Monday, October 28, 2024

ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

*ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம் . ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' திரைப்படம் தீபாவளி திருநாளான அக்டோபர் 31ம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 

இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பிரதர்' திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, விடிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார் , சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன், எம்.எஸ் . பாஸ்கர், சுரேஷ் சக்கரவர்த்தி,  விருத்தி விஷால், மாஸ்டர் அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை ஆசிஷ் ஜோசப் கையாள , கலை இயக்கத்தை ஆர் .கிஷோர் மேற்கொண்டிருக்கிறார். அக்கா-தம்பி சகோதர பாசத்தை மையப்படுத்தி உணர்வுப்பூர்வமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. 

குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. 

இந்த சந்திப்பில் இயக்குநர் எம். ராஜேஷ், நடிகர்கள் ஜெயம் ரவி, நட்டி என்கிற நட்ராஜ், விடிவி கணேஷ், நடிகை பூமிகா சாவ்லா, ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷம், படத்தொகுப்பாளர் ஆசிஷ் ஜோசப், கலை இயக்குநர் ஆர் .கிஷோர், சண்டை பயிற்சி இயக்குநர் ஸ்டன்னர் சாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

படத் தொகுப்பாளர் ஆசிஷ் ஜோசப் பேசுகையில், ''இயக்குநர் ராஜேஷ் உடன் இணைந்து பணியாற்றியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்த படத்தின் காட்சிகளின் நீளம் நான்கரை மணி நேரமாக இருந்தது. அதனை இரண்டரை மணி நேரமாக தொகுப்பது என்பது சவாலாக இருந்தது.‌ இருந்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் படத்தை தொகுத்திருக்கிறோம் . திரையரங்குகளில் பார்த்துவிட்டு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார். 

கலை இயக்குநர் ஆர். கிஷோர் பேசுகையில், ''இயக்குநர் ராஜேஷ் உடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தில் பணியாற்றுவதற்கு சவாலானதாக இருந்தது.‌ படப்பிடிப்புக்கு முன்னரே நிறைய முன்-தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டோம். அதிலும் குறிப்பாக அரங்குகள், வண்ணங்கள் என பலவற்றிலும் யோசித்து பணியாற்றினோம். உடன் பணியாற்றிய மூத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினார்கள். நான் வளரும் தொழில்நுட்பக் கலைஞர் என்பதால் அனைவரும் தங்களின் பங்களிப்பை வழங்கி எனக்கு ஆதரவளித்தனர். இதற்காக படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார். 

சண்டை பயிற்சி இயக்குநர் ஸ்டன்னர் சாம் பேசுகையில், ''இயக்குநர் ராஜேஷின் படங்களில் சண்டை காட்சிகள் இருக்காது. அவர் முதன் முதலாக இயக்கியிருக்கும் ஆக்ஷன் ஸ்கிரிப்ட் இது. இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்ததற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌ நானும் நடிகர் ஜெயம் ரவியும் ஒய் எம் சி எ மைதானத்தில் பயிற்சி பெறும் போதே அறிமுகமாகி இருக்கிறோம். நல்ல நண்பர். நான் திரைப்படங்களில் உதவி சண்டை கலைஞராக பணியாற்றும் போதே அவரைத் தெரியும்.‌ அவருக்காக இந்த படத்தில் சண்டைக் காட்சியை  அமைப்பதற்கு வாய்ப்பு வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.

ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷம் பேசுகையில், ''இயக்குநர் ராஜேஷின் திரைப்படங்கள் பெரும்பாலும் உரையாடலை மையப்படுத்தியதாக இருக்கும். ஆனால் பிரதர் படத்தின் கதையைக் கேட்கும் போது அவர் விஷுவலுக்கும், டயலாக்கிற்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பது புரிந்தது.‌ இந்தக் கதை சென்னையிலும், ஊட்டியிலும் நடைபெறுவது போல் எழுதப்பட்டிருக்கிறது.‌ அதற்காக நானும் இயக்குநரும் நன்றாக புரிந்து கொண்டு உழைத்திருக்கிறோம். 

ஸ்கிரீன் சீன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இது. ஏற்கனவே அவர்களின் தயாரிப்பில் உருவான 'அகிலன்' படத்தில் பணியாற்றியிருக்கிறேன். 

நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து பணியாற்றும் போது தனி உற்சாகம் வந்துவிடும். ஏனென்றால் அவரும் ஒரு டெக்னீஷியன் தான்.  அவரை நடிகர் என்று சொல்வதை விட தொழில்நுட்ப கலைஞர் என்று சொல்வதுதான் பொருத்தமானது. படப்பிடிப்பு தளத்தில் ஏதேனும் தொழில்நுட்ப ரீதியாக தடங்கல் ஏற்பட்டால், அதை உடனடியாக உணர்ந்து கொண்டு மீண்டும் நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் மட்டுமல்லாமல் எல்லா தருணத்தில் ஒரு சகோதரரை போல் உரிமையுடன் பழகுகிறார், பேசுகிறார். 

நட்டி நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த ஒளிப்பதிவாளரும் கூட என்பதால் அவர் நடிக்கும் போது நடிகராகவும் இருக்கிறார் தொழில்நுட்பக் கலைஞராகவும் இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் எங்களுக்கு உறுதுணையாக நிறைய ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்.‌ 

அதேபோல் பாடல்களை காட்சிப்படுத்தும் போதும் சவாலாக இருந்தது. குறிப்பாக 'மக்கா மிஷி' பாடலை விர்ச்சுவல் டெக்னாலஜியுடன் படமாக்கலாம் என திட்டமிட்டோம். ஆனால் காலதாமதம் ஏற்படும் என்ற நிலை உருவான உடன் நான்-இயக்குநர் உள்ளிட்ட அனைவரும் விவாதித்தோம். அதன் பிறகு அரங்குகளை அமைத்தோம். அதன் பிறகு கலை இயக்குநருடன் விவாதித்து வித்தியாசமான நவீன ஒளி அமைப்புகளை பயன்படுத்தி அந்த பாடல் காட்சியை படமாக்கினோம். 

இந்தப் படத்திற்காக அனைவரும் தங்களுடைய பரிபூரணமான ஒத்துழைப்பை வழங்கினர், கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்த திரைப்படம் தீபாவளி திருநாள் அன்று குடும்பத்தினர் அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று ரசித்து பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை பார்க்கும் போது பூமிகாவை போல் வரும் சகோதரி இல்லையே என்ற ஏக்கம் சகோதரிகளுடன் பிறக்காதவர்களுக்கு ஏற்படும். சகோதரியுடன் பிறந்தவர்களுக்கு ஒரு முறை சகோதரியை காண வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அதற்கு ஏற்ற வகையில் இயக்குநர் ராஜேஷ் படத்தை உணர்வுபூர்வமாகவும் உருவாக்கி இருக்கிறார்,'' என்றார். 

நடிகர் நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன் பேசுகையில், ''இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொல்லும் போதே எனக்கு பிடித்திருந்தது. இன்றைய சூழலில் அரசியல் படங்கள், நகைச்சுவை படங்கள் என பல படங்கள் வந்திருக்கிறது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் ஃபேமிலியை பற்றி பேசும் படங்கள் மிக குறைவாகத்தான் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் அந்தக் குறையை தீர்க்கும் வகையில் இந்த திரைப்படம் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். 

நடிகர் ஜெயம் ரவி பட்டாசை போல் வெடித்திருக்கிறார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தின் கதாபாத்திரத்திற்கும், இந்தப் படத்தில் அவர் ஏற்றிருக்கும் கார்த்திக் எனும் கதாபாத்திரத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதனால் இந்த தீபாவளிக்கு சரவெடியாக ஜெயம் ரவியின் நடிப்பு இருக்கும். 

இந்தப் படத்தில் விடிவி கணேஷ் படபடவென பொரிந்து தள்ளுவார். இந்த தீபாவளிக்கு ரசிகர்களின் கொண்டாட்டம் இவராகத்தான் இருக்கும். 

இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் விவேகானந்த் அருமையாக பணியாற்றி இருக்கிறார். படத்தொகுப்பு மிகவும் கடினமாக இருக்கும் என்று நினைத்தேன் ஏனென்றால் அனைத்து காட்சிகளும் கதைக்கு தேவையான காட்சிகள்தான்.

இந்தப் படத்திற்கு அதிகம் உழைத்திருப்பவர் ஹாரிஸ் ஜெயராஜ். இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு பிறகு இவரின் இசையில் வெளியான பாடல்களை தான் அதிகம் ரசித்திருக்கிறேன். அதே அளவிற்கு இந்த படத்தின் பின்னணி இசையும் இருக்கும் என்று நம்புகிறேன். எனக்கு இந்த படத்தில் நல்ல கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநர் ராஜேஷிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாள் கழித்து திரையரங்குகளில் ஒரு படத்தை பார்த்துவிட்டு ஃபீல் குட் உணர்வுடன் வீடு திரும்பும் ஒரு படமாக இந்த பிரதர் படம் இருக்கும்,'' என்றார். 

நடிகர் விடிவி கணேஷ் பேசுகையில், ''இயக்குநர் ராஜேஷ் காமெடி படங்களை இயக்குவதில் வல்லவர். அவர் எப்படி இது போன்ற ஃபேமிலி படத்தை இயக்க உள்ளார் என எதிர்பார்த்தேன். என்னை சந்தித்து பேசும்போது என் கதாபாத்திரத்திற்கான விஷயங்களைப் பற்றி மட்டும் சொன்னார். அவர் ஏற்கனவே நல்ல படங்களை இயக்கிய இயக்குநர் என்பதால் அவர் மீது நம்பிக்கை வைத்து நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன். அதே தருணத்தில் படத்தின் தயாரிப்பாளர் கதை கேட்டு தான் படத்தை தயாரிக்க ஒப்புக் கொள்வார் என எனக்கு ஏற்கனவே தெரியும். அதனால் அவர் மீதும் நம்பிக்கை வைத்தேன். இவர்களையெல்லாம் கடந்து எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ ஜெயம் ரவியின் படம் இது. நல்ல ஹைட் .நல்ல கலர். திறமையான நடிகர். அவருக்கு நடிப்பை விட டைரக்ஷன் நாலெட்ஜ் அதிகம். எனக்குத் தெரிந்து சிம்புவிற்கு அடுத்து இது போன்ற நாலெட்ஜ் உள்ளவர் ஜெயம் ரவி மட்டும்தான். 

இந்தப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் ஹிட்டான பாடல்கள் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் எல்லா பாடல்களையும் ஹிட்டாக்கிவிட்டார். அதன் பிறகு இயக்குநர் என்னிடம் பேசும்போது படத்தின் பின்னணி இசையும் பிரமாதமாக வந்திருக்கிறது என்றார். ஒரு வகையில் இது ஹாரிஸ் ஜெயராஜின் கம் பேக் படமாக இருக்கும். 

பூமிகா சாவ்லாவிற்கு இந்தி தான் தெரியும். அதை விட்டால் இங்கிலீஷ் தெரியும். தமிழ் தெரியாது . இங்கிருந்து சென்று பத்து வருடம் ஆகிவிட்டது . ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நடிக்கும் போது காட்சியை பற்றி விரிவாக கேட்டு அறிந்து கொள்வார். இந்தப் படத்தில் அவரும் நட்ராஜும் கணவன் மனைவியாக வருவார்கள். அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.  

பொதுவாக வீட்டைப் பற்றிய நினைப்பே தற்போது இல்லாது இருப்பவர்களுக்கு இந்த திரைப்படம் குடும்பத்தை பற்றிய எண்ணத்தை ஏற்படுத்தும். அந்த அளவிற்கு இயக்குநர் ராஜேஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். 

நடிகர் ராவ் ரமேஷ். இந்தப் படத்தில் கலெக்டராக  ஸ்ட்ரிக்ட்டான ஆபீஸராக நடித்திருக்கிறார்.  அவர் தெலுங்கு நடிகராக இருந்தாலும் தமிழில் நடிக்க வேண்டும் என்று விருப்பமுள்ளவர். இந்த படம் அவரை பெரிய அளவிற்கு உயர்த்தும். இந்தப் படத்தில் அவர் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.  

இந்தப் படத்திற்கு என்ன தேவையோ அனைத்தையும் தயாரிப்பாளர் செய்திருக்கிறார் . இந்த படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் சொந்தமாக வெளியிடுகிறார். இந்தப் படத்தின் மீது தயாரிப்பாளர் வைத்திருக்கும் நம்பிக்கையை ரசிகர்களாகிய நீங்களும் கை கொடுத்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

நடிகை பூமிகா சாவ்லா பேசுகையில், ''இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலானது. இந்த படத்தில் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது. நடிகர் ரவி அற்புதமான மனிதர், திறமையான நடிகர். பிரியங்கா அருள் மோகன் க்யூட்டான பொண்ணு.‌ இந்த திரைப்படம் அக்காவிற்கும் தம்பிக்கும் இடையேயான உறவை  பேசுகிறது. இந்த படத்தை திருவிழா நாளில் திரையரங்கத்திற்கு சென்று ரசித்து கொண்டாடுங்கள்,'' என்றார். 

இயக்குநர் எம். ராஜேஷ் பேசுகையில், ''மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தீபாவளி திருநாளில் என்னுடைய திரைப்படம் வெளியாகிறது. என்னுடைய இயக்கத்தில் உருவான படம் திரையரங்கத்தில் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு என்னுடைய படம் திரையரங்கில் வெளியாகிறது.‌ கொண்டாட்டத்திற்குரிய திரைப்படம் திருவிழா நாளில் வெளியாகிறது.‌ இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.‌ இதற்காக  ஜெயம் ரவிக்கு நன்றி சொல்கிறேன். 

இதற்கு முன் நாங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என பேசினோம். ஆனால் எதுவும் சாத்தியமாகவில்லை. இந்தப் படத்தின் திரைக்கதையை நான் அவரிடம் சொன்னபோது அவர் முழுவதும் கேட்டுவிட்டு ஓகே சொன்னார். அப்போதிலிருந்து இப்போது வரை நடிகர் என்பதை கடந்து உதவி செய்வதுடன் முழுமையான ஒத்துழைப்பையும் அளித்து வருகிறார். இந்தப் படத்திற்காக நடிகராக மட்டுமில்லாமல் அவருக்குத் தோன்றும் எண்ணங்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டார். படத்தை விளம்பரப்படுத்துவதற்கும் நிறைய ஆலோசனைகளை வழங்கினார். அவர் இல்லாமல் இந்த திரைப்படம் இல்லை. இதற்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ 

ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுந்தர்  டைனமிக்கான தயாரிப்பாளர் . அவர் ஒரு விஷயத்தை நம்பி விட்டால் அதற்காக கடுமையாக உழைப்பவர். இவரைப் போன்ற அர்ப்பணிப்புடன் கூடிய தயாரிப்பாளர் திரையுலகத்திற்கு தேவை. இந்த நிறுவனம் தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. தமிழ் சினிமாவிற்கு கிடைத்த சிறந்த தயாரிப்பாளர் இவர். 

இப்படத்தின் நாயகி பிரியங்கா மிகவும் க்யூட். படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளை படமாக்கும் போது நான் கட் சொன்ன பிறகும் அவரின் சின்ன சின்ன ரியாக்ஷன்களை வைத்து படமாக்கி அதனை படம் வெளியான பிறகு இணையத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன். அது மிகவும் சுவாரசியமானதாக இருக்கும்.‌ படப்பிடிப்பு தளத்தில் ஜாலியாகவும் உற்சாகமாகவும் உலா வருவார். 

அடுத்து பூமிகா சாவ்லா, அவரை மும்பையில் சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னேன். உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். தற்போது வரை படத்தின் ப்ரோமோஷனுக்காக மும்பையில் இருந்து வருகை தந்து ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். அவரும் இந்த படத்தை பெரிதாக நம்புகிறார். அவருக்கு படத்தில் நடித்த கேரக்டர் மிகவும் பிடித்திருந்தது என சொன்னார். 
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் தமிழில் நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு மொழி விஷயத்தில் தடை இருந்தது. இருந்தாலும் காட்சியை விளக்கிய பிறகு நடித்துக் கொடுத்தார். படத்தில் ஒரு அக்கா எப்படி இருப்பார் என்பதற்கு முன்னூதாரணமாக அவரது கதாபாத்திரம் இருக்கும். படத்தைப் பார்த்த பிறகு அக்கா இல்லாதவர்களுக்கு இது போன்றதொரு அக்கா இருக்கக் கூடாதா என்ற எண்ணம் ஏற்படும். 

படத்தில் வி டி வி கணேஷ் என்டர்டெய்ன்மென்ட்டான கேரக்டரில் நடித்திருக்கிறார். அவர் நகைச்சுவையாக நடிப்பார். அவருடைய வசன உச்சரிப்பு வித்தியாசமானதாக இருக்கும். அவர் பேசும் வார்த்தைகள் புதிதாக இருக்கும். இந்த படத்தில் அவர் ஒரு காட்சியில் உணர்வுப்பூர்வமாகவும் நடித்திருக்கிறார். அது எனக்கு சந்தோஷமான விசயம். இந்தக் காட்சியை படமாக்கும் போது அவரது நடிப்பை பார்த்து படபிடிப்பு தளத்தில் நாங்கள் அனைவரும் கைத்தட்டி மகிழ்ச்சியை தெரிவித்தோம்.  

நட்டி என்னுடைய நீண்ட நாள் நண்பர். அவரை தொடர்பு கொண்ட உடன் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டார். இந்த கேரக்டரை எழுதியவுடன் என்னுடைய முதல் தேர்வு அவராகத்தான் இருந்தது. அவரும் இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்.‌ 

என்னுடைய படத்தில் பைட் சீன்ஸ்  இருக்கும். ஆனால் எடிட்டிங்கில் சென்றுவிடும். ஆனால் இந்த படத்தில் பைட் இருக்கிறது. பைட் மாஸ்டரும் ஜெயம் ரவியும் நெருங்கிய நண்பர்கள். அதனால் இந்த படத்தில் சண்டை காட்சிகள் கூடுதலாகவே இருக்கிறது. சண்டைக் காட்சிகள் அனைத்தும் விரைவாகவும், நேர்த்தியாகவும் நிறைவடைந்தது. 

இந்த படத்தின் எடிட்டர் ஆஷிஷ். இந்தப் படம் மொத்தம் மூணு மணி நேரம் 40 நிமிஷம்.  ஆஷிஷ் வேகமாக எடிட் செய்வார். படப்பிடிப்பு தளத்திலேயே அன்றைய காட்சிகளை எடிட் செய்து காண்பிப்பார். அதிலேயே அவருடைய கிரியேட்டிவ் தெரியும். பெர்ஃபெக்ஷன் ஆகவும் இருக்கும். இந்தப் படத்தை அனைவரும் ரசிக்கும் படி தொகுத்திருக்கிறார். 

ஒளிப்பதிவாளர் விவேக் பணியாற்றிய படங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும். இதற்கு முன் சில படங்களில் இணைந்து பணியாற்ற நினைத்திருந்தோம். ஆனால் இந்த படத்தில் தான் அது சாத்தியமானது. அவருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

ஊட்டியை  திரில்லர் திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஹாரர் திரைப்படங்களின் பார்த்திருப்போம். ஆனால் ஊட்டியை வண்ணமயமாக பார்க்க வேண்டும் என விரும்பினோம். இந்தப் படத்தில் ஊட்டியை அவர் அழகாகவும், வண்ணமயமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார். 

இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் நடித்திருக்கிறார். நான் எழுதிய அந்த கதாபாத்திரத்திற்கு புதிதாக ஒரு நடிகர் வேண்டும்.  அந்த கதாபாத்திரம் அற்புதமானது.  ஜெயம் ரவி தான் ராவ் ரமேஷை பரிந்துரை செய்தார். அவரை சென்று பார்த்தவுடன் தமிழ் நன்றாக பேசுகிறார். தமிழ் படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டினார். இந்தப் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்திற்கு அவரே டப்பிங்கும் பேசியிருக்கிறார். 

என்னுடைய எல்லா படத்திலும் சீரியஸான அப்பாவியான அம்மா கதாபாத்திரத்தில் சரண்யா மேடம் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தில் சரண்யா இங்கிலீஷில் பேசுவது போல் நடித்திருக்கிறார்கள். 

இதில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுடைய திறமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். 

இது ஒரு கிளீன் ஃபேமிலி எண்டர்டெய்னர்.  இந்த படத்தை சென்சார் குழுவினர் பார்த்தபோது ஒரு கட் கூட கொடுக்காமல் கிளீன் யூ சர்டிபிகேட்டை கொடுத்தார்கள். இதுவே எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. 

பாஸ் என்கிற பாஸ்கரன் - சந்தோஷ் சுப்பிரமணியம் இந்த இரண்டு திரைப்படத்தையும் இன்றைய டிரெண்டிற்கு ஏற்ற அளவில் அப்டேட் செய்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து தான் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இதனை ரசிகர்களாகிய நீங்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஜாலியான படமாக இது இருக்கும். 

இந்தப் படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் நான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன். 

இந்தப் படத்தில் மிகப் பெரிய பலம் ஹாரிஸ் ஜெயராஜ்  படத்திற்கான பின்னணி இசைக்கு நிறைய நேரம் எடுத்துக்கொண்டு நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்தப் படம் வெளியான பிறகு இன்னும் இரண்டு பாடல்கள் வெற்றி பெறும். அவருக்கு நான் ரசிகன். அவருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. 

தீபாவளியன்று குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து கொண்டாடும் திரைப்படமாக 'பிரதர்' இருக்கும்,' என்றார்.

நடிகர் ஜெயம் ரவி பேசுகையில், ''பிரதர் திரைப்படம் நல்லதொரு டீசன்டான மூவி.‌ லீனியர் நரேஷனில் அழகான படமாகவும் குடும்பம் முழுவதும் மகிழ்ச்சி அடையும் வகையிலும் பிரதர் உருவாகி இருக்கிறது. ஒரு தீபாவளி படத்திற்கு என்னென்ன டிக் மார்க் வேண்டுமோ, அவை எல்லாம் ஒன்றாக சேர்ந்திருக்கும் படம் தான் பிரதர்.  இந்தப் படத்தை உருவாக்கும் போதும் நாங்கள் அனைவரும் சந்தோஷமாகவே பணியாற்றினோம். 

இந்தப் படத்தில் படப்பிடிப்பு நடைபெறும் தருணங்களில் நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாகத்தான் இருந்தோம். தயாரிப்பாளர் சுந்தர் எங்கள் அனைவருக்கும் அனைத்து வசதிகளையும் அளித்தார். படப்பிடிப்பு நடைபெற்ற தருணத்தில் பூமிகாவின் பிறந்தநாள் வந்தது, அதற்காக படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினோம். படப்பிடிப்பு நடைபெற்ற நாட்கள் முழுவதும் அனைவரிடமும் அன்பும், அக்கறையும் இருந்தது. இந்தப் படத்தை நடித்த  நடிகர்களையும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களையும் மறக்க முடியாது. கடுமையாக உழைப்பில் உருவான திரைப்படம் இது.

சண்டை பயிற்சி இயக்குநர் ஸ்டன்னர்  சாமை சிறுவயதில் இருந்தே தெரியும். பேராண்மை படத்தில் மரத்தின் மீது ஓடும் காட்சி ஒன்று இருக்கும். அந்த காட்சியில் நான் நடிக்க தயங்கிய போது.. அவர் அவர் அந்த மரத்தின் மீது ஓடி காண்பித்து நம்பிக்கையை உண்டாக்கினார். இந்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

கலை இயக்குநர் கிஷோர் எந்த ஒரு சிக்கலான தருணத்தையும் எளிதாக கையாளக்கூடிய திறமை மிக்கவர். 

ஃபேமிலி டிராமா ஜானர் திரைப்படங்களை எடிட் செய்வது கஷ்டமான விஷயம். என் அப்பா எடிட்டர் மோகன் நிறைய ஃபேமிலி டிராமா ஜானரிலான படங்களை எடிட் செய்திருக்கிறார். அப்போது நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அது எவ்வளவு கடினம் என எனக்குத் தெரியும். அதனால் இந்த மாதிரி படங்களை எடிட் செய்வதற்கு ஒரு திறமையான எடிட்டர் தேவை. இந்த மாதிரி படங்களை எடிட் செய்வதற்கு பயிற்சி வேண்டும் அனுபவம் வேண்டும். அது எல்லாம் இப்படத்தை தொகுத்த ஆசிஷுக்கு இருக்கிறது. அவருக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. 

நட்டி சார் ஒரு யூனிக்கான ஆக்டர். இவரை புரிந்து கொள்ளவே முடியாது ஹீரோவா..? வில்லனா ..? கேரக்டர் ஆர்டிஸ்டா..? இல்ல காமெடி பண்ண போறாரா..?  என புரிந்து கொள்ள முடியாது . ஆனால் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதில் ஒரு அவருடைய தனித்துவமான நடிப்பு திறமை இருக்கும். அவருடைய ஒளிப்பதிவுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவர் ஒரு சிறந்த நடிகர் என்பது அவருடன் இணைந்து பணியாற்றும் போது தான் தெரிய வருகிறது. 

பூமிகா- அவர் நிறைய படங்களில் நடித்திருக்கிறார் . அவரை திரையில் எப்போது பார்த்தாலும் சலிப்பே வராத ஒரு முகம். என்னுடைய குடும்பத்தினருக்கு அவரை மிகவும் பிடிக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவருடைய ரசிகர்கள். இந்தப் படத்தில் பூமிகாவிற்கு தம்பியாக நடிக்கிறேன் என்று சொன்னவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தப் படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டது இந்தப் படத்திற்கு கூடுதல் பலம். அது படம் வெளியான பிறகு அனைவருக்கும் தெரியும். அவருடைய நடிப்பு திறமை இப்படம் வெளியான பிறகு பேசப்படும். 

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வி டி வி கணேஷ் எப்போதும் ஜாலியாக இருப்பார். சில நேரத்தில்.. என்னிடத்தில் சில கோணங்களை சுட்டிக்காட்டி இதில் இப்படி நடித்துப் பார் என ஆலோசனை வழங்குவார். அது ஒரு புது விஷயமாக இருக்கும். அதனால் இந்த படத்தில் சில புதிய விஷயங்களை முயற்சி செய்து இருக்கிறேன்.. இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

ஹாரிஸ் ஜெயராஜ் என்னுடைய படங்களுக்கு  ஹிட் கொடுக்கும் இசையமைப்பாளர். 'எங்கேயும் காதல் ' 'தாம் தூம்' ஆகிய படங்களில் எல்லா பாடல்களையும் ஆல்பமாக ஹிட் கொடுத்தவர்.‌ அதேபோல் இந்தப் படத்தையும் ஹிட்டாக்கிருக்கிறார்.‌ 

என்னுடைய ரசிகர்கள் நான் நடனம் ஆட வில்லை என வருத்தப்பட்டார்கள். மேலும்‌ நான் ஏ சர்டிபிகேட் படங்களில் மட்டும் தான் நடிக்கிறேன் என்றும் வருத்தப்பட்டார்கள். அவர்களுக்காகவும் இந்த படத்தில் நடனமாடி இருக்கிறேன். யூ சான்றிதழ் பெற்ற படம். இது. எதிர்காலத்தில் டான்ஸ் இருக்கிற படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். இந்தப் படத்தில் இடம்பெற்ற 'மக்கா மிஷி' பாடல் ஹிட் ஆகியிருக்கிறது.  ஆனால் இந்த படத்தில் அக்காவுக்கும் தம்பிக்கும் இடையே ஒரு எமோஷனலான பாட்டு இருக்கிறது.  இந்தப் பாட்டு .. படம் வெளியான பிறகு ஹிட் ஆகும். 

இயக்குநர் ராஜேஷ் அவர்களுடைய திறமைக்கு அவர் இன்னும் கூடுதல் உயரத்தை அடைய வேண்டும்.‌ அவர் எமோஷனை அழகாக சொல்வார்.‌ அவர் எஸ் எம் எஸ் படத்தில் சொன்ன விஷயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருடைய திரைக்கதையில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். இரண்டொரு காட்சிகள் நடிக்கும் நடிகர்களுக்கு கூட நல்லதொரு வாய்ப்பை வழங்கி இருப்பார். 

இந்தப் படத்தில் நானும் நன்றாக நடித்திருக்கிறேன். ஹீரோயின் பிரியங்கா அழகான க்யூட்டான பெண்.‌ படப்பிடிப்பு தளத்தில் அவர் ஒரு காட்சியில் இருக்கிறார் என்றாலே அனைவரது கவனத்தையும் கவர்ந்து விடுவார். டயலாக் சொல்லும்போதும் சிறப்பாக பேசுவார். 

இந்தப் படம் அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று ஜாலியாக ரசிக்கக் கூடிய படம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்," என்றார்.

நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா

நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில். சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடிப்பில் நவம்பர் 14 ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. இதன் இசை வெளியீட்டு விழா 26.10.2024  சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

பாடலாசிரியர் விவேகா பேசியிருப்பதாவது, “’கங்குவா’ படம் நிச்சயம் இந்திய சினிமாவின் பெருமையாக இருக்கும். புதிய உலகம் ஒன்றை உருவாக்குவதில் சிவா மிகப்பெரிய வெற்றியை இந்தப் படத்தில் பெற்றுள்ளார். அவரது இன்னொரு முகத்தை பார்த்தேன். சூர்யா சார் தனது நடிப்பின் உச்சத்தை இந்தப் படத்தில் கொடுத்துள்ளார். காலத்திற்கு ஏற்ப புதிய மனிதனாக இந்தப் படத்தில் தன்னை மாற்றியுள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இசையில் படம் நெருப்பாக வந்திருக்கிறது. தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். படம் மிகப்பெரிய வெற்றியடையும்” என்றார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி, “’புஷ்பா2’ படத்திற்கு வசனம் எழுதிக் கொண்டிருக்கும்போதுதான் சிவா சார் என்னை சந்தித்து இந்தக் கதை சொன்னார். இவ்வளவு பிரம்மாணட கதையை சாத்தியமாக்கியது பெரிய விஷயம். தொழில்நுட்பக் கலைஞர்கள் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளனர். சூர்யா சாருடன் நெருங்கிப் பழகும் இந்த வாய்ப்பு இதில் கிடைத்தது. மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளார். பாபி தியோலும் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்தில் நான் 3 பாடல்களை எழுதி இருக்கிறேன். நான் எழுதிய பாடல்களைவிட, விவேகா எழுதிய மன்னிப்பு என்கிற பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல். ’பாகுபலி’ படத்திற்கு வசனம் எழுதிய போது எனக்கு கிடைத்த மகிழ்ச்சி, ரொம்ப நாட்களுக்கு பின் இந்த படத்தில் கிடைத்தது. அந்த படத்தை பார்த்த போது எனக்கு மனதிற்குள் என்ன அதிர்வு இருந்ததோ அந்த அதிர்வு என் மனதிற்குள் இருந்தது. இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த சிவாவிற்கு நன்றி. அவரின் கனவு அடுத்தடுத்த படத்தில் வெளிவரப்போகிறது. ’கங்குவா’ பத்து பாகமாக வரக்கூடிய அளவிற்கு அதில் கதை உள்ளது” என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ், “நான் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது சூர்யாவிடம் ’கங்குவா’ படத்தைப் பற்றி அடிக்கடி கேட்பேன். எப்போது படத்தைப் பற்றி பேசினாலும் சூர்யா உற்சாகமடைந்து விடுவார். ’கங்குவா’ படம் முடிந்த பின் கூட அவர் அந்த படத்தின் தாக்கத்தில் இருந்ததைப் பார்க்க முடிந்தது. ’கங்குவா’ படத்தின் ஐந்து நிமிட காட்சியை  சூர்யா என்னிடம் காட்டினார். இந்த படம் நம் அனைவரையும் பெருமைப்பட வைக்கும். இந்திய சினிமாவில் இந்த மாதிரி ஒரு படத்திற்காக நாம் எல்லாரும் பெருமைப்பட வேண்டும். சூர்யா இந்தியாவில் இருக்கும் தலை சிறந்த நடிகர்களில் ஒருவர். ஹாலிவுட் ஸ்டைலில் நாம் படம் எடுக்க வேண்டும் என்று நினைத்து எழுதுவோம். ஆனால், அதை எழுதும்போதே அப்படி எல்லாம் நம்மால் செய்ய முடியாது என்று தோன்றும் ஆனால் கங்குவா படத்தை உலக தரத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். சூர்யா நடிப்பில் ‘மெளனம் பேசியதே’, ‘காக்க காக்க’ படங்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ’கங்குவா’ படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகர் கருணாஸ், “சினிமாவிற்கு வந்த இத்தனை வருடங்களில் நான் எந்த இயக்குநருடனும் வேலை செய்யவில்லையே என்று வருத்தப்பட்டது இல்லை. ஆனால், ’கங்குவா’ படப்பிடிப்பு முடிந்ததும், இவருடன் இணையவில்லையே என்று வருத்தப்பட்டேன். டையலாக் பேப்பர் கூட இல்லாமல் ஒரு இயக்குநர் படம் எடுக்கிறார் என்றால் அது சிவா தான் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். நான் லொடுக்கு பாண்டியாக நடித்த முதல் படத்தின் ஹீரோ சூர்யா. இவருடன் எப்படியாவது நான்கு வருடத்திற்கு ஒருமுறை ஒரு படத்தில் நடித்துவிடுவேன். நந்தா, பிதாமகன், அயன், சூரரைப்போற்று தற்போது கங்குவா. நான் அவருடன் நடித்த அனைத்துப்படமும் வெற்றிப்படம் தான். வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கலாம். ஆனால், தன்னுடைய உழைப்பால் உயர்த்தவர் தான் சூர்யா. நான் பலருடன் நடித்து இருக்கிறேன். ஆனால், தன்னுடைய வேலையை நேசித்து செய்யக்கூடியவர் சூர்யா. ’நந்தா’ படத்தில் நான் சூர்யாவை எப்படி பார்த்தேனோ, அதே சூர்யாவை இந்த படத்திலும், எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் தான் செய்யும் தொழில் மீது அக்கறையுடன் இருக்கிறார். படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

நடிகர் போஸ் வெங்கட், “ஒரு சூப்பர் ஸ்டார் ரசிகர்களை வழிநடத்த வேண்டும். உங்களை மாதிரி வழிநடத்த வேண்டும். உதவி, தர்மம் செய்ய இப்போவே சொல்லி கொடுக்கணும். அனைவருக்கும் படிப்பை கொடுத்துவிட வேண்டும். அதற்கு பிறகுதான் அரசியலுக்கு வரவேண்டும். ஒரு தலைவன் நடிகனாக, எழுத்தாளனாக, டாக்டராக இருக்கலாம். ஆனால் தலைவன் முகம் ரசிகர்களை முட்டாளாக வைத்திருப்பதைவிட அறிவாளியாக வைத்திருக்க வேண்டும். ரசிகனை படிக்க வைக்க வேண்டும். அவனுக்கு அறிவை வளர்க்கணும். பிறகுதான் அரசியலுக்கு வர வேண்டும். அப்படி பார்த்தால் நீங்கள் அரசியலுக்கு வரணும். கமலுக்கு பிறகு நுணுக்கமான நடிகன் சூர்யாதான். நிறைய திருப்திகரமான படங்களை கொடுத்துவிட்ட பிறகு அரசியலுக்கு வரவேண்டும்" என்றார்.

நடிகர் யோகிபாபு, “சிவா சாருடன் ‘வீரம்’ படத்தில் அஜித் சாருடன் பணிபுரிந்தேன். அதன்பிறகு ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’ படங்களில் நடித்தேன். ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யா சாருடன் ஒரு காட்சி நடித்தேன். பின்பு அவர் சொல்லி ‘கங்குவா’ படத்தில் முழுவதும் நடித்திருக்கிறேன். சூர்யா சார் கடுமையான உழைப்பாளி. என் உடன்பிறந்த சகோதரர்தான். நீங்கள் அடுத்து உலக சினிமாவுக்கும் செல்ல வேண்டும்” என்றார்.

நடிகர், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, “நான் காலேஜ் படிக்கும் போது வந்த படம் ’காக்க காக்க’. அந்த படம் தான் சூர்யா சார் நடித்து நான் பார்த்த முதல் படம். அந்த படத்தை தொடர்ந்து ‘பிதாமகன்’, ‘ஆயுத எழுத்து’, ‘கஜினி’ இந்த படங்கள் நான் காலேஜில் படிக்கும் போது பார்த்த படம். இப்படி திரையில் நான் பார்த்து வியந்த ஒருத்தர் தான் சூர்யா. இதே நேரு ஸ்டேடியத்தில் பல நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க இருக்கிறேன். தற்போது சூர்யாவின் 45 திரைப்படத்தை இயக்க இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முக்கிய காரணம் சூர்யா தான். அவர் என் கதையை கேட்டு என்மீது நம்பிக்கை வைத்ததால் தான் இது சாத்தியமானது. அனைவரும் இணையத்தில் What are you cooking bro என்று கேட்குறீர்கள். பயங்கரமாக மாஸாக சமைத்து அடுத்த வருடம் தரப்படும் அதற்கு நான் கேரண்டி. சூர்யா சார் அரசியலுக்கு வரவேண்டும் என்று போஸ் வெங்கட் சார் சொன்னார். அவரின் இந்த கருத்தில் எனக்கு ஒரு கருத்து இருக்கிறது. நான் சூர்யாவின் ரசிகன் என்பதால் இதை இந்த இடத்தில் பதிவு செய்கிறேன். ஒரு அரசியல்வாதி என்பது வெறும் தேர்தலில் நிற்பது மட்டுமில்லை. ஒரு தெருவில் மரம் விழுந்து, அதை நான்கு பேராக சென்று எடுத்துப் போட்டால் அவர் தான் அரசியல்வாதி. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சின்ன சின்னதாக நல்லது செய்தால் அவரும் அரசியல்வாதிதான். அந்தவகையில் சூர்யா சார் அரசியல்வாதியாக மாறி ரொம்ப வருஷம் ஆகிறது. இந்த அரசியலே உங்களுக்கு போதும் சார். மாற்றம் அறக்கட்டளை மூலமாக பல பேரை படிக்கவைத்து 25 வருடத்திற்கு முன்பே அரசியலுக்கு வந்துவிட்டார். இந்த அரசியலே அவருக்கு போதுமானது” என்றார்.

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், “சூர்யா மிகச்சிறந்த நடிகர். இந்த மாதிரியான படத்தில் பணியாற்ற அனைத்து டெக்னீஷியன்களுக்கும் ஆசை இருக்கும். அது எனக்கு இதில் நிறைவேறியிருக்கிறது. எவ்வளவுதான் படத்தில் டெக்னீஷியன்கள் வேலை செய்தாலும் ஒரு கதாநாயகன் தான் அந்தப் படத்தின் முகம். சூர்யா அனைவரையும் சமமாக மதிப்பவர்” என்றார்.

நடிகர் கார்த்தி, “எனது அண்ணன் சூர்யா சினிமாவில் நடிக்கச் சென்றபோது நடிக்கத் தெரியலனு சொன்னாங்க, ஆடத்தெரியலனு சொன்னாங்க, ஃபைட் பண்ணத் தெரியலனு சொன்னாங்க, நல்ல உடல் இல்லைனு சொன்னாங்க. எனக்குத் தெரியும் காலையில 3 மணி நேரம் ஃபைட் கிளாஸ், மாலையில் 3 மணி நேரம் டான்ஸ் கிளாஸ் போனார். ’ஆயுத எழுத்து’ படத்தில் நான் வேலை செய்தபோது அதில் சண்டைக் காட்சிகளில் ஃபைட்டர் மாதிரி சண்டை செய்தார். இன்றைக்கு அனைத்து ஜிம்களிலும் அண்ணனின் படம் இருக்கு. எல்லா பசங்களும் ஹெல்த்தை சீரியஸா எடுத்துக்க அண்ணன் காரணமாக இருக்காரு. எதெல்லாம் நெகடிவ்னு சொன்னங்களோ, அதை எல்லாத்தையும் தன் உழைப்பால் மாற்றிக்காட்டியவர். உழைத்தால் முன்னேறலாம் நினைத்த இடத்தை அடையலாம் என்பதற்கு அண்ணனைத் தவிர, சிறந்த எடுத்துக் காட்டு யாரும் இல்லை. படத்தின் ஆர்ட் டைரக்டர் மிலன் சார், நீங்க இங்க இருந்து இருக்கனும் சார். நான் உதவி இயக்குநராக இருந்தபோது, அவர் உதவி ஆர்ட் டைரக்டர். அவரது உழைப்பு எனக்கு தெரியும். ’கங்குவா’ படத்திற்காக அவர் உருவாக்கியுள்ள உலகம் காலத்திற்கும் பேசப்படும். அவர் இங்கு இல்லை என்பது எனக்கு வருத்தமாக உள்ளது. சிவா சார் ‘கங்குவா’ படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார். படம் நிச்சயம் வெற்றிப் பெறும்” என பேசினார்.

வீடியோ மூலம் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டார். மேலும் அவர் பேசியதாவது, “நான் முன்னதாக இயக்குநர் சிவாவிடம் தனக்காக ஒரு பீரியட் படம் செய்யும்படி கேட்டபோது அவரும் சரி என்று சொன்னார். அப்படி பார்த்தால், ’கங்குவா’ படம் எனக்காக தயார் செய்யப்பட்ட படமாக இருக்கலாம். இந்தப் படத்தை அடுத்து சிவா எனக்காகவும் இதுபோன்ற ஒரு கதையை உருவாக்குவார். வித்தியாசமான கதைகளை தயாரிப்பதில் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா மிகுந்த விருப்பம் உடையவர். இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் கேட்டபோது, ஷூட்டிங்கில் இருந்ததால் என்னால் பங்கேற்க முடியவில்லை. இயக்குநர் சிவாவுடன் ’அண்ணாத்த’ என்ற ஒரு படத்தில்தான் பணியாற்றினேன். ஆனால், 20, 30 படங்களில் பணியாற்றியது போன்ற நெருக்கம் அவருடன் ஏற்பட்டிருக்கிறது. சூர்யாவின் கண்ணியம், ஒழுக்கம் நேர்மை அனைவருக்கும் தெரிந்ததே! அவரை போன்ற ஒருவரை யாராலும் பார்க்க முடியாது. சூர்யா வித்தியாசமான படங்களில் நடிக்க மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரது விருப்பப்படியே ’கங்குவா’ படம் அமைந்துள்ளது. படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றும் கூறியுள்ளார்.

விழாவில் பேசிய இயக்குநர் சிவா, "’கங்குவா’ படத்தை இரண்டு வருடங்கள் எடுத்தோம். அந்த காலத்தில் சூர்யாவுடன் பழகுவதற்கான அற்புத வாய்ப்பை இறைவன் கொடுத்ததற்கு நன்றி. நூறு சதவீதம் கொடுத்திடலாம் என்று 100 தடவை சூர்யா என்னிடம் சொன்னார். நான் அவரை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கேன். ஆனால் அதை சலிக்காமல் செய்தார். கங்குவா கதாபாத்திரம் நடிப்பதற்கு மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் பலம் தேவை. அதை மிகச்சிறப்பாக செய்தார் சூர்யா. சிறுத்தை சிவா என்ற அடையாளத்தை ஞானவேல் ராஜா எனக்கு கொடுத்தார். அடுத்த 15 வருடங்களுக்கு ’கங்குவா’ எனது கரியரில் பெஸ்ட்டாக அமையும் என்று நம்புகிறேன். என்னுடைய அப்பா இப்போது உயிரோடு இல்லை. அவர் இருந்திருந்தால் நிறைய சந்தோஷப்பட்டிருப்பார். எனது மனைவி இதுபோன்ற விழாக்களுக்கு வரமாட்டார். சண்டை போட்டு அவரை வரவைத்தேன். ’கங்குவா’ படத்திற்கு ஒப்பந்தமான பிறகு, கண்டிப்பாக இரண்டு வருடங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கஷ்டப்படுவேன் என்று தெரிந்தது. அந்தச் சமயத்தில் என்னையும், எனது குடும்பத்தையும் மனைவிதான் சந்தோஷமாக பார்த்துக்கொண்டார். அவருக்கு நன்றி.
இந்தப் படம் அருமையாக இருக்கிறதாக இதுவரை பார்த்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கமர்ஷியலாக படம் பண்ணிக்கொண்டிருந்தவன் நான். அது சாதாரண விஷயம் இல்லை. ஏனெனில் மக்களுக்கு பிடித்த மாதிரி படங்கள் செய்வது சாதாரண விஷயமில்லை. இந்த மாதிரியான ஒரு படம் பண்ணலாம் என்று ஆசைப்பட்டபோது அந்த ஆசைக்கு அடித்தளம் என்னுடைய நண்பர், வழிகாட்டி, எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரமாக நினைக்கக்கூடிய அஜித் சாரிடம் இருந்துதான். இத்தனை பேரின் அன்பை சம்பாதித்து வைத்திருக்கும் அஜித் அவரின் நம்பிக்கையை என்னிடம் வைத்தார். சிவா நீ இருக்கக்கூடிய உயரம் இது இல்லை. உனக்கு சினிமாவில் எல்லாமே தெரியுது. நீ சிறகடித்து பறக்க வேண்டும். வானம் மொத்தம் உனக்கு என்று சொன்னார். கங்குவா திரைப்படம் அழகான முயற்சி, கடுமையான உழைப்பு. இதற்கு இறைவன் கண்டிப்பாக பலன் கொடுப்பார்" என்றார் .

கதையின் நாயகன் நடிகர் சூர்யா பேசியதாவது, “அப்பாவிற்கு மரியாதை கொடுத்து, எங்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டாருக்கு நன்றி. ரசிகர்களுடைய  27 வருட அன்பிற்கும் வாய்ப்பு கொடுத்த என்னுடைய அனைத்து இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ஞானவேல் தாய்வீடு மாதிரி. அவரிடம் இருந்து தான் நிறைய விஷயங்கள் தொடங்கின. கார்த்தி நடிக்க தொடங்கியதற்கு ஞானவேல் தான் காரணம். என்னுடைய படிக்கட்டு பெரிதாவதற்கும், அடுத்த பாய்ச்சல் பாய்வதற்கும் எப்போதும் ஞானவேல் காரணமாக இருந்துள்ளார். எப்போதும் மார்க்கெட்டை விட பெரிதாக செய்வதற்குத் தயாராக இருப்பார். பாபி என்னுடைய உடன்பிறக்காத சகோதரர். அவரை நான் நிறைய சைட் அடித்திருக்கிறேன். அவர் நடித்ததால், இந்தப் படம் பான் இந்தியா படம் ஆகியிருக்கிறது. யோகி பாபு நல்ல அறிவான நடிகர். தமிழ் வளர வேண்டும் என்று நினைத்து மதன் கார்க்கியும், அவரது நண்பர்களும் நிறைய வேலை செய்கின்றனர்.
சினிமா வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல. அது ஒரு குரல். அதனால், சினிமாவை நாம் நிச்சயம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 27 ஆண்டுகளுக்குப் பிறகு, சிவா எடுத்து வந்த இந்த பொக்கிஷத்தில் இருக்கும் காட்சிகள் மிகவும் புதியதாக இருக்கும். தமிழ் சினிமாவை முன்னெடுத்துச் செல்லும் அத்தனை உழைப்பையும் இந்தப் படத்தில் நாங்கள் அனைவரும் போட்டிருக்கிறோம். 107 நாள்கள் எப்படி போனது என்றே தெரியவில்லை.

இந்த படம் பெரிய தலைவாழை விருந்து. மேலும் மலை உச்சியில் இருக்கும் கொம்புத் தேனாகவும், எட்டாக்கனியாகவும் பார்க்கலாம். நல்லதே நடக்கும், என் மனதை புண்படுத்தும் சக்தியை யாருக்கும் தரமாட்டேன். மன்னிப்பு ஒரு அழகான விஷயம் என்பதை எனக்கு சிவா கற்றுக்கொடுத்தார். அதை நான் உங்களுக்குத் தருகிறேன். தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு நேரத்தை வீணாக்க வேண்டாம். என்ன வெறுப்பைக் கொடுத்தாலும், அன்பை மட்டும் பரிமாறி உயர்வோம்.

சூரியன் மேலேயே இருந்தால் புது நாள், புது வளர்ச்சி கிடைத்திருக்காது. அதுமாதிரி தான் என்னுடைய ஏற்ற, இறக்கங்களை பார்க்கிறேன். ரசிகர்களுடைய அன்பை என்னுடைய அம்மாவின் அன்பு மாதிரி பார்க்கிறேன். உதயநிதி ஸ்டாலின் என்னுடைய காலேஜ் ஜூனியராக இருந்தாலும் 'பாஸ்' என்று கூப்பிடுவேன். அவர் என்னை வைத்து இரண்டு படங்கள் எடுத்திருக்கிறார். இப்போது துணை முதலமைச்சராக ஆகியிருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவரை எப்பவுமே எளிதாக அணுகலாம். என்னுடைய இன்னொரு நண்பர் ஒருவர் இருக்கிறார். விஜய் புதிய பயணத்திற்காக புதிய பாதை போட்டிருக்கிறார். அவருடைய வரவும் நல்வரவாக இருக்கட்டும்" என்றார்.

நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

 நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில். சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடிப்பில் நவம்பர் 14 ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. இதன் இசை வெளியீட்டு விழா 26.10.2024  சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

பாடலாசிரியர் விவேகா பேசியிருப்பதாவது, “’கங்குவா’ படம் நிச்சயம் இந்திய சினிமாவின் பெருமையாக இருக்கும். புதிய உலகம் ஒன்றை உருவாக்குவதில் சிவா மிகப்பெரிய வெற்றியை இந்தப் படத்தில் பெற்றுள்ளார். அவரது இன்னொரு முகத்தை பார்த்தேன். சூர்யா சார் தனது நடிப்பின் உச்சத்தை இந்தப் படத்தில் கொடுத்துள்ளார். காலத்திற்கு ஏற்ப புதிய மனிதனாக இந்தப் படத்தில் தன்னை மாற்றியுள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இசையில் படம் நெருப்பாக வந்திருக்கிறது. தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். படம் மிகப்பெரிய வெற்றியடையும்” என்றார்

.

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ’அமரன்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸாகிறது.

சிவகார்த்திகேயனின் 22-வது திரைப்படமான இதில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் சென்னையைச் சேர்ந்த மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (அக்டோபர் 18ஆம் தேதி) சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார்.

Sunday, October 27, 2024

அரபுச் சொல்லான ஹபீபிக்கு தமிழில் 'என்அன்பே' என்று அர்த்தம். இதன் firstlook poster நேற்று வெளியாகி சமூகவளைத்தளங்களில் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது.

அவள் பெயர் தமிழரசி ,விழித்திரு ஆகிய படங்களின் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்த இயக்குநர் மீராகதிரவன் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும்  படம் ஹபீபி.அரபுச் சொல்லான ஹபீபிக்கு  தமிழில் 'என்அன்பே' என்று அர்த்தம். இதன் firstlook poster நேற்று வெளியாகி சமூகவளைத்தளங்களில் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது.

படம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் கூறும்போது, “இப்படி ஒரு படம் பண்ண வேண்டும் என்பதற்காகத்தான் நான் சினிமாவிற்கு வந்தேன். இருபத்திரண்டுகளுக்கு பிறகு சாத்தியமாகியிருக்கிறது.   நமது ஆரவாரமான பேச்சுக்களை ஓதுக்கிவைத்துவிட்டு சகமனிதனின் தோளில் கைகளை போட்டவாறு மனங்களைப்பற்றி பேசவேண்டிய நேரமிது.   மனிதத்தையும் அன்பையும் சக மனிதன் மீதான சகிப்புத்தன்மையையும் பேசவேண்டிய தேவையுள்ளது. 

இந்த படம் தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கும் தமிழ் பேசக்கூடிய இஸ்லாமியர்களின் வாழ்வியலை பற்றிய படமாக இருந்தாலும் எல்லா மக்களையும் ஈர்க்கக்கூடிய படமாக இருக்கும். இதன் பின்னணியில் ஒரு அழகான காதல் கதை ஒன்றும் பின்னப்பட்டுள்ளது. 
இப்படத்தை காணும் அனைவரும் தங்கள் வாழ்கையோடு  தொடர்புபடுத்தி பார்த்து தங்களையே பார்த்துக்கொள்ளக்கூடியதாக  இருக்கும்.   அந்தவகையில் சர்வதேச அளவில் வியாபார ரீதியாகவும்  இந்த படம் சென்று சேரும் என்பதால் இந்த படத்திற்கு ஹபீபி என டைட்டில் வைத்துள்ளோம்

பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் கஸ்தூரிராஜா இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக அறிமுகமாகும் முதல் படம் இது என்றே சொல்லலாம். அவரது திரையுலக பயணத்திலும் இது ஒரு முக்கிய படமாக இருக்கும். இந்த படத்திற்காக கஸ்தூரிராஜாவை அணுகியபோது நான் முதலில் திரைக்கதையை படித்துப் பார்க்கிறேன் என்று கூறினார். இந்த கதை அவருக்கு பிடித்து போய் விட்டதுடன் இதில் தனது பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறி இதில் நடிக்க ஒப்புக்கொண்டார். 
அறிமுக நாயகன் ஈஷா நடிக்க ஜோ என்கிற படத்தின் மூலம் இளைஞர்களிடேயே பெரிதும் கொண்டாடப்பட்ட மாளவிகா மனோஜ் நாயகியாக நடிக்கிறார்.

 இப்படத்தை
மாநாடு, வணங்கான் படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை பார்த்துவிட்டு அவரே விருப்பப்பட்டு தனது வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில் வெளியிட இருக்கிறார்” என்று கூறினார்.

தொழில்நுட்ப குழுவினர் விவரம்*

இயக்கம் ; மீரா கதிரவன்

இசை ; சாம் சி.எஸ்.

ஒளிப்பதிவு ; மகேஷ் முத்துசுவாமி
படத்தொகுப்பு ; ராஜா முகமது

கலை ; அப்புன்னி சாஜன் 

மக்கள் தொடர்பு ; A.ஜான்

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். 

திரு M.செண்பகமூர்த்தி அவர்கள் தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளை பெற்றார்

பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் இயக்குனர் திரு மாரி செல்வராஜ், நடிகர்கள் திரு ஆர்யா, திரு சூரி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு R.அர்ஜுன் துரை, Head of Lyca Productions திரு GKM தமிழ் குமரன், தயாரிப்பாளர் Romeo Pictures திரு.ராகுல், Dawn Pictures திரு ஆகாஷ் பாஸ்கரன், இயக்குனர் நடிகர் திரு சந்தோஷ் P ஜெயகுமார், நடிகை பிரியாலயா, தயாரிப்பாளர் திரு தாய் சரவணன், Shakthi Film Factory திரு B.சக்திவேலன், தயாரிப்பாளர் திரு கமல் நயன், தயாரிப்பாளர் திரு குமார், தயாரிப்பாளர் திரு K.V.துரை, விநியோகஸ்தர்கள் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சசிகுமாரின் 'நந்தன்' படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

*சசிகுமாரின் 'நந்தன்' படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!*

நடிகர் எம். சசிகுமார் நடிப்பில், இயக்குநர் இரா. சரவணன் எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் 'நந்தன்'. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னும், வெளியான பின்னும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும்... 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகார பகிர்வு குறித்த யதார்த்த நிலையை நந்தன் துணிச்சலுடனும் எடுத்துரைத்திருக்கிறார்' என பாராட்டினர். விமர்சகர்களும் 'நந்தன்' திரைப்படத்தை கொண்டாடினர். ரசிகர்கள் - விமர்சகர்கள்- திரையுலகினர் - திரையுலக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற 'நந்தன்' திரைப்படம் , அண்மையில் டிஜிட்டல் தளத்தில் வெளியானது. 

'நந்தன்' திரைப்படத்தை டிஜிட்டல் தளத்தில் பார்வையிட்ட பல முன்னணி  பிரமுகர்களும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர். இதன் உச்சமாக தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை டிஜிட்டல் தளத்தில் பார்வையிட்டு தன்னுடைய பாராட்டை தெரிவித்திருக்கிறார்.‌ 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தை பார்வையிட்டவுடன் நடிகர் சசிகுமார் - இயக்குநர் இரா . சரவணன் - விநியோகஸ்தர் ட்ரைடன்ட் ரவி ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, 'நந்தன் மிகத் தரமான.. தைரியமான... படம்' என மனம் திறந்து பாராட்டினார். இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள். 'நந்தன்' திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களின் வரவேற்பை பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீருக்கு அடியில் உடற்பயிற்ச்சி! ரிலீசுக்கு தயாராகும் புதிய திரில்லர் திரைப்படம் “தென் சென்னை”

தண்ணீருக்கு அடியில் உடற்பயிற்ச்சி! ரிலீசுக்கு தயாராகும் புதிய திரில்லர் திரைப்படம் “தென் சென்னை”
 
தென் சென்னையை மையமாக கொண்ட விறுவிறுப்பான கதையம்சத்தில் புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் உருவாகிவரும் புதிய ஆக்ஷ்ன்-திரில்லர் திரைப்படம் “தென் சென்னை” இப்போது இறுதிக்கட்ட பணிகளை எட்டியுள்ளது..
சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன, இவற்றில் இருந்து மாறுபட்டு தென் சென்னை பகுதியினை வேறு கோணத்தில் காட்டும்,  புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் ரங்கா.
இதில்முன்னாள் ரானுவ அதிகாரியாக இருந்து நடிகரான நிதின் மெஹ்தாவும், ‘பொன்னியின் செல்வன்’ நாடக புகழ் இளங்கோ குமனனும் பிறதான பாத்திரங்கள் ஏற்றுள்ளனர். மேலும் வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி மற்றும் பலர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் ரங்கா இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என பல முயர்ச்சிகளில் இறங்கியுள்ளார்.
“டாடா” திரைப்படத்தில் அறிமுகமாகி புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜென் மார்டின், இந்த படதிற்க்கு பின்னனி இசை அமைத்துள்ளார்.
சென்னையிலும், பெங்களூரூவிலும் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படதிற்க்கு ஒளிப்பதிவாளராக சரத்குமார், படத்தொகுப்பாளராக இளங்கோவன் கைகோர்த்துள்ளனர்.  
இப்படதின் போஸ்டர் லுக்ஸ், பாடல் மற்றும் டீசர் ட்ரைலர் சமீபதில் இணையத்தில் வெளியிடப்பட்ட நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
சிவ பத்மயன் பாடல் இசையில், நரேஷ் ஐயர் குரலில் “புது வானம் புது பூமி” இனிமையான மெலடி பாடலாகவும் , குழுவினரின் வித்யாசமான முயற்ச்சியில் மிரட்டலான டீசரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதில் தண்ணீருக்கு அடியில் சிலர் உடற்பயிற்ச்சி செய்வது போன்ற காட்சிகள் வருகின்றன. இது கடற்படை கமாண்டோக்களின் பயிற்சி உத்திகளாகும், நீருக்கடியில் பயிற்ச்சி எடுப்பது போன்று காட்சிகள் தத்ரூபமாக படமாக்கிஉள்ளனர், இது ரசிகர்களை கவறும் வகையில் இருக்கும் என படகுழுவினர் நம்பிக்கை தெறிவிக்கின்றனர்.
இப்படத்தின் பெரும்பாலான பணிகள் நிரைவடைந்த நிலையில் படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
https://youtu.be/ckhFDFN9uYQ?si=P94AvS9fRvlJYvPQ
 
*தொழில்நுட்ப வல்லுநர்கrள்  விபரம்* 

இயக்குநர்:  ரங்கா
தயாரிப்பாளர்: ரங்கா ஃபிலிம் கம்பனி
பின்னணி இசை :  ஜென் மார்டின்
பாடல் இசை : சிவ பத்மயன் 
பாடல் : ரங்கா
பாடியவர் : நரேஷ் ஐயர்
ஒளிப்பதிவாளர்: சரத்குமார்
தொகுப்பாளர்:  இளங்கோவன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : மாரிமுத்து 
வண்ணம் - சிட்டகாங் 
மக்கள் தொடர்பு - ஹேமானந்த்

Saturday, October 26, 2024

‘Aindham Vendham’ - திரைவிமர்சனம்

வசீகரிக்கும் இந்தத் தொடரில், சாய் தன்ஷிகா தனது தாயின் இறுதிச் சடங்குகளுக்காக வாரணாசிக்குச் செல்லும் போது, ​​தன் தந்தையுடன் ஒரு இறுக்கமான உறவைத் தொடரும் சுதந்திர மனப்பான்மையுள்ள பெண்ணாக நடிக்கிறார்.

அங்கு, ஐந்தம் வேதம் பரம்பரையுடன் தனக்குள்ள தொடர்பையும், ஐயங்காரபுரத்தில் உள்ள ஒரு கோவில் பூசாரிக்கு மூதாதையர் பெட்டியை வழங்கும் அவசரப் பணியையும் வெளிப்படுத்தும் ஒரு குருவை அவள் சந்திக்கிறாள்.

முதலில் தயக்கம் காட்டினாலும், இறுதியில் பல சவால்களை எதிர்கொண்டு, ஆழமான மர்மங்களை அவிழ்த்துவிட்டு, இறுதியில் இந்தப் பணியைத் தொடங்குகிறாள்.

இயக்குனர் முஜீப் டி முகமது புராணக் கருப்பொருள்களை ஒரு அழுத்தமான மர்மத்துடன் சமன்படுத்துகிறார்.

செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப விவரங்களில் உன்னிப்பாக கவனம் செலுத்துவது ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துகிறது.

இந்தத் தொடர் புராணங்களை நவீன த்ரில்லர் அதிர்வுடன் திறம்பட ஒன்றிணைக்கிறது, பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு புதிரான கதையை உருவாக்குகிறது.

சாய் தன்ஷிகா கமாண்டிங் ஸ்கிரீன் பிரசன்ஸுடன் ஜொலிக்கிறார், அதே சமயம் சந்தோஷ் பிரதாப் நுட்பமான ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தும் நடிப்பை வழங்குகிறார்.

விவேக் ராஜ்கோபால் தனது பாத்திரத்தை ஆழமாகக் கொண்டு வருகிறார், மேலும் Y. G. மகேந்திரா, பொன்வண்ணன், கிரிஷா குருப் மற்றும் தேவதர்ஷினி உள்ளிட்ட துணை நடிகர்கள் குறிப்பிடத்தக்க உணர்ச்சிகரமான அதிர்வுகளைச் சேர்க்கிறார்கள்.

மேத்யூ வர்கீஸ் மற்றும் ராம்ஜி ஆகியோரும் தங்கள் வலுவான சித்தரிப்புகளுடன் தனித்து நிற்கிறார்கள்.

தொழில்நுட்ப பக்கத்தில், தொடர் ஈர்க்கிறது. சீனிவாசன் தேவராஜனின் ஒளிப்பதிவு பழங்கால கோவில்களையும், ஆட்கொள்ளும் நிலப்பரப்புகளையும் அழகாக படம்பிடித்துள்ளது.

ரேவாவின் இசை சூழலை மேம்படுத்துகிறது, அதே சமயம் ரெஜீஷ் எம்ஆரின் எடிட்டிங் கதை ஓட்டத்தை கூர்மைப்படுத்துகிறது. ஒட்டுமொத்தமாக, தொழில்நுட்ப செயலாக்கம் பாராட்டுக்குரியது.

Friday, October 25, 2024

அதிரடி ஆஃபரை ( தள்ளுபடியை) அறிவித்திருக்கும் பிரைம் வீடியோ

*அதிரடி ஆஃபரை ( தள்ளுபடியை) அறிவித்திருக்கும் பிரைம் வீடியோ*

*'கடைசி உலகப் போர் -ஸ்வாக் - லைக் எ டிராகன்: யாகுசா ஆகிய மூன்று படைப்புகளையும் பிரைம் வீடியோவில் ஆஃபருடன் காணத்தவறாதீர்கள்*

இந்த வார இறுதியில் பிரைம் வீடியோவின் சமீபத்திய ஆஃபர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!. பரபரப்பான டிஸ்டோபியன் தமிழ் ஆக்சன் திரில்லர் திரைப்படமான 'கடைசி உலகப் போர் ' - தெலுங்கு மொழியில் வெளியான நகைச்சுவை நாடகமான 'ஸ்வாக்' மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜப்பானிய மொழியில் வெளியான கிரைம் ஆக்சன் தொடரான 'லைக் எ டிராகன்: யாகுசா'. இந்த மூன்று புதிய வெளியீடுகளை தவற விடாதீர்கள்! 

கடைசி உலகப் போர் : 2028 ஆம் ஆண்டில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்ட ஒரு டிஸ்டோபியன் அறிவியல் புனைவு கதை மற்றும் தமிழ் அதிரடி திரில்லர் திரைப்படமாகும். கதை- அரசியல் மோதல், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் டிஸ்டோபியன் எதிர்காலத்தில் சுதந்திரத்திற்கான போராட்டம் ஆகியவற்றை கருப்பொருளாக ஆராய்கிறது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கத்தில் அனகா எல். கே., நாசர், நடராஜன் சுப்பிரமணியம், அழகம்பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த அதிரடியான ஆக்சன் திரில்லர் திரைப்படம் தற்போது இந்தியாவில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

தெலுங்கு நகைச்சுவை நாடகமான 'ஸ்வாக்' - இந்த திரைப்படத்தில் மனமுடைந்த போலீஸ் அதிகாரியான எஸ்ஐ பவபூதி - தான் ஒரு செல்வந்தரின் வாரிசாக இருப்பதை கண்டுபிடித்து, குழப்பமான பரம்பரை போருக்கு செல்ல வேண்டும். நகைச்சுவை மற்றும் சூழ்ச்சிகளுக்கு இடையில் அவர் எதிர்பாராத வகையில் நட்பை உருவாக்கிக் கொண்டு, இழந்த உரிமையை மீட்பதற்கான வாய்ப்பு உள்ளதை கண்டறிகிறார். பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கும் இந்த தெலுங்கு நகைச்சுவை நாடகம் தற்போது பிரைம் வீடியோவின் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

'லைக் எ டிராகன்: யாகுசா' எனும் திரைப்படம் 1995 மற்றும் 2005 ஆம் ஆண்டு என இரண்டு காலகட்டங்களில் பின்னணியில் உருவானது. இது ஒரு அசல் கிரைம் சஸ்பென்ஸ் ஆக்சன் தொடராகும். பயமுறுத்தும் வகையிலும், ஒப்பற்ற நிலையிலும்.. யாகுசா போர் வீரரான கசுமா கிரியுவின் வாழ்க்கையையும், அவரது குழந்தை பருவ நண்பர்கள் மற்றும் அவர் எடுக்கும் முடிவுகளின் விளைவுகள் ஆகியவற்றையும் விவரிக்கிறது. நீதி- கடமை- மனிதாபிமானத்தின் வலுவான உணர்வு - ஆகியவற்றை கொண்டிருக்கும் ஜப்பானிய ஒரிஜினல் தொடரான  இந்தத் தொடர் தற்போது பிரைம் வீடியோவில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி டப்பிங்குடன் ஜப்பானிய மொழியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

மும்பை /அக்டோபர் 24 : பிரைம் வீடியோ இந்த வாரம் பார்வையாளர்களுக்கு பலதரப்பட்ட கன்டென்டுகளை கொண்டு வருகிறது. 

கடைசி உலக போர்: 'தி லாஸ்ட் வேர்ல்டு வார் ' என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சீனா, ரஷ்யா மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகள் உட்பட 72 நாடுகளால் உருவாக்கப்பட்ட குடியரசு எனும் புதிய சர்வதேச அமைப்பை சுற்றி இப்படத்தின் கதை அமைந்திருக்கிறது. இது உலகில் மிகப்பெரிய அரசியல் எழுச்சிக்கும் வழி வகுக்கிறது. இந்தியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த அனாதையான தமிழரசன்- முதலமைச்சரின் மகள் கீர்த்தனாவை காதலிக்கிறார். கீர்த்தனா தனது அரசியல் பயணத்தில் செல்வதற்கு தமிழ் உதவுவதால்... குடியரசு மற்றும் உள்நாட்டு அரசியல் சதிகளால் அவர்கள் பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். இந்த பரிசோதனை ரீதியிலான திரைப்படம் ..ஆக்சன் -நாடகம் -காதல்- ஆகியவற்றை ஒருங்கிணைத்து, உள்ளூர் கண்ணோட்டத்தில் உலகளாவிய நெருக்கடியை பற்றி தனித்துவமான பார்வையை வழங்குகிறது. அனகா எல். கே., நாசர், நடராஜன் சுப்பிரமணியம், அழகம்பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் தமிழரசன் எனும் முக்கிய வேடத்தில் நடித்து ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் தற்போது பிரைம் வீடியோவில் இந்தியாவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

தெலுங்கு நகைச்சுவை நாடகமான ஸ்வாக் :  எஸ் ஐ பவபூதி எனும் போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையை மையப்படுத்தி, இப்படம் உருவாகி இருக்கிறது. அவரது தனிப்பட்ட வாழ்க்கை... மனைவியை பிரிந்த பிறகு அவரது வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. ஆறுதலுக்காகவும் மற்றும் ஒரு புதிய தொடக்கத்தை தேடி.. ஷ்வாகனிக் வம்சத்தின் வழித்தோன்றலான இவர் குடும்பத்தின் செல்வத்திற்கு உரிமை கோருவதற்காக அதாவது அவருக்கு உரிமை உண்டு என்பதை தெரிவிக்கும் வகையிலான கடிதத்தை பெறுகிறார். பவபூதி தனது சூழ்நிலையின் சிக்கல்களை வழிநடத்தும் மற்றும் விசித்திரமான நபர்கள் அடங்கிய குழுவை சந்திப்பதால்.. திரைப்படம் ஒரு பரபரப்பான நகைச்சுவை படைப்பாக விரிவடைகிறது. தன்னை பற்றி அறிந்து கொள்ளுதல், நட்பு மற்றும் செல்வத்தின் மீட்பு உள்ளிட்ட விசயங்களை  இப்படம் ஆராய்கிறது. இது நகைச்சுவை மற்றும் சஸ்பென்ஸின் தனித்துவமான கலவையை கொண்டிருக்கிறது. ஹாசித் கோலி எழுதி இயக்கியுள்ள இந்த நகைச்சுவை திரைப்படத்தில் ஸ்ரீ விஷ்ணு, ரிது வர்மா, சுனில், மீரா ஜாஸ்மின், தக்க்ஷா நகர்கர், ரவி பாபு ,கெட் அப் சீனு, கோபராஜு ரமணா, சரண்யா பிரதீப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் . இந்த நகைச்சுவை நாடகம் தற்போது பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

'லைக் எ டிராகன் : யாகுசா'  எனும் திரைப்படம் சாகா ( SEGA )வின் உலகளாவிய ஹிட்டடித்த கேம். இந்த விளையாட்டினை தழுவி லைவ் ஆக்சன் திரைப்படமாக உருவான திரைப்படம் இது.. மேலும் 2005 ஆம் ஆண்டில் சாகா( SEGA) வால் வெளியிடப்பட்டது.  யாகுசா கேம் தொடர் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு விளையாட்டாக உலகம் முழுவதும் கருதப்பட்டது. இது அதன் இலக்கு பார்வையாளர்களிடையே பெரும் ஆரவாரத்தையும் ஏற்படுத்தியது. இந்தத் தொடர் தீவிரமானதாகவும், உணர்ச்சிவசப்பட்டதாகவும் உள்ள கேங்ஸ்டர்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறது. இது ஒரு பெரிய  பொழுதுபோக்கு மாவட்டத்தில் வாழும் கமுரோச்சா - வன்முறை ஷின்ஜுகு வார்டின் சுபகிச்சோவின் மாதிரியாக வடிவமைக்கப்பட்ட ஒரு கற்பனையான மாவட்டமாகும்.. லைக் எ டிராகன்: யாகுசா எனும் இந்தத் திரைப்படம் விளையாட்டினை மையப்படுத்தியது. நவீன ஜப்பானையும், கடந்த கால விளையாட்டுகளால் ஆராய முடியாத பழம் பெரும் கசுமா கிரியு போன்ற தீவிரமான கதாபாத்திரங்களின் நாடகத் தன்மையை கதைகளாக காட்சி படுத்துகிறது.  Kengo Takimoto & Masaharu Take ஆகிய இயக்குநர்கள் இணைந்து இயக்கிய இந்தத் தொடரில், Ryoma, Takeuch, Kento, Kaku, Munetaka, Aoki, Toshiaki , Karasawa ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜப்பான் மொழியில் உருவான ஒரிஜினல் கிரைம் ஆக்சன் தொடரான இந்த திரைப்படம் தற்போது பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

சிறப்பம்சங்கள்: 

கடைசி உலகப் போர்: அக்டோபர் 24

டிஸ்டோபியன் எதிர்காலத்தில் சர்வதேச சக்திகளின் வர்த்தக முற்றுகை காரணமாக இந்தியாவில் அரசியல் மோதல்கள் எழுகின்றன. இதன் விளைவாக உள்நாட்டு அமைதியின்மை ஏற்படுகிறது. 

ஸ்வாக்: அக்டோபர் 25

போலீஸ் அதிகாரி பவபூதி தனது மனைவிக்கு குழந்தைகளை பெறுவதை தடுத்து பிரிவினையை ஏற்படுத்துகிறார். மன சோர்வடைந்த அவர்.. ஒரு பரம்பரையை பற்றி அறிந்து கொள்கிறார். அவர் அந்த பரம்பரைக்கான உரிமையைக் கோர செல்கிறார். ஆனால் அங்கு வாரிசு என கூறப்படும் பிற வாரிசுகளையும் காண்கிறார். 

லைக் எ டிராகன் : யாகுசா அக்டோபர் 25

1995 மற்றும் 2005இல் காலகட்டத்தின் பின்னணியில் இவை உருவாக்கப்பட்டிருக்கிறது. யாகுசா போர் வீரனின் வாழ்க்கை, அவரது குழந்தை பருவ உறவுகள் மற்றும் அவரது சமரசமற்ற நீதி, கடமையின் விளைவுகள்.. ஆகியவற்றை விவரிக்கிறது.

ஹாரர் இஸ் த நியூ ஹ்யூமர் : இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் பிரபாஸின் முதல் ஹாரர்-காமெடி “தி ராஜா சாப்” படத்தின், முதல் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது!

*ஹாரர் இஸ் த நியூ ஹ்யூமர் : இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் பிரபாஸின் முதல் ஹாரர்-காமெடி “தி ராஜா சாப்” படத்தின், முதல்  மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது!!*

*பிரபாஸின் பிறந்தநாளில் 'தி ராஜா சாப்' மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது !!*

ஹாரர் காமெடி ஜானரில் கலக்கும் பிரபாஸ்,  'தி ராஜா சாப்' மோஷன் போஸ்டர் வெளியானது !! 

மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் பான்-இந்தியா திரைப்படமான ‘தி ராஜா சாப்’ படத்தின் மீதான உற்சாகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது, தயாரிப்பாளர்கள் படத்தின் முன்னணி சூப்பர்ஸ்டாரான பிரபாஸின் பிறந்தநாளில்,  அவர் இடம்பெறும் அசத்தலான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.  ரசிகர்களுக்கு விருந்தாக பகிரப்பட்ட இந்த மோஷன் போஸ்டர், தற்போது இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது. முதல் முறையாக ஹாரர் காமெடி ஜானரில் பிரபாஸ் களமிறங்குகிறார். இது படத்தின் மீதான ஆவலை உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. 

2 நிமிட மோஷன் போஸ்டர் காட்டின் நடுவில் பியானோவில் ஒலிக்கும் "ஹேப்பி பர்த்டே" ட்யூனுடன் துவங்குகிறது. பின்னர், ஒரு மர்ம உருவம் காடுகளில் சுற்றித் திரிவதைப் பிந்தொடர்ந்து, பார்வையாளர்களை விண்டேஜ் அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறது, அங்கு இறுதியாக பிரபாஸின் பிரமாண்ட தோற்றம் காண்பிக்கபடுகிறது. பழங்கால அரண்மனையின் பிரமாண்ட பின்னணியில், கறுப்பு உடையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பிரபாஸை வெளிப்படுத்தும் இந்த போஸ்டர், சூப்பர் ஸ்டாரின் கவர்ச்சியை மிகச்சரியாகப் படம்பிடிக்கிறது. ராஜாவாக உடையணிந்து, சுருட்டுப் பிடித்தபடி, பிரபாஸ் ஒரு சக்திவாய்ந்த, ஏக்கம் நிறைந்த அதிர்வை வெளிப்படுத்துகிறார், இது ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த போஸ்டரில் "ஹாரர் இஸ் தி நியூ ஹ்யூமர்" என்ற டேக்லைனும், அதைத் தொடர்ந்து "ஹேப்பி பர்த்டே, ரெபெல் சாப்" என்பதும் இடம்பெற்றுள்ளது.

பிரபாஸ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் போஸ்டரைப் பகிர்ந்து…, "இது திரில்லுடன் ஜில் செய்யும்  நேரம் இது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏப்ரல் 10, 2025 அன்று திரையரங்குகளில் சந்திப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டரில் பிரபாஸ் ரசிகர்கள் இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டார்கள். #RajaSaabBirthdayCelebrations என்ற ஹேஷ்டேக் உலகளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது, ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வழியே, பிரபாஸ் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

தொடர்ந்து ஆக்‌ஷன் நிரம்பிய பாத்திரங்களில் மாஸாக வலம் வந்த  பிரபாஸ், முதல் முறையாக ஹாரர் -காமெடி ஜானரில், தி ராஜா சாப் மூலம் புதிய பரிமாணத்தில் தோன்றவுள்ளார்.  இந்த புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்தை, ரசிகர்கள் பரபரப்பாக பகிர்ந்து வருகிறார்கள், இந்த போஸ்டர் அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு சரியான கிக்ஆஃப் ஆகும்.

இப்படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை இயக்குநர் மாருதி இயக்க, பீப்பிள் மீடியா ஃபேக்டரி பேனரின் கீழ் விஸ்வ பிரசாத் தயாரிக்கிறார், தமன் எஸ் இசையமைக்கிறார். இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ஏப்ரல் 10, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

https://youtu.be/ihO4EGhUS_4

ஜே.கே. தமிழ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜே. ஜே எனும் ஜெயச்சந்திரன் இந்த வெப் தொடரை பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

 நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக  உருவாகும் வெப் தொடர் " வர்ண கதைகள் "  ஓவிய கலையையும், ஓவிய கலைஞர்களையும் மையமாக வைத்து உருவாக...