Tuesday, April 1, 2025

நடிகர் தனுஷ் "DCutz By Dev" சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் திறந்து வைத்தார்


 நடிகர் தனுஷ் "DCutz By Dev" சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் திறந்து வைத்தார் !!

முன்னணி நடிகர் தனுஷ் "DCutz By Dev" சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் துவங்கி  வைத்தார் !!

DCutz By Dev" சலூனை திறந்து வைத்த முன்னணி நடிகர் தனுஷ்

முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ், பிரபல சிகையலங்கார நிபுணர் தேவ் அவர்களின் , "DCutz By Dev" எனும்  பிரீமியம் சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் துவங்கி வைத்தார்.  இந்த சலூனின்  திறப்புவிழாவில், திரையுலக பிரமுகர்களும், தொழில்முறை நிபுணர்களும்  கலந்து கொண்டு வாழ்த்தினர்.

தேவ், தென்னிந்தியத் திரையுலகில் பிரபலமான சிகையலங்கார நிபுணராகப் புகழ் பெற்றவர். தமிழ்த் திரையுலக முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றி, அவர்களுக்குத் தனி ஸ்டைலை கட்டமைத்தவர். தனிப்பட்ட சிகை அலங்காரத்தில் அவரது திறமை மிகவும் பிரசித்தி பெற்றது. இப்போது, தனது திறமையையும், தனித்த ஸ்டைலையும் "DCutz By Dev" மூலம்,  பரந்த அளவில் அனைத்து  மக்களுக்கும் கொண்டு செல்ல இருக்கிறார்.

DCutz By Dev அதன் அதிநவீன வசதிகள், நிபுணத்துவ ஸ்டைலிஸ்டுகள் மற்றும் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்புடன் சிகை அலங்காரம் மற்றும் அழகுபடுத்தலை இன்னும் விரிவாகக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது.  இந்த சலூன் இப்போது பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகிறது.


Britannia Milk Bikis redefine ‘bite-sized content’ with their new campaign for Tamil Nadu Day.

  Britannia Milk Bikis redefine ‘bite-sized content’ with their new campaign for Tamil Nadu Day. Britannia Milk Bikis, The Biscuit That Gr...