Wednesday, August 28, 2024

கடைசி தோட்டா " படத்தில் எம்.பி.ஏ. பட்டதாரியானஅபிராமி நமஹ !

"கடைசி தோட்டா " படத்தில் எம்.பி.ஏ. பட்டதாரியான
அபிராமி நமஹ !
 காரைக்குடியை சேர்ந்த தமிழ்ப் பெண்ணான எம்.பி.ஏ. பட்டதாரி அபிராமி  நமஹ 
நடித்துள்ள
"கடைசி தோட்டா " விரைவில் திரைக்கு வர உள்ளது.
வேறு மாநில பெண்கள் நிறைய நடித்து வரும் தமிழ் சினிமாவில் தமிழகத்தில் காரைக்குடியை சேர்ந்த அபிராமி நமஹ " கடைசி தோட்டா " படத்தில் நடித்துள்ளார். 
நடிப்பு என்பது எனது சிறு வயது கனவு என்று கூறும் அபிராமி, " கதைக்கு  கவர்ச்சியும் முத்த காட்சியும் அவசியம் என்றால் நடிக்க தயக்கம் இல்லை. அதே சமயம் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து பெயர் வாங்குவதே என் குறிக்கோளாக வைத்திருக்கிறேன்" என்றும் கூறுகிறார்.
நடனமும் கற்றுள்ள அபிராமி, எந்தவித கேரக்டரிலும் நடித்து அந்த கேரக்டருக்கு உயிர் கொடுப்பேன் என்றும் ஆணித்தரமாக கூறுகிறார்.
இவருக்கு பாரம்பரிய உடைகளும் மாடர்ன் உடைகளும் கச்சிதமாக பொருத்தமாக உள்ளதாக கடைசி தோட்டா படத்தின் இயக்குனர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Good Bad Ugly - திரைவிமர்சனம்

 தமிழ் சினிமாவில் ரசிகர் படங்கள் கடந்த சில வருடங்களாக ஒரு ஃபேஷனாக இருந்து வருகின்றன, ஒவ்வொரு நடிகரும் அவர்களுடன் பணியாற்றிய இயக்குநர்கள் மூல...