Tuesday, October 8, 2024
இந்த ஆட்டம் ரொம்ப புதுசு !! ஆரம்பமே அதிர்ச்சி தந்த பிக்பாஸ், களை கட்டும் சீசன் 8
Monday, October 7, 2024
சென்னை டிடிகே சாலையில் உள்ள ’துளசி மெட்ராஸ் ஸ்டோரை’ திருமதி. செல்வி செல்வம் மற்றும் பல பிரபலங்கள் திறந்து வைத்தனர்!
சென்னை டிடிகே சாலையில் உள்ள ’துளசி மெட்ராஸ் ஸ்டோரை’ திருமதி. செல்வி செல்வம் மற்றும் பல பிரபலங்கள் திறந்து வைத்தனர்!
சென்னை டிடிகே சாலையில் உள்ள துளசி மெட்ராஸ் ஸ்டோர் திறப்பு விழாவின் சிறப்பு நிகழ்வில் தமிழகத்தின் புகழ்பெற்ற பிரமுகர்களான திருமதி. செல்வி செல்வம், திருமதி. துர்கா ஸ்டாலின், திருமதி. ஜெயந்தி தங்கபாலு, டாக்டர். எழிலரசி ஜோதிமணி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவர்களோடு நிகழ்வில் டாக்டர். மரியா ஜீனா ஜான்சன், நீனா ரெட்டி, உஷா வணங்காமுடி, தேவி கோயல், ப்ரீதா ஹரி மற்றும் அனிதா விஜயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு 'துளசி மெட்ராஸ்' என்ற பிராண்ட் ரஸ்வரிதி, சந்தீப் பரேக் மற்றும் பிரார்த்தனா பரேக் ஆகியோரால் நிறுவப்பட்டது. இந்திய நெசவு மற்றும் கைவினை கலைஞர்களை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் நோக்குடன், அவர்கள் இந்த பிராண்டை ஆன்லைனில் மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்களின் தயாரிப்புகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த பிராண்ட் படிப்படியாக வளர்ந்து காஞ்சிபுரத்தில் இருந்து மற்ற நெசவு வகைகளுக்கு தங்கள் சேவையை விரிவுபடுத்தியது. இதன் முதல் கடை பி.எஸ்.சிவசாமி சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.
துளசி மெட்ராஸ் பல நெசவு வகைகளையும் கலை வடிவங்களையும் ஆராய்ந்து, நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்களுடன் ஒத்துழைத்து, நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் புதுமையான ஃப்யூஷன் புடவைகளை உருவாக்கியது. பிரீமியம் சல்வார்களுடன் டுசார்ஸ், கட்வால்ஸ் மற்றும் பனாரசிஸ் போன்றவைகளுடன் விரிவடைந்தது.
இந்த பிராண்டின் லோகோ காமதேனு செழுமையின் தெய்வம். இதைப்போலவே, நுகர்வோரின் எப்போதும் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய அனைத்து விலை வரம்புகளிலும் உயர்தர தயாரிப்புகளை வழங்குவதே அவர்களின் குறிக்கோளாக உள்ளது. இந்த பிராண்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்களால் வடிவமைக்கப்பட்ட சிறந்த புடவைகளைக் கொடுக்கிறது.
Sunday, October 6, 2024
ஸ்வீட்டி நாட்டி கிரேஸி பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
ஆண்களா ? பெண்களா ? இது உங்கள் வீட்டுப் பிரச்சனையில்லை, இது பிக்பாஸ் பிரச்சனை, வந்துவிட்டது சீசன் 8, இப்போது உங்கள் விஜய் தொலைக்காட்சியில்
ஆண்களா ? பெண்களா ? இது உங்கள் வீட்டுப் பிரச்சனையில்லை, இது பிக்பாஸ் பிரச்சனை, வந்துவிட்டது சீசன் 8, இப்போது உங்கள் விஜய் தொலைக்காட்சியில் !!
ஆண்கள் VS பெண்கள் பிரிக்கப்பட்ட களம், இந்த ஆட்டம் புதுசு, களை கட்டிய பிக்பாஸ் சீசன் 8 !
முதல் எபிஸோடிலேயே அதிரடி, களை கட்டிய பிக்பாஸ் சீசன் 8 !
போட்டியாளர்களைப் பிரித்து, அதிரடி காட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆரம்பமானது பிக்பாஸ் சீசன் 8 !!
"ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.." சொன்னதைச் செய்த பிக்பாஸ், ஆரம்பமானது பிக்பாஸ் சீசன் 8 !!
தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இந்த முறை ஆரம்பமே அமர்க்களமாக, புதிய ஹோஸ்டுடன், பல புதுமைகளுடன், முதல் எபிஸோடே களை கட்ட ஆரம்பித்துள்ளது.
இந்த முறை வீடு, களம், போட்டியாளர்கள், விதிகள் என எல்லாமே புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப எபிஸோடே ஆண்களா ? பெண்களா? எனும் விவாதத்துடன் களை கட்ட ஆரம்பித்துள்ளது.
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8வது சீசன், இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார்.
இந்த முறை ஒவ்வொரு போட்டியாளர்களும் பல வித்தியாசமான களங்களின் பின்னணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களை தன் பாணியில் கனிவுடன் அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி, அவர்கள் ஒவ்வொருவரிடமும் நண்பனைப்போல் மிக இயல்பாக உரையாடி, அவர்களின் பின்னணி, அவர்கள் பிக்பாஸ் வந்த காரணம் என, எல்லாவற்றையும் கேட்டறிந்து, உற்சாகப்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது. மேலும் போட்டியாளர்கள் தவறு செய்தால் நான் தட்டிக்கேட்கவும் தயங்க மாட்டேன் என அதிரடியும் காட்டினார்.
பிக்பாஸ் விளையாட்டை ஆரம்பித்த விஜய் சேதுபதி இந்தமுறை உலகத்தில், நாட்டில், வீட்டில் என சமூகத்தில் முக்கிய பிரச்சனையாக இருக்கும் ஆண்களா? பெண்களா? எனும் தீம் நம் பிக்பாஸில் அறிமுகமாகிறது என ஆச்சரியப்படுத்தினார்.
இந்த முறை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட வீட்டில், வீட்டின் நடுவே ஒரு பெரிய கோடு கிழிக்கப்பட்டு, ஒரு பக்கம் கிச்சனுடன் பெட்ரூம் வரிசையும், இன்னொரு புறம் டாய்லெட்டுடன் பெட்ரூம் வரிசையும் என, இரண்டு பெட்ரூம்கள் வரிசைகளாக பிரிக்கப்பட்டிருந்தது. முதல் ஆறு போட்டியாளர்கள் நுழைந்ததும், ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக அவர்களுக்கு பெட்ரூம்களை தேர்ந்தெடுக்கச் சொல்லப்பட்டது. ஆரம்ப எபிஸோடிலேயே ஆண்களா? பெண்களா? என விளையாட்டு களை கட்டியது.
இருவரும் சிங்கிள் பெட் ரூம்கள் இருக்கும் அறையையே தேர்ந்தெடுக்க, ஆட்டம் இன்னும் சுவாரஸ்யமானது.
புதிய விதிகள், புதிய களம், புதிய போட்டியாளர்களுடன், ஆண்களா ? பெண்களா? எனும் விவாதத்தை விஜய் சேதுபதி, எப்படிக் கொண்டு செல்லப் போகிறார் எனும் ஆவல் பார்வையாளர்களிடம் அதிகரித்துள்ளது.
முழுக்க முழுக்க சுவாரஸ்யங்களை அள்ளித்தரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை, உங்கள் விஜய் தொலைக்காட்சி மற்றும் 24/7 டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்திலும் கண்டுகளியுங்கள்.
"2K லவ்ஸ்டோரி" நாயகன் ஜெகவீரை அறிமுகப்படுத்திய மக்கள் நாயகன் ராமராஜன்
"2K லவ்ஸ்டோரி" நாயகனை அறிமுகப்படுத்தும் விழா !!
"2K லவ்ஸ்டோரி" நாயகன் ஜெகவீரை அறிமுகப்படுத்திய மக்கள் நாயகன் ராமராஜன் !!
ராமராஜன் அறிமுகப்படுத்திய புது ஹீரோ !!
City lght pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் "2K லவ்ஸ்டோரி”. இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படக்குழுவினர் விரைவில் திரைக்குக்கொண்டுவரும் பணிகளைச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் படத்தின் அறிமுக நாயகன் ஜெகவீரை அறிமுகப்படுத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மக்கள் நாயகன் ராமராஜன் படக்குழுவினரை வாழ்த்தி, அறிமுக நாயகன் ஜெகவீரை பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…
மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. 2கே லவ்ஸ்டோரி என்னை நானே மீட்டெடுத்துக்கொண்ட படம், வெண்ணிலா கபடி குழு படத்தைப்போல் நிறைய பாசிடிவ் விசயங்கள் நடந்தது. இயற்கையே நிறையச் செய்து தந்தது. எதேச்சையாக நாயகனை ஒரு ஆபிஸில் சந்தித்தபோது, என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டேன், அவர் ஒரு புராஜக்ட் செய்வதாகச் சொன்னார். சொல்லுங்கள் நாம் ஒரு படம் செய்வோம் என்றேன். நான் ஒர்க் பண்ணிய ஹீரோக்களிடம் கூட இப்படிக் கேட்டதில்லை, அவரும் உடனே சரி என்று வந்தார். அவரே அவரது நண்பர்கள் உதவியுடன் புரடியூஸ் செய்ய வந்தார், ஆனால் நடக்கவில்லை, அப்போது உங்கள் அக்கவுண்டில் இருந்து 10000 போடுங்கள், நாம் அடுத்த மாதம் படம் செய்யலாம் என்றேன். வெண்ணிலா கபடி குழு படத்தில் இப்படி தான் ஆரம்பமானது. யார் தயாரிப்பாளர் என்று தெரியாமல் தான் அந்தப்படமும் ஆரம்பித்தேன். அதே போல் இந்தப்படமும் தயாரிப்பாளர் தானாக வந்து சேர்ந்தார். படத்தில் பணியாற்றிய பலரும் அது போலவே வந்தார்கள். நிறையப் புதுமுகத்தை வைத்து எடுத்துள்ளேன். இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். அவருடன் எனக்கு 10 வது படம், அவருக்கு எப்போதும் ஒரு வகையான கிராமத்து முகம் தான் இருக்கிறது. அதை மாற்றி சிட்டி சப்ஜெக்ட், இளமை துள்ளலுடன் செய்யலாம் என கூட்டி வந்தேன், அட்டகாசமாகப் பாடல்கள் தந்துள்ளார். நிறைய ஃபன் இருக்கிற படமாக இப்படம் இருக்கும். பிரேமலு மாதிரி பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இப்படம் இருக்கும். பாண்டிய நாடு படத்திற்குப் பிறகு உன்னிடம் கான்ஃபிடண்ட் இல்லை என என் நண்பன் சொல்வான், இந்தப்படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என கான்ஃபிடண்டாக சொல்லிக்கொள்கிறேன். என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. தமிழ் சினிமாவில் எப்படி விஜய் சேதுபதி வந்தாரோ அப்படி ஒரு ஹீரோவாக ஜெகவீர் ஜொலிப்பார். சினிமாவின் மீது பேஷனோடு இருக்கும் இளைஞன், சூரி, விஷ்ணு போல் இவரும் ஜொலிப்பார்.
ஜிபி முத்து பேசியதாவது…
இந்தப்படத்தில் நடிக்க சொன்ன போது பயமாக இருந்தது. சிங்கம் புலி சார் ஏற்கனவே இயக்குநர், நடிப்பிலே ஊறியவர்கள் எல்லோரும் அதனால், அவர்களுடன் நடிப்பது பயமாகத்தான் இருந்தது. பின்னர் எல்லோரும் ஊக்கம் தந்தார்கள். இளைஞர்கள், எல்லோரும் ரொம்ப அன்பானவர்களாக இருந்தார்கள். என்னை அன்பாகப் பார்த்துக் கொண்டார்கள். என்னை ரெண்டு படம் நடிக்க வைத்த இயக்குநர் சுசீந்திரன் சாருக்கு நன்றி. சக்திவேல் பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சார் மிக உறுதுணையாக இருந்தார் நன்றி.
நடிகர் முருகானந்தம் பேசியதாவது..,
முதல் நாள் ஷூட்டிங்கில் ரெடியா இருக்கீங்களா என்று கேட்டார்கள், நான் ரெடி சார் என்றேன். காலை 6 மணி தான் நான் ரூமில் இருந்தேன். பார்த்தால் ஷூட் போய்க்கொண்டு இருந்தது. இப்படத்தில் அவ்வளவு விரைவாக எல்லோரும் வேலை பார்ப்பார்கள். சுசீந்திரன் சார் மிகச் சிறப்பாக இயக்கியுள்ளார். இளைஞர்கள் எல்லோரும் மிக அருமையாக நடித்துள்ளார்கள். நான் நடிக்கும் போது, கோயம்புத்தூர் பாஷை பேசி நடிக்கக் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். வாய்ப்பு தந்த சுசீந்திரன் சாருக்கு நன்றி. என் படக்குழு அனைவருக்கும் நன்றி. ஹீரோ மிக நட்புடன் பழகினார். அவருக்கும் நன்றி.
நடிகை வினோதினி வைத்தியநாதன் பேசியதாவது..
அனைவருக்கும் வணக்கம், 2013 ல மேனேஜர் போன் செய்து, ஆதலால் காதல் செய்வீர் படத்திற்காகக் கூப்பிட்டார், அப்படத்தில் அம்மா கேரக்டர், நான் மதர் கேரக்டர் செய்வதில்லை என சொன்னேன், சுசி சார் ஓகே பை என சொல்லி விட்டார். பின்னர் ஈஸ்வரன் படத்தில் நல்ல வாய்ப்பு தந்தார். அதிலிருந்து தொடர்ந்து வாய்ப்பு தருகிறார். இந்தப்படத்திலும் நல்ல கேரக்டர். சுசி சார் ஈஸியாக வேலை வாங்கி விடுவார். எல்லோரும் மிக நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். ஹீரோ அறிமுகம் தான் என்றாலும் நன்றாக நடித்துள்ளார். மீனாட்சி எனக்கு பொண்ணாக மிக நன்றாக நடித்திருக்கிறார். ஆதலால் காதல் செய்வீர் போல, ரிலேஷன்ஷிப் குறித்த அழுத்தமான புரிதல் இந்த படத்திலும் இருக்கிறது. உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
இயக்குநர் நடிகர் ஆண்டனி பாக்யராஜ் பேசியதாவது..,
சுசி சார் எதோ குளத்து வேலைக்கு ஆள் பிடிப்பது போல் நடிக்க ஆள் பிடிக்கிறார். காலை 6 மணிக்கெல்லாம் ஷாட் வைக்கிறார். எல்லோரையும் வைத்து அவ்வளவு விரைவாக வேலை வாங்கி விடுகிறார். போன் செய்து பிரதர் ஃப்ரீயா எனக்கேட்டார், நடிக்க வரலாமே என்றார். என்னை நம்பி கூப்பிடுகிறாரே என உடனே நடிக்க போய் விட்டேன். அவ்வளவு அழகாகப் படத்தை எடுத்துள்ளார். தயாரிப்பாளருக்கு என் வயது தான், மிக இளமையான தயாரிப்பாளர். நன்றாக வர வேண்டும் வாழ்த்துக்கள். இந்த படத்திற்கு ஆபிஸே போடவில்லை, என்னை ஜூடியோவிற்கு கூப்பிட்டு, அங்கு தான் டெஸ்ட் எடுத்தார் இயக்குநர். படம் முழுக்க ஃபன்னாக இருந்தது. ஹீரோ ஆரம்பத்தில் தடுமாறினார் ஆனால் பின்னர் எனக்கே சொல்லித்தர ஆரம்பித்து விட்டார். மீனாட்சி அருமையாக நடித்துள்ளார். எல்லோருடனும் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர் ஆனந்த் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். 38 நாளில் இந்தப்படத்தை முடித்துள்ளார், சுசீந்திரன் சாருக்கு மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும்.
ஆடை வடிவமைப்பாளர் மீரா பேசியதாவது..,
எல்லோருக்கும் நன்றி. ஒரு வருடம் முன்னரே சாரை மீட் பண்ணினேன், என்னைக் கூப்பிடுவார் என நினைக்கவில்லை. வந்தவுடனே காஸ்ட்யூம் பர்சேஸ் பண்ண சொல்லிவிட்டார், பயந்து விட்டேன். என் கூட வந்து, மிக உறுதுணையாக எல்லாவற்றையும் சொல்லித் தந்தார்.
மிக நல்ல அனுபவமாக இருந்தது.
நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசியதாவது..,
இந்தப்படம் ஷூட் போன போது சின்ன பதட்டம் இருந்தது, சுசீந்திரன் சொன்னால் எதுவும் மறுக்க மாட்டேன், நான் மகான் அல்ல படத்தில் இவர் தந்த கேரக்டர், என்னை மிகப்பெரிய இடத்திற்குக் கூட்டிச் சென்றது. தெலுங்கில் என்னைப் பிரபலமாக்கியது. இவர் படத்திற்குப் போனால் மீண்டும் மீண்டும் நிறையக் கற்று கொள்ளலாம். சுசி எப்போதும் ஒரு எக்ஸ்ட்ரா கூட எடுக்க மாட்டார். 2K கோயம்புத்தூரை இவ்வளவு அழகாகக் காட்ட முடியும் என ஆச்சரியம் தந்துள்ளார். ஹீரோ மிக அழகாக நடித்துள்ளார். மிக நல்ல அனுபவம் என்றார்.
நடிகர் துஷ்யந்த் பேசியதாவது…
இந்தப்படம் அழகான ரொமாண்டிக் படமாக இருக்கும். எனக்கு ஈசன் கருடன் படத்திற்கு நேரெதிரான படமாக இருக்கும், இந்தப்படம் வாய்ப்பு தந்ததற்கு சாருக்கு நன்றி. நல்ல படம் அனைவருக்கும் நன்றி.
அறிமுக நாயகன் ஜெகவீர் பேசியதாவது..,
கடவுளுக்கு நன்றி. பிரஸ் மீடியா நினைத்தால், ஒருவரை ஜீரோவாக்குவதும் ஹீரோவாக்குவதும் பத்திரிக்கையாளர்கள் கையில் தான் உள்ளது. இந்தப்படம் எல்லாமே இயற்கை அருளால் தானாக நடந்தது. கன்டன்டாக மிக அருமையாக வந்துள்ளது. சுசி சார் அற்புதமாக எடுத்துள்ளார். ஒரு புராஜக்டில் சரியான லீடர் இருந்தால் போதும், கண்டிப்பாக நல்ல படைப்பு வரும், சுசி சார் சொல்வதை எல்லோரும் சரியாக செய்தால் போதும், அதைச் சரியாகச் செய்துள்ளோம் என நம்புகிறேன். எங்களை நீங்கள் ஆதரித்து வளர துணை புரிவீர்கள் என்று நம்புகிறேன்.
தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது…
ஜெகவீர் சொன்ன மாதிரி, இந்தப்படம் எல்லாம் தானாக நடந்தது. ஹீரோ தான் சுசி சாரை அறிமுகப்படுத்தினார். எப்படி இவர் 2 கே கிட்ஸ் கதை செய்வார் என தயங்கினேன், ஆனால் கதை சொல்லும் போதே அசத்திவிட்டார். டைட்டிலே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சொன்ன தேதிக்கு முன்னரே படத்தை முடித்துத் தந்துவிட்டார். நண்பன் ஜெகவீர் நாயகனாக அறிமுகமாகிறார், மீனாட்சி நன்றாக நடித்துள்ளார். சரவணன் பிரதர் நன்றாக நடித்துள்ளார். ஜேபி சார், சிங்கம் புலி சார் எல்லோரும் அருமையாக நடித்துள்ளார்கள். படம் மிக அருமையாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள், அனைவருக்கும் நன்றி.
நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் பேசியதாவது…
சுசீந்திரன் சாருடன் மூன்றாவது படம், எங்க வீட்டில் நம்பி தனியாக ஷூட் அனுப்புவது சாரோட ஷூட்டிங் ஸ்பாட் தான். இன்னொரு வீடு மாதிரி தான். சார் காலை 6 மணிக்கு ஷூட் வைத்தாலும் சீக்கிரம் முடித்து மதியமே அனுப்பி விடுவார். அவ்வளவு பரபரப்பாக வேலை பார்ப்பார். ஷூட்டிங் மிக ஜாலியாக இருந்தது. ஜெகவீர் நன்றாக நடித்துள்ளார். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகர் ராமராஜன் பேசியதாவது…
City light pictures தயாரிப்பாளர் விக்னேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள், படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள், நான் இந்தப்படத்திற்கு வரக் காரணம் சுசீந்திரன், அவர் மாமா கலைச்செல்வன் என் 38 வருட நண்பர், அவர் அழைப்பில் தான் இந்த விழாவில் கலந்துகொண்டேன். காதல் நம் மனதை விட்டு அகலாத ஒன்று, இன்று எல்லோரும் சொல்வது 2கே கிட்ஸ் கதை இது. அவர்களின் கதையை அருமையாகச் சொல்லக்கூடிய சுசீந்திரன் இருக்கிறார். இந்தப்படம் மிக நல்ல படமாக அமையும். இந்தப்படத்திற்குப் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். சுசீந்திரன் மிக அழகாக எடுத்திருப்பார். புதுமுகங்களை வைத்துப் படமெடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள். தம்பி ஜெகவீருக்கு வாழ்த்துக்கள் நன்றி.
வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் நடக்கும் கதை என்பதால், இப்படத்தின் படப்பிடிப்பைக் கோவை மற்றும் சென்னையில் படக்குழு நடத்தி முடித்துள்ளது.
இப்படத்திற்கு D இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. City light pictures சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
தொழில் நுட்ப குழு
இயக்கம் - சுசீந்திரன்
ஒளிப்பதிவு -V.S.ஆனந்த கிருஷ்ணன்
இசை - டி.இமான்
பாடல் வரிகள். - கார்த்திக் நேதா
எடிட்டர் - தியாகு
கலை - சுரேஷ் பழனிவேலு
நடனம் - ஷோபி, பால்ராஜ்
மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)
ஆடை வடிவமைப்பாளர் - மீரா
போஸ்டர் வடிவமைப்பாளர் - கார்த்திக்
தயாரிப்பு நிர்வாகி -T.முருகேசன்
தயாரிப்பாளர் - விக்னேஷ் சுப்ரமணியன்
Aaragan - திரைவிமர்சனம்
மகிழினி நிலா என்ற இளம் பெண் நம்பிக்கையால் நிரம்பியவள், தன் காதலன் சரவணனின் வணிகக் கனவுகளுக்கு ஆதரவளிக்கும் ஆர்வத்தில், தொலைதூர மலைவாசஸ்தலத்தில் பராமரிப்புப் பணியை மேற்கொள்கிறாள். அவள் இந்த வேலைக்குப் புறப்படத் தயாராகும் போது, தம்பதியினர் தாங்கள் ஒரு எதிர்காலத்தை ஒன்றாகக் கட்டியெழுப்புவதாக நம்பி, இதயப்பூர்வமான, உணர்ச்சிமிக்க இரவைப் பகிர்ந்து கொள்கிறார்கள். மலை வாசஸ்தலத்தில் ஒருமுறை, மகிழினி தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறாள், ஃபோன் சிக்னல் ஏதுமின்றி, வளர்ந்து வரும் அமைதியின்மை உணர்வு. ஆனாலும், அவள் கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும், சரவணனுடன் ஒரு குடும்பத்தை கற்பனை செய்து கொண்டு அவள் எண்ணங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றன.
இருப்பினும், அவள் அமைதியற்ற கனவுகளை அனுபவிக்கத் தொடங்கும் போது அவளது அமைதியான தங்குமிடம் விரைவில் வினோதமாக மாறும். அவள் பணிபுரியும் பழைய வீட்டில், குறிப்பாக ஒரு மறைக்கப்பட்ட, சங்கிலியால் பிணைக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணைக் காணும்போது, ஏதோ ஒரு தீய செயல் பதுங்கியிருப்பதை அவள் உணர்கிறாள். மகிழினியின் அசௌகரியம் தீவிரமடைகிறது, ஆனால் சரவணனுடன் தனது எதிர்காலத்தில் கவனம் செலுத்தி வலுவாக இருக்க முயற்சிக்கிறாள். சரவணன் ஒரு இருண்ட ரகசியத்தை மறைக்கிறான் என்பது அவளுக்குத் தெரியாது. அவர் உண்மையில் இளந்திரையன், பழங்கால இதிகாசத்திலிருந்து வந்தவர், பாம்புக்கடியிலிருந்து காப்பாற்றிய ஒரு துறவியால் நித்திய இளமையுடன் ஆசீர்வதிக்கப்பட்டவர். ஆனால் இந்த வரம் ஒரு பயங்கரமான விலையில் வருகிறது. தனது இளமையை தக்கவைக்க, சரவணன் கர்ப்பிணிப் பெண்களின் உயிர் சக்தியை உள்ளடக்கிய இருண்ட சடங்குகளை செய்ய வேண்டும்.
"ஆரகன்" திரைப்படம் முதல் பார்வையில் சிக்கலானதாக தோன்றலாம், ஆனால் அதன் மையமானது நம்பிக்கை, துரோகம் மற்றும் சுய கண்டுபிடிப்பு ஆகியவற்றின் கதையாகும். கதை எதிர்பாராத திருப்பங்களை எடுத்தாலும், மகிழினிக்கும் சரவணனுக்கும் இடையேயான தொடர்பு ஆரம்பத்தில் உண்மையானதாக உணர்கிறது, உண்மை வெளிவரும்போது மகிழினியின் பயணத்தை இன்னும் அழுத்தமாக மாற்றுகிறது. கவிப்ரியாவின் மகிழினியின் சித்தரிப்பு நேர்மையானது, குறிப்பாக அவரது பாதிக்கப்படக்கூடிய தருணங்களில், சரவணனாக மைக்கேல் தங்கதுரையின் நடிப்பு சதி அடுக்குகளை சேர்க்கிறது.
இயக்குனர் அருண் கே.ஆர் மர்மம் மற்றும் சஸ்பென்ஸ், காதல், த்ரில்லர் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகளின் கலவையை உருவாக்குகிறார். வேகக்கட்டுப்பாடு மற்றும் செயல்படுத்துவதில் சில சவால்கள் இருந்தபோதிலும், திரைப்படம் பார்வையாளர்களை வாழ்க்கையின் எதிர்பாராத பாதைகளைப் பற்றி சிந்திக்க ஊக்குவிக்கிறது மற்றும் இருண்ட உண்மைகளைக் கூட உள் வலிமை எவ்வாறு கடக்க உதவும்.
Saturday, October 5, 2024
மார்டின் படத்தின் அருமையான "மார்டின் ஆந்தம்" பாடல் வெளியாகியுள்ளது
கார்த்தியின் நடிப்புக்கு கிடைத்த பாராட்டுகள் தான் எனக்கு மிகப் பெருமையாக இருந்தது” ; அர்விந்த்சாமி*
Friday, October 4, 2024
நடிகர் வெற்றி நடிக்கும் 'ஆலன்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு
தளபதி' விஜய் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'தளபதி 69' படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமான பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.*
ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்த, "டிமான்டி காலனி 2" திரைப்படம் !!
ஜே.கே. தமிழ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜே. ஜே எனும் ஜெயச்சந்திரன் இந்த வெப் தொடரை பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக உருவாகும் வெப் தொடர் " வர்ண கதைகள் " ஓவிய கலையையும், ஓவிய கலைஞர்களையும் மையமாக வைத்து உருவாக...
-
*ராட்ட* குழந்தைகள் முதல் பார்க்கக் கூடிய குடும்பப்பாங்கான "U" சான்றிதழ் பெற்ற திரைப்படம்.... 2026 பொங்கல் வெளியீடாக வ...
-
கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்" கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமைவரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பா...









