இன்றைய சூழலில் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு, எதிர்காலத்தில் மருத்துவராகவும், பொறியாளராகவும் ஆக வேண்டும் என்ற கனவும், லட்சியமும் இருக்கிறது. இதற்கு அவர்களது பெற்றோர்களின் ஆதரவும் இருக்கிறது. ஆனால் இதனை சாத்தியப்படுத்தக்கூடிய பயிற்சி நிறுவனங்களைப் பற்றி மாணவர்களும், பெற்றோர்களும் முழுமையாக அறிந்திருக்கவில்லை. மாணவர்கள் மருத்துவராக வேண்டும் என்ற தங்களது கனவு நனவாக வேண்டுமென்றால், இந்திய அரசால் அண்மைக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நீட் எனும் நுழைவு தேர்வில் முதன்மையாக தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நுழைவு தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடத்தில் ஒருமித்த கற்பித்தல் இல்லாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் ‘எடுடெல் அகாடமி’ என்னும் தனியார் பயிற்சி நிறுவனம், குறைவான கட்டணத்தில், தரமான பயிற்சி அளித்து அவர்களை நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான அனைத்து வகையிலான வழிகாட்டுதல்களையும் மேற்கொள்கிறது.
இது தொடர்பாக எடுடெல் அகாடமி நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது..
'' எங்கள் நிறுவனம் 2012ஆம் ஆண்டிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, அவர்கள் 12-ஆம் வகுப்பு முடித்தவுடன் எம்மாதிரியான உயர்கல்வியைத் தொடர வேண்டும் என்பது குறித்த அவர்களுடைய விருப்பம், அதற்கு எம்மாதிரியான நுழைவு தேர்வுகளை எழுத வேண்டும்? அதனை எப்படி எழுத வேண்டும்? என்பது குறித்த தகவல்களை ( Information Provider) பகிர்ந்து கொள்ளும் வகையில் எங்களுடைய கல்விசேவையை தொடங்கினோம்.
பள்ளிக்கூடங்கள் மாணவர்களை மதிப்பெண்கள் எடுக்கும் இயந்திரமாக தான் ஆசிரியர்கள் உருவாக்க எத்தனிக்கிறார்கள். ஆசிரியர்களும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அவர்கள் படிக்கும் பாடப்பிரிவுகளில் உச்சபட்ச மதிப்பெண்களை எடுப்பதற்கான பயிற்சியையும் வழிகாட்டு நெறிமுறைகளையும், அதற்கானக் கற்பித்தலையும் தொடர்ச்சியாக மேற்கொள்கிறார்கள். நல்ல மதிப்பெண்களை எடுக்கும் மாணவர்கள் தொடர்ந்து எவ்வகையான உயர் கல்வியை கற்க வேண்டும் என்பதில் தொடர்ந்து முழுமையான விழிப்புணர்வை பெறாமல் இருக்கிறார்கள். அத்துடன் உயர்கல்வி குறித்த தெளிவின்மையும் அவர்களிடத்தில் இருக்கிறது. இவ்விசயத்தில் அவர்கள், பெற்றோர்களின் ஆலோசனையை விட, எங்களைப் போன்ற இத்துறையில் அனுபவம் மிக்க தனியார் பயிற்சி நிறுவனங்கள் வழங்கும் ஆலோசனையை ஏற்க தயாராக இருக்கிறார்கள்.
நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவதற்கும், நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராகவோ பொறியாளராகவோ படிப்பதற்கான வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டவர்களுக்கும், எங்கள் நிறுவனம் சரியான வழிகாட்டுதலை அதற்குரிய வல்லுனர் குழுவின் உதவியுடன் வழங்கி வருகிறது.
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு என தனி பயிற்சி முறை, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தனி பயிற்சி முறை, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த பிறகு நுழைவுத் தேர்வுக்காக தயாராகும் வகையிலான குறுகிய கால பிரத்யேக பயிற்சி முறை, நுழைவுத் தேர்வில் வெற்றிபெறாதவர்களுக்கான பிரத்யேக பயிற்சி முறை என நான்கு வகையான பயிற்சி திட்டங்கள் இருக்கிறது. ஒவ்வொரு பயிற்சி திட்டத்திற்கும் பொருத்தமான மாணவர்களை அவரது பெற்றோர்கள் உதவியுடன் தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கிறோம்.
இதற்காக எங்களுடைய நிறுவனத்தின் சார்பில், தொழில்நுட்ப குழுவினர் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு பயணித்து, மாணவர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்து கேரியர் கைடன்ஸ் புரோகிராம் என்ற நிகழ்ச்சியை நடத்தி, ஒவ்வொரு மாணவருக்குள்ளும் இருக்கும் உயர்கல்வி குறித்த கனவை நனவாக்குவதற்கான வழிமுறைகளுக்குரிய விளக்கமளிக்கிறோம். இதனைத் தொடர்ந்து மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, அவர்களுக்கான வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறோம்.
எங்களுடைய பயிற்சியில் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் இடம் பெற்றிருப்பதாலும், எங்களிடம் நுழைவுத் தேர்வுக்காக இணைந்திருக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறும் வகையில் பிரத்யேகமாக புத்தகங்கள் மற்றும் பாட பொருட்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதாலும், எங்களுடைய நிறுவனத்தில் இணைந்து பயிற்சி பெறும் மாணவர்களில் 95 சதத்திற்கு மேல் தேர்ச்சியடைவதை பல ஆண்டுகளாக உறுதிப்படுத்தி வருகிறோம்.
மேலும் எங்களுடைய கல்வி நிறுவனத்தில் நுழைவுத்தேர்வு பயிற்சிக்காக இணையும் மாணவர்களுக்கு தினமும் இணையதளம் மூலமாக பயிற்சி வழங்கி வருகிறோம். மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும் என்பது குறித்தும், நுழைவுத் தேர்வில் கேட்கப்படும் வினாக்களுக்கு எந்த வகையில் விடையளிக்க வேண்டும் என்ற சூட்சுமத்தையும் விளக்குகிறோம்.
மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் அனைத்து பாட பிரிவுகளிலும் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்கும் விதத்திற்கும், நுழைவுத் தேர்வில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடை அளிக்கும் விதத்திற்கும் உள்ள நுட்பமான வேறுபாட்டை எளிமையான பயிற்சிகள், சூத்திரங்கள் ஆகியவற்றின் மூலம் தெளிவுப்படுத்துகிறோம். அதில் தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சியும் அளித்து, நம்பிக்கையுடன் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள தயார்ப்படுத்துகிறோம். கொரோனா காலத்திற்கு முன்னரே நாங்கள் மாணவர்களுக்கு தொடர்ந்து இணையதளம் மூலமாக கற்பித்தலை மேற்கொண்டு வருகிறோம் என்பதையும் இங்கே குறிப்பிடவிரும்புகிறோம்.
மேலும் மாணவர்களுக்கு கல்வி சேவை வழங்குவதில் தேவை அதிகரித்திருப்பதால் சென்னையைத் தவிர்த்து TIRUNELVELI,
CUDDALORE,KUMBAKKONAM,TRICHY,MADURAI,TIRUNELVELI,THOOTHUKUDI,NAGERKOVIL,ERODE,COIMBATORE,VELLORE உள்ளிட்ட 17 இடங்களில் எங்களுடைய பயிற்சி மையத்தைத் தொடங்கியிருக்கிறோம். இதனூடாக மாணவர்களுக்கு நீட் மற்றும் பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதற்கான பயிற்சியை வழங்கி வருகிறோம். மேலும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 74012 59090என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.'' என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
குறிப்பு
• 15 ஆண்டுகால அனுபவம்
• நுழைவுத் தேர்வுக்காக மருத்துவம், பொறியியல் என ஒவ்வொரு பிரிவுக்கும் பிரத்யேக பாட பொருள்
• அனுபவம் வாய்ந்த ஆசிரியர் குழு
• இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ் ரூம்
• தமிழகம் முழுவதும் பயிற்சி மையங்கள்.
• குறைவான கட்டணம்
• கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் வசதி
• நுழைவுத் தேர்வில் நூலிழையில் வாய்ப்பை தவற விட்டவர்களுக்கு பிரத்தியேக கட்டண சலுகையுடன் கூடிய ஓராண்டு மீள் நுழைவுத் தேர்வு பயிற்சி.
என பல சிறப்பம்சங்களுடன் இந்த எடுடெல் அகாடமி இயங்கி வருவதால், மாணவர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் பேராதரவைப் பெற்றிருக்கிறது.
மாணவர்களின் நம்பிக்கையை மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோர்களது நம்பிக்கையும் பெற்று கல்வி சேவை வழங்குவதில் தன்னிகரில்லா தனியார் பயிற்சி நிறுவனமாக ‘எடுடெல் அகாடமி’ (EDUTEL ACADEMY)தொடர்ந்து பணியாற்றி, தமிழக மக்களின் நன் மதிப்பைப் பெற்றிருக்கிறது.
தொடர்புக்கு : 7401259090
WEBSITE : www.edutelacademy.com
EMAIL ID : edutelthiyaga@gmail.com