Friday, July 12, 2024

INDIAN - 2 - திரைவிமர்சனம்


மாஸ்டர் பீஸ் வெற்றியடைந்த 28 ஆண்டுகளுக்குப் பிறகு, கமல்ஹாசன் மற்றும் ஷங்கரின் காம்போ இந்தியன் 2 க்கு மீண்டும் வருகிறது, இது சேனாபதியின் கதையின் அதே கதாபாத்திரங்களுடன் வரும் தொடர்ச்சி. படம் வெளியாவதற்கு முன்பே அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் நிறையப் போய்க்கொண்டிருந்தது, இப்போது, ​​அது நீடித்ததா என்று பார்ப்போம்.

தொடக்கத்தில், இந்தியன் 2 முதல் பாகத்துடன் ஒப்பிடுகையில் வெகு தொலைவில் உள்ளது, ஏனெனில் கமல்ஹாசனின் கதாபாத்திரம் இங்கே பொம்மையாக இருப்பதால் நிறைய விஷயங்கள் முன்னுக்கு வருகின்றன. முதல் பாகத்தை விட சமமான அல்லது சிறந்த படத்தை எதிர்பார்த்து நீங்கள் படத்திற்குள் நுழைகிறீர்கள் என்றால், நீங்கள் விளம்பரங்களை சரியாக மதிப்பிடவில்லை என்று நான் பந்தயம் கட்டுகிறேன். இந்தியன் 2 ஒரு திரைப்படம், அதன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் மிகவும் உணர்ச்சிவசப்படாமலோ அல்லது தடுமாற்றமோ இல்லாத திரைப்படமாகும், மேலும் எந்த பெரிய குலுக்கல்களும் இல்லாமல் ஒரு அடிப்படை வடிவத்தில் இயக்குவதில் மகிழ்ச்சி அடைகிறது. படம் ஒரு சமூக அக்கறையுடன் நன்றாகத் தொடங்குகிறது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கமல்ஹாசனின் நுழைவுக்குப் பிறகு அது குறையத் தொடங்குகிறது. கமல் பின் இருக்கையில் அமர்வது சம்பந்தப்பட்ட காட்சிகளுடன் முதல் பாதி சராசரியாக உள்ளது, இயக்குனர் ஷங்கரின் பணியைப் பொறுத்தவரை பெரிதாக எதுவும் இல்லை. இங்கே அவர் சுஜாதா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரைக் காணவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது, மேலும் மறக்க முடியாத தருணங்கள் எதுவும் இல்லாமல் படம் ஒரு கண்ணியமான வேகத்தில் நகர்கிறது. ஆனால் சித்தார்த் மற்றும் அவரது குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட கோணம் சிறப்பாகச் செயல்படும் இரண்டாவது பாதியில் இந்தியன் 2 அதன் பெருமையைக் காப்பாற்றுகிறது, மேலும் க்ளைமாக்ஸ் ஆக்‌ஷன் சீக்வென்ஸ், இந்தியன் 3 இன் பார்வையுடன் சேர்ந்து நமக்குச் சற்று உற்சாகத்தைத் தருகிறது. உறுதியளிக்கிறது.

கமல்ஹாசனால் ஆளப்பட்ட ஒரு படத்தின் தொடர்ச்சியில், அவரது காட்சிகள் மிக நீளமாக வரையப்பட்டதாகவும், இன்றைய உலகில் தொடர்புபடுத்த முடியாததாகவும் இருப்பதைப் பார்ப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. ஷங்கரின் ஊழல் எதிர்ப்பு மற்றும் அமைப்புக்கு எதிரான திரைப்படங்களின் காவிய உலகம் முன்பு மகிழ்ச்சியாக இருந்தது, ஆனால் இப்போது, ​​அவை காலாவதியானதாகவும், பிரசங்கித்தனமாகவும் உணர்கிறது, மேலும் அவரது முந்தைய படங்களில் பீச்சாக இருந்த கூஸ்பம்ப்ஸ் தருணங்களும் வலுவான உரையாடல்களும் இல்லாததே முக்கிய காரணம். பெரிய அளவு மற்றும் பிரம்மாண்டத்தை வழங்குவதற்கான இயக்குனரின் திறமை அப்படியே உள்ளது, ஆனால் இங்கே காணாமல் போனது என்னவென்றால், அவர் தனது கதாபாத்திரங்களுக்கு பார்வையாளர்களை வேரூன்றச் செய்த விதம். படத்தில் உண்மையில் சில நல்ல யோசனைகள் முன்னணியில் உள்ளன, ஆனால் அவை அவர் முன்வைக்கும் நிகழ்வுகளுக்கு இடையில் தொலைந்து போகின்றன.

உறுதியான பாத்திரத்தில் நடித்தவர்களில் சித்தார்த்தும் ஒருவர், மேலும் நடிகர் தனது பங்கிற்கு சிறந்த நடிப்பைக் கொண்டு நியாயப்படுத்தியுள்ளார். ப்ரியா பவானி சங்கர், சிம்ஹா, ஜெகன் மற்றும் மற்றவர்களில் உள்ள துணை நடிகர்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பதிலாக அனிருத்துடன் முன்னோக்கி செல்ல ஷங்கரின் முடிவும் நல்லதல்ல, ஏனெனில் படம் அதன் இசை அடிப்படையில் பாதிக்கப்படுகிறது. ரவிவர்மனின் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது.


 

தஞ்சையில் மிக பிரமாண்டமாக துவங்கப்பட்ட “லாங்க்வால்” மால்*

*தஞ்சையில் மிக பிரமாண்டமாக துவங்கப்பட்ட “லாங்க்வால்” மால்*

*தஞ்சைக்கு புதிய அடையாளமாய் துவங்கப்பட்ட “லாங்வால்” வணிக வளாகம்*
*தஞ்சைக்கு பெருமை சேர்க்கும் “லாங்வால்”*
தஞ்சையில் லாங்வால் வணிக வளாக துவக்க விழாவில் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி  துவங்கி வைத்தார் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.
தஞ்சை மாவட்டத்தில் புதிதாக மிக பிரமாண்டமான முறையில் லாங்வால் என்ற வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தின் துவக்க விழா நேற்றைய தினம் (10.04.2024) நடத்தப்பட்டது.
இவ்விழாவை தமிழக தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஆர்.பி. ராஜா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். 
விழாவில் பேசிய, “டி.ஆர்.பி. ராஜா பேசுகையில்  தமிழகத்தில் முக்கிய நகரமாக தஞ்சையை மாற்றுவதில் முதல்வர் தீவிரமாக உள்ளார். தஞ்சை நகரில் தொழில் வளர்ச்சி வர வேண்டும் என்பதில் அரசு தெளிவாக இருக்கிறது.
விவசாய பெருங்குடி மக்கள் உள்ள இந்த பகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மிகவும் முக்கியமாகும். அந்த வகையில் இந்த மால் மிகப்பிரம்மாண்டமாக 200000 சதுர அடியில் உருவாகியுள்ளது. 
இந்தியாவின் முன்னனி ஆடை நிறுவனங்களும் உலகின் தலை சிறந்த நிறுவனங்களும் இங்கு வர்த்தகத்தில் ஈடுபட உள்ளன. மேலும் இங்கு 800 இருக்கைகள் கொண்ட மூன்று திரையறுங்குகளும் அமைந்துள்ளது.
சிறப்பான விசயமாக உள்ளது. 
இப்பெரும் நிறுவனம் உருவாக காரணமான வி.என்.டி இளங்கோவன், சுஜய் கிருஷ்ணா, சஞ்சய் குமார் உள்ளிட்டோருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” 
இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் மாநகராட்சி மேயர் ராமநாதன் துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆஷிஸ் ராவத் IPS சென்னை சில்க்ஸ் நந்தகோபால் அரவிந்த் Eye Hospital அரவிந்த் Hereditary trustee ஸ்ரீ பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்ட பல்வேறு முக்கிய  பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேசிய லாங்வல் மால் சேர்மன் திரு. சுஜய் கிருஷ்ணா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொழில்துறை அமைச்சர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

மணிரத்னம் வெளியிடும் #காந்தாரி பட டிரைலர் !* *R.கண்ணன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் கலக்கும் ஹன்சிகா!!*

*மணிரத்னம் வெளியிடும் #காந்தாரி பட  டிரைலர் !* *R.கண்ணன் இயக்கத்தில்  இரட்டை வேடத்தில் கலக்கும் ஹன்சிகா!!*
Masala Pix  நிறுவனம் சார்பில் ஆர்.கண்ணண் தயாரித்து, இயக்க, ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “காந்தாரி”  திரைப்படம் ஆகஸ்ட் மாதம்  வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். 
இதன் இசை மற்றும் டிரைலரை இந்தியாவின் ஒப்பற்ற இயக்குநர் மணிரத்னம் ஆன்லைனில் வருல் 12ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார். 
இந்து அறநிலையத்துறை அதிகாரியாக வேலை பார்க்கும் இளம்பெண், பல காலத்திற்கு முன் ஒரு மன்னன் கட்டிய  கந்தர்வக்கோட்டையை ஆராயச் செல்கிறார். பொக்கிசங்களைத் தேடிச் செல்லும் அவருக்கு, அங்கே பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. பல திருப்பங்களுடன் பரபரப்பான திரைக்கதையில், இப்படம் ரசிகர்களுக்குப் புத்தம் புது அனுபவமாகவும் இருக்கும்.  
ஹன்சிகா மோத்வானி இப்படத்தில் முதன்முறையாக இந்து அறநிலையத்துறை அதிகாரி, நரிக்குறவப் பெண் என  இரட்டை வேடத்தில், நடிக்கிறார். அவரது திரைப் பயணத்தில் இப்படம் அவருக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும். 
மேலும், மெட்ரோ ஷிரிஷ்,மயில்சாமி, தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், ஸட்ண்ட் சில்வா, வினோதினி, பவன், பிரிகிடா சகா, வடிவேல் முருகன், கலைராணி ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர். 
இயக்குநர் கண்ணன் Masala Pix  நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரித்து, இயக்கியுள்ளார்.   இப்படத்தின் கதையைத் தொல்காப்பியன் எழுதியுள்ளார், திரைக்கதையை தனஞ்செயன் எழுதியுள்ளார். வசனங்களை ஸ்ரீனி எழுதியுள்ளார். ஒளிப்பதிவை பாலசுப்பிரணியம் செய்கிறார். படத்திற்கு LV கணேஷ் முத்து இசையமைத்துள்ளார், எடிட்டிங்க் பணிகளை ஜிஜிந்த்ரா கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை ஸட்ண்ட் சில்வா வடிவமைத்துள்ளார். தயாரிப்பு மேற்பார்வை பணிகளை சிவசங்கரன் செய்துள்ளார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார்.

Thursday, July 11, 2024

வெங்கட் பிரபு இயக்கத்தில் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படம் நண்பர்கள் தினமான ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகிறது

*வெங்கட் பிரபு இயக்கத்தில் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படம் நண்பர்கள் தினமான ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகிறது*!

இயக்குநர் வெங்கட் பிரபு தனது தனிப்பட்ட வாழ்விலும், சினிமா வட்டாரத்திலும் வலுவான நட்பு வட்டாரத்தைக் கொண்டுள்ளார். நட்பின் சாரத்தை வசீகரமாகவும், சுவாரஸ்யமாகவும் எடுத்துரைக்கும், 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படத்தை ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியிடுகிறார். நட்பைப் பற்றி பேசும் இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி நண்பர்கள் தினமான ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு அருகில் வந்திருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. 

வொயிட் ஃபெதர்ஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரிப்பாளர் ஐஸ்வர்யாவின் மசாலா பாப்கார்ன் தயாரிக்கும் இந்தப் படத்தை ஆனந்த் எழுதி இயக்கியுள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு, படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்து தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், நட்பு பூமியில் உள்ள ஒவ்வொரு நபரும் அனுபவிக்கும் பரிசு என்று  கூறியுள்ளார். அவர் தனது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலும் தனது சொந்த நண்பர்களின் முக்கியத்துவத்தை சிலாகித்துப் பேசியிருக்கிறார்.  மேலும், இந்தப் படத்தின் பின்னால் உள்ள இளம் நண்பர்களின் பங்களிப்பையும் பாராட்டியுள்ளார். “நட்பிற்காக இந்தப் படத்தில் இணைந்தேன். நட்பின் சாரத்தை இப்படம் கொண்டாடியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்கிறார் வெங்கட் பிரபு.

மேலும், உலக நண்பர்கள் தின வார இறுதியில் படத்தின் வெளியீட்டுத் தேதி அமைந்திருப்பது பார்வையாளர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். வாழ்க்கை மற்றும் நட்பின் கொண்டாட்டத்தை கொடுக்க இருக்கும் 'NOVP' படத்தில் வேலை செய்த ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். 

'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படம் சென்னை மற்றும் பெரும்பாலான போர்ஷன் சிங்கப்பூரில் மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த 'காளிதாஸ் 2'*

*சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த  'காளிதாஸ் 2'*

*பூஜையுடன் தொடங்கிய  'காளிதாஸ் 2'*

2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான 'காளிதாஸ்'.  காளிதாஸ் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது 'காளிதாஸ் 2' படத்தின் தொடக்க விழா, பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்கள் லலித் குமார்- செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, டி. சிவா - அம்மா கிரியேஷன்ஸ்,  கதிரேசன்- ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ், அருண் விஸ்வா- சாந்தி டாக்கீஸ், அம்பேத்குமார்- ஒலிம்பியா மூவிஸ்,  சினிஷ்-  சோல்ஜர் ஃபேக்டரி, கருணா மூர்த்தி- ஐங்கரன் இன்டர்நேஷனல், குமார்- லார்க் ஸ்டுடியோஸ், தேவராஜு மற்றும் ஃபைவ் ஸ்டார் கல்யாண்,  விநியோகஸ்தர்கள் அழகர்சாமி, அரவிந்த் - ஆருத்ரா பிலிம்ஸ், 'டாடா' பட இயக்குநர் கணேஷ் பாபு, இயக்குநர் கே.  கல்யாண், 'டார்க்' பட இயக்குநர் ஜெகன், ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணியம், வேல்ராஜ், சக்தி, சண்டை பயிற்சி இயக்குநர் பாண்டியன், இணை இயக்குநர் ஆதிஷ்.. உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

'காளிதாஸ்' படத்தை தொடர்ந்து 'காளிதாஸ் 2' படத்தையும் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்குகிறார்.‌ இதில் பரத் மற்றும் அஜய் கார்த்தி நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைக்கிறார். துரைராஜ் கலை இயக்கத்தையும், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளையும் கவனிக்கிறார்கள்.   நிர்வாக தயாரிப்பை பழனியப்பன் மேற்கொள்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்கை பிச்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் தயாரிப்பாளர் யோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து  தயாரிக்கிறார்கள். 

இவர் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற 'பார்க்கிங்', 'கருடன்', 'மகாராஜா' ஆகிய திரைப்படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கிறார். இவர் தயாரிப்பில் 'காளிதாஸ் 2' படம் உருவாகுவதால்.. திரைப் பட ரசிகர்களிடையேயும், திரை ஆர்வலர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. 

இந்நிலையில் படத்தின் தொடக்க விழாவைத் தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

டாக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் 'பைரவனா கோனே பாதா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*


*டாக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் 'பைரவனா கோனே பாதா'  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*

டாக்டர் சிவராஜ்குமாரின் சொந்த பட நிறுவனமான வைஷாக் ஜெ. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் வைஷாக் ஜெ. கௌடா,  'பைரவனா கோனி பாதா' படத்தை தயாரிக்கிறார். இதுவரை டாக்டர் சிவ ராஜ்குமார் நடித்த திரைப்படங்களிலேயே மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படம் தயாராகிறது.

டாக்டர் சிவராஜ் குமார் கவசம் அணிந்து நீண்ட நரை முடியுடன் காட்சியளிக்கும் முதல் தோற்றத்தை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருப்பதால்.. நல்ல விமர்சனங்களை பெற்றிருக்கிறது.  சமீபத்தில் படக்குழுவினர் இப்படத்தின் தலைப்பை வெளியிட்ட போது தலைப்பில் உள்ள தனித்துவத்திற்காகவும், தலைப்பு முழுவதும் கன்னடத்தில் வைத்திருக்க குழு ஒன்றினை தேர்வு செய்ததற்காகவும் ஒருமனதாக பாராட்டப்பட்டது. 

படத்தைப் பற்றி டாக்டர் சிவ ராஜ்குமார் பேசுகையில், '' நீண்ட நாட்களாக பேசப்படும் படம் இது. அப்பா ஜி கடந்த காலங்களில் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறியப்பட்டவர். மேலும் அதன் மீது மிகுந்த அன்பையும் பெற்றார். 'பைரவா' வாக நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு கதையும் எனக்குப் பிடித்திருந்தது. இயக்குநர் ஹேமந்த் எம். ராவ் மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து பணியாற்றுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என்றார். 

இயக்குநர் ஹேமந்த் எம். ராவ் பேசுகையில், '' பைரவனா கோனே பாதா' ஒரு வகையில் என்னுடைய இலட்சிய படைப்பாகும்.‌ இந்த அளவில் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதும், நான் ரசிக்கும் படி வளர்ந்த.. ஒரு சூப்பர் ஸ்டாரை இயக்குவதும் பத்து மடங்கு சவாலானதாக இருக்கிறது. சிவா அண்ணாவுடன் பணிபுரிய வேண்டும் என ஒவ்வொரு இயக்குநரும் விரும்புவார்கள். வேலையின் மீதான அவரது வைராக்கியம் தீவிரமானது. ஒரு நாள் முழுவதும் மலை உச்சியில் போட்டோ சூட் நடந்தது. வானிலை நமக்கு சாதமாக இல்லாவிட்டாலும்... சிவராஜ் குமார் சார் படப்பிடிப்பில் ஒத்துழைப்பு வழங்கிய விதம் ஒட்டுமொத்த குழுவும் வியப்பில் ஆழ்ந்தது. 

இது சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலக் கட்டத்தை மையமாகக் கொண்ட.. ஒரு நவீன போர் பற்றிய படமாக இருக்கும். 'பைரவனா கோனே பாதா'வில் நான் உருவாக்குவது ஒரு புதிய அனுபவம்'' என்றார். 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சி அடைந்துள்ள தயாரிப்பாளர் வைஷாக் ஜெ. கௌடா பேசுகையில், '' பைரவனா கோனே பாதா'வின் கதையைக் கேட்டவுடன் இது மிகவும் சிறப்பான படமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். இந்தப் படம் மிகப் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. அரங்கங்கள், படபிடிப்பு தளங்கள்... என அனைத்தும் விரிவாக திட்டமிடப்பட்டு நேர்த்தியாக செயல்படுத்தப்படும். நாங்கள் அமைக்கும் உலகத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. மேலும் அது அந்த காலத்தில் உலகெங்கிலும் உள்ள சிறந்த படங்களுக்கு இணையாக இருக்கும்'' என்றார். 

'பைரவனா கோனே பாதா' படத்தில் நடிக்கும் ஏனைய நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 4'

*மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 4'*

*அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்*

தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 4 ' எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. 

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் 'புரொடக்ஷன் நம்பர் 4' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.‌ அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.  முழு நீள பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரிக்கிறார்.  ஃபின்டேமேக்ஸ் (FYNTEMAX)  வி ஆர் வம்சி இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.

ஃபீல் குட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து, தரமான பட தயாரிப்பு நிறுவனம் என்ற முத்திரையை பதித்து, திரையுலக வணிகர்களிடையேயும் நன்மதிப்பை பெற்றிருக்கும்  தயாரிப்பாளரும், தன்னுடைய காந்த குரலாலும், தனித்துவமான நடிப்பாலும் ரசிகர்களிடம் பிரபலமாகி இருக்கும் அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைவதாலும், இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே ஆரவாரமான எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கும், "2K லவ்ஸ்டோரி" இனிதே பூஜையுடன் துவங்கியது !!

*இயக்குநர் சுசீந்திரன் இயக்கும்,  "2K லவ்ஸ்டோரி" இனிதே பூஜையுடன் துவங்கியது !!*

*இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய தலைமுறை வாழ்வை சொல்லும் காதல் திரைப்படம் "2K லவ்ஸ்டோரி" !!*

*பூஜையுடன்  "2K லவ்ஸ்டோரி" படத்தை துவங்கிய இயக்குனர் சுசீந்திரன்*


City light pictures தயாரிப்பில் தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தின் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படம் "2K லவ்ஸ்டோரி '. இப்படத்தின் படப்பிடிப்பு  நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொள்ள எளிமையான முறையில் பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது. 


தனது தனித்துவமான படைப்புகள் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற, இயக்குநர் சுசீந்திரன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ரொமான்ஸ் ஜானரில் இப்படத்தை இயக்குகிறார். 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கவுள்ளார். 

வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 

கோயம்புத்தூரில் நடக்கும் கதை என்பதால், இப்படத்தின் படப்பிடிப்பை கோவை மற்றும் சென்னையில் படக்குழு திட்டமிட்டுள்ளது. 

இப்படத்திற்கு இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. City light pictures சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தை தயாரிக்கிறார். 

புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில்  மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன்  பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். 

இப்படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.


தொழில் நுட்ப குழு 

இயக்கம் - சுசீந்திரன்
டாப் -V.S.ஆனந்த கிருஷ்ணன் 
இசை - டி.இம்மான்
பாடல் வரிகள்  - கார்த்திக் நேதா 
எடிட்டர் - தியாகு 
கலை - சுரேஷ் பழனிவேலு 
நடனம் - ஷோபி, பால்ராஜ்
பி.ஆர்.ஓ - சதீஷ் (AIM)
ஆடை வடிவமைப்பாளர் - மீரா
போஸ்டர் வடிவமைப்பாளர் - கார்த்திக் 
தயாரிப்பு நிர்வாகி -T.முருகேசன் 
தயாரிப்பாளர் - விக்னேஷ் சுப்ரமணியன்

Wednesday, July 10, 2024

பூஜையுடன் துவங்கிய "யோலோ" திரைப்படம்*

*மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் திரைப்படம் "யோலோ"
*பூஜையுடன் துவங்கிய "யோலோ" திரைப்படம்*


MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ்  தயாரிப்பில்,  இயக்குநர் S.சாம் இயக்கத்தில்,  புதுமுகம் தேவ் நாயகனாக மற்றும் தேவிகா நாயகியாக  நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக உருவாகும் “யோலோ” திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, இன்று இனிதே நடைபெற்றது.
 
வாழ்க்கை ஒரு முறை தான் அதை சரியாக வாழுங்கள் எனும் கருத்தில், மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச் செய்யும் அழகான  காதல் திரைப்படமாக, இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாக ரோம் காம் ஜானரில் கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக,  இப்படம் உருவாகிறது.
இயக்குநர் அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய S.சாம் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
 
இப்படத்தின் பூஜையில் இயக்குநர் அமீர், இயக்குநர் சமுத்திரகனி, இயக்குநர் சுப்பிரமணியம் சிவா முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.  
இந்நிகழ்வினில்..,
தயாரிப்பாளர் மகேஷ் செல்வராஜ் பேசியதாவது...
தமிழ் திரையுலகின் முக்கிய  திரைபிரபலங்கள் எங்களின் படத்துவக்க விழாவிற்கு வருகை தந்ததற்கு நன்றி. எனக்கும் திரைத்துறைக்கும் சம்பந்தமில்லை, திரைப்படங்களுக்கு அவார்ட் தரும் அகாடமி இடங்களில் ஜூரியாக இருந்துள்ளேன். அது தான் எனக்கும் சினிமாவுக்குமான சம்பந்தம். திரை பிரபலங்கள் அமீர் சார், ரமணா சார், டில்லிபாபு சார் எல்லோரும் நல்ல அறிவுரை தந்துள்ளனர். அவர்கள் தந்த ஆசீர்வாதத்திற்கு நன்றி. பத்திரிக்கை ஊடக நண்பர்கள் தரும் ஆதரவிற்கு நன்றி. இந்தக்கதை கேட்டேன், நார்மலாக ஹீரோ என்றாலே 40 வயதில் இருக்கிறார்கள் இதில் இளைஞன் தான் ஹீரோ  அது எனக்குப் பிடித்திருந்தது. யாராவது ஒருவர் இந்த ரிஸ்க்கை எடுத்துத் தான் ஆக வேண்டும். நீங்கள் உங்கள் ஆதரவைத் தாருங்கள். யோலோ என்றால் வாழ்க்கை ஒரு முறை தான் அதைச் சரியாக வாழுங்கள்  என்பது தான். இதைப் படம் வந்தவுடன் புரிந்து கொள்வீர்கள் நன்றி.
 
இயக்குநர் ரமணா பேசியதாவது...
இங்கு உள்ள அனைவரும் நண்பர்கள். இந்த விழாவில் உள்ளவர்கள் நெருங்கிய நண்பர்கள், இது ஒரு அற்புதமான தருணம். வாழ்க்கை ஒரு முறை தான் வாழ முடியும். அதை வைத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியம். சக்ஸஸ் என்பது நீங்கள் உங்களைத் தயாராக வைத்துக்கொள்ளும் போது தான் வரும். சக்ஸஸ் என்பதே ரிஸ்க்குக்கு பின்னால் தான் இருக்கிறது. அதை நாம் எடுத்துத் தான் ஆக வேண்டும். ஒரு நல்ல இலக்கை இந்தக்குழு அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன் நன்றி
சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது...
தயாரிப்பாளர் தான் திறமையாளர்களுக்கு வாய்ப்பு தருவதாக இந்த தயாரிப்பைப் பற்றிச் சொன்னார், அது மிகவும் பிடித்திருந்தது. பூஜையில் நிறைய இளைஞர்கள் இருந்தார்கள்,  பல கனவுகளைச் சுமந்து இருக்கும் இந்த இளைஞர்களை அறிமுகப்படுத்துவது சினிமாவுக்கு நல்லது.  இதை நாம் ரிஸ்க் என சொல்லக்கூடாது. சாட்டிலைட், ஓடிடி என பார்த்து, படம் செய்யும் போது தியேட்டர் ஆடியன்ஸ்க்கான படங்களைத் தவறவிட்டு விட்டோம். இன்று ரசிகர்களை  திருப்திபடுத்தும் படத்தை வாங்கிக்கொள்ளும் பழக்கம், ஓடிடியில் வந்து விட்டது. இந்த நிலையில், நல்ல கதை, திறமையாளர்களை வைத்து ஒரு தொலைநோக்கு பார்வையோடு இந்த படத்தைச் செய்கிறார்கள். பெரிய கனவோடு செய்கிறார்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
 
நடிகர் லொள்ளு சபா ஜீவா பேசியதாவது...
அமீர் சாருக்கு ரசிகன் நான் அவர் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் சாம் என் நீண்ட கால நண்பர். கண்டிப்பாக  ஒரு அழகான படத்தைத் தருவார். அவருக்கு என் வாழ்த்துக்கள். நான் மிமிக்ரி கற்றுக்கொள்ளும் போது எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது கோபி அண்ணன். அவர் என்னை வாழ்த்துவது மகிழ்ச்சி. நாயகன் தேவ், மற்றும் நாயகி தேவிகாவிற்கு வாழ்த்துக்கள். ரிஸ்க் எல்லாவற்றிலும் இருக்கிறது. நாம் சரியாகத் திட்டமிட்டால் வெற்றியடையலாம். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். 

நாயகி தேவிகா பேசியதாவது...
இது என்னுடைய 4 வது தமிழ்ப்படம். எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததை ஆசீர்வாதமாக நினைக்கிறேன். மிக நல்ல கதாப்பாத்திரம், எனக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
 
நாயகன் தேவ் பேசியதாவது...
எங்களை வாழ்த்த வந்த திரை ஆளுமைகளுக்கு நன்றி. இது தமிழில் எனக்கு மூன்றாவது படம், இரண்டு படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. இயக்குநர் கதை சொன்ன போது, எனக்குப் பிடித்திருந்தது ஆனால் அவர் தயங்கினார், ஆனால் இரண்டு நாள் கழித்து நீங்கள் சரியாக இருப்பீர்கள் என்றார். நீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கையைக் கண்டிப்பாகக் காப்பாற்றுவேன், படம் பற்றி அடுத்த விழாவில் இன்னும் நிறையப் பகிர்ந்து கொள்கிறேன் நன்றி.
 
இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேசியதாவது...
தயாரிப்பாளர் சக்தி இன்றைய தமிழ் சினிமா வியாபாரத்தை அழகாகச் சொன்னார். ஒவ்வொரு படமும் வியாபாரத்தை வைத்து தான் எடுக்கப்படுகிறது, அதைக் கண்டிப்பாக சாம் திறம்படக் கையாள்வார். கண்டிப்பாக வெற்றிப்படைப்பைத் தருவார். நேர்மை தான் வலிமை, வலிமை நிச்சயம் வெற்றி பெறும். சமுத்திரக்கனியிடமிருந்து வந்துள்ள சாம் தனித்துவமாக இருப்பார். தயாரிப்பாளர் மகேஷ், பள்ளி நடத்துபவர், சினிமா துறையிலும் சிறப்பாக விளங்குவார். படக்குழுவினர் இந்தப்படத்தின் மூலம் பெரிய வெற்றியை அடைய வாழ்த்துக்கள்.
 
இயக்குநர் சாம் பேசியதாவது...
இந்த யுனிவர்ஸுக்கு நன்றி. ஃபிலிம் இன்ஸ்டிடியூட் முடித்த போது,  முதலில் இயக்குநர் அமீர் சாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். பின்னர், சமுத்திரகனி சார் எனக்குத் துணை இயக்குநர் வாய்ப்பு தந்தார். கீழ்படிய கற்றுக்கொள் வெற்றி தானாய் வந்து சேரும் என்று அமீர் சார் அலுவலகத்தில் இருக்கும், அதைக் கற்றுக்கொண்டேன். சமுத்திரகனி சார் எனக்கு அண்ணன், அப்பா மாதிரி தான். ரமணா சார் எனக்கு ஒரு மெண்டார். சுப்ரமணிய சிவா சார் எல்லா நேரத்திலும் எனக்கு உறுதுனையாக இருக்கிறார். இந்த வாய்ப்பு எனக்கு மிக முக்கியமானது இந்த வாய்ப்பைத் தந்த மகேஷ் சாருக்கு நன்றி. இதனை சரியாகப் பயன்படுத்தி மிக அழகான படைப்பைத் தருவோம். ராம், என் 25 வருட நண்பர். அவருடையது தான் இந்தக்கதை. ஒரு டீமாக சேர்ந்து தான் இந்தப்படத்தை உருவாக்குகிறோம். உங்களுக்குப் பிடித்த மாதிரி ஒரு நல்ல எண்டர்டெயினர் படத்தைத் தருவோம் நன்றி.
 
இயக்குநர் அமீர் பேசியதாவது...
ஒரு துவக்க விழா, இங்குள்ள பலருக்கு இது வழக்கமான விழா. ஆனால் சாமிற்கும் அவரது குழுவிற்கும் அவர்கள் வாழ்க்கையைத் துவக்கும் விழா. எனக்கு சேதுவைத் துவங்கிய நாள் தான் ஞாபகம் வருகிறது. 93ல் பாலாவின் அகிலன் பூஜை போட்ட அன்றே நின்று போய்விட்டது. தமிழ் சினிமாவின் அத்தனை ஹீரோக்களிடமும் அந்தக்கதை போய் வந்தது. ஆனால் அது நடக்கவில்லை. பின் அது சேதுவாக மாறியது. இங்கு தான் பூஜை போட்டோம், பூஜை அன்று தொழிலாளர்கள் பிரச்சனையில் நின்று போனது. 7 வருடம் கழித்து தான் முடிந்தது. அப்புறமும் படம் வரவில்லை. என்றாவது ஒரு நாள் படம் வரும் என நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். பாலா  தன் ஒட்டுமொத்த உழைப்பையும் தந்து, ஒரு தலைமுறையினருக்கு வாழ்வை  வாய்ப்பை தரும் படைப்பை உருவாக்கி வைத்திருந்தார். ஒரு திரைத் தலைமுறையே அவர் மூலமாகத்தான் வந்தது. அந்த ஆலமரம் தான் பல புதிய கிளைகளைத் தந்துள்ளது. அப்படி ஒரு வாய்ப்பு தான் இந்தப்படமும். எந்தக்காலத்திலும் ஒருவன் தனியாக ஜெயிக்க முடியாது.  அப்படித்தான் இன்று இங்கு மகேஷ் இருக்கிறார். சாம் செய்ய வேண்டியது ஒரு நல்ல படத்தை எடுக்க வேண்டியது தான். இயக்குநர் சாமை  என்னிடமிருந்து சமுத்திரகனி கூட்டிக்கொண்டு போய்விட்டான். நல்ல ஆட்களையெல்லாம் அவன் கூட்டிக்கொண்டு போய்விடுவான். சாமிற்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய வேண்டும். எங்கள் கிளையைப் பரப்ப சாம் வந்திருக்கிறான் என நம்புகிறேன். இந்தப்படம் பெரிய வெற்றிபெற மனதார வாழ்த்துகிறேன் நன்றி.
 
இப்படத்தில் தேவ், தேவிகா நாயகன் நாயகியாக நடிக்க, முக்கிய பாத்திரங்களில் படவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், திலீப் குமார், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுப்பு, பூஜா ஃபியா, விக்னேஷ், லக்‌ஷ்மி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.
 
 
தொழில் நுட்ப குழு
தயாரிப்பு நிறுவனம் - MR Motion Pictures
தயாரிப்பு - மகேஷ் செல்வராஜ்  
இயக்கம் - S. சாம்
ஒளிப்பதிவு - சூரஜ் நல்லுசாமி
இசை - சகிஷ்னா சேவியர்
எடிட்டிங் - A L ரமேஷ்
கலை இயக்கம் - சம்பத் திலக்
கதை - ராம்ஸ் முருகன்
ஸ்டண்ட் - டேஞ்சர் மணி
நடனம் - கலைக்குமார்
திரைக்கதை - S. சாம், ராம்ஸ் முருகன், பண்பு செல்வன்
பாடல்கள் - முத்தமிழ், சூப்பர் சுப்பு, சதீஸ்காந்த்
உடைகள் - நட்ராஜ்
உடை வடிவமைப்பு - மீனாட்சி ஸ்ரீதரன்
ஸ்டில்ஸ் - மணியன்
தயாரிப்பு நிர்வாகி -புதுக்கோட்டை M. நாகு
விளம்பர வடிவமைப்பு - வியாகி
மக்கள் தொடர்பு - சதீஷ் ( AIM )

Sunday, July 7, 2024

லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “இந்தியன் 2” பத்திரிக்கையாளர் சந்திப்பு !

*லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “இந்தியன் 2”  பத்திரிக்கையாளர் சந்திப்பு !

*கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இணைந்திருக்கும் “இந்தியன் 2” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*
உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில்,  பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்,  இப்படத்தின் புரமோசன் பணிகளைப் படக்குழுவினர் கோலாகலமாகச் செய்து வருகின்றனர்.

உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சித்தார்த், ஆகியோர் சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர்.

இந்நிகழ்வினில்…

நடிகர் சித்தார்த் பேசியதாவது… 

'இது மிகப்பெரிய மேடை, கமல்ஹாசன் சார், ஷங்கர் சார் இருவரும்  அவர்களின் உழைப்பால் இந்த மேடையை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த மேடையில் நானும் இருப்பது பெருமை, 25 வருடம் கழித்து இரண்டாவது வாய்ப்பாக, என் குருவுடன் நடிக்கும், இந்த வாய்ப்பை ஷங்கர் சார் தந்துள்ளார். அவருக்கு நன்றி. கமல் சார்,  அவரை சின்ன வயதிலிருந்து கனவில் பார்த்திருக்கிறேன். இப்போது நேரில் தினமும் பார்க்கிறேன் அதுவே பெரும் பாக்கியம். அவருடன் நடித்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை. ஷங்கர் சார் தந்த இரண்டு வாய்ப்பிற்கும் நன்றி.  இந்த திரைப்படம் ஊழலின் முகத்தை உண்மையாகப் பேசும் ஒரு முழுமையான படமாக இருக்கும். அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்.'

இயக்குநர் ஷங்கர் பேசியதாவது...

'இந்தியன் உருவான போது, சேனாதிபதி கதாப்பாத்திரத்தை உருவாக்கக் கமல் சாரோட போட்டோ, அவரோடு அப்பா போட்டோ, அண்ணா போட்டோ  என எல்லாவற்றையும் தோட்டா தரணியிடம் தந்து ஒரு ஸ்கெட்ச் போட்டுத் தரச் சொன்னேன்.  அந்த ஸ்கெட்ச் பார்த்த போதே சிலிர்ப்பாக இருந்தது. முதல் படத்தில் அவர் மேக்கப் போட்டு வந்து நின்ற போது கூஸ்பம்ஸ் வந்தது, இப்போது இந்த படத்தில் மீண்டும் அவர் மேக்கப் போட்டு வந்த போது, அதே சிலிர்ப்பு வந்தது. அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவரை ஷூட்டில் பார்க்கும்போது கமல் சார் என்றே தோன்றாது, ஏதோ இந்தியன் தாத்தா நம்முடனே இருக்கிறார் என்பது போல் தான் தோன்றும். அவர் இந்தியன் தாத்தாவாகத்தான் வாழ்ந்திருக்கிறார். அதே உணர்வு படம் பார்க்கும் போது உங்களுக்கும் வரும். இந்தியன் படம் எடுக்கும் போது 2 ஆம் பாகம் எடுப்பேன் என நினைக்கவே இல்லை, அப்போது தேவைப்பட்ட போது, இந்தியன் தாத்தாவிற்கு அப்போதைக்கு ஒரு பிறந்த வயது வைத்து விட்டேன், ஆனால் இப்போது படம் எடுக்கும்போது அவருக்கு வயது என்ன என்கிற சர்ச்சை வந்துள்ளது. இதை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் சீனாவில் 118 வயது மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரர் இருந்தார், அந்த வயதிலும் அவர் திடகாத்திரமாக சண்டை போடுவார், ஜேம்ஸ் பாண்ட் ஒரிஜினல் வயது 100க்குமேல் ஆனால் அதையெல்லாம் நாம் கண்டுகொள்வதில்லையே, அதே போல் இந்தியன் தாத்தா என்பது ஒரு உணர்வு. அதை ரசிகர்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன். இந்தியன் பார்ட் 1 வந்த போது,  பிராஸ்தடிக் மேக்கப்  அந்த அளவு வளரவில்லை, அதனால் அது ரொம்ப திக்காக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அந்த நிறுவனத்திடம் சொல்லி மேக்கப் தின்னாக இருக்க வேண்டும் எனக்கேட்டு போட வைத்தோம். அதனால் நீங்கள் கமல் சார் நடிப்பை இன்னும் நன்றாகப் பார்க்கலாம். இந்தப்படத்தை முதலில் வேறொருவர் தான் எடுப்பதாக இருந்தது ஆனால் கதையை கேட்டவுடன் நான் தான் தயாரிப்பேன் எனச் சொன்னார் சுபாஸ்கரன், இந்தியன் மாதிரி ஒரு படத்தை லைகா போன்ற நிறுவனம் தான் எடுக்க முடியும்.  சுபாஸ்கரன் சார், ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்ந்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி. இந்தியன் படம் தமிழ் நாட்டில் நடக்கும் ஆனால் இது இந்தியா முழுக்க நடக்கும் கதை, இந்தியா முழுக்க பல மாநிலங்களில் ஷூட் செய்துள்ளோம். ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.'

நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது...

'இந்த வயதில் இப்படம் செய்யும்  ஆர்வம் இவர்களிடம் இருந்து தான் வந்தது. எல்லா கலைஞர்களும் தந்த ஊக்கம் தான் என்னை இயக்கியது. நேர்மறை விசயங்கள் தாண்டி, இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது, நிறையத் தடங்கல்களும் வந்தது. இவ்வளவு கஷ்டப்படுகிறோம் ஆனால் இந்த உழைப்பு ரசிகர்களிடம் போய்ச்சேருமா? எனத் தயக்கம் இருந்தது, ஆனால் இப்போது அது சேரப்போகிறது என்பது மகிழ்ச்சி. உடன் பணிபுரிந்தவர்கள் பலர் இப்போது இல்லை, இப்படிப் பல நிகழ்வுகளைத் தாண்டித்தான் இந்தப்படம் இங்கு வந்துள்ளது. இப்போது எல்லோரும் நன்றாக  இருப்பதாகச் சொல்வது  மகிழ்ச்சி. சென்சாரில் படம் பிடித்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். அது இன்னும் மகிழ்ச்சி. இந்தியன் படம் எடுக்கும்போது, அது தான் அதிக பட்ஜெட் அது ஒரு குறையாகக் கூடச் சொல்லப்பட்டது, ஆனால் இப்போது இந்தப்படத்துடன் ஒப்பட்டால் அது ஒன்றுமே இல்லை. இப்படத்தை அத்தனை பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கிறார் ஷங்கர். அத்தனை கலைஞர்களும், நட்சத்திரங்களும் முழு உற்சாகத்துடனும், உண்மையாக உழைத்து உருவாக்கியுள்ளனர். விவேக் சொன்னது இன்னும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்த உழைப்பு அத்தனையும் நம்புகிறேன் நான். இந்தியன் தாத்தா உபயோகிக்கும் பேனா, உடை என அத்தனையையும், அவ்வளவு நுணுக்கமாக ஆராய்ந்த பிறகே ஒகே சொல்வார் இயக்குநர். கனவில் நினைத்துக் கொண்டிருந்ததை எல்லாம் நிஜமாக்கி காட்டியிருக்கிறார். இந்தியன் என்றால் என்ன தாத்தா வருவார், ஷங்கர் படமென்றால் பிரம்மாண்டம் பாட்டு நல்லாருக்கும் என எளிதாகச் சொல்லிவிடுவார்கள், ஆனால் அது அத்தனை எளிதல்ல, இரண்டாம் பாகம் எனும் போது, நானே அதைத்தான் சொன்னேன், இதே கேள்வி எனக்கும் இருந்தது. ஆனால் அதைத்தாண்டி மிகச்சிறப்பாகத் திரைக்கதை அமைத்துள்ளார் ஷங்கர். ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்ய நிறைய வைத்துள்ளார். படம் உங்கள் அனைவரையும் அசத்தும்'.


பிரம்மாண்டம் எனும் சொல்லுக்கு புதிய அளவுகோலை நிர்ணயிக்கும் வகையில், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தை,  மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர். இந்தியன் 2, அசல் தமிழ் பதிப்பு இந்தியன் 2  எனவும் மற்றும்  தெலுங்கில் பாரதியுடு 2, இந்தியில் ஹிந்துஸ்தானி 2 என உலகம் முழுவதும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி உலகமெங்கும்  இப்படம் வெளியிடப்படுகிறது. 

நடிகர்கள்: கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி ஷங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன், காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், ஜாகீர் உசேன், பியூஸ் மிஸ்ரா, அகிலேந்திர மிஸ்ரா.  


இயக்குநர்: ஷங்கர்
இசை: அனிருத் ரவிச்சந்தர்
ஒளிப்பதிவு இயக்குனர்: ரவிவர்மன் 
தயாரிப்பு வடிவமைப்பாளர்: டி.முத்துராஜ் 
எடிட்டர்: ஸ்ரீகர் பிரசாத் 
வசனம் : ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவண குமார்
ஆக்‌ஷன் : அன்பறிவ் - ரம்ஜான் புல்லட் - அனல் அரசு - பீட்டர் ஹெயின் - ஸ்டண்ட் சில்வா - தியாகராஜன்
VFX மேற்பார்வையாளர்: வி ஸ்ரீனிவாஸ் மோகன்
நடன இயக்குனர் : போஸ்கோ-சீசர் - பாபா பாஸ்கர்  
ஒலி வடிவமைப்பு: குணால் ராஜன் 
மேக்கப் - வான்ஸ் ஹார்ட்வெல் - பட்டணம் ரஷீத் - ஏ.ஆர். அப்துல் ரசாக் 
ஆடை வடிவமைப்பு :  ராக்கி - கவின் மிகுல் - அமிர்த ராம் - எஸ் பி சதீசன் - பல்லவி சிங் - வி.சாய்
DI: ரெட்சில்லிஸ் 
விளம்பர வடிவமைப்பு: கபிலன் செல்லையா 
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
நிர்வாக தயாரிப்பாளர் : சுந்தர் ராஜ்
G.K.M. தமிழ் குமரன் – M. செண்பகமூர்த்தி
தயாரிப்பு: சுபாஸ்கரன்

Friday, July 5, 2024

தென்னிந்தியாவின் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் திரில்லர் ‘ஃபுட்டேஜ்’ ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!!*


*தென்னிந்தியாவின் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் திரில்லர் ‘ஃபுட்டேஜ்’ ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!!*

*ஃபுட்டேஜ் சீரிஸின் அதிரடி போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது !!* 

மோலிவுட்டின் முதல் உண்மையான ஃபவுண்ட் ஃபுட்டேஜ் வகையில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமான 'ஃபுடேஜ்' படத்தின்  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த அற்புதமான அதிரடி திரைப்படத்தில்  முன்னணி நட்சத்திர நடிகை 
 மஞ்சு வாரியர் முதன்மைப் பாத்திரத்தில் அட்டகாச நடிப்பை வழங்கியுள்ளார்.

அஞ்சாம் பாதிரா, கும்பலங்கி நைட்ஸ், மகேஷிண்டே பிரதிகாரம் என  பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய  புகழ்பெற்ற எடிட்டரான சைஜு ஸ்ரீதரன் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். எடிட்டிங்கில் இருந்து டைரக்டராக சைஜு மாறுவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அவரது பன்முகக் கதை சொல்லும் திறமைக்கு சான்றாக ‘ஃபுட்டேஜ்’ அமைந்திருக்கிறது.


மஞ்சு வாரியருடன் நாயர் விசாக் மற்றும் காயத்ரி அசோக் ஆகியோர் இணைந்து அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளனர். மூவி பக்கெட், பேல் ப்ளூ டாட் பிலிம்ஸ் மற்றும் காஸ்ட் என் கோ என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் பினீஷ் சந்திரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இணை தயாரிப்பாளர்களான ராகுல் ராஜீவ் மற்றும் சூரஜ் மேனன் ஆகியோருடன், லைன் புரொடியூசர் அனீஷ் சி சலீம் ஆகியோர் இந்த மாறுபட்ட திரைப்படத்தை உயிர்ப்பிப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.

ஷப்னா முகமது மற்றும் சைஜு ஸ்ரீதரன் ஆகியோரின் கூட்டு முயற்சியின் மூலம் வடிவமைக்கப்பட்ட திரைக்கதை மற்றும் வசனங்களில் இப்படம் ஒரு  அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது. சந்தீப் நாராயண் வடிவமைத்த இத்திரைப்படத்தில் அஸ்வெகீப்சர்ச்சிங் இசைக்குழுவின் பாடல்களும், சுஷின் ஷியாமின் பின்னணி இசையும் அற்புதமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் ஷினோஸ் வினோதமான மற்றும் அழுத்தமான  காட்சிகளை ஃபவுண்ட் ஃபுட்டேஜ் வகையில் படம்பிடித்துள்ளார், அதே நேரத்தில் கலை இயக்குனர் அப்புண்ணி சாஜன் இந்த பரபரப்பான சவாரிக்கு சரியான கலை இயக்கத்தை அமைத்துள்ளார்.

நிக்சன் ஜார்ஜின் ஒலி வடிவமைப்பு, மைண்ட்ஸ்டின் ஸ்டுடியோவின் VFX மற்றும் சமீரா சனீஷின் ஆடை
வடிவமைப்பு என  மிக அட்டகாசமான தொழில்நுட்ப குழு முழு உழைப்பைத் தந்துள்ளது.இந்த அற்புதமான குழுவின் உழைப்பில்  மோலிவுட்டில் புதிய கதை சொல்லலை அறிமுகப்படுத்தும், புதுமையான  அனுபவத்தை  இப்படம் தரும். 

“ஃபுட்டேஜ்” என்பது வழக்கமான படமல்ல, அட்டகாசமான நடிகர்கள், அற்புதமான தொழில் நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில், மிகப்புதுமையான களத்தில், இதுவரையிலான திரையின் கதை சொல்லலை மாற்றி அமைக்கும் புதுமையான படமாக இப்படம் இருக்கும்.


*r.

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"

 கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"   கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமைவரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பா...