Friday, March 14, 2025

ஶ்ரீஶ்ரீமல் பாலட் குடும்பத்தினர் மற்றும் டீம் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆகியோர் முன்னாள் மத்திய அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு இந்திய நாட்டிற்கு செய்த அர்ப்பணிப்புகளுக்காக கௌரவித்துள்ளது.

ஶ்ரீஶ்ரீமல் பாலட் குடும்பத்தினர் மற்றும்  டீம் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆகியோர் முன்னாள் மத்திய அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு இந்திய நாட்டிற்கு செய்த அர்ப்பணிப்புகளுக்காக  கௌரவித்துள்ளது.

 சென்னை தாஜ் கன்னிமாராவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,  சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர் திரு. ஆர். சங்கரநாராயணன் மற்றும் மூத்த வழக்கறிஞர் திரு. ஜெயேஷ் டோலியா ஆகியாருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. 

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்களுக்கும், கௌரவித்தவர்களுக்கும் எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை என உணர்ச்சி பொங்க கூறினார்.  தான் மத்திய மின்துறை அமைச்சராக இருந்த போது, மின் பற்றாக்குறையை சமாளிக்க மிகப்பெரும் முயற்சிகளை மேற்கொண்டதை விவரித்தார். ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட மிகப்பெரும் ஆளுமைகளை மின் திட்டங்களில் கையெழுத்திட வைத்து சாதனை செய்ததை குறிப்பிட்ட அவர், தான் தேர்தலில் போட்டியிட  விரும்பி கேட்கவில்லை என்றும், பல்வேறு தொண்டு நிறுவனங்களில் சேவை செய்ததோடு ஒரு வங்கியின் தலைவராக செயல்பட்டதாக கூறினார். வெளிநாட்டு பயணத்தில் இருந்த தனக்கு வாய்ப்பு தேடி வந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே தேர்தலில் நின்று வெற்றி பெற்றதாகவும் கூறிய அவர், வென்ற உடன் தன்னை அமைச்சராகி விட்டார்கள் என்றார்.தான் பொறுப்பேற்கும் பொது நாட்டில் 80 விழுக்காடு மின் பற்றாக்குறை இருந்ததை நினைவு கூர்ந்த அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முதன் முதலில் இலவச மின்சார திட்டத்தில் கையெழுத்திட்டது குறித்து பெருமையாக பேசினார்.  

சிறப்பு விருந்தினர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களை ஒன்றிணைத்து,  ஆளுகை மற்றும் சட்ட சிறப்பின் கொண்டாட்டமாக இது இருந்தது.  இந்த கூட்டத்தில் அறிவுசார் விவாதங்கள், இந்தியாவின் முன்னேற்றம் குறித்த  விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் ஶ்ரீஶ்ரீமல் பாலட் குடும்பத்தினர் மற்றும்  டீம் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் கவுரவிக்கப்பட்டவர்களின் பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் இது அமைந்தது.  நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இருக்கும் தனிநபர்களை அங்கீகரிப்பதிலும் கொண்டாடுவதிலும் ஶ்ரீஶ்ரீமல் பாலட் குடும்பத்தினர் மற்றும்  டீம் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம்  உறுதிபூண்டுள்ளது

ஶ்ரீஶ்ரீமல் பாலட் குடும்பத்தினர் மற்றும் டீம் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆகியோர் முன்னாள் மத்திய அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு இந்திய நாட்டிற்கு செய்த அர்ப்பணிப்புகளுக்காக கௌரவித்துள்ளது.

ஶ்ரீஶ்ரீமல் பாலட் குடும்பத்தினர் மற்றும்  டீம் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆகியோர் முன்னாள் மத்திய அமைச்சர் திரு. சுரேஷ் பிரப...