Tuesday, October 20, 2026

இசைஞானி இளையராஜா இசையமைப்பில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’, அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ வெற்றிப் படங்களைத் தயாரித்த, அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு தயாரிப்பில், அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கும் புதிய படம்


அமெரிக்காவில் வசிக்கும் கணேஷ் ரகு, தனது அபராஜீத் பிலிம்ஸ் சார்பாக மிகுந்த பொருட்செலவில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’ படத்தை தயாரித்து மிக பிரம்மாண்டமான வெற்றியின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார். தொடர்ந்து, பாலாவின் உதவி இயக்குநர் அமீரை சூர்யா, திரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் செய்து, அப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 


இதைத் தொடர்ந்து, அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கத்தில், புதிய படம் ஒன்றை மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் அபராஜீத் பிலிம்ஸ் பேனரில் கணேஷ் ரகு தற்போது தயாரிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கிய நிலையில், தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் கோவையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 

இப்படத்தின் தொடக்க விழா நிகழ்வில், சேரன் clap - in சொல்ல, சசிக்குமார் camera on செய்ய, அமீர் clap அடித்து, பாலா action சொல்ல, முதல் காட்சியை இயக்குநர் பாலா படமாக்கினார் 

இயக்குனர் SA சந்திரசேகர், நடிகர் சிவக்குமார், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, திருமதி் பூர்ணிமா பாக்யராஜ மற்றும் இயக்குனர் 

கரு பழனியப்பன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



நந்தா-மௌனம் பேசியதே படங்களுக்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்திருந்த நிலையில் முதன்முறையாக இசைஞானி'இளையராஜா 

நெகிழ்ச்சியான கதைக்களமும், ஊக்கமளிக்கும் திரைக்கதையும் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு,  இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு, வாஞ்சி முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, பரதன் வசனம் எழுத, பாலுமகேந்திரா கலை இயக்கத்தில், பூபதி வேதகிரி படத்தைத் தொகுக்க, மீரா ஆடை வடிவமைக்க,  பாலு ஸ்டில்ஸ் எடுக்க, பழநி அமாவாசை உடைகள் வடிவமைக்க, ஒலிக்கலவையை ஹரிஷ் கவனிக்க, மக்கள் தொடர்பை நிகில் முருகன் கவனிக்க, கோபி பிரசன்னாவின் விளம்பர வடிவமைப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பை விஜயகுமார் R S, காசி வர்மன் கவனிக்கின்றனர்.

இப்படத்தில் நடிக்கும் முன்னணி நட்சத்திரங்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அபராஜீத் பிலிம்ஸ் தமிழ் சினிமாவில் திறமையான இயக்குநர்கள் மற்றும் கலைஞர்களை அடையாளப்படுத்தி ஊக்குவித்து வரும் தனது திரைப் பயணத்தை இந்த திரைப்படத்தின் மூலம் தொடர்கிறது.

இந்தியாவின் முதல் வெர்டிகல் திரைப்பட விழா – விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது!


 

200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 2 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை - இந்தியாவின் முதல் வெர்டிகல் திரைப்பட விழா!

சென்னை, ராமாபுரத்தில் உள்ள எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில், ஐஎஸ்எம் (ISM) நிறுவனத்தின் சார்பில் சைமன் போஸ் மற்றும் பாப் சுரேஷ் ஆகியோரின் முன்னெடுப்பில், இந்தியாவின் முதல் வெர்டிகல் திரைப்பட விழா மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் வெர்டிகல் திரைப்பட வடிவத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்த விழாவில், 200-க்கும் மேற்பட்ட வெர்டிகல் திரைப்படங்கள் பங்கேற்றன. அவற்றிலிருந்து சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, படைப்பாளர்களைப் பாராட்டும் வகையில் மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

வெற்றியாளர்களுக்குப் பரிசுத்தொகை!

இவ்விழாவில் முதல் பரிசாக ரூ.1,00,000, இரண்டாம் பரிசாக ரூ.50,000, மூன்றாம் பரிசாக ரூ.25,000 வழங்கப்பட்டன. மேலும், ஐந்து சிறப்புப் பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு தலா ரூ.5,000 வீதம் வழங்கப்பட்டது.

ட்ரீம் ஹவுஸ் தயாரிப்பில், ஹுசைன் இயக்கிய ‘நிலவே வா’ திரைப்படம் முதல் பரிசை வென்றது. போட்டியில் பங்கேற்ற திரைப்படங்களின் படைப்பாற்றல், தொழில்நுட்பத் திறன் மற்றும் கதை சொல்லும் அணுகுமுறையை அங்கீகரிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன.

திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்பு!

இந்த விழாவில் இயக்குநர் சுப்ரமணிய சிவா, இயக்குநர் ஹாரூண், நடிகர் ஆதவன், நடிகை சுபப்பிரியா, ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரீநிஷா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

மேலும், இயக்குநர் ஹாரூண் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள ‘பரீட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் பார்வையாளர்களுக்காகப் பிரத்யேகமாகத் திரையிடப்பட்டது. 

மேலும் இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'Death Railway' திரைப்படத்தின் ட்ரெய்லரும் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது.

Dealzta செயலி அறிமுகம்!

இந்த விழாவின் மற்றொரு சிறப்பு அம்சமாக, Dealzta செயலி (App) அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. திரைப்பட விழாவுடன் புதிய டிஜிட்டல் முயற்சிகளும் இடம்பெற்றது நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.


புதிய தலைமுறை திரைப்படப் படைப்பாளர்களுக்கு ISM-இன் முன்னெடுப்பு!

குறுகிய நேரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் வெர்டிகல் திரைப்படங்கள், டிஜிட்டல் தளங்களில் புதிய கதை சொல்லும் வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. இந்த வளர்ச்சியை மையமாகக் கொண்டு, புதிய இயக்குநர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு தளமாக இந்தத் திரைப்பட விழா அமைந்தது.

திரைப்படத் துறையில் புதிய முயற்சிகளுக்கு ஊக்கமளித்து, திறமையான படைப்பாளர்களை அடையாளம் கண்டு, அவர்களின் படைப்புகளுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கும் நோக்கில் ஐஎஸ்எம் நிறுவனம் இந்த விழாவை முன்னெடுத்தது.

விழாவிற்கு ஆதரவளித்த நிறுவனங்கள்

தலைப்பு ஆதரவாளர் (Title Sponsor): Meat & Eat

அரங்க ஆதரவாளர் (Venue Partner): SRM கல்வி நிறுவனம்

இணை ஆதரவாளர்கள் (Associate Sponsors):

- Dealzta

- Mega Builders

- Light’s On Media

- V Square

- RNB Production

- Thambi Annan Biriyani

- Korkai


இந்த விழா சிறப்பாக நடைபெற ஆதரவளித்த அனைத்து நிறுவனங்களுக்கும், திரையுலகப் பிரபலங்களுக்கும், நடுவர்களுக்கும், திரைப்படப் படைப்பாளர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் ஐஎஸ்எம் நிறுவனம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.


புதிய தலைமுறை திரைப்படக் கலைஞர்களின் திறமைகளுக்கு மேடை அமைத்து, வெர்டிகல் திரைப்பட உலகில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியாக இந்தத் திரைப்பட விழா அமைந்தது.