Thursday, April 11, 2024

சோனியா அகர்வால்வனிதா விஜயகுமார்நடிக்கும் "தண்டுபாளையம்

-----------------------------------------------
சோனியா அகர்வால்
வனிதா விஜயகுமார்
நடிக்கும் "தண்டுபாளையம்"
-----------------------------------------------
1980 ஆம் ஆண்டுகளிலிருந்து    இன்று வரை ஒரு மிகப்பெரிய கொள்ளை கூட்டம் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில் தன் வேட்டையை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறது. கொலை,கொள்ளை, குற்றம்  போன்ற செயலை யாருடைய கண்ணுக்கும் தென்படாமல் சம்பவத்தை நிகழ்த்திக் கொண்டே செல்கிறது.

இதில் ஒரு கூட்டத்தை 15 ஆண்டுகளுக்கு பின்பு கைது செய்தது காவல்துறை. இவற்றில் 390 திருட்டு வழக்குகள்,
108 கொலை குற்ற வழக்குகள் மற்றும் மிகக் கொடுமையான 90 கற்பழிப்பு வழக்குகள் என ஒரே கும்பலுக்கு 6 முறை மரண தண்டனை வழக்குகள் இருப்பது  இதுவே முதல் முறையாகும். ஆனால் இதுவரை ஒருவருக்கு கூட தூக்குதண்டனை வழங்க முடியவில்லை.

குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் மிகவும் மோசமான நிலைமைக்கு
ஆளாகிறார்கள்

இவ்வாறு இந்த கும்பல் கைதான அத்தனை வழக்குகளிலும் விடுதலையாகிக் கொண்டே வருகிறார்கள். எனினும் இவர்களுக்கு இன்னும் பத்து வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளது. ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இவர்கள் அத்தனை பேரும் எழுத படிக்க தெரியாத தினக்கூலியாளர்கள்.

இவ்வாறு வெளியே தெரியாத எத்தனையோ உண்மைச் சம்பவங்களை கதையின் அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படத்தின் கதைதான் இது என்கின்றனர் இயக்குனர்கள்
டைகர் வெங்கட் - கே.டி நாயக்
-----------------------------------------------
வெங்கட் மூவீஸ் சார்பில் தயாரித்து  அதிரடி ஆக்ஷனுடன் காவல்துறை ஏ.சி.பி யாக நடிக்கிறார் டைகர் வெங்கட்

சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார்
ஆகியோருடன் டைகர் வெங்கட், முமைத்கான், சூப்பர் குட் சுப்பிரமணியம், பிர்லா போஸ், ஆலியா, நிஷா ரஃபிக் கோஷ், ரவிசங்கர்,மக்ரதேஷ் பாண்டே , ரவிகாலே, ராயல் பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு- இளங்கோவன் 

இசை-ஜித்தின் ரோஷன் நடனம்-பாபா பாஸ்கர்
மக்கள் தொடர்பு - வெங்கட்

கதை  திரைக்கதை வசனம்  பாடல் 
தயாரிப்பு -
டைகர் வெங்கட்

இயக்கம் - 
டைகர் வெங்கட்- கே.டி.நாயக்
-----------------------------------------------
இதன் படப்பிடிப்பு பெங்களூர்,கே ஜி எஃப், சென்னை, திருச்சி, சித்தூர், கடப்பா, நகரி ஆகிய இடங்களில் இரு கட்ட படப்பிடிப்பாக 45 நாட்களில் நடைபெற்று முடிவடைந்தது.

படத்தில் ஒரே ஒரு 
பாடல் மட்டும் இடம்பெற்றுள்ளது.

நாட்டுக்கட்ட கூவுதய்யா கொக்கரக்கோ கொக்கோ கண்ணு ரெண்டும் தேடுதய்யா கொக்கரக்கோ கொக்கோ... எனும் துள்ளலிசை பாடல் கேட்போரை ஆட்டம் போட வைக்கும்.

நிறைவு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

மே மாதத்தில் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது
-----------------------------------------------

ராக்கிங் ஸ்டார் யாஷின் பிறந்தநாளில், ரசிகர்களுக்கு விருந்தாக “டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்” படத்தின், அசத்தலான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது

ராக்கிங் ஸ்டார் யாஷின் பிறந்தநாளில்,  ரசிகர்களுக்கு விருந்தாக “டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்” படத்தின், அசத்தலான கிளி...