Tuesday, January 23, 2024

Phoenix Marketcity Presents Electronics Fest 2024: A Week-Long Tech Extravaganza!

Phoenix Marketcity Presents Electronics Fest 2024: A Week-Long Tech Extravaganza!

Chennai, January 23,2024 : Phoenix Marketcity, one of the premium malls of Chennai organizes a weeklong Electronics Fest 2024 from January 22nd to January 28th for consumers to immerse themselves in a tech paradise featuring exclusive offers from top electronic brands. Noted and well-known brands will have exciting offers, discounts, and some thrilling packages for technology lovers to make this a never to miss opportunity for all.

The grand feast of the most celebrated electronic brands accompanied by the best prices and discounts can help people dive into the world of electronics by participating in the Weekend Spike Call to Action,  Shop for Rs.25,000 and above from renowned electronic brands such as Reliance Digital, Croma, Sathya, Acer etc. and can stand a chance to win incredible prizes like laptops , TVs,  mobiles and kitchen appliances Bluetooth soundbars, food processors, vacuum cleaners, food coupons, movie vouchers  and more.

Added to this, on the occasion of Republic Day on January 26,2024, Phoenix Marketcity will also make this a very memorable weekend by offering an exclusive opportunity to shop for Rs.1.5 lakh or more, limited to electronic brands, and receive an assured gold coin.The Electronic Fest 2024 showcases an impressive lineup of electronic brands, ensuring consumers have access to the latest innovations by exploring products from Reliance Digital, Croma , Sathya, Acer,  Aptronix, Asus, Bose, Cex, , Dell,HP, Lenovo, Samsung, OnePlus,  Vivo, MI, Zebronics, Mobikins, Mobilezone etc. offering unbeatable deals throughout the campaign.

About Phoenix Marketcity: A premier destination for luxury lifestyle, it provides guests with a variety of opulent options. Phoenix continues to be "The" destination for the most affluent and sophisticated residents of the city as well as expats thanks to its truly international appearance and feel, elegantly decorated interiors, and the best of food, fashion, and entertainment from across the world. The mall provides Chennai with the most extensive and appealing lifestyle shopping experience. The stores represent a comprehensive mix of international, national, and regional luxury brands. Phoenix Marketcity in Chennai is more than simply a mall; it's a confluence of fascinating cultures, lovely clothes, and high-end couture. A city within a city, in an urban setting with coexisting shopping, entertainment and leisure options.

 

 

 

Thanks & Regards

 

புளூஸ்டார் " படம் ஜனவரி 25 வெளியாகிறது.

" புளூஸ்டார் " படம் ஜனவரி 25 வெளியாகிறது.

நடிகர் அசோக்செல்வன், கீர்த்திபாண்டியன் , சாந்தனு, பிரித்வி, திவ்யாதுரைசாமி, நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் "புளூஸ்டார்"

அறிமுக இயக்குனர் ஜெய்குமார் இயக்கியிருக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் கோவிந்த் வசந்தா,  தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்கிறார்.
பாடல்கள்  அறிவு மற்றும் உமாதேவி.

இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய  ஜெய்குமார் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

இளைஞர்கள் வாழ்வில் நீங்கா இடம் பிடித்துள்ள கிரிக்கெட் மற்றும் அதைச்சுற்றி நடக்கும் நட்பு, காதல் என்று முழுக்க ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருக்கிறது புளூஸ்டார்.

ஜனவரி 25 ம் தேதி வெளியாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது. 

லெமன் லீப் கிரியேசன்ஸ்
தயாரிப்பாளர் R.கணேஷ்மூர்த்தி , 
G சவுந்தர்யா  மற்றும் நீலம் புரொடக்சன்ஸ்   பா. இரஞ்சித் 
இணைந்து தயாரித்துள்ளனர்

Monday, January 22, 2024

சமுத்திரக்கனி நடிக்கும் "ராமம் ராகவம்" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.*

*சமுத்திரக்கனி  நடிக்கும் "ராமம் ராகவம்"  படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.*


*நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படம் "ராமம் ராகவம்" இந்த படத்தை தெலுங்கு திரையுலகில் நடிகராக இருக்கும் தன்ராஜ்  இயக்குகிறார்.

ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் , ப்ருத்வி போலவரபு தயாரிப்பில், பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி, இருமொழி திரைப்படமாக 
இயக்குவதோடு சமுத்திரக்கனியோடு இணைந்து  நடிக்கவும் செய்கிறார்.

அப்பா மகன் உறவு கதைக்களமாக இந்தபடம் இருக்கிறது .
தெலுங்கு திரையுலகில் தற்பொழுது பிசியான நடிகராக வலம்வரும் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்த படத்தில் நடித்துவருகிறார்.

படப்பிடிப்பு ஐதராபாத், ராஜமந்திரி சென்னை, மதுரை தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு  நடைபெற்றுவருகிறது.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

கதை : சிவ பிரசாத் யானல,

ஒளிப்பதிவு : துர்கா பிரசாத் கொல்லி,

இசை: அருண் சிலுவேறு,

கலை: டெளலூரி நாராயணன்,

Executive producer: 
தீபி ரெட்டி மஹிபால் ரெட்டி ,

எடிட்டிங் :
மார்த்தாண்டம் கே வெங்கடேஷ்,

சண்டைபயிற்சி : நட்ராஜ்,

வசனம் : மாலி

திரைக்கதை இயக்கம் -  
தன்ராஜ் கொரனாணி.


தயாரிப்பு: பிருத்வி போலவரபு

Saturday, January 20, 2024

திறந்திடு சீசே' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சிக்லெட்ஸ் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு


 சிக்லெட்ஸ்' படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு


'திறந்திடு சீசே' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சிக்லெட்ஸ்'. இதில் நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். ராஜு கலை இயக்க பணிகளை மேற்கொள்ள, விஜய் வேலுக்குட்டி படத் தொகுப்பை கவனித்திருக்கிறார். 2k கிட்ஸிற்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையேயான தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் எஸ் பி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஏ. சீனிவாசன் குரு தயாரித்திருக்கிறார். ஸ்வர்ணா ஸ்ரீ இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கிறார். இந்தத் திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.‌ இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் தமிழ் சினி கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் S.நந்தகோபால் வெளியிடுகிறார். 


இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதன் போது மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர்களும், நடிகர்களுமான ஆர். வி. உதயகுமார், பேரரசு, 'மஞ்சள் வீரன்' பட இயக்குநர் செல்லம், நடிகரும் தொழிலதிபருமான சூரிய நாராயணன், நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், நடிகை அமிர்தா ஹல்தார் இயக்குநர் எம். முத்து, ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார், தயாரிப்பாளர் ஏ. சீனிவாசன் குரு கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்வர்ணா ஸ்ரீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ஏ. சீனிவாசன் குரு பேசுகையில், '' இந்தத் திரைப்படத்தின் கதை விவாதம் கோவிட் காலகட்டத்திற்கு முன்னர் நடைபெற்றது. அந்தத் தருணத்தில் மற்றொரு திரைப்படத்தை உருவாக்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தோம். அப்போது இப்படத்தின் இயக்குநரான முத்து அடிக்கடி என்னை சந்திப்பதுண்டு. அப்போது சிக்லெட்ஸ் படத்தின் கதையை சொல்லி, இப்படத்தை உருவாக்கலாம் என சொல்வார். நான் இதன் திரைக்கதையை வாங்கி என்னுடைய மகள் ஸ்வர்ணா ஸ்ரீயிடம் கொடுத்து படிக்குமாறு சொன்னேன். அவர் இந்த கதையைப் படித்துவிட்டு 2k கிட்ஸ்க்கான  கதையாக இருக்கிறது. இதனை முதலில் தயாரிக்கலாம் என சொன்னார். அதன் பிறகு மீண்டும் இயக்குநர் முத்துவை அழைத்து, இப்படத்தின் கதையை சொல்லச் சொன்னேன். அவரும் கதையை விவரித்து பட்ஜெட்டையும் சொன்னார். ஆனால் திட்டமிட்டதை விட கூடுதல் செலவு செய்து தரமான படமாக உருவாகி இருக்கிறோம். இந்த படம் பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார் . 


நடிகர் சாத்விக் வர்மா பேசுகையில், ''  தமிழ் திரையுலகில்  'சிக்லெட்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமாகிறேன். இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 


நடிகை அமிர்தா ஹல்தார் பேசுகையில், ''  'சிக்லெட்ஸ்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறேன். இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 


நடிகர் ஜாக் ராபின்சன் பேசுகையில்,'' 'சிக்லெட்ஸ்' திரைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் ஆடிசன் வைத்து என்னை தேர்வு செய்து, அதற்குப்பின் வாய்ப்பளித்தார். என்னை தேர்வு செய்ததற்காக தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்திற்கு நிறைய பிரச்சனைகள், தடங்கல்கள் வந்தது. இருந்தாலும் தயாரிப்பாளர் மனம் தளராமல் இப்படத்தை வெளியீட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார். 


இந்த திரைப்படத்தில்தான் நான் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கிறேன். இதற்கு முன் சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறேன். இயக்குநர் முத்து இப்படத்தின் கதையையும், என்னுடைய கதாபாத்திரத்தையும் சொல்லி நிறைய நம்பிக்கையை அளித்தார். இப்படத்தில் நடித்த சக கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார். 


'மஞ்சள் வீரன்' பட இயக்குநர் செல்லம் பேசுகையில், '' ஒரு தயாரிப்பாளர் திரைப்படம் தயாரிக்கிறார் என்றால்.., அதற்குப் பின்னால் சினிமாவை நம்பி இருக்கும் எத்தனை குடும்பங்கள் வாழ்கிறது என்பதை நினைத்து பார்க்க வேண்டும். தற்போதுள்ள கடினமான சூழலில் படத்தை தயாரித்திருப்பதற்காக தயாரிப்பாளரை நாம் மனதார பாராட்ட வேண்டும்.  


இயக்குநர் முத்து ஏற்கனவே 'திறந்திடு சிசே' என்ற படத்தினை இயக்கியவர். அதன் பிறகு போராடி இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அவர் சிப்பிக்குள் இருக்கிற முத்து அல்ல சினிமாவுக்குள் இருக்கிற முத்து. அவர் மாபெரும் வெற்றிப் பெற வாழ்த்துக்கள். 

'' என்றார். 


இயக்குநர் எம். முத்து பேசுகையில், ''புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்தின்  ஆன்மா சாந்தியடைய நாங்கள் இறைவனை வேண்டிக்கொள்கிறோம். எங்களுடன் பணியாற்றிய இயக்குநரும், நடிகருமான மனோபாலா மற்றும் மயில்சாமி ஆகியோரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். எங்களுடன் இணைந்து பணியாற்றிய இணை இயக்குநரும், புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் விசுவாசியுமான வேலுமணியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். 


'சிக்லெட்ஸ்' படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே தருணத்தில் இயக்கி இருக்கிறேன். இந்தப் படத்தின் கதையை கிரியேட்டிவ்  புரொடியூசர் ஸ்வர்ணா ஸ்ரீ படித்ததும் ஓகே சொல்லிவிட்டார்கள். அவர்களுக்கு இந்த கதை பிடித்ததால், படமாக தயாராகி பிப்ரவரி இரண்டாம் தேதியன்று வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தை தமிழில் தமிழ் சினி கார்ப்பரேஷன் சார்பில் தயாரிப்பாளர் S.நந்தகோபால் வெளியிடுகிறார். தெலுங்கில் எம் ஜி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் எம். அச்சு பாபு வெளியிடுகிறார். இவர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்த திரைப்படத்தின் பணிகளை கோவிட் காலகட்டத்தின் போது தொடங்கினோம். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. 


இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாயகனான இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, தொடர்பு விமானம் கிடைக்காததால் சரியான நேரத்தில் இங்கு வருகை தர இயலவில்லை. படத்தின் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கிறது. 


பெற்றோர்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் இருக்கும் அன்பு.. ஒரு காதலனுக்கும் காதலிக்கும் இருக்கும் அன்பு.. இந்த அன்பு ஒருவரிடம் சேரும்போது வாழ்க்கையில் தோல்வி இருக்காது. வெற்றி பெறுவோம். ஆனால் அந்த அன்பு தோற்று விட்டால்.. வாழ்க்கையில் தோற்று விடுவோம் ‌. பெற்றோர்களைப் பற்றி பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளை பற்றி பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 


டூகே கிட்ஸ் என்றால்... நான் இந்த தலைமுறையை தவறு சொல்லவில்லை‌. தற்போது கலாச்சாரம் மாறி இருக்கிறது. அதற்கேற்பதான் அவர்கள் தங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கலாச்சாரம் மாற மாற அதனால் பாதிப்பை சந்திப்பவர்கள் இளைய தலைமுறையினர் தான். வேறு யாரும் அல்ல. 


பெற்றோர்களாகிய நாம் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஏனெனில் நாம் வாழ்ந்த வாழ்க்கை முறை என்பது வேறு. தற்போதுள்ள இளைய தலைமுறையினர் வாழும் வாழ்க்கை வேறு. ‌இதைப் பற்றி ஓப்பனாக பேசப் போனால்.. எங்களுக்கு கிடைத்திருக்கும் சர்டிபிகேட் 'ஏ'. 


இதை ஓப்பனாக யார் பேசுவது? சமுதாயம் பேசாது. ஏனெனில் அதற்கு ஒரு பயம் இருக்கிறது. பிறகு யார் தான் பேசுவது? பெற்றோர்கள் தான் இது குறித்து அவர்களுடைய பிள்ளைகளிடம் பேச வேண்டும். இது செய்.. இது செய்யாதே.. இது சரி.. இது தவறு.. இதை சொல்லக்கூடிய ஒரே உரிமை பெற்றோர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. 


எல்லோருக்குள்ளும் ஒரு ரகசியம் இருக்கிறது. அதை வெளியில் சொன்னால் தப்பாகி விடும் என்பதற்காக தமக்குள்ளே வைத்துக் கொண்டவர்கள் தான் 80'ஸ் 90'ஸ்  காலகட்டத்தினர். ஆனால் மனதில் நினைத்ததை வெளிப்படையாக பேசுபவர்கள் தான் இன்றைய இளம் தலைமுறையினர். தவறு என்று தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் பேசுவார்கள். தவறு என்றால் திருத்திக் கொள்ளலாம். ஆனால் மனதில் பட்டதை பேசாமல் அவர்களால் இருக்க முடியாது. 


அவர்களுடைய பேச்சு எப்படி இருக்கும்? அணுகுமுறை எப்படி இருக்கும்? காதல் எப்படி இருக்கும்? காமம் எப்படி இருக்கும்? அவருடைய மனநிலை எப்படி இருக்கும்.  இவை எல்லாவற்றையும் இப்படத்தில் பேசியிருக்கிறோம். அதே சமயத்தில் பெற்றோர்களின் வலியையும் பேசியிருக்கிறோம். 


பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். ஆனால் வாழ்க்கையில் தோற்கக் கூடாது என்று தான் நினைப்பார்கள். அனைத்து பெற்றோர்களின் மனதிலும் இவைதான் இருக்கும். ஆனால் அதை ஒருபோதும் பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். 


'எப்படி வேண்டுமானாலும் வாழு. ஆனால் வாழ்க்கையில் நீ சிறந்தவனாக வெற்றி பெற வேண்டும்' என்று சொல்லிப் பாருங்கள். பிள்ளைகளின் மனதிற்குள் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 


இந்தப் படத்தில் நாங்கள் ஒரு நல்ல விசயத்தைத்தான் சொல்லி இருக்கிறோம்.


இப்படத்திற்கு பிரபலமானவரின் பின்னணி குரல் அவசியம் என்பதை உணர்ந்தோம். இதற்காக இயக்குநர் 'லெஜன்ட்' பாக்யராஜை தொடர்பு கொண்டோம். அவர் படத்தை பார்த்துவிட்டு சில நிறைகுறைகளை சுட்டிக்காட்டினார். அவர் பார்க்கும் போது இந்த படத்தின் கால அவகாசம் இரண்டரை மணி நேரம். அவர் சுட்டிக் காட்டிய குறைகளை நீக்கிய பிறகு  இரண்டு மணி நேர படமானது. 30 நிமிட காட்சிகளை நீக்கி விட்டோம். இதற்காக இயக்குநர் பாக்கியராஜுக்கு நன்றி. 


இந்தப் படத்தின் கிளைமாக்ஸை என்னுடைய உதவியாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. படத்தில் இடம் பெறும் மூன்று கதாபாத்திரங்களுக்கும் நியாயப்படுத்தும் வகையில்  கிளைமாக்ஸ் இருந்தது. தயாரிப்பாளருக்கு நான் சொன்ன கிளைமாக்ஸ் பிடித்திருந்தது. பாக்யராஜ் சாரும் அதற்கு ஒப்புதல் தெரிவித்தார். கண்டிப்பாக இப்படத்தின் கிளைமாக்ஸ்.. படம் வெளியான பிறகு பேசப்படும். மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன். கிளைமாக்ஸ் புதிது இல்லை என்றாலும்.. இது இருந்தால்தான் பிள்ளைகளின் வாழ்க்கை நன்றாக இருக்கும். இது யாருக்குத் தேவை? யாருக்கு தேவை இல்லை? என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறோம். எல்லோரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை. 


நம்மால் ஒரு விசயத்தை சாதிக்க முடியும் என்று நினைப்பவர்களுக்கு... இந்த சமுதாயத்தை எதிர்த்து வாழ முடியும் என்று நினைப்பவர்களுக்கு.. யாருடைய ஆதரவும் தேவையில்லை. ஒருத்தருடைய ஆதரவில் தான் மற்றவர்களால் வாழ முடியும் என்றால்.., நிச்சயமாக அவர்கள் ஆயுள் முழுவதும் அடுத்தவர்களை சார்ந்து தான் வாழ்வார்கள். ‌ இதைத்தான் நான் இப்படத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறேன்.'' என்றார். 


இயக்குநர் பேரரசு பேசுகையில், '' இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாத நடிகர்கள், நடிகைகள் மீது தயாரிப்பாளர் சங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை பிடித்து வைத்துக் கொண்டு, இதுபோன்ற இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிறகு வழங்க வேண்டும். இதனை ஒரு ஆலோசனையாக முன் வைக்கிறேன்.  


இப்படத்தின் விழாவில் கலந்து கொள்வதற்கு முன் இயக்குநரை, இயக்குநர் சங்கத்திற்கு வரவழைத்து பேசினோம். அவர் சிக்லெட்ஸ் படத்தின் கதையை விவரித்தார். உடனே இது போன்ற படத்தின் விழாவிற்கு அவசியம் செல்ல வேண்டும் என்று நினைத்து தான் இங்கு வருகை தந்திருக்கிறேன். 


இந்தப் படத்தில் பிள்ளைகளின் விசயத்தில் பெற்றோர்கள் எவ்வளவு கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இயக்குநர் சொல்லி இருக்கிறார். அதனால் இந்தப் படத்தை பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் தங்களது பிள்ளைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிட்டு, ஏமாளிகளாக இருக்கிறார்கள். இதனால்தான் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது. 


இயக்குநர் ஒரு புத்திசாலி. அதனால் தான் படத்தினை இளம் தலைமுறையினர் திரையரங்கிற்கு வர வைக்கும் வகையில் முன்னோட்டத்தை  உருவாக்கி இருக்கிறார். படத்திற்கான டிசைனும் அவர்களை கவரும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  


2கே கிட்ஸ்களை இயக்குநர் நன்றாக புரிந்து வைத்திருப்பதால்.. இந்த படத்திற்கு 'ஏ' சான்றிதழை விரும்பி வாங்கி இருக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது. 


இன்றைக்கு விவாகரத்து அதிகரித்து விட்டது. அதற்காக பெற்றோர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது. இன்று ஒரே வீட்டில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் பேசாமல் பல ஆண்டுகளாக கணவன்- மனைவி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் தங்களுடைய பிள்ளைகளுக்காக தான் ஒரே வீட்டில் இருக்கிறார்கள் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.  இதனை பிள்ளைகளும் புரிந்து கொள்ள வேண்டும். தங்களுக்காக அம்மா இவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதையும், தனக்காக அப்பா எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதையும் பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும்.  இதனை பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும். பெற்றோர்கள் தான் இதனை செய்ய வேண்டும். ஆனால் இன்றைய இளம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அப்பா அம்மா என்பது ஒரு பிராப்பர்ட்டி ஆகிவிட்டது. இதுபோன்ற சூழலில் 'சிக்லெட்ஸ்' போன்ற படங்கள் வெளிவருவது அவசியம். அதனால் இந்த திரைப்படத்தை பெற்றோர்கள் மட்டுமல்லாமல் இளம் தலைமுறையினர் கண்டு ரசித்து, தங்களது பெற்றோர்களின் உணர்வை புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். '' என்றார்.


தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில், ''    'சிக்லெட்ஸ்' படத்தின் டிரைலரை பார்த்தோம். வெரி நீட். இந்த காலகட்டத்திற்கு தேவையான அற்புதமான படம். 'ஏ'வா.. 'யு/ஏ' வா.. என்பது வேறு. அப்பா- அம்மா- பிள்ளைகள் அண்டர்ஸ்டாண்டிங்கை பற்றி பேசுகிறது. அப்பா அம்மாவின் பேச்சை பிள்ளைகள் கேட்கிறார்களா..? அல்லது பிள்ளைகளின் பேச்சை அப்பா அம்மா கேட்கிறார்களா.. ? என்ற பிரச்சினையை பற்றி இப்படம் பேசுகிறது. 


இது ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கின்ற விசயம். விஞ்ஞான வளர்ச்சியில் பல சாஃப்ட்வேர்கள் வந்து வளர்ச்சியையும் கொடுத்திருக்கிறது. அழிவையும் கொடுத்திருக்கிறது. உதாரணத்திற்கு ஆன்லைன் ரம்மியை சொல்லலாம். 


இன்றைக்கு நாம் ஃப்ளாட்டுக்களில் தான் வசிக்கிறோம். தாய் ஒரு ரூம். தந்தை ஒரு ரூம். பிள்ளைகள் ஒரு ரூம். எல்லோரும் எப்பவாது ஒரு முறை தான் ஹாலில் ஒன்றாக இருப்பார்கள். அம்மாவுக்கு ஒன்னு.. அப்பாவுக்கு ஒன்னு.. பொண்ணுக்கு ஒன்னு.. பையனுக்கு ஒன்னு.. என ஆளாளுக்கு ஒரு செல்போனை கையில் வைத்திருக்கிறார்கள். போன் வந்தால் அம்மா சமையல் அறைக்கும், அப்பா ரூமிற்கும், பையன் தெருவுக்கும், பொண்ணு மொட்டை மாடிக்கும் சென்று பேசுகிறார்கள். யாருக்கும் யாருடனும் அண்டர்ஸ்டாண்டிங் இல்லை. 


முன்பெல்லாம் அப்பா அம்மா.. பொண்ணு பார்த்து கல்யாணம் செய்து வைத்தார்கள். அப்போதெல்லாம் நிறைய கல்யாணம் நடந்தது. நல்ல பண்பாடாகவும் இருந்தது. ஆனால் இப்பொழுது அம்மா அப்பா தங்களுடைய பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். ஆனால் பொண்ணு திடீரென்று ஒருவரை அழைத்துக் கொண்டு வந்து, 'இவர்தான் என் கணவன்' என்று அறிமுகப்படுத்துகிறார். அப்பா- அம்மாவிற்கு முன் கல்யாணம் செய்து கொண்டு வந்து நிற்கிறார்கள். இது வருத்தமாக தான் இருக்கிறது. இந்த வருத்தத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 


இப்படத்தின் நாயகன் அறிமுக நடிகர் போல் இல்லாமல், அனுபவிக்க நடிகர் போல் நீளமான வசனத்தை ஒரே ஷாட்டில் பேசி பிரமாதமாக நடித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். 


இப்படத்தின் கதை பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் அற்புதமான விசயத்தை சொல்கிறது. அதனால் இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும். மேலும் தற்போது நல்ல கதை இருந்தால் சின்ன பட்ஜெட் படங்களை ரசிகர்கள் வெற்றி பெற செய்கிறார்கள். '' என்றார். 


இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசுகையில், '' இந்தப் படத்தைப் பற்றி இங்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பேசிவிட்டார்கள்.  அதனால் நான் படத்தைப் பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. இருந்தாலும் இங்கு படத்தின் டிரைலரை பார்த்தோம். ட்ரெய்லர் கண்களுக்கு விருந்தளித்தது. இங்கு அனைவரும் இளைஞர்கள் தான் ஆசை இல்லாத மனிதர்கள் யார்? ஆசை இல்லாதவர்கள் மனிதனே இல்லை. அதனால் இப்படத்தின் ட்ரெய்லருக்கு ஹாட்ஸ் ஆஃப்.  


தயாரிப்பாளர் பாராட்டும் அளவிற்கு ஒரு இயக்குநர் இருக்கிறார் என்றால்.. அவரை நாமும் பாராட்ட வேண்டும். தயாரிப்பாளர் வேறு ஒரு படத்தின் பணிகளை நிறுத்திவிட்டு இப்படத்தின் இப்படத்தின் பணிகளை தொடங்கி இருக்கிறார் என்றால், இதற்காக இயக்குநரை பாராட்ட வேண்டும். அவருக்கு ஆதரவாக நின்ற தயாரிப்பாளரின் புதல்வியையும் பாராட்ட வேண்டும். 'லவ் டுடே' படத்திற்குப் பிறகு இந்த 'சிக்லெட்ஸ்' படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். '' என்றார்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ‘ஹார்ட் பீட் - ரிதம் ஆஃப் லைஃப்’ சீரிஸை அறிவித்துள்ளது !!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்  ‘ஹார்ட் பீட் - ரிதம் ஆஃப் லைஃப்’ சீரிஸை அறிவித்துள்ளது !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸுக்கு  ஹார்ட் பீட் என்று பெயரிட்டுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியீடாக, சமீபத்தில் வெளியிடப்பட்ட, ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்களான "மத்தகம் மற்றும் லேபிள்"  சீரிஸ்கள், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பைக் குவித்தது. இந்நிலையில்,  தற்போதைய புதிய சீரிஸான  'ஹார்ட் பீட்' சீரிஸுக்கு, ரசிகர்களிடம் இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.  

இந்த சீரிஸின் டைட்டிலை  ஒரு அழகான சிறிய வீடியோவில், டைட்டில்  தொடரின் பெயர் மற்றும் அதன் கவர்ச்சியான, 'ரிதம் ஆஃப் லைஃப்'  எனும் டேக் லைனுடன் வெளியிட்டது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்த சீரிஸ் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். 

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: 
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின்  பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது

Lecco Cucina: Unveiling innovative Italian designs in Neelankarai, ECR, Chennai

Lecco Cucina: Unveiling innovative Italian designs in Neelankarai, ECR, Chennai
Chennai: January 2024: Brace yourself for an extraordinary transformation of your living spaces into stunning displays of both beauty and functionality as Lecco Cucina, the epitome of Italian-inspired modular kitchens and wardrobes, prepares to make its grand debut in Chennai, East Coast Road. The inauguration of our newest Experience Centre is set for January 20th, 2024, promising a unique blend of elegance and innovation.

Spanning an impressive 2000 square feet, our showroom at Plot No.1, 1st Floor, M.A. Vaithiyalingam Salai, East Coast Road, Neelankarai, showcases exceptional designs that perfectly complement your unique aesthetic sensibilities.

Lecco Cucina is not just a brand; it's a vision of making Italian design accessible to every Indian homeowner. 
What distinguishes us from the rest is our unwavering dedication to innovation. Our designs aren't just stylish; they are groundbreaking, offering a diverse range of options that cater to varying aesthetics and space requirements. With Lecco Cucina, you're not just getting a modular kitchen or wardrobe; you're inviting a piece of Italy into your home.

We were born from a dream of bringing the best of Italian design concepts to Indian households. Our mission is clear - to become the leading chain of modular kitchens and wardrobes in India. We aim to make the most exquisite designs available to all, without compromising on quality or affordability.

What sets Lecco Cucina apart is our unswerving dedication to blending functionality with aesthetics. Our designs are not just visually appealing; they are practical, transforming your spaces into works of art that stand the test of time. The quality of our offerings is guaranteed by German engineering, ensuring that each piece you bring home is crafted to perfection.

Elevate your living experience with our carefully curated combos for 3BHK, 2BHK & 1BHK homes, designed to transform your space into a cozy and stylish haven. From a fully equipped kitchen to a spacious wardrobe, a comfortable bed, a TV unit, and even a convenient shoe rack – everything you need to create your dream a reality, under one roof.

In the foreseeable future, Lecco Cucina endeavours to disseminate its exquisite Italian-inspired designs throughout every nook and cranny of India. By the year 2025, our utmost aspiration is to establish an all-encompassing presence across the nation, bestowing the delight of exceptional design upon each and every Indian household. Our expansion endeavours are not solely driven by growth but rather by the pursuit of generating further prospects for homeowners to partake in the splendour and practicality offered by Lecco Cucina.
Visit our showroom at Plot No.1, 1st Floor, M.A. Vaithiyalingam Salai, East Coast Road, Neelankarai, Chennai – 600115, or explore our offerings at www.leccocucina.com.

தூக்குதுரை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவன்ட்!

‘தூக்குதுரை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவன்ட்!

ஓப்பன் கேட் பிக்சர்ஸ், தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்த் வழங்கும், டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, இனியா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 25 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தூக்குதுரை’. இதன் ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. 

ஒளிப்பதிவாளர் ரவிவர்மா பேசியதாவது, "'தூக்குதுரை' என்னுடைய முதல் படம். தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்துக்கு நன்றி. படத்தில் எல்லோருமே கடினமாக உழைத்துள்ளனர். படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்" என்றார். 

எடிட்டர் ஸ்ரீதர், "படத்தில் இயக்குநர், தயாரிப்பாளர்களுடன் பணிபுரிந்து விடலாம். ஆனால், இந்த மேடை கொஞ்சம் கஷ்டம் தான். எங்களுக்கு மேடையில் பேச கன்டென்ட் இல்லாமல் இல்லை. எனக்கும் இயக்குநருக்கும் நடக்கும் அந்த மேஜிக் ட்ரிக்கை இங்கே சொல்லிவிட்டால் படத்தில் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும். அந்த மேஜிக் டிரைய்லரில் இருந்தது போல, நிச்சயம் படத்திலும் இருக்கும். திரையரங்குக்கு வந்து படத்தை பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்" என்றார்.

இசையமைப்பாளர் மனோஜ் கே.எஸ்., “தயாரிப்பாளர்கள், இயக்குநர், படத்தில் நடித்துள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. படம் முழுக்க முழுக்க கமர்ஷியலாக உருவாகி இருக்கிறது. நீங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழும் அளவுக்கு படத்தின் கதையும் விஷூவல்ஸூம் வந்திருக்கிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், "'தூக்குதுரை' படத்தின் மூலம் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மகேஸ் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். மகேஸ் என்னுடய டான்ஸ் கிளாஸ் மாணவர். எதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அவருடைய இந்த முயற்சிக்கு வாழ்த்துகள்.  தயாரிப்பாளர்கள் அரவிந்த், அன்பு, வினோத் என மூன்று பேருமே எங்களுக்கு நிறைய ஆதரவு கொடுத்தார்கள். படத்திற்கான புரோமோ பாடல் சிரிக்க சிரிக்க நல்ல கான்செப்ட்டோடு வந்திருக்கிறது. படமும் நன்றாக வந்திருக்கிறது. சென்றாயன், பாலசரவணன் இந்தப் பாடலில் குழந்தைகளுக்குப் பிடித்தபடி ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்! படத்தைத் திரையரங்குகளில் பாருங்கள்!"

நடிகர் கும்கி அஸ்வின், “இந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. நடிப்பு, நடனம் என நீண்ட நாள் கழித்து இந்தப் படம் எனக்கு நிறைவாக அமைந்துள்ளது”.

நடிகர் சென்றாயன், “படத்தின் டைட்டில் 'தூக்குதுரை' போலவே படமும் ரொம்ப பாசிடிவாக, நன்றாக வந்துள்ளது. ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர்கள், படக்குழுவினர் என எல்லாருமே தங்களது சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளனர். இந்தப் படத்தின் மூன்று தயாரிப்பாளர்களும் நல்ல மனிதர்கள். ’பணத்தைச் சேர்த்து வைத்து படம் தயாரிக்க வந்துள்ளோம். நல்ல படம் வேண்டும்’ என இயக்குநரிடம் கேட்டார்கள். அதுபோலவே வெற்றிப் படத்தை இயக்குநர் கொடுத்துள்ளார். படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம். படத்தைத் திரையரங்குகளில் பார்த்து வெற்றி கொடுங்கள்”.

நடிகர் பால சரவணன், “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்தப் படம் எனக்கு முக்கியமான ஒன்று. படத்தின் தயாரிப்பாளர்கள் மூன்று பேருமே உதவி இயக்குநர்கள் போல, இந்தப் படத்திற்காக இறங்கி வேலைப் பார்த்தார்கள். யோகிபாபு, நான், சென்றாயன் என எல்லோருமே பரபரப்பாக ஒரே நேரத்தில் ஐந்து படங்கள் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள்தான். எங்கள் காம்பினேஷன் காட்சியில் டேட்ஸ் பிரச்சினை வரும்போது, மற்ற பட இயக்குநர்களிடம் தன்மையாகப் பேசி பிரச்சினை வராமல் தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்த்தான் ஒருங்கிணைத்தார்கள். சிறிய பட்ஜெட் படம் போல இல்லாமல், பெரிய பட்ஜெட் படத்திற்கு எப்படி செலவு செய்வார்களோ அதை எல்லாம் மறுக்காமல் தயாரிப்பாளர்கள் செய்தார்கள். படம் அவர்களுக்காகவே நிச்சயம் பெரிய வெற்றிப் பெறும்".

தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் சம்பந்தம், "'தூக்குதுரை' படம் ஜனவரி 25 அன்று வெளியாகிறது. மீடியாவும் மக்களும் படத்திற்கு ஆதரவு தர வேண்டும். சினிமாவில் இருக்கக்கூடிய தயாரிப்பாளர்களில் 10%  பேர் முழு நேரமாக சினிமா செய்து கொண்டிருக்கின்றனர். மீதமிருக்கும் 90 சதவீதம் பேர் சினிமாவை பார்த்து விரும்பி தாங்களும் அதில் பங்கு பெற வேண்டும் என்ற ஆர்வத்தோடு தான் வருகிறார்கள். நானும் அப்படியானவன்தான். இந்த 90% பேர் தான் முக்கியமான, புது திறமையாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தமிழ் சினிமாவை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எடுக்கும் படங்கள் வெற்றி பெற்றால் தான் பல திறமையானவர்களுக்கான வாய்ப்பு கிடைத்து பல நல்ல படங்கள் உருவாகும். இந்தப் படத்திற்கு அப்படியான பெரிய வெற்றிக் கொடுங்கள்". 

நடிகர் மகேந்திரன், "சின்ன வயதில் இருந்து கடந்த 30 வருடங்களாக தமிழ் சினிமாவை பார்த்துக் கொண்டிருக்கிறேன். பிற மொழியில் உள்ளவர்கள் நம் தமிழ் சினிமாவை பெரிதாக பார்க்கிறார்கள். இங்கு பெரிய படங்களுக்குத்தான் அதிக தியேட்டர்கள் கிடைக்கிறது. சின்ன பட்ஜெட் படங்களுக்குப் அதிக திரையரங்குகளோ, நல்ல டைமிங்கோ கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. அதில் நிறைய நடிகர்கள் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். பெரிய படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நல்ல கதைகள் கொண்ட சின்ன பட்ஜெட் படங்களை வருடத்திற்கு இரண்டாவது தயாரிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஸ்ரீனிவாஸ் சார் சொன்னதுபோல அந்த 90% தயாரிப்பாளர்கள்தான் எல்லா மொழி சினிமாவையும் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால், தயவுசெய்து தியேட்டர் கொடுத்து படத்தை வெற்றிப் பெற வையுங்கள்".

நடிகர் சத்யா, "இந்தப் படம் நீங்கள் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் இருக்கும். இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. பாலசரவணன், சென்றாயன் என அனைவருமே கல்லூரி நண்பர்கள் போல படப்பிடிப்புத் தளத்தில் அவ்வளவு கலாட்டா செய்வார்கள். அன்பு சார், மாரிமுத்து சார் நம்மோடு இல்லை. நிச்சயம் அவர்களுடைய ஆசீர்வாதம் நமக்கு இருக்கும். படத்தை எல்லோரும் திரையரங்குகளில் 25 ஆம் தேதி பார்த்து வெற்றிக் கொடுங்கள்". 

உத்ரா புரொடக்சன்ஸ், ஹரி உத்ரா, "உத்ரா புரொடக்சன்ஸூக்கு 'தூக்குதுரை' தான் முதல் பெரிய படம். அந்த வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர்கள் அரவிந்த், வினோத், அன்பு, இயக்குநர் டெனிஸூக்கு நன்றி. படம் வெளியே கொண்டு வருவதில் நிறைய சிக்கல்கள் உள்ளது. படங்களுக்கு அதிக ஸ்கிரீன் கிடைப்பதில் கார்ப்பரேட்டுடைய ஆதிக்கம் உள்ளது. படங்களுக்கு மக்கள் வரவில்லை என்றால் கூட, திரையரங்குகளில் அதுபோன்ற படங்கள் தான் ஆக்கிரமித்து இருக்கிறது. இருந்தாலும் நல்ல படங்கள் வரும்போது மக்களும் மீடியாவும் ஆதரவு கொடுக்கத் தவறுவதில்லை. கே.எஸ். ரவிக்குமார், சுந்தர்.சி போன்ற இயக்குநர்களுக்குப் பிறகு இப்போதுள்ள இயக்குநர்கள் யாரும் ஃபேமிலி எண்டர்டெயினரோடு கூடிய காமெடி படங்கள் இயக்குவதில்லை. அப்படியான கதையாக 'தூக்குதுரை' வந்திருக்கிறது. படம் வெளியான பின்பு நிச்சயம் இந்தப் படக்குழுவுக்கு நல்ல எதிர்காலம் கிடைத்திருக்கிறது. கார்ப்பரேட் கையில் இருக்கும் திரையரங்குகளை அனைத்து சங்கங்களும் சேர்ந்து முறைப்படுத்தி சின்னப் படங்களுக்கும் ஆதரவு தர வேண்டும். அது 'தூக்குதுரை' படத்தில் இருந்து நடக்க வேண்டும். நன்றி!".

நடிகர் கூல் சுரேஷ், " நண்பர்களாக அனைவரும் இணைந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். என்னை ஹீரோவாக வைத்து அடுத்து ஒரு படத்தை எடுக்க போகிறேன் என இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அரவிந்த் சொல்லி இருக்கிறார். தூக்கு முழுவதும் பணமாக சேரும் அளவுக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். அஜித் சாருடைய அல்டிமேட் கதாபாத்திரப் பெயரை இந்த படத்திற்கு டைட்டிலாக வைத்துள்ளனர். அதனால் நிச்சயமாக அஜித் சார் ரசிகர்களும் இந்த படத்திற்காக ஆதரவு கொடுப்பார்கள். யோகிபாபு, சென்றாயன், பால சரவணன், மகேஸ் இவர்கள் படத்தில் இருப்பதை பார்க்கும்பொழுது படம் நிச்சயமாக கலகலப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை வருகிறது. சமீபத்தில் நல்ல படங்களை ரிலீஸ் செய்து கொண்டிருக்கும் ஹரி உத்ரா புரொடக்‌ஷன்ஸூக்கு வாழ்த்துக்கள்! அஜித் சார், விஜய் சாரை ஆடவைத்த ஸ்ரீதர் மாஸ்டர் இந்த படத்திற்கு நடனம் அமைத்திருப்பது மிகப்பெரிய பலம். இயக்குநர் டெனிஸூம் அடுத்தடுத்து வெவ்வேறு உயரங்களுக்கு செல்வார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்!".

நடிகர் மகேஸ் சுப்ரமணியன், “இந்த மேடை எனக்கு 15 வருட கனவு. இந்தப் படம் எனக்கு முதல் படம். எனக்கு வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்த் மூன்று பேருக்கும் நன்றி. சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவனை நம்பி சினிமாவில் வாய்ப்புக் கொடுத்திருந்தார்கள். இந்த சமயத்தில் அன்பு சாரை நான் மிஸ் செய்கிறேன். எனக்கு நிறைய ஊக்கம் கொடுத்திருக்கிறார். உங்கள் ஆசீர்வாதத்தோடு இந்தப் படம் நிச்சயம் வெற்றிப் பெறும். பல போராட்டங்களைத் தாண்டி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. நிச்சயம் மீடியா மற்றும் மக்கள் ஆதரவு தேவை. என்னைப் புதுமுகமாக பார்க்காமல் ஆதரவு கொடுத்த படக்குழுவினர், தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் டெனிஸ் இல்லை என்றால் நான் இல்லை. நான் நடிக்க நினைத்த விஷயத்திற்கு எந்தத் தடையும் சொல்லாமல் ஆதரவு கொடுத்தார். படம் நிச்சயம் வெற்றிப் பெறும். சினிமாவில் வரவேண்டும் என ஆசைப்பட்ட விஷயம் இன்று நடந்திருக்கிறது. படமும் சிறப்பாக வந்திருக்கிறது. குடும்பத்தோடு வந்து பார்த்து ஆதரவு கொடுங்கள்”.

இணைத் தயாரிப்பாளர் வினோத்குமார், “இந்தப் படம் இவ்வளவு பெரிதாக வர முக்கிய காரணம் அன்பும் அரவிந்தும்தான். நாங்கள் மூன்று பேரும் நண்பர்கள். இந்த நட்புதான் படம் செய்யும் அளவுக்கு வந்தது. பத்துவருடத்திற்கு முன்னால் நாங்கள் பேசிய விஷயம் இப்போது நிஜமாகி இருக்கிறது. ‘முத்தழகு’, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்த மகேஸ் இதில் லீடாக நடித்திருக்கிறார். படத்தில் உள்ள மற்ற நடிகர்கள், சிறந்த அவுட்புட் கொடுத்த தொழில்நுட்பக் குழுவினர்கள் அனைவருக்கும் நன்றி. கிளைமாக்ஸ் போர்ஷனில் படத்தில் உள்ள முக்கிய நடிகர்கள் அனைவரும் இணைந்து நடிக்கும்படியான ஒரு காட்சி. செட் போட அதிக பட்ஜெட் தேவைப்பட்டது. அரவிந்திடம் கேட்டபோது, தரமான படமாக வரவேண்டும், படத்தை யாரும் குறை சொல்லக் கூடாது என்பதற்காக உடனே சம்மதித்தார். நடிகர்கள் தேதி கிடைத்ததும், இரண்டு நாட்களில் ஈவிபியில் பிரம்மாண்டமான செட் போட்டு அசத்தினார் கலை இயக்குநர் பாக்யராஜ். இந்த ஆக்‌ஷன் காட்சிகளில் நடிகர்களும் சிறப்பான ஒத்துழைப்புக் கொடுத்தனர். இந்தப் படத்தில் ஸ்ரீதர் மாஸ்டரும் சிறப்பான பாடலைக் கொடுத்துள்ளார். நிச்சயம் அந்தப் பாடல் குழந்தைகளுக்குப் பிடிக்கும். ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”.

தயாரிப்பாளர் அரவிந்த், “இந்தத் தருணத்திற்காக நாங்கள் பல வருடம் காத்திருந்தோம். நண்பர்களாக நாங்கள் பேசி உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம்தான் இது. அமெரிக்காவில் பல வருடங்கள் வேலை பார்த்ததால், இந்தியாவை மிஸ் செய்ய ஆரம்பித்தேன். இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய காரணமும் அதுதான்.  அன்பு என்னுடைய சகோதரர் போன்றவர். அவர் இருக்கும் தைரியத்தில்தான் சினிமாவுக்கு வந்தேன். இவ்வளவு பெரிய விஷயத்தையும் தொடங்கினோம். ஆனால், இந்த மேடையில் அன்பு இல்லை. நிச்சயம் அவரது ஆசீர்வாதம் இருக்கும். நாங்கள் புதியவர்கள் என்பதால் யோகிபாபு, இனியா, மாரிமுத்து, பால சரவணன் என அனுபவசாலிகளை வைத்துக் கொண்டோம். மாரிமுத்து சார் எங்களுக்கு சிறப்பான ஆதரவைக் கொடுத்தார். அதை நாங்கள் மறக்க மாட்டோம். அவர் இந்நேரம் இருந்திருந்தால் இந்த மேடை இன்னும் பெரிதாகி இருக்கும். அவரை மிஸ் செய்கிறோம். பாலசரவணன், அஸ்வின், சென்றாயன், மகேஸ் என நடிகர்கள் அனைவரும் எங்களோடு நட்போடு பழகி படத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்துள்ளனர். இயக்குநர் டெனிஸூம் சினிமா மீது அதிக ஆர்வம் கொண்டவர். எங்களை எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். தொழில்நுட்பக் குழுவினரும் ஆர்வமாக உழைத்துக் கொடுத்துள்ளனர். எங்கள் நிறுவனத்திற்கும் ஆர்வத்திற்கும் நீங்கள் ஆதரவு கொடுத்து வெற்றிக் கொடுக்க வேண்டும்” என்றார். 

இயக்குநர் டெனிஸ் மஞ்சுநாத், “தயாரிப்பாளர் அன்பு மற்றும் நடிகர் மாரிமுத்து எங்கள் படத்தில் ஆரம்பத்தில் இருந்தே பயணித்தார்கள். ஆனால், அவர்கள் இப்போது எங்களோடு இல்லை என்பது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. படத்தை பிப்ரவரி 9 அன்று வெளியிட திட்டமிட்டோம். ஆனால், அதன் பிறகு நிறைய பெரிய படங்கள் இருக்கிறது என்பதால், சீக்கிரமாக எடுத்த முடிவு தான் இந்தப் பட ரிலீஸ். அதனால், படத்தில் உள்ள முக்கிய நடிகர்கள் பலரால் இன்று நிகழ்வுக்கு வரமுடியவில்லை. தயாரிப்பாளர்கள் அன்பு, அரவிந்த், வினோத் மூவரும் இந்தப் படத்திற்காக அவ்வளவு உழைத்துள்ளனர். கிராமம், நகரம் எனப் பல்வேறு லொகேஷனில் இந்தப் படத்தை எடுத்துள்ளோம். எந்தவிதமான வன்முறையும் இல்லாமல் குடும்பத்தோடு ஜாலியாக நீங்கள் படம் பார்க்கலாம். மல்டி ஸ்டார்ஸ் வைத்து படம் எடுப்பது கடினமானது இல்லை என என் படக்குழு எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது. படம் ஜனவரி 25 அன்று வெளியாகிறது. படத்தைப் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்” என்றார்.

Friday, January 19, 2024

Penang Convention & Exhibition Bureau Presents the 7th Edition of Penang Roadshow to India 2024

Penang Convention & Exhibition Bureau Presents the 7th Edition of Penang 

Roadshow to India 2024


Chennai 19th January 2024: Penang Convention & Exhibition Bureau (PCEB) is thrilled to unveil the highly anticipated 7th edition of the Penang Roadshow to India 2024, spanning across four diverse cities from 15 to 22 January – Mumbai (15 January), New Delhi (17 January), Chennai (19 January), and Kochi (22 January). This expansive roadshow provides a unique opportunity for Indian travel enthusiasts and industry professionals to immerse themselves in the offerings of Penang, a destination celebrated for its unique blend of cultural richness and contemporary allure.

 

The ‘Penang Odyssey’ campaign is a strategic initiative by PCEB aimed at elevating Penang as the preferred destination for both business meetings and leisure escapades in the Indian market. With a dual focus on business and leisure, the campaign strives to foster mutually beneficial relationships with India's travel agents. The Penang Odyssey campaign is poised to explore new avenues to captivate the Indian market, recognizing its significance as a key market for Penang.

 

Anticipate a gathering of approximately 200 buyers from each city, creating a dynamic platform for networking, collaboration, and business expansion. The Penang Odyssey aims to showcase Penang's diverse offerings, forging connections that transcend borders and unveiling the immense potential for collaboration between Penang and the Indian travel industry.

 

In 2023, Penang hosted around 600 events with 160,000 delegates, signaling a robust event calendar with an estimated economic impact (EEI) of RM1 billion. This accomplishment  sends  a resounding message of confidence, highlighting Penang's readiness and capability to host large-scale, world-class events, reinforcing its position as a premier destination for business and leisure.

 

Malaysia's commitment to facilitating seamless travel experiences is underscored by the recent nationwide introduction of a visa-free regime, allowing stays of up to 30 days starting from 1 December 2023 to 31 December 2024. This strategic move enhances accessibility  for  Indian  visitors  and  presents  a  significant  opportunity  to  further strengthen direct airline connectivity with India. Recognizing the growing demand and interest from the Indian market, Penang is actively working to establish additional direct flights, providing more convenient options for those looking to explore the vibrant charm of Penang.

 

 

Embark on a journey of possibilities at the 7th edition of the Penang Roadshow to India

2024.   Experience   the   dynamic   convergence   of   culture,  business,  and  leisure, positioning Penang as the prime destination for your next extraordinary adventure.

 

For more information of the event, visit here: www.penangroadshow.com  

Thursday, January 18, 2024

சிங்கப்பூர் சலூன்’ டிரெய்லர் வெளியீட்டு விழா!*

*’சிங்கப்பூர் சலூன்’ டிரெய்லர் வெளியீட்டு விழா!*

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில், கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. 

இதில் எடிட்டர் ஆர்.கே. செல்வா, “’சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நான் இருக்க முக்கிய காரணம் எனது நண்பர், சகோதரர் ஆர்.ஜே. பாலாஜிதான். அவர்தான் என்னை இயக்குநர் கோகுலுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். படத்தின் கதை ஃபன்னாகவும் அதே சமயம் எமோஷனலாகவும் இருந்தது. கோகுல் சாரின் ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?’ படம் தியேட்டரில் ரொம்ப என்ஜாய் பண்ணிப் பார்த்தேன். அதில் விஜய் சேதுபதி சார் வேற மாதிரி நடித்திருந்தார். அப்படியான ஒரு இயக்குநரிடம் நான் பணிபுரிய போகிறேன் என்பதே மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் ஆர்.ஜே. பாலாஜியை நல்ல நடிகராகப் பார்க்கலாம். இந்த வாய்ப்புக் கொடுத்த ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி. சத்யராஜ் சார் படத்தில் செம ஃபன் செய்திருக்கிறார்”

பின்னணி இசை கொடுத்த ஜாவித் ரியாஸ், “இந்தப் படத்திற்குள் நான் தாமதமாகதான் வந்தேன். வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் கோகுலுக்கு நன்றி. கடந்த வருடத்தில் எனக்கு நடந்த ஒரே நல்ல விஷயம் இந்தப் படம்தான். நிச்சயம் படத்தை என்ஜாய் செய்வீர்கள். நன்றி”.

இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின், “ஆர்.ஜே. பாலாஜி சாருக்கும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷூக்கும் நன்றி. ’வடகறி’தான் எங்களுக்கு முதல் படம். அதில்தான் ஆர்.ஜே. பாலாஜி சாருடன் எங்களுடைய பயணம் ஆரம்பித்தது. இயக்குநர் கோகுல் சாருடைய காமெடிக்கு நாங்கள் மிகப்பெரிய ரசிகர்கள். படத்தில் இருந்து வெளியான முதல் பாடலுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள். படம் இந்த மாதம் 25 அன்று வெளியாகிறது”.

நடிகர் கிஷன் தாஸ், “இரண்டு வருடங்களுக்கு முன்னால் பாலாஜி அண்ணன், என்னிடம் வந்து இந்தப் படத்தின் கதையைச் சொல்லி பஷீர் கதாபாத்திரம் நீ நடித்தால் நன்றாக இருக்கும் எனச் சொன்னார். கோகுல் சாரும் சிரிக்க சிரிக்க கதை சொன்னார். இந்தப் படத்தில் பல சிறந்த நடிகர்களோடு நடித்திருக்கிறேன். ஆனாலும், எனக்குப் பிடித்த நடிகர் என்றால் அது சத்யராஜ் சார்தான். சின்ன வயதில் இருந்து அவரைப் பார்த்தாலே எனக்குப் பயம். ஆனால், படப்பிடிப்புத் தளத்தில் அவருடைய சின்சியாரிட்டி எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். வாய்ப்புக் கொடுத்த ஐசரி சாருக்கு நன்றி. படத்தில் தொழில்நுட்பக் குழு அனைவரும் சிறப்பாக செய்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் பாலாஜி எனக்கு அண்ணனாகக் கிடைத்துள்ளார். ஜனவரி 25 படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”.

நடிகர் ரோபோ ஷங்கர், “இந்தப் படத்தில் எனக்கு நல்ல வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. ஆர்.ஜே. பாலாஜியை நான் விஜய் என்று கூப்பிடுவேன். அவர் என்னை அஜித் என்று கூப்பிடுவார். மிமிக்ரி ஆர்டிஸ்டாக இருந்த என்னை நல்ல நடிகனாக மாற்றிய இயக்குநர் கோகுலுக்கு நன்றி. எதாவது விஷயம் தெரியவில்லை என்றால் நாம் கூகுளை தேடுவோம். அதுபோல, நடிப்பு வரவில்லை என்றால் நாம் கோகுலைத் தேட வேண்டும். விழாவிற்கு வந்துள்ள விஜய்சேதுபதி சாருக்கு நன்றி. சத்யராஜ் சாரிடம் இந்தப் படத்தில் நிறையக் கற்றுக் கொண்டேன். படம் ஜனவரி 25 அன்று வெளியாக காத்திருக்கிறேன்”.

தயாரிப்பாளர் ராஜன், “ஐசரி கணேஷின் அப்பா ஐசரி வேலன் கண்ட நல்ல கனவுகளை எல்லாம் ஐசரி கணேஷ் நிறைவேற்றி வருகிறார். ‘மாங்குடி மைனர்’ என்ற படத்தில் ரஜினி வில்லன். அதில் கணேஷ் காமெடியன். அதன் பிறகு தயாரிப்பாளர் ஆனார். அப்பாவைப் போலவே பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ் என பலரும் இருக்கும் இந்தப் படமும் நிச்சயம் வெற்றிப் பெறும். கோகுல் சிறந்த இயக்குநர். நடிகர் விஜய் சேதுபதிக்கு இந்த இடத்தில்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். நான் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் விநியோக சங்கத் தலைவராக உள்ளேன். இப்போது அங்குள்ள விநியோகஸ்தகர்கள் சங்கம் மிகவும் கடினமான சூழலில் உள்ளது. ஐசரி கணேஷிடம் இதுபற்றி சொல்லி பொருளாதார உதவி கேட்டபோது, எதைப்பற்றியும் யோசிக்காமல் ஐந்து லட்சம் கொடுத்தார். அதன் பிறகு, ‘நம்முடைய பல படங்களை விநியோகம் செய்தவர்கள் கடினமான சூழலில் உள்ளார்கள். அவர்களுடைய மருத்துவச் செலவுக்கு உதவி வேண்டும்’ எனப் பல நடிகர்களுக்கு கடிதம் எழுதினேன். அதைப் பார்த்துவிட்டு அவரது மேனேஜர் மூலமாக ஒரு லட்ச ரூபாய் பணத்தை ஆன்லைன் மூலம் உடனே கொடுத்தார் விஜய் சேதுபதி. அதற்கு இந்த மேடையில் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். பல பல்கலைக்கழகங்களுக்கு கடவுள் பெயர் வைத்திருப்பார்கள். ஆனால், ஐசரி மட்டும்தான் தன் தலைமுறைக்கும் பல்கலைக்கழகத்திற்கும் அப்பா பெயரை வைத்திருக்கிறார். அவரைப் போலவே நீங்களும் தாய் தந்தையரை மறக்காதீர்கள். படத்திற்கும் வாழ்த்துகள்” என்றார். 

அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் டி.சிவா, “இன்று தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மிக முக்கியமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று வேல்ஸ் இண்டர்நேஷனல்ஸ் கம்பெனி, ஐசரி கணேஷ் சார். பல பிசினஸ் அவருக்கு இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி அவர் சினிமாவை இவ்வளவு ஆர்வமாக செய்கிறார் என்றால் சினிமா மீது அவருக்குள்ள அந்த காதல்தான் காரணம். சினிமாத்துறையினர் சார்பாக அவருக்கு நன்றி சொல்கிறேன். அவருடைய நல்ல மனதிற்கு படம் நிச்சயம் வெற்றிப் பெறும். படத்தின் டிரெய்லர் அருமையாக இருந்தது. படத்தின் ரிலீஸ் தேதியும் சரியாக அமைந்துள்ளது. சத்யராஜ் சார் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பொக்கிஷம். அவர் சாமி கும்பிடுவதில்லை என்றால் கூட சினிமாவைத் தெய்வமாக மதிக்கிறார். இப்போதும் கூட படங்கள், விழாக்கள், அடுத்தடுத்து பேட்டிகள் என சுறுசுறுப்பாக உள்ளார். இப்போது தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கான அத்தனை இலக்கணங்களையும் விஜய் சேதுபதி உடைத்துவிட்டார். அவரவருடைய படங்களின் புரோமோஷனுக்கே கெஞ்ச வேண்டிய சூழல் இருக்கும் நிலையில், இன்னொருவர் படத்திற்காக விஜய்சேதுபதி இங்கு வந்திருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இந்தப் பண்பு உங்களை நிச்சயம் உயர்த்தும். விஜயகாந்த் சார் நடிகர் என்பதைத் தாண்டி அவர் நல்ல மனிதர் என்ற பெயர் அவருக்கு கடைசி வரை வந்தது. அதுபோலதான் விஜய்சேதுபதிக்கும் கடைசி வரை வர வேண்டும். உருவத்தில் மட்டுமல்ல, குணத்திலும் அவர் விஜயகாந்த் சார்தான். ஆர்.ஜே.வாக இருந்து நடிகராக மாறியுள்ள பாலாஜியின் வெற்றி ஒவ்வொரு சாமானியரின் வெற்றிதான். படம் வெற்றியடைய வாழ்த்துகள்!”

இயக்குநர் விஜய், “கணேஷ் அங்கிள் காலேஜில்தான் நான் படித்தேன். என்னுடைய கனவைப் புரிந்து கொண்டு என்னை முன்னேற்றியுள்ளார். என்னை மட்டுமல்ல, நிறைய பேருக்கு கணேஷ் சார் உதவிகள் செய்து வருகிறார். பாலாஜி செய்யும் விஷயங்கள் எல்லாமே நேர்த்தியாக இருக்கும். கோகுல் சார் படங்களின் மிகப்பெரிய ரசிகன் நான். விஜய்சேதுபதி சாரின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்திற்கு வாழ்த்துகள். சத்யராஜ் சாரின் ரசிகன் நான். இவர் இந்தப் படத்தில் இருப்பது பெரிய பலம் என்பது படம் வெளியான பின்பு தெரியும். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!”.

நடிகர் சத்யராஜ் பேசியதாவது, “சரியான மனிதரிடத்தில் இருந்தால் நமக்கும் சரியான விஷயங்கள் நடக்கும். அப்படி எம்.ஜி.ஆரிடம் இருந்த நல்ல குணங்கள் ஐசரி வேலனுக்கும் அவருடைய மகன் ஐசரி கணேஷூக்கும் வந்திருக்கிறது. வாழ்த்துகள். 45 வருடங்கள் சினிமாவில் இருக்கிறேன் என்றால் சலூனுடைய முக்கியத்துவம் என்ன என்பது எனக்குத் தெரியும். ஹேர்ஸ்டைல் என்பது வாழ்க்கையில் முக்கியமான விஷயம். எம்.ஜி.ஆர். சினிமாவில் இருந்தபோது ஒரு ஹேர்ஸ்டைலிலும் பொது வாழ்க்கைக்கு வந்தபோது வேறொரு லுக்கிலும் இருந்தார். அதுபோலதான் ரஜினிகாந்த், விஜயகாந்தும். இப்படி எல்லோருடைய வாழ்க்கையிலும் முக்கியமான, ஹேர்ஸ்டைலை வைத்து படம் எடுப்பது நல்ல விஷயம். சினிமாவில் ஹீரோவுக்கு வெற்றிகள் வர வர அடுத்தடுத்தப் படங்களில் பட்ஜெட்டை ஏற்றினால் மட்டுமே வேறொரு தளத்திற்குப் போக முடியும். ’எல்.கே.ஜி.’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘ரன் பேபி ரன்’ இப்போது ‘சிங்கப்பூர் சலூன்’ என பாலாஜியின் படங்களின் பட்ஜெட் அடுத்தடுத்து அதிகமாகிக் கொண்டேப் போகிறது. குறிப்பாக, இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் அவ்வளவு கிராஃபிக்ஸ் பணிகள் இருக்கிறது. சிறப்பான சிஜி பணிகளுக்கு தயாரிப்பாளர் பணம் தர வேண்டும். ஒவ்வொரு ஹீரோவுக்கும் எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும் என தயாரிப்பாளருக்கு ஒரு மைண்ட்செட் இருக்கும். அதைத்தாண்டி அவர் செலவழிக்கிறார் என்றால் அந்தப் படத்தின் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கைதான் அதற்குக் காரணம். இதற்கு முன்பு கவுண்டமணி, மணிவண்ணன், வடிவேலு இவர்களுடன் சேர்ந்துதான் காமெடி செய்திருக்கிறேன். ஆனால், நானே ஒத்தைக்கு ஒத்தையாக நின்று காமெடி செய்தது இந்தப் படத்தில்தான். திருவிளையாடல் நாகேஷ் போல, ‘தனியா நடிக்க வச்சுட்டானே’ என்றுதான் நடித்தேன். இயக்குநர் கோகுலின் அந்த தைரியத்திற்கு நன்றி. வில்லன் ரோல் நடித்துவிட்டு கெஸ்ட் ரோல் நடிக்க வேண்டும் என்றால் யோசிப்பேன். ஆனால், அந்த தைரியத்தை விஜய்சேதுபதி எனக்குக் கொடுத்தார். அவருக்கு ‘மக்கள் செல்வன்’ பட்டம் பொருத்தமானது. நான் முதல் படத்தில் நடித்ததைப் போல இந்த சிங்கப்பூர் சலூனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ஏனெனில், காமெடி நடிகர் என எனக்கு இன்னொரு கதவு திறக்கப்படும்” என்றார்.

நடிகர் ஜான் விஜய், “இந்தப் படத்தில் வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் கோகுல், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி. நானும் ரேடியோவில் இருந்திருக்கிறேன். நான் பார்த்தது வரையில் இன்றைய தேதியில் டிரெண்டியான ஆர்.ஜே. பாலாஜிதான். சினிமாவிலும் எண்டர்டெயின்மெண்ட்டோடு நல்ல மெசேஜும் சொல்வார். கோகுலும் திறமையான இயக்குநர். சலூன் கடைக்காரர்களுக்கு புது ஸ்டைல் இந்தப் படம் கொடுக்கும்”.

டான்ஸ் மாஸ்டர் பூபதி, “கோகுல் சாரின் ‘ரெளத்ரம்’ தவிர எல்லாப் படங்களிலும் நான் வேலை செய்திருக்கிறேன். வாய்ப்புக்கு நன்றி சார். சலூன் என்பதையும் தாண்டி இந்தப் படத்தில் நிறைய விஷயம் உள்ளது. டான்ஸ் மாஸ்டருக்கு இப்படி ஒரு படம் கிடைப்பது அதிர்ஷ்டம். ஐசரி கணேஷ் சார், ஆர்.ஜே. பாலாஜி சார் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.

நடிகர் தலைவாசல் விஜய், “இந்த வாய்ப்புக் கொடுத்த கோகுலுக்கு நன்றி. விழாவுக்கு வந்திருக்கும் ராஜன் சார், விஜய்சேதுபதி, ரோபோ ஷங்கர் அனைவருக்கும் நன்றி. எல்லோரும் சொன்னதுபோல, கோகுல் திறமையான இயக்குநர். சத்யராஜ் சார் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன். ஆர்.ஜே. பாலாஜி செட்டில் இருந்தால் எங்கள் பிரச்சினை மறந்து விடும். எனக்குமே இந்தப் படம் மிகவும் எதிர்பார்ப்பு இருக்கும் ஒன்று. குழந்தைகள் என்ன ஆகவேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை பெற்றோர்கள் நிறைவேற்றித் தர வேண்டும். ஆனால், காலப்போக்கில் பெற்றோர்கள் என்ன ஆகமுடியவில்லையோ அதை தங்கள் பிள்ளைகளின் மேல் திணிக்கிறார்கள். ஆர்.ஜே. பாலாஜி இப்படி ஆக வேண்டும் என்று ஆசைப்படும்போது நான் என்ன முடிவு எடுக்கிறேன் என்பதுதான் விஷயம். ஆர்.ஜே. பாலாஜியுடன் நிறைய காட்சிகள் நன்றாக வந்துள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்”.

இயக்குநர் கோகுல், “ஒரு படத்தின் கண்டெண்ட் வலுவாக இருக்கும்போது, அதை நம்பி தேர்ந்தெடுக்கும் தயாரிப்பாளர்தான் அங்கு ஹீரோ. அப்படி எனக்குக் கிடைத்த சூப்பர் ஹீரோதான் ஐசரி கணேஷ் சார். அவருக்கு நன்றி. அந்த சூப்பர் ஹீரோவை எனக்கு அறிமுகம் செய்தவர் என்னுடைய ஹீரோ ஆர்.ஜே. பாலாஜி. காட்சி சிறப்பாக வரவேண்டும் என்று அவரை நிறைய டார்ச்சர் செய்திருக்கிறேன். அதை எல்லாம் சகித்துக் கொண்டு சிறப்பான அவுட்புட்டைக் கொடுத்திருக்கிறார். பார்பர்கள் கொண்டாடும் படமாக இது இருக்கும். சத்யராஜ் சார் சீனியர் நடிகர். அவர் தேவையான ஒத்துழைப்பைக் கொடுப்பாரா என்ற எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தை எல்லாம் உடைத்து அவர் குழந்தைப் போல ஒத்துழைப்புக் கொடுத்தார். இவருடன் வேலைப் பார்த்தது எனக்கு கிடைத்த ஆசீர்வாதம். நான் ரொம்ப நாளாக யோசித்தப் படம் இது. வாழ்க்கை அடுத்து நமக்கு என்ன அதிசயம் வைத்திருக்கும் என்பது நமக்குத் தெரியாது. அப்படியான படம்தான் ‘சிங்கப்பூர் சலூன்’. நான் இதுவரை எடுத்த படங்களிலேயே இதுதான் சிறந்தது. படக்குழுவினர் அனைவருமே சிறப்பான வேலையைக் கொடுத்துள்ளனர். எனக்கு ஒரு பிரச்சினை என்றால் முதலில் வரும் நபர்களில் விஜய்சேதுபதியும் ஒருவர். அவர் இன்று வந்திருப்பது சந்தோஷம். படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”

நடிகர் விஜய்சேதுபதி, “படத்தின் டிரெய்லர் பார்த்தேன். அருமையாக இருந்தது. அதை விட சூப்பராக ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற டைட்டில் இருக்கிறது. பாலாஜியைத் திரையில் பார்க்க நன்றாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு நானும் பாலாஜியும் மொட்ட மாடியில் ஒரு மணி நேரம் தம் அடித்துக் கொண்டே பல கதைகள் பேசியுள்ளோம். அவருடைய வளர்ச்சி, அவர் தைரியமாக கருத்துகளைப் பேசும் விதம் எல்லாவற்றையும் ரசிக்கிறேன். கோகுல் கொஞ்சம் டார்ச்சர்தான். ஆனால், திறமையான இயக்குநர். அவருடன் வேலைப் பார்த்த இரண்டு படங்களும் மிகச்சிறந்த அனுபவம். இதைவிட மிகப்பெரிய மேஜிக் படங்களில் செய்வார். சத்யராஜ் சாரின் நடிப்பைத் திரையில் பார்ப்பதே அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அவருடைய எந்தப் படத்தையும் பார்ப்பது சிறந்த அனுபவம். அவருடன் சரிக்கு சமமாக நடிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக அது இருக்க வேண்டும்”.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ”இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் விஜய்சேதுபதி சார் ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது, சத்யராஜ் சாருடன் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் நடிக்க வேண்டும் என்று. கோகுல் சாரிடம் அப்படி ஒரு கதை இருந்தால் நான் படத்தைத் தயாரிக்க ரெடி. ’சிங்கப்பூர் சலூன்’ படத்தின் ரிலீஸ் தேதி என்னவோ ஜனவரி 25தான். ஆனால், அதற்கு முன்பு எங்கள் தயாரிப்பில் கோகுலுடைய அடுத்தப் படம் ரெடியாகி விட்டது. உங்களைப் போலவே, நானும் படத்தைத் திரையரங்குகளில் பார்க்க ஆவலாக உள்ளேன். நான் தனியாக நிறைய முறை பார்த்துவிட்டேன். நான் எடுத்தப் படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தப் படம் இது. ஆர்.ஜே. பாலாஜி இதில் வேற பாலாஜியாக அருமையாக நடித்திருக்கிறார். சத்யராஜ் சார் வேற லெவலில் நடித்திருக்கிறார். சிறப்பாக நகைச்சுவை வந்துள்ளது. படம் பிடித்துப் போய் ரெட் ஜெயண்ட்ஸ் விநியோகம் செய்துள்ளது. சேட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி எடுத்திருக்கிறது. அவர்களுக்கு நன்றி. படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக வேலை செய்துள்ளனர். படம் உங்களுக்கும் பிடிக்கும். விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி!”.
   
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, “இந்தப் படத்திற்காக வந்து சிறப்பித்த பெரிய மனிதர்கள் அனைவருக்கும் நன்றி. தலைவாசல் விஜய் சார், ரோபோ ஷங்கர் சார் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். அடுத்து யங் ஹீரோவாக மாறப்போகும் கிஷன் தாஸ், எங்கள் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதற்கு நன்றி. இப்போது அவர் மூன்று படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். எனக்கு ஜோடியாக நடித்துள்ள மீனாட்சி செளத்ரி புரோமோஷனுக்கு நேரம் தர முடியாத அளவிற்கு பிஸியாக இருக்கிறார். ஆமாம், இப்போது அவர் விஜய் சாருக்கு ஜோடி. இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார். சில காரணங்களால் அவராலும் வர முடியவில்லை. நட்புக்காக நடித்துக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜீவா சாருக்கு நன்றி. இவர்கள் தவிர இன்னொரு பெரிய நடிகர் முக்கியமான ஒரு கதாபாத்திரம் நடித்துள்ளார். அதை இப்போது நாங்கள் சொல்லவில்லை. ஒரு ரூபாய் கூட தராமல் அவர் எங்களுக்கு நடித்துக் கொடுத்ததற்கு நன்றி. படத்திற்கு சிறப்பாக உழைத்துக் கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி. இயக்குநர் கோகுல் கூட வேலைப் பார்ப்பது சிரமம் என விஜய்சேதுபதி சொன்னார். நாங்கள் அடித்துக் கொண்டோம் என சில செய்திகள் எல்லாம் பார்த்தேன். அப்படி எல்லாம் இல்லை. கோகுலுடன் வேலைப் பார்ப்பது கஷ்டம்தான். ஏனெனில், அவருடைய கதாபாத்திரத்திற்கு நான் எதிராக இருந்தேன். ஆரம்பத்தில் நிறைய விவாதித்தோம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாகதான் அவருடைய கதைக்கு செட் ஆனேன். இந்தப் பயணம் கடினமாகதான் இருந்தது. ஆனால், ஆர்வத்துடனும் மறக்க முடியாத ஒன்றாகவும் இருந்தது. அடுத்தப் படத்தில் நான் சிறப்பாக நடிக்க இவருடன் வேலைப் பார்த்ததும் முக்கியக் காரணம். இந்தக் கதை மீது நான் வைத்த நம்பிக்கையை ஐசரி கணேஷ் சாரும் வைத்திருந்தார். படத்தில் சலூன் செட் போடவே ஒன்றரை கோடி ஆனது. இதற்கெல்லாம் ஆதரவு கொடுத்த ஐசரி சாருக்கு நன்றி. ரெட் ஜெயண்ட்ஸ் நல்ல படங்களை மட்டுமேதான் வாங்கும். அப்படித்தான் இந்தக் கதையும் பிடித்துப் போய் வாங்கினார்கள். இந்த வேலை இவர்கள் மட்டும்தான் செய்வார்கள் என்ற ஜாதி மனப்பான்மையை உடைத்து உலகம் எவ்வளவோ தூரம் முன்னேறி விட்டது. எந்த வேலையை யார் பிடித்து செய்தாலும் முன்னேறிக் கொண்டே போகலாம் என்பதுதான் இதன் அடிநாதம். நிறைய பேருக்கு கனெக்ட் ஆகும் என ஆசையாக செய்த படம் இது. பிடிச்ச விஷயம் செய்யும் முன்பு நன்றாகப் படித்து விடுங்கள். அது ரொம்ப முக்கியம். படம் ஜனவரி 25 அன்று வெளியாகிறது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

Wednesday, January 17, 2024

மிஷன் சாப்டர்1' படத்தின் தேங்க்ஸ் கிவ்விங் மீட்!

*'மிஷன் சாப்டர்1' படத்தின் தேங்க்ஸ் கிவ்விங் மீட்!*

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்துள்ள 'மிஷன் சாப்டர்1' படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இதன் தேங்க்ஸ் கிவ்விங் மீட் நடைபெற்றது. 

ஒளிப்பதிவாளர் சந்தீப், "ஆதரவு கொடுத்த மீடியா, பார்வையாளர்களுக்கு நன்றி. இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஜய், அருண் விஜய், லைகா நிறுவனத்திற்கு நன்றி. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்". 

கலை இயக்குநர் சரவணன், "இந்தப் படத்தைத் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு கொடுத்த பார்வையாளர்களுக்கு நன்றி. ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது இன்னும் அதிக ரெஸ்பான்ஸ் படத்திற்கு இருக்கிறது. திரையரங்குகளில் ஸ்கிரீன்ஸ் இப்போது அதிகப்படுத்தி இருக்கிறார்கள். அருண் விஜய் சாரின் கடின உழைப்பும் இந்தப் படம் நன்றாக வர முக்கியக் காரணம். இந்த வாய்ப்பு எனக்குக் கொடுத்த இயக்குநர் விஜய், லைகா புரொடக்ஷன்ஸ்க்கு நன்றி". 

'ராட்சசன்' சரவணன், "இப்படி ஒரு திறமையான படக்குழுவுடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சி. அருண் விஜய், அபிஹாசன், ஏமி, நிமிஷா என  எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப் படத்தை வெற்றிகரமாகக் கொண்டு செல்லும் பார்வையாளர்கள், ரசிகர்களுக்கு நன்றி. படம் வெளியாகும்போது இருந்ததை விட இப்போது ஸ்கிரீன்ஸ் அதிகமாகி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார். 

காஸ்ட்யூம் டிசைனர் ருச்சி, "எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். எங்கள் எல்லோருக்கும் இந்த படத்தில் சிறந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. அருண் விஜய் இந்தப் படத்திற்காகக் கொடுத்த அனைத்து கடின உழைப்புக்கும் பலன் இப்போது தெரிகிறது. எங்கள் அனைவருக்கும் மறக்க முடியாத சிறந்த பொங்கலை கொடுத்த பார்வையாளர்களுக்கு நன்றி".

நடிகர் அபிஹாசன் பேசியதாவது, "இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய மீடியாவுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி. படம் பார்த்தீர்கள் என்றால் தெரியும். அந்த சிங் கதாபாத்திரம் நான் தான் நடித்திருக்கிறேன். நான் எதிர்பார்த்ததை விட நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்புக் கொடுத்த அருண் விஜய் சாருக்கு நன்றி. எங்கள் எல்லாருக்கும் மறக்க முடியாத பொங்கலாக மாறியிருக்கிறது". 

நடிகர் பரத் போபண்ணா, "எங்கள் படக்குழுவினர் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி பார்க்க முடிகிறது. அதற்குக் காரணமாக இருக்கும் பார்வையாளர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. தமிழ் சினிமாவுக்கு என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. என்னுடைய தமிழ் சினிமா பயணத்தை அருண் விஜய் சாருடன் ஆரம்பித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அவர் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் நாட்களில் படம் இன்னும் சிறப்பாக செயல்படும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது". 

படத்தின் தயாரிப்பாளர்கள் வம்சி, ராஜசேகர் "அருண் விஜய் மற்றும் படக்குழுவினர் அனைவரது கடின உழைப்புக்கான வெற்றி இது. பார்வையாளர்களுக்கும் மீடியாவுக்கும் நன்றி". 

நடிகர் அருண் விஜய் பேசியதாவது, "நல்ல கதையுள்ள படங்களை மக்களும் மீடியாவும் எப்போதும் கைவிட்டதே இல்லை. அதற்காக நன்றி சொல்லும் சந்திப்புதான் இது. ஒவ்வொரு படத்திலும் எனக்கு எதாவது ஒரு பிரச்சினை இருக்கும். இந்தப் படத்திலும் உடல் ரீதியாக நிறைய சவால்கள் இருந்தது. புதுச்சேரி, மதுரை என நாங்கள் போன இடங்களில் எல்லாம் குடும்பத்தோடு பார்வையாளர்கள் படத்தைக் கொண்டாடினார்கள். இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இதற்கு நான் விஜய் சாருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். இப்படி ஒரு அழகான கதையில் என் பலத்தை அவர் சரியாக உபயோகப்படுத்தியுள்ளார். வரும் வாரத்தில் இந்தப் படத்திற்கு இன்னும் அதிக ஸ்கிரீன் தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். படத்திற்கு ஆரம்பத்தில் அதிக பிரச்சினை இருந்தது. ஒரு படத்தை வெளியிடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதைச் சிறப்பாக செய்திருக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் சாருக்கும், தமிழ்க்குமரன் சாருக்கும் நன்றி. 25 கோடி போட்டிருக்கும் இந்த புராஜெக்ட் மீது நம்பிக்கை வைத்த எங்கள் தயாரிப்பாளர்கள் வம்சி, ராஜசேகர் சாருக்கும் நன்றி. படம் வெளியாகும்போது அவ்வளவு அழுத்தங்கள் இருந்தது. அவை அனைத்தையும் எங்களுக்குத் தராமல் இருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்த வெற்றி அவர்களைத்தான் சாரும். நீங்கள் தரும் ஆதரவுதான் என்னை புதுப்புது கதைகள் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்கிறது. உங்களை கதையுடன் கனெக்ட் செய்யும் படங்களைத்தான் இனி தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் இந்தப் படத்திற்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவிற்கு நன்றி. வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ். வரும் நாட்களில் உங்கள் நேரத்திற்கு ஏற்றாற் போல, நீங்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம். நன்றி". 

குழந்தை நட்சத்திரம் இயல், "படத்தை ஹிட் ஆக்கிய எல்லோருக்கும் தேங்க்ஸ்!"

நடிகர் ருத்ரா, "இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. இந்தப் படம் மூலம் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தின் வெற்றி மூலம் இந்த வருடம் எங்களுக்கு சிறப்பாகத் தொடங்கியுள்ளது. அனைவருக்கும் நன்றி".

இயக்குநர் விஜய், "எங்கள் எல்லோருக்கும் சிறப்பான வருடம் இது. இந்த தேங்க்ஸ் மீட் எதற்கு என்று முதலில் சொல்லி விடுகிறேன். படம் வெளியாகும்போது எங்களுக்குத் திரையரங்குகள் குறைவாகவே கிடைத்தது.  இரண்டு பெரிய படங்கள் வருகிறது எனும்போது எங்களுக்கு அப்படி அமைந்து விட்டது. எங்கோ பிரிவியூ ஷோ போவது போலதான் இருந்தது. திரையரங்குகளில் படம் வெளியான ஒரு ஃபீல் கிடைக்கவே இல்லை. ஆனால், படத்தில் நல்ல கண்டெண்ட் இருக்கிறது. அடுத்தடுத்து நீங்கள் புஷ் செய்வதுதான் படத்தை இன்னும் அதிக பார்வையாளர்களுக்குக் கொண்டு போகும் என மோகன் சார், விஜயகுமார் சார் சொன்னார்கள். அதன்படிதான் நாங்கள் நடந்து கொண்டு வருகிறோம். படத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல லைகா சரண் சார், சுரேஷ் சந்திரா சார், ஷ்யாம் சார் என அனைவரும் சேர்ந்து உழைத்தோம். படத்திற்கான ரெஸ்பான்ஸ் பார்த்துவிட்டு தானாகவே ஸ்கிரீன் அதிகப்படுத்தினார்கள். இன்றைய தேதியில் நிறைய திரையரங்குகளில் நிறைய ஸ்கிரீன்கள் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் மீது அந்த நம்பிக்கையை கொடுத்த மீடியா விமர்சனங்களுக்கு நன்றி. இப்போதுதான் எங்களுக்கு முதல் வாரம் போல. நீங்கள் அடுத்தடுத்து கொடுக்கும் ஆதரவுதான் எங்களை இன்னும் அடுத்துச் செல்லும். என்னுடைய வழக்கமான ஸ்டைலில் இருந்து வேறொரு ஜானரில் நான் செய்திருக்கும் படம் இது. பட்ஜெட் பெரிதாகத் தேவைப்படுகிறது எனச் சொன்னபோது, அதற்கு முழு ஆதரவுக் கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் லைகாவுக்கும் நன்றி. அந்த அளவுக்கு படத்தின் மீது அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள்.  'அச்சம் என்பது இல்லையே' என இருந்த படத்தின் டைட்டிலை 'மிஷன்' என மாற்றி அனைத்து மொழிகளுக்கும் எடுத்துச் சென்ற லைகா சுபாஸ்கரன் சாருக்கும் தமிழ்க்குமரனுக்கும் நன்றி. படப்பிடிப்பில் செட் பலமுறை விழுந்து, மீண்டும் அதை உருவாக்கினோம். இப்படி படப்பிடிப்பில் இருந்து ரிலீஸ் வரை பல சிக்கல்கள் எங்களுக்கு இருந்தது. அதற்கெல்லாம் நிச்சயம் பலன் கிடைக்கும் என நம்புகிறோம். படத்திற்கு பாசிட்டிவான ஆதரவு கொடுத்து எடுத்துச் செல்லும் அனைவருக்கும் நன்றி. ஜிவி பிரகாஷின் இசை படத்திற்குப் பெரிய பலம். அருண் விஜய் சார், இயல், அபிஹாசன், ஏமி, நிமிஷா, பரத், சரவணன், ராமலிங்கம் மேஸ்திரி என அனைவருக்கும் நன்றி. படம் இன்று இவ்வளவு பெரிதாகத் தெரிய இவர்கள் தான் காரணம். படத்தில் முக்கியமான விஷயம் கதைதான். அதைக் கொடுத்த மகாதேவன் சாருக்கு நன்றி. படத்தில் மொட்டை மாடியில் இருந்து அருண் விஜய் சார் குதிக்கும் காட்சி ஒன்று வரும். அது சிஜி கிடையாது. டூப் போடாமல் அவரே செய்தார். அது மேஜிக் போல நடந்துவிட்டது. அந்தத் தருணங்களில் எங்களுக்கு பாதுகாப்பைச் சரியாக செய்து தந்த செல்வா மாஸ்டருக்கு நன்றி. பார்வையாளர்களுக்கும் மீடியாவுக்கும் மீண்டும் நன்றி!".

Tuesday, January 16, 2024

தூக்கு துரை* திரைப்படத்தின் கேரளா திரையரங்க விநியோகத்தை *PSS Productions* சார்பில் *Dr . பிரீத்தி ஷங்கர்* வெளியிடுகிறார்...

*தூக்கு துரை* 
திரைப்படத்தின் கேரளா திரையரங்க விநியோகத்தை *PSS Productions* சார்பில் 
*Dr . பிரீத்தி ஷங்கர்* வெளியிடுகிறார்...

யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், இனியா, பால சரவணன், சென்றாயன் மற்றும் பலர்நடித்து open gate pictures தயாரிப்பில் திரு. அர்விந்த் வெள்ளை பாண்டியன் - திரு. அன்புக்கரசு ஆகியோர் தயாரித்து , இணை தயாரிப்பினை திரு. வினோத் மேற்கொண்டுள்ள *TRIP* திரைப்பட இயக்குநரின் அடுத்த படைப்பான முழு நீள நகைச்சுவை திரைப்படமான *தூக்கு துரை* திரைப்படம் வரும் 25ந் தேதி தை பூச வெளியீடாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளிவர உள்ளது....

மேலும் இத்திரைப்படத்தின் கேரளா திரையரங்க வெளியீட்டினை No.6. *வாத்தியார் கால்பந்தாட்ட குழு* தயாரிப்பாளரும் PSS Productions நிறுவனரும் ஆகிய *Dr.prithi shankar* 
வெளியிடுகிறார்...

ஜே.கே. தமிழ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜே. ஜே எனும் ஜெயச்சந்திரன் இந்த வெப் தொடரை பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

 நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக  உருவாகும் வெப் தொடர் " வர்ண கதைகள் "  ஓவிய கலையையும், ஓவிய கலைஞர்களையும் மையமாக வைத்து உருவாக...