Monday, May 26, 2025

சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நாயகனாக நடிக்கும் கலகலப்பான காதல் கதை 'தமிழ் பையன் இந்தி பொண்ணு


 சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நாயகனாக நடிக்கும் கலகலப்பான காதல் கதை 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'

மான்சி, ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, சோனியா போஸ், உதயதீப் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்

'காதல் மட்டும் வேணா' திரைப்படத்தை இயக்கி நடித்த சமீர் அலி கான் தற்போது 'தமிழ் பையன் இந்தி பொண்ணு' எனும் படத்தை தயாரித்து இயக்குவதோடு நாயகனாகவும் நடிக்கிறார். 

சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் உருவாகும் இத்திரைப்படம் ஒரு  கலகலப்பான காதல் கதை ஆகும். அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக மிகவும் ஸ்டைலான முறையில் இப்படத்தை வடிவமைத்திருப்பதாக சமீர் அலி கான் தெரிவித்தார். 

மான்சி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, அலி, சோனியா போஸ், மாலா பார்வதி, தீபிகா அமின், உதயதீப், கும்கி அஸ்வின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

"திருச்சூரில் பிறந்து கோயம்புத்தூரில் வளர்ந்த நான் விஸ்காம் பட்டம் பெற்ற பின்பு 'காதல் மட்டும் வேணா' திரைப்படத்தை இயக்கி நடித்தேன். தற்போது 'தமிழ் பையன் இந்தி பொண்ணு' படத்தை தயாரித்து இயக்குவதோடு முதன்மை வேடத்திலும் நடிக்கிறேன். இரண்டு வெவ்வேறு பின்னணிகளை கொண்ட நாயகனும் நாயகியும் காதலில் விழுகின்றனர். இவர்கள் காதலுக்கு எத்தகைய இடையூறுகள் எழுகின்றன அத்தனை தடைகளையும் வெற்றிகரமாக கடந்து எவ்வாறு இணைகின்றனர் என்பதை மிகவும் கலகலப்பான முறையில் கூறியிருக்கிறோம்," என்று சமீர் அலி கான் தெரிவித்தார். 

'தமிழ் பையன் இந்தி பொண்ணு' படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது. போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட சமீர் அலி கான் திட்டமிட்டுள்ளார். 


Sunday, May 25, 2025


நான் இயக்குநர் ராம்.
எங்களுடைய “பறந்து போ” திரைப்படம் வரும் ஜூலை 4-ஆம் தேதி வெளிவர இருக்கிறது. அதனுடைய முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. அதற்கு ‘Sunflower – not a single not a teaser’ என்று பெயரிட்டு இருக்கிறோம்.



பாடலோடு சில காட்சித் துண்டுகளும் இடம் பெறுவதால் இவ்வாறு பெயரிட்டு இருக்கிறோம்.
எல்லோரையும் போல் எனக்கும் சூரியகாந்தியை மிகவும் பிடிக்கும். ஒரு நல்ல சூரியோதயத்தில் சூரியகாந்தி தோட்டத்தில் படம் பிடிக்கிற ஒரு அரும் வாய்ப்பு என்னுடைய முதல் படத்தில் எனக்குக் கிடைத்தது. கற்றது தமிழின் இன்னும் ஓர் இரவு பாடலை ஆந்திர மாநிலத்து கடப்பாவின் சூரியகாந்தி தோட்டத்தில் படம் பிடித்தோம். தங்கமீன்களின், ஆனந்த யாழைப் பாடலை சூரியகாந்தி தோட்டத்தில் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்காததால் கேரளாவில் உள்ள அச்சன்கோவிலின் பனிபெய்யும் மலைகள் மீது அப்பாடலுக்காக ஏறினோம். பேரன்பு திரைப்படத்திற்கும் சூரியகாந்தி தோட்டத்திற்கு நடுவில் ஒரு வீடு வேண்டும் என்று தேடினோம்.

அப்போதும் சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்கவில்லை. எனவே அந்த வீட்டை கொடைக்கானல் மன்னவனூர் ஏரிக்கரைக்கு மாற்றினோம்.
அதற்குப் பின் “பறந்து போ”வில் தான் சூரியகாந்தி கதைக்குள் வந்தது. சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்கவில்லை என்றாலும், கர்நாடகத்தில் உள்ள மைசூரில் ஒரு சிறு தோட்டமும், அன்னூரில் ஒரு ஒற்றை சூரியகாந்தி மலரும் கிடைக்கப் பெற்றோம். சூரியகாந்தியை படம்பிடிக்கும் வேட்கை ஒவ்வொரு படத்திலும் கூடிக்கொண்டே இருக்கிறது. ஏனெனில் அது சூர்யகாந்தி.  
சூரியகாந்தியை ஒற்றையாகப் பார்த்தாலும் சரி, கூட்டமாகப் பார்த்தாலும் சரி. அதை குறித்து நினைத்தாலும் சரி அது தரும் உற்சாகமும் பரவசமும் ஒன்றே. அதன் நிறத்தில் ஒளிரும் கட்டுக்கடங்காத இளம்பிரியத்தை நாம் நம் காலத்தில் பால்யகாலப் பிரியம் என்றும் puppy love என்றும் வெவ்வேறு பெயர்களில் அழைத்திருந்தோம். இன்று நம்முடைய மகள்களும் மகன்களும் அதே பிரியத்தை crush என்று அழைக்கிறார்கள்.

சூரியகாந்தி, crush-ற்கான மலர், கட்டுக்கடங்காத இளம் பிரியத்தின் மலர் என்று எனக்குத் தோன்றியது.
ஒரு அப்பாவின் பால்யமும் மகனின் பால்யமும் ஒன்று சேருகிற பாடல்தான் Sunflower. மதன் கார்க்கியின் வரிகளில், விஜய் யேசுதாஸ் பாட, சந்தோஷ் தயாநிதி இசை அமைத்திருக்கிறார். ஜூலை 4 “பறந்து போ” திரையரங்குகளில் வெளியாகும் சமயத்தில் ஊரெல்லாம் சூரியகாந்தி பூத்திருக்கும்.

சூரியகாந்தி பூக்கும் காலம் அது. சூரியகாந்தி பூக்களோடு “பறந்து போ” திரைப்படம் பார்க்க வாருங்கள். சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜு வர்க்கீஸ், விஜய் யேசுதாஸ், மற்றும் சில குட்டிபிசாசுகளும் உங்களுக்காக காத்துக்கொண்டிருப்பார்கள்.

இளம்பிரியமும் உற்சாகமும் அமைதியும் உங்களை சூழட்டுமாக.

https://www.youtube.com/watch?v=5d15SucDYw4

பிரியங்களுடன்,
ராம்.
24 மே 2025

தொடர்பு:

Media Contact: D'one
Point of contact : Abdul.A.Nassar
Email ID: d.onechennai@gmail.com
Ph. No:  99418 87877


 

Vembu - திரைவிமர்சனம்


 வேம்பு என்பது ஒரு இதயப்பூர்வமான சமூக நாடகம், இது பண்டைய தமிழ் தற்காப்புக் கலையான சிலம்பத்தின் மூலம் பெண்களின் அதிகாரமளிப்பை மையமாகக் கொண்டுள்ளது. இதன் மையத்தில், முற்போக்கான தந்தையால் தைரியமான, மீள்தன்மை மற்றும் சுதந்திரமானவளாக வளர்க்கப்பட்ட வேம்பு என்ற துணிச்சலான இளம் பெண்ணின் எழுச்சியூட்டும் பயணத்தைச் சொல்கிறது. சக்திவேலுடன் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை எதிர்கொள்ளும்போது, ​​அவளுடைய உள் வலிமை சோதிக்கப்படுகிறது, மேலும் கதை உணர்ச்சி ஆழம் மற்றும் கலாச்சார செழுமையுடன் வெளிப்படுகிறது.

வேம்புவாக ஷீலா ராஜ்குமார் ஒரு சக்திவாய்ந்த நடிப்பை வழங்குகிறார், கதாபாத்திரத்தின் உறுதியையும், பாதிப்பையும் நம்பகத்தன்மையுடன் சித்தரிக்கிறார். அவரது சித்தரிப்பு அடித்தளமாகவும், கவர்ச்சிகரமானதாகவும் உள்ளது. சக்திவேலாக ஹரி, திரைக்கு அரவணைப்பையும் நுணுக்கத்தையும் கொண்டு வருகிறார், குறிப்பாக படத்தின் உணர்ச்சிபூர்வமான இரண்டாம் பாதியில். முன்னணி கதாபாத்திரங்களுக்கு இடையிலான நுட்பமான வேதியியல் கதைக்கு அமைதியான வலிமையை சேர்க்கிறது.

ஒளிப்பதிவு தனித்து நிற்கிறது, கிராமப்புற தமிழ்நாட்டின் சாரத்தை அழகாகப் படம்பிடித்து, படத்தின் அடித்தள உணர்வை மேம்படுத்துகிறது. இசையும் பாடல்களும் அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றினாலும், படம் முடிந்த பிறகு அவை குறிப்பாக நீடிக்காது. சில திடீர் மாற்றங்களும் மெதுவான வேகமும் படத்தின் உணர்ச்சி தாளத்தைப் பாதிக்கின்றன, எனவே எடிட்டிங் இன்னும் மெருகூட்டப்பட்டிருக்கலாம்.

படத்தின் மிகவும் பாராட்டத்தக்க அம்சங்களில் ஒன்று, பாலின பாத்திரங்கள், தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் பாரம்பரிய எதிர்பார்ப்புகளைச் சுற்றி ஒரு உரையாடலைத் திறக்கும் முயற்சியாகும். சிலம்பம், எதிர்ப்பு மற்றும் அதிகாரமளிப்பின் அடையாளமாக இருந்தாலும், குறைவாகவே உணரப்படுகிறது, மேலும் கதை தாக்கத்தை உயர்த்த அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

"வேம்பு ஒரு இதயப்பூர்வமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் படம், அதன் நேர்மை மற்றும் நோக்கத்திற்காக தனித்து நிற்கிறது. சிறிய குறைபாடுகள் இல்லாமல் இல்லாவிட்டாலும், நேர்மையான கதைசொல்லல் மற்றும் கவர்ச்சிகரமான நடிப்புகள் மூலம் முக்கியமான சமூக கருப்பொருள்களை இது திறம்பட முன்னணிக்குக் கொண்டுவருகிறது. படத்தின் உணர்ச்சி ஆழமும் உண்மையான நோக்கமும் முழுவதும் பிரகாசித்து, புத்துணர்ச்சியூட்டும் மற்றும் சிந்தனைமிக்க கதையை வழங்குகிறது. வேம்பு அர்த்தத்துடன் எதிரொலிக்கிறது மற்றும் பார்வையாளர்களுக்கு நம்பிக்கை மற்றும் பிரதிபலிப்பின் உணர்வை ஏற்படுத்துகிறது. அதன் வலுவான செய்தி மற்றும் அதை வழங்கிய நேர்மைக்காக அங்கீகாரம் பெற வேண்டிய ஒரு பாராட்டத்தக்க முயற்சி இது."

பேட்மிண்டன் வீரர்களோடு ரசிகர்களை நேரடியாக இணைக்கும் FANLY

*பேட்மிண்டன் வீரர்களோடு ரசிகர்களை நேரடியாக இணைக்கும் FANLY எனும் செயலியை அதன் இணை நிறுவனர் சரவணன் கனகராஜூ, இந்திய பேட்மிண்டன் அணியின் தலைமை பயிற்சியாளர்  ஶ்ரீ. புல்லேலா கோபிசந்த், தி ஸ்மார்ட் பிரிட்ஜ் நிறுவன துணைத் தலைவர் ஶ்ரீதேவி சிரா, FANLY செயலியின் இணை நிறுவனர் ஶ்ரீனிவாசன் பாபு  ஆகியோர் தொடங்கி வைத்தனர்.*

ஒட்டுமொத்த இந்திய பேட்மிண்டன் சமூகத்தையும் ஒரே தளத்திற்கு கொண்டு வருவதற்கான சமூக ஈடுபாட்டு தளமாக FANLY அறிமுகப்படுத்தப் பட்டது.   பேட்மிண்டன் இந்தியா மூலம், நாடு முழுவதும் உள்ள பேட்மிண்டன் ரசிகர்களுக்கு ஒருங்கிணைந்த  மையத்தை உருவாக்க FANLY அடித்தளம் அமைக்கிறது.  தலைசிறந்த வீரர்கள், வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் மற்றும் ஆர்வமுள்ள ரசிகர்களை ஒரே புள்ளியில் ஒன்றிணைக்கிறது. ஆப்பிள் ஆப்ஸ்டோர் அல்லது கூகுள் பிளேஸ்டோரில் FANLY யை தரவிறக்கம் செய்து பேட்மிண்டன் விளையாட்டின் தரவுகளை முழுவதுமாக ஆராய ரசிகர்கள் வரவேற்கப்படுகின்றனர். 

நட்சத்திரங்கள் தங்கள் ரசிகர்களுடன் எவ்வாறு இணைகின்றனர் என்பதை மறுவரையறை செய்ய வடிவமைக்கப்பட்ட புரட்சிகர புதிய  தளமான FANLY உதவுகிறது.  ரசிகர்களின் உண்மையான மற்றும் பாதுகாப்பான சமூகங்களை உருவாக்குவதற்கான அம்சங்களோடு,  வீரர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அடுத்த தலைமுறை தீர்வை ஃபேன்லி வழங்குகிறது. அதே நேரத்தில் ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த வீரர்களோடு பிரத்யேக அணுகலையும் FANLY வழங்குகிறது.  குழப்பமான, போலி செய்திகள் மற்றும் தொலைதூர ரசிகர்களின் தொடர்புகளால் ஆதிக்கம் செலுத்தும் சமூக வலைதள உலகில், நேர்மறை, கட்டுப்பாடு மற்றும் உறுதி செய்யப்பட்ட ஒரு பாதுகாப்பான, செயற்கை நுண்ணறிவு AI-இயங்கும்  அமைப்பாக FANLY அடியெடுத்து வைக்கிறது. 

 நட்சத்திரங்கள் தங்களது பிரத்யேக மற்றும் தனித்துவமான  தகவல்களை பகிர்ந்து கொள்வார்கள்.   மற்றும் தனிப்பட்ட ரசிகர் நிகழ்வுகளை நடத்துவார்கள். ரசிகர்கள் ரசிகர் மன்றங்கள், தனிப்பட்ட குரல்கள் மற்றும் நேர்மறையான நடத்தைக்கான வெகுமதிகளைப் பெறுகிறார்கள். AI மூலம்.  சென்டிமீட்டர், ஃபேன்லியின் தனியுரிமை AI கருவி, தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைக் குறிக்கும் மற்றும் நேர்மறையை வெகுமதி அளிப்பதன் மூலம் ஒரு மரியாதைக்குரிய சமூகத்தை ஊக்குவிக்கிறது. 

பாரம்பரிய சமூக தளங்களுக்கு அப்பால் பிரபலங்களும் ரசிகர்களும் அர்த்தமுள்ள, பகிர்ந்து கொள்ளும் உறவுகளை உருவாக்கும் பாதுகாப்பான, தொகுக்கப்பட்ட இடமாக FANLY செயல்படும். இதன் வலுவான தொழில்நுட்ப முறை கிளவுட்-நேட்டிவை அளவிடக்கூடியது மற்றும் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டது.FANLY விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கின் எதிர்காலத்திற்காக கட்டப்பட்டுள்ளது.  உலகெங்கிலும் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்களுக்கான முன்னணி மற்றும் நேர்மறையான சமூக ஊடக தளமாக மாறுவதை  நோக்கமாகக் கொண்டுள்ளது FANLY. இதன் நோக்கம் தொழில்நுட்பம், நம்பிக்கை மற்றும் ரசிகர்களை ஒரு ஒருங்கிணைந்த அனுபவமாக இணைத்தல். 

"பேட்மிண்டன் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டுகளில் ஒன்று, இன்னும் பேட்மிண்டன் சமூகத்தை நேர்மறை மற்றும் உறுதியுடன் இணைக்கும் டிஜிட்டல் தளம் இல்லை எனவும், FANLY இன் பேட்மிண்டன் இந்தியா மூலம், விளையாட்டு மற்றும் அதன் நட்சத்திரங்களுக்கு முன்முறையாக ரசிகர்களுடன் அணுகலை வழங்குவதக்கவும் FANLY நிறுவனர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் வீரர்கள் தங்கள் தனிப்பட்ட ரசிகர் பட்டாளங்களை உருவாக்கி வளர்க்க அதிகாரம் அளிப்பதாகவும், ஒரு தேசிய அளவிலான வீரராக இருந்தாலும் சரி, பள்ளி விளையாட்டு வீரராக இருந்தாலும் சரி, அல்லது விளையாட்டை விரும்பும் ஒருவராக இருந்தாலும் சரி, FANLY பேட்மிண்டன் இந்தியா அவர்களின்  புதிய வீடு என்றும் அவர்கள் தெரிவித்தனர்.  விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு முழுவதும் ரசிகர்களின் ஈடுபாட்டில் புரட்சியை ஏற்படுத்துவதற்கான FANLY இன் பணியில் இந்த வெளியீடு ஒரு முக்கிய  மைல்கல் என்றும் அவர்கள் கூறினர்.

நடிகர் அருண் விஜய் வெளியிட்ட விக்ராந்த் நடிக்கும் 'வில்' பட டீஸர்*

*நடிகர் அருண் விஜய் வெளியிட்ட விக்ராந்த் நடிக்கும் 'வில்' பட டீஸர்*

*விக்ராந்த் - சோனியா அகர்வால் கூட்டணியில் உருவான ' வில் 'பட டீஸர் வெளியீடு* 

தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரங்களான விக்ராந்த்- சோனியா அகர்வால் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கும் 'வில் 'எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான அருண் விஜய் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 

இயக்குநர் எஸ். சிவராமன் இயக்கத்தின் உருவாகியுள்ள 'வில்' திரைப்படத்தில் விக்ராந்த், சோனியா அகர்வால், அலேக்யா, பதம் வேணு குமார், மோகன் ராமன் , 'லொள்ளு சபா' சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். டி. எஸ். பிரசன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நடிகை சோனியா அகர்வாலின் சகோதரரான சௌரப் அகர்வால் இசையமைத்திருக்கிறார். நீதிமன்ற பின்னணியில் நடைபெறும் இந்த திரைப்படத்தை ஃபுட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் கோத்தாரி மெட்ராஸ் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஒரு பாடல் ஆகியவை வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்.. இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

டீஸர் குறித்து இயக்குநர் பேசுகையில், ''
வில் படத்தின் டீஸரில் ஒரு கதாபாத்திரம் சனாதனம் வேண்டுமா? திராவிடம் வேண்டுமா? இந்த இரண்டும் வேண்டுமா? வேண்டாமா? என்பது தொடர்பாக விமர்சிக்கும் வகையில் உரையாடல் ஒன்று இடம் பிடித்திருக்கிறது. இதற்கு தணிக்கை குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் சர்ச்சையை ஏற்படுத்தும் அந்த இரண்டு சொற்களையும் நீக்க வேண்டும் என்றார்கள். இதற்கு உரிய விளக்கம் அளித்த பிறகு, மும்பையில் உள்ள தணிக்கை குழுவினர் ஆய்வு செய்து டீஸரில் இடம் பிடிப்பதற்கு அனுமதி அளித்தனர்.
‎மேலும் இந்தத் திரைப்படத்தில் தற்போதைய நீதிமன்றத்தின் நடைமுறைகளை யதார்த்தமாகவும், இயல்பை மீறாமலும் பதிவு செய்திருக்கிறோம். 
‎உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றி வருவதால்.. மக்களுக்கு நன்மை செய்வதில் நீதிமன்றத்தின் பங்களிப்பு குறித்த விவரங்களை முழுமையாக விவரித்திருக்கிறேன். 
‎நீதி மன்றத்தில் பரபரப்பாக நடைபெறும் வழக்கு குறித்த விவரங்களை விவாதமாகவும், விமர்சனமாகவும் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை சுதந்திரத்தின் அடிப்படையில் முன் வைத்திருக்கிறோம். 
‎சொத்து வைத்திருப்பவர்கள் உயில் எழுதும் போது 'வில்' என்ற நீதிமன்ற மற்றும் சட்டப்பூர்வமான விசயத்தை மேற்கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்தும் விரிவாக விளக்கமளித்திருக்கிறோம். 
‎சொத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கு சட்டத்திற்கு உட்பட்ட முறையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் தெளிவு படுத்தி இருக்கிறோம். 
‎ஒரு தலைமுறையினருக்கான சொத்து.. அடுத்த தலைமுறைக்கு எப்படி சட்டபூர்வமாக உரிமையாகிறது என்பது தொடர்பான சட்ட நுணுக்கங்களையும் இடம்பெறச் செய்திருக்கிறோம். 
‎ஒருவர் தன்னுடைய சொத்தை.. தன் விருப்பத்திற்குரிய ஒருவருடைய பெயருக்கு எழுதி வைக்கிறார் என்றால்... அது அவருக்கு சட்டபூர்வமாக எப்படி சென்று சேரும் என்பது குறித்த குழப்பத்தை நீக்கும் வகையில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. 
‎இதனை நேரடியாக விவரிக்காமல் .. ஒரு குடும்பத்திற்குள் நிகழும் உணர்வு பூர்வமான சம்பவங்கள் மூலம் கமர்சியல் அம்சங்கள் கலந்து அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறோம். 
‎இதில் நீதியரசர், சொத்து தொடர்பான சிக்கல்களுக்கு புலன்விசாரணை மேற்கொள்ளும் விசயம் ரசிகர்களுக்கு புதுவித திரை அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த டீஸர்- படத்தின் கதை அம்சத்தை முழுவதுமாக பிரதிபலிக்கிறது.'' என்றார். 

இப்படத்தின் டீசர் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இணையவாசிகளின் கவனத்தைக் கவர்ந்து பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.


Teaser Link : 
https://youtu.be/EyP3xI3JaW8

Thanks & Regars,
PRO - Velu

Friday, May 23, 2025

மாடலிங் துறையில் பிரபலமான தமிழ்வாணன் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கும் புரொடக்ஷன் நம்பர் -1 படத்தின் பூஜை.

மாடலிங் துறையில் பிரபலமான தமிழ்வாணன் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கும் புரொடக்ஷன் நம்பர் -1 படத்தின் பூஜை.

'போங்கு' பட இயக்குனர் தாஜ் இயக்கும்
கமர்ஷியல் படம், பூஜையுடன் துவங்கியது!!

 Tam’s Consultancy நிறுவனம் சார்பில், தமிழ்வாணன் தயாரித்து, நாயகனாக நடிக்க, போங்கு பட இயக்குநர் தாஜ் இயக்கத்தில், உண்மைச் சம்பவத்தின் அடிப்டையில் அசத்தலான புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது. 

உலகில் பணத்தை விட அதிகாரம் தான் பெரியது. இதைப் புரிந்து கொண்ட ஒருவன்,  வாழ்வில் தனக்கு கிடைக்கும் அதிகாரத்தை வைத்து என்ன செய்கிறான் என்பது தான் இந்தக்கதையின் மையம். 
அந்த இளைஞனுக்கு ஏற்படும் காதலில் வரும் பிரச்சனைகளையும், அவன் நண்பர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும்,  தன் அதிகாரத்தால் எப்படி சரி செய்கிறான் என்பது தான் இப்படத்தின் கதை. 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் குடும்பத்தினருடன் ரசிக்கும் காதல் காமெடி கலந்து ஒரு அட்டகாசமான கமர்சியல் படமாக இப்படம் உருவாகவுள்ளது. 

நட்டி நடிப்பில் 'போங்கு' படத்தை இயக்கிய  தாஜ்
இயக்கும் இரண்டாவது படம்.
இப்படத்தை, எழுதி, இயக்குகிறார்.  

நாயகனாக தமிழ்வாணன் நடிக்க 
இவருக்கு ஜோடியாக 
பிரபல நடிகை சாய் பிரியா நடிக்கிறார். படத்தில் மேலும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கவுள்ளனர். 

விரைவில் சென்னையில்  துவங்கி பரபரப்பாக நடக்கபோகும் இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 
படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 

படத்தின் தொழில்
 நுட்ப குழு விபரம்-

தமிழ்வாணன்(நாயகன்)
சாய் பிரியா(நாயகி)
எழுத்து, இயக்கம்,   - தாஜ்
இசை -  எம்.எஸ் ஜோன்ஸ் ரூபர்ட் 
ஒளிப்பதிவு -  விஜய் எஸ் குமரன் 
எடிட்டர் - லினு.எம் 
கலை இயக்கம் -  தாஜ் (சங்கர்) 
பாடலாசிரியர் - துரை ராஜ் & ராஜா முகமது 
நடனம் - ஆனந்த் குமார் & செல்வி 
ஆடை வடிவமைப்பாளர் - பிரியா புஷ்பநாதன் ஸ்டண்ட் கோரியோகிராஃபர் - வி கோட்டி | 
மக்கள் தொடர்பு -  சரண் 
ஒப்பனை - வீர சேகர் 
புகைப்படங்கள் -  பாலாஜி 
போஸ்டர் டிசைனர் -  தீரன் 
லைன் தயாரிப்பாளர் - பிரபு 
தயாரிப்பு மேலாளர் - நாகராஜ் 
புரமோசன்ஸ் - CTC ரியாஸ் 
VFX - சஞ்சய் 
சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் - முகமது

Myyal -திரைவிமர்சனம்


இயக்குனர் ஏபிஜி ஏழுமலையின் மையல் நாடகம் குழப்பங்களுக்கு மத்தியில் மலர்ந்த காதல் பற்றிய இதயப்பூர்வமான ஆய்வாகும், உண்மையான நடிப்புகள் மற்றும் உணர்ச்சி ரீதியாக எதிரொலிக்கும் மையக்கரு ஆகியவற்றால் நங்கூரமிடப்பட்டுள்ளது. சேதுவால் நம்பத்தகுந்த வகையில் சித்தரிக்கப்படும் ஒரு சிறிய கால திருடனான மாதசாமியுடன் படம் தொடங்குகிறது. அவரது பாதை விரைவில் அல்லி என்ற மர்மமான சூனிய பயிற்சியாளருடன் இணைகிறது, இது அழகான சம்ரிதி தாராவால் நடிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து கதையின் உணர்ச்சி இதயத் துடிப்பை உருவாக்கும் ஒரு ஆழமான தொடும் காதல்.

சேதுவும் சம்ரிதி தாராவும் ஒரு இயற்கையான, கட்டாயப்படுத்தப்படாத வேதியியலைப் பகிர்ந்து கொள்கிறார்கள், இது அவர்களின் உறவை நம்பமுடியாத அளவிற்கு பார்க்க வைக்கிறது. அவர்களின் ஒன்றாக இருக்கும் தருணங்கள் நேர்மையால் நிரம்பியுள்ளன, மெலோட்ராமா அல்லது க்ளிஷேக்கள் இல்லாமல். ஒரு காதல் கதை மிகவும் அமைதியாக ஆனால் மிகவும் சக்திவாய்ந்ததாக வெளிப்படுவதைப் பார்ப்பது அரிது, மேலும் இங்குதான் மையல் உண்மையிலேயே பிரகாசிக்கிறது. அவர்களின் தொடர்புகளில் உள்ள மென்மை சதித்திட்டத்தின் மிகவும் கடினமான அம்சங்களுக்கு வரவேற்கத்தக்க வேறுபாட்டை வழங்குகிறது.

கதை முன்னேறும்போது, ​​படம் ஒரு போலீஸ் நடைமுறை முறைக்கு மாறுகிறது, ஊழல் மற்றும் காவல்துறை மிருகத்தனத்தின் கருப்பொருள்களுடன் ஒரு கொலை விசாரணையை மையமாகக் கொண்டது. இந்தப் பகுதிகள் திறமையாக செயல்படுத்தப்பட்டாலும், அவை பழக்கமான வகைப் பாதைகளைப் பின்பற்றுகின்றன, மேலும் காதல் கதையின் உணர்ச்சிபூர்வமான அசல் தன்மை இல்லை.

இருப்பினும், படம் அதன் வலுவான நடிப்பால் கவர்ச்சிகரமானதாகவே உள்ளது. சேது மாதசாமிக்கு நம்பகத்தன்மையைக் கொண்டுவருகிறார், அவரது பயணத்தை நம்பத்தகுந்ததாகவும் கவர்ச்சிகரமானதாகவும் ஆக்குகிறார். சம்ரிதி தாரா தனது பாத்திரத்திற்கு நுணுக்கத்தையும் வலிமையையும் சேர்க்கிறார், அல்லியை வெறும் காதல் ஆர்வமாக மாற்றுகிறார் - அவர் ஒரு பொருளின் கதாபாத்திரமாக மாறுகிறார்.

புலனாய்வு சதித்திட்டத்தில் சில கணிக்கக்கூடிய திருப்பங்கள் இருந்தபோதிலும், மையல் முழுவதும் ஈடுபாட்டுடன் இருக்கிறார். பெரிய சமூக வர்ணனையை விட தனிப்பட்ட, உணர்ச்சிபூர்வமான பங்குகளை முன்னிலைப்படுத்துவதற்கான அதன் முடிவு அதற்கு புத்துணர்ச்சியூட்டும் வகையில் அடித்தளமாக உணரும் ஒரு நெருக்கமான தரத்தை அளிக்கிறது.

இறுதியில், மையல் பகுதிகளாக ஒரு பழக்கமான பாதையைப் பின்பற்றலாம், ஆனால் அது அன்பின் தொடும் சித்தரிப்பு மற்றும் அதன் கதாபாத்திரங்களின் இதயப்பூர்வமான நடிப்பால் உயர்ந்து நிற்கிறது. அணுகக்கூடிய கதைசொல்லலுடன் உணர்ச்சி ஆழத்தை சமநிலைப்படுத்தும் ஒரு படத்தைத் தேடுபவர்களுக்கு, மையல் ஒரு பலனளிக்கும் படம்.

Myyal Cast & Crew 

Cast
Sethu 
Samriddhi Tara
P.L. Thenappan
Late Super Good Subramani
Rathnakala
C.M. Bala

Crew

Director - APG. Elumalai
Production - Icon Cine Creations LLP 
Producers - Anupama Vikram Singh and Venugopal.R
Story, Screenplay, and Dialogues writer -Jeyamohan
Music-Amargeeth. S 
Cinematography - Bala Palaniyappan
Editor -Vetri Shanmugam
PRO - Suresh Chandra and Abdul Nassar



 

பேட்மிட்டன் வீராங்கனை டூ நடிகை: குயின்சி ஸ்டான்லி


*பேட்மிட்டன் வீராங்கனை டூ நடிகை: குயின்சி ஸ்டான்லி!*

தேசிய அளவிலான பேட்மிண்டன் வீராங்கனையான குயின்சி ஸ்டான்லி, மாடலாகவும், நடிகராகவும், ரியாலிட்டி ஷோ பிரபலமாகவும் மாறி, இந்திய சினிமாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய புதிய நட்சத்திரமாகவும் இருக்கிறார். விளையாட்டு, ஃபேஷன் மற்றும் பொழுதுபோக்கு உலகங்களை இணைக்கும் தனித்துவமான பயணத்துடன், குயின்சி தனக்கென ஒரு பாதையை உருவாக்கியுள்ளார். 

தனது பயணம் குறித்து குயின்சி பகிர்ந்து கொண்டதாவது, "ஆரம்ப காலத்தில் நான் தேசிய அளவிலான பேட்மிண்டன் வீராங்கனையாக என் பயணத்தைத் தொடங்கினேன். பின்னர், கிரியேட்டிவ் துறையான மாடலிங் துறையிலும் அடியெடுத்து வைத்தேன். அது என்னை நடிப்புத் துறைக்கும் கொண்டு சென்றது. இசை வீடியோக்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பிறகு எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ அமைந்தது” என்றார்.

தொலைக்காட்சியில் அவரது பயணம் அடுத்து சினிமாவுக்கும் கூட்டி சென்றது. அந்த அனுபவம் பற்றி பேசியபோது, "சீரியல்களில் பணிபுரிவது எனக்கு ஒழுக்கத்தையும் கேமரா அனுபவத்தையும் கொடுத்தது. ஆனால் திரைப்படங்களில் நடிப்பது வித்தியாசமான அதே சமயம் அதிக திருப்தி தரக்கூடிய ஒன்று.  அதன் கதை சொல்லக் கூடிய முறையும் வேறு விதமாக இருக்கும்” என்றார். 

ஹாட்ஸ்டாரில் வெளியான ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸில் அவரது கதாபாத்திரம் 'நீலா' ரசிகர்களால் பாராட்டப்பட்டது. "இது என் மனதிற்கு மிகவும் நெருக்கமான வெப்சீரிஸ். கலாச்சாரத்தைப் பற்றி கற்றுக்கொள்வதில் இருந்து உடல் ரீதியான மாற்றங்களைச் சந்திப்பது வரை என ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் பணிபுரியும் அனுபவத்தை அந்த வெப்சீரிஸ் கொடுத்தது. அர்ப்பணிப்பு என்றால் என்ன என்பதை இந்த வெப்சீரிஸ் எனக்குக் கற்றுக் கொடுத்தது. அடுத்து திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறேன். கமர்ஷியலான அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த படத்தில் நடிக்க விரும்புகிறேன்”

தனக்குப் பிடித்த நடிகர்களாக சூர்யா மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகியோரை குறிப்பிடும் குயின்சி, அவர்களைப் போன்ற திறமையான நடிப்பை வெளிப்படுத்த விரும்புகிறார். மேலும் இயக்குநர்கள் மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி போன்றோருடன் பணிபுரியும் வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பதாகவும் சொல்கிறார். "தங்கள் படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு இந்த இயக்குநர்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் கதாபாத்திர வலிமையும் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றார். 

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகள் அறிந்து வைத்திருக்கும் குயின்சி, "கதை சரியாக இருக்கும்போது மொழி ஒருபோதும்  தடையாக இருக்காது. புது மொழிகளை கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். எனக்கு நடனம் பிடிக்கும். அதில் இன்னும் பல புது முறைகளைக் கற்றுக் கொள்ளப் போகிறேன். கிளாமர் மற்றும் போல்டான கதாபாத்திரத்தில் கதைக்குத் தேவைப்பட்டால் நடிக்கத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

தொடர்புக்கு: காவ்யா மாதவன்,
Ph:7845579797
Mail: donetalents@gmail.com

NARIVETTAI - திரைவிமர்சனம்


அனுராஜ் மனோகரின் நரிவேட்டா திரைப்படம், உணர்ச்சிகரமான அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்தும் ஒரு துணிச்சலான மற்றும் சிந்தனையைத் தூண்டும் படமாக தனித்து நிற்கிறது. 2003 ஆம் ஆண்டு நடந்த நிஜ வாழ்க்கை முத்தங்கா சம்பவத்தால் ஈர்க்கப்பட்டு, பழங்குடி போராட்டக்காரர்கள் போலீஸ் வன்முறையை எதிர்கொண்ட இந்த திரைப்படம், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முறையான அநீதி பற்றிய உரையாடல்களைத் தூண்டவும் முயல்கிறது.

டோவினோ தாமஸால் உணர்ச்சித் தீவிரத்துடன் சித்தரிக்கப்படும் சிஆர்பிஎஃப் அதிகாரி வர்கீஸ் பீட்டரை மையமாகக் கொண்ட கதை. பழங்குடி போராட்டத்தை மேற்பார்வையிட அனுப்பப்பட்ட வர்கீஸ், தனது நம்பிக்கைகளை சவால் செய்யும் ஒரு தார்மீக சிக்கலான சூழ்நிலையில் சிக்கிக் கொள்கிறார். கதை ஒரு நேர்கோட்டு அல்லாத கட்டமைப்பின் மூலம் வெளிவருகையில், மோதலின் நெறிமுறை சிக்கல்கள் மற்றும் உணர்ச்சிபூர்வமான அடித்தளங்களில் ஆழமாக ஈடுபட பார்வையாளர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

ஆர்யா சலீம், சிகே ஜானுவை நினைவூட்டும் ஒரு பழங்குடித் தலைவராக ஒரு குறிப்பிடத்தக்க நடிப்பை வழங்குகிறார். அவரது சித்தரிப்பு திரைக்கு வலிமையையும் நம்பகத்தன்மையையும் தருகிறது, வர்கீஸின் பயணத்திற்கு ஒரு சக்திவாய்ந்த எதிர்முனையை வழங்குகிறது. சில கதாபாத்திர வளைவுகளை சிறப்பாக உருவாக்கியிருக்கலாம் என்றாலும், குழும நடிகர்கள் கதைக்கு ஆழத்தை சேர்க்கிறார்கள்.

அனுபவம் வாய்ந்த தமிழ் நடிகரும் இயக்குநருமான சேரன், அதிகாரம் குறைவாக உள்ள ஒரு மூத்த போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அச்சுறுத்தும் நடத்தை தேவையில்லாமல், அவரது இசையமைக்கப்பட்ட இருப்பு மட்டுமே ஒரு அமைதியின்மையை உருவாக்குகிறது, அமைதியான பதற்றத்தை வைத்திருக்கிறது.

தொழில்நுட்ப ரீதியாக, நரிவேட்டா சுவாரஸ்யமாக இருக்கிறது. விஜய்யின் ஒளிப்பதிவு கதையின் பதற்றம் மற்றும் உணர்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டும் பேய்த்தனமான அழகான பிரேம்களை வரைகிறது. ஜேக்ஸ் பெஜோயின் தூண்டுதல் இசை காட்சிகளை நிறைவு செய்கிறது, படத்தின் ஒட்டுமொத்த தாக்கத்தை மேம்படுத்துகிறது.

ஸ்கிரிப்ட் எப்போதாவது கவனத்தை இழக்கிறது மற்றும் வர்கீஸின் உணர்தல் சற்று தாமதமாக வருகிறது, படத்தின் மையக் கருத்து அப்படியே உள்ளது மற்றும் பொருத்தமானதாகவே உள்ளது. இது அதிகாரம், சுரண்டல் மற்றும் எதிர்ப்பு ஆகிய கருப்பொருள்களை துணிச்சலுடன் கையாள்கிறது, விளிம்புநிலை சமூகங்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இறுதியில், நரிவேட்டா குறைபாடற்றதாக இருக்காது, ஆனால் அதன் தைரியமும் நேர்மையும் அதை ஒரு அர்த்தமுள்ள சினிமா முயற்சியாக ஆக்குகிறது. இந்திய சினிமா அத்தகைய கதைகளைத் தழுவி, எல்லைகளைத் தாண்டி, பிரதிபலிப்பை ஊக்குவிக்கும் வகையில் பார்ப்பது ஊக்கமளிக்கிறது. நரிவேட்டா அதன் வலுவான நடிப்பு, குறிப்பிடத்தக்க காட்சியமைப்பு மற்றும் ஒரு முக்கியமான கதையை இதயத்துடனும் நேர்மையுடனும் சொல்வதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காகப் பார்க்கத் தகுந்தது.

NARIVETTAI

CAST :-

Tovino Thomas

Suraj Venjarammoodu Cheran

Priyamvada Krishnan Arya Salim

Prasanth Madhavan Pranav Teophine Nandu

Krishnan Balakrishnan Sudhi Calicut

Rini Udayakumar Appunni Sasi Kumar Sethu Unnikrishnan Vinod Bose Thomman

CREW:-

Direction                                  : Anuraj Manohar

Production                               : Indian Cinema company

Producers                                 : Tippushan, Shiyas Hassan

Writer                                      : Abin Joseph

Music                                       : Jakes Bejoy

Cinematography                      : Vijay

Art Direction                            : M Bawa

Stunts                                       : Phoenix Prabhu, Ashraf gurukkal

Editing                                     : Shameer Muhammed

Costumes                                 : Arun Manohar

Choreography                          : Spring

Stills                                         : Shain saboora, Sreeraj Krishnan

Production Controller              : Sakker Hussain

Production Executive               : Prathapan Kalliyoor

PRO                                         : Riaz K Ahmed, Paras Riyaz


 

மலேசியாவில் நடைபெற்ற 2025 - ஆம் ஆண்டுக்கான எடிசன் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை நடிகர் விஜய் கனிஷ்கா வென்றார்!


 மலேசியாவில் நடைபெற்ற 2025 - ஆம் ஆண்டுக்கான எடிசன் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை நடிகர் விஜய் கனிஷ்கா வென்றார்!

'Rising Star' விஜய் கனிஷ்காவுக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான மதிப்புமிக்க விருதானது - சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற எடிசன் விருதுகள்-2025-இல், அவரது நடிப்பில் 2024-ஆம் ஆண்டு வெளியான அதிரடி த்ரில்லர் திரைப்படமான 'ஹிட் லிஸ்டில்' தலைசிறந்த நடிப்பிற்காக வழங்கி கௌரவிக்கப்பட்டது. இத்திரைப்படத்தை சூர்யகதிர் காக்கல்லர் மற்றும் கே. கார்த்திகேயன் இயக்கத்தில், ஆர். கே. செல்லுலாய்ட்ஸ் நிறுவனம் சார்பில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் கே. எஸ். ரவிகுமார் தயாரிப்பில் வெளியானது.

'ஹிட் லிஸ்ட்' திரைப்படத்தில் விஜய் கனிஷ்காவின் திருப்புமுனை ஏற்படுத்தும் விதமான கதாபாத்திரம் நல்ல விமர்சனங்களையும் ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது, இதனால் தமிழ் சினிமாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய, திறமையான புதுமுகங்களில் ஒருவராக நிலைநிறுத்தியுள்ளது. கனிஷ்கா திரையில் தோன்றிய விதமும், வசீகரிக்கும் கதை சொல்லலும், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த குறிப்பிடத்தக்க வெற்றியின் மூலம், விஜய் கனிஷ்கா திரைப்படத் துறையில் ஒரு அற்புதமான பயணத்திற்கு தயாராக உள்ளார். அவர் நடிப்பில் வரவிருக்கும் திரைப்படங்களின் ஈர்க்கும் விதமான பட்டியல் தயாராக உள்ளது, அவை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Global Star Ram Charan’s PEDDI Lengthy & Crucial Schedule Begins In A Gigantic Village Set In Hyderabad

*Global Star Ram Charan’s PEDDI Lengthy & Crucial Schedule Begins In A Gigantic Village Set In Hyderabad*

Global Star Ram Charan is all set to ignite the big screen with his upcoming pan-India spectacle, PEDDI, a film that’s already stirring excitement across the country, with phenomenal response for the First Shot Glimpse. Helmed by National Award-winning director Buchi Babu Sana, this ambitious project marks a colossal collaboration between top creative forces and is shaping up to be a landmark moment in Indian cinema. Presented by the leading production houses Mythri Movie Makers and Sukumar Writings, and produced on a massive scale by Venkata Satish Kilaru under his banner Vriddhi Cinemas, PEDDI begins its lengthy and crucial schedule in a gigantic village set in Hyderabad.

PEDDI delves into a raw, earthy aesthetic, and the production team has gone to great lengths to ensure an immersive cinematic experience. Production Designer Avinash Kolla, along with his team, erected a massive village set, where the makers will be canning a pulse-pounding stunt sequence, and also some talkie portion. 

With 30% of the shoot already completed, this new schedule will cover a significant portion of the film.

After the success of Uppena, Buchi Babu Sana returns with renewed ambition, overseeing every detail with precision. With a massive budget, the film is being mounted on an epic scale.

Ram Charan has undergone a stunning transformation for the role, sporting a rugged, rural look with long hair, a thick beard, and a nose ring. Janhvi Kapoor is the leading lady, while Shiva Rajkumar, Jagapathi Babu, and Divyendu Sharma are the other prominent cast.

R Rathnavelu is in charge of the cinematography, while the Academy Award-winning composer AR Rahman scores the music. The editing is by National Award-winning technician Navin Nooli, while the production design is by Avinash Kolla.

The movie is scheduled for release on March 27, 2026, on Ram Charan’s birthday.

Cast: Global Star Ram Charan, Janhvi Kapoor, Shiva Rajkumar, Jagapathi Babu, Divyendu Sharma

Technical Crew:
Writer, Director: Buchi Babu Sana
Presents: Mythri Movie Makers, Sukumar Writings
Banner: Vriddhi Cinemas
Producer: Venkata Satish Kilaru
Music Director: AR Rahman
DOP: R Rathnavelu
Production Design: Avinash Kolla
Editor: Navin Nooli
Production Design: Avinash Kolla
Executive Producer: V. Y. Praveen Kumar
Marketing: First Show

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"

 கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"   கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமைவரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பா...