Saturday, May 17, 2025

முதன்முறையாக, அபூர்வமான மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு லைஃப்லைன் மருத்துவமனையில் வெற்றிகரமான சிகிச்சை.*

*உயிர்காக்கும் உடல் எடை குறைப்பு  (பேரியாட்ரிக்) அறுவை சிகிச்சையில் வெற்றி — தென் இந்தியாவில் முதன்முறையாக, அபூர்வமான மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு லைஃப்லைன் மருத்துவமனையில் வெற்றிகரமான சிகிச்சை.*

சென்னை, தமிழ்நாடு – தென்னிந்திய மருத்துவ வரலாற்றில் முக்கியமான சாதனையாக, லைஃப்லைன் குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநரும், மேம்பட்ட சிறுதுளை மற்றும் உடல் எடை குறைப்பு அறுவைசிகிச்சை நிபுணருமான டாக்டர் அனிருத் ராஜ்குமார் மற்றும் லைஃப்லைன் குழும தலைவர் மற்றும் மூத்த அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர் J.S. ராஜ்குமார் ஆகியோர் இணைந்து, வங்கதேசத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு தென்னிந்தியாவில் முதன்முறையாக உடல் எடை குறைப்பு  அறுவைசிகிச்சை செய்து சிறந்த வெற்றியை பெற்றுள்ளனர்.

Prader-Willi Syndrome என்ற அபூர்வமான மரபணு குறைபாடால் ஏற்பட்ட மிகுந்த உடல் பருமனால் (Obesity) பாதிக்கப்பட்டிருந்தாள். நடக்க முடியாமல், சுவாசிக்கவே சிரமப்பட்டு, இரத்த அழுத்தம், நீரிழிவு, கலீரலில் கொழுப்பு படிதல், Bow Leg Deformity என்ற வளைந்த கால்கள் என பல கடுமையான உடல்நிலை பிரச்சனைகளை சந்தித்து வந்தாள்.

மருத்துவ குழுவினர் இந்த சிறுமிக்கு தேவையான பரிசோதனைகள் செய்து, குடும்பத்தினரிடம் கலந்து ஆலோசித்து, விவரங்களை எடுத்துரைத்த பிறகு, இந்த அபூர்வமான மற்றும் ஆபத்தான அறுவைசிகிச்சையை மிக நுட்பமாக செய்து வெற்றிகரமாக முடித்தனர்.அறுவை சிகிச்சைக்கு பிறகு வெறும் இரண்டு வாரங்களில் குழந்தை 8 கிலோ எடை குறைந்து, சுவாசிக்கும் திறன் மேம்பட்டு, எளிதாக நடக்க ஆரம்பித்துவிட்டாள். வரும் 6 மாதங்களில் மேலும் 10 முதல் 15 கிலோ வரை எடை குறையும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த அறுவைசிகிச்சை ஒரு துவக்கமே. குழந்தையின் நிலையான ஆரோக்கியத்திற்காக குழந்தை மருத்துவர், ஊதச்சத்து நிபுணர், உடற்பயிற்சி நிபுணர், உளவியலாளர் மற்றும் உடல் பருமன் சிகிச்சை நிபுணர்கள் என பல துறை நிபுணர்கள் இணைந்து தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

"இந்த சிகிச்சை வெறும் சாதனை அறுவைசிகிச்சை அல்ல. இது சிறுவர்களில் காணப்படும் மிகப்பெரிய உடல் பருமனின் (Obesity) அபாயத்தை நினைவூட்டும் விழிப்புணர்வு அழைப்பாகும். குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்விற்காக துரித நடவடிக்கைகள் மற்றும் முழுமையான பராமரிப்புகள் அவசியம்," என்று டாக்டர் அனிருத் ராஜ்குமார் தெரிவித்தார்.

லைஃப்லைன் மருத்துவமனை, அனைத்து பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் – குழந்தைகளின் எடை அதிகரிப்பை சாதாரணமாக எண்ணாமல், சரியான நேரத்தில் மருத்துவ உதவியை நாடுங்கள். குழந்தைகள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழும் வாய்ப்பை பெறும் வகையில் பாதுகாப்பு அளிப்பது மிகவும் அவசியம்.

Patient :  Name Mayesha siddika 
Age - 5
Address - Chapainawabgang, Bangladesh

Father : Juelrana
Mother : Zohra khatun

முன்னணி அறுவை சிகிச்சை நிபுணர்கள்
Dr. அனிருத் ராஜ்குமார்
MBBS, DNB (Surgery), FMAS, MRCS, FIBC (Bariatric),

ரோபோடிக் மற்றும் லாபரஸ்கோபிக் உயர் உடல் பருமன் அறுவை சிகிச்சை நிபுணர்
இணை நிர்வாக இயக்குநர் – லைஃப்லைன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

Dr. J.S. ராஜ்குமார்
M.S., F.I.C.S., Dip. N.B. (SURG.), F.R.C.S. (ENG.), F.R.C.S. (EDIN.), F.R.C.S. (GLASGOW), F.R.C.S. (IRELAND), F.I.M.S., F.A.I.S., F.R.M.S. (LONDON), F.A.E. (GASTRO), F.A.C.G. (USA), F.I.C.A. (USA), F.I.A.G.E.S., Dip M.I.S. (FR.)
தலைவர் மற்றும் முதன்மை அறுவை சிகிச்சை நிபுணர்

Dr. K.R. தர்மேந்திரா
MBBS, MS, DNB, FMAS, DMAS, FICRS, FIAGES, FALS (UGI), FALS (ROBOTIC), FALS (BARIATRIC), FAGIE.,
ரோபோடிக் மற்றும் லாபரஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர்

KALAIGNAR TV – GOWRI SERIAL பௌர்ணமிக்குள் வீணா கொல்லப்படுவாளா? கனகாவின் சபதம் நிறைவேறுமா ?

 KALAIGNAR TV – GOWRI SERIAL பௌர்ணமிக்குள் வீணா கொல்லப்படுவாளா? கனகாவின் சபதம் நிறைவேறுமா ?   கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல்சனிக்கிழ...