Tuesday, September 30, 2025

கலைஞர் டிவியில் அக்டோபர் 5 முதல் ஆரம்பமாகிறது"தமிழோடு விளையாடு சீசன் 3"..!

கலைஞர் டிவியில் அக்டோபர் 5 முதல் ஆரம்பமாகிறது
"தமிழோடு விளையாடு சீசன் 3"..!
 
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த"தமிழோடு விளையாடு" நிகழ்ச்சியின் முதல் இரண்டுசீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், அதன்மூன்றாவது சீசன் வருகிற அக்டோபர் 5 முதல்ஞாயிறுதோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகஇருக்கிறது. 
 
பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தொகுத்துவழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்தமாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தவிருக்கின்றனர்.இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தமிழ் அறிவைசோதிக்காமல், தமிழ் அறிவை ஊட்டும்உணர்ச்சிப்பூர்வமான புதிய சுற்றுகளுடன் உருவாகிறது.
 
சென்னை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, வேலூர் என தமிழகத்தின் பல்வேறு ஊர்களில்நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்டபள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த சீசனில்பங்கேற்று அசத்துகின்றனர். 
 
அக்டோபர் 5 முதல் ஞாயிறுதோறும் மாலை 6 மணிக்குகலைஞர் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியைகண்டுகளியுங்கள்.

Saturday, September 27, 2025

அறுவடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பு கிளப்பி உள்ளது.

அறுவடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பு கிளப்பி உள்ளது.

'லாரா திரைப்படத்தின் 
தயாரிப்பாளர் இயக்குநர் அவதாரம் எடுக்கும் புதிய படம் 'அறுவடை' !

அண்மையில் வெளிவந்த 'லாரா' திரைப்படம் உருவாக்கப்பட்ட விதம் ஊடகங்களால்  பாராட்டப்பட்டது.பட்ஜெட் படங்களில் எதிர்பாராத வகையில் சிறு ஆச்சரியம் அளித்த படம் என்று பத்திரிகைகள் எழுதின.
 வணிக ரீதியாகவும் அந்த படம் வெற்றி பெற்றது.  வசூல் செய்ததால்தான் அதே தயாரிப்பாளர் அடுத்த படத்தைத் தொடங்குகிறார்.'அறுவடை' என்கிற பெயரில் புதிய படம் உருவாகிறது.

இப்படத்தில் 'லாரா' தயாரிப்பாளர் கார்த்திகேசன்  இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் தயாரித்து இயக்குவதுடன் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஏற்கெனவே
'லாரா' படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் தொடக்க விழா அண்மையில் கோவையில் நடைபெற்றதுடன் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது.

கோவை, கோபிசெட்டிபபாளையம், பவானி ,பொள்ளாச்சி, பகுதிகளில் முதல் கட்டப் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
'அறுவடை' திரைப்படத்தில் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார் .மேலும் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர், நடிக்கிறார்கள்.
ஆனந்த் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். ரகு ஸ்ரவண் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு கே .கே . விக்னேஷ், பாடல்கள் - கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி, சண்டைப் பயிற்சி - TK , நடனம் - ஏ. எம். ஜே. முருகன் என்று புதியபடக் குழு உருவாக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

'அறுவடை' முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் கிராமத்து மண்ணையும், மனிதர்களையும், அவர்களது வாழ்வியலையும், பல விதப்பட்ட மனிதஉணர்வுகளையும் பதிவு செய்யும் படமாக உருவாகி வருகிறது.

Thursday, September 25, 2025

செப்டம்பர் 29 முதல் இரவு 7.30 மணிக்கு “ருத்ரா” - கலைஞர் டிவியின் புத்தம் புதிய மெகாத்தொடர்

செப்டம்பர் 29 முதல் இரவு 7.30 மணிக்கு “ருத்ரா” - கலைஞர் டிவியின் புத்தம் புதிய மெகாத்தொடர்
 
கலைஞர் தொலைக்காட்சியில் வருகிற செப்டம்பர் 29 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ருத்ரா என்கிற புத்தம் புதிய மொகாத் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.
 
ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த மெகாத் தொடர், சென்னையின் லட்சுமி காலனி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் விதவிதமான மனிதர்கள், அவர்களின் ரகசியங்கள் மற்றும் சிக்கல்களை மையப்படுத்தி உருவாகிறது.
 
லட்சுமி காலனிக்கு அனு என்கிற குழந்தையுடன் குடியேறும் கலாரஞ்சனி, தனது கடந்தகாலத்தை மறைத்து அங்கு இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார். ஆனால், அவள் மீது காதல் கொண்டு அவளையே சுற்றி வரும் புலனாய்வு பத்திரிகையாளரான கதிர் ஒரு பக்கம், நேர்மையான போலீஸ் அதிகாரி சந்துரு, ஆட்டோ டிரைவர் வைரவேல் போன்ற கதாபாத்திரங்கள் கதையில் இணையும் போது, தொடரில் பல திருப்பங்கள் இடம்பெறுகிறது.
 
இந்த விறுவிறுப்பான கதையில், அனுவின் அடையாளம் என்ன, உண்மையில் கலாரஞ்சனி யார், அவரது நோக்கம் என்ன, அவளைத் தொடர்ந்து வரும் மர்ம மனிதர்கள் யார் என்பதே இந்தத் தொடரின் மீதிக் கதை.

Tuesday, September 23, 2025

ஜவான்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றார் நடிகர் ஷாரூக்கான்!!*

ஜவான்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றார் நடிகர் ஷாரூக்கான்!!*

“ஜவான்” படத்தில் நடித்ததற்காக தேசிய விருதில், சிறந்த நடிகர் விருது பெற்றார் நடிகர்  ஷாரூக் கான்!!

30 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரை வாழ்க்கையில், முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், தனது 2023 வெளியீடான “ஜவான்” திரைப்படத்திற்காக,  நாட்டின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான தேசிய விருதில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக திரை உலகில் சாதனை படைத்துவரும் ஷாரூக், தனது முதலாவது தேசிய விருதை இப்போது வென்றிருப்பது, அவரது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக, மிகப்பெரும் கௌரமாக அமைந்துள்ளது.

“ஜவான்”  படத்தில் தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 71வது தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ஷாரூக்கான், ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். ஆக்சன் காட்சிகளிலிருந்து உணர்ச்சிபூர்வமான நடிப்புவரை, பல்வேறு விதமான வேடங்களில் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்திய ஷாரூக், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் மனதையும் கவர்ந்திழுத்துள்ளார். இவ்விருது அவரது திரைப்பயணத்திற்கு மிக உரிய பெருமையாகும்.

சமீபத்தில், தனது மகன் ஆர்யன் கானின் இயக்கிய அறிமுகப்படைப்பு The Ba***ds of Bollywood சீரிஸில், சிறப்பு தோற்றத்தில் நடித்தார் ஷாரூக்கான். அடுத்ததாக, சித்தார்த் ஆனந்த் இயக்கும் King திரைப்படத்தில் மகள் சுஹானாகானுடன் இணைந்து நடிக்க உள்ளார். 2026-இல் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், ஷாரூக்கான் மற்றும் தீபிகா படுகோனே இணையும் காட்சிகளும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான்  தேசியவிருது பெற்றதை,  ரசிகர்கள் மிக உற்சாகமான கொண்டாடி வருகின்றனர்.

Saturday, September 20, 2025

மாயக்கூத்து தமிழ் சினிமாவின் லோ பட்ஜெட்டில் ஒரு தரமான முயற்சி! இந்த வாரம் உங்கள் டெண்ட்கோட்டா OTT தளத்தில்


மாயக்கூத்து தமிழ் சினிமாவின் லோ பட்ஜெட்டில் ஒரு தரமான  முயற்சி! இந்த வாரம் உங்கள் டெண்ட்கோட்டா OTT தளத்தில்

எழுத்தாளர் வாசன் எழுதி உருவாக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் அவரது உண்மை வாழ்க்கையிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த தாக்கங்களால் ஏற்படும் சிக்கல்களில் இருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் என்பதே கதையின் மையக் கரு..மிக வித்தியாசமான கதைக்களம், எதிர்பாராத திருப்பங்கள், கதைக்கு ஏற்ற நடிப்பும், அழுத்தமும் கொண்ட புது முகங்கள் இந்த படத்தின் வலுவாக விளங்குகின்றன. இயக்குநர் ஒவ்வொரு காட்சியையும் மிக நேர்த்தியாகவும், உணர்ச்சிகரமாகவும் படமாக்கியுள்ளார்..

நாகராஜன் கண்ணன், வாசன் எனும் கதாபாத்திரத்தில் தனது நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார். அவருடைய உணர்ச்சிபூர்வமான இயல்பான நடிப்பு பாராட்டத்தக்கது.

சாய் தீனா, ஐஸ்வர்யா ரகுபதி, மு. ராமசாமி போன்றோரின் நடிப்பும், திரைப்படத்தின் உணர்வுப் பாசறையை மேம்படுத்துகிறது. மிக முக்கியமாக, பெண் இசையமைப்பாளர் அஞ்சனா ராஜகோபாலன், தனது முதல் படத்திலேயே சித்திரவதை இல்லாமல், கதைக்கு தேவையான அந்தஸ்தில் இசையை கொடுத்திருக்கிறார். ஐந்து பாடல்களும் புதுமை, இனிமை மற்றும் உள்ளார்ந்த பொருள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

மாயக்கூத்து என்பது எதையும் நம்பாமல், தங்கள் கலையை மட்டுமே நம்பிக்கையுடன் பயணித்த ஒரு குழுவின் கனவு. மிகச் சிறிய பட்ஜெட்டிலும், மிகப்பெரிய உள்ளடக்கம் கொண்ட இந்த படம், தமிழ் சினிமாவில் அரிதாகக் காணப்படும் உண்மை முயற்சியின் உதாரணம். இது ஒரு வெறும் திரைப்படம் அல்ல, இது ஒவ்வொரு கலைஞனுக்கும் நம்பிக்கை தரும் ஒரு கலாச்சாரச் சின்னம்.

இது போன்ற சிறந்த படைப்புகளை மக்கள் மட்டும்தான் வாழ வைக்க முடியும். மாயக்கூத்து போன்ற திரைப்படங்களுக்கு ஆதரவு வழங்கினால் தான், புதிய படைப்பாளிகளும், நல்ல சினிமாக்களும் வெளிவரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இந்த வாரம் உங்கள் டெண்ட்கோட்டா OTT தளத்தில் இந்த வாரம் வெளியிடப்படுகிறது.

Thursday, September 18, 2025

2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது

இறுதி வரை பரபரப்பான ஒரு திரில்லர் திரைப்படம்
 
2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால்  கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான  ’ஜென்ம நட்சத்திரம்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படம் செப் 11-ம்  தேதி டெண்ட்கோட்டா மற்றும் அமேசான் பிரைம் வீடியோ தளங்களில் வெளியாகி இருக்கிறது.
 
ஹாரர் த்ரில்லர் கதையாக ‘ஜென்ம நட்சத்திரம்’ உருவாகி இருக்கிறது. இதில் தமன் அக்‌ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்‌ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
ஜென்ம நட்சத்திரம் திரைப்படத்தின் கதைக்களம் தமன், மனைவி மால்வி மல்ஹோத்ராவுடன் வாழ்ந்து வருகிறார். கர்ப்பமாக இருக்கும் மால்விக்கு அடிக்கடி கெட்ட கனவுகளும், சில உருவங்களும் கனவில் வந்து போகிறது. மறுபக்கம் அரசியல்வாதியின் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார் காளி வெங்கட். இவரது மகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு 40 லட்சம் பணம் தேவைப்படுகிறது. அப்போது தேர்தலுக்காக வைத்திருக்கும் கோடிக்கணக்கான பணத்தை எடுத்து யாருக்கும் தெரியாமல் காளி வெங்கட் ஒரு தொழிற்சாலையில் பதுக்கி வைக்கிறார். காளி வெங்கடை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது.பணம் இருக்கும் தகவலை தமன் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்து விட்டு இறந்து போகிறார்.பணத்தை எடுப்பதற்காக தமன், மனைவி மால்வி மற்றும் நண்பர்கள் அந்த இடத்திற்கு செல்கிறார்கள். பணத்தை தேடும் நண்பர்கள் ஆபத்தில் சிக்குகிறார்கள்.
 
நண்பர்களை தமன் காப்பாற்றினாரா?, அவரது மனைவியின் கனவுக்கும், அந்த இடத்திற்கும் என்ன தொடர்பு? காளி வெங்கட்டின் மகளின் நிலை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
 
பரபரப்பான இந்த திரைப்படத்தை இந்த வாரம் உங்கள் கண்களுக்கு விருந்தாக கண்டு களியுங்கள்.

Reflecting Elegance in Every Thread, Ramraj Cotton Launches SWAYAMVARA GRAND for Life’s Majestic Moments

Reflecting Elegance in Every Thread, Ramraj Cotton Launches SWAYAMVARA GRAND for Life’s Majestic Moments

National, September 18,2025: Ramraj Cotton, India’s leading name in traditional South Indian attire, proudly presents SWAYAMVARA GRAND, an exclusive Art Silk dhoti, shirt, and towel set for special occasions. Crafted for men who value tradition with a contemporary touch, this collection allows you to wear your culture with pride. It embodies the artistry of Indian weaving, showcasing intricate designs that exemplify luxury and grandeur.

Each set is tailored from premium-quality artificial silk, offering a soft and comfortable feel. The fabric drapes gracefully with a subtle sheen, while jacquard patterns and gold-detailed borders enhance its traditional appeal. Available in six elegant colours with multiple patterns, every set includes a matching shirt, dhoti, and towel, delivering a complete and refined ceremonial look.

Speaking on the launch, Mr. K.R. Nagarajan, Chairman of Ramraj Cotton, said, “For decades, Ramraj Cotton has celebrated our swadeshi heritage while keeping pace with modern preferences. SWAYAMVARA GRAND reflects our passion for quality and tradition. It is created for life’s big occasions, where attire becomes a part of the celebration. We are delighted to have Mr. Rishabh Shetty, our brand ambassador, for this collection launch, as he truly represents the values our brand stands for.”

Actor and filmmaker Rishabh Shetty added, “I am honoured to represent Ramraj Cotton, a brand synonymous with quality and timeless tradition. SWAYAMVARA GRAND is more than just attire; it evokes pride and belonging, bringing elegance to weddings, festivals, and special occasions.”

For decades, Ramraj Cotton has been a trusted name in men’s traditional wear across India, from fine cottons to rich silks. With SWAYAMVARA GRAND, the brand takes a step further in redefining ceremonial elegance for the modern Indian man.

The collection is now available across all Ramraj Cotton exclusive showrooms and leading textile outlets nationwide.

Tuesday, September 16, 2025

கலைஞர் டிவி-யின் புத்தம் புதிய மெகாத்தொடர் - "காத்துவாக்குல ரெண்டு காதல்"

கலைஞர் டிவி-யின் புத்தம் புதிய மெகாத்தொடர் - "காத்துவாக்குல ரெண்டு காதல்"
 
நமது கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய "காத்துவாக்குல ரெண்டு காதல்" மெகாத் தொடரருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
 
தற்போதைய கதைக்களத்தில் ஒருபுறம், ரம்யாவும் – தானும் காதலிப்பதாக சரவணன், ரம்யாவின் அப்பாவிடம் கூற, தனது மகளை விட்டுவிடும் படி ரம்யாவின் அப்பா கேட்க, மறுபுறம் சரவணணுக்கு ஈஸ்வரியை மணமுடிக்க, அவளது குடும்பம் சரவணனின் அம்மாவிடம் சம்மதம் வாங்குகிறது.
 
இவ்வாறான, இக்கட்டான சூழ்நிலையில், சரவணன் எடுக்கப் போகும் முடிவு என்ன காதலியை கரம் பிடிப்பாரா? அம்மாவின் வாக்குறுதியை நிறைவேற்றுவாறா? என்கிற பரபரப்போடு கதை விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

Saturday, September 13, 2025

ஸ்ரீ லீலா - விராட் நடித்த " கிஸ் மீ இடியட் " செப்டம்பர் 26 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது


 ஸ்ரீ லீலா - விராட் நடித்த  " கிஸ் மீ இடியட் "    செப்டம்பர் 26 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது


செப்டம்பர் 26 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது " கிஸ் மீ இடியட் "  

ஸ்ரீ லீலா நடிப்பில் 2019 ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி 100 நாட்கள்  ஓடி வசூல் சாதனை படைத்த " கிஸ்  " படம்  தமிழில்   " கிஸ் மீ இடியட் " என்ற பெயரில்  ரீமேக் செய்யப்படுகிறது.

கதாநாயகனாக வீராட் நடிக்கிறார். மற்றும்  ரோபோ ஷங்கர், நாஞ்சில் விஜயன், அஸ்வதி இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - ஜெய்சங்கர் ராமலிங்கம்

இசை - பிரகாஷ் நிக்கி

பாடல்கள் - மணிமாறன்


இணை இயக்குனர்களாக எலிசபெத் மற்றும் நாகன் பிள்ளைபணியாற்றி உள்ளனர்.

கன்னடத்தில் இந்த படத்தை இயக்கிய A.P.அர்ஜுன்  தமிழிலும் இயக்கியுள்ளார்.

கல்லூரி மாணவியான ஸ்ரீ லீலா கல்லூரியில் சக மாணவிகளுடன் சேட்டை செய்த காரணத்திற்க்காக கல்லூரி முதல்வரால் ஒரு நாள் தண்டனையாக வகுப்பறையிலிருந்து வெளியேற்றப்படுகிறார். அந்த கோபத்தில் கல்லூரியை விட்டு வெளியே வரும் ஸ்ரீ லீலா கல்லூரிக்கு வெளியில் கல்லூரி முதல்வரின் படம்பொரித்த பேனரில் கல்லை எடுத்து வீசுகிறாள். அந்த கல் பேனரில் பட்டு பிரதிபலித்து ரோட்டில் வந்து கொண்டிருக்கும் வீராட் என்பவரின் காரில் படுகிறது . இதனால் அந்த கார் சுவற்றில் மோதி சேதம் அடைகிறது .இந்த சேதத்திற்கு நஷ்டஈடாக வீராட், ஸ்ரீ லீலாவிடம் நான்கு லட்சம் கேட்கிறார். தரவில்லை என்றால் போலீஸில் புகார் அளிப்பேன் என்று சொல்கிறார். இதற்க்கு ஸ்ரீ லீலா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று மறுக்கிறார். அதற்க்கு வீராட் மாற்று வழி ஒன்றை சொல்கிறார் . என்னவென்றால் ஒரு முத்தம் கொடு அல்லது இரண்டு மாதம் தன்னுடைய உதவியாளராக வேலை செய்ய சொல்கிறார். பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின் ஸ்ரீ லீலா உதவியாளராக வேலை செய்ய ஒப்புக்கொள்கிறார். இந்த இரண்டு மாத காலகட்டத்திற்குள் ஸ்ரீ லீலா சில நிகழ்வின் மூலம் தனது காதலை வெளிப்படுத்த முற்பட்டு அதனை சொல்ல வரும்பொழுது, வீராட் அவளை வேலையை விட்டு அனுப்புகிறான் . அவளை அனுப்பிய பிறகுதான் அவள் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்பதை உணர்கிறான். பின்பு தனது காதலை வெளிப்படுத்த பல முறை முயற்சிக்கிறான் . அது வெற்றி பெற்றதா ? இல்லையா ? என்பது தான் கதை.

செண்டிமெண்ட் கலந்த

இளமை ததும்பும் காதல் கதையாக உருவாகியுள்ள

"  கிஸ் மி இடியட் " செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


Friday, September 12, 2025

அடியே வெள்ளழகி' ஆல்பம் பாடலை வெளியிட்ட 100 சினிமா பிரபலங்கள்!


 அடியே வெள்ளழகி' ஆல்பம் பாடலை வெளியிட்ட 100 சினிமா பிரபலங்கள்!

100 பிரபலங்கள் வெளியிடும் 'அடியே வெள்ளழகி' ஆல்பம் பாடல்!

கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஜீவிதா  நடிப்பில் உருவான "அடியே வெள்ளழகி" பாடலின் முதல் பார்வையை 100க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வெளியிட்டார்கள் .இதுவரை கலையுலகம் காணாத பிரம்மாண்ட புதுமை இது.

வருகிற 12-ஆம் தேதி கட்டெறும்பு சேனலில் இந்தப்பாடல் வெளிவருகிறது .இந்த ஆல்பம் பாடலைக் கட்டெறும்பு ஸ்டாலின் தயாரித்துள்ளார் .

அனைவரும் கண்டு மகிழும்படி உருவாக்கப்பட்டுள்ளது.இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் காதல் என்கிற மெல்லுணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பாடல் உருவாக்கியுள்ளது.

இந்தப் பாடலில் நாயகனாக மிதுன் சக்கரவர்த்தி நடித்துள்ளார். 

இவர்,பில்லாபாண்டி, தேவராட்டம், புலிக்குத்திபாண்டி அங்காரகன், கருப்பு பெட்டி போன்ற பல படங்களில் தோன்றி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அறியப்பட்ட நடிகரான கே.சி.பிரபாத்தின் மகன். 

மிதுன் சக்கரவர்த்தி,இயக்குநர் முத்தையா  இயக்கத்தில் உருவான கொடி வீரன் படத்தில் சிறுவனாக அறிமுகம் செய்யப்பட்டவர். தொடர்ந்து பில்லாபாண்டி, கருப்புபெட்டி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இப்போது இயக்குநர் குகன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்து உள்ளார். இயக்குநர் சிவாஜி இயக்கத்தில் உருவாகும் தமிழ்த் திரைப்படத்தில் நாயகனாக நடித்து முடித்துள்ளார்.

 இவரின் தந்தை 

 திரைப்படங்களில் நடிப்பதில்  மிதுன் சக்கரவர்த்திக்குச்  சிறு வயது முதல் மிகுந்த ஆர்வம் உண்டு.  இவர் இப்போது எஸ்.ஆர்.எம்  பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி., விஸ்காம் படித்து வருகிறார் .படித்து முடித்தவுடன் முழுமூச்சாக சினிமா தயாரிப்பையும்,சினிமா நடிப்பையும் கவனிப்பார் என அவர் தந்தை கேசி பிரபாத் கூறியுள்ளார்.

 இந்தப் பாடலை திரைப் பிரபலங்கள் 100 பேர் வெளியிட்டார்கள்.

 இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், சற்குணம், மோகன் ஜி, சரவண சக்தி,திருமலை, மஞ்சுதிவாகர்,

திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான  ஆர்.கே.சுரேஷ்,எழுத்தாளரும் நடிகருமான வேலராமமூர்த்தி,நடிகர்கள் விதார்த், விமல், அமுதவாணன், மதுரை காளையன், அப்புக்குட்டி, அங்காடித்தெரு மகேஷ், விஜய்விஸ்வா, ஸ்ரீபதி, சங்கர பாண்டியன்,டாக்டர் சரவணன்,

அங்கயற்கண்ணன், அஜய்வாண்டையார், ஜித்தன் ரமேஷ்,ரமணா, கலை, காதல் சுகுமார், ஆறுபாலா,

இயக்குநர் ஒளிப்பதிவாளர் ஜீவன், பாடகர் கலைமாமணி வேல்முருகன்,இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர்  மோகன்டச்சு, பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின்,நடிகைகள் தேவிகாவேணு, தியா.மக்கள் தொடர்பாளர் சக்தி சரவணன்  மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட பிரபலங்கள் இந்தப் பாடலை பார்த்து பாராட்டி  வலைதளத்தில் வெளியிட்டனர்.

Finding bliss in acclaimming your sweet heart.

Here's Mellifluous #AdiyeVellalagi song.

Direction: Mohammed Imthiyas

Hero -  K.C.P Methun Shakaravarthy Heroine - Jeevitha

Link -  youtu.be/pNjQFSUl0HY?si…

@PROSakthiSaran


சிவனின் அருளாசியில், காந்தாரா சேப்டர் 1 (Kantara Chapter 1 ) இசை ஆல்பத்திற்காக, தில்ஜித் தோசாஞ் ஒரு பாடல் பாடியுள்ளார் !!*

*சிவனின் அருளாசியில், காந்தாரா சேப்டர் 1 (Kantara Chapter 1 ) இசை ஆல்பத்திற்காக, தில்ஜித் தோசாஞ் ஒரு  பாடல் பாடியுள்ளார் !!*

தேசிய விருது பெற்ற நடிகர்-பாடகர் தில்ஜித் தோசாஞ், (Diljit Dosanjh) இயக்குநர்–நடிகர் ரிஷப் ஷெட்டியுடன் காந்தாரா சேப்டர் 1 இசை ஆல்பத்திற்காக கைகோர்த்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிமிகு பதிவொன்றை பகிர்ந்த தில்ஜித், காந்தாரா திரைப்படம் தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நினைவுகூர்ந்து பகிர்ந்துள்ளார் :

“காந்தாரா என்ற அற்புத படைப்பை உருவாக்கிய என் சகோதரர் @rishabshettyofficial க்கு  பெரு வணக்கம். இந்த படத்துடன் எனக்கு ஒரு தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது, அதை  இப்போது சொல்ல முடியாது. ஆனால் திரையரங்குகளில் வராஹ ரூபம் பாடல் ஒலித்தபோது, பேரானந்தத்தில் கண்ணீர் விட்டேன்.”

மேலும் வரவிருக்கும் ப்ரீக்வல் குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய தில்ஜித்.., இசையமைப்பாளர் B. அஜனீஷ் லோக்நாத்திற்கு (B. Ajaneesh Loknath) நன்றி தெரிவித்தார். “ஒரே நாளில் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்,” என்று குறிப்பிட்டார்.
தில்ஜித் தோசாஞ் – ரிஷப் ஷெட்டி கூட்டணி, ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் காந்தாரா சேப்டர் 1 படத்திற்கு, புதிய இசை பரிமாணத்தை தருமென  எதிர்பார்க்கப்படுகிறது.

காந்தாரா சாப்டர் 1 திரைப்படம், வரும் அக்டோபர் 2, 2025 அன்று  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.

*Diljit Dosanjh Records for Kantara Chapter 1 Album – A Musical Union Blessed by Shiva’s Grace*
National award–winning actor-singer Diljit Dosanjh has joined hands with director-actor Rishab Shetty for the music album of Kantara Chapter 1.

Sharing a heartfelt note on Instagram, Diljit recalled how deeply the original Kantara moved him:

“With Big Brother @rishabshettyofficial – salute to this man who made the masterpiece Kantara. I have a personal connection with this film which I can’t tell, but I remember when the song Varaha Roopam played in theatres, I cried in so much ecstasy.”

The acclaimed artiste further expressed his excitement for the upcoming prequel, releasing October 2, and thanked composer B. Ajaneesh Loknath for the creative exchange, saying he “learnt a lot in just one day” with him.

This powerful collaboration between Diljit Dosanjh and Rishab Shetty promises to add a fresh musical dimension to the much-awaited Kantara Chapter 1, produced by Hombale Films.

Kantara Chapter 1 hits theatres worldwide on 2 October 2025.

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"

 கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"   கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமைவரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பா...