Thursday, August 31, 2023

எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட நெல்லூரைச் சேர்ந்த 33 வயது நபருக்கு, பிரசாந்த் மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு குணமடைந்துள்ளார்

எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட நெல்லூரைச் சேர்ந்த 33 வயது நபருக்குபிரசாந்த் மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு குணமடைந்துள்ளார்

 

சென்னை 31st ஆகஸ்ட், 2023சென்னையில் உள்ள முன்னணி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான பிரசாந்த் மருத்துவமனை நெல்லூரைச் சேர்ந்த 33 வயது எச்ஐவி  தொற்று கொண்டுள்ள ஆணுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்ததன் மூலம் ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளதுஎச்ஐவி நோயில் இருந்து ஒரு உயிரை காப்பாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.  இந்த எச்ஐவி நோயாளியின் நிலை முதலில் கவலைக்கிடமாக இருந்தது. நோயாளி முதலில் கடுமையான சுவாச பிரச்சினைகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான சிக்கல்களை எதிர்கொண்ட நிலையில்இறுதியில் பிரசாந்த் மருத்துவமனை சிறந்த நிபுணர் மருத்துவக் குழு அவரை பரிசோதித்து சிறந்த சிகிச்சை அளித்ததன் மூலம்  அவர் குணமடைந்துள்ளார்.

 

சில நாட்களுக்கு முன்பு இவர் சுவாசக் கோளாறு காரணமாக நெல்லூரில் உள்ள உள்ளூர் கிளினிக்கில் மே மாதம் மருத்துவ உதவியை நாடி உள்ளார். பிறகு அறிகுறிகள் மோசமடைந்ததன் காரணமாக அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பின் அவரது உடல்நிலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் அவரின் நிலைமை மிகவும் மோசமடைந்ததால் ஜூன் மாதம் பிரசாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அவரின் உயிரை காப்பாற்றுவது பிரசாந்த் மருத்துவமனையில் உள்ள  மருத்துவர்களுக்கு சவால் நிறைந்த ஒன்றாக இருந்தது.

 

அவரின் சுவாச பிரச்சனையை சரி செய்ய சுவாச பாதை வழியாக ஹை ஃப்ளோ நாசல் கேனுலா (HFNC) மருத்துவ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுவாசத்தை வழங்கினோம். நுரையீரலில் நோய்க்கிருமிகள் தாக்கி இரண்டாம் நிலை பாதிப்பு ஏற்பட்டு கடுமையான சுவாசக் கோளாறு நோயறிதலை கண்டறிந்தோம். பின்னர் அவருக்கு உடனடியாக CT ஸ்கேன் எடுக்கப்பட்டு நுரையீரலில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களை அதன் மூலம் கண்டறிந்தோம். அவருக்கு தீவிர சிகிச்சை தேவைப்பட்டதால் மருத்துவ தீவிர சிகிச்சை பிரிவுக்கு (MICU) மாற்றினோம்.

 

இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மூலம்புர்கோல்டேரியா செபாசியா என்ற கிருமி இரத்தத்தில் இருப்பது பரிசோதனையின் மூலம் தெரிய வந்தது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் அவருடைய உடல் நிலை மேலும் மோசமடைந்தது. சுவாசிக்க முடியாமல் போனதால் அவருக்கு  செயற்கை சுவாசம் தேவைப்பட்டது. அவருக்கு ஏற்பட்ட ஹைப்போ டென்ஷனை நிவர்த்தி செய்ய ஐனோட்ரோபிக் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹைபோக்ஸியாஇயந்திர காற்றோட்டம் இருந்தபோதிலும் ECMO  சுவாச செயல்பாட்டை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டது.

 

அவரின் நோயறிதலை கண்டறிய நிறைய ஸ்கேன் முறைகள் எடுக்கப்பட்டன. இதில் தீவிரமான குறைந்த CD4 எண்ணிக்கையுடன் கூடிய மேம்பட்ட HIV, சைட்டோமெலகோவைரஸ் (CMV), நியூமோசிஸ்டிஸ் ஜிரோவெசிஹெர்பெஸ் ஜோஸ்டர்சூடோமோனாஸ்க்ளெப்சில்லா பாக்டீரியாஆழமான நரம்பு இரத்த உறைவு (DVT) மற்றும் தீவிர நோய் பாலிநியூரோபதி போன்றவை இதில் அடங்கும். இதனை சரி செய்ய டிரக்கியோஸ்டமிப்ரோன்கோஸ்கோபிஉயர்தர சேர்க்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் இரத்தமாற்றம் உள்ளிட்ட நுணுக்கமான கண்காணிப்புகள் மூலம் பல்வேறு சிகிச்சை கொடுக்கப்பட்டன. காய்ச்சல் மற்றும் இருமல் மற்றும்   சுவாசக் கோளாறு போன்ற எண்ணற்ற சிகிச்சைசிக்கல்கள் மற்றும் சவால்கள் வரை,  இந்தப் பயணம் மருத்துவர்களின் ஒத்துழைப்புதகவமைப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றின் அடிப்படையில் இன்று வெற்றியை அடைந்துள்ளது. ஆகஸ்ட் 14, 2023 நிலவரப்படிநோயாளியின் உடல்நிலை தேறி வந்த நிலையில் அவர் வீட்டுப் பராமரிப்புக்கு மாறுவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிகிச்சையளிப்பது கடுமையான சவாலாக இருந்த நிலையிலும்  விழிப்புணர்வு பயணம்விரிவான அணுகு முறை மற்றும் விடா முயற்சி இவற்றைக் கொண்டு அவரது உயிரை இறுதியாக மீட்டு தனது மற்றுமொரு மைல்கல்லை முத்திரை பதித்துள்ளது பிரசாந்த் மருத்துவமனை.

 

டாக்டர் அஜித் குமார்பிரசாந்த் மருத்துவமனையின் கிரிட்டிகல் கேர் ஸ்பெஷலிஸ்ட் எய்ட்ஸ் போன்ற இக்கட்டான நோயை கையாளுவதில் உள்ள தனித்தன்மை மற்றும் சிக்கலான தன்மையை எடுத்துரைத்தார். இம்மாதிரியான வழக்குகள் மிகவும் அரிதானவை. மேலும் நாங்கள்  அவர் உயிரை காப்பாற்றமருந்து, சிகிச்சைகள், ECMO, உயர்தர சிகிச்சை முறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பல அணுகுமுறையைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. இந்த சிகிச்சையின் ஒவ்வொரு கட்டத்திலும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள்,  நோயாளியின் நிலையை நிவர்த்தி செய்வதற்கான பல சிகிச்சைகள்பாலிநியூரோபதி போன்ற சிக்கல்களை நிர்வகிப்பதற்கு வலுவான ஆண்டிபயாடிக் மருந்துகள் தேவைப்பட்டன.  நோய் எதிர்ப்பு சக்தியை சமநிலைப்படுத்ததுல்லியமான திட்டமிடல் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு போன்றவை நோயாளிக்கு தேவைப்பட்டது என்கிறார் டாக்டர் அஜித் குமார் அவர்கள்.

 

டாக்டர் ஜி. பிரசாந்த் கிருஷ்ணாசென்னைபிரசாந்த் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்  கூறுகையில்மருத்துவக் குழுவின் அர்ப்பணிப்பைப் பாராட்டி, "இந்த மருத்துவ முன்னேற்றத்தை எட்டியதற்காக எங்கள் திறமையான மருத்துவர்கள் குழுவை நான் மனதார வாழ்த்துகிறேன். முன்னணி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹெல்த்கேர் குழுவாகநாங்கள் நிர்வகிப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ளோம் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சிக்கலான நோய்களை கையாள சிக்கலான நடைமுறைகள்அதிநவீன தொழில்நுட்பம் சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் தரமான மருத்துவ தலையீடுகள் தேவை. அதை இனி மேலும் வழங்கி எங்கள் மருத்துவ சேவையை நாங்கள் என்றென்றும் தொடர்வோம் என்றும்உயிர்களை காப்பாற்றிவதில் எங்கள் பணி மென்மேலும் தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Thanks & Regards

 

G.Sreenivasan

ரசிகர்களிடம் வரவேற்பை குவிக்கும் "போகுமிடம் வெகு தூரமில்லை" ஃபர்ஸ்ட் லுக் !!

ரசிகர்களிடம் வரவேற்பை குவிக்கும் "போகுமிடம் வெகு தூரமில்லை" ஃபர்ஸ்ட் லுக் !! விமல், கருணாஸ் நடிப்பில்  &qu...