Wednesday, August 27, 2025

18 மைல்ஸ்’ மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ள நடிகை மிர்னா

*’18 மைல்ஸ்’ மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ள நடிகை மிர்னா!*

மனதின் தூய்மையான காதலை கருவாகக் கொண்டு உருவாகியுள்ளது ’18 மைல்ஸ்’. எல்லைகளையும் பல தடைகளையும் தாண்டி காலம் கடந்த உணர்வுகளோடு உருவாகியுள்ள இந்தக் கதையில் தூய்மையான காதலை உணரலாம். நடிகர்கள் அசோக் செல்வன் - மிர்னா நடிப்பில் உருவாகியுள்ள '18 மைல்ஸ்'-ல் இருந்து சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸில் கடினமான தருணங்கள், அன்பு, கண்ணைக் கவரும் காட்சிகள் எனப் பலவற்றை பார்க்க முடிந்தது. இதனை சதீஷ் செல்வகுமார் இயக்கி இருக்க சித்து குமார் இசையமைத்திருக்கிறார். பாடல் வரிகளை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியிருக்கிறார்.  

ஒரு அகதிக்கும் கடலின் சட்டத்தை இயற்றுபவருக்கும் இடையிலான பிணைப்பு, தியாகம், அன்பு மற்றும் இன்னும் பேசப்படாத பல உணர்வுகளையும் ’18 மைல்ஸ்’ பேசுகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் தனது திறமையை நிரூபித்த நடிகை மிர்னா ’18 மைல்ஸ்’ கதையில் மேலும் அழுத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அன்புக்கும் அரவணைப்பிற்கும் ஏங்கும் மனதை தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் மிர்னா. தனது கடமைக்கும் மனதிற்கும் இடையிலான அலைக்கழிப்பை தனது நடிப்பில் சரியாக பதிய வைத்திருக்கிறார் நடிகர் அசோக் செல்வன். 

இதில் நடித்த அனுபவம் குறித்து நடிகை மிர்னா பகிர்ந்திருப்பதாவது, “நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு உண்மையான அங்கீகாரம். அந்த வகையில், ஆழமான, இளகிய அதே சமயம் உண்மையான உணர்வுகளை நடிப்பில் கொண்டு வர வேண்டிய கதாபாத்திரம் ’18 மைல்ஸ்’-ல் எனக்கு கிடைத்திருக்கிறது. மெளனம், உணர்வுகள் மூலமே பெரும்பாலும் இந்தக் கதையில் நடித்திருக்கிறேன். வசனம் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். இப்படி ஒரு அற்புதமான வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சதீஷூக்கு நன்றி” என்றார். 


நடிகர் அசோக் செல்வனுடன் பணிபுரிந்தது பற்றி பேசியதாவது, “தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் சிறப்பாக வர வேண்டும் என்பதில் அசோக் தெளிவாக இருந்தார். அவருடைய டெடிகேஷன் எனக்கும் இன்ஸ்பையரிங்காக இருந்தது. வெறும் நடிப்பு மட்டுமே என்றில்லாமல் அன்பு மற்றும் பொறுப்பு ஆகிய இரண்டையும் கையாள வேண்டும் என்ற இடத்தில் இருக்கும் இரு நபர்களின் கதை. ’18 மைல்ஸ்’ கிளிம்ப்ஸூக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களும் கதையின் உணர்வை சரியாகப் புரிந்து கொண்டுள்ளனர். '18 மைல்ஸ்' வெளியாகும்போது ரசிகர்கள் எந்தளவிற்கு கதையின் உணர்வுகளுடன் தங்களைப் பொருத்தி பார்த்துக் கொள்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமுடன் இருக்கிறேன்” என்றார். 

இந்தத் தலைமுறை நடிகர்களில் திறமையும் அழகும் கொண்ட வெகுசிலரில் ஒருவராக வலம் வருகிறார் நடிகை மிர்னா. அடுத்தடுத்து தனது நடிப்புத் திறனை மேலும் மெருகேற்றும் விதமாக படங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்தப் படங்கள் குறித்தான அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம்.

KALAIGNAR TV – GOWRI SERIALதுர்காவின் உயிரை காப்பாற்றிய கனகா - உண்மையை தெரிந்துகொள்ளும் ஆவுடையப்பன் - பரபரப்பான திருப்பங்களுடன் “கௌரி”

KALAIGNAR TV – GOWRI SERIAL
துர்காவின் உயிரை காப்பாற்றிய கனகா - உண்மையை தெரிந்துகொள்ளும் ஆவுடையப்பன் - பரபரப்பான திருப்பங்களுடன் “கௌரி”
 
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தெய்வீக மெகாத்தொடர் "கெளரி". மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, துர்கா உயிரோடு வந்தது எப்படி? துர்காவுக்கு வைத்தியம் பார்த்தது யார்? என்பது குறித்து ஆவுடையப்பனின் குடும்பத்துக்கு தெரிய வருவதால் தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது.
 
வீணாவின் திட்டத்தின் பேரில், துர்காவை காப்பாற்ற உதவிய வைத்தியரை சந்திக்கும் ஆவுடையப்பன் குடும்பத்தினரிடம், துர்கா உயிரோடு வந்தது எப்படி மற்றும் துர்காவுக்கு வைத்தியம் கொடுத்தது கனகா தான் போன்ற உண்மைகளை வைத்தியர் போட்டுடைக்கிறார்.
 
இவ்வாறாக, ஒரே தோற்றத்தில் இருக்கும் துர்கா - கனகா பற்றிய மர்மங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் அடுத்து என்ன நடக்கும்? அடுத்ததாக ஆவுடையப்பன் என்ன திட்டம் தீட்டுவார்? போன்ற மர்மங்களுடனும், துர்கா மற்றும் கனகாவின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்? என்கிற எதிர்பார்ப்போடும் தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

கடுக்கா - திரைப்பட விமர்சனம்

கடுக்கா – எஸ். எஸ். முருகராசு இயக்கிய இந்த படம் காதல், நட்பு, ரகசியம் ஆகியவற்றை அழகாக கலந்த ஒரு இனிய கிராமத்து கதை. அனந்த் பொன்னுசாமி தயாரித்த இந்த படம் 2 மணி 3 நிமிடம் மட்டுமே ஓடுகிறது. குறைந்த நேரத்தில் மனதை நெகிழ வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

கதை ஒரு அழகான கிராமத்தில் தொடங்குகிறது. இரண்டு பிரிக்க முடியாத நண்பர்கள் ஒரே பெண்ணை விரும்ப ஆரம்பிப்பது தான் கதையின் மையம். ஆரம்பத்தில் சிரிப்பும் சண்டையும் நிறைந்த காதல் போட்டியாக இருந்தாலும், பின்னர் அந்த பெண்ணைச் சுற்றியுள்ள ஒரு ரகசியம் கதையை முற்றிலும் மாறவைக்கிறது. அதனால் படம் காதல் மட்டுமல்ல, சுவாரஸ்யமான திருப்பங்களுடனும் சென்று பார்வையாளர்களை கவர்கிறது.

விஜய் கவுரிஷ், ஸ்மேகா மணிமேகலை ஆகியோர் நட்பும் காதலையும் இயல்பாகவே நடித்திருக்கிறார்கள். சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன் ஆகியோரின் நடிப்பும் கதைக்கு வலிமை சேர்க்கிறது. கே.வி.என். மணிமேகலைவும் உணர்ச்சிகளை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் படத்தின் மையம், நாயகி தான். அவள் ஒரே நேரத்தில் மென்மையையும் மர்மத்தையும் வெளிப்படுத்திய விதம் கதையை முழுமையாக தாங்கி நிற்கிறது.

படத்தின் தொழில்நுட்ப தரமும் சிறப்பாகவே இருக்கிறது. கிராமத்து அழகை ஒளிப்பதிவு அழகாக பிடித்திருக்கிறது. எம். ஜான்சன் நோயலின் எடிட்டிங் கதைக்கு சரியான ஓட்டத்தை கொடுக்கிறது. அஸ்வத்தின் இசை, நகைச்சுவை தருணங்களிலும், உணர்ச்சி நிறைந்த காட்சிகளிலும் உயிர் ஊட்டுகிறது.

கடுக்கா வின் பலம் – இது ஒரு சாதாரண கிராமத்து காதல் கதை அல்ல. சிரிப்பும், காதலும், மர்மமும் கலந்திருப்பதால் படம் முழுவதும் ஈர்க்கும். நட்பு, காதல், மறைக்கப்பட்ட உண்மை ஆகியவற்றை எளிமையாகவும் உணர்ச்சியுடனும் சொல்லியிருப்பது சிறப்பு.

மொத்தத்தில் கடுக்கா – சுவாரஸ்யமாகவும் மனதிற்கு நெருக்கமாகவும் இருக்கும் ஒரு நல்ல படம். உணர்ச்சியோடு கூடிய காதல் கதைகளையும் சின்னச் சின்ன மர்மங்களையும் விரும்புகிறவர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள்.



Tuesday, August 26, 2025

பிரம்மாண்டமாக தொடங்கிய ரவி மோகன் ஸ்டுடியோஸ்நான் இயக்குனராகி விட்டேன் - மகிழ்ச்சி வெள்ளத்தில் ரவி மோகன்அம்மா என்பது உறவல்ல; உணர்வு! - நடிகர் ரவி மோகன் நெகிழ்ச்சி

பிரம்மாண்டமாக தொடங்கிய ரவி மோகன் ஸ்டுடியோஸ்

நான் இயக்குனராகி விட்டேன் - மகிழ்ச்சி வெள்ளத்தில் ரவி மோகன்
அம்மா என்பது உறவல்ல; உணர்வு! - நடிகர் ரவி மோகன் நெகிழ்ச்சி
நான் கடினமான சூழலில் இருந்து வந்தவள்; ரவி சிறப்பான சூழ்நிலையில் இருந்து வந்தவர்! ரவி மோகன் ஸ்டுடியோஸ்-இன் வெற்றி தான் எங்களுடைய கனவு!! - பாடகி கெனிஷா

என்னையும் ரவியையும் போல அனைத்து நடிகர்களும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினால் பல நல்ல விஷயங்கள் வெளியாகும் - நடிகர் சிவகார்த்திகேயன்

இவ்வளவு திறமைகளை வைத்துக் கொண்டா என்னிடம் இத்தனை வருடம் நடித்துக் கொண்டிருந்தாய் - ராஜா மோகன் பெருமிதம்

ரவி மோகனுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் - கன்னட நடிகர் டாக்டர் சிவராஜ்

நடிகர் ரவி மோகன் தனது புதிய அத்தியாயமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தை என்று பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார். அதனுடன், அவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படத்தின் அறிமுகம், இயக்குனர் கார்த்தியோகியின் “BROCODE” திரைப்படம் என ரவி மோகன் ஸ்டுடியோஸின் தயாரிப்புகளை அறிவித்தனர்.

இவ்விழாவில், ரவி மோகன், கெனிஷா, சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கார்த்திக் யோகி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ கௌரி பிரியா, மணிகண்டன், கண்ணா ரவி, அர்ஜுன் அசோக், மாளவிகா மனோஜ், ரித்தீஷ், ஜெனிலியா, பேரரசு என பலர் இவ்விழாவில் கலந்துக்கொண்டனர்.

இயக்குனர், தயாரிப்பாளர் & நடிகர் ரவி மோகன் பேசும்போது,

என்னுடைய அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி இந்த தருணத்தில் நான் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.

நான் இயக்குனர் ஆகி விட்டேன். நான் இயக்குனர் ஆகினால் யோகி வைத்ததால் படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அதற்கான புரோமோவும் எடுத்துவிட்டேன். இன்று என்னுடைய இரண்டு படங்களின் பூஜையும் ஒரே நேரத்தில் நடப்பதில் மிகவும் மகிழ்ச்சி.

கார்த்தியும் நானும் ஆடம்பரத்தை விரும்பாதவர்கள். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது தாய்லாந்தில் சாலையில் அவ்வப்போது பேசிக்கொண்டே நடந்து போவோம். அப்போது எங்களுடைய மீசை, தாடி, உடைகளை பார்த்து இருவரும் அண்ணன் தம்பிகளா என்று பலர் கேட்டிருக்கிறார்கள். அந்த ப்ரோ கோட்-ம் அன்பும் வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

சினிமா... கோடிக்கணக்கான மக்களுக்கான பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு உணர்ச்சி. திரையரங்கில், யாரோ ஒருவரின் வசனமும் நடிப்பும் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும், கண்ணீர் சிந்தவும் செய்கிறது. பலரின் உழைப்பால் தான் ஒரு படம் உருவாகிறது. அந்தப் படங்களில் மக்களால் விரும்பப்பட்டவை வெற்றியை அடைகின்றன. பல நல்ல படங்கள் மக்களால் காலங்கள் கடந்தும் இன்னமும் கொண்டாடப்படுகின்றன.

ஒரு சாதாரண நபரை கூட, உலகம் கொண்டாடும் ஒரு பிரபல நட்சத்திரமாக மாற்றும் சக்தி சினிமாவுக்கே உண்டு.  அதில் நானும் ஒருவன் தான்.

எனக்கு இந்த உலகத்தில் மிகவும் பிடித்தது என் ரசிகர்கள். அவர்கள் எனக்குக் கொடுத்த பரிசு – இந்த சினிமா. நடிப்பதைக் கடந்து, சினிமாவில் நான் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவது நிறைய இருக்கிறது. அது, நான் நீண்ட நாட்களாகக் கனவு காண்பதும்கூட.

அதில் ஒன்று தான் ரவி மோகன் ஸ்டுடியோஸ் – என் சொந்த தயாரிப்பு நிறுவனம். என் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படியாக, என் மனசுக்கு பிடித்த இரண்டு முக்கிய விஷயங்களை வைத்திருக்கிறேன்.

ஒன்று – இயக்குநர் கார்த்திக் யோகியின் இயக்கத்தில் நான் நடிக்கும் ப்ரோ கோட் படம்.
இன்னொன்று – நம்ம யோகிபாபுவை வைத்து, நான் முதன்முறையாக இயக்கவிருக்கும் மற்றொரு படம்.

முக்கியமாக உங்களிடம் சொல்ல வேண்டிய விஷயம் இன்னும் இருக்கு. ரவி மோகன் ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்டது, என்னுடைய படங்களை தயாரிப்பதற்காக மட்டுமல்ல. பலரின் கனவுகளுக்கு உயிர் கொடுக்கத்தான்.

அதில், முதல் முறையாக திரைப்படம் இயக்கவிருக்கும் புதிய இயக்குநர்கள், இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு, முன்தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அதோடு, ஓடிடி தளங்களில் கற்பனை மற்றும் ஆவணப்படத் தொடர்கள் என பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

மேலும், சரியான முறையில், நல்ல உள்ளடக்கத்துடன் உருவாக்கப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் படங்களுக்கு ஆதரவளிக்க எப்போதும் ஒரு துணைக் கை இருக்கும். நல்ல கைத்திறமைகளுக்கு, திரை கதவுகள் திறக்கப்படும்!

புது புது பாடல்களை உருவாக்கும் சுயாதீன இசைத் திறமையாளர்களுக்கு அடையாளம் கொடுக்கவும் இதே நிறுவனம் பங்கெடுக்கிறது.

சினிமா துறையில் ஆரம்ப காலத்திலிருந்தே எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள் நடிகர்களாகவும், இயக்குநர்களாகவும். அவர்களில் பலர் ஏற்கனவே ரவி மோகன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ளனர். இன்னும் பல நண்பர்களுடன் சேர்ந்து நல்ல படங்கள் செய்ய வேண்டும்.

இதுவே எங்களின் முக்கிய நோக்கம். இது ஒரு நீண்ட பயணம். தனி ஒருவரின் உழைப்பையும் கனவையும் தாண்டி வெற்றியை அடைவதற்கு, இதில் பயணிக்கப்போகும் உங்களின் 200% பங்களிப்பும் உறுதியும் இருக்கும் என்பதே நம்பிக்கை. அதற்காகத்தான் இந்த தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எல்லாரும் பயன் அடைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

சிவராஜ் அண்ணா எனக்காக இங்கு வந்து இந்த அளவிற்கு பேசுவார் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை மிக்க நன்றி அண்ணா. நான் உங்க வீட்டிற்கு வந்தேன் நீங்கள் சாப்பாடு போட்டீர்கள் உங்கள் வீட்டு உப்பை சாப்பிட்டு இருக்கிறேன் அந்த நன்றி எனக்கு எப்போதும் இருக்கும்.

கன்னடத்தில் சிவா அண்ணன் படம் தான் சூப்பர் ஹிட் ஆகும் அவருடைய படங்களை எனது தந்தை வாங்கி தெலுங்கில் வெளியிடுவார் அப்போது இருந்தே நான் சிவா அண்ணனை பார்த்து தான் வளர்ந்தேன் அவருடன் ஒரு காட்சியில் நடித்தாலும் எனக்கு சந்தோஷம்தான்.

ரவி மோகன் ஸ்டுடியோஸ் நன்றாக வளர்ந்த பிறகு நிச்சயம் சிவகார்த்திகேயனுக்கு அவர் விருப்பப்படி வாய்ப்பு கிடைக்கும்.

இன்று இன்னொரு இன்ப அதிர்ச்சி, நான் இயக்குனராக முடியும், தயாரிப்பாளராக முடியும் என்று நம்பிக்கையோடு உன்னால் பாடலாசிரியராகவும் ஆக முடியும் என்று கெனிஷா நம்பிக்கை கொடுத்தார். அந்த நம்பிக்கையில் நான் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன். அவர் அம்மாவை பற்றி எழுத சொன்னார். ஆனால், நான் என் அம்மாவை மனதில் நினைத்து எழுதினேன். அம்மா என்பது உறவு அல்ல, உணர்வு என்று அப்போதுதான் புரிந்தது. நான் எழுதிய பாடல் வரிகளுக்கு கெனிஷாவே இசையமைத்து பாடியுள்ளார் என்றார்.

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் பேசும்போது,

இங்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தயாரிப்பு நிறுவனம் என்பது சாதாரண விஷயம் அல்ல. நம்முடைய கனவை திரையில் கொண்டு வரக்கூடிய மிகவும் பொறுப்பு மிகுந்த விஷயம். ரவிமோகன் சரி எனக்கு அவ்வளவாக தெரியாது. நான் சார் என்று தான் கூப்பிடுவேன். சினிமா துறையில் அவர் என்னைவிட சீனியர்.

பராசக்தி படத்தின் போது தான் அவருடன் நெருங்கி பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. மிகவும் நல்ல மனிதர் நம் அவருடைய படங்களை பார்த்து அவர் இப்படித்தான் இருப்பார் என்று ஒரு எண்ணம் இருக்கும். அவர் அப்படியேதான் இருக்கிறார். இந்த விழாவிற்கு என்னை அழைத்தது மட்டுமில்லாமல் நேற்று எனக்கு போன் செய்து, நாளைக்கு நிச்சயம் வந்துருங்க ப்ரோ என்று நினைவுபடுத்தினார்.

 இங்கு வந்து பார்த்த பிறகு அவருக்குள் இருக்கும் அத்தனை கனவுகளும் ஒரு நடிகராக தயாரிப்பாளராக பொறுப்பேற்று என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து இருக்கிறார். ப்ரோ கோட் படத்தின் ப்ரோ மூவி திருட்டுத்தனமாக நான் பத்து நாட்களுக்கு முன்பே பார்த்து விட்டேன். இயக்குனர் கார்த்திக் யோகி எனக்கு காண்பித்தார். எனக்கு மிகவும் பிடித்த ஜானர். அப்போதே, முதல் பாதியை காண்பித்து விட்டீர்கள், அடுத்த பாதியை எப்போது காட்டப் போகிறீர்கள் என்று கேட்டேன். அந்த அளவிற்கு மிகவும் நகைச்சுவையாக இருந்தது. ப்ரோ கோட் என்ற பெயரே சூப்பர். பெயரிலேயே அனைத்தும் வந்துவிட்டது. ரவி மோகன் ஸ்டுடியோவில் நடிகராக நீங்கள் பணியாற்றி இருக்கும் ப்ரோ கோட் படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்.

அடுத்து, யோகி பாபு சாருக்கு வாழ்த்துகள். அவருடைய நகைச்சுவைக்கு அவர் எப்போதும் எல்லை வகுத்துக் கொண்டதே கிடையாது. ஆர்டினரி மேன் உடைய வாழ்க்கை ஒரு எக்ஸ்ட்ரா ஆர்டினரி  பயணமாக இருக்கும் என்பதை கூறுவது தான் இந்த படம். அதுக்கு பொருத்தமானவர் யோகி பாபு தான். ஆனால் அவரிடம் கேட்டால் குரு நான் காமெடி நடிகன் என்பார். ஆனால், அவருக்குள் ஒரு ஹீரோ இருக்கிறார் என்பதை படத்தை பார்த்தால் தெரியும்.

ஒரு நடிகர் இயக்குனர் ஆவது சாதாரண விஷயம் அல்ல. சிறு வயது முதலே சினிமாவில் பயணித்ததால் அந்த நம்பிக்கை அவருக்கு வந்திருக்கிறது. எல்லோருக்கும் இயக்குனராக வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால், எல்லோராலும் ஒரு படத்தை இயக்கி விட முடியாது. அதேபோல், எல்லா நடிகர்களுக்கும் இயக்குனராகும் தகுதி வந்து விடாது. ஆனால், ரவி மோகனுக்கு இருக்கிறது. அடுத்து கார்த்தியும் படம் இயக்குவார் என்று நம்புகிறேன். அவருக்குள்ளும் இயக்குனர் இருக்கிறார். அதேபோல், மணிகண்டனும் விரைவில் இயக்குனர் ஆகி விடுவார் என்று நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள்.

இப்படத்தின் ப்ரோமோ பார்க்கும்போது நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிகிறது. ரவி மோகன் இயக்கும் ஆர்டினரி மேன் படமும் வெற்றியடைய வாழ்த்துகள்.

அடுத்து காக்கி ஸ்குவாட். இப்படத்தின் டீசர் பார்த்தேன். நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது. கண்ணா ரவியுடைய மண்டேலா, குருதி ஆட்டம், இப்போது கூலி வரைக்கும் அவருடைய நடிப்பை பார்த்து வருகிறோம். அதேபோல் இந்த படத்திலும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

இப்படத்தின் இயக்குனர் சக்தியையும் எனக்கு தெரியும். இதற்கு முன்பு மூன்று படம் இயக்கி இருக்கிறார். எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசர் ஆகுவும் இருக்கிறார். எப்படி இரண்டு வேலைகளையும் செய்கிறார் என்று தெரியவில்லை.

இப்போது ரவி மோகன் ஸ்டுடியோ என்று இன்னொரு தயாரிப்பு நிறுவனம் வந்துவிட்டது. தைரியமாக ஒரு கதையை நம் தேர்வு செய்யலாம். நானும் அது போல ஒரு சில படங்களை அளித்துக் கொண்டிருக்கிறேன். இதுபோல இன்னும் ஒரு 15 தயாரிப்பு நிறுவனங்கள் வந்துவிட்டால், நிறைய நல்ல விஷயங்களை வெளிக்கொண்டு வர முடியும். எங்கள் மீது படும் வெளிச்சம் அதன் மீதும் பட்டால் இதுவரை மக்கள் எங்களுக்கு கொடுத்த இடத்தை நாங்கள் சரியாக பயன்படுத்தி இருக்கிறோம் என்று மகிழ்ச்சியாக இருக்கும். இந்த மூன்று படங்களும் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மூன்று படங்களின் வெற்றி விழாவிற்கும் அழையுங்கள். கண்டிப்பாக வந்து கலந்து கொள்வேன்.

நான் கல்லூரியில் படிக்கும்போது சந்தோஷ் சுப்பிரமணியம் படம் வந்தது, ஜெனிலியாவை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்று ஜெனிலியா மற்றும் ரவி மோகனின் நடிப்பை பார்த்ததும் கல்லூரி நாட்கள் நினைவிற்கு வந்தது. இருவரும் மீண்டும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும்.

ரவி மோகன் தயாரிப்பில் அல்லது இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். தயாரிப்பில் அவரை விட நான் சீனியர். ஆகையால் ரவி மோகன் சார் உங்களுக்கு எப்போது சந்தேகம் வந்தாலும் என்னிடம் தாராளமாக கலந்து கொள்ளலாம்.

பராசக்தி படத்தில் நானும் ரவி மோகன் சாரும் நடித்ததை பற்றி கூறுவதற்கு நிறைய இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பம் வரும்போது கூறுகிறேன்.

சிவராஜ் சாரை எங்க பார்த்ததில் மகிழ்ச்சி என்றார்.

நடிகர் டாக்டர் சிவராஜ் பேசும்போது,

ஜெயம் படத்தில் இருந்து எப்போது வரைக்கும் ரவி மோகனின் வளர்ச்சி அற்புதமான வளர்ச்சியாக இருக்கிறது. அவரை எனக்கு அவ்வளவாக பழக்கம் இல்லை ஆனாலும் அவர் படங்களை நான் பார்த்திருக்கிறேன் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக செய்வார். குறிப்பாக சகலகலா வல்லவன் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் சென்னை என்னுடைய ஊர். எனக்கு எப்போதும் சென்னை வருவது பிடிக்கும்.

சேகர் மற்றும் விஜய் பிரசாத் இருவரும் என்னுடைய பால்ய நண்பர்கள். 45 வருடங்களாக நாங்கள் நண்பர்கள். அவர்களுடன் இங்கு வந்திருக்கிறேன்.

ஆர்டினரி மேன் என்று இப்படத்திற்கு அழகாக பெயர் வைத்திருக்கிறார்கள். சுருக்கமாக ஓம் என்று அழைக்கப்படும் இப்படம் நிச்சயம் மாபெரும் வெற்றி அடையும். ஏனென்றால், ஓம் என்றாலே நேர்மறையான அதிர்வலைகள் தான் அங்கு இருக்கும்.

ரவி மோகனுடன் நான் இணைந்து நடித்தால், அண்ணனாகவோ நண்பனாகவும் மெதுவாக இருந்தாலும் நேர்மறையான கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பேன்.

ரவி மோகனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். கார்த்திக் சாருக்கு நன்றி என்றார்.

நடிகர் கார்த்தி பேசும் போது,

என் நண்பன் ரவி தயாரிப்பாளராக ஆகும்போது ஒரு நண்பனாக நான் சில விஷயங்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இங்கு வந்து பார்க்கும்போது தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் தயாரிப்பு நிறுவனத்தை இவ்ளோ பெரிய விழாவாக நடத்தியதில்லை.

அதுமட்டுமில்லாமல், அவர் ஏன் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என்று கூறிய போது மிகவும் பெருமையாக இருந்தது. இப்போது தன்னை கை கொடுத்து தூக்கி விட மாட்டார்களா என்று பல திறமையான இயக்குனர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரவிக்கு அப்பா இருந்தார், அண்ணன் இருந்தார். ஆனால், அனைவருக்கும் நான் இருக்கிறேன் என்று ரவி கூறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

மேலும், எனக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. ப்ரோ கோட் என்பதை கேட்கும் போது புதுசாக இருக்கிறது. ஆர்வமாக இருக்கிறது.

ரவியை நான் முதன்முதலாக பார்த்தது எப்போது என்று கூற ஆசைப்படுகிறேன். நான் சினிமாவுக்கு வரும்போது சண்டை பயிற்சி வகுப்பிற்கு சென்றேன் அங்கு தான் ரவி அண்ணனை சந்தித்தேன். சாதாரணமாக நாங்கள் மூன்று அடியில் குதித்தால் ரவி அண்ணன் 10 அடியில் குதிப்பார். ஐயையோ! சினிமா என்றால் இப்படித்தான் இருக்குமோ என்று பயந்தேன். பிறகு எங்களை அழைத்து சென்று ஜூஸ் வாங்கி கொடுப்பார். காசு கொடுத்தால், நீங்க எல்லாம் சின்ன பசங்க காசு குடுக்க கூடாது என்று அவரே கொடுப்பார். சிறிது காலத்திற்கு பிறகு தான் அவர் என்னைவிட சின்ன பையன் என்று தெரிந்தது. அதன் பிறகு அண்ணா என்று கூப்பிட்டால் அடி விழும் என்று ரவி என்று கூப்பிட ஆரம்பித்தேன். பிறகு அவருடைய முதல் படத்தை பார்த்த பிறகு அவருடைய உடைகள் போன்று எல்லா விஷயங்களையும் பேசுவோம். அப்படித்தான் எங்களுடைய நட்பு ஆரம்பித்தது.

 பொன்னியின் செல்வன் படத்தில் ரவியை பார்த்து நான் மிகவும் மகிழ்ந்தேன். ஏனென்றால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டிலேயே ராஜாவாக நடிக்கப் போவது யார் என்ற ஒரு கேள்வி இருந்தது. தாய்லாந்தில் படப்பிடிப்பில் அவர் ராஜாவாக உக்காந்திருந்ததை பார்த்தபோது ராஜாவுக்கு உரிய அனைத்து லட்சணங்களும் அவரிடம் இருந்தது. அதைவிட அவரிடம் எனக்கு பிடித்த விஷயம் என்றால் மனதால் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் ரவி. அதை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது.

 இரவு உனது நேரத்தில் எனக்கு ஒரு கதையை சொன்னார். அதை கேட்டதும் ஜிம் கேரி அளவிற்கு இருந்தது அவருடைய ஒரு பக்கம் மட்டும் தான் நமக்கு தெரியும். ராஜா அண்ணா கூட திரையில் இன்னும் அதை காட்ட வில்லை, யோகி பாபுவை வைத்து இயக்கும் படத்தில் அதை பார்க்கலாம் என்று நினைக்கிறேன். ரவி எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார் என்று தான் நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவருக்குள் சீரியஸ் ஆன ஒரு மனிதர் இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. உலக சினிமா அனைத்தையும் அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டே இருப்பார். அவருக்கு படத்தொகுப்பும் மிக நன்றாக தெரியும். அதாவது ஒருவன் படிக்காதது போன்று இருக்கும். ஆனால், நல்ல மார்க் எடுப்பதை நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா?! அது போல் தான் ரவியும், என்றார்.

இயக்குனர் ராஜா மோகன் பேசும்போது,

ரவியுடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு 17 வயது இருக்கும் போது அவனுக்கு 11 வயது அப்போது பரதநாட்டியம் 5 மணி நேரம் தொடர்ச்சியாக அரங்கேற்றம் செய்தான். அப்போது இவ்வளவு வருடமாக மிரட்டி உருட்டி கொண்டிருந்து அவனை அண்ணார்ந்து பார்த்தேன். அதேபோல் இன்றும் அண்ணார்ந்து பார்க்கிறேன்.

புதுப்பேட்டை படத்தில் ஒரு வசனம் வரும் அது போல, இவ்வளவு திறமைகளையும் வைத்துக் கொண்டு தான் என்னிடம் இத்தனை வருடம் நடித்துக் கொண்டிருந்தாயா?! என்று தான் கேட்கத் தோன்றுகிறது. முதல் படத்தில் இருந்து எப்போது வரை நான் சொன்னதை கேட்டு இயக்குனரின் நடிகராக இருந்திருக்கிறான். இப்போது இயக்குனராக நிச்சயம் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது. இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் ரவி நன்றாக இருக்க வேண்டும் என்று தான் மனதார நினைக்கிறார்கள். இவ்வளவு பேரை அவன் சம்பாதித்து வைத்திருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

பாடகி கெனிஷா பேசும் போது,

அனைவருக்கும் வணக்கம், நான் ஒரு பாடகி, இசை தயாரிப்பாளர், ஆன்மீக சிகிச்சையாளர் தற்போது “ரவி மோகன் ஸ்டுடியோஸ்”-ன் பங்குதாரர். இந்த வாய்ப்பை வழங்கிய திரு.ரவி மோகன் அவர்களுக்கு நன்றி. கடவுளுக்கும் பிரபஞ்சத்துக்கும் நன்றி. அம்மா, அப்பா மற்றும் ராஜா அண்ணா அவர்களுக்கு நன்றி. நான் நீண்ட காலமாக தனிமையில் இருந்தேன். இப்போது ரவி அவர்களின் மூலம் இப்படி அழகான மனிதர்கள் கிடைத்துள்ளார்கள்.

நான் மிகவும் கடினமான சூழலில் இருந்து வந்த ஒருவர், ரவி அவர்கள் மிகவும் சிறப்பான ஒரு சூழலில் இருந்து வந்தவர். நாங்கள் இருவரும் இணைந்து, ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை பெரிய அளவில் பிரபலமாக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். எங்களின் கனவும் அது தான். எங்களுடைய குழு இல்லாமல் இன்றைய நாள் சாத்தியம் ஆகிருக்காது.

ரவி அவர்களை பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் வாழ்கையில் மிகவும் கடினமான சூழ்நிலையை கடந்து வந்து இருக்கிறார். அவருக்கு என்ன சோகம் இருந்தாலும், வலி இருந்தாலும் வெளியில் அதை காட்டிக்கொள்ளாமல் மற்றவரிடம் பழகுவார். அது சரி தான். ஆனால், நீங்கள் யார் உங்களிடம் வந்தாலும், அவர் இருளில் இருந்தாலும் நீங்கள் அவர் வாழ்கையை வெளிச்சமாக மாற்றி விடுகிறீர்கள். இப்போது என்னிடம் 7 முழு ஸ்கிரிப்ட் உள்ளது. அவ்வளவு திறமையான நீங்கள், உங்களின் அனைத்து திறமைகளையும் இந்த உலகம் பார்க வேண்டும். எனக்கு மிகப் பெரும் பேராசை உள்ளது. என்னவென்றால், இந்த உலகத்திலுள்ள அத்தனை மனிதரும் உங்களுள் இருக்கும் கடவுளை பார்க வேண்டும். அந்த கடவுளை நான் பார்த்து விட்டேன். வெற்றிக்கான நாட்கள் குறைவாக தான் உள்ளது. அதற்காக நீங்கள் அதிக உழைப்பை கொடுத்துள்ளீர்கள்.

நீங்கள் ஒருநாள் வரலக்ஷ்மி அம்மாவுடன் இருந்தால் தெரியும், ரவி மோகன் அவர்கள் என் இவ்வளவு சிறந்த மனிதராக இருக்கிறார் என்று. இப்படி பட்ட ஒருவரை கொடுத்ததற்கு நன்றி அம்மா. இங்கு வருகை தந்திருக்கும் அனைவர்க்கும் நன்றி, என்றார்.

நடிகர் யோகி பாபு பேசும்போது

கோமாளி படத்தில் பணியாற்றும்போது ரவி நான் படம் இயக்கினால் நீங்கள் தான் ஹீரோ என்று கூறினார். ஆறு வருடம் கழித்தும் அதை மறக்காமல் இன்று நிறைவேற்றி இருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி என்றார்.

இயக்குனர் கார்த்திக் யோகி பேசும்போது,

இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. மிகவும் மகிழ்ச்சியான தருணம். ஏனென்றால், தேதியும் கொடுத்து, காசும் கொடுத்து, படமும் கொடுத்து தயாரிப்பது என்பதை நான் ஆசீர்வாதமாக நினைக்கிறேன். முதலில் இந்த கதையை அண்ணா நம்பினார். பிறகு இத்தனை பேர் இந்த கதையை நம்பி இந்த படத்திற்காக வந்தது மிகவும் மகிழ்ச்சி. நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பட குழுவினர் அனைவருக்கும் மிக்க நன்றி. மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அந்த பொறுப்பை உணர்ந்து இப்படத்தை மாபெரும் வெற்றி படமாக உருவாக்க எல்லாவித முயற்சிகளையும் எடுப்பேன் என்றார்.

இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்.ஜே சூர்யா பேசும்போது,

முதலில் ரவி மோகன் சார் கதை கேட்க சொன்னார் கார்த்திக் சார் வந்து கதை சொன்னார் கதை கேட்டதுமே பிடித்து விட்டது. இப்போது வரும் படங்களில் குடும்பத்துடன் சந்தோஷமாக பார்க்கக்கூடிய காதலோடு நகைச்சுவையோடு உணர்வு பூர்வமான பயணத்தை இன்றைய சினிமா இழந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட அம்சத்தில் இந்த படம் வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. ப்ரோ கோட் என்கிற விஷயம் உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும். ரவி மோகன் சார் ஸ்டுடியோஸ் முழுக்க முழுக்க பொழுதுபோக்கான திரைப்படமாக உருவாகி இருக்கிறது. அதிலும் முதல் படமாக இது வருவது நல்ல விஷயம். கதை கேட்டதும் பிடித்திருந்தால் உள்ளே குதித்து விடுவேன். கதைப் பிடித்து இருக்கிறது என்று ரவிசாரிடம் கூறினேன் அதன் பிறகு ஒவ்வொரு வேலையாக ஆரம்பித்து இன்று பூஜை வரை வந்திருக்கிறது. பெரிய நடிப்பு பட்டாளங்கள் இப்படத்தில் இருக்கிறார்கள் என்றார்.

ரித்தீஷ் தேஷ்முக் பேசும்போது,

என்னுடைய கல்யாணத்திற்கு ரவி மோகன் மற்றும் ராஜா மோகன் அவர்கள் கொடுத்த வரதட்சணை தான் சந்தோஷ் சுப்பிரமணியம். ஏறத்தாழ 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து இயக்குனராக அறிமுகம் ஆவதில் மகிழ்ச்சி மற்றும் அவருடைய எல்லா படங்களும் வெற்றி அடைய வாழ்த்துகள். மேலும் ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ, சிங்கம் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சிங்கம் போல் வெற்றி பெற்று கர்ஜிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

நடிகை ஜெனிலியா ரித்தேஷ் பேசும்போது,

சந்தோஷ் சுப்ரமணிய படத்தில் பார்த்த ரவியை, இன்று தயாரிப்பாளராக இயக்குனராக பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் எப்போதும் அன்பாக ஆத்மார்த்தமாக பழகக் கூடியவர். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் பேசும்போது,

இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த ரவி மோகன் சாருக்கு நன்றி. ரவி மோகன் ஸ்டுடியோஸ் இன் முதல் படம் மட்டுமல்ல, இனி வரும் அடுத்தடுத்த எல்லா படங்களும் வெற்றியாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அதற்காக எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் நாங்கள் செய்வோம். இப்படத்தில் பிரம்மோ படப்பிடிப்பிற்காக எஸ்.ஜே சூர்யாவை பார்த்தபோது மிகவும் வியந்தேன். படப்பிடிப்பில் அவருடைய கதாபாத்திரத்தை பார்த்து சிரித்துக் கொண்டே இருப்பேன். எஸ் ஜே சூர்யா சாரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.

 இப்பட குழு அனைவருக்கும் நன்றி . இங்கு வந்திருக்கும் பத்திரிக்கை மற்றும் மீடியா அனைவருக்கும் நன்றி . எனக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கும் நன்றி என்றார்.

 நடிகை மாளவிகா மனோஜ் பேசும்போது

அனைவருக்கும் வணக்கம். இப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சாருக்கு நன்றி, ரவி மோகன் சார் அவர்களுக்கும் மிக்க நன்றி. இப்படம் மிகப் பெரிய வெற்றியடையும் என்ற நம்புகிறேன் என்றார்.

அர்ஜுன் அசோக் பேசும்போது

 மிகப்பெரிய தருணம் இது. இந்த வாய்ப்பைக் கொடுத்து ரவி மோகன் சார் அவர்களுக்கு நன்றி. எஸ் ஜே சூர்யா சார் கார்த்திக் அனைவருக்கும் நன்றி மிகப்பெரிய பொறுப்பு இது. இப்படம் வெற்றி பெற சிறப்பாக பணியாற்றுவேன் என்றார்.

 ஸ்ரீ கௌரி பிரியா பேசும் போது,

 இந்த அரங்கத்திற்கு வந்த உடனே மிகவும் நேர்மறையான அதிர்வலைகள் உணர்ந்தேன். ரவி மோகன் சார் ஸ்டுடியோவில் பணியாற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள். ரவி மோகன் சார், உங்களுடன் ஜோடியாக இப்படத்தில் நடிக்கிறேன். இதை நான் மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு மிக்க நன்றி. நம் அனைவரும் சேர்ந்து தட்றோம், கலக்குறோம், தூக்குறோம் என்றார்.

நடிகர் கண்ணா ரவி பேசும்போது,

சக்தி சாருக்கு மிகவும் நன்றி ஏனென்றால் நான் எவ்வளவு பெரிய விழாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் பார்த்து ரசித்து பணியாற்றிய அனைத்து நடிகர்களும் முன்னிலையில் நான் செய்த ஒரு சிறிய புரோமோ இன்று வெளியாவதில் மிகவும் மகிழ்ச்சி.

ரவி அண்ணா ஒவ்வொரு படத்திலும் அவருடைய கதாபாத்திரம் நல்லவராகவே இருக்கும். கார்த்தி சார் கூறியது போல அவர் மிகவும் நல்ல மனிதர். அதை நான் ஒரு சில நிமிடங்களிலேயே உணர்ந்து கொண்டேன். என்னுடைய குடும்பமே அவருடைய ரசிகர்கள் தான். முக்கியமாக என்னுடைய அப்பா அம்மா ரவி படம் வந்திருக்கு வா பார்க்கலாம் என்று கூப்பிடுவார்கள். அவர் நல்ல நடிகர், சமூக பொறுப்பு மிகுந்த மனிதர். அவர் ஒரு படம் எடுக்கும் போது சமூகத்தை சார்ந்தது தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த படத்தில் என்னுடைய பங்கும் இருப்பதில் மகிழ்ச்சி என்றார்.

இயக்குனர் சக்திவேல் பெரியசாமி பேசும் போது,

நான் ஷியாம் மற்றும் ரவி சார் மூவரும் ஒன்றாக பயணித்துக் கொண்டிருக்கிறோம் அப்போது ஒரு நாள் நான் ஒரு கதை சுருக்கத்தை அனுப்பினேன் அதை படித்துவிட்டு நிச்சயம் செய்யலாம் என்றார். என் மீது நம்பிக்கை வைத்து படத்தை கொடுத்ததற்கு நன்றி. நான் கொடுத்த கதை சுருக்கத்தை விட படம் மிகவும் நன்றாகவே வரும். அதே போல் ஆர்டினரி மேன், ப்ரோ கோட் குழுவினருக்கும் நன்றி, ஏனென்றால், மூன்று படத்தில் இணைந்து நானும் பணியாற்ற போகிறேன். எல்லோருக்கும் நன்றி என்றார்.

OUM மலேசியாவுடன் இணைந்து சென்னைஸ் அமிர்தா கல்வி குழுமம் 9வது பட்டமளிப்பு விழாவை நடத்தியது.

OUM மலேசியாவுடன் இணைந்து சென்னைஸ் அமிர்தா கல்வி குழுமம் 9வது பட்டமளிப்பு விழாவை நடத்தியது.

சென்னைஸ் அமிர்தா கல்வி குழுமம் சார்பில் 9வது பட்டமளிப்பு விழா 2025 சென்னை, ஹோட்டல் ராதா ரீஜென்ட்  வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

 சென்னை, ஹைதராபாத், விஜயவாடா மற்றும் பெங்களூரு வளாகங்களில் இருந்து வந்த சுமார் 400 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

இந்த விழாவிற்கு  மலேசியாவின்(OUM) மற்றும் ஃபியூச்சர் ட்ரீம் அகாடமி,மலேசியா சார்பில் பல முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

YBhg Prof.Dr.அகமத் இசானி அவாங், தலைவர் மற்றும் துணைவேந்தர், OUM மலேசியா – முக்கிய உரையாற்றி பட்டங்களை வழங்கினார்.

Prof. Dr யோன் ரொஸ்லி டாவுத், துணைவேந்தர் (வணிக மேம்பாடு), OUM மலேசியா, Mr. பானி சைனல் அஸ்மியான், தலைமை செயல் அதிகாரி, MLSB-OUM, மலேசியா, திரு. கே. கலையரசன், தலைவர், ஃபியூச்சர் ட்ரீம் அகாடமி, மலேசியா, திரு. ஜை நானக் சிங், தலைமை செயல் அதிகாரி, ஃபியூச்சர் ட்ரீம் அகாடமி, மலேசியா.

பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்கிய  சென்னைஸ் அமிர்தா கல்வி குழுமத்தின்  தலைவர் திரு R பூமிநாதன் அவர்கள் பட்டமேற்கும் மாணவர்களை வாழ்த்தி பேசினார் .  மேலும் அவர் பேசுகையில் கல்வி மட்டும் அல்லாது வேலை வாய்ப்பு தொடர்பான திறன்களை மாணவர்களுக்கு அளித்து வருவதாக  தெரிவித்தார் .
மேலும், OUM மலேசியாவுடன் நீண்டகால இணைப்பு சென்னைஸ் அமிர்தா மாணவர்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் மற்றும் வாய்ப்புகளை தொடர்ந்து அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சென்னைஸ் அமிர்தா கல்வி குழுமம் :
கல்லூரி தொடங்கிய நாள்முதல் சென்னைஸ் அமிர்தா கல்வித்துறையில், குறிப்பாக விருந்தோம்பல் மற்றும் தொடர்புடைய துறைகளில் முன்னோடியாய் திகழ்கிறது.

 இதுவரை 27,000 மாணவர்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதன் மூலம் தரமான கல்வி மற்றும் உலகளாவிய வேலை வாய்ப்புகளுக்கான மையமாக சென்னைஸ் அமிர்தா தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

இந்த 9வது பட்டமளிப்பு விழாவின் மூலம் சென்னைஸ் அமிர்தா தொழில் சார்ந்த தரமான கல்வி மற்றும் 100% சதவிகித வேலை வாய்ப்பு என்கின்ற தனது மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ளது .

Monday, August 25, 2025

திரு தொல் திருமாவளவன் வெளியிட்ட மனிதத்தை பேசும் “வீர வணக்கம்” பட டிரெய்லர்


 திரு தொல் திருமாவளவன் வெளியிட்ட மனிதத்தை பேசும்  “வீர வணக்கம்” பட டிரெய்லர் !! 

 நீதிக்கான போராட்டத்தின் வரலாற்றைப் பேசும் படம் “வீர வணக்கம்” பட டிரெய்லர் !! 

விஷாரத் க்ரியேஷன்ஸ் வழங்கும், இயக்குநர்  அனில் V.நாகேந்திரன் இயக்கத்தில் சமுத்திரகனி, பரத் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, தமிழகம் மற்றும் கேரள மண்ணில், அடக்குமுறைக்கான போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில்,  அருமையான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வீர வணக்கம்”. 

சக மனிதனைக் கொடுமைப்படுத்தும், ஜாதிய அடக்குமுறை இன்றும் நாடு முழுவதும் நடந்து வருகிறது. ஆனால் இன்றைய  நிலைமையை விட மோசமான முற்காலத்தில் நீதிக்கான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய ஆளுமைகளைப் போற்றும்,  அவர்களின் வரலாற்றைப் பேசும் படமாக உருவாகியுள்ள “வீர வணக்கம்” திரைப்படத்தின் டிரெய்லரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்திருமாவளவன் அவர்கள், நேற்று வெளியிட்டார். இந்த டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இன்றைய தமிழகத்தின் ஒரு கிராமத்தில், வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணுக்கும்  பெண்ணுக்குமான ஒரு அழகான  நட்பு, ஜாதிய மனோபாவத்தால் சிதைக்கப்படுகிறது. அதை தடுக்கும் ஒரு பெரிய மனிதரின் வழியே, தமிழகத்திலும், கேரளத்திலும்  உண்மையில் வாழ்ந்து நீதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய ஆளுமையான P கிருஷ்ணபிள்ளை அவர்களின் வரலாற்றின் கதையை இப்படம் சொல்கிறது. 

தந்தை பெரியாரின் முற்போக்கு சிந்தனையையும், திராவிட சித்தாந்தத்தையும் பேசுவதோடு,  தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் உள்ள பண்பாட்டுத் தொடர்பை அன்பை, அழகாக பேசும் ஒரு படைப்பாக, காதல், சண்டைக்காட்சிகள், சஸ்பென்ஸ் நிறைந்த கமர்ஷியல் படமாக  இப்படத்தைத் தயாரித்து, இயக்கியுள்ளார் இயக்குநர்  அனில் V.நாகேந்திரன். 

இப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிகர் சமுத்திரகனி நடித்துள்ளார். நடிகர் பரத் இதுவரை ஏற்றிராத, கிராமத்து பெரிய மனிதர் பாத்திரத்தில் நடித்துள்ளார். ரித்தேஷ், பிரேம் குமார், ரமேஷ் பிஷாரடி, சுரபி லட்சுமி, பி.கே. மேதினி, ஆதர்ஷ், சித்தாங்கனா, ஐஸ்விகா,  அரிஸ்டோ சுரேஷ், சித்திக் ஆகியோர்  முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும்  கேரளா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. 

இப்படத்திற்கு M K அர்ஜுனன், பெரும்பாவூர் G. ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், C.J.குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் இசையமைத்துள்ளனர்.  இப்படத்தில் பழம்பெரும் தமிழ்ப் பின்னணிப் பாடகர் T.M. சௌந்தர்ராஜன் அவர்களின் மகன் TMS செல்வகுமார் ஒரு அருமையான பாடல் பாடியுள்ளார்.

இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம் 


எழுத்து, இயக்கம் - அனில் V.நாகேந்திரன் 

இசை - M K அர்ஜுனன், பெரும்பாவூர் G. ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், C.J.குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் 

ஒளிப்பதிவு -  கவியரசு, சினு சித்தார்த்     எடிட்டிங் - பி. அஜித் குமார், அப்பு பட்டத்திரி      கலை இயக்கம் - கே. கிருஷ்ணன் குட்டி

இணை இயக்கம் - கே. ஜி. ராம் குமார்      ஒப்பனை - பட்டணம் ரஷீத்  

சண்டைப் பயிற்சி - மாஃபியா சசி

பாடல்கள் நவீன் பாரதி,   

உடைகள் - இந்திரன்ஸ் ஜெயன், ஜி.பழனி   சவுண்ட் டிசைன் - என்.  ஹரி குமார்

மக்கள் தொடர்பு - குணா, சதீஷ், சிவா (AIM)


KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, யுவன்சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் புதிய படத்தின் பூஜை , இன்று கோலாகலமாக நடைபெற்றது

*KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு,  யுவன்சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் புதிய படத்தின் பூஜை , இன்று கோலாகலமாக நடைபெற்றது !!*

KRG கண்ணன் ரவியின்  பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இணையும் புதிய படம் “Production no 4”,  படத்தின் பூஜை இன்று துபாயில் படக்குழுவினர் கலந்துகொள்ள பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ்  (sam rodrigues) எழுதி இயக்குகிறார். 

இப்படத்தின் பூஜையில் திரைப்பிரபலங்கள், லைகா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன்,   நடிகர் ஜீவா, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, இயக்குநர் நிதீஷ் சகாதேவ் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். 

தமிழ் திரையுலகில் மறக்க முடியாத காமெடி கூட்டணிகளில் ஒன்று நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு கூட்டணியாகும். இவர்கள் ஒன்றிணைந்தாலே திரையரங்கில் சிரிப்பு மழை பொழியும். வயிறு குலுங்க சிரிக்க வைத்து, ரசிகர்கள் மனதில் இன்றளவிலும் நீங்காத இடம் பிடித்த, இந்தக் கூட்டணியுடன்,  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், இந்த புதிய படத்தில்  25 வருடங்களுக்குப் பிறகு  மீண்டும் இணைந்துள்ளார்.

பிரபுதேவா, வடிவேலு கூட்டணியின் அத்தனை டிரேட் மார்க் அம்சங்களுடன், ஒரு கலக்கலான ஆக்சன் அட்வென்ச்சர் ( Action Adventure ) படமாக இப்படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர்  சாம் ரோட்ரிகஸ்  (sam rodrigues). 

முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டண்ட் காட்சிகளை பீட்டர் ஹெய்ன் வடிவமைக்கிறார். ஆண்டனி எடிட்டிங் பணிகளை கையாளுகிறார்.

இப்படத்தில் அனிமல், ஏஸ் வெற்றிப்படங்களுக்குப் பிறகு, நடிகர் பப்லு பிரித்திவிராஜ் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் துவங்கவுள்ளது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

KRG நிறுவனத்தின் நான்காவது படைப்பாக உருவாகும் இப்படத்தினை தயாரிப்பாளர் கண்ணன் ரவி, மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். தீபக் ரவி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். 

படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், மற்றும் படத்தின் அப்டேட் பற்றிய விபரங்கள். ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் விமல் நடிக்கும், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ்  தயாரிப்பில், நடிகர் விமல் நடிக்கும், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது!! 

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்சன் பிரைவேட் லிமிட் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், நடிகர் விமல் நாயகனாக நடிக்க, எல்சன் எல்தோஸ் மற்றும் இரட்டை இயக்குநர்கள் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், கிராமப்புற பின்னணியில்,  ஃபேமிலி காமெடி எண்டர்டெயினராக உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு, முழுமையாக நிறைவடைந்துள்ளது.  

சமீபத்தில்  காரைக்குடியில் பிரம்மாண்ட பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், படத்தை ஆரம்பித்த வேகத்தில் 45 நாட்களில் ஒரே கட்டமாக, படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளது படக்குழு. 

மலையாளத் திரையுலகில் சமீபத்தில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற “ககனச்சாரி, பொன்மேன்” படங்கள் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ள அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்சன் பிரைவேட் லிமிட் நிறுவனம், இந்த புதிய படம் மூலம், தமிழ்  திரையுலகில் கால்பதித்துள்ளனர். தயாரிப்பாளர் விநாயகா அஜித் இப்படத்தை, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். 

இப்படத்தில் கதாநாயகனாக விமல் மற்றும் கதாநாயகியாக முல்லை அரசி நடிக்க, விடுதலை சேத்தன், பருத்திவீரன் சரவணன் உட்பட மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து, நடித்துள்ளனர்.

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை, குடும்பங்களோடு அனைவரும் கொண்டாடும் வகையில்,  ஒரு அசத்தலான காமெடி எண்டர்டெயினராக இப்படத்தை, அறிமுக  இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்கி வருகின்றனர். 

எழுத்தாளர் பாசில் ஜார்ஜ் மற்றும் ஆகாஷ் வி பால் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்கள். திரைக்கதையை சுதி கிருஷ்ணா அமைத்துள்ளார். பார்க்கிங் வெற்றிப்பட ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரான்சிஸ் நெல்சன் சேவியர் மற்றும் மருது பெரியசாமி வசனம் எழுதியுள்ளனர். எடிட்டிங் மதன், கலை இயக்கம் ராஜ்கமல், ஸ்டண்ட் தினேஷ் காசி, எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் ரஞ்சித்  கருணாகரன் ஆகியோர், தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர். 

படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரடக்சன் பணிகளைத் துவக்கியுள்ளது படக்குழு. விரைவில் ஃபர்ஸ்ட் லுக் டீசர் பற்றிய அறிவிப்புகள்  அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

ஹாலிவுட் க்ராஃப்ட் + இந்தியா பவர்: யாஷ் டாக்ஸிக் (Toxic )படத்தில் JJ Perry-யின் 45 நாள் சாகசம்”*

*“ஹாலிவுட் க்ராஃப்ட் + இந்தியா பவர்: யாஷ் டாக்ஸிக் (Toxic )படத்தில் JJ Perry-யின் 45 நாள் சாகசம்”*

ஹாலிவுட் க்ராஃப்டும் இந்திய பவரும் இணையும்   – டாக்ஸிக் (Toxic ) படத்தில்,  45 நாள் ஆக்ஷன் மராத்தான் ஷூட்டிற்கு ‘ஜான் விக்’ புகழ் JJ Perry முழுக்க இந்திய ஸ்டண்ட் குழுவுடன் இணைகிறார்.

“யாஷ், கீத்து மோகன்தாஸ் (Geetu Mohandas )ஆகியோருடன் பணிபுரிவது என் கரியரில் மறக்க முடியாத தருணம்” – JJ Perry

மும்பையின் இடையறாத மழைக்காலம் காரணமாக பல படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டாலும், “டாக்ஸிக் -  எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்”  (Toxic: A Fairytale for Grown-ups) படக்குழு, அதற்கு மாறாக புயலை சவாலாக எடுத்துக்கொண்டு, அன்புடன் தழுவிக்கொண்டுள்ளது. இந்திய சினிமாவில் இதுவரை எடுக்கப்பட்ட மிகப் பெரிய ஆக்ஷன் ஷெட்யூல்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த 45 நாள் ஆக்ஷன் படப்பிடிப்பை, John Wick, Fast & Furious, Day Shift போன்ற படங்களில் தனது ஆக்ஷன் காட்சிகளால் உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்ற ஹாலிவுட் ஆக்ஷன் இயக்குநர் JJ Perry தற்போது மும்பையின் மத்தியபகுதியில் நடத்தி வருகிறார்.

பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் இதற்கு முன்பு பல்வேறு நாடுகளிலிருந்து சர்வதேச ஸ்டண்ட் நிபுணர்களை இணைத்திருந்த Perry, இப்போது முழுக்க முழுக்க இந்திய ஸ்டண்ட் கலைஞர்களுடன் மட்டுமே பணியாற்றத் தீர்மானித்துள்ளார். அவர்களின் அர்ப்பணிப்பையும் துல்லியத்தையும் நேரடியாகக் கண்ட பிறகு தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்து JJ Perry  கூறுகையில்..

“இந்திய குழு உலகத் தரம் வாய்ந்தது. அதனால்தான் நான் இவர்களுடன் பணிபுரியத் தீர்மானித்தேன். நாங்கள் தற்போது ஒரு மிகப்பெரிய சீக்குவென்ஸை எடுத்து வருகிறோம். இது ஒரு சவாலான பணி, ஆனாலும் நான் சவால்களை விரும்புவன். இந்தக் குழு அதை நேருக்கு நேர் எதிர்கொள்கிறது. இதுவரையிலான ஆக்சன் காட்சிகளின் எல்லைகளை கடந்து புதியதை உருவாக்குவதே  எங்கள் நோக்கம் – அதுதான் சினிமா”.

மாதக்கணக்கான முன் தயாரிப்பு பணிகள் மூலம் உருவான இந்தக் காட்சி – Perry, ஹீரோவும் தயாரிப்பாளருமான யாஷ், இயக்குநர் கீத்து மோகன்தாஸ், DNEG மற்றும் தயாரிப்பாளர் வெங்கட் K. நாராயணா ஆகியோரின் கூட்டு முயற்சியால் சாத்தியமானது. குறிப்பாக யாஷ் – வெங்கட் கே. நாராயணா கூட்டணி, பெரிய அளவிலான இந்தப் படத்திற்குத் தேவையான பெரும் பட்ஜெட்டையும், வசதிகளையும் பெற்றுத்தருவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

இந்த ஆக்ஷன் சீக்குவென்ஸ் – ஸ்டோரி போர்டுகள், துல்லியமான பயிற்சிகள், கலை தொடர்பான விவாதங்கள் போன்றவற்றின் மூலம் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டது. இந்திய சினிமாவுக்கு புதிதாக, உயிரோட்டமுள்ள, ஒரு முழுமையான ஆக்ஷன் அனுபவத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்.

“என் 35 வருட அனுபவத்தில், நான் 39 நாடுகளில் வேலை செய்திருக்கிறேன். நான் இந்திய சினிமாவின் ரசிகன். இந்திய சினிமா படைப்பாற்றலானது, கலைநயம் நிறைந்தது, துணிச்சலானது. யாஷ், கீத்து, வெங்கட் மற்றும் அவர்களின் அற்புதமான குழுவுடன் இணைவது என் வாழ்க்கையின் சிறப்பான தருணம். கீத்துவின் கலைநோக்கு பார்வை அபாரமானது. ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, தயாரிப்பு வடிவமைப்பாளர் மற்றும் கலைக்குழுவின் பங்களிப்பு மிகச் சிறந்தது” என Perry பகிர்ந்துள்ளார்.

மும்பையில் நடைபெற்று வரும் இந்தப் படப்பிடிப்பு, இந்திய சினிமாவில் ஒரு முக்கியக் கட்டமாகும். Toxic இந்தியாவின் முதல் மிகப்பெரிய அளவிலான இருமொழிப் படம் – ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் எடுக்கப்படுகிறது. இதற்குப் பிறகு இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது. இத்தகைய தைரியமான முயற்சி, கதையின் உண்மைத்தன்மையை பாதுகாப்பதோடு மட்டுமல்லாது, உலகளாவிய பார்வையாளர்களையும் இணைக்கும்.

“இந்திய கலாச்சாரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது, செழிப்பானது, பல அடுக்குகளால் ஆனது. நான் வாழும் அமெரிக்க கலாச்சாரம் சில நூற்றாண்டுகளே பழமை வாய்ந்தது. ஆனால் இங்கே வந்து, உலகளாவிய சினிமா பாணியை இந்தியக் கதைகளுடன் இணைப்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. அதனால் ஏற்கனவே செய்ததை மீண்டும் செய்ய விரும்பவில்லை – புதிதாக ஒன்றை உருவாக்கவே விரும்புகிறேன். Toxic எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கிறது” என Perry கூறினார்.

வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து தயாரிக்கும் “டாக்ஸிக் -  எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்”  (Toxic: A Fairytale for Grown-ups), KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பாகும். ஆழமும், அதேசமயம் கவரும் காட்சியமைப்புகளும் கலந்த இந்தப் படம், 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

*

மார்க் ஸ்வர்ணபூமியில்,( MARG Swarnabhoomi ) ராக்ஸ்டார் அனிருத்தின் ‘ஹுக்கும்’ (Hukum) உலக சுற்றுப்பயணத்தின் பிரமாண்ட நிறைவு விழா, வரலாறு படைத்தது*

*மார்க் ஸ்வர்ணபூமியில்,( MARG Swarnabhoomi ) ராக்ஸ்டார் அனிருத்தின் ‘ஹுக்கும்’ (Hukum) உலக சுற்றுப்பயணத்தின் பிரமாண்ட நிறைவு விழா, வரலாறு படைத்தது*

ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தரின் "ஹுக்கும்"(Hukum)உலக இசைச் சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்ட கச்சேரி, 2025 ஆகஸ்ட் 23-ஆம் தேதி, குவாத்தூர்(Kuvathur), ECR-ல் உள்ள மார்க் ஸ்வர்ணபூமியில் நடைபெற்றது. 50,000-க்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்று, சென்னை கண்ட மிகப்பெரிய, சிறப்பாக திட்டமிடப்பட்ட இசை நிகழ்வுகளில் ஒன்றாக, இந்த இசை நிகழ்ச்சி புதிய வரலாறு படைத்திருக்கிறது.

பரந்த வாகன நிறுத்துமிடம், உணவு மற்றும் குடிநீர் அரங்குகள், அனைத்து பகுதிகளிலும் கழிப்பறைகள், மருத்துவ மையங்கள், வலுவான உள்கட்டமைப்பு மற்றும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், நிகழ்ச்சி எந்த தடங்கலும், இடையூறுகளும் இல்லாமல் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. பெருமளவிலான காவல்துறை மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, முழு நிகழ்ச்சியிலும் போக்குவரத்து மற்றும் ரசிகர்கள் பாதுகாப்பு மிகச்சிறப்பாக கையாளப்பட்டது.

ராக் ஸ்டார் அனிருத் மேடையை அதிர வைத்தார். ஹிட் பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக பாடி ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்தார். குறிப்பாக வானத்தில் காட்சியளித்த ட்ரோன் (drone) நிகழ்ச்சி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, நிறைவு நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக அனைவரையும் ஈர்த்தது. ரசிகர்கள் பலருக்கு இது அவரது சிறந்த கச்சேரியாக நினைவில் நிறைந்தது.

"ஹுக்கும்" Hukum உலக சுற்றுப்பயண இறுதிக்கட்ட கச்சேரி, பிராண்ட் அவதார் நிறுவனத்தால் உலகத் தரத்தில் நடத்தப்பட்டு, சென்னை நேரடி இசை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பதிந்துள்ளது.



Sunday, August 24, 2025

Kolkata Royal Tigers' Sohil Shah Converts Pole into Brilliant Victory in Final Day at Round 2 of Indian Racing Festival (National Media) Shane Chandaria Seals Dominant Lights-to-Flag Victory for Chennai Turbo Riders (Chennai Media)


 

Kolkata Royal Tigers' Sohil Shah Converts Pole into Brilliant Victory in Final Day at Round 2 of Indian Racing Festival (National Media)

Shane Chandaria Seals Dominant Lights-to-Flag Victory for Chennai Turbo Riders (Chennai Media)

Chennai, Tamil Nadu | 24th August 2025

While we saw slightly cloudy skies in Day 1 in Chennai, Day 2 brought nothing but sunshine. With track temperatures already high, drivers didn’t need to worry about warming up their tyres. The real challenge was preventing them from overheating. The second day of racing in Chennai featured a packed schedule with four events in total: three races for the Formula 4 Indian Championship and one for the IRL Group B drivers.

In the final IRL race of the weekend, Sohil Shah, driving for Saurav Ganguly’s Kolkata Royal Tigers, converted his spectacular pole position into a commanding victory. At the start, he held off early pressure from Akshay Bohra (Hyderabad Black Birds). Despite a couple of safety cars and a red flag, Shah was able to settle into a rhythm and control the pace all the way to the chequered flag. Bohra followed him home in second place, while Jon Lancaster bounced back from a tough opening round in Coimbatore to claim the final podium spot, making it a 2-3 finish for the Hyderabad Black Birds.

Formula 4 Indian Championship (F4 Indian)

In Race 2 of Round 2 in Chennai, Ishaan Madesh (Kolkata Royal Tigers) stormed to victory after a hard-fought battle. Starting all the way back in 8th, Ishaan launched off the line with a blistering start that propelled him into 2nd place on the opening lap. From there, his pace was too strong and it didn’t take long for the Kolkata Royal Tigers driver to seize the lead. But the fight was far from over. Charging from behind, Ghazi Motlekar (Kolkata Royal Tigers) and Sachel Rotge (Kichcha’s Kings Bengaluru) battling for P2. What followed was an intense duel, with both drivers trading blows in their bid for second place. In the end, it was Rotge who pulled off a daring move, using sheer race craft to clinch 2nd, denying the Kolkata Royal Tigers what would have been a dominant 1–2 finish.

In Race 3, Chennai Turbo Riders’ Shane Chandaria delivered a commanding lights-to-flag victory from pole. Behind him, Saishiva Sankaran (Speed Demons Delhi) held off relentless pressure from Ishaan Madesh (Kolkata Royal Tigers) to secure second place. With Ishaan taking his second podium of the day, he’s cementing himself as one of the standout drivers of the Championship. Just outside the podium, Sachel Rotge (Kichcha’s Kings Bengaluru) pulled off another thrilling overtake, reminiscent of his move in the previous race, to snatch P4 from Zakariya Mohammed (Godspeed Kochi).

The final Formula 4 race of the weekend once again belonged to Sachel Rotge. The Frenchman showcased his pace and racecraft all weekend long, and Race 4 was no exception. Starting from P3, Rotge quickly worked his way past the two cars ahead to claim victory. Luviwe Sambudla put up a strong fight to hold Rotge back but eventually had to settle for second place. Behind them, Saishiva Sankaran delivered a composed drive to secure the final step of the podium.

Looking Ahead

With the conclusion of Round 2 in Chennai, attention now shifts back to Coimbatore and the Kari Motor Speedway for Round 3. Speed Demons Delhi has quickly established itself as one of the teams to beat in the Indian Racing League, securing two victories in the opening 2 rounds. Goa Aces, meanwhile, will be aiming to mount a strong challenge when the action resumes in Coimbatore.

In the Formula 4 Indian Championship, Sachel Rotge bounced back from a bittersweet weekend in Coimbatore to claim the top step of the podium in Chennai. He’ll be eager to carry that momentum into Round 3. Ishaan Madesh has already won 2 races in the first 2 rounds of the 2025 F4 Indian Championship. From what we have seen in the first 2 rounds, Sachel Rotge and Ishaan Madesh will be the drivers fighting for the Championship this season.

You can catch all the exciting action from the Indian Racing Festival live on Jio Hotstar and Star Sports Select 2. 

The Indian Racing Festival 2025 is powered by JK Tyres, fuel partner - Nayara Energy, Performance by Mobil1, and hydrated by Bisleri. 

Round 2 Madras International Circuit – Day 1 Results

Category

Winner

Runner-up

2nd Runner-up

IRL Race 1

Shahan Ali Mohsin

Aqil Alibhai

Alister Yoong

F4 Indian Race 1

Sachel Rotge

Ghazi Motlekar

Annabel Kennedy

 

Round 2 Madras International Circuit – Day 2 Results

Category

Winner

Runner-up

2nd Runner-up

IRL Race 2

Sohil Shah

Akshay Bohra

Jon Lancaster

F4 Indian Race 2

Ishaan Madesh

Sachel Rotge

Ghazi Motlekar

F4 Indian Race 3

Shane Chandaria

Saishiva Sankaran

Ishaan Madesh

F4 Indian Race 4

Sachel Rotge

Luviwe Sambudla

Saishiva Sankaran

 

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"

 கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"   கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமைவரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பா...