Wednesday, October 9, 2024

பிரைம் வீடியோ ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் ஒரிஜினல் திரில்லர் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது

*பிரைம் வீடியோ ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் ஒரிஜினல் திரில்லர் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது*
 
இந்த ஒரிஜினல் தமிழ் தொடரானது, கார்த்திக் சுப்பராஜால் தொகுக்கப்பட்டு கல்யாண் சுப்ரமணியன் (இது ஒரு ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்) தயாரிப்பில் அசோக் வீரப்பன், பரத் முரளிதரன் மற்றும் கமலா அல்கெமிஸ் ஆகியோரின் இயக்கத்தில் கமலா அல்கெமிஸ் மற்றும் திவாகர் கமல் ஆகியோரால் உருவாக்கப்பட்டது 
 
இந்தத் தொடரில் நவீன் சந்திரா, நந்தா, மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரீந்தா, ஸ்ரீஜித் ரவி, சம்ரித், சூர்யா ராகவேஷ்வர், சூர்யகுமார், தருண், சாஷா பரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் இந்த முதல் தமிழ் டார்க்-ஹியூமர் த்ரில்லர் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் இந்தியா மற்றும் உலகம் முழுவதும், 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த சேவையில் பிரத்யேகமாக அக்டோபர் 18 முதல் தமிழில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது,
மும்பை, இந்தியா, 09, 2024 — இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, அதன் தமிழ் ஒரிஜினல் திரில்லர் தொடரான  ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தொடரின் மனதைக் கவரும் டிரெய்லரை இன்று வெளியிட்டது. கல்யாண் சுப்ரமணியன் (ஒரு ஸ்டோன்பெஞ்ச் புரொடக்‌ஷன்) தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj), தொகுத்த இந்த தமிழ் ஒரிஜினல் தொடர் அசோக் வீரப்பன், பரத் முரளீதரன் (Ashok Veerappan, Bharath Muralidharan) மற்றும் கமலா அல்கெமிஸ் இயக்கத்தில், கமலா அல்கெமிஸ் & திவாகர் கமல் (Kamala Alchemis & Dhivakar Kamal) ஆகியோரால் உருவாக்கப்பட்டது. எதிர் வரவிருக்கும் இந்த டார்க் ஹியூமர் த்ரில்லரில் நவீன் சந்திரா (Naveen Chandra), நந்தா (Nandha), மனோஜ் பாரதிராஜா (Manoj Bharathiraja), முத்துக்குமார் (Muthukumar), ஸ்ரீந்தா(Srinda), ஸ்ரீஜித் ரவி (Sreejith Ravi), சம்ரித் (Samrith), சூர்யா ராகவேஷ்வர் (Surya ragaveshwar), சூர்யகுமார்,(Surya kumar), தருண் மற்றும் சாஷா பரேன் (Tarun and Sasha Bharen) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளதை பெருமையோடு அறிவிக்கிறது.. 
2000 ஆண்டு கால மத்தியில் நடைபெறுவதாக அமைக்கப்பட்ட இந்த திரில்லர் கதைக் களம்.. நட்பை அதன் அனைத்து வடிவங்களிலும் கொண்டாடுகிறது. கடினமான வாய்ப்புகளினூடே லாகவமாக செல்லவும், சிக்கலான மர்மங்களை கட்டவிழ்க்கவும், தங்களின் மிக மோசமான தேர்வுகளை எதிர்கொள்ளவும் வலுக்கட்டாயமாக நிர்பந்திக்கப்படும் நான்கு பள்ளி நண்பர்களின் வாழ்க்கைப் பயணத்தை இது பின்தொடருகிறது. 
இந்தியா மற்றும், உலகம் முழுவதும் 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழிலும் மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டும் அக்டோபர் 18 முதல் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் செய்யக் கிடைக்கும். இந்த ஒன்பது-எபிசோடுகளைக் கொண்ட த்ரில்லர் பிரைம் மெம்பர்ஷிப்பில் சமீபத்திய சேர்க்கையாகும். இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், ஒரு உறுப்பினருக்கான தொகையாக ஆண்டுக்கு ₹1499 மட்டும் செலுத்தி, சேமிப்பு, வசதி மற்றும் அனைத்து பொழுதுபோக்கு அம்சங் களையும் அனுபவித்து மகிழலாம்
நான்கு பள்ளி மாணவ நண்பர்கள் -கில்லி, இறை, சாண்டி மற்றும் பாலா - தங்களின் கவனக்குறைவால் ஒரு புதிரான சூழலில் சிக்கி, அதிலிருந்து விடுபட போராடும் நிகழ்வுகளின் ஒரு பார்வையை.. இந்த டிரெய்லர் காட்சிப்படுத்துகிறது. காவல்துறையினர் மற்றும் ரௌடி கும்பல்களால் துரத்தப்படும் அவர்கள் தப்பிச்செல்லும் பாதையில் ஒரு மர்மமான மற்றும் புத்திசாலித்தனமான கதாபாத்திரம், லியோ (நவீன் சந்திரா) வை சந்திக்க நேரும் போது சற்றும் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்ப்படுகிறது, அவரது கணிக்க முடியாத வித்தியாசமான ஒவ்வொரு செயல்பாடுகளின் போதும், அதிரடி திருப்பங்கள் ஏற்ப்படுகின்றன. இதன் கதாபாத்திரங்கள் அனைவரும் கால அவகாசமின்றி நேரத்திற்கு எதிராக இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கும் சோக நிகழ்வுகளை நகைச்சுவையாக சித்தரிக்கும் காட்சிகள் நிறைந்த, இந்த த்ரில்லர்… பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டி அவர்களின் மனதைக் கட்டிப்போட்டு, இருக்கையின் விளிம்பில் அமரவைக்கும் சாகசங்கள் நிறைந்த ஒன்றாகவும் இருப்பதற்கு உத்திரவாதம் அளிக்கிறது. 
 
நடிகர் நவீன் சந்திரா தனது கதாபாத்திரம் குறித்த தனது நுண்ணறிவை பகிர்ந்து கொண்டு கூறினார், “அதன் எதிர்பாரா திருப்பங்கள், தீவிரமான கதாபாத்திரங்களின் இயக்க ஆற்றல் மற்றும் அடுக்கடுக்காக வெளிப்படும் மர்மங்கள் நிறைந்த கதைக்களத்தைக் கொண்ட இந்தத் தொடர், சாகசம், டிராமா மற்றும் மர்மம் ஆகியவற்றின் சில்லிடவைக்கும் ஒரு அற்புதமான கலவையாகும். அனைவரையும் முழுமையாக கவர்ந்திழுக்கும் என் கதாபாத்திரம் கதைக்கு ஒரு உத்வேகத்தை அளித்து தொடர் முடியும் வரை முழுவதுமாக பார்வையாளர்களை கட்டிப்போட்டுவிடும். விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இருவர் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இன்ஸ்பெக்டர் ரிஷியின் குறிப்பிடத்தக்க அமோக வெற்றிக்குப் பிறகு, பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைந்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நட்பு, ஆபத்து மற்றும் தன்னை அறிதலின் உணர்வுகள் நிறைந்த ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தொடரை அனைவரும் ஆழ்ந்து அனுபவிப்பதை காண நான் ஆவலோடு காத்திருக்கிறேன்!"

https://youtu.be/MgHTigSWuqQ?si=GnKFChwDv_aTEGEz

Tuesday, October 8, 2024

இந்த ஆட்டம் ரொம்ப புதுசு !! ஆரம்பமே அதிர்ச்சி தந்த பிக்பாஸ், களை கட்டும் சீசன் 8

*இந்த ஆட்டம் ரொம்ப புதுசு !! ஆரம்பமே அதிர்ச்சி தந்த பிக்பாஸ், களை கட்டும் சீசன் 8 !!*

*முதல் போட்டியாளர் வெளியேற்றம், பிக்பாஸ் சீசன் 8ல்  விஜய் சேதுபதி தந்த அதிர்ச்சி அறிவிப்பு!!*

*முதல்முறையாக 24 மணி நேரத்தில் வெளியேறும் போட்டியாளர், அதிரடி சரவெடி காட்டும் பிக்பாஸ் சீசன் 8 !!*

*முதல் எபிஸோடிலேயே அதிரடி,  களை கட்டிய பிக்பாஸ் சீசன் 8 !*

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக, போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில், ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என அறிவித்துள்ளார், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி, இந்த எதிர்பாரா அறிவிப்பு மக்களிடம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.  

தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன்  இன்று கோலாகலமாக ஆரம்பமானது.  இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, எனப் பல புதுமைகளுடன்,  ஆரம்பமான நிலையில், முதல் எபிஸொடின் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.   

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியில்,   கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு,  மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8வது  சீசன், இன்று கோலாகலமாக ஆரம்பமானது.  இந்த முறை, நடிகர்  விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார். 

ஒவ்வொரு போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தி, ஆண்களா? பெண்களா? என வீட்டைப் பிரித்து ஆச்சரியம் தந்தவர், எபிஸோடின் முடிவில் மீண்டும் ஒரு அதிர்ச்சியைத் தந்தார்.  

இன்றைய நிகழ்ச்சியின் முடிவில், பார்வையாளர்களிடம் உரையாடிய விஜய் சேதுபதி, “இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” எனும் பிக்பாஸ் தீமுக்கு ஏற்றவாறு, பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக, பங்கேற்பாளர்களிலிருந்து ஒருவர், 24 மணி நேரத்தில் வெளியேற்றப்படவுள்ளார் என அறிவித்தார். 

இந்த அறிவிப்பு போட்டியாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வீட்டிற்குள் நுழைந்த உடனே அறிவிக்கப்பட்ட எவிக்சன், வீட்டுக்குள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. 

போட்டியாளர்கள், ரசிகர்கள் என எவருமே   எதிர்பாராத இந்த அறிவிப்பு, பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை, முதல் எபிஸோடிலேயே உச்சத்திற்குக் கூட்டிச் சென்றுள்ளது. 

புதிய விதிகள், புதிய களம், புதிய போட்டியாளர்களுடன், ஆண்களா ? பெண்களா?  எனும் விவாதத்துடன் யார் வெளியேறப்போகிறார் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

Monday, October 7, 2024

சென்னை டிடிகே சாலையில் உள்ள ’துளசி மெட்ராஸ் ஸ்டோரை’ திருமதி. செல்வி செல்வம் மற்றும் பல பிரபலங்கள் திறந்து வைத்தனர்!


 சென்னை டிடிகே சாலையில் உள்ள ’துளசி மெட்ராஸ் ஸ்டோரை’ திருமதி. செல்வி செல்வம் மற்றும் பல பிரபலங்கள் திறந்து வைத்தனர்!

சென்னை டிடிகே சாலையில் உள்ள துளசி மெட்ராஸ் ஸ்டோர் திறப்பு விழாவின் சிறப்பு நிகழ்வில் தமிழகத்தின் புகழ்பெற்ற பிரமுகர்களான திருமதி. செல்வி செல்வம், திருமதி. துர்கா ஸ்டாலின், திருமதி. ஜெயந்தி தங்கபாலு, டாக்டர். எழிலரசி ஜோதிமணி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  இவர்களோடு நிகழ்வில் டாக்டர். மரியா ஜீனா ஜான்சன், நீனா ரெட்டி, உஷா வணங்காமுடி, தேவி கோயல், ப்ரீதா ஹரி மற்றும் அனிதா விஜயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு 'துளசி மெட்ராஸ்' என்ற பிராண்ட் ரஸ்வரிதி, சந்தீப் பரேக் மற்றும் பிரார்த்தனா பரேக் ஆகியோரால் நிறுவப்பட்டது. இந்திய நெசவு மற்றும் கைவினை கலைஞர்களை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் நோக்குடன், அவர்கள் இந்த பிராண்டை ஆன்லைனில் மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்களின் தயாரிப்புகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த பிராண்ட் படிப்படியாக வளர்ந்து காஞ்சிபுரத்தில் இருந்து மற்ற நெசவு வகைகளுக்கு தங்கள் சேவையை விரிவுபடுத்தியது. இதன் முதல் கடை பி.எஸ்.சிவசாமி சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. 

துளசி மெட்ராஸ் பல நெசவு வகைகளையும் கலை வடிவங்களையும் ஆராய்ந்து, நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்களுடன் ஒத்துழைத்து, நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் புதுமையான ஃப்யூஷன் புடவைகளை உருவாக்கியது. பிரீமியம் சல்வார்களுடன் டுசார்ஸ், கட்வால்ஸ் மற்றும் பனாரசிஸ் போன்றவைகளுடன் விரிவடைந்தது.

இந்த பிராண்டின் லோகோ காமதேனு செழுமையின் தெய்வம். இதைப்போலவே, நுகர்வோரின் எப்போதும் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய அனைத்து விலை வரம்புகளிலும் உயர்தர தயாரிப்புகளை வழங்குவதே அவர்களின் குறிக்கோளாக உள்ளது. இந்த பிராண்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்களால் வடிவமைக்கப்பட்ட சிறந்த புடவைகளைக் கொடுக்கிறது.

Sunday, October 6, 2024

ஸ்வீட்டி நாட்டி கிரேஸி பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஸ்வீட்டி நாட்டி கிரேஸி பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
காலேஜ் படிக்கும் போதே ஹீரோ ஆகிவிட்டேன் நாயகன் த்ரிகுண் !!

Arun Visualz என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V. M.R.ரமேஷ், R. அருண் இருவரும் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் G. ராஜசேகர்  இயக்கத்தில் , த்ரிகுண் மற்றும் ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, சுந்தரா டிராவல்ஸ் ராதா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்ஸ் காமெடி திரைப்படம்,  ஸ்வீட்டி நாட்டி கிரேஸி. 

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் 

இயக்குநர் G. ராஜசேகர் பேசியதாவது… 
Arun Visualz என்ற புதிய பட நிறுவனத்தின்  V. M.R.ரமேஷ், R. அருண் ஆகியோரிடம் நான் கதை சொல்லப் போன போது, இளைஞர்கள் ரசிக்கும் கதை கேட்டார்கள். இந்த கதை சொன்னவுடன் மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டார்கள். த்ரிகுனை நாயகனாகப் போடலாம் என அணுகினேன், அவருக்கும் கதை பிடித்திருந்தது. ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா,  சுந்தரா டிராவல்ஸ் ராதா   என ஒரு நல்ல  குழு கிடைத்துள்ளது. இந்தக் கால ரசிகர்கள் எல்லோரும் ரசிக்கும்படியான ஒரு அருமையான படமாக இப்படம் இருக்கும். படம் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தமிழ் தெலுங்கு, ஹிந்தி உட்படப் பல மொழி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த  பெண் ஒளிப்பதிவாளர் C. விஜய ஸ்ரீ M. என் கதையை ஒப்புக்கொண்டு,  அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும்,  அனைவருக்கும் நன்றி. 

இசையமைப்பாளர் அருணகிரி பேசியதாவது...
இயக்குநர் ராஜசேகருக்கு என் நன்றி. இப்படம் பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி. 

ஒளிப்பதிவாளர் C. விஜய ஸ்ரீ பேசியதாவது...
சென்னை இண்ஸ்டியூட்டில் படித்த பெண் நான், மீண்டும் இங்கு வந்தது  மகிழ்ச்சி. இயக்குநர் ராஜசேகர் மிக அருமையாகப் படத்தை எடுத்து வருகிறார். தயாரிப்பாளர்கள் மிக உறுதுணையாக இருக்கிறார்கள். படம் கிட்டதட்ட முடிந்துவிட்டது. விரைவில் உங்களை மகிழ்விக்கும். அனைவருக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும் நன்றி.  

சுந்தரா டிராவல்ஸ் ராதா பேசியதாவது…

இப்படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் சார், அருண் சார் எல்லோருக்கும் நன்றி. இரண்டு கதாநாயகிகளும் எனக்கு மிகவும் ஒத்துழைப்பு தந்தார்கள். என் முதல் படத் தயாரிப்பாளர் தங்கராஜ் சார் தான்,  இங்கு நிற்க காரணம் அவருக்கு நன்றி. தம்பி ராமையா சாருடன் நடித்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. சுந்தரா டிராவல்ஸ் படம் போல இந்தப்படமும் காமெடியாக இருக்கும். ஹியூமர் இப்போது நாம் நிறைய மிஸ் செய்கிறோம், அதை இந்தப்படத்தில் மீண்டும் ரசிப்பீர்கள். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். இயக்குநர் மிக அழகாக படத்தை எடுத்துள்ளார். விஜய் ஶ்ரீ மேடம் எங்கள் எல்லோரையும் உற்சாகப்படுத்துவார், அவருக்கு நன்றி என்றார்.

நடன இயக்குநர் ராதிகா பேசியதாவது…
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு என் நன்றி. இறுதிக்கட்டத்தில் தான் நான் இணைந்தேன். ராஜசேகர் சாருடன் முன்னர் வேலை பார்த்திருக்கிறேன். அதை ஞாபகம் வைத்து என்னை அழைத்ததற்கு நன்றி. இயக்குநர் கடுமையாக வேலை வாங்குவார், இரண்டு பாடல்  செய்துள்ளேன், மிக அழகாக வந்துள்ளது. ஒளிப்பதிவாளர் விஜய ஸ்ரீ மேடம் என் வேலையைப் பாதியாக்கிவிட்டார். ஹீரோ மிக அன்பானவர் கேரவனுக்கு போகாத ஹீரோ. இப்படம் ராதாவுக்கு இது நல்ல கம்பேக்காக இருக்கும். இனியா மிக அற்புதமான டான்ஸர். ஸ்ரீ ஜீத்தா கோஷ் துறுதுறுப்பானவர். படம் நன்றாக வந்துள்ளது. உங்கள் எல்லோரது ஆதரவையும் தாருங்கள் என்றார்.

ஸ்ரீ ஜீத்தா கோஷ் பேசியதாவது…
தமிழ் சினிமாவுக்கு நன்றி. நீங்கள் எனக்கு மிகப்பெரிய வரவேற்பையும் வாய்ப்பையும் தந்துள்ளீர்கள் நன்றி. இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் மிக இனிமையாகப் பழகினார்கள். இயக்குநர் மிக அருமையாக இக்கதையை உருவாக்கியுள்ளார். நீங்கள் எல்லோரும் கொண்டாடும் படமாக இருக்கும். மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. பாடல் டான்ஸ் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்தது உங்களுக்கும் பிடிக்கும். நன்றி. 

நடிகை இனியா பேசியதாவது… 
இந்தப்படம் எனக்கு ஸ்பெஷல் மூவி, என் மூன்று  படங்கள் இந்த வாரம் வெளிவந்துள்ளது. தொடர்ந்து நல்ல விசயங்கள் நடப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் நந்தினி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளேன், நல்ல பாத்திரம். மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளோம், ஸ்வீட்டி நாட்டி கிரேஸி யார் யார் என படம் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு பெண் ஒளிப்பதிவாளர் பணியாற்றியது எங்களுக்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தது. அவருடன் இன்னும் நிறையப் படங்கள் செய்ய ஆசை. த்ரிகுன் முதலில் அவரை தெலுங்குப் பையன் என நினைத்தேன், ஆனால் அவர் கோயம்புத்தூர் பையன். அழகாக நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் படம் வருகிறது. எல்லோரும் விரும்பி வேலை பார்த்துள்ளோம். ராஜசேகர் சார் ஃபர்ஸ்ட் படம், செம்ம ஃபன்னாக படம் எடுத்துள்ளார். எல்லோருக்கும் பிடிக்கும்படி கலகலப்பாக இருக்கும்  நன்றி என்றார்.

நாயகன் த்ரிகுண் பேசியதாவது….
ரொம்ப நாஸ்டாஜியாவாக இருக்கிறது. எனக்கு ஊர் கோயம்புத்தூர் தான், ஜர்னலிசம் படிச்சேன், பிரகாஷ் ராஜ் கண்ணில் பட்டு, இனிது இனிது படம் செய்தேன். காலேஜ் படிக்கும் போதே ஹீரோ ஆகிவிட்டேன். சமீபத்தில் மிஷ்கின் சார் இசையமைத்த டெவில் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. நான் தெலுங்கில் பல படங்கள் செய்திருந்தாலும் இங்கு பார்ப்பவர்கள் என்ன படம் செய்துள்ளாய் எனக் கேட்கும் போது, வருத்தமாக இருக்கும், அதனால் தமிழில் படம் செய்ய வேண்டும் என நினைத்தேன். அந்த நேரத்தில் தான் ராஜசேகர் சார் கதை சொன்னார். அவர் தயங்கி தயங்கி கதை சொன்னார், இப்போதைய கால கட்டத்தில் ஒன்று அழ வைக்க வேண்டும், இல்லை சிரிக்க வைக்க வேண்டும், இப்போது நான் சீரியஸ் படங்கள் தான் செய்து வருகிறேன், அதனால் கண்டிப்பாக இந்தப்படம் செய்யலாம் என சொன்னேன். இப்படத்திற்காக ஈசிஆரில் பாடல்  ஷீட் செய்தோம் அதே இடத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்துள்ளேன், இப்போது ஹீரோவாக நடித்தது மகிழ்ச்சி. இப்படத்தில் விஜய் ஶ்ரீ மேடம் செம்ம சூப்பராக வேலை பார்த்துள்ளார், அவருக்கு நன்றி. ராஜசேகர் சார் மிக கடினமான உழைப்பாளி, இப்படம் கண்டிப்பாகப் பேசப்படும் படமாக இருக்கும். எங்கள் படத்தில் மூன்று கதாநாயகிகள், அனுபவம் வாய்ந்தவர்கள் என்னுடன் இணைந்து நடித்ததற்கு நன்றி. இந்தப்படம் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் ஜாலியான படமாக இருக்கும் நன்றி. 


தயாரிப்பாளர் அருண் பேசியதாவது...
நானும் நண்பர் ரமேஷும் அருண் ஈவண்ட்ஸ் சார்பில், நிறைய ஈவண்ட்ஸ் நடத்தியுள்ளோம், ஒரு நாள் என் நண்பர் ரமேஷ் நாம் ஏன் ஒரு நல்ல கமர்ஷியல் படம் செய்யக்கூடாது எனக் கேட்டார். உடனே சரி சார் என்றேன். அப்போது தான் உளவுத்துறை படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வன் வந்து, என் உதவி இயக்குநர் நல்ல கதை வைத்துள்ளார் என்றார், அவர் மனது எனக்குப் பிடித்திருந்தது. அவரே இந்தப்படத்தைச் செய்திருக்கலாம் ஆனால் அவர் துணை இயக்குநருக்கு வாய்ப்பு கேட்டார். இந்த காலத்திற்கு உள்ளத்தை அள்ளித்தா படம் போல வேண்டும் என்றோம், அட்டகாசமான படமாகத் தந்துள்ளார்கள். சிரித்து சிரித்து கொண்டாடும் படமாக இப்படம் இருக்கும். மூன்று கதாநாயகிகள் மூவருக்கும் கொஞ்சம் கூட ஈகோவே இல்லை, இப்படத்தில் நிறையச் செலவு செய்து பல அற்புதமான இடங்களில் ஷூட் செய்துள்ளார்கள். அருணகிரி சார் ஒரு பாடலை 2 மணி நேரத்தில் முடித்தார். இசை உங்களை மயக்கும். எங்க ஹீரோ அற்புதமானவர். இளைஞர்களுக்கான செம்ம ஜாலியான படம்.  எப்போதும் எங்களுக்குத் துணையாக இருக்கும் பத்திரிக்கையாளர்கள் இப்படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 

பின்னர் பத்திரிக்கையாளர்களுடன் நடந்த உரையாடலில்.. 

த்ரிகுன்  தமிழில் ஏமி ஜாக்சனுக்கு புருஷனாக நடித்தது, நீங்கள் மட்டும் தான் அதை ஏன் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்?  எனும் கேள்விக்குப் பதிலளிக்கையில்… 
 ஆம் நடித்துள்ளேன் ஆனால் அதெல்லாம் பெருமை இல்லையே, அப்போது நடித்தேன், அவர் பெரிய நடிகை மகிழ்ச்சி தான், அதைத் தாண்டி எனக்கு என ஒரு பெயரை ஏற்படுத்த வேண்டுமென நினைக்கிறேன். தெலுங்கைப் போல தமிழிலும் வளர வேண்டும்..  என்றார்

மூன்று ஹீரோயின்கள் ஈகோ சண்டை ஏதும் வரவில்லையா ? எப்படி சமாளித்தீர்கள் ? 
அதைத் தான் சார் படமாக எடுத்திருக்கிறோம், மூன்று பெண்களிடம் மாட்டும் ஹீரோ படாதபாடு படுவதுதான் கதை, மற்றபடி இவர்கள் எல்லோரும் இனிமையானவர்கள். 

ஹீரோயின் கொஞ்சம் குண்டாகிவிட்டாலே அம்மா கேரக்டர் தான் வரும், நீங்கள் எப்படி ஹீரோயினாக நடிக்கிறீர்கள் எனும் கேள்விக்கு சுந்தரா டிராவல்ஸ் ராதா பதிலளிக்கையில்… 
ஒரு ஹிரோயினை அப்படி எல்லாம் சொல்லிவிட முடியாது, ஒவ்வொரு வருக்கும் ஒரு உடல்வாகு இருக்கிறது. அதை நாம் மாற்ற முடியாது ஹீரோயினாக இயக்குநர் தந்த வாய்ப்பு தான் இது, படம் பாருங்கள் உங்களுக்குப் பிடிக்கும் என்றார்.

ஆண்களா ? பெண்களா ? இது உங்கள் வீட்டுப் பிரச்சனையில்லை, இது பிக்பாஸ் பிரச்சனை, வந்துவிட்டது சீசன் 8, இப்போது உங்கள் விஜய் தொலைக்காட்சியில்


 ஆண்களா ? பெண்களா ? இது உங்கள் வீட்டுப் பிரச்சனையில்லை,  இது பிக்பாஸ் பிரச்சனை, வந்துவிட்டது சீசன் 8, இப்போது உங்கள் விஜய் தொலைக்காட்சியில் !!

ஆண்கள் VS பெண்கள் பிரிக்கப்பட்ட களம், இந்த ஆட்டம் புதுசு, களை கட்டிய பிக்பாஸ் சீசன் 8 !

முதல் எபிஸோடிலேயே அதிரடி,  களை கட்டிய பிக்பாஸ் சீசன் 8 !

போட்டியாளர்களைப் பிரித்து, அதிரடி காட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆரம்பமானது பிக்பாஸ் சீசன் 8 !!

"ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.." சொன்னதைச் செய்த பிக்பாஸ்,  ஆரம்பமானது பிக்பாஸ் சீசன் 8 !!

தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.  இந்த முறை ஆரம்பமே அமர்க்களமாக, புதிய ஹோஸ்டுடன், பல புதுமைகளுடன்,  முதல் எபிஸோடே களை கட்ட ஆரம்பித்துள்ளது. 

இந்த முறை வீடு, களம், போட்டியாளர்கள், விதிகள் என எல்லாமே புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப எபிஸோடே ஆண்களா ? பெண்களா? எனும் விவாதத்துடன் களை கட்ட ஆரம்பித்துள்ளது.  

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியில்,   கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு,  மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8வது  சீசன், இன்று கோலாகலமாக ஆரம்பமானது.  இந்த முறை, நடிகர்  விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார். 

இந்த முறை ஒவ்வொரு போட்டியாளர்களும் பல வித்தியாசமான களங்களின் பின்னணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களை தன் பாணியில் கனிவுடன் அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி, அவர்கள் ஒவ்வொருவரிடமும் நண்பனைப்போல் மிக இயல்பாக உரையாடி, அவர்களின் பின்னணி, அவர்கள் பிக்பாஸ் வந்த காரணம் என, எல்லாவற்றையும் கேட்டறிந்து, உற்சாகப்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது. மேலும் போட்டியாளர்கள் தவறு செய்தால் நான் தட்டிக்கேட்கவும் தயங்க மாட்டேன் என அதிரடியும் காட்டினார். 

பிக்பாஸ் விளையாட்டை ஆரம்பித்த விஜய் சேதுபதி இந்தமுறை உலகத்தில், நாட்டில், வீட்டில் என சமூகத்தில் முக்கிய பிரச்சனையாக இருக்கும் ஆண்களா? பெண்களா? எனும் தீம் நம் பிக்பாஸில் அறிமுகமாகிறது என ஆச்சரியப்படுத்தினார். 

இந்த முறை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட வீட்டில், வீட்டின் நடுவே ஒரு பெரிய கோடு கிழிக்கப்பட்டு, ஒரு பக்கம் கிச்சனுடன் பெட்ரூம் வரிசையும், இன்னொரு புறம் டாய்லெட்டுடன் பெட்ரூம் வரிசையும் என,  இரண்டு பெட்ரூம்கள் வரிசைகளாக பிரிக்கப்பட்டிருந்தது. முதல் ஆறு போட்டியாளர்கள் நுழைந்ததும், ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக அவர்களுக்கு பெட்ரூம்களை தேர்ந்தெடுக்கச் சொல்லப்பட்டது. ஆரம்ப எபிஸோடிலேயே ஆண்களா? பெண்களா?  என விளையாட்டு களை கட்டியது. 

இருவரும் சிங்கிள் பெட் ரூம்கள் இருக்கும் அறையையே தேர்ந்தெடுக்க, ஆட்டம் இன்னும் சுவாரஸ்யமானது. 

புதிய விதிகள், புதிய களம், புதிய போட்டியாளர்களுடன், ஆண்களா ? பெண்களா?  எனும் விவாதத்தை விஜய் சேதுபதி, எப்படிக் கொண்டு செல்லப் போகிறார் எனும் ஆவல் பார்வையாளர்களிடம் அதிகரித்துள்ளது. 

முழுக்க முழுக்க சுவாரஸ்யங்களை அள்ளித்தரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை, உங்கள் விஜய் தொலைக்காட்சி மற்றும் 24/7  டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்திலும் கண்டுகளியுங்கள்.

"2K லவ்ஸ்டோரி" நாயகன் ஜெகவீரை அறிமுகப்படுத்திய மக்கள் நாயகன் ராமராஜன்


 "2K லவ்ஸ்டோரி" நாயகனை அறிமுகப்படுத்தும் விழா   !! 

"2K லவ்ஸ்டோரி" நாயகன் ஜெகவீரை அறிமுகப்படுத்திய மக்கள் நாயகன் ராமராஜன் !! 

ராமராஜன் அறிமுகப்படுத்திய புது ஹீரோ !! 

City lght pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,  இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம்   "2K லவ்ஸ்டோரி”. இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படக்குழுவினர் விரைவில் திரைக்குக்கொண்டுவரும் பணிகளைச் செய்து வருகின்றனர்.  

இந்நிலையில் படத்தின் அறிமுக நாயகன் ஜெகவீரை அறிமுகப்படுத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மக்கள் நாயகன் ராமராஜன் படக்குழுவினரை வாழ்த்தி, அறிமுக நாயகன் ஜெகவீரை பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு  அறிமுகப்படுத்தினார். 

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…

மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. 2கே லவ்ஸ்டோரி என்னை நானே மீட்டெடுத்துக்கொண்ட படம், வெண்ணிலா கபடி குழு படத்தைப்போல் நிறைய பாசிடிவ் விசயங்கள் நடந்தது. இயற்கையே நிறையச்  செய்து தந்தது. எதேச்சையாக நாயகனை ஒரு ஆபிஸில் சந்தித்தபோது, என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டேன், அவர்  ஒரு புராஜக்ட் செய்வதாகச் சொன்னார். சொல்லுங்கள் நாம் ஒரு படம் செய்வோம் என்றேன். நான் ஒர்க் பண்ணிய ஹீரோக்களிடம் கூட இப்படிக் கேட்டதில்லை, அவரும் உடனே சரி என்று வந்தார். அவரே அவரது நண்பர்கள் உதவியுடன் புரடியூஸ் செய்ய வந்தார், ஆனால் நடக்கவில்லை, அப்போது உங்கள் அக்கவுண்டில் இருந்து 10000 போடுங்கள், நாம் அடுத்த மாதம் படம் செய்யலாம் என்றேன். வெண்ணிலா கபடி குழு படத்தில் இப்படி தான் ஆரம்பமானது. யார் தயாரிப்பாளர் என்று தெரியாமல் தான் அந்தப்படமும் ஆரம்பித்தேன். அதே போல் இந்தப்படமும் தயாரிப்பாளர் தானாக வந்து சேர்ந்தார். படத்தில் பணியாற்றிய பலரும் அது போலவே வந்தார்கள். நிறையப் புதுமுகத்தை வைத்து எடுத்துள்ளேன். இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். அவருடன் எனக்கு 10 வது படம், அவருக்கு எப்போதும் ஒரு வகையான கிராமத்து முகம் தான் இருக்கிறது. அதை மாற்றி சிட்டி சப்ஜெக்ட், இளமை துள்ளலுடன் செய்யலாம் என கூட்டி வந்தேன், அட்டகாசமாகப் பாடல்கள் தந்துள்ளார். நிறைய ஃபன் இருக்கிற படமாக இப்படம் இருக்கும். பிரேமலு மாதிரி பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இப்படம் இருக்கும். பாண்டிய நாடு படத்திற்குப் பிறகு உன்னிடம் கான்ஃபிடண்ட் இல்லை என என் நண்பன் சொல்வான், இந்தப்படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என கான்ஃபிடண்டாக சொல்லிக்கொள்கிறேன். என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. தமிழ் சினிமாவில் எப்படி விஜய் சேதுபதி வந்தாரோ அப்படி ஒரு ஹீரோவாக ஜெகவீர் ஜொலிப்பார். சினிமாவின் மீது பேஷனோடு இருக்கும் இளைஞன், சூரி, விஷ்ணு போல் இவரும் ஜொலிப்பார். 

ஜிபி முத்து பேசியதாவது…

இந்தப்படத்தில் நடிக்க சொன்ன போது பயமாக இருந்தது.  சிங்கம் புலி சார் ஏற்கனவே இயக்குநர், நடிப்பிலே ஊறியவர்கள் எல்லோரும் அதனால், அவர்களுடன் நடிப்பது பயமாகத்தான் இருந்தது. பின்னர் எல்லோரும் ஊக்கம் தந்தார்கள். இளைஞர்கள், எல்லோரும் ரொம்ப அன்பானவர்களாக இருந்தார்கள். என்னை அன்பாகப் பார்த்துக் கொண்டார்கள். என்னை ரெண்டு படம் நடிக்க வைத்த இயக்குநர் சுசீந்திரன் சாருக்கு நன்றி. சக்திவேல் பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சார் மிக உறுதுணையாக இருந்தார் நன்றி. 

நடிகர் முருகானந்தம் பேசியதாவது..,

முதல் நாள் ஷூட்டிங்கில் ரெடியா இருக்கீங்களா என்று கேட்டார்கள், நான் ரெடி சார் என்றேன்.  காலை 6 மணி தான் நான் ரூமில் இருந்தேன். பார்த்தால் ஷூட் போய்க்கொண்டு இருந்தது. இப்படத்தில்  அவ்வளவு விரைவாக எல்லோரும் வேலை பார்ப்பார்கள். சுசீந்திரன் சார் மிகச் சிறப்பாக இயக்கியுள்ளார். இளைஞர்கள் எல்லோரும் மிக அருமையாக நடித்துள்ளார்கள். நான் நடிக்கும் போது, கோயம்புத்தூர் பாஷை பேசி நடிக்கக் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். வாய்ப்பு தந்த சுசீந்திரன் சாருக்கு நன்றி.  என் படக்குழு அனைவருக்கும் நன்றி. ஹீரோ மிக நட்புடன் பழகினார்.  அவருக்கும் நன்றி. 

நடிகை வினோதினி வைத்தியநாதன் பேசியதாவது..

அனைவருக்கும் வணக்கம், 2013 ல மேனேஜர் போன் செய்து, ஆதலால் காதல் செய்வீர் படத்திற்காகக் கூப்பிட்டார், அப்படத்தில் அம்மா கேரக்டர், நான் மதர் கேரக்டர் செய்வதில்லை என சொன்னேன், சுசி சார் ஓகே பை என சொல்லி விட்டார். பின்னர் ஈஸ்வரன் படத்தில் நல்ல வாய்ப்பு தந்தார். அதிலிருந்து தொடர்ந்து வாய்ப்பு தருகிறார். இந்தப்படத்திலும் நல்ல கேரக்டர். சுசி சார் ஈஸியாக வேலை வாங்கி விடுவார். எல்லோரும் மிக நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். ஹீரோ அறிமுகம் தான் என்றாலும் நன்றாக நடித்துள்ளார். மீனாட்சி எனக்கு பொண்ணாக மிக நன்றாக  நடித்திருக்கிறார். ஆதலால் காதல் செய்வீர் போல, ரிலேஷன்ஷிப் குறித்த  அழுத்தமான புரிதல் இந்த படத்திலும் இருக்கிறது. உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

இயக்குநர் நடிகர் ஆண்டனி பாக்யராஜ் பேசியதாவது..,

சுசி சார் எதோ குளத்து வேலைக்கு ஆள் பிடிப்பது போல்  நடிக்க ஆள் பிடிக்கிறார். காலை 6 மணிக்கெல்லாம் ஷாட் வைக்கிறார்.  எல்லோரையும் வைத்து அவ்வளவு விரைவாக வேலை வாங்கி விடுகிறார். போன் செய்து பிரதர் ஃப்ரீயா எனக்கேட்டார்,  நடிக்க வரலாமே என்றார். என்னை நம்பி கூப்பிடுகிறாரே என உடனே நடிக்க போய் விட்டேன். அவ்வளவு அழகாகப் படத்தை எடுத்துள்ளார். தயாரிப்பாளருக்கு என் வயது தான், மிக இளமையான தயாரிப்பாளர். நன்றாக வர வேண்டும் வாழ்த்துக்கள். இந்த படத்திற்கு ஆபிஸே போடவில்லை, என்னை ஜூடியோவிற்கு கூப்பிட்டு,  அங்கு தான் டெஸ்ட் எடுத்தார் இயக்குநர். படம் முழுக்க ஃபன்னாக இருந்தது. ஹீரோ ஆரம்பத்தில் தடுமாறினார் ஆனால் பின்னர் எனக்கே சொல்லித்தர ஆரம்பித்து விட்டார். மீனாட்சி அருமையாக நடித்துள்ளார். எல்லோருடனும் இணைந்து  நடித்தது மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர் ஆனந்த் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். 38 நாளில் இந்தப்படத்தை முடித்துள்ளார், சுசீந்திரன் சாருக்கு மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். 

ஆடை வடிவமைப்பாளர் மீரா பேசியதாவது..,

எல்லோருக்கும் நன்றி. ஒரு வருடம் முன்னரே சாரை மீட் பண்ணினேன், என்னைக் கூப்பிடுவார் என நினைக்கவில்லை. வந்தவுடனே காஸ்ட்யூம் பர்சேஸ் பண்ண சொல்லிவிட்டார், பயந்து விட்டேன். என் கூட வந்து, மிக உறுதுணையாக எல்லாவற்றையும் சொல்லித் தந்தார். 

மிக நல்ல அனுபவமாக இருந்தது.

நடிகர் ஜெயப்பிரகாஷ்  பேசியதாவது..,

இந்தப்படம் ஷூட் போன போது சின்ன பதட்டம் இருந்தது, சுசீந்திரன்  சொன்னால் எதுவும் மறுக்க மாட்டேன், நான் மகான் அல்ல படத்தில் இவர் தந்த கேரக்டர், என்னை மிகப்பெரிய இடத்திற்குக் கூட்டிச் சென்றது. தெலுங்கில் என்னைப் பிரபலமாக்கியது. இவர் படத்திற்குப் போனால் மீண்டும் மீண்டும் நிறையக் கற்று கொள்ளலாம். சுசி எப்போதும் ஒரு எக்ஸ்ட்ரா கூட எடுக்க மாட்டார். 2K கோயம்புத்தூரை இவ்வளவு அழகாகக் காட்ட முடியும் என ஆச்சரியம் தந்துள்ளார். ஹீரோ மிக அழகாக நடித்துள்ளார். மிக நல்ல அனுபவம் என்றார்.

நடிகர் துஷ்யந்த் பேசியதாவது… 

இந்தப்படம் அழகான  ரொமாண்டிக் படமாக இருக்கும். எனக்கு ஈசன் கருடன் படத்திற்கு நேரெதிரான படமாக இருக்கும், இந்தப்படம் வாய்ப்பு தந்ததற்கு சாருக்கு நன்றி. நல்ல படம் அனைவருக்கும் நன்றி. 

அறிமுக நாயகன் ஜெகவீர் பேசியதாவது..,

கடவுளுக்கு நன்றி. பிரஸ் மீடியா நினைத்தால், ஒருவரை ஜீரோவாக்குவதும் ஹீரோவாக்குவதும் பத்திரிக்கையாளர்கள் கையில் தான் உள்ளது. இந்தப்படம் எல்லாமே இயற்கை அருளால் தானாக நடந்தது. கன்டன்டாக மிக அருமையாக வந்துள்ளது. சுசி சார் அற்புதமாக எடுத்துள்ளார். ஒரு புராஜக்டில் சரியான லீடர் இருந்தால் போதும், கண்டிப்பாக நல்ல படைப்பு வரும்,  சுசி  சார் சொல்வதை எல்லோரும் சரியாக செய்தால் போதும், அதைச் சரியாகச் செய்துள்ளோம் என நம்புகிறேன். எங்களை நீங்கள் ஆதரித்து வளர துணை புரிவீர்கள் என்று நம்புகிறேன். 


தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது…

ஜெகவீர் சொன்ன மாதிரி, இந்தப்படம் எல்லாம் தானாக நடந்தது. ஹீரோ தான் சுசி சாரை அறிமுகப்படுத்தினார். எப்படி இவர் 2 கே கிட்ஸ் கதை செய்வார் என  தயங்கினேன், ஆனால் கதை சொல்லும் போதே அசத்திவிட்டார். டைட்டிலே எனக்கு  மிகவும் பிடித்திருந்தது. சொன்ன தேதிக்கு முன்னரே படத்தை முடித்துத் தந்துவிட்டார். நண்பன் ஜெகவீர் நாயகனாக  அறிமுகமாகிறார், மீனாட்சி நன்றாக நடித்துள்ளார். சரவணன் பிரதர் நன்றாக நடித்துள்ளார். ஜேபி சார், சிங்கம் புலி சார் எல்லோரும் அருமையாக நடித்துள்ளார்கள். படம் மிக அருமையாக வந்துள்ளது.  அனைவரும் ஆதரவு தாருங்கள், அனைவருக்கும் நன்றி. 

நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் பேசியதாவது…

சுசீந்திரன் சாருடன் மூன்றாவது படம், எங்க வீட்டில் நம்பி தனியாக ஷூட் அனுப்புவது சாரோட ஷூட்டிங் ஸ்பாட் தான். இன்னொரு வீடு மாதிரி தான். சார் காலை 6 மணிக்கு ஷூட் வைத்தாலும் சீக்கிரம் முடித்து மதியமே அனுப்பி விடுவார். அவ்வளவு பரபரப்பாக வேலை பார்ப்பார்.  ஷூட்டிங் மிக ஜாலியாக இருந்தது. ஜெகவீர் நன்றாக நடித்துள்ளார். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


நடிகர் ராமராஜன் பேசியதாவது…

City light pictures தயாரிப்பாளர் விக்னேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள், படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள், நான் இந்தப்படத்திற்கு வரக் காரணம் சுசீந்திரன், அவர் மாமா கலைச்செல்வன் என் 38 வருட நண்பர், அவர் அழைப்பில் தான் இந்த விழாவில் கலந்துகொண்டேன். காதல் நம் மனதை விட்டு அகலாத ஒன்று, இன்று எல்லோரும் சொல்வது 2கே கிட்ஸ் கதை இது.  அவர்களின் கதையை அருமையாகச் சொல்லக்கூடிய சுசீந்திரன் இருக்கிறார். இந்தப்படம் மிக நல்ல படமாக அமையும். இந்தப்படத்திற்குப் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். சுசீந்திரன் மிக அழகாக எடுத்திருப்பார். புதுமுகங்களை வைத்துப் படமெடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.  தம்பி ஜெகவீருக்கு வாழ்த்துக்கள் நன்றி. 

வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 

கோயம்புத்தூரில் நடக்கும் கதை என்பதால், இப்படத்தின் படப்பிடிப்பைக் கோவை மற்றும் சென்னையில் படக்குழு நடத்தி முடித்துள்ளது. 

இப்படத்திற்கு D இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. City light pictures சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தைத் தயாரிக்கிறார். 

புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில்  மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன்  பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். 

தொழில் நுட்ப குழு 


இயக்கம் - சுசீந்திரன்

ஒளிப்பதிவு  -V.S.ஆனந்த கிருஷ்ணன் 

இசை - டி.இமான்

பாடல் வரிகள்.    - கார்த்திக் நேதா 

எடிட்டர் - தியாகு 

கலை - சுரேஷ் பழனிவேலு 

நடனம் - ஷோபி, பால்ராஜ்

மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

ஆடை வடிவமைப்பாளர் - மீரா

போஸ்டர் வடிவமைப்பாளர் - கார்த்திக் 

தயாரிப்பு நிர்வாகி -T.முருகேசன் 

தயாரிப்பாளர் - விக்னேஷ் சுப்ரமணியன்

Aaragan - திரைவிமர்சனம்


 மகிழினி நிலா என்ற இளம் பெண் நம்பிக்கையால் நிரம்பியவள், தன் காதலன் சரவணனின் வணிகக் கனவுகளுக்கு ஆதரவளிக்கும் ஆர்வத்தில், தொலைதூர மலைவாசஸ்தலத்தில் பராமரிப்புப் பணியை மேற்கொள்கிறாள். அவள் இந்த வேலைக்குப் புறப்படத் தயாராகும் போது, ​​தம்பதியினர் தாங்கள் ஒரு எதிர்காலத்தை ஒன்றாகக் கட்டியெழுப்புவதாக நம்பி, இதயப்பூர்வமான, உணர்ச்சிமிக்க இரவைப் பகிர்ந்து கொள்கிறார்கள். மலை வாசஸ்தலத்தில் ஒருமுறை, மகிழினி தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறாள், ஃபோன் சிக்னல் ஏதுமின்றி, வளர்ந்து வரும் அமைதியின்மை உணர்வு. ஆனாலும், அவள் கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும், சரவணனுடன் ஒரு குடும்பத்தை கற்பனை செய்து கொண்டு அவள் எண்ணங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றன.

இருப்பினும், அவள் அமைதியற்ற கனவுகளை அனுபவிக்கத் தொடங்கும் போது அவளது அமைதியான தங்குமிடம் விரைவில் வினோதமாக மாறும். அவள் பணிபுரியும் பழைய வீட்டில், குறிப்பாக ஒரு மறைக்கப்பட்ட, சங்கிலியால் பிணைக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணைக் காணும்போது, ​​ஏதோ ஒரு தீய செயல் பதுங்கியிருப்பதை அவள் உணர்கிறாள். மகிழினியின் அசௌகரியம் தீவிரமடைகிறது, ஆனால் சரவணனுடன் தனது எதிர்காலத்தில் கவனம் செலுத்தி வலுவாக இருக்க முயற்சிக்கிறாள். சரவணன் ஒரு இருண்ட ரகசியத்தை மறைக்கிறான் என்பது அவளுக்குத் தெரியாது. அவர் உண்மையில் இளந்திரையன், பழங்கால இதிகாசத்திலிருந்து வந்தவர், பாம்புக்கடியிலிருந்து காப்பாற்றிய ஒரு துறவியால் நித்திய இளமையுடன் ஆசீர்வதிக்கப்பட்டவர். ஆனால் இந்த வரம் ஒரு பயங்கரமான விலையில் வருகிறது. தனது இளமையை தக்கவைக்க, சரவணன் கர்ப்பிணிப் பெண்களின் உயிர் சக்தியை உள்ளடக்கிய இருண்ட சடங்குகளை செய்ய வேண்டும்.

"ஆரகன்" திரைப்படம் முதல் பார்வையில் சிக்கலானதாக தோன்றலாம், ஆனால் அதன் மையமானது நம்பிக்கை, துரோகம் மற்றும் சுய கண்டுபிடிப்பு ஆகியவற்றின் கதையாகும். கதை எதிர்பாராத திருப்பங்களை எடுத்தாலும், மகிழினிக்கும் சரவணனுக்கும் இடையேயான தொடர்பு ஆரம்பத்தில் உண்மையானதாக உணர்கிறது, உண்மை வெளிவரும்போது மகிழினியின் பயணத்தை இன்னும் அழுத்தமாக மாற்றுகிறது. கவிப்ரியாவின் மகிழினியின் சித்தரிப்பு நேர்மையானது, குறிப்பாக அவரது பாதிக்கப்படக்கூடிய தருணங்களில், சரவணனாக மைக்கேல் தங்கதுரையின் நடிப்பு சதி அடுக்குகளை சேர்க்கிறது.

இயக்குனர் அருண் கே.ஆர் மர்மம் மற்றும் சஸ்பென்ஸ், காதல், த்ரில்லர் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகளின் கலவையை உருவாக்குகிறார். வேகக்கட்டுப்பாடு மற்றும் செயல்படுத்துவதில் சில சவால்கள் இருந்தபோதிலும், திரைப்படம் பார்வையாளர்களை வாழ்க்கையின் எதிர்பாராத பாதைகளைப் பற்றி சிந்திக்க ஊக்குவிக்கிறது மற்றும் இருண்ட உண்மைகளைக் கூட உள் வலிமை எவ்வாறு கடக்க உதவும்.

Saturday, October 5, 2024

மார்டின் படத்தின் அருமையான "மார்டின் ஆந்தம்" பாடல் வெளியாகியுள்ளது

மார்டின் படத்தின் அருமையான "மார்டின் ஆந்தம்" பாடல் வெளியாகியுள்ளது!!

எதிர்பார்ப்பை எகிற வைத்த மார்டின் படத்திலிருந்து   "மார்டின் ஆந்தம்",  பாடல் வெளியானது!!

இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள, “மார்டின்” படத்திலிருந்து, மார்டின் ஆந்தம் பாடல்  கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, என ஐந்து மொழிகளில் மனதை துளைக்கும் வரிகளுடன், தீப்பிடிக்கும் இசையில் ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கு அழைத்துச் செல்கிறது. 

ஆந்தம் முழுக்க துருவா சர்ஜா பட்டையை கிளப்புகிறார், தன் அதீத கவர்ச்சியால் திரையை தீப்பிடிக்க வைக்கிறார். மார்டினில் அவரது நடிப்பு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அவரது தோற்றமும், மிடுக்கும், சேர்ந்த கலவையில் படத்தை திரையில் காணும் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது. 


பாடலின் வரிகளை: - கன்னடம்: ஸ்ரீமணி, ஏ பி அர்ஜுன் - தமிழ்: விவேகா - தெலுங்கு: ஸ்ரீமணி - ஹிந்தி: ஷபீர் அகமது - மலையாளம்: விநாயக ஷஷி குமார் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த ஆந்தம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

துருவா சர்ஜா நடிப்பில் உருவாகியுள்ள 'மார்டின்' படம் கன்னட சினிமாவிலிருந்து வெளிவரும் மிகப்பெரிய அதிரடி முயற்சியாக, இந்திய சினிமாவில், ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையிலான படைப்பாக, உருவாகியுள்ளது. இப்படம் உலகம் முழுக்க  13 மொழிகளில் டப் செய்யப்பட்டு, வெளியாக உள்ளது.

வாசவி என்டர்பிரைசஸ் மற்றும் உதய் கே மேத்தா புரொடக்‌ஷன் இணைந்து  “மார்டின்”  படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளர். AP அர்ஜுன் இயக்கியுள்ள இப்படத்திற்கு, ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா கதை, திரைக்கதை எழுதியுள்ளார். சத்யா ஹெட்ஜ் ஒளிப்பதிவு செய்ய, KGF புகழ் ரவி பஸ்ரூரின் பரபரப்பான பின்னணி இசையுடன், மணி ஷர்மா இசையமைத்துள்ளார். இப்படம் 11 அக்டோபர் 2024 அன்று கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி மற்றும் பிற சர்வதேச மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

கார்த்தியின் நடிப்புக்கு கிடைத்த பாராட்டுகள் தான் எனக்கு மிகப் பெருமையாக இருந்தது” ; அர்விந்த்சாமி*

*“கார்த்தியின் நடிப்புக்கு கிடைத்த பாராட்டுகள் தான் எனக்கு மிகப் பெருமையாக இருந்தது” ; அர்விந்த்சாமி* 

2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது.. கதாநாயகனாக கார்த்தி, முக்கிய வேடத்தில் அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்க, தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில். நடித்துள்ளார். 

படம் வெளியான நாளிலிருந்தே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியும் கூட திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இதையடுத்து ‘மெய்யழகன்’ படக்குழுவினர் இதன் வெற்றி விழாவை நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக கொண்டாடினார். இந்த நிகழ்வு நேற்று மாலை சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில்,

நடிகர் அர்விந்த்சாமி பேசும்போது,

 “நான் பணியாற்றிய படங்களிலேயே மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று. அதற்கு படக்குழுவினருக்கு நன்றி. இந்த படம் வெளியாகும்போது நான் இங்கே இல்லை. புரமோசன்களை முடித்துவிட்டு வெளிநாட்டுக்கு செல்ல வேண்டி இருந்தது. நேற்று தான் வந்தேன். இந்த படத்தின் ரிலீஸை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் அழகாக செய்து கொடுத்தார். வெளிநாட்டில் இருந்தாலும் கார்த்தி, இயக்குனர் பிரேம்குமார், ராஜசேகர் ஆகியோருடன் தொலைபேசியில் அவ்வப்போது படம் குறித்து பேசிக் கொள்வேன். பத்திரிகையாளர்கள் எனது நடிப்பை பாராட்டியதை விட கார்த்திக்கின் நடிப்பை பாராட்டியதுதான் எனக்கு மிகப் பெருமையாக இருந்தது. இயக்குனர் என்ன விரும்பினாரோ அதை சிறிதும் மாற்றாமல் அந்தக் கதாபாத்திரங்களை அப்படியே வெளிப்படுத்த நானும் கார்த்தியும் மற்றவர்களும் முயற்சித்தோம். படப்பிடிப்பில் நடிக்க செல்வதற்கு முன் இந்த கதாபாத்திரம் இப்படித்தான் என மனதில் நினைத்துக் கொண்டு செல்வேன். ஆனால் அங்கே உடன் நடிக்கும் மற்றவர்களின் நடிப்பை பார்த்து அதிலிருந்து சில விஷயங்களை கற்றுக்கொண்டு நடிப்பேன். நான் மற்றவர்களுடன் போட்டியாக நடிக்க வேண்டும் என நடிப்பதில்லை. நான் அவ்வளவு படம் எல்லாம் நடிப்பதும் இல்லை. எந்த போட்டியிலும் இல்லை.. உங்களுக்கே தெரியும். செய்யும் வேலையை ரசித்து செய்ய வேண்டும். இது போன்ற ஒரு அழகான சூழலில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் எண்ணம்” என்றார்.

நடிகர் கார்த்தி பேசும்போது,

 “இந்த படத்தை புரிந்து கொண்டு இதனை பாராட்டி விதவிதமான வரிகளில் விமர்சனங்களை எழுதிய ஊடகங்களுக்கு மிகப்பெரிய நன்றி. இன்னொரு பக்கம் உலகத்தில் சின்ன சின்ன மூலைகளில் இருந்தும் கூட இந்த படம் ஒவ்வொருவரிடமும் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்று எழுத்து பதிவுகளாகவும் மீம்ஸ் ஆகவும் ரீல்ஸ்களாகவும் வெளியிட்டு வரும் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இதற்கு முன்பு தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்றவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் குடும்ப உறவுகளை மையப்படுத்தி அவ்வளவு அழகான கதைகளை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். அப்படி ஒரு படம் நமக்கு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அப்படி ஒரு கதை என்னிடம் வரும்போது அதை எப்படி மிஸ் பண்ணுவேன்.

மெட்ராஸ் படம் வெளியான சமயத்தில் பொழுதுபோக்கு படம் பண்ணினாலும் பருத்திவீரன், மெட்ராஸ் போன்ற படங்களையும் பண்ண வேண்டும் என நீங்கள் ( பத்திரிக்கையாளர்கள் ) சொல்லியிருந்தீர்கள். அதை நான் மறக்க மாட்டேன். இந்த படம் எவ்வளவு உரையாடல்களை உருவாக்கி இருக்கிறது. நல்ல கலை படைப்புக்கு முக்கியமான விஷயமே இந்த உரையாடலை ஏற்படுத்துவது தான். விவாதத்தை ஏற்படுத்துவது தான். அப்படி நிறைய விஷயங்களை இந்த படம் பேச வைத்திருக்கிறது. அதுவும் இந்த படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல. எல்லா கலையம்சத்தையும் சேர்த்த கலைப்படைப்பு என காட்டிக் கொள்வதற்கு எப்போதாவது சில நல்ல படங்கள் அமையும்.அப்படி ஒரு படமாக தான் இதை பார்க்கிறேன்.

30 வயதுக்கு மேற்பட்டவர்கள், வாழ்க்கையில் கொஞ்சமாவது கஷ்டத்தை பார்த்தவர்கள் அவர்கள் எல்லோருக்கும் இந்த படம் நிச்சயம் புரியும் என நம்பினேன். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மக்களுக்கு எண்ண ஓட்டம் ஒரு மாதிரியாக இருந்திருக்கும். அதற்கு பிறகு வந்தவர்களின் எண்ண ஓட்டங்கள் வேறு மாதிரி இருக்கும். தொழிலுக்காக சொந்த ஊரை விட்டு வருவது, நம் கலாச்சாரங்களை விட்டுப் போய்விடுவது, நம் சரித்திரத்தை மறந்து விடுவது என நாம் மறந்த, அதே சமயம் நம் மனதில் இப்போதும் ஆழமாக இருக்கும் விஷயங்கள் அனைத்தையும் எடுத்து கண் முன் வைத்தது போல் இந்த கதை இருந்தது. இன்று சர்ச்சையான விஷயங்கள் தான் நன்றாக போகிறது என்று சொல்லப்பட்டாலும் முன்பின் தெரியாதவருக்கு ஒருவர் செய்யும் உதவி குறித்த வீடியோ வெளியாகி அதனுடைய வியூஸ் எண்ணிக்கை தான் இங்கே அதிகமாக இருக்கிறது. அதனால் தான் இந்த படம் பண்ணினோம்.

கோவிந்தராஜின் படத்தொகுப்பில் நிகழ்கால காட்சியையும் கடந்த கால காட்சியையும் எந்தவித நெருடலும் இன்றி அழகாக கோர்த்திருந்ததனர். கோவிந்த் வசந்தாவின் இசையில் ஒரு மாடு கூட தெய்வமாக தெரிந்தது. பழைய சைக்கிளுக்கு அவ்வளவு வேல்யூ இருக்கிறது என்பதை உணர முடிந்தது. நாம் யாருக்கோ தெரியாமல் செய்யும் ஒரு உதவி அவர்களது வாழ்க்கையையே மாற்றும்போது நமக்கு தெரிந்தவர்களுக்கு நாம் உதவி செய்வதில் தவறு என்ன இருக்கிறது ? இன்று ஒவ்வொருவரின் மனசாட்சியாக அவர்களை கேள்வி கேட்க வைத்திருக்கிறது என்றால் அதுதான் இசையின் வேல்யூ. எந்த இடத்திலும் சினிமா என்று தெரியாதபடி இருந்தது மகியின் ஒளிப்பதிவு இருந்தது. 

நமக்கு எதுவும் வராதவரை எதுவும் பிரச்சினை இல்லை என்று தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நம் பின்னால் இருக்கிற ஒரு விஷயம் நமக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்பதை எடுத்து கண் முன்னால் பேசும்போது தான் அதன் சீரியஸ்னஸ் தெரிகிறது. அது போன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்வது எனக்கே ஒரு படிப்பினையாக இருந்தது. அண்ணன் சூர்யா அடிக்கடி என்னிடம் உன்னால் எவ்வளவு பெருந்தன்மையாக இருக்க முடியுமோ அப்படி இரு என்று சொல்வார். அப்படி பெருந்தன்மையாக இருந்தால் தான் சில தருணங்களில் முக்கியமான முடிவுகளை எடுக்க முடியும். எல்லோரிடமும் அன்பாக இருக்க முடியும். கோபப்பட்டவர்களிடம் கூட அன்பு காட்ட முடியும்.

நாங்கள் சிறுவயதில் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்லும்போது உறவினர்கள் தங்களது தகுதிக்கு மீறி எங்களை கவனிப்பார்கள். உபசரிப்பார்கள். நாம் சாப்பிடுகிறோமா என கவனித்து பார்ப்பார்கள். சில நேரம் அதை கையில் தொட்டுப் பார்க்காமல் கூட திரும்பி வருவோம். இப்போது அதை நினைத்து பார்த்தால் நம் மீது அப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு காட்டிய அவர்களை அங்கீகரிக்கிறோமா? அதை திருப்பிக் கொடுக்கிறோமா என திரும்பத் திரும்ப யோசித்துப் பார்க்கிறேன். மீண்டும் ஊருக்கு சென்றால் அவர்கள் வீட்டில் உட்கார்ந்து ஒரு வாய் சாப்பிட்டு வர வேண்டும் என்று தோன்றுகிறது. அது போன்ற உணர்வுகளை நாம் இழந்து விட்டோமா அல்லது மறந்து விட்டோமா என்கிற நிலையில் தான் இந்த படம் அதை திரும்பவும் ஏற்படுத்துகிறது. அப்படி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் உணர்வுகளை பக்கம் பக்கமாக எழுதி தள்ளும் அளவிற்கு இந்த படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திராவிலும் கேரளாவிலும் அதே அளவிற்கு என வரவேற்பு இருக்கிறது. வெளிநாட்டில் இருப்பவர்கள் இன்னும் அதிகமாக இந்த படத்தை கொண்டாடுகிறார்கள். தொலைதூரத்தில் இருப்பவர்கள் என்பதால் அவர்களுக்கு இதன் மதிப்பு அதிகம் தெரிகிறது. இயக்குனர் பிரேம் ஒரு வரலாற்று கதை வைத்திருக்கிறார். அதன் எழுத்து நடையை படித்து முடித்ததும் உரிமையுடன் யார்யா நீ என்று கேட்கிற அளவிற்கு மரியாதை போய் அவரிடம் உரிமை வந்துவிட்டது. அதை எப்போது எழுதி முடிப்பார் என நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். 

அர்விந்த் சாமியும் நானும் போட்டி போட்டு நடித்ததாக பலர் கூறினார்கள். ஆனால் நாங்கள் இருவரும் உண்மையில் என்ஜாய் பண்ணி நடித்தோம். அதனால் அர்விந்த்சாமி சாருக்கு நன்றி சொல்ல முடியாது. ( சிரிக்கிறார் ) அடிக்கடி அவரை போய் தொல்லை பண்ணிக் கொண்டுதான் இருப்பேன். பிரேம்குமார் எழுதிய கதையில் உள்ள வரிகள் ஏற்படுத்தாத உணர்வை அர்விந்த்சாமி தான் திரையில் கொண்டு வந்தார். அதனால் அவருக்குத்தான் அந்த பாராட்டு சேரும்” என்று கூறினார்.

இயக்குநர் பிரேம்குமார் பேசும்போது, 

”இந்த படத்தின் வெற்றிக்கு என்னுடன் துணை நின்ற பட குழுவினர் அத்தனை பேருக்கும் நன்றி. நானும் ஒளிப்பதிவாளர் மகேந்திரனும் ஒன்றாகவே படித்தவர்கள். ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள். நடிகர் சிவகுமார் சார் பேசும்போது கூட ஏண்டா ஒண்ணா படிச்சீங்கன்னா கூட ஒரே மாதிரியா இருப்பீங்க என்று நகைச்சுவையாக கேட்பார். 96 படத்தை விட இந்த படத்தில் மகேந்திரனின் வேலைகள் எனக்கு சற்று புரியபடவில்லை. ஆனாலும் படம் வெளியானபோது அதற்கு குவியும் பாராட்டுகளை பார்த்தபோது தான் நான் 8 வருடம் டச் விட்டுப் போனதால் ஒளிப்பதிவில் இன்னும் எவ்வளவு பின்தங்கி இருக்கிறேன் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் இவ்வளவு ஒழுங்கு, இவ்வளவு சுதந்திரம் என இதற்கு முன் நான் பார்த்ததில்லை. அதற்கு தயாரிப்பாளர் ராஜசேகர் சாருக்கு நன்றி. பொதுவாக நான் ஒருவருடன் அதிகம் சண்டை போட்டால் அவர்களை என் வாழ்க்கையில் இருந்து தூக்கி ஓரமாக வைத்து விடுவேன். அதற்கு பிறகு அவர்களிடம் பேச மாட்டேன். ஆனால் இப்பொழுது நான் அதிகம் சண்டை போட்டது ராஜசேகர் சாருடன் தான். அவரை என்னால் விட முடியவில்லை. மனசு விட மாட்டேன் என்கிறது. 2டி இந்த படத்தை தயாரிக்கவில்லை என்றால் இந்த படம் இந்த அளவிற்கு வந்திருக்குமா, இந்த படத்தை இயக்கி இருப்பேனா என்பது சந்தேகம்தான். அந்த விதத்தில் சூர்யா சார், ஜோதிகா மேம் இருவருக்கும் மிகப்பெரிய நன்றி. மெய்யழகன் மெய்யழகனாகவே வந்ததற்கு முக்கிய காரணம் அவர்கள் தான். படத்தின் கண்களாக இருக்கும் கார்த்தி, அர்விந்த்சாமி இருவருக்கும் நன்றி” என்று கூறினார்.

2டி இணை தயாரிப்பாளர் ராஜசேகர கற்பூர சுந்தர பாண்டியன் பேசும்போது, 

“சமூக அக்கறை கொண்ட படங்களை பண்ண வேண்டும் என்பதுதான் 2டியின் அடிப்படை நோக்கம். அது நிறைய படங்களில் நிறைவேறி இருக்கிறது. ஆனால் அந்த படங்களுக்கு எல்லாம் மகுடம் சூட்டியது போல் இந்த மெய்யழகன் அமைந்துவிட்டது. படம் பார்த்துவிட்டு பேசுபவர்கள் எல்லோருமே அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்தி இந்த படத்தை தயாரித்ததற்கு நன்றி எனக் கூறும் போது அவர்களின் எண்ணங்களை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. பிரேம் குமாருடன் பணியாற்றியது அற்புதமான விஷயம். அவரைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும். ஆனால் இங்கே எதையும் ஓப்பனாக பேச முடியாது. அவர் ஒரு சிறந்த மனிதர். அவருடன் நிறைய விஷயத்தில் சண்டை போடுவேன். படம் தொடர்பான வேலைகளுக்கு எந்த ஊருக்கு சென்று வந்தாலும் கூட நாங்கள் கொடுத்த பணத்தை அப்படியே எங்களிடம் திருப்பிக் கொடுத்து விடுவார். வேறு யாரிடமும் இதை நாங்கள் பார்க்கவில்லை. பிரேமிடம் எனக்கு பிடித்த விஷயம் அவரது நேர்மை.. எதையும் நேராக பேசிவிடும் குணம். 

நம் கூடவே பல மெய்யழகன்கள் இருப்பார்கள். நமக்காக எந்த நேரத்திலும் எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். அவர்களை நாம் திரும்பி கூட பார்த்திருக்க மாட்டோம்.. ஆனால் அவர்களது மதிப்பை உணர வைத்து இருக்கிறது இந்த மெய்யழகன். இந்த படத்தில் முதலில் பி.சி ஸ்ரீராமை தான் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்ய நினைத்தோம். அவரும் ஸ்கிரிப்ட் படித்துவிட்டு பல இடங்களில் கண்கலங்கினார். அடுத்ததாக படத்திற்காக என்னவெல்லாம் செய்யலாம் என ரொம்பவே ஆர்வமாகி வேலைகளில் இறங்கினார். ஆனால் அவரது உடல்நிலை காரணமாக இந்த படத்தில் அவரால் பணியாற்ற முடியவில்லை. அவரே இந்த படத்தைப் பார்த்தால் நிச்சயம் மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவை பாராட்டுவார்” என்றார்.

ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜூ பேசும்போது, 

“பத்திரிகையாளர்கள் எனக்கு கொடுத்த பாராட்டுக்களில் என்னுடைய உதவியாளர்கள் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. கார்த்தி, அர்விந்த்சாமி இருவருடனும் பணியாற்றிய நாட்கள் என்பதை விட அவர்களுடன் இருந்த நாட்கள் என்பது ரொம்பவே அழகானவை. அது எப்போதுமே என் மனதில் நீங்காத நினைவுகளாக இருக்கும். ஆடல், பாடல், சண்டைக் காட்சிகள் கொண்ட படங்கள் வருவதை தவிர்க்க முடியாது. ஆனால் இந்த மாதிரி படங்கள் வருவது அபூர்வம். இந்த படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி” என்று கூறினார்

ஆடை வடிவமைப்பாளர் சுபஸ்ரீ பேசும்போது, 

“ஒரு நல்ல படம் அதற்கான ஆட்களை தானே தேடிக் கொள்ளும் என்பார்கள். அப்படித்தான் மெய்யழகன் படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி எல்லோரும் வந்தது. அவர்களுக்கு இதுவரை நான் நன்றி கூட சொன்னது இல்லை. அர்விந்த்சாமிக்கு பல உடைகளை கொடுத்து அவரை சிரமப்படுத்தி உள்ளேன். மனசுக்குள் திட்டி இருப்பாரா என்று கூட தெரியாது. ஆனால் என்னிடம் எதையும் காட்டியதில்லை. கார்த்தியும் அதேபோலத்தான். இருவருமே உடைகளை தாண்டி தங்களது நடிப்பால் தங்கள் கதாபாத்திரங்களை இன்னும் மெருகேற்றினார்கள் என்று தான் சொல்ல வேண்டும்” என்று கூறினார்.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது, 

“இந்த படத்தில் ஏறுகோல் காணிக்கை என்கிற பாடலில் அதற்கேற்ற பொருத்தமான வார்த்தை அமைவதில் சிரமம் ஏற்பட்டது. என் மனைவி தமிழ் படித்தவர் என்பதால் அவரிடம் கூறியபோது, ஏறுகோல் என்கிற வார்த்தை சரியாக இருக்கும் என்று கூறினார். அதன்பிறகு ஏறுகோல் படையல், ஏறுகோள் காணிக்கை என்று இரண்டு வார்த்தை எங்களுக்கு கிடைத்தது. இந்த நேரத்தில் தமிழ் மாணவியும் எனது மனைவியுமான கீதாவிற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இனி வரும் நாட்களில் நான் செல்லக்கூடிய உயரம் என்பது தான், நான் இயக்குனர் பிரேமுக்கு செலுத்தும் நன்றியாக இருக்கும். நிச்சயம் அந்த உயரத்திற்கு செல்வேன். அவர் கண் முன்னால் அந்த வளர்ச்சி நடக்கும்.

எங்கள் ஊரில் பார்த்த அத்தனை மனிதர்களிலும் கார்த்தி, அரவிந்த்சாமி என்கிற இரண்டு கதாபாத்திரங்கள் இருந்தார்கள். படம் பார்த்ததும் கண் கலங்கிவிட்டது. ஒரு திரைப்படத்திற்குள் இருப்பது போன்ற உணர்வு ஏற்படவில்லை. ஏதோ ஒரு ஊருக்கு இரண்டு மணி நேரம் பயணம் சென்று வந்தது போல தான் தோன்றியது. நானும் பாடலாசிரியை உமா தேவியும் எவ்வளவு உயரங்கள் வளர்ந்தாலும் எங்களுக்குள் உள்ள நட்பு போகாது. போட்டி போட்டு தான் பாடல் எழுதுவோம். நான் சினிமாக்காக சென்னைக்கு ஓடி வந்த பிறகு என் தந்தையிடம் 10 வருடங்களாக பேசவில்லை .முதல் முதலாக தொட்டி ஜெயா படத்தில் என் பெயர் வந்ததும் அந்த பேப்பரை எடுத்துக் கொண்டு என் ஊரில் உள்ள அத்தனை பேரிடமும் அதை காட்டி ஆனந்த கண்ணீருடன் பெருமைப்பட்டார் என் அப்பா. பிறகுதான் என் தந்தையுடன் பேச ஆரம்பித்தேன். அதை ஏற்படுத்திக் கொடுத்ததும் இந்த பத்திரிகை தான். அதேபோல இந்த மெய்யழகன் படத்தையும் சரியாக நேரத்தில் சரியாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறீர்கள்?” என்று கூறினார்.

பாடலாசிரியர் உமாதேவி பேசும்போது, 

“இந்த படத்தில் நான் எழுதிய இரண்டு பாடல்களும் மிக உருக்கமான பாடல்கள். என் உணர்வுக்கும் வாழ்வுக்கும் நெருக்கமான பாடல்கள். இந்த இரண்டு பாடல்களையும் என்னுடைய உணர்ச்சிகளுடன் நான் வெளிப்படுத்தியுள்ளேன். கூடுதலாக என்னுடைய வலிகளுக்கு பெரும் மருந்தாக இயக்குனர் பிரேம், கமல் சாரை இதில் ஒருங்கிணைத்தது தான் மிகப்பெரிய ஆறுதல். 96 படத்திற்கு பிறகு அதே அன்புடன் இந்த மெய்யழகன் படத்தில் கோவிந்த் வசந்தா குழுவினருடன் மீண்டும் சேர்ந்திருக்கிறோம். எனக்கு போறேன் நான் போறேன் பாடல் முழு திருப்தியை தரவில்லை. அதன் ரெக்கார்டிங் சமயத்தில் கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் ராஜா ஆகியோரின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களைப் பார்த்தபோதுதான் நான் இந்த பாடலை முழுமையாக எழுதி இருக்கிறேன் என்கிற திருப்தி ஏற்பட்டது” என்று கூறினார்.

நடிகை தேவதர்ஷினி பேசும்போது, 

“இந்த கதையின் ஆழத்தை புரிந்து கொண்டு இந்த படத்தை தயாரிக்க முன்வந்த சூர்யா, ஜோதிகாவுக்கு நன்றி. நான் ஹாலிவுட் வெளியான டெர்மினல் படம் பார்த்துவிட்டு இப்படி கூட ஒரு மனிதன் இருக்க முடியுமா என டாம் ஹான்க்ஸ் நடிப்பை பார்த்து வியந்தேன் அந்த வகையில் நம் தமிழகத்திற்கு கிடைத்த டெர்மினல் தான் மெய்யழகன். தமிழகத்தின் டாம் ஹான்க்ஸ் நம்ம கார்த்தி தான். அர்விந்த்சாமி தன்னுடைய கதாபாத்திரமான அருள் இப்படித்தான் இருக்கும் இப்படித்தான் பேசும் என்கிற பிடிவாதத்துடன் இருந்ததை நான் அவரிடம் தொடர்ந்து கவனித்தேன். கேரக்டரை முழுதாக உள்வாங்க கூடிய நடிகர்களுக்கு தான் அந்த பிடிவாதம் இருக்கும். இங்கே நம்மில் பல பேர் அருளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. 

சுபஸ்ரீ என்ன ஆடை அணிகிறாரோ அதே உடையைத்தான் எனக்கு பிரேம் சார் கொடுப்பார். இயக்குனர் பிரேம்குமாரை இசை வெளியீட்டு விழாவில் ஒரு சாடிஸ்ட் என்றும் பெண்களை அழகை வைப்பவர் என்றும் கூறினேன். அதற்காக ஸாரி கேட்கிறேன். அவர் பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் சேர்த்து அழ வைப்பவர். இந்த மெய்யழகன் மூலமாக எல்லோரையும் அழ வைத்து விட்டார். ஆண்களிடம் பெண்மை இருக்கிறது. பெண்களிடம் ஆண்மை இருக்கிறது. இது இயற்கையான ஒன்று. பெண்களிடம் இருக்கும் ஆண்மை கடந்த சில வருடங்களாகவே நன்றாக வெளிப்பட்டு வருகிறது. ஆனால் ஆண்களிடம் இருக்கும் பெண்மை தான் வெளிவர மறுக்கிறது. இந்த மெய்யழகன் படம் மூலம் ஆண்களிடம் இருக்கும் பெண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் பிரேம்குமார்” என்று கூறினார்

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசும்போது, 

“’மெய்யழகன் படம் நிறைய மிக மெய்யழகன்களால் சேர்ந்து உருவாக்கப்பட்டது. நீங்கள் ஒரு வாழ்க்கையில் ஒரு அங்கமாக வாழ்க்கையை பார்த்தால் மட்டும்தான் இந்த மெய்யழகனை புரிந்து கொள்ள முடியும். மெய்யழகன் படம் ரிலீஸ் ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக சிறப்பு காட்சி ஒன்றை திரையிட்டோம். அதில் படம் பார்த்தவர்களின் கருத்து, மனநிலை எப்படி இருக்கிறது என்று என்னிடம் சூர்யா அண்ணா கேட்டார். அந்த சமயத்தில் ஒரே நேரத்தில் மூன்று படங்களை தயாரித்து வரும் ஒரு தயாரிப்பாளரும் இந்த படத்தை பார்த்து விட்டு வெளியே வந்தார். அவர் என்னிடம் கூறும்போது நான் மூன்று படங்களை தயாரித்து வருகிறேன். அந்த அழுத்தம் காரணமாக என்னால் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. ஆனால் இன்று மெய்யழகன் பார்த்ததும் இன்று இரவில் சென்று நிம்மதியாக தூங்குவேன். ஏனென்றால் மனிதர்கள் மேல் நம்பிக்கை வந்திருக்கிறது. மெய்யழகனை போல அட்லீஸ்ட் 20% ஆவது ஆக வேண்டுமென்றால் என்னவெல்லாம் சரி பண்ணிக்கொள்ள வேண்டும் என அந்த மெய்யழகன் கதாபாத்திரத்தை படம் பார்க்கும்போதே இன்ச் பை இன்ச் ஆக பின் தொடர்ந்து கொண்டிருந்தேன். என்னை திருத்திக் கொள்வதற்கும் அப்டேட் பண்ணுவதற்கும் முயற்சிப்பேன் என்று கூறினார். 

அவர் கூறியதை தான் நான் சூர்யா அண்ணனிடம் சொன்னேன். 2டியில் இது ரொம்ப ரொம்ப முக்கியமான படம். ஏற்கனவே உங்களுக்கும் உங்கள் நிறுவனத்திற்கும் என்ன மரியாதை இருக்கிறதோ அதற்கு மகுடம் சூட்டியது போல தான் இந்த படம் இருக்கும் என்று சொன்னபோது இடைமறித்து அது என்னய்யா உங்க கம்பெனி நம்ம கம்பெனி என்று சொல் என்று கூறியதை கேட்டு நான் ஆடிப் போனேன். கடைக்கோடியில் இருந்து சினிமாவுக்கு வந்த என்னை மிக உச்சத்தில் இருக்கும் அவர் இப்படி கூறியதை பார்க்கும்போது  என் எதிரில் பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு மெய்யழகனாகத்தான் சூர்யா அண்ணனைப் பார்க்கிறேன். தயாரிப்பாளர் ராஜா அண்ணனிடம் வந்து இதுபற்றி கூறியபோது அப்படியா, நீ நம்ம கம்பெனி என்று தானே கூறியிருக்க வேண்டும் என அவரும் கூறினார். அந்த வகையில் அவர்தான் இரண்டாவது மெய்யழகன். பிரேம்குமார் அன்பை மட்டுமே நம்பி இந்த படத்தை பண்ணியிருக்கிறார். அப்படி ஒரு இயக்குனர் வரும்போது அவரை தலைமையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டியது நம் திரைத்துறையில் இருக்கும் அனைவரின் கடமை. அதை அனைத்து பத்திரிகையாளர்களும் செய்திருந்தார்கள்” என்றார்.

மேலும் நடிகர்கள் கார்த்தி, அர்விந்த்சாமி, தயாரிப்பாளர் ராஜசேகர், இயக்குனர் பிரேம்குமார் ஆகியோரை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு ஜல்லிக்கட்டு மாட்டை அடக்கும் மாவீரன் சிலை ஒன்றையும் பரிசளித்தார் சக்திவேலன்.

- Johnson Pro

Friday, October 4, 2024

நடிகர் வெற்றி நடிக்கும் 'ஆலன்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

*நடிகர் வெற்றி நடிக்கும் 'ஆலன்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு*

3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் 'ஆலன்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட தயாரிப்பாளர் டி. சிவா பெற்றுக் கொண்டார்.

இயக்குநர் ஆர். சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஆலன்' எனும் இந்த திரைப்படத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, 'அருவி' மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் வழங்குகிறார். 

'ஆலன்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், தயாரிப்பாளர் டி. சிவா, இயக்குநர் கோபிநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர். சிவா விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசுகையில், '' இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் எழுத்தாளர்களைப் பற்றி பேசி இருக்கிறேன். ஏன் எழுத்துக்களை பற்றி பேசினேன்? என்றால்.. என்னுடைய 12 வயது முதல் 18 வயது வரை நிறைய புத்தகங்களை வாசித்திருக்கிறேன். கையில் கிடைக்கும் புத்தகங்கள் அனைத்தையும் படித்திருக்கிறேன். இந்த தருணத்தில் என்னுடைய பெற்றோர்கள் எப்போதும் என்னுடைய வாசிப்பிற்கு ஆதரவாகவே இருந்தார்கள். இதற்காகவே அவர்களுக்கு இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கைக்கு புத்தகத்தை படிப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் நான் தெரிந்து கொண்டேன். இயக்குநர் கே. பாக்யராஜ் எழுதிய திரைக்கதை எழுதுவது எப்படி? என்ற புத்தகத்தை தேடி வாசித்த பிறகு தான் சினிமா மீது எனக்குள் ஒரு ஆவல் வந்தது. நாமும் ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும்... இயக்குனராக வேண்டும்... என்று எண்ணி சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயில்வதற்கு முயற்சித்தேன். ஆனால் குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாகவும், குடும்ப பொறுப்பினை சுமக்க வேண்டும் என்பதற்காகவும் சிங்கப்பூருக்கு சென்றேன். அங்கு என்னுடைய வாழ்க்கை முப்பது ஆண்டுகள் கழிந்தது. அங்கு ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியராக ஒரு நிறுவனத்தை தொடங்கி இன்று வரை வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். 

அங்கிருந்து இங்கே பார்க்கும்போது இங்கு எழுத்திற்கு கொடுக்கும் மதிப்பை ஆய்வு செய்தேன். இங்கு புத்தகம் வாசிப்பது குறைந்துவிட்டது. பெற்றோர்களும் குழந்தைகளுக்கு புத்தகம் வாசிப்பதை ஊக்கப்படுத்தவில்லை. மிகப்பெரிய தவறினை செய்து கொண்டிருக்கிறோம். பாட புத்தகங்கள் படிப்பது மட்டும் வாழ்க்கை அல்ல. அதைக் கடந்து வாழ்வியல் தொடர்பாக ஏராளமான எழுத்துகள் இங்கு இருக்கிறது. தமிழில் லட்சக்கணக்கான எழுத்துக்கள் இருக்கிறது. லட்சக்கணக்கான புத்தகங்கள் இருக்கிறது. தயவுசெய்து உங்கள் வீட்டுப் பிள்ளைகளை புத்தகங்களை வாசிக்க சொல்லுங்கள். 

நான் புத்தகங்களை வாசிக்க தொடங்கும் போது வயது 12. எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என்னுடன் 18 மாணவர்கள் படித்தனர். புத்தகம் வாசித்ததால் ஒழுக்கமானவனாக வாழ்ந்து வருகிறேன். அதனால் புத்தகங்களை படிக்குமாறு சொல்லிக் கொடுங்கள். ஏனென்றால் வாழ்க்கை அதில் தான் இருக்கிறது. 

கோவிட் காலகட்டத்தில் எனக்கு நான்கு மாதம் ஓய்வு கிடைத்தது. அப்போதுதான் என் ஆழ் மனதில் விதைத்த விதை எட்டிப் பார்த்தது. ஏதாவது எழுத வேண்டும்... ஏதாவது செய்ய வேண்டும்... என்ற உந்துதல் ஏற்பட்டது. அதனால் தான் இரண்டாவது படமாக 'ஆலன்' எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறேன். இது ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை. 

ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2018 ஆம் ஆண்டில் ஐநா சபையில் கிரேட்டா என்ற ஒரு இளம் பெண் இந்த உலகத்தினரை பார்த்து ஒரு கேள்வியை கேட்கிறார். அவர் துணிச்சலாக கேட்ட  கேள்விக்கான காரணம் என்ன? புவி வெப்பமயமாதல். இந்த பூமியில் 1. 5° செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்திருக்கிறது. இந்த உலகம் எங்களுக்கானது. காற்று எங்களுக்கானது நீர் எங்களுக்கானது இதை அசுத்தம் செய்வதற்கு நீங்கள் யார்? என ஒரு சின்ன பெண் இந்த கேள்வியை கேட்டார். இந்த உலகம் நமக்கானது மட்டுமல்ல. நமது சந்ததிகளுக்குமானது.  அடுத்த தலைமுறையினருக்கும் இதனை விட்டுச் செல்ல வேண்டும். அந்தப் பெண் நாம் செய்த தவறுகளை சுட்டிக் காட்டினார். 
நாம் ஏதோ இயந்திரத்தனமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். திரும்பிப் பார்க்கிறோம். கிட்டத்தட்ட அதே போல் தான் இந்த படமும் இருக்கும்.‌ 

இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் சென்று இருந்தோம். அங்கு நான்கு ஐந்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  அவர்களுக்கு ஐந்து அல்லது ஆறு வயது தான் இருக்கும். அவர்களில் ஒருவன் ஓடி வந்து என்னிடம் இது திரைப்படமா? எனக் கேட்டார். 'ஆம்' என்று பதிலளித்துவிட்டு, நடிக்கிறாயா?  என கேட்டேன். வில்லனாக நடிக்கிறேன் என பதில் அளித்தான். ஏன்? என்று கேட்டபோது, 'அப்போதுதான் வெட்டலாம். குத்தலாம்' என பதில் அளித்தான். ஒரு பிஞ்சு மனதில் எந்த மாதிரியான நஞ்சினை விதைத்திருக்கிறோம் என அதிர்ச்சி அடைந்தேன். வன்முறையை.. அவனுக்கு இங்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய பாவம் இல்லையா? மனசாட்சி இல்லையா? எதை விதைக்கிறோம்..? இங்கு நான் நல்ல விசயத்தை சொல்வதற்கு .. புத்தகத்தை படியுங்கள் என்று சொல்வதற்கு சிங்கப்பூரிலிருந்து நான் இங்கு வர வேண்டியதாக இருக்கிறது. நான் இங்கு சம்பாதிப்பதற்காக வரவில்லை. இது என் மனசின் ஆதங்கம்...! வேதனை...!  வலி...!எதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்? .. இதுதான் என்னை இந்த படத்தை இயக்கத் தூண்டியது. எழுத்தைத்தான் இந்தப் படத்தில் அழுத்தமாக பேசி இருக்கிறேன். எழுதினால் யாருக்கு பயன்படும்.... எழுத்தினால் இந்த உலகத்திற்கு என்ன நன்மை கிடைக்கும்? ஒரு புத்தகம் ஆயிரம் நண்பர்களுக்கு சமம். ஒரு புத்தகம் வாழ்க்கையை மாற்றிவிடும். நான் இங்கு நிற்பதற்கும் புத்தகங்கள் தான் காரணம். நான் ஒரு ஒழுங்கான வாழ்க்கையையும்... அர்த்தமுள்ள தேடலையும் எனக்குள் ஏற்படுத்தியது புத்தகங்கள் தான். நான் என் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதற்கும் நண்பர்கள் காரணமல்ல. புத்தகங்கள் தான் காரணம். 

என் குருநாதர் கே. பாக்யராஜ். அவருடைய எழுத்தில் வெளியான பாக்யா எனும் வார இதழின் முதல் பிரதியை வாங்குவதற்காக 12 கிலோமீட்டர் அதிகாலையிலேயே பயணித்து வாங்கி படித்திருக்கிறேன். அந்த அளவிற்கு வாசிப்பின் மீது தீரா காதல் எனக்கு உண்டு. ஆனால் சிங்கப்பூர் சென்ற பிறகு அங்கு படிக்க முடியவில்லை. ஏனெனில் அது ஒரு இயந்திர வாழ்க்கை. அதனால் இங்கு சிறப்பு விருந்தினராக கே. பாக்யராஜ் வருகை தந்ததற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தத் திரைப்படம் ஆலன் அனைவருக்கும் பிடிக்கும். கஷ்டப்பட்டு படத்தை உருவாக்கி இருக்கிறோம். ஜெர்மனி, காசி, வாரணாசி, ரிஷிகேஷ், காரைக்குடி, கொடைக்கானல், ராமேஸ்வரம் என பல இடங்களுக்கு சென்று இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். இந்த படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தால் தயாரிப்பில் எந்த சமரசமும் இன்றி வன்முறையில்லாமல் தரமாக உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்தை வன்முறை கலந்து என்னால் உருவாக்கி இருக்க முடியும். ஆனால் கதையின் நாயகன் அந்த வன்முறையையும் கடந்து செல்கிறான். வாழ்க்கையை பார்வையிடுகிறான். ஒரு பலசாலியை எளியவன் தாக்க முடியுமா? எளியவன் திருப்பித் தாக்க முடியாத ஒரு  விசயத்தை நாம் ஏன் திணிக்கிறோம்? எல்லாம் கலந்தது தான் இந்த உலகம் என்ன சொல்வார்கள். இல்லை என்று நான் மறுக்கவில்லை‌. ஆனால் இங்கு எது அதிகம் தேவைப்படுகிறது? அன்பும் காதலும் தான். அதுதான் அதிகம் தேவை.  இயற்கையை கொண்டாடுங்கள். அன்பை கொண்டாடுங்கள். காதலை கொண்டாடுங்கள். இந்த உலகம் அமைதியாக வாழும். இந்த தலைமுறை அமைதியாக.. பாதுகாப்பாக.. வாழும். வீட்டில் மட்டும் பாதுகாப்பு கொடுத்தால் போதாது. வெளியில் செல்லும்போதும் பாதுகாப்பு இருக்க வேண்டும்.

மேலும் இந்தப் படத்திற்காக நடித்த நடிகர்கள், நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார் . 

'ஆலன்' படத்தினை வழங்கும் விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான ஜி. தனஞ்ஜெயன் பேசுகையில், '' இந்த திரைப்படத்தை நண்பர் ஒருவர் மூலமாக பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. படத்தின் டைட்டில் ஆலன் என்று இருந்தது. இது ஆங்கில படமா..! என்ற சந்தேகமும் எனக்குள் இருந்தது. நான் தினமும் நிறைய படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தை பார்க்கத் தொடங்கியவுடன் தொடர்ந்து பார்த்தேன். இந்த படத்தை பார்த்தவுடன் இயக்குநர் சிவாவின் நம்பிக்கை தெரிந்தது. 

சிங்கப்பூரில் தொழிலதிபராக இருக்கும்  அவருக்கு சினிமா மீது ஒரு தீராத காதல். அங்கிருந்து இங்கு வருகை தந்து படத்தை இயக்கி விட்டு மீண்டும் அங்கு சென்று விடுகிறார். அவருக்காக இங்கு ஒரு குழு கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறது. பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். அவர் ஆத்மார்த்தமாக நேசிக்கும் சினிமாவை எந்தவித சமரசம் இன்றி உருவாக்கி இருக்கிறார். காதலும் அன்பும் கலந்த ஒரு படைப்பை தந்திருக்கிறார். இந்த உலகத்திற்கு காதல்தான் முக்கியம் வன்முறை முக்கியமல்ல. அன்பைத் தேடி நாம் பயணித்தால் போதும்... வாழ்க்கை சிறக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்பதை இந்த படத்தில் சொல்லியிருக்கிறார். இந்த திரைப்படத்தை நான் ஒரு கவித்துவமான படைப்பாக பார்க்கிறேன். 

இந்தப் படத்தை பற்றி அவர் என்னிடம் பேசும் போது இந்த திரைப்படம் மக்களை சென்றடைய வேண்டும். அதற்கு உதவி செய்யுங்கள் என்று தான் கேட்டார். ஒரு படைப்பாளியாக வெற்றி பெற வேண்டும் என்றார். நானும் அவரைப் போல் சினிமாவை நேசிப்பதால் இதற்கு என்னாலான உதவிகளை செய்ய சம்மதித்தேன். இந்தப் படத்திற்காக நான் சில ஆலோசனைகளை வழங்கிய போது எந்தவித மறுப்பும் சொல்லாமல் செய்தார். இந்தப் படத்தை பார்க்கும் போது.. மக்களுக்கு தேவையான விசயத்தை தான் இயக்குநர் சொல்லி இருக்கிறார் என்பதை அனைவரும் உணர்வீர்கள். இந்தத் திரைப்படத்தை வெகுவிரைவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நடிகர் வெற்றி அவருடைய பயணத்தில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். 'எட்டு தோட்டாக்கள்', 'ஜீவி', 'பம்பர்' என வித்தியாசமான கதையையும் தேர்வு செய்து நடித்து வருகிறீர்கள். இந்தப் படத்தில் அவர் ஒரு நல்ல பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். இதைத்தொடர்ந்து அவர் மேலும் பல நல்ல வெற்றிகளை தர வேண்டும். ஆலன் படத்திற்காக நீங்கள் கொடுத்த ஒத்துழைப்பு எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. இது போன்ற ஒரு கதையில் நடிப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அந்த தைரியம் உங்களிடத்தில் இருக்கிறது. அவருடைய முயற்சி வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன். 

கவிஞர் மனுஷ்யபுத்திரன், கேபிள் சங்கர் ஆகியோரும் இந்த திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள் அவர்களுக்கும் நன்றி. '' என்றார். 

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசுகையில், ''  கொந்தளிப்பான மனநிலையில் இருக்கும் போது கவிதை எழுதி இருக்கிறேன். அதன் பிறகு பல ஆண்டுகள் கடந்து.. மனம் ஒரு புள்ளியில் ஒடுங்கி, அமைதி அடைந்தது. அதன் பிறகும் கவிதை எழுதி இருக்கிறேன்.

இந்த ஆலன் படத்தில் கதையின் நாயகனான தியாகு கதாபாத்திரம் ஒரு புள்ளியில் வாழ்க்கையைத் தொடங்கி ஏராளமான சுழலுக்குள் சிக்கி அதிலிருந்து வெளியே வந்து அதனை கடந்து வாழ்க்கை கொடுத்த அனுபவ சாரமாக ஒரு நூலை எழுதுகிறான். அதன் மூலமாக அவன் எழுத்தாளராக மாற்றம் பெறுகிறார். ஏறக்குறைய என்னுடைய வாழ்க்கை பயணத்தை போல் தான்.. என்னை போல் எழுதிக் கொண்டிருக்கிற பாடல் ஆசிரியர்கள் எழுத்தாளர்கள் போன்ற இலக்கிய ஆளுமைகளின் வாழ்வியலில் இந்த கதாபாத்திரம் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு கொள்ளும்.  அதனால் இந்த படத்தில் பாடல்கள் எனக்கு மிகவும் நெருக்கம். இந்தப் படத்தில் பாடல் எழுதிய போது என் வாழ்க்கையை நான் மீண்டும் நினைத்தது போல் இருந்தது. அதனால் பாடல் எழுதும் போது எந்த சிரமமும் இல்லை. 

ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு தாளம் உண்டு. அதனை நாம் தொலைக்கும் போது.. அதனை மீட்டெடுப்பது போல் இந்த படத்தின் பாடல்கள் இருந்தது. இதற்கான முயற்சி தற்போதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 

அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெறும் நான்கு பாடல்கள் இந்திய செவ்வியல் இசையை முதன்மையாகவும், அதற்கு இணையாக  மேல்நாட்டு இசைத் தாளத்தை துணையாகவும் கொண்டு பாடல் உருவாகி இருக்கிறது.  இதற்காக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணாவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.‌  இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா சிறிய வயதில் இருந்தே இசை துறையில் பணியாற்றி வருகிறார். திரை துறையில் தான் அவருக்கு இது முதல் திரைப்படம்.  இந்தப் படத்தின் பாடல்களை பொறுமையாகவும், மன அமைதியுடனும் கேட்கும் போது... இந்த நிலத்திற்கான தாளத்தை உங்களால் கேட்க முடியும். 

'நம்முடைய அழுக்குகளை நாமே குறைத்துக் கொண்டு வருவது.. அதன் மூலம் நாம் மேலே உயர்ந்து எழுவது' என சைவ சித்தாந்தம் வலியுறுத்தும் கருத்தை என் வாழ்க்கையில் நான் கடைப்பிடித்த போது என் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்பட்டது. என் எழுத்திலும் மாற்றம் ஏற்பட்டது. 

'ஆலன்' என்ற தலைப்பு கேட்கும் போதெல்லாம் எனக்கு நெருக்கமானதாக இருந்தது.  மேலும் இந்த படம் எனக்குள் நெருக்கமாக இருப்பதற்கு என்னுடைய இளைய சகோதரர் நடிகர் விவேக் பிரசன்னா இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்பதும் ஒரு காரணம். 

சிவன் அருளால் சிவா இயக்கிய ஆலன் திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார். 

இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா பேசுகையில், '' இது என்னுடைய முதல் படம். இந்த திரைப்படத்திற்கான வாய்ப்பு எதிர்பாராமல் கிடைத்தது. இதற்கு முன் நான் ஒரு படத்திற்காக இசையமைக்க ஒப்பந்தமானேன். அந்தப் படத்திற்காக மூன்று பாடல்களை இசையமைத்தேன் அந்த பாடல்களை ஒளிப்பதிவாளர் விந்தன் கேட்டார். அவரின் பரிந்துரையின் பேரில் தயாரிப்பாளர் இயக்குநர் சிவா அந்த பாடல்களை கேட்டு, இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை வழங்கினார். இந்த திரைப்படம் என்னுடைய அறிமுக படமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அனைவரின் ஆசியையும் கோருகிறேன்.

இயக்குநர் சிவா சினிமா மீது தீவிர காதல் கொண்டவர். இந்தப் படத்திற்காக இசையமைக்கும் போது எந்த கட்டுப்பாடுகளையும் அவர் விதிக்கவில்லை.‌ இந்தப் படத்திற்காக முழுமையான பங்களிப்பை வழங்குங்கள் என்றார்.‌ அவருடைய எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்து இருக்கிறேன் என நம்புகிறேன். 

இந்தப் படத்திற்கு பாடல் எழுதிய பாடல் ஆசிரியர் கார்த்திக் நேத்தாவின் தீவிர ரசிகர் நான். நான் இசையமைத்த மற்றொரு படத்திற்கும் அவர்தான் பாடல்களை எழுதி இருக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெறும் நான்கு பாடல்களையும் அவர்தான் எழுதியிருக்கிறார்.  நான் அவருக்கு மெட்டுகளை அனுப்பி வைப்பேன். அவர் அதற்கு பாடல் வரிகளை எழுதி அனுப்புவார். அத்துடன் ஏதாவது திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா? என கேட்பார். இதற்கு மேல் திருத்தம் தேவையில்லை என நான் சொல்வேன். சிறப்பான பாடல் ஆசிரியர். அவருடைய வார்த்தைகள் தான் இந்த பாடல்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறது.  அவருக்கு இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ 

படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் வெற்றியின் நடிப்பு நன்றாக இருந்தது. படத்தில் நடித்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். '' என்றார். 

'ஜீவி' பட இயக்குநர் கோபிநாத் பேசுகையில், '' சில தினங்களுக்கு முன் தயாரிப்பாளரும்,விநியோகஸ்தருமான தனஞ்செயன் தொடர்பு கொண்டு ஆலன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.  அதற்குப் பிறகுதான் இந்தப் படத்தில் அவருடைய பங்களிப்பும் இருக்கிறது என்பதனை தெரிந்து கொண்டேன். பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் தனஞ்ஜெயன் சார் கடுமையாக உழைப்பார். இந்த படத்தில் அவர் இணைந்ததால் இந்த படம் வெற்றியை பெறும் என உறுதியாக நம்புகிறேன். 

பம்பர் படத்திற்கு முன் வெற்றியை ஒரு முறை இயல்பாக சந்தித்தேன். அப்போது அவரிடம் கன்டென்ட் ஓரியண்டாகவே நிறைய படங்களை தேர்வு செய்து நடிக்கிறீர்கள். அது வரவேற்கத்தக்கது தான். அதே நேரத்தில் கமர்சியல் பிளஸ் கன்டென்ட் ஜானரிலும் நடிக்க வேண்டும் என சொன்னேன். அதன் பிறகு பம்பர் படத்தின் டீசரை காண்பித்தார். அந்தப் படம் வெற்றி பெறும் என்று அப்போதே அவரிடம் சொன்னேன். அதன் பிறகு அவர் தேர்வு செய்து வைத்திருக்கும் கதைகள் மற்றும் படங்கள் அனைத்தும் நன்றாக இருந்தன. அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள். ஆனாலும் திரை உலகில் அவர் இப்போது இருக்கும் உயரத்தை விட மேலும் உயர வேண்டும். அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என ஒரு நண்பராக வேண்டுகோள் வைக்கிறேன். அடுத்த வருடம் இதை விட ஒரு படி மேலே உயர வேண்டும் என வாழ்த்துகிறேன். 

இந்தப் படத்தின் பாடலை கேட்டவுடன் வெற்றியை தொடர்பு கொண்டு.. பாடல் மிக சிறப்பாக இருக்கிறது. யார் இசையமைப்பாளர்?  என கேட்டேன். அவர் மனோஜ் கிருஷ்ணா என சொன்னார். படத்தின் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. அவருக்கும் என் வாழ்த்துக்கள். பாடல் ஆசிரியர் கார்த்திக் நேதாவிற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்'' என்றார். 

கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசுகையில், '' படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரான சிவா என்னுடைய சிறந்த வாசகர். அவரும் ஒரு எழுத்தாளர். என் இனிய நண்பர். அவரைப் பற்றிய ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர் எழுதிய புத்தகம் ஒன்று இம்மாதம் வெளியாகிறது. அதை என்னுடைய உயிர்மை பதிப்பகத்தில் இருந்து தான் வெளியிடுகிறோம். அவர் எழுதிய புத்தகத்தை வாசிக்கும் போது அவர் ஒரு மிக முக்கியமான எழுத்தாளர் என்பதை உணர்ந்தேன். அவருடைய எழுத்தில் நகைச்சுவை... எழுத்து நடை..
 கூர்மையான சமூகப் பார்வை... என பல அம்சங்களும் அவருடைய சிறுகதை தொகுப்பில் இருக்கிறது. 

அவருக்குள் இருக்கும் சினிமா பற்றிய கனவு பெரியது. அவருடைய வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை அவர் சொல்ல கேட்டிருக்கிறேன். சினிமா என்கிற கலை மீது அவர் அடங்காத அன்பினை கொண்டிருக்கிறார்.‌ இவரைப் போல் பலர் தமிழகத்திற்கு வெளியே இருக்கிறார்கள். 

தான் சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு நல்ல படமாக வழங்க வேண்டும் என நினைக்கிறார். சமூகத்துக்கு நல்லதொரு செய்தியை சொல்லும் படைப்பாக தர வேண்டும் என நினைக்கிறார். சினிமாவில் சமூக பொறுப்புணர்வு உள்ள படைப்பாளியாக வரவேண்டும் என விரும்புகிறார்.‌ இதனை அவரிடம் நடந்த தொடர் உரையாடல்கள் மூலம் நான் தெரிந்து கொண்டேன். 

இந்தப் படத்தில் நானும் என்னுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறேன். அந்த தருணத்தில் நண்பருடன் இருக்கிறேன் என்ற உணர்வு தான் எழுந்தது. 

அவருடைய கனவுகள் வெல்லட்டும். இந்தத் திரைப்படம் தனஞ்செயன் வழங்குகிறார் என்ற உடன் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அவர் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் இந்த திரைப்படத்திற்காக மேற்கொள்வார். 

நாங்கள் கல்லூரி மாணவர்களுக்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திரைக்கதை எழுதுவதற்கான பயிற்சி குறித்த பட்டறையை மூன்று நாள் நடத்தினோம். அந்த நிகழ்வில் தமிழகத்தில் முன்னணியில் இருக்கும் அனைத்து நட்சத்திர இயக்குநர்களும் கலந்து கொண்டு பேசினார்கள். அனைவரும் திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் பற்றி பேசினார்கள்.  அவர் திரைப்படங்களை இயக்கி நிறைய ஆண்டுகள் ஆகிவிட்டது. இருந்தாலும் இன்றும் அவரைப் பற்றி ஏன் பேசுகிறார்கள்? அவரைக் கடந்து திரை கதையை பற்றி பேசுவதற்கு வேறு நபர் ஏன் இல்லை? என்ற விசயம் எனக்கு பெரிய ஆச்சரியத்தை அளித்தது. அவர் இயக்கிய காலகட்டத்தில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்திருக்கிறார் என்பதை தற்போது உணர முடிகிறது. அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கும் இந்த மேடையை நானும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படம் வெற்றி பெறட்டும். தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் நண்பர் சிவா வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார். 

தயாரிப்பாளர் டி. சிவா பேசுகையில், '' தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர். சிவாவின் பேச்சில் சமூக அக்கறை தெரிந்தது. அவருடைய நல்ல எண்ணத்திற்காகவும், நோக்கத்திற்காகவும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று அவர் தொடர்ந்து திரைப்படங்களை இயக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.  

தமிழ் திரை உலகில் நிதானமாக பயணித்து நல்லதொரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகர் வெற்றிக்கு இந்த திரைப்படம் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும். அவர் நடித்த முதல் படமான எட்டுத் தோட்டாக்கள் என்ற படத்தில் நான் நடித்திருக்கிறேன். மிகவும் நல்ல மனிதர். தனக்கு எந்த கதை பொருத்தமாக இருக்கிறதோ...! அதனை தேர்வு செய்து நடித்து வருகிறார். 

அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணாவிற்கும், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவிற்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தனஞ்செயன் எந்த வேலையை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கும். அவர் இணைந்திருக்கும் இந்த ஆலன் படத்திற்கும் அவர் உச்சபட்ச உழைப்பை வழங்கி இந்தப் படத்தில் வெற்றிக்கு பாலமாக இருப்பார். '' என்றார். 

நடிகர் வெற்றி பேசுகையில், '' ஆலன் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் - தயாரிப்பாளர் சிவாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

தொடர்ந்து திரில்லர் திரைப்படங்களை தான் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு காதல் படத்தில் நடிப்போம் என்று யோசித்து கொண்டிருக்கும்போது.. சிவா சார் இப்படத்தின் திரைக்கதையை என்னிடம் கொடுத்தார். படித்தவுடன் இரண்டு விசயங்கள் தான் எனக்குள் தோன்றியது. இந்தப் படத்தை சிறிய பட்ஜெட்டில் தயாரிக்க முடியாது. பிரம்மாண்டமாக பெரிய பட்ஜெட்டில் உருவாக்க வேண்டும். அடுத்ததாக இசையமைப்பாளர் திறமையானவராக இருக்க வேண்டும் என நினைத்தேன். காதல் கதை என்பதால் இது முக்கியம் என தயாரிப்பாளிடம் சொன்னேன். அவரே இயக்குநர் என்பதால் அவருடைய கற்பனைக்காக செலவு செய்ய தயாராக இருந்தார். படத்தினை கஷ்டப்பட்டு தான் உருவாக்கியிருக்கிறோம். படத்தில் நடித்த சக கலைஞர் அனைவரும் நன்றாக தங்களுடைய உழைப்பை வழங்கி இருக்கிறார்கள். இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா சிறந்த இசையை வழங்கி இருக்கிறார். இது போன்ற புதிய முயற்சிகளுக்கு ஆதரவு அளியுங்கள்'' என்றார். 

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ''
இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஓம் நமச்சிவாய' என்ற பாடல் ஒலித்தது. ஓம் நமச்சிவாய என்றவுடன் அது ஆன்மீகமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்ப்பை பொய்யாக்கி, அதை ஒரு கமர்ஷியல் ரிதமாக மாற்றி இசையமைத்திருந்தார் அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா.  இதையே பிரமிக்க வைக்கும் வகையில் உருவாக்கி இருந்தார் என்றால் படத்தில் அனைத்து பாடல்களையும் அவர் சிறப்பாக உருவாக்கி இருப்பார். அதனால் இந்த தருணத்தில் அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

சிறிய முதலீட்டு திரைப்படங்களை திரையரங்கத்திற்கு கொண்டு வருவதில் பெரு முயற்சி செய்து வருபவர் தனஞ்செயன். அவர் இந்தப் படத்திலும் இணைந்திருப்பதற்காக அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றி என்று சொன்னால் வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடிப்பவர் என்ற ஒரு எண்ணம் அனைவரிடத்திலும் இருக்கிறது எனக்கும் அந்த எண்ணம் இருக்கிறது. இவர் எல்லா படங்களையும் ஒப்புக்கொண்டு நடிப்பவர் அல்ல என்பது ரசிகர்களுக்கும் தெரியும். ஏதாவது வித்தியாசம் இருந்தால் தான் இவர் நடிக்க ஒப்புக் கொள்வார் என்பதால்...  அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆலன் திரைப்படம் வித்தியாசமாக இருக்கும்.  இந்தப் படத்தை தேர்வு செய்து நடித்ததற்காக நடிகர் வெற்றிக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது இந்த வெற்றிப் பயணத்தை மாற்றிக் கொள்ளாமல்... புதிய முயற்சிக்கு மேற்கொள்ளுங்கள். இதுவும் காதல் கதை தான். ஆனால் இதிலும் கமர்ஷியல் கலந்திருக்கிறது. 

பிரிவு என்ற தலைப்பில் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அது மிகச் சிறப்பாக இருக்கிறது.  தமிழ் மொழியில் அடுத்தவருடைய திறமைக்காக அவர் சேவை செய்து  கொண்டிருக்கிறார். இதற்காகவும் அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கலந்து கொண்ட திரைக்கதை எழுவது குறித்து எழுதுவது குறித்த பயிற்சி பட்டறையில் என்னைப்பற்றி அனைத்து இயக்குநர்களும் பேசியதாக குறிப்பிட்டார். அதை கேட்பதற்கு பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இவை அனைத்தும் எங்களுடைய குருநாதர் பாரதிராஜாவுக்குத்தான் சேரும். ஏனெனில் அவர் இல்லை என்றால் நான் இல்லை. 

இங்கு பேசியவர்களில் பாடல் ஆசிரியர் கார்த்திக் நேத்தா பேசியது எனக்கு புரியவில்லை. இருந்தாலும் ரசித்தேன். அவர் முதலில் எழுதிய கவிதை என்று ஒரு கவிதையை வாசித்தார். அது எனக்கு புரியவே இல்லை. ஏனென்றால் சொற்கள் புதிதாக இருந்தது. பிறகு பத்து வருஷம் கழித்து கவிதை எழுதினேன் என்றார். அதுவும் எனக்கு புரியவில்லை. ஆனால் இறுதியில் ஒரு கவிதையை வாசித்தார். அது எளிதாக இருந்தது . அனைவருக்கும் பிடித்திருந்தது.  

தயாரிப்பாளரும், இயக்குநருமான சிவாவிற்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். பேரும் புகழும் வேண்டும் என்பதற்காக திரைத்துறைக்கு வருவார்கள் அல்லது சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வருவார்கள். நானும் பேரும் புகழுக்காக தான் திரைத்துறையில் நுழைந்தேன். அதன் பிறகு சம்பாத்தியம் கிடைத்தது. ஆனால் இந்த இரண்டு விசயத்தை கடந்து வேறு ஒரு விசயம் இருக்கிறது என்பதை சிவா சொல்லும்போது.. மிகவும் நெகிழ்வாக இருந்தது. சமூக சேவைக்காக சினிமாவை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்றதும் அவர் மீது எனக்கு மரியாதை வந்தது. 

குடும்ப சூழல் காரணமாக சிங்கப்பூருக்கு சென்று அங்கு சம்பாதித்து, சம்பாதித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்து, மேலும் சம்பாதிக்க வேண்டும் என நினைக்காமல்... சினிமாவில் அவர் என்ன சொல்ல வேண்டும் என்று விரும்புகிறாரோ.. அதை ஆத்மார்த்தமாக செய்வதற்காக ஆலன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். நஷ்டத்தை பற்றியோ அல்லது வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். 

அவருடன் பேசும்போது எழுத்தாளர்களுக்கு சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டில் நிறைய மரியாதை இருக்கிறது. ஆனால் இங்குதான் எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதை இல்லை என குறிப்பிட்டார். அந்த ஆதங்கத்தின் காரணமாகவே இந்த படத்தின் நாயகன் வெற்றியை ஒரு எழுத்தாளராக நடிக்க வைத்திருக்கிறார்.  
 
உண்மையில் கதை என்பது நம்முடைய வாழ்வில் இருந்து எடுப்பதுதான். ஒவ்வொருவரும் கதாசிரியர்கள்தான் அவர்களுடைய வாழ்க்கையில் பாதித்த விசயத்தை நினைவு படுத்தி எழுதினால் அதுவே சிறந்த கதையாக இருக்கும். 

சினிமாவிற்கு வரும்போது ஒன்று அல்லது இரண்டு கதைகள் உடன் வந்தால் போதும். அதன் பிறகு இங்கு கிடைக்கும் அனுபவத்தை வைத்து கதையை உருவாக்கிக் கொள்ளலாம். என்னிடம் முதலில் சுவரில்லாத சித்திரங்கள் கதை மட்டும் தான் இருந்தது. அதன் பிறகு தான் ஒரு கை ஓசை படத்தின் கதை உருவானது. அதன் பிறகு மௌன கீதங்கள்... இப்படி படிப்படியாக அனுபவங்களின் மூலம் கதைகளை உருவாக்கினேன். 

நம் வாழ்க்கையை பார்ப்பதும் ஒன்றுதான். புத்தகங்களை படிப்பதும் ஒன்றுதான். ஏனெனில் ஒருவன் தன் வாழ்க்கையில் ஏராளமான அனுபவங்களை சந்தித்திருக்க முடியாது. ஆனால் புத்தகங்களை படிக்கும் போது தான் அந்த கதாசிரியர் .. அவருடைய வாழ்க்கையில் சந்தித்த பல மனிதர்களை கதாபாத்திரங்களாக உருவாக்கி இருப்பார். 

நான் என் வாழ்க்கையில் காண்டேகர் கதைகள் ,ஜெயகாந்தன் கதைகள், கல்கியின் கதைகள் ஆகியவற்றை படித்திருக்கிறேன். இது போன்ற ஏராளமான புத்தகங்களை படிக்கும் போது புதிய புதிய கதாபாத்திரங்கள் கிடைக்கும்.  

அதேபோல் கடைசி வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். கடைசி வரை நாம் கற்றுக் கொள்வதற்கு ஏதேனும் ஒரு விசயம் இருந்து கொண்டே இருக்கும். இன்று கூட ஆலன் என்றால் என்ன? என்று எனக்குத் தெரியவில்லை. இது தொடர்பாக சிவாவிடம் கேட்டபோது ஆலன் என்றால் சிவன் என்றார்.  இது எனக்கு ஒரு புது விசயமாக இருந்தது.

இந்தப் படம் காதலும் ஆன்மீகமும் கலந்த படம். இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் ஒரு வசனம் வரும். 'எதை நீ அதிகமாக நேசிக்கிறாயோ.. அதுவே ஆன்மிகம். ' இதுவும் என்னைக் கவர்ந்தது.

சேவை மனப்பான்மையுடன் திரைத்துறைக்கு வருகை தந்திருக்கும் சிவா வெற்றி பெற வேண்டும். இந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு அன்பின் வலிமை புரிய வேண்டும் என இயக்குநர் சிவா விரும்பி இருக்கிறார். தூய்மையான ஆன்மீகம் என்பது அன்பு என்பதையும் சொல்லி இருக்கிறார். எனவே சிவாவின் ஆலன் திரைப்படம் பெரும் வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார்.

தளபதி' விஜய் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'தளபதி 69' படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமான பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.*

*'தளபதி' விஜய் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'தளபதி 69' படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமான பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.*

தலைசிறந்த மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான படங்களை வழங்குவதில் பெயர் பெற்ற கே. வி. என் புரொடக்ஷன்ஸ், 'தளபதி' விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான "தளபதி 69" துவங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. விமர்சகர்களால் அதிகம் பாராட்டப்பட்ட எச். வினோத் இயக்கத்தில், ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் அனிருத் இசையில் இந்த படம் தமிழ் சினிமாவின் ஒரு மகத்தான திரைக் கூட்டணியாக அமைகிறது. படத்தின் நடிகர்கள்,தொழில்நுட்ப குழுவினர் மற்றும் திரைத்துறையின் முக்கிய உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற பிரமாண்டமான பூஜை விழாவுடன் படம் இன்று தொடங்கியது.

"தளபதி 69" படம் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பிரம்மாண்ட வெற்றிப் படங்களை வழங்கிய 'தளபதி' விஜய், தனது அழுத்தமான மற்றும் யதார்த்தமான திரைப்பட உருவாக்கதிற்கு பெயர் பெற்ற எச். வினோத் இயக்கத்தில் ஒரு புதிய மற்றும் பிடிப்பான கதைக்களத்துடன் பார்வையாளர்களை மீண்டும் கவர்ந்திழுக்க உள்ளார். அதிரடியான, உணர்ச்சிகரமான மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இந்த படம் இருக்கும் என்பது உறுதியாகிறது.

கே. வி. என் புரொடக்ஷன்ஸின் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா தனது உற்சாகத்தை வெளிப்படுத்தி பேசியபோது, "தளபதி 69 படத்திற்காக இதுபோன்ற நம்பமுடியாத படக்குழுவை ஒன்றிணைப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். 'தளபதி' விஜய்யின் காந்தம் போன்ற அவரது ஈர்ப்பு, எச். வினோத்தின் தொலைநோக்கு பார்வை மற்றும் அனிருத்தின் மிரட்டலான இசை ஆகியவற்றுடன் சேர்ந்து, இந்த படம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பது உறுதி",என்றார். ஜெகதீஷ் பழனிச்சாமி மற்றும் லோஹித் என். கே. ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படம் பிரம்மாண்ட வசூல் சாதனைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், மமிதா பைஜு, மோனிஷா பிளஸ்ஸி, ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ், கலை இயக்குனர் செல்வகுமார், ஆடைவடிவமைப்பாளர் பல்லவி சிங் மற்றும் இணை தயாரிப்பாளர்கள் ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் லோஹித் என். கே ஆகியோர் அடங்கிய நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பூஜை விழாவில் கலந்து கொண்டு சுமூகமான மற்றும் வெற்றிகரமான படப்பிடிப்புக்காக வேண்டிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பாரம்பரிய வேட்டி சட்டையில் 'தளபதி' விஜய் வருகை புரிந்ததால் படக்குழுவினருக்கு உற்சாகம் அதிகரித்தது, பின்னர் அவர்களுடன் உரையாடியதுடன், படப்பிடிப்பு  தொடங்குவதனால் தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.

இசையமைப்பாளர் அனிருத் மற்றொரு தரமான, இசை நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடிக்கும் பாடல்களை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,இது மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்திற்கு அவரது தனித் தன்மையான இசையை அளிப்பார் என்பது உறுதியாகிறது. படத்தின் கதையோட்டத்தை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், அதிரடியான பாடல்கள் மற்றும் ஆத்மார்த்தமான மெல்லிசை பாடல்களையும் ரசிகர்கள் எதிர்நோக்கலாம்.

படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளதால், 'தளபதி' விஜய்யின் புகழ்பெற்ற திரைவாழ்க்கையில் மற்றொரு மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தை உருவாக்க படக்குழு உறுதி ஏற்று ஒரு சிறந்த பயணத்தை துவக்கியுள்ளது.

*நடிகர்கள்:*
'தளபதி' விஜய்
பூஜா ஹெக்டே
பிரகாஷ் ராஜ்
கௌதம் வாசுதேவ் மேனன்
பாபி தியோல்
பிரியாமணி
நரேன்
மமிதா பைஜு
மோனிஷா பிளஸ்ஸி

*படக்குழு:*
இயக்குனர்: எச் வினோத்
தயாரிப்பு: கே. வி. என் புரொடக்ஷன்ஸ் 
தயாரிப்பாளர்: வெங்கட் கே. நாராயணா
இணை தயாரிப்பாளர்கள்: ஜெகதீஷ் பழனிசாமி, லோஹித் என். கே. 
இசையமைப்பாளர்: அனிருத்
ஓளிப்பதிவாளர்: சத்யன் சூரியன்
படத்தொகுப்பாளர்: பிரதீப் E ராகவ்
கலை இயக்குனர்: செல்வகுமார்
சண்டைப் பயிற்சி இயக்குனர்: 'அனல்' அரசு
ஆடை வடிவமைப்பாளர்: பல்லவி சிங்
விளம்பர வடிவமைப்பாளர்: கோபி பிரசன்னா
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அகமது (V4U Media)

ஜே.கே. தமிழ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜே. ஜே எனும் ஜெயச்சந்திரன் இந்த வெப் தொடரை பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

 நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக  உருவாகும் வெப் தொடர் " வர்ண கதைகள் "  ஓவிய கலையையும், ஓவிய கலைஞர்களையும் மையமாக வைத்து உருவாக...