Saturday, July 23, 2022

பொய்க்கால் குதிரை’ படத்தை இயல்பாக இயக்கியிருக்கிறேன் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார்*

*‘பொய்க்கால் குதிரை’ படத்தை இயல்பாக இயக்கியிருக்கிறேன் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார்*

*பொய்க்கால் குதிரை’ அனைவருக்கும் பிடிக்கும் பிரபுதேவா உற்சாகம்*

*வேகமாக செயல்படும் தயாரிப்பாளர்கள் தமிழ் திரையுலகிற்கு தேவை பிரபுதேவா கோரிக்கை*

*நான் யாரையும் மதிப்பீடு செய்வதில்லை*

பிரபுதேவா

‘‘ஹர ஹர மகாதேவகி’ இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற அடல்ட் படங்களிலிருந்து விலகி, இயல்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் தான் பொய்க்கால் குதிரை” என படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’. ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில், அவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர்கள் ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம், இசை மற்றும் ‘பொய்கால் குதிரை’ படம் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் விழா, பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா, இசையமைப்பாளர் டி இமான், பாடலாசிரியர் மதன் கார்க்கி, ஒளிப்பதிவாளர் பள்ளூ, வசனகர்த்தா மகேஷ், நடிகை வரலட்சுமி சரத்குமார், தயாரிப்பாளர் வினோத் குமார் மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் வினோத்குமார் பேசுகையில், '' இயக்குநர் சந்தோஷ்  இயக்கியிருக்கும் ‘பொய்க்கால் குதிரை’ ஒரு திரில்லர் திரைப்படம். சந்தோஷ் குமார் என்னை சந்தித்து பிரபுதேவாவிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கியிருக்கிறேன் என்று சொன்னவுடன், எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் நான் சிறுவயதிலிருந்தே பிரபுதேவாவின் ரசிகன். அவர் நடிப்பில் வெளியான ‘முக்காலா முக்காபுலா..’ என்ற பாடலை என்னுடைய சொந்த ஊரில் வருடம் முழுவதும் ஒலிக்க வைத்திருக்கிறேன். என்னுடைய நண்பர் வட்டாரத்தில் அனைவரிடமும்,‘ பிரபுதேவா அனைவரும் ரசிப்பது போல் ஒரு நடன கலைஞர் மட்டுமல்ல, அவர் ஒரு தேர்ந்த நடிகரும் கூட. அதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது அவர் தன் திறமையை நிரூபிப்பார்’ என சொல்வேன். அது இந்த படத்தில் நடைபெற்றிருக்கிறது.  ஒற்றைக் காலுடன் அற்புதமான வேடத்தில் நடித்திருக்கிறேன். படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசுகையில், '' நடிகர் ஆர்யாவின் பரிந்துரையில் தான் இயக்குநரை சந்தித்து, படத்தின் கதையைக் கேட்டு, நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன். நடிகர் ஆர்யா தான் இப்படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பை மேற்கொண்டார். மேலும் இந்த படத்தில் நான் ஒப்புக்கொண்டதற்கு என்னுடைய நடன குரு ‘இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்’ பிரபுதேவா தான் முக்கிய காரணம். பொதுவாக நான் நடித்த படத்தை உடனடியாக திரையரங்கு சென்று  பார்ப்பதில்லை. ஆனால் இந்த படத்தின் திரைக்கதை வித்தியாசமாக இருக்கிறது என்பதால், படத்தை உடனடியாக பார்க்க வேண்டும் என்று ஆவல் இருக்கிறது. ரசிகர்கள் எதிர்பார்த்தவை எல்லாம் இல்லாமல், புதிய பாதையில் இப்படத்தின் திரைக்கதை அமைந்திருக்கிறது. பிரபுதேவா உடன் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது.'' என்றார்.

இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் பேசுகையில், ''  இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்திற்கு பிறகு கஜினிகாந்த் என்ற படத்தை இயக்கினேன். ‘யூ’ சர்டிபிகேட் படமான அந்த படம் ஒரு ரீமேக் படம் என்பதால், எனக்கான அடையாளம் கிடைக்கவில்லை. அதன் பிறகு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக எனக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. என்னுடைய சூழல் என்னை திசை மாறி பயணிக்க வைத்து விட்டது. அதே தருணத்தில் நீண்ட காலமாக திரில்லர் ஜானரில் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இது போன்ற வித்தியாசமான ஜானரில் படத்தை இயக்குவதற்காகத் தான் திரையுலகில் அறிமுகமானேன். இனிமேல் இயல்பான கதைகளை மட்டுமே படமாக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.

கஜினிகாந்த் படத்தில் எனக்கு கிடைத்த ஒரு திரையுலக வழிகாட்டி.. நண்பர் ஆர்யா. முன்பெல்லாம் தொடர்புகளுக்காக ‘யெல்லோ பேஜஸ்’ என்ற ஒரு பத்திரிக்கையை வைத்திருப்போம். என்னுடைய யெல்லா பேஜஸ் ஆர்யா தான். தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரது முகவரியும் தொடர்பு எண்ணும் அவருடைய டைரியில் இருக்கும். பிரபுதேவாவிடம் கதை சொல்ல வேண்டும் என்றவுடன், ஆர்யா, இயக்குநர் ஏ. எல். விஜய்யை தொடர்பு கொண்டு பேசினார். அதன் பிறகு ஏ எல் விஜய் மூலமாக பிரபுதேவாவை சந்தித்து, கதையை விவரித்தேன். கதையைக் கேட்டவுடன், ‘பிடித்திருக்கிறது. இணைந்து பணியாற்றுவோம்’ என்றார்.

நிறைய தயாரிப்பாளர்கள் சந்தோஷ், அடல்ட் படத்தை தான் இயக்குவார் என்று என் மீது முத்திரை குத்தினார்கள். இந்த தருணத்தில் தான், ‘பிரபுதேவாவை வைத்து பொய்க்கால் குதிரை என்ற திரில்லர் ஜானரில் படத்தை இயக்குகிறேன்’ என்று வினோத்குமாரை தொடர்பு கொண்ட போது, அவர் எந்த மறுப்பும் சொல்லாமல் உடனடியாக படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார். படத்தை இயக்குவதற்கு முழு சுதந்திரமும் அளித்தார். 

இமான் அவர்களிடம் வேறு ஒரு படத்திற்காக சென்று பேச்சுவார்த்தை நடத்தினோம். அது நடைபெறவில்லை. அதன் பிறகு இந்த படத்தில் பணியாற்ற ஒப்புக் கொண்டார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி, அவருடன் இணைந்து பணியாற்றுவது அற்புதமான அனுபவம். பாடல் எந்த சூழலில் இடம் பெறுகிறது என்பதனை ஒரு குறிப்பாக சொன்னால் போதும். அவர் அதனை உணர்ந்து. ஏராளமான வார்த்தைகளையும், வாக்கியங்களையும் அமைத்து, கவிதைகளாக்கிக் கொடுப்பார். அதிலிருந்து நாம் தேர்வு செய்வதுதான் கஷ்டமாக இருக்கும்.

‘பொய்க்கால் குதிரை’ படத்தை பற்றி நான் பேசுவதை விட, படம் நிறைய பேசும். நான் வித்தியாசமாக முயற்சி செய்திருக்கிறேன் என்று சொல்லவில்லை இயல்பாக படமெடுத்திருக்கிறேன். படம் அனைத்து தரப்பினருக்கும் நிச்சயமாக பிடிக்கும்.'' என்றார்.

நடிகர் பிரபுதேவா பேசுகையில், '' இந்தப் படத்தில் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கும் சதீஷ், 'ஜூன் போனால் ஜூலை..' எனும் பாடலில் எனது சகோதரருடன் ஆடி இருப்பார். அப்போதே அவருடைய உற்சாகமான நடனத்தை கண்டு ரசித்தேன். இந்தப் படத்தில் ஒற்றைக்காலுடன் நடனமாட வேண்டியதிருந்தது. சதீஷ் இதனை நன்றாக வடிவமைத்திருந்தார். அவருடைய உதவியாளர்கள் நன்கு பயிற்சி எடுத்து, என்னை விட நன்றாக ஆடினார்கள். நாங்கள் ஏழு மாதத்திற்கு ஒரு முறை பாடல் காட்சியில் வரும்போது நடனமாடுகிறோம். மிகவும் கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து நடனமாடியிருக்கிறேன். நடன இயக்குநரின் கனவை ஓரளவு நிறைவேற்றி இருக்கிறேன் என நம்புகிறேன்.

பாடலாசிரியர் மதன் கார்க்கியுடன் ஏற்கனவே ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றிருக்கிறோம். இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் அவரே எழுதியிருக்கிறார். அதிலும் குறிப்பாக ‘சிங்கிள்..’ என்ற பாடலில் 'கால் போனால் கல் கடுக்கும்...'என்றொரு வரி இடம்பெற்றிருந்தது. அதற்கான அர்த்தத்தை கேட்டு வியந்தேன்.

சில காட்சிகளை படப்பிடிப்பு தளத்தில் பார்வையிடுவோம். சில காட்சிகளை பின்னணி பேசும்போது பார்வையிடுவோம். இந்தப் படத்தின் பின்னணி இசைக்குப் பிறகு, படத்தைப் பார்க்கும் போது நான் நன்றாக நடித்திருப்பதாக உணர்ந்தேன். இதற்கு காரணம் இசையமைப்பாளர் டி இமானின் பின்னணி இசை தான். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டி இமான் இசையமைப்பாளர் என்ற எல்லையை கடந்து, ‘மை டியர் பூதம்’ என்ற படத்தில் இரண்டு புதிய இசைக்கலைஞர்களை பின்னணி பாடகர்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவருடைய மனிதநேயத்தை அறிந்து வாழ்த்துகிறேன்.

படத்தில் ஒற்றைக்காலுடன் சண்டைக் காட்சிகளில் நடித்த போது எந்த சிரமமும் இல்லை . சண்டை பயிற்சி இயக்குநர் தினேஷ் காசி, ஒவ்வொரு காட்சியையும் எளிதாகவும், விரைவாகவும், நேர்த்தியாகவும் படமாக்கினார். அவருடைய தந்தையுடன் உதவியாளராக பணியாற்றிய அவருக்கு அனுபவம் கை கொடுத்தது.

சில படங்களில் பாடல் காட்சிகள் சிறப்பாக இருக்கும். சில படங்களில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருக்கும். சில படங்களில் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கும். ஆனால் பொய்க்கால் குதிரை படத்தில் படத்தொகுப்பு சிறப்பாக இருக்கும். ஏனெனில் நான் கதையை கேட்கும்போதே, ‘இந்த கதை ரசிகர்களுக்கு புரியுமா?’ என்று தான் இயக்குநரிடம் கேட்டேன். ஆனால் படம் பார்த்த பிறகு படத்தொகுப்பாளர் மற்றும் இயக்குநர் இணைந்து மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் படத்தொகுப்பு பாணி வித்தியாசமாக இருக்கும். இதற்காக படத்தொகுப்பாளர் ப்ரீத்திக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

நடிகை வரலட்சுமி அழகான பெண் மட்டுமல்ல. திறமையான நடிகையும் கூட. சிலர் திரையில் நடிக்கும் போது தான் அவரது திறமை வெளிபடும். ஆனால் நடிகை வரலட்சுமி திரையில் தோன்றினால் போதும். ரசிகர்களை கவர்ந்து விடுவார்.

தயாரிப்பாளர் வினோத்குமார், தீவிரமான செயல்பாடு உடையவர். இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி எப்படி உத்வேகத்துடன் செயல்படுவாரோ.. அதேபோல் பட குழுவில் அவருடைய செயல்பாடு இருக்கும். இது போன்ற வேகமாகச் செயல்படும் தயாரிப்பாளர்கள் தற்போது தமிழ் திரையுலகிற்கு தேவை. அவர் சொல்வதை நிறைவேற்றுவார்.

இயக்குநர் சந்தோஷ் குமார் இதற்கு முன்னர் வேறு மாதிரியான படங்களை இயக்கியிருக்கிறார் என்று சொன்னார்கள். ஆனால் நான் யாரையும் மதிப்பீடு செய்வதில்லை. சந்தோஷ் என்னிடம் சொன்ன கதை பிடித்திருந்தது. சொன்ன விதமும் பிடித்திருந்தது. படப்பிடிப்பு தளத்தில் ஒரு இயக்குநருக்கு தேவையான ஆளுமை திறன் அவரிடம் இருந்தது. விரைவாகவும், திட்டமிட்ட படியும் படப்பிடிப்பை நடத்தினார். இதன் மூலம் அவர் தயாரிப்பாளர்களின் இயக்குநராக இருந்தார். என்னிடமிருந்து நல்லதொரு நடிப்பை வெளிக் கொணர்ந்தார். ‘பொய்க்கால் குதிரை’ நல்லதொரு திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. அனைவரும் திரையரங்குகளில் பார்த்து, ரசித்து, ஆதரவு தர வேண்டும்.'' என்றார்.

இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் தயாராகியிருக்கும் பொய்க்கால் குதிரை எனும் திரைப்படம் எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மஹா - திரை விமர்சனம்

ஹன்சிகா விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றியவர், கணவர் சிம்புவின் மறைவுக்குப் பிறகு மகள் மானஸ்வியுடன் வசித்து வருகிறார். ஒரு சைக்கோ கொலைகாரன் மானஸ்வியை கடத்தி கொலை செய்கிறான். இது போன்ற கடத்தல்களும் மரணங்களும் தொடர்ந்து நடக்கின்றன.


ஹன்சிகா தொடர் கொலையாளியை எடுக்க முடிவு செய்து அவரை வேட்டையாடத் தொடங்குகிறார்.


ஹன்சிகாவால் அவரைக் கண்டுபிடிக்க முடிந்ததா என்பது கதையின் மீதியை உருவாக்குகிறது.


பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை மையமாக வைத்து த்ரில்லர் படமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் ஜமீல். பேப்பரில் கதை நன்றாக இருந்தாலும், எக்ஸிகியூஷன் சிறப்பாக இருந்திருக்கலாம்.


சிம்புவின் அந்தஸ்துள்ள நடிகரை கேமியோவாக நடிக்க வைத்தாலும், இயக்குனர் அவரை சரியாக பயன்படுத்தவில்லை.


சிம்பு ஒரு ஸ்டண்ட் காட்சிக்காகவும் சில காதல் காட்சிகளுக்காகவும் தோன்றுகிறார்.


துக்கத்தில் இருக்கும் அம்மாவாக ஹன்சிகா படம் முழுவதையும் தோளில் சுமக்க முயல்கிறார் ஆனால் எதிர்பார்த்தபடி அது வெளிவரவில்லை.


போலீஸ் வேடத்தில் ஸ்ரீகாந்த் போதுமானதாக இருந்தாலும், அவரது கதாபாத்திரத்திற்கு இன்னும் ஆழம் இருந்திருக்கலாம்.


மற்ற நடிகர்கள் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சுஜித் சங்கரின் தொடர் கொலையாளியாக நடித்திருப்பது பாராட்டத்தக்கது.


ஜிப்ரானின் பின்னணி மதிப்பெண் சராசரி.

 

ராஜ்யசபா எம்.பி. யாக பதவி ஏற்கும் இளையராஜாவுக்கு "நினைவெல்லாம் நீயடா" படக்குழுவினர் வாழ்த்து!!

ராஜ்யசபா எம்.பி. யாக பதவி ஏற்கும் இளையராஜாவுக்கு "நினைவெல்லாம் நீயடா" படக்குழுவினர் வாழ்த்து!!

இசைஞானி இளையராஜா பாராளுமன்ற ராஜ்யசபா எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் பதவி ஏற்க டெல்லி செல்கிறார்.
 இளையராஜாவுக்கு அவர் இசையமைப்பில் உருவாகி வரும் "நினைவெல்லாம் நீயடா" படக்குழு சார்பில் ஆளுயுர ரோஜா மாலை அணிவித்து  வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர் ராயல் பாபு, இயக்குநர் ஆதிராஜன் , நடிகர் பிரஜன்,  நடிகை சினாமிகா, ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜி, இனண இயக்குநர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இசைஞானிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

’பார்த்தா’ சந்தானத்துக்காக பார்க்காமலே வாங்கிய படம் ‘குலுகுலு’ உதயநிதி கலகல ’குலுகுலு’படத்தில் லோகேஷ் கனகராஜின் பங்கு இருக்கிறது’- இயக்குநர் ரத்னகுமார்


 ’பார்த்தா’ சந்தானத்துக்காக பார்க்காமலே வாங்கிய படம் ‘குலுகுலு’ உதயநிதி கலகல


’குலுகுலு’ தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான படம்”-சந்தோஷ் நாராயணன்



’குலுகுலு’படத்தில் லோகேஷ் கனகராஜின் பங்கு இருக்கிறது’- இயக்குநர் ரத்னகுமார்


சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிப்பில், ’மேயாத மான் ’படப்புகழ் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “குலுகுலு”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர்  மாறுபட்ட களத்தில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததோடு பெரும் வரவேற்பையும்  பெற்றுள்ளது.. வரும் ஜூலை 29 படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. 


இந்நிகழ்வினில்..


கலை இயக்குனர் ஜாக்கி கூறியதாவது..,

“இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் டிரீட்டாக இருக்கும். படத்தின் ஸ்கிர்ப்ட் மிக தெளிவாக இருந்தது. கலை இயக்கத்திற்கான அனைத்து விவரங்களும் திரைக்கதை புத்தகத்திலேயே இருந்தது. படத்தின் தரத்தை இசை மேம்படுத்தியுள்ளது. படம் உங்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும்”


இயக்குனர் ரவிகுமார் கூறியதாவது..,

“ரத்னகுமார் எடுக்கும் ஒவ்வொரு படமும், ஒவ்வொரு வகையாக இருக்கும். அவருடைய எழுத்து என்னை ஆச்சர்யப்படுத்தும். படத்தின் இசை சிறப்பாக உள்ளது. ஒரு குழுவாக இணைந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். கண்டிப்பாக இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். 



லைகா புரொடக்ஷன் தமிழ்க்குமரன் கூறியதாவது..,

“ சந்தானம் எங்களது திரைப்பயணத்தில் பெரிய உதவியாய் இருந்திருக்கிறார். இந்த படத்தை விநியோகம் செய்யவிருக்கும் ரெட்ஜெயண்ட்க்கு எனது வாழ்த்துகள்.  இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்


ஃபைவ் ஸ்டார் கதிரேசன் கூறியதாவது..,

படத்தின் இசை சிறப்பாக உள்ளது. பாடல்களும், டீசரும் மக்களை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. சந்தோஷ் நாராயணனனுக்கு எனது வாழ்த்துகள். இயக்குனருக்கும், நடிகர் சந்தானத்துக்கும் எனது வாழ்த்துகள். படம் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும். உதயநிதி சார் திரைத்துறைக்கு பலமாக இருக்கிறார். அவரது விநியோகத்தில் படம் கண்டிப்பாக வெற்றியடையும்.


இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியதாவது..,

“ நான் வேலைபார்த்த படங்களில்  இந்த படம் எனக்கு மிகவும் பிடித்தமான படம். இயக்குநரிடம் ஒரு புத்துணர்வான எழுத்து வடிவம் இருக்கிறது. என்னை இந்த படத்தில் சுதந்திரமாக வேலை பார்க்க அனுமதித்தார். ரத்னகுமாருக்கு தமிழ் சினிமாவில் பெரிய இடம் இருக்கிறது. இந்த படத்தை வெளியிட முடிவு செய்த உதயநிதி சாருக்கு நன்றி. சந்தானம் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படம் எனது இண்டிபெண்டண்ட்  ஆல்பமாக இருக்கும். இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான படமாக இருக்கும். “ 


இயக்குனர் ரத்னகுமார் கூறியதாவது..,

“ நான் படம் இயக்கி மூன்று வருடங்கள் கடந்து விட்டது. இந்த படம் நான் நினைத்தபடி உருவாக சந்தானம் சார் தான் காரணம். இந்த படத்தின் கதையை நம்பி அவர் உள்ளே வந்தார். அவருக்கு பலவிதமான லுக் டெஸ்ட்களை செய்தோம், சந்தானம் சார் அர்ப்பணிப்போடு பணிபுரிந்தார். படத்தின் கதாபாத்திரத்தில் இருந்து வெளியே போகாமல் இருப்பார். இந்த படத்திற்காக இயக்குனர் ரவிக்குமார், மடோனா அஸ்வின், லோகேஷ் கனகராஜ் என பல நண்பர்கள்  உதவியுள்ளனர். அவர்களின் பங்கு இந்தப்படத்தில் இருக்கிறது. ஒரு முறை லோகேஷ்  செட்டுக்கு வந்து பார்த்தபோது சந்தானம் சாரை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. அந்தளவு சந்தானம் சார் லுக் மாறியிருந்தது. இந்த படம் கொஞ்சம் வித்தியாசமான படம், கதாபாத்திரங்கள் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். அதை சரியான திரைப்படமாக மாற்றியது சந்தோஷ் நாராயணன் தான். இந்த படத்தில் ஏழு பாடல்கள் இருக்கிறது. எல்லா பாடல்களும் உங்களுக்கு பிடிக்கும். இந்த படத்தில் ரெட் ஜெயண்ட் வந்த பிறகு படத்தின் வேகம் அதிகரித்துள்ளது. இந்த படம் மேஜிக்காக மாற காரணம் கலை இயக்குனர் ஜாக்கி. படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் இந்த படத்திற்கு பெரும் உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தின் வெற்றிக்கு அனைவரும் காரணம். அனைவருக்கும் நன்றி. 



நடிகர் சந்தானம் கூறியதாவது..

இந்த படத்தை பார்த்து உதயநிதி கொடுத்த பரிந்துரைகள் ஒரு இயக்குநருக்கான பார்வையில் இருந்தது. இந்த படத்தை வெளியிட பெரும் உதவியாய் இருந்தார். இந்த கதையை ரத்னகுமார் கூறும் போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்றைக்கு தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் எதிர்பார்ப்பது இந்த படத்தில் இருக்கும். சந்தோஷ் நாராயணன் எனக்கு செட்டாகும் இசையை ஹிட்டாகும்படி தந்திருக்கிறார். அவர் பாடல்கள் தான் எல்லா இடத்திலும் கேட்கிறது. இந்த படத்தில் ரத்னகுமார் கடின உழைப்பை போட்டுள்ளார். இவ்வளவு குறுகிய பட்ஜெட்டில், நிறையை இடங்களில் படம் எடுப்பது ரத்னகுமாரால் மட்டுமே முடியும். ரத்னா உடைய நட்பினால் ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் எல்லோரும் இந்த படத்தின் உள்ளே வந்தனர். ஒரு குழு முயற்சியாக இந்த படம் உருவாகப்பட்டுள்ளது. படம் எல்லோருக்கும் பிடிக்கும் 


நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது…

நான் இங்கு வந்தது தயாரிப்பாளராக, நடிகராக அல்ல. எப்போதும் என் நண்பேண்டா பார்த்தா தான் சந்தானம். அவரால் தான் என்னை நடிகனாக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இந்த படம் நான் பார்த்துவிட்டேன். படம் சிறப்பாக வந்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் ரத்னகுமார் எடுக்கிறார் என்பதால் படம் பார்க்காமலே, இந்த படம் சிறப்பான ஒன்றாக இருக்கும் என நம்பினேன். இந்த படத்தில் சந்தானம் தாண்டி அனைவரும் ரசிக்க வைத்துள்ளனர். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும். சந்தானம், ரத்னகுமார், தயாரிப்பாளரும் எனது வாழ்த்துகள். இந்த படம் கண்டிப்பாக சந்தானத்துக்கு ஒரு வெற்றிப்படமாக அமையும். 



இந்த படத்தில் சந்தானத்துடன் அதுல்யா சந்த்ரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், ‘லொள்ளு சபா‘ மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இப்படம் ஜூலை 29 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Friday, July 22, 2022

Paper Rocket Official Trailer - A ZEE5 Original




Trailer Link Click Here

சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு ’ஐந்து தேசிய விருதுகள்’ கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.சூர்யா.


 வணக்கம்.. அன்பான வாழ்த்துகளால் வாழ்வை நிறைக்கும் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள்.. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு   ’ஐந்து தேசிய விருதுகள்’ கிடைத்திருப்பது  பெருமகிழ்ச்சி அளிக்கிறது. பெருந்தொற்று காலத்தில் எதிர்பாராத நெருக்கடிகளுக்கு இடையில் வெளியான இத்திரைப்படத்திற்கு  இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது. தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்வைச் சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. 

தேசியவிருது பெறுகிற சுதா கொங்கரா - ஷாலினி உஷாநாயர், ஜி.வி. பிரகாஷ், அபர்ணா பாலமுரளி,  இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். சிறந்த திரைப்படத்தை தயாரிக்க துணைநின்ற படக்குழுவினர் அனைவருக்கும் இந்த அங்கீகாரம் உரியது.   மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் சகோதரர் அஜய் தேவ்கன் அவர்களுக்கும், மேலும் தேசிய விருது பெறுகிற இயக்குநர் வசந்த் சாய், ஸ்ரீகர் பிரசாத், லஷ்மி ப்ரியா சந்திரமௌலி, இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் 68-வது தேசியவிருது பெறுகிற சக கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.   

’நேருக்கு நேர்’ திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த் சாய் அவர்களுக்கும், தயாரிப்பாளர் இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பும், வழிகாட்டலும் தந்து எப்போதும் துணைநிற்கும் அம்மா, அப்பா, கார்த்தி, பிருந்தா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் வலியுறுத்திய என் ஜோதிகாவிற்கும், அன்பு பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோருக்கும் இந்த விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன்..  

என் முயற்சிகளை வரவேற்று கொண்டாடும் மக்களுக்கும், என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் எப்போதும் உடனிருக்கும் அன்பு தம்பி-தங்கைகளுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பும்.. நன்றியும்.. இந்த தேசியவிருது அங்கீகாரம், நல்ல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது. தேர்வுக் குழுவினருக்கும், இந்திய அரசிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். 

அன்பின் வாழ்த்துகளால் நெகிழச் செய்கிற அனைவருக்கும் மீண்டும் நன்றி..


அன்புடன்,

சூர்யா.

ரங்கோலி” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

“ரங்கோலி” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

வாலி மோகன்தாஸ் இயக்கத்தில் புதிதாக உருவாகியுள்ள ரங்கோலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக K.பாபுரெட்டி மற்றும் G.சதீஷ்குமார் தயாரித்துள்ள படம் ”ரங்கோலி”. 

இயக்குனர் வஸந்த்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்த வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்குகிறார். 

இத்திரைப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருகின்றனர். இதில் ஹமரேஷ் நடிகர் உதயா மற்றும் இயக்குனர் விஜய் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்க்கு கேஸ்.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைப்பாளராகவும், மருதநாயகம் ஒளிப்பதிவாளராகவும், ரா.சத்திய நாராயணன்  படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகின்றனர்.

Sivaranjiniyum Innum Sila Pengalum' bags 3 National Film Awards!

The Tamil Flick 'Sivaranjiniyum Innum Sila Pengalum' released in November 2021 is set to receive 3 awards at the 68th National Film Awards 2022, an official announcement said.


The movie has won the Best Tamil Film Award. Lakshmi Priyaa Chandramouli has won the Best Supporting Actress Award for her role in the film and the editor of the movie Sreekar Prasad has won the Best Editing Award.


At the physical event, the winners will receive the awards and citations.


The film talks about the life and struggles of three women, as an anthology. The stories for these three parts were scripted by Jeyamohan, Adhavan and Ashokamitran. Lakshmi Priyaa Chandramouli, Parvathy Thiruvothu, and Kalieswari Sreenivasan play the three women-leads in this movie. 


It was directed by Vasanth S.Sai, who also handled the screenplay, music was composed by Ilayarajaa, and produced by Hamsa Productions.  It got released in Sony Liv in November 2021 to a range of wider audience. 


The reviews from critics praised the performance of the three leads, and the direction by Vasanth

 

Mahaveeryar - திரைவிமர்சனம்

இரண்டு உலகங்கள் நீதிமன்ற அறையில் ஒன்றுசேர்ந்து இன்னும் தொடர்புடைய கவலைகளைத் தீர்க்கின்றன-அதுதான் சுருக்கமாக அப்ரிட் ஷைனின் நையாண்டி நாடகம் மகாவீரியார்.


ஒரு சாமானியப் பெண்ணுக்கும், கர்வமும் கர்வமும் கொண்ட ஆட்சியாளரான ருத்ர மகாவீர உக்ரசேன மகாராஜாவுக்கும் இடையே தகராறு. பல மாதங்களாக விக்கல் நோயால் அவதிப்பட்டு வரும் மன்னன், இளம்பெண்ணின் கண்ணீரால் குணமாகி விடலாம் என்று தரிசனம் செய்கிறான். அவருக்கு 2,000 மனைவிகள் உள்ளனர் ஆனால் அவர்களில் யாராலும் அவரை குணப்படுத்த முடியவில்லை. அவரது உத்தரவின் பேரில், அரசனின் பார்வையில் உள்ளதைப் போன்ற ஒரு பெண் (ஷான்வி ஸ்ரீவஸ்தவா) அரண்மனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்து வரப்படுகிறார். அவன் அவளை அழ வைக்க முயற்சிக்கிறான், ஆனால் அவள் இல்லை, அது அவனை மேலும் கோபமடையச் செய்கிறது.


படத்தின் பெரும்பகுதி நீதிமன்ற அறையில் நடைபெறுகிறது, முதல் பாதி கோவிலில் இருந்து விலைமதிப்பற்ற சிலையை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட அபூர்ணானந்தன் (நிவின் பாலி) என்ற இளம் துறவியை மையமாகக் கொண்டது. இது மிகவும் பொழுதுபோக்கு மற்றும் இருண்ட நகைச்சுவை பார்வையாளர்களை ஆர்வமாக வைத்திருப்பதில் வெற்றி பெறுகிறது. அபூர்ணானந்தன் நீதிமன்றத்தில் வாதிடுவது வேடிக்கையாக இருந்தது. இரண்டாம் பாதி இன்னும் தீவிரமானது, ஒருவேளை இது ஒரு அரசியல் பிரச்சினையைக் கையாள்வதால். இரண்டாம் பாதியில் கதையின் பெரும்பகுதி வெளிப்படுகிறது.


மகாவீரருடன், புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.முகுந்தனும், இயக்குநர் ஷைனும் அசலான மற்றும் ஆக்கப்பூர்வமான ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஒரு ஜனநாயக சமூகத்தில் சட்டம் தாழ்த்தப்பட்டவர்களைக் காக்க வேண்டும், ஆனால் இறுதியில் அதிக செல்வாக்கும் அதிகாரமும் உள்ளவர்கள் மேலோங்குகிறார்கள் என்ற உண்மை அற்புதமாக உரையாற்றப்படுகிறது.


குறைந்த திரை நேரம் இருந்தபோதிலும், துறவியை சித்தரிப்பதில் பாலி ஒரு சிறந்த வேலையைச் செய்துள்ளார். வீரபத்ரனாக ஆசிப் அலியும் சிறப்பாக நடித்துள்ளார். ஸ்ரீவஸ்தவாவின் கதாபாத்திரம் குறிப்பிடத்தக்கது, மேலும் அவர் பார்வையாளர்களை உணர்ச்சிப்பூர்வமாக ஈடுபடுத்துகிறார். ஆணவ மன்னராக லால், அரசு வழக்கறிஞராக லாலு அலெக்ஸ், நீதிபதியாக சித்திக் என அனைவருமே எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கிறார்கள்.


இசை மற்றும் ஒளிப்பதிவு கூட சிறப்புக் குறிப்புக்கு உரியது.


க்ளைமாக்ஸ் சில மோசமான எழுத்தின் காரணமாக ஆச்சரியத்தையும் சிறிது ஏமாற்றத்தையும் ஏற்படுத்தலாம்.


மஹாவீர்யர் மிகவும் நேரடியான கதையை நாடகமாக்கினாலும், இது கண்டிப்பாக பார்க்கத் தகுந்தது.

 

பிரபல நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர் மற்று லலிதா ஷோபி மாஸ்டர் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது

பிரபல நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர்  மற்று லலிதா ஷோபி மாஸ்டர் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது 

கோலிவுட் முதல் பாலிவுட் வரை  பல முன்னணி   பல படங்களில் பணியாற்றிய நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர்  மற்று லலிதா ஷோபி மாஸ்டர் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. 

இந்திய திரையுலகம் முழுக்க பிரபலமானவர் நடன இயக்குநர் ஷோபி. 2004 ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம் பி பி எஸ்’ படம் மூலம்  நடன இயக்குநராக திரைத்துறையில்  அறிமுகமானவர் ஷோபி. திரைத்துறையில் பல முன்னணி நட்சத்திரங்களுடனும், பிரம்மாண்ட படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றி புகழ் பெற்றவர். ஷோபி மாஸ்டர், லலிதா ஷோபி மாஸ்டர் இருவரும் இணைந்து ஒரு நடன பள்ளியை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் தான் லலிதா ஷோபி மாஸ்டருக்கு கோலகலமாக வளைகாப்பு நடைபெற்றது. 

இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது.  இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரு தனியார் மருத்துவமனையில் லலிதா மாஸ்டர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது தாய் சேய் இருவரும் பூரண நலத்துடன் உள்ளனர். அன்பும் பாரட்டுக்களும் தெரிவித்த ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஷோபி மாஸ்டர் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

Thursday, July 21, 2022

டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர்’

முன்னணி நட்சத்திர நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் 'கடாவர்' எனும் திரில்லர் திரைப்படம், டிஸ்னி +ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது.

மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கடாவர்'. இதில் நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி இருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கிரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க, ஷான் லோகேஷ் பட தொகுப்பாளராக பணியாற்றிருக்கிறார்.

கடாவர்- முதுகுத்தண்டை சில்லிடச் செய்து, ரத்தத்தை உறையச் செய்யும் க்ரைம் திரில்லர் திரைப்படம். கொலை வழக்கு ஒன்று போலீஸ் உயரதிகாரி விஷால் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. இதில் தடயவியல் துறை நிபுணராக பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை அமலா பால் நடிக்கிறார். மர்மமான முறையில் கொலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கான விசாரணையை மேலும் விரைவுபடுத்தி, வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கும் தருணத்தில், தடயவியல் துறை நிபுணரான பத்ரா கொலைக்கான பின்னணியையும், கொலைகாரனையும் கண்டறிகிறார்.

டிஸ்னி+ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளம்- தற்போது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக திகழ்கிறது. இந்த டிஜிட்டல் தளம், இந்தியர்கள் தங்களின் பொழுதுபோக்கு அம்சங்களை பார்வையிடும் முறையை மாற்றி அமைத்திருக்கிறது. அவர்களுக்கு பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை இந்தியா முழுவதும் அனைவரும் கண்டு ரசிக்கும் வகையிலான உள்ளடக்கத்துடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இயங்கி வருகிறது. இந்த டிஜிட்டல் தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், வங்காளம் என எட்டு மொழிகளில் 1,00,000 மணி நேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. இதனுடன் உலக அளவில் நடைபெறும் முக்கிய விளையாட்டு நிகழ்வினையும் பிரத்யேகமாக அளிக்கிறது.

ஜே.கே. தமிழ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜே. ஜே எனும் ஜெயச்சந்திரன் இந்த வெப் தொடரை பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

 நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக  உருவாகும் வெப் தொடர் " வர்ண கதைகள் "  ஓவிய கலையையும், ஓவிய கலைஞர்களையும் மையமாக வைத்து உருவாக...