Friday, May 20, 2022

புதிய வகை ஜீப் மெரிடியன் 29.90 லட்சம் விலையில் ஜீப் பிராண்டு இந்தியா தலைவர் மஹாஜன், வெங்கட் தேஜா மற்றும் நடிகை சாஹித்யா அறிமுகம் செய்து வைத்தனர்.

புதிய வகை ஜீப் மெரிடியன் வாகனத்தை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் ஜீப் பிராண்டு இந்தியா  தலைவர் மஹாஜன்,ஜெயேஷ் சுக்லா- நேஷனல் சேல்ஸ் ஹெட் ஜீப் இந்தியா, லோகேந்திரா - ஜீப்பின் விற்பனை  இந்தியா மண்டலத் தலைவர்,  சஜித் ஜேக்கப்- பிராந்திய மேலாளர் விற்பனை ஜீப் இந்தியா, வெங்கட் தேஜா நிர்வாக இயக்குனர் வி.டி.கே ஆட்டோமொபைல்ஸ், சைலேந்திரகுமார் மற்றும் நடிகை சாஹித்யா கலந்துகொண்டு  அறிமுகப்படுத்தினர்.

 புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள  இதன் விலை 29.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. (ex-show room)ஜீப் மெரிடியன் வாகனம் புதிய 3 வரிசை ஜீப் எஸ்யூவி (SUV) அனுபவத்தை வழங்கக் கூடியதாக உள்ளது.மேலும் அதி நவீன வசதிகள் கொண்டதாகவும் சிறந்த வடிவமைப்பையும்,   இந்திய பொறியியல் நுண்ணறிவும் ஒருங்கே அமைந்த வாகனமாக உள்ளது

 அதிக திறன் கொண்ட சுறுசுறுப்பான எஸ்யூவி ஆனது 10.8 வினாடிகளில் 0-100 km/h சென்று 198km/h எட்டக் கூடியதாக உள்ளது.

 ஜீப் மெரிடியன் வாகனம் அறிமுகம் குறித்து பேசிய ஜீப் பிராண்டு இந்தியாவின் தலைவர் மகாஜன் இந்திய வாடிக்கையாளர்களுக்கு  அதிக வசதிகளுடன் கூடிய,  விசாலமான,திறன் கொண்ட வாகனமாகவும் புதிய வகை அதிநவீன எஸ்யூவியை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒப்பிட முடியாத அனுபவத்தை வழங்கக் கூடியதாக ஜீப் மெரிடியன் வாகனம் இருக்கும் மேலும் அழகிய வடிவமைப்புடன் கூடிய வாகனமாகவும் இந்த ஜீப்  இருக்கும் என்று கூறினார். புதிய ஜீப் மெரிடியனுக்கான வரவேற்பு சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார்.

 மேலும் இந்தியாவில் ஜூன் மாத முதல் வாரத்தில் இந்த வாகனம் டெலிவரி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு உள்ளதாக கூறினார்.

ஆல் -நியூ ஜீப் மெரிடியன்,  தற்போது இந்தியாவில்* (jeep-india.com)  வலைத்தளத்திலும் மேலும் இந்தியா முழுவதும் உள்ள ஜீப் டீலர்களிடம் 50 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம் வாகனம் ஜூன் மாதம் முதல் வாரத்தில் டெலிவரி செய்யப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது


FICCI FLO Chennai Hosts a Spectacular Evening with Shreya Ghoshal*

*FICCI FLO Chennai Hosts a Spectacular Evening with Shreya Ghoshal* FICCI FLO Chennai, the women’s wing of the Feder...