Tuesday, April 22, 2025

ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் ஏப்ரல் 24 முதல், ப்ளாக்பஸ்டர் “எம்புரான்” திரைப்படம் ஸ்ட்ரீமாகிறது !!

ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் ஏப்ரல் 24 முதல், ப்ளாக்பஸ்டர் “எம்புரான்” திரைப்படம் ஸ்ட்ரீமாகிறது !!

ப்ளாக்பஸ்டர்  “எம்புரான்” திரைப்படம் வரும் ஏப்ரல் 24 முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகிறது !!


மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான “எம்புரான்” வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது. 
நடிகர், இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். 


மோகன்லால் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க,  அவருடன், முன்னணி நட்சத்திரங்கள் பிருத்விராஜ் சுகுமாரன்,  டொவினோ தாமஸ் இணைந்து நடிக்க, மேலும் “Game of Thrones” புகழ் ஜெரோம் ஃப்ளின் இந்திய சினிமாவில் “எம்புரான்” மூலம் அறிமுகமாகியுள்ளார். அம்பிமன்யு சிங், ஆண்ட்ரியா டிவாடர், சூரஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய்குமார், பைஜு சாந்தோஷ், ஃபாசில், சச்சின் கேடகர், நைலா உஷா, ஜிஜு ஜான், நந்து, சிவாஜி குருவாயூர், மணிகுட்டன், அனீஷ் ஜி. மேனன், ஷிவதா, அலெக்ஸ் ஓ’நெல், எரிக் எபுவானே, மிகைல் நொவிகோவ், கார்த்திகேயா தேவ் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

கேரளாவின் அரசியல் களத்திலிருந்து ஸ்டீபன் நெடும்பள்ளி திடீரென வெளியேறியதைத் தொடர்ந்து ஏற்படும் குழப்பம் மற்றும் அதிகாரப் போராட்டங்களுக்கு மத்தியில், அவர் உலகமே தேடும் குரேஷி ஆப்ரஹாமாக  எப்படி மாறினார்  என்பதை இந்தப் படம் ஆராய்கிறது. லூசிஃபர் சம்பவங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கடவுளின் சொந்த நாட்டில் ஒரு புதிய அரசியல் சக்தி உருவாகி வருகிறது, அதே நேரத்தில் மக்கள் நீண்ட காலமாக மறைந்துபோன தங்கள் தலைவரின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் ஸ்டீபன் இப்போது எங்கே? அவர் தனது தாயகத்தைக் காப்பாற்றத் திரும்புவாரா? உண்மையில் குரேஷி ஆப்ரஹாம் யார்? இந்தக்கேள்விகளுக்கான பதில் தான் இப்படம். 

பரபரக்கும் சம்வங்கள், அதிரடி ஆக்சன், கண்ணைப்பறிக்கும் விஷுவல்களுடன், ரசிகர்களை இருக்கை நுனியில் இருக்க வைக்கும், ஆக்சன் திரில்லராக இப்படம் புது அனுபவம் தருகிறது.  


ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், படத்தொகுப்பு கலைஞர் அகிலேஷ் மோகன், இசையமைப்பாளர் தீபக் தேவ் ஆகிய முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். 

மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில், எம்புரான் திரைப்படம் ஏப்ரல் 24 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்த பிரமாண்டமான சினிமா அனுபவத்தைத் தவறவிடாதீர்கள்.

ஜியோஹாட்ஸ்டார் 
ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாகும், இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. இணையற்ற உள்ளடக்க பட்டியல், புதுமையான தொழில்நுட்பம் மற்றும் ரசிகர்கள் எளிதாக அணுகுவதற்கான அமைப்புடன், ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Mohan g’s next Draupathi -2 first look !!!

Mohan g’s next Draupathi -2 first look !!! On behalf of Netaji Productions, in association with Chola Chakravarthy, and produced...