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"

 கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"   கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமைவரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பா...