*அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து “நிஷாஞ்சி” பட டிரெய்லரை வெளியிட்டுள்ளனர் – இந்த மசாலா என்டர்டெய்னர் திரைப்படம் செப்டம்பர் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !!*
அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா தனது அடுத்த திரையரங்கு வெளியீடான "நிஷாஞ்சி" படத்தின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டது. அனுராக் காஷ்யப் (Anurag Kashyap) இயக்கியுள்ள இந்த தேசி மசாலா என்டர்டெய்னர் திரைப்படம், பெரிய திரையில் கொண்டாடும் பிரம்மாண்ட அனுபவமாக உருவாகியுள்ளது.
ஆக்சன், டிராமா, ரொமன்ஸ், காமெடி, தாயின் பாசம் என எல்லா சினிமா ரசிகர்களும் விரும்பும் அம்சங்களும் நிரம்பியுள்ள இந்த டிரெய்லரில், அறிமுக நடிகர் ஆயிஷ்வர்ய் தாக்கரே (Aaishvary Thackeray) இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பப்லூ மற்றும் டப்லூ எனும் இரட்டை சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்ட இப்படம், அவர்கள் ஒரே மாதிரியாக தோன்றினாலும், அவர்களது குணங்களில் முற்றிலும் வேறுபட்டவர்களாக இருப்பதை சித்தரிக்கிறது.
ஜார் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஃப்ளிப் பிலிம்ஸ் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு பிரசூன் மிஸ்ரா (Prasoon Mishra), ரஞ்சன் சந்தேல் (Ranjan Chandel) மற்றும் அனுராக் காஷ்யப் திரைக்கதை எழுதியுள்ளனர். வேதிகா பின்டோ (Vedika Pinto), மோனிகா பன்வார் (Monika Panwa), முகமது ஜீஷான் அய்யூப் (Mohammed Zeeshan Ayyub )மற்றும் குமுத் மிஸ்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜீ மியூசிக் கோ வெளியிடும் இசையில், நாட்டுப்புற சுவை கொண்ட புதிய பாடல்கள், “பிலம் தேகோ”, “டியர் கன்ட்ரி”, “பிர்வா” போன்ற ஹிட் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இசையமைப்பில் அனுராக் சாய்கியா, மனன் பாரத்வாஜ், துருவ் கானேகர், ஆயிஷ்வர்ய் தாக்கரே, நிஷிகர் சிப்பர் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். பாடகர்களில் அரிஜித் சிங், மதுபந்தி பாக்சி, ஆயிஷ்வர்ய் தாக்கரே உள்ளிட்டோர் பாடியுள்ளனர். பாடல்களுக்கு ப்யாரேலால் யாதவ், மனன் பாரத்வாஜ், சஷ்வத் திவேதி மற்றும் பலர் வரிகள் எழுதியுள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 19 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
"நிஷாஞ்சி" டிரெய்லர் பார்வையாளர்களை 2000களின் தொடக்கத்தில் உள்ள உத்தரப்பிரதேசத்தின் சிறிய நகரங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. பப்லூ நிஷான்சி, ரங்கேலி ரிங்கூ மற்றும் டப்லூ ஆகியோரின் வாழ்க்கை எதிர்பாராத விதமாக மோதிக்கொள்கிறது. அதிரடி துரத்தல்கள், அசத்தல் வசனங்கள், நேரடி மோதல்கள், அன்பு மற்றும் ஏக்கம் நிரம்பிய காட்சிகள் — இவை அனைத்தும் குழப்பமானதாய் இருந்தாலும் ஒரு புதிய அனுபவத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
ஆக்சன், நகைச்சுவை, தேசி ஸ்வாக் ஆகியவற்றால் நிரம்பிய இந்த டிரெய்லர், காதல் மற்றும் இரு கதாப்பாத்திரங்களுக்கு இடையிலான போட்டியின் துடிப்பை சம அளவில் வெளிப்படுத்துகிறது. பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் நிறுத்தும் ஆர்வத்தை தூண்டுகிறது.
அமேசான் MGM ஸ்டூடியோஸ் மற்றும் பிரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் இயக்குநர் நிகில் மாதோக் கூறியதாவது...,
“நிஷாஞ்சி" டிரெய்லரை வெளியிடுவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அனுராக் காஷ்யப் போன்ற துணிச்சலான மற்றும் உணர்ச்சிகரமான கதை சொல்லும் திறமை கொண்ட இயக்குநருடன் இணைந்தது இப்படத்தை வழங்குவது எங்களுக்கு பெருமை. ஆயிஷ்வர்ய் மற்றும் வேதிகா ஆகியோரின் அருமையான நடிப்பு பார்வையாளர்களை கவரும். “திரையரங்கு அனுபவத்தின் மீது நாங்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளோம். வருகிற ஆண்டுகளில் தனித்துவமான படங்களை திரையரங்குகளில் கொண்டு வருவதில் உறுதியாக இருக்கிறோம். நிஷான்சி அந்தப் பயணத்தின் ஆரம்பமாக முக்கிய பங்காக இருக்கும்.
இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியதாவது...,
“நிஷாஞ்சி" பல ஆண்டுகளாக நான் மனதில் வைத்திருந்த கதை. இது உணர்ச்சி, துரோகம், ஆக்சன் என எல்லாவற்றையும் கொண்ட, நான் சிறுவயதில் பார்த்த இந்தி படங்களின் கிளாசிக் ஸ்டைலில் உருவானது. இந்தப்படத்தை தயாரிப்பதில் அமேசான் MGM ஸ்டூடியோஸ் எனக்கு முழு நம்பிக்கை கொடுத்தது. ஆயிஷ்வர்ய், வேதிகா, மோனிகா, ஜீஷான், குமுத் என எல்லோரும் கதாபாத்திரங்களாக வாழ்ந்து நடித்தனர். படக்குழுவின் ஒவ்வொருவரும் அதே ஆர்வத்துடன் உழைத்தனர். இசையும் அதே உணர்வை சுமந்துள்ளது. பார்வையாளர்கள் இசையையும், படத்தையும் கண்டிப்பாக கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நடிகர் ஆயிஷ்வர்ய் தாக்கரே கூறியதாவது...,
“நிஷாஞ்சி" என் மனதுக்கு நெருக்கமான படம். இது என் முதல் படம் என்பதற்காக மட்டுமல்ல, பப்லூ மற்றும் டப்லூ எனும் இரட்டை சகோதரர்களாக நடிப்பதன் மூலம் என் நடிப்பின் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைத்ததற்காகவும் இது முக்கியமான் படம். இரண்டு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களை நடிப்பதில் மனதாலும் உடலாலும் பல சவால்களை சந்தித்தேன். அதேசமயம், படத்தின் இசையிலும் பங்களித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா போன்ற தைரியமான கதைகளுக்கு ஆதரவு தரும் நிறுவனத்துடன் அறிமுகமாகுவது பெருமை. செப்டம்பர் 19 அன்று பார்வையாளர்கள் இப்படத்தை கொண்டாடுவதைக் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நடிகை வேதிகா பின்டோ கூறியதாவது...,
“நிஷாஞ்சி" டிரெய்லர் வெளியாகியிருப்பது இன்னும் கனவுபோல் இருக்கிறது! அனுராக் சார் எப்போதுமே என் விருப்பப்பட்டியலில் இருந்தவர். அவர் இயகத்தில் நடிக்க வேண்டும் என்கிற என் கனவு நனவாகியது. இந்த படத்தில் நான் நடித்த ரங்கேலி ரிங்கூ முதல் பார்வையில் மென்மையான, இனிமையானவளாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் வலிமையான, துணிச்சலானவளாக இருக்கிறாள். அதை பார்வையாளர்கள் உணர்வார்கள். ஆயிஷ்வர்யுடன் இணைந்து பணிபுரிந்ததும் மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. நிஷாஞ்சி திரைப்படம் உணர்ச்சி, டிராமா மற்றும் எனர்ஜி நிறைந்த தேசி என்டர்டெய்னர். செப்டம்பர் 19 அன்று திரையரங்குகளில் நீங்கள் இப்படத்தை அனுபவிப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,” என்றார்.
ரசிகர்களே தயார் ஆகுங்கள் – "நிஷாஞ்சி" செப்டம்பர் 19 அன்று முதல் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்!
அமேசான் MGM ஸ்டூடியோஸ் பற்றி
அமேசான் MGM ஸ்டூடியோஸ் என்பது திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி உள்ளடக்கங்களை தயாரித்து உலகளவில் விநியோகிக்கும் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனம். ஒரிஜினல் தொடர்கள் Prime Video வில் வெளியாகின்றன. 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இவற்றை பார்வையிட முடியும். திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு பின்னர் Prime Video வில் மட்டும் கிடைக்கும். மேலும் MGM+ சேனலுக்கான உள்ளடக்கங்களையும் ஸ்டூடியோ தயாரிக்கிறது.
தொடர்பு: pv-in-pr@amazon.com
சோஷியல் மீடியா ஹாண்டில்ஸ்: @AmazonMGMStudiosIn
Link : https://bitly.cx/PpRYy