Wednesday, December 24, 2025
கலைஞர் டிவியின் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்
Tuesday, December 23, 2025
Heritage Meets High Performance as Bajaj Pune Grand Tour 2026 Trophy Arrives in Chennai
Friday, December 19, 2025
பான்-இந்தியா ரெபெல் ஸ்டார் பிரபாஸ் உலகளாவிய கதை சொல்லும் புரட்சியை “தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் பெஸ்டிவல்” மூலம் தொடங்கி வைத்தார்!!*
Tuesday, December 16, 2025
திரைக்கதையில்.. கலைஞர் டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் “ருத்ரா”..!
குற்றம் புரிந்தவன் சீரிஸிற்காக, பாராட்டுக்களைக் குவிக்கும் ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே.பாஷா !!
Friday, December 12, 2025
காதலிப்பவரைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி? பாடம் சொல்லும் 'டியர் ரதி' திரைப்படம்!
Wednesday, December 10, 2025
கலைஞர் டிவியில் சனிக்கிழமைதோறும் இரவு 8.30 மணிக்கு “லிட்டில் சூப்பர் ஹீரோஸ்”
Wednesday, December 3, 2025
99/66 " தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " படத்திற்காக புத்த மடாலயங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்ற படப்பிடிப்பு !
99/66 " தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " படத்திற்காக புத்த மடாலயங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்ற படப்பிடிப்பு !
99 அடுக்குமாடி குடியிருப்புகளில் நடக்கும் ஹாரர் படம் " 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு "
மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில்
எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படத்திற்கு
" 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு "
என்று வித்தியாசமாகப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் சபரி,
ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.
கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன், ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான எம்.எஸ்.மூர்த்தி நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு சேவிலோ ராஜா
ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை மீனாட்சி சுந்தரம் கையாள, ஜெயமுருகன் கலை இயக்கத்தைச் செய்துள்ளார். நடன இயக்குநர்களாக ஸ்ரீதர் -ஆனந்த் இருவரும் பணியாற்றியுள்ளனர்.
பயர் கார்த்திக் பரபரப்பான சண்டைக்காட்சிகளை உருவாக்கியுள்ளார்.
மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ்.
தயாரிப்பு நிறுவனம் - மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்.
கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்துத் தயாரித்து இயக்கியுள்ளார் எம்.எஸ். மூர்த்தி.
படம் பற்றித் தயாரிப்பாளரும் இயக்குநருமான எம்.எஸ். மூர்த்தி கூறும்போது,
"படத்தின் கதை சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் நடைபெறுகிறது. அதனால் தான் இந்தப் படத்திற்கு
" 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு "
என்று பெயர் வைத்துள்ளோம்.
அந்தக் குடியிருப்புப் பகுதியில் அவ்வப்போது நடைபெறும் சில அமானுஷ்ய சம்பவங்கள் அங்கிருக்கும் குடியிருப்பு வாசிகளைப் பயமுறுத்திப் பீதி கொள்ள வைக்கிறது.எதனால் அப்படி நடக்கிறது?அதன் பின்னணியில் இருப்பது என்ன? என்பதை சபரியும், ரக்சிதாவும், ஸ்வேதாவும், எம்.எஸ்.மூர்த்தியுடன் சேர்ந்து கண்டுபிடிக்க முயல்கிறார்கள்.அவர்களின் விரும்பியபடி மர்மங்களைக் கண்டுபிடித்து அந்தக் குடியிருப்பு வாசிகளைக் காப்பாற்றினார்களா? இல்லையா? இறுதியில் என்ன நடந்தது என்பதே இந்தப் படத்தின் திரைக்கதை.
இப்படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படாத புத்த பிக்குகளின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
அரசு அனுமதி பெற்று தாய்லாந்து, பர்மா, இலங்கை போன்ற பகுதிகளில் புத்த மடலாயத்தின் உள்ளேயே சென்று ஐநூறு புத்த பிக்குகளின் மத்தியில் பாடல்களையும் - சில காட்சிகளையும் பிரம்மாண்டமான முறையில் படமாக்கியுள்ளோம்.
மற்றும் படத்தில் AI-CG - காட்சிகள் நவீன தொழில் நுட்பத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக வடிமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது" என்கிறார் இயக்குநரும், தயாரிப்பாளருமான எம்.எஸ்.மூர்த்தி.
கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணி கொண்ட "கற்றது சமையல்"
கலைஞர் டிவியின் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்
கலைஞர் டிவியின் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நமது கலைஞர் தொலைக்காட்சியில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்...
-
கே.ராஜன் வெளியிட்ட டீசர்! கதை , திரைக்கதை, வசனம் எழுதி கதையின் நாயகனாக ஜி.ராம் நடித்து தமது இரண்டாவது படமாக இயக்கியுள்ள " ப...
-
*ஆவடி புனித அந்தோணியார் திருத்தலத்தின் 75வது ஆண்டு விழா ஜூன் மாதம் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சிறப்பாக நடைப்பெற்று வருகின்ற...


